-
Wonderful evening, Wonderful Picture. Youthful audience at Russian Centre. When enquired by Mr Murali the immediate reply was we are all NT's Fans not only for
the old generation but also for today as well as coming generations. Muradan Muthu - still looks fresh and enjoyed thorughly.
Regards
-
அன்பு மிக்க சந்திரசேகர் சார்
தாங்கள் கூறியது மிகச்சரி. தன்னலம் கருதாத ரசிகர்கள் நடிகர் திலகத்திற்கு கிடைத்த மிகப் பெரிய பலம். இன்னும் நூறாண்டுகளானாலும் அவருக்கென்று இதைப் போன்ற ரசிகர்களின் பலம் பெருகிக்கொண்டே இருக்கும். இதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
ஆனாலும் கூட சமீப காலங்களில் நடிகர் திலகத்தின் மேல் ஊடகங்களின் கவனம் திரும்பியுள்ளது நமக்கு மேலும் மகிழ்ச்சியூட்டும் விஷயமல்லவா..அவர் புகழ் பாடும் நிகழ்வுகள் ஊடகங்களில் இடம் பெறுவதும் விவாதங்கள் நடைபெறுவதும் சுட்டிக்காட்டுவது, மக்களிடம் நடிகர் திலகத்திற்குள்ள அசைக்க முடியாத இடத்தின் வலிமையை அல்லவா.
-
இன்றைய தினம் மாலைப் பொழுது நண்பர் வாசு சொன்னது போல மிக இனிமையாக கழிந்தது. இரண்டு சந்தோஷங்கள். ஒன்று முரடன் முத்து படம். சிறு வயதில் பார்த்த பிறகு கல்லூரி படிக்கும்போது ஒரு முறை [ மதுரை நியூடீலக்ஸ் தியேட்டர் என்று நினைவு] பார்த்தேன். அதன் பிறகு முழுமையாக பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. படம் ஒரு சில ஞாபக தீற்றல்களாக மட்டுமே மனதில் இருந்தது. இன்று மாலை பார்க்கும்போது படத்தின் அருமையை முழுமையாக ரசிக்க முடிந்தது. புதுமையான கதை என்றோ அல்லது வித்தியாசமான ஒன்று என்றோ சொல்ல முடியாது. ஆனால் அதை காட்சிப்படுத்தியிருக்கும் முறை படத்தை சுவாரஸ்யமாக்குகிறது. வங்காளத்தின் மூலக்கதைக்கு [கோபால் ஒரு முறை சொன்னது போல் வங்காளத்திற்கு நிறைய கடமைப்பட்டுள்ளோம்] M.S. சோலைமலையின் இயல்பான நகைச்சுவை உணர்வு துளிக்க [நாகேஷ் விகேஆர் combo வசனங்கள் பிரமாதம்] காதல் ரசம் ததும்ப [பக்கத்தில் வா காதில் ரகசியம் சொல்ல வேண்டும் என்று நடிகர் திலகம் சொல்ல, மாட்டேன் என்ன சொல்லப் போகிறீர்கள் என்பது தெரியும் என்று தேவிகா சொல்ல தெரியுமா என்னன்னு சொல்லு என்று கேட்கும் நடிகர் திலகத்திடம் காது கிட்டத்தானே கன்னம் இருக்கு என்று தேவிகா சொல்லும் குறும்பு வசனம்] பாசத்தின் வலிமையை உணர்த்தும் [அண்ணனிடம் அடி வாங்கிய நடிகர் திலகம், அண்ணி வெந்நீர் வச்சு அண்ணன் கைகளுக்கு ஒத்தடம் கொடு என்று சொல்லிவிட்டு போகும் காட்சி] என்று வசனங்கள் மிளிருக்கின்றன. இவர் இப்படி எல்லாம் எழுதுவாரா என்று ஆச்சரியப்படுத்துகின்றன. எங்கள் மதுரைக்காரர் இவர். ஆகவே சென்டிமென்டாக கதையை மதுரை அல்லது மதுரை பக்கத்து ஊர்களில் நடப்பது போல் அமைத்திருப்பார். இதிலும் பக்கத்து ஊரான சோழவந்தான் என்று இரண்டு மூன்று இடங்களில் வசனம் வரும். நடிகர் திலகம் பற்றி என்ன சொல்ல? அப்பாவித்தனமும் முரட்டுத்தனமும் இணைந்த கதாபாத்திரம் அதிலும் கிராமத்து ஆள் என்ற கேட்கவே வேண்டாம். இதிலும் பின்னி பெடலெடுத்திருக்கிறார். கண்ணதாசன் தி.ஜி.லிங்கப்பா கூட்டணி கலக்கியிருக்கிறார்கள். தாமரைப்பூ குளத்திலேயும் பொன்னாசை கொண்டோருக்கு உள்ளமில்லை பாடலும் மெலடியில் பின்னுகிறது என்றால் கருத்தாழமிக்க வரிகளால கவனம் ஈர்க்கிறது கோட்டையிலே ஒரு ஆலமரம்.
இன்றைக்கும் 50 வருடத்திற்கு பிறகும் இந்தப் படம் முழுமையாக ரசிக்க முடிகிறது என்றால் இவை அனைத்தும்தான் காரணம். படம் முடிந்தபிறகு நமது அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் [இதுவரை இந்தப் படம் பார்த்திராதவர்கள்] வந்து முதலில் வரலாமா வேண்டாமா என்று யோசித்தோம். வராமல் இருந்திருந்தால் இந்த நல்ல படத்தை மிஸ் பண்ணியிருப்போம் என்றாகள்.
இரண்டாவது சந்தோசம் நண்பர் வாசு குறிப்பிட்டது. படம் தொடங்குவதற்கு முன் நாங்கள் அரங்கத்தின் வாசலில் நின்றிருக்க இருபதுகளின் ஆரம்பத்தில் இருக்கும் மூன்று இளவயதினர் [பெண்களும் அடக்கம்] உள்ளே நுழைந்து சென்றனர். அந்த வளாகத்தில் நடைபெற கூடிய பல்வேறு பயிற்சி வகுப்புகளில் ஏதோ ஒன்றிற்கு செல்கிறார்கள் என்று நினைத்திருக்க அவர்கள் நமது படம் திரையிடப்படும் அரங்கிற்கு உள்ளே சென்று அமர்ந்த காட்சி வியப்பை தந்தது என்றால் படம் முடியும்வரை இருந்து ரசித்ததும், அவர்களிடம் படம் எப்படி இருந்தது என்று கேட்க மிக மிக ரசித்ததாக சொன்னார்கள். உங்களை போன்று younger generations வருவதில் எங்களுக்கு மகிழ்ச்சி என்று நான் சொல்ல சார், எல்லா generations-லும் சிவாஜிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு அடுத்த மாதம் programme எப்போது என்று கேட்டுவிட்டு அடுத்த மாதம் வருகிறோம், எங்களைப் போன்று வேறு சில இளைஞர்களும் வருவார்கள் என்று சொன்னபோது இந்த அமைப்பின் நோக்கம் சரியான இலக்கை நோக்கிதான் போகிறது என்பது மீண்டும் ஒரு முறை உறுதிப்பட்டது.
அன்புடன்
-
-
தினமலர் வாரமலரில்
1000 ரூபா பரிசு பெற்ற வாசகர் கடிதம்
http://i157.photobucket.com/albums/t...psf2254247.jpg
நன்றி தினமலர்
-
-
இருக்கும் போது செய்ய தவறிய மரியாதைai இப்பௌழுது செய்து ஊடகங்கள் தங்களது பாவத்தை போக்கி கொண்டு இருக்குறார்கள்.
இப்பௌழுதவது அந்த ஞானம் வந்ததே என்று சந்தோஷ பட்டு கொள்ள வேண்டியதுதான்.
-
Any analysis/review about Sun News Vivadha Medai. Since, I could not watch it due to NT Fans movie.
If someone who have seen can post about the discussion.
Regards
-
a Suggestion/Request to Mr Raghavendra/Mr Murali
Next month as planned the screening of Navarathri will take place at Chennai for which we can have some sort of get together of all the NT's fans hubbers
who are away from the city. So that they also can view as well as enjoy in watching NT's movie along with fans. It is only a suggestion and some sort of
planning is involved here so that they can arrange for their travel.
Regards
-