-
ராஜ்கபூர் பிறந்த தினம்.
http://media-cdn.list.ly/production/...ver=9269346372
இன்று ராஜ்கபூர் அவர்களின் பிறந்ததினம். அவருடைய ரசிகர்களுக்கு நம் மனப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ராஜ்கபூர். என்ன ஒரு கலைஞர்! தயாரிப்பாளாரக , நடிகராக, இயக்குனராக, பல்வேறு முகங்கள் கொண்ட திறமையாளர்.
இவர் படங்களின் பாடல்கள் எவராலுமே மறக்க முடியாதவை. படங்களில் இவர் அப்பாவியாகவும், அதே சமயம் விவரம் மிக்கவராகவும் நடிப்பதைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். ஒரு innocent ஹீரோ இவர்.
இவர் நடித்த படங்களில் பல படங்கள் எனக்குப் பிடித்தவை. ஆவாரா, ஆக், ஸ்ரீ 420, மேரா நாம் ஜோக்கர், ஜிஸ் தேஷ் மே கங்கா பெஹத்தி ஹை. மற்றும் பாபி, ராம் தேரி கங்கா மெய்லி, சத்யம் சிவம் சுந்தரம் போன்ற மறக்க முடியாத படங்களைத் தந்து நம் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.
இவர் மோதிரக் கையால் குட்டுப் பட்ட நடிகைகள் ஏராளம். நர்கீஸ், நம்மூர் பத்மினி, வைஜயந்திமாலா, ஜீனத் அமன், டிம்பிள் கபாடியா என்று இவரால் புகழ் பெற்ற நடிகைகளின் பட்டியல் நீளும்.
ரஷ்யாவில் இவர் இன்னும் கூட ரொம்ப பாப்புலர். 'ஆவாரா' படத்தில் 'ஆவராஹூ' பாடலைப் பாடியபடி வீதிகளில் வலம் வருவாரே. அந்தப் பாடல் ரஷ்யாவில் மிக மிகப் பிரபலம். சங்கர் ஜெய்கிஷன், ராஜ்கபூர், முகேஷ் கூட்டணி இசைச் சதனியே படைத்தது.
'மேரா நாம் ஜோக்கர்' திரைப்படத்தில் பல பெண்களைக் காதலித்து காதலில் தோல்வியுற்று இறுதில் ஒற்றை ஆளாய் கண் கலங்கியபடி நம்மையும் கண்கள் கலங்கச் செய்து அனுப்புவாரே! இதி மறக்க முடியுமா?
பின்னணிப் பாடகர் முகேஷ் அவர்களின் குரல் அப்படியே ராஜ்கபூர் அவர்களுக்கு நூறு சதவீதம் பொருந்தும்.
காலத்தால் அழியாத 'சங்கம்' படத்தை தந்ததும் இவரே. இந்த ஒரு படம் போதும் இவரது பேரை சொல்ல.
இந்த 'சங்கம்' படத்திற்கு தமிழ்நாட்டில் தியேட்டர் கிடைக்காமல் போக நம் நடிகர் திலகம் அருமை நண்பர் ராஜ்கபூர் அவர்களுக்கு தந்து சாந்தி திரையரங்கை தந்து உதவினார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிட நடிகர் திலகத்தின் புதிய பறவை திரைப்படம் சாந்தியில் வெளியிடப் பட முடியாமல் போய் விட்டது. அந்த அளவிற்கு படத்தை எடுக்க முடியாத அளவிற்கு சங்கம் படம் ஹவுஸ்புல். ராஜ்கபூர் நடிகர் திலகத்திடம் 'புதிய பறவை படத்தை நீங்கள் போட்டுக் கொள்ளுங்கள்... சங்கம் படத்தை எடுத்து விடலாம்' என்று சொன்னபோது 'நன்றாகப் போகும் சங்கம் படத்தை எனக்கு எடுக்க மனம் வரவில்லை...அது நியாயமும் ஆகாது' என்று பெருந்தன்மையோடு கூறி தந்து சொந்தப் படமான புதிய பறவையை பாரகன் தியேட்டரைப் புதுப்பித்து நடிகர் திலகம் வெளியிட்டாராம். இது சம்பந்தமான ஆவணங்களை நடிகர் திலகம் திரியில் நமது அருமை நண்பர் பம்மலார் அவர்கள் ஒருமுறை பதிந்தது நினைவுக்கு வருகிறது.
கடலூரிலிருந்து அப்போதெல்லாம் நெய்வேலிக்கு தினம் வேலைக்கு வருவேன். ஒரு முறை மதிய ஷிப்ட் முடிந்து இரவு நெய்வேலியில் 'ஆக்' என்ற ராஜ்கபூரின் படத்தை வாங்கிச் சென்று விடிய விடிய பார்த்து ரசித்தது நினைவுக்கு வருகிறது.
ராஜ்கபூர். இந்திய சினிமாவின் அடையாளச் சின்னம்.
அவருடைய பிறந்தநாள் நாம் அனைவரும் கொண்டாடி மகிழ வேண்டிய ஒன்று.
https://www.youtube.com/watch?featur...&v=A_3kBgasVLA
-
-
-
-
-
-
'மேரா நாம் ஜோக்கர்' படத்திற்கு இரண்டு இடைவேளை விடுவார்கள். படம் பெரிது. இப்படத்தின் இந்தப் பாடலை என் வாழ்நாள் முழுக்க மறக்க இயலாது.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Q9ULWBTokzw
-
ராகவேந்திரன் சார்,
பொங்கும் பூம்புனல் - துயிலூட்டும் தொண்ணூறு ஆரம்பமே மிக நன்றாக இருக்கிறது. இன்னும் ஒரு வேண்டுகோள். எண்பதுகளையும் சேர்த்து வழங்கினால் மிகவும் சந்தோஷப்படுவேன். புதிய தொடருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
-
வீரம் ( ..அந்தக்காலத்துல எழுதினது)…
சி.க சார்,
ஜல்லிக்கட்டு கவிதை ஜோர்.
'அண்ணாச்சி வேட்டி கட்டும் ஆம்பளையா' நீங்க பாடல் பொருத்தம்.
பத்மினி ஒரு காலி வளர்ப்பாரே! கட்டபொம்மனில். வீரக் காளை. 'அஞ்சாத சிங்கம் என் காளை'
'பஞ்சாய்ப் பறக்க வைக்கும் காளை' யை வைத்து நாட்டியப் பேரொளி நாட்டியமடிக் கொண்டே பாடும் பாடல்.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=jGh3im8Q9l8
-
vasu: 'Jaane kahaan gaye woh din....' is in Shivaranjani raga, not used very much in Tamil movies ! :)
Nice song in a moving raga.