இருக்கட்டும் . உங்களை போன்ற மேதாவிகளிடமிருந்து இகழ்தலையும் தூற்றுதலையும் பெறுவதில் பெருமை கொள்கிறேன்.
Printable View
டியர் வாசுதேவன் சார்,
தாராவின் அருமையான நிழற்படங்களை தங்கள் அருமையான கமெண்ட்களோடு பார்ப்பதற்கு மிக மிக அற்புதமாக உள்ளது. நன்றிகள் பல.
இதென்ன சார் வைப்ரேஷன்?. தாராவை அடுத்து விஸ்வத்தை அலசலாம் என்று நினைத்து திரியைத் திறந்தால் அடுத்த இன்ப அதிர்ச்சி. விஸ்வத்தை மிக சூப்பராக அலசித்தள்ளிவிட்டீர்கள். நமக்குள் இப்படி ஒரு வைப்ரேஷனா. அசந்து விட்டேன்.
இப்போதே சொல்கிறேன். அடுத்து "ஜம்பு"வை பற்றி நான்தான் எழுதுவேன்....
கார்த்திக் சார்,
கனியிருப்ப காய் கவர்ந்தற்று. ஜம்புவை பற்றி வாசுவே எழுதட்டும். நாம் ஜாலியாக காஞ்சனா,ஜெயகுமாரி, சகுந்தலா,பத்மாகன்னா,சினேகலதா,சத்யப்ரியா,விஜயலலிதா, விஜயஸ்ரீ,ஆலம் என்று புகுந்து விடலாம் என பார்த்தால், வில்லன்களிடம் தஞ்சம் புகுகிறீர்களே? என்ன இது?
நடிகர்திலகத்தோடு ஜோடியாக (நேரடி) நடித்த கதாநாயகிகள் 59 பேர்.ஜோடியாக நடித்த படங்கள் எண்ணிக்கையில்.
பத்மினி-32 , கே.ஆர்.விஜயா-32,ஜெயலலிதா-18,
சரோஜாதேவி-17,சுஜாதா-16,தேவிகா-12,ஸ்ரீப்ரியா-11,சௌகார்-11,சாவித்திரி-11,வாணிஸ்ரீ-9, மஞ்சுளா-9,பண்டரி பாய்-8,பானுமதி-7,லக்ஷ்மி-7,ஜமுனா-7,எம்.என்.ராஜம்-6,உஷா நந்தினி-5,வடிவுக்கரசி -4,ஸ்ரீவித்யா-3,வைஜயந்தி மாலா-3,ஜி.வரலக்ஷ்மி-3,பாரதி-2,விஜயகுமாரி-2,அம்பிகா-2,ராதா-2,ஸ்ரீதேவி-2,ஸ்ரீரஞ்சனி-2,கிருஷ்ணகுமாரி-2,வசந்தா-2,சாரதா-2,அஞ்சலிதேவி-2,மைனாவதி-2,லலிதா-2,ராஜசுலோச்சனா-2,லதா-1,காஞ்சனா-1,மாலினி-1,வெண்ணிற ஆடை நிர்மலா-1,மணிமாலா-1,விஜயஸ்ரீ-1,விஜய நிர்மலா-1,பத்மப்ரியா-1,எஸ்.வரலக்ஷ்மி-1,மாலினி பொன்சேகா-1,சிலோன் கீதா-1,ரீனா-1,ராதிகா-1,ஜெயசுதா-1,குசலகுமாரி-1,பிரமிளா-1,மாதுரி தேவி-1,சரிதா-1,ராஜஸ்ரீ-1,கமலா-1,ருக்மிணி-1,சந்தியா-1,மனோரமா-1,சுமித்ரா-1,ஜெயபாரதி-1.
நடிகர்திலகம்
மொத்தம் 49 இசையமைப்பாளர்களோடு பணியாற்றியுள்ளார்.
எம்.எஸ்.விஸ்வநாதன்-95,கே.வீ.மகாதேவன்-38,விஸ்வநாதன்-ராமமூர்த்தி-24,இளையராஜா-23,ஜி.ராமநாதன்-18,சங்கர் கணேஷ்-9,டி.ஜி.லிங்கப்பா-6,எஸ்.வீ.வெங்கட்ராமன்-5,கங்கை அமரன்-5,எஸ்.எம்.சுப்பையா நாயுடு-4,டி.ஆர்.பாப்பா-4,சுதர்சன்-3,சந்திர போஸ்-3,சக்கரவர்த்தி-3,சி.என்.பாண்டுரங்கன்-2,எஸ்.தக்ஷிண மூர்த்தி-2,டி.சலபதிராவ்-2,எஸ்.ராஜேஸ்வர் ராவ்-2,குன்னக்குடி -2,மனோஜ் கியான்-2,வித்யா சாகர்-2,தேவா-2,ஆதிநாராயண ராவ்-1,எம்.ஜி.நாய்டு-1,தண்டாயுத பாணி-1,என்.எஸ்.பாலகிருஷ்ணன்-1,கண்டசாலா-1,கிருஷ்ண மூர்த்தி-1,ராம்நாத்-1,பீ.என்.ஆர்-1,கோவிந்த ராஜுலு-1,ஏ.எம்.ராஜா-1,டி.கே.ராமமூர்த்தி-1,ஜி.தேவராஜன்-1,புகழேந்தி-1,கோவர்தனம்-1,வீ.குமார்-1,சங்கர்-ஜெய்கிஷன்-1,கே.ராகவன்-1,எம்.ஏ.ரவீந்தர்-1,தேவேந்திரன்-1,எம்.ரங்கா ராவ்-1,டி.ராஜேந்தர்-1,ஜே.வீ.ராகவலு-1,
அம்சலேகா-1,ஸ்ரீராஜா-1,கீதப்ரியன்-1, ஏ.ஆர்.ரகுமான்-1.
நடிகர்திலகம் 96 இயக்குனர்களோடு பணியாற்றியுள்ளார்.((கௌரவ வேடங்கள் நீங்கலாக)
ஏ.சி.திருலோகச்சந்தர்-20,ஏ.பீம்சிங்-18,பீ.மாதவன்-15,சி.வீ.ராஜேந்திரன்-14,கே.விஜயன்-14,டீ.யோகானந்த்-13,ஏ.பீ.நாகராஜன்-12,வீ.ஸ்ரீனிவாசன்-8,பீ.ஆர்.பந்துலு-7,கிருஷ்ணன்-பஞ்சு-7,ஸ்ரீதர்-7,கே.சங்கர்-7,ஆர்.கிருஷ்ணமூர்த்தி-7,எல்.வீ.பிரசாத்-6,ராமண்ணா-6,கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்-5,கே.எஸ்.பிரகாஷ் ராவ்-5,கே.சோமு -5,தாதாமிராசி-3,ப.நீலகண்டன்-3,சி.எச்.நாராயண மூர்த்தி-3,வீ.பீ.ராஜேந்திர பிரசாத்-3,ஏ.காசிலிங்கம்-3,எஸ்.பீ.முத்துராமன்-3,கார்த்திக் ரகுநாத்-3,மேஜர் -3,ஏ.எஸ்.ஏ.சாமி-2,வேம்பு-2,ஆர்.எம்.கிருஷ்ண சாமி-2,வீ.எஸ்.ராகவன்-2,பீ.எஸ்.ரங்கா-2,பீ.புல்லையா-2,டி.பிரகாஷ் ராவ்-2,டி.ஆர்.ரகுநாத்-2,எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாய்டு-2,வீ.சுந்தரம்-2,அமிர்தம்-2,ஏ.ஜகந்நாதன்-2,பாரதி ராஜா-2,ராஜசேகர்-2,,என்.எஸ்.கே-1,டி.ஆர்.சுந்தரம்-1,எம்.நடேசன்-1,எஸ்.டீ.சுந்தரம்-1,ஜி.ஆர்.ராவ்-1,எஸ்.பாலச்சந்தர்-1,எஸ்.ஏ.முருகேஷ்-1,சுந்தர் ராவ் நட்கர்னி-1,ஜே.சிங்கா-1,ஏ.சுப்பா ராவ்-1,ராமகிருஷ்ணா-1,பீ.ஸ்ரீதர் ராவ்-1,கே.ஜே.மகாதேவன்-1,எஸ்.எஸ்.வாசன்-1,எஸ்.எஸ்.பாலன்-1,ஆர்.எஸ்.மணி-1,ஏ.சுப்பா ராவ்-1,ஏ.டி.கிருஷ்ணசாமி-1,பீ.ஆர்.சந்திரன்-1,ஜி.ஆர்.நாதன்-1,டி.என்.பாலு-1,கே.பாலச்சந்தர்-1,எஸ்.ராமநாதன்-1,சாவித்திரி-1,மல்லியம் ராஜகோபால்-1,சாணக்கியா-1,எஸ்.ஏ.கண்ணன்-1,ஏ.வின்சென்ட்-1,அப்பச்சன்-1,எம்.ஏ.திருமுகம்-1,கே.பாப்பையா-1,துரை-1,விஜய நிர்மலா-1,ராஜகணபதி-1,எஸ்.எஸ்.கே-1,கிருஷ்ணா-1,கே.பாக்யராஜ்-1,பாரதி வாசு-1,ஏ.எஸ்.பிரகாசம்-1,பாலச்சந்திர மேனன்-1,மனோஜ் குமார்-1,தாசரி நாராயண ராவ்-1,கே.ராகவேந்திர ராவ்-1,மணிவண்ணன்-1,சந்தான பாரதி-1,சி.குக நாதன்-1,பரதன்-1,மனோபாலா-1,பிரதாப் போதன்-1,எஸ்.ஏ.சந்திர சேகர்-1,ஆர்.வீ.உதயகுமார்-1,ஹாசன்-1,பிரசாந்த் குமார்-1,கே.எஸ்.ரவிக்குமார்-1,ஏ.வெங்கடேஷ்-1.ராம்சந்தர்-1.கஸ்தூரி ராஜா-1.
கார்த்திக் சார் ஜம்புவை ஜம்மென்று அலசுவார். அவர் எழுதினால் மிக மிக அற்புதமாக இருக்கும். ஆனந்தமாக ரசிக்கலாம். கவர்ச்சி வில்லன் கூட கலக்குவாரே! எத்தனையோ படங்களில் அவர் தலை காட்டியிருந்தாலும் அவருக்கு மிகவும் பெயர் வாங்கிக் கொடுத்த கேரக்டர் அல்லவா! அதுவும் தலைவர் ரசிகர்களின் பாராட்டைப் பெறுவதென்றால் சும்மாவா? பூவோடு சேர்ந்தால் நாரும் மணம் பெறும் அல்லவா!
இரண்டாவது நடிகர் திலகம் அல்லாது மற்ற திறமைசாலிகளுக்கும் முன்னுரிமை கொடுத்து அவர்களின் திறமையை அலசிப் பாராட்டுவதில் நமது திரிக்கு ஈடேது? என்ன நான் சொல்றது?
கோ,
நடிகர் திலகத்துடன் பணிபுரிந்த நாயகியர் மற்றும் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் லிஸ்ட் சூப்பர். எனக்கு ரொம்ப உதவியாக இருக்கும். ஆமாம்! தெலுங்கெல்லாம் ஒழுங்காகச் சேர்த்து விட்டீர்களா? சரி! சரி! திட்டாதீர்கள். நான் செக் செய்து கொள்கிறேன்.
கோ,
உங்கள் item girls லிஸ்ட்டில் வாணிஸ்ரீயை விட்டு விட்டீர்களே!:-D
ரந்தாவாவுக்கு பின்னணிக் குரல் கொடுத்தது பி.டி.ரட்சகன் என்று நினைக்கிறேன். தெலுங்கில் இருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும் பழைய டப்பிங் படங்களின் நாயகர்களுக்கு (குறிப்பாக என்.டி. ஆர், காந்தாராவ்) அதிகமாக பின்னணிக் குரல் கொடுக்கும் நபர். வானொலி நாடகங்களிலும் பிரசித்தம். பத்மாகன்னாவிற்கு?....