http://i64.tinypic.com/xgfz9l.jpg
Printable View
31.8.1961 அன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் ''நல்லவன் வாழ்வான் '' இன்று 55 ஆண்டுகள் நிறைவுதினம் .
31.8.1962 அன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் ''பாசம் '' இன்று 54 ஆண்டுகள் நிறைவு தினம் .
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவின்
முன்னோட்டத்தின் பகுதியாக , கடந்த ஞாயிறு (28/08/2016) மாலை 4 மணி முதல்
இரவு 9மணி வரை , சென்னை பத்திரிகையாளர் சங்கம், சேப்பாக்கத்தில், உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு அவர்கள் ஏற்பாடு செய்திருந்த
நிகழ்ச்சி நடைபெற்றது .
நிகழ்ச்சியை குறித்து சிறிய அளவிலான சுவரொட்டிகள் அண்ணா சாலை,
ராயப்பேட்டை, சைதாப்பேட்டை , சேப்பாக்கம், திருவல்லிக்கேணி போன்ற பல
பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன .
நிகழ்ச்சி ஆரம்பத்தில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "படகோட்டி "
திரைப்படம் 16 எம் எம் திரையில் பக்தர்களுக்காக திரையிட்டு காண்பிக்கப்பட்டது .
திரைப்பட முடிவில் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் தேனீர் விருந்து அளிக்கப்பட்டது .
மாலை 6.30 மணியளவில் பிரபல எழுத்தாளர் திருமதி மேகலா சித்ரவேல் அவர்கள் குத்துவிளக்கேற்றி வைக்க , பக்தர்கள் பலர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படத்திற்கு ஆரத்தி எடுத்தனர் .
பின்னர் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களையும் , கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு மற்றும் அறக்கட்டளை பக்தர்கள் , இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம் (எழும்பூர் ), எங்கள் தெய்வம் எம்.ஜி.ஆர். பக்தர்கள் (சைதை ), சைதை கலையுலக பேரொளி எம்.ஜி.ஆர். மன்றம் போன்ற அமைப்புகளை சார்ந்த பக்தர்களையும் ,உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு வரவேற்று பேசினார் .
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ,ரிக் ஷாக்காரன் திரைப்பட வசன ஆசிரியர் திரு.ஆர். கே.சண்முகம் , பாடல் ஆசிரியர் திரு.பூவை செங்குட்டுவன் , தின இதழ்
ஆசிரியர் திரு.சிரஞ்சீவி அனீஸ், பிரபல எழுத்தாளர் திருமதி மேகலா சித்ரவேல் ,
திரு.சிவகுமார் (பொன்மனம் - பண்பலை வரிசை ) ஆகியோர் வந்திருந்தனர் .
அவர்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது .
விழாவின் முக்கிய அம்சமாக , டிஜிட்டல் ரிக் ஷாக்காரன் - வெற்றிவிழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது .
விழாவில் திரு. ஆர். கே. சண்முகம் , பேசியபோது, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்களுக்கும் , எனக்கும் நெருங்கிய நட்பும், நீண்ட கால தொடர்பும் இருந்தது
அதன் காரணமாக சுமார் 15 திரைப்படங்களில் அவருக்காக வசனம் எழுதினேன்.
முதல் படம் ஆயிரத்தில் ஒருவன் .அந்த காலத்தில் 100 நாட்களும், மறுவெளியீட்டில் 190 நாட்களும் ஓடியிருந்தது . இந்தி எதிர்ப்பு போராட்டம் காரணமாக அப்போது விழா எடுக்கவில்லை .ஆனால் மறு வெளியீட்டில் 190 நாட்கள் விழா , காமராஜர் அரங்கில் சிறப்பாக கொண்டாடப்பட்டது .அதில் பங்கு
கொள்ளும், வாய்ப்பும், பெருமையும் எனக்கு கிட்டியது . தொடர்ந்து, நாடோடி,
கன்னித்தாய், முகராசி, ரகசிய போலீஸ் 115 , தேடி வந்த மாப்பிள்ளை , ரிக் ஷாக்காரன் போன்ற பல வெற்றி படங்களுக்கு எழுதினேன்.
புரட்சி தலைவர் ஏற்பாடு செய்து கொடுத்த வீட்டில் (அவ்வை சண்முகம் சாலையில் )தான் இப்போது வசித்து வருகிறேன் .குறைந்தபட்சம் 10 பேராவது
அவருடன் சாப்பிடும்போது உடனிருந்து சாப்பிடுவார்கள். அவருடைய படங்களுக்கு வசனம் எழுதும்போது , என்னுடைய உடல் நலத்திலும், உணவு விஷயத்திலும் நன்கு அக்கறை எடுத்துக்கொள்வார் . என் வாழ்நாளில் அவருடன் இருந்தபோது , உறவாடி, பழகிய நாட்கள் பசுமையானவை .அப்போது 100 வருஷம் வரை வாழ்வாய் என வாழ்த்தினார் . இப்போது 90 வயதை நெருங்கி
கொண்டிருக்கிறேன் அவர் ஆசீர்வாதத்தால்
. தற்போது வெளியாக உள்ள டிஜிட்டல் ரிக் ஷாக்காரன் படம் பற்றி அவசியம் பேச வேண்டும் , அதில் சைக்கிள் ரிக் ஷா பந்தயத்தில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வெகு இயல்பாக, தேர்ந்த சைக்கிள் ரிக் ஷாக்காரர் போல ஒட்டி , அனைவரையும் திகைக்க வைத்து , முதலில் வந்து வெற்றி பெறுவார் .
அப்போதைய அண்ணா நகரில் , கடும் வெயிலில், மற்ற சைக்கிள் \ரிக் ஷாக்காரர்கள் சோர்வாக இருக்கும் பட்சத்தில் , தன்னுடைய 55 வயதில் ,
25 வயது இளைஞர் போல நடிப்பிலும், தோற்றத்திலும் அனைவரையும் கவர்ந்தார் . அவருக்கு பாரத் என்கிற சிறந்த நடிகர் பட்டம் வாங்கி கொடுத்த படம் .
ஒருமுறை படப்பிடிப்பு முடிந்து, அண்ணா சாலையில் வரும்போது, சைக்கிள் ரிக் ஷாக்காரர்கள் மழையில் நனைந்தபடி ஓட்டுவதை பார்த்து , சுமார் 100 பேருக்கு
மழை கோட்டு வாங்கி கொடுத்து உதவியவர் .நடிகர்களில் இந்த மாதிரி உதவிகளை செய்தவர் வேறு யாரும் இருக்க இடமில்லை .
டிஜிட்டல் ரிக் ஷாக்காரன் பெரும் வெற்றி அடைய நல்வாழ்த்துக்கள் .
வாய்ப்புக்கு நன்றி என்று பேசினார் .
திரு.பூவை செங்குட்டுவன், பேசிய போது ,1962ல் ஒரு நாடக விழாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ,பார்த்தசாரதி சபாவில் , வந்திருந்த சமயம்
பொன்னாடை போர்த்தினேன் . அதே பொன்னாடையை எனக்கு போர்த்தி அழகு பார்த்தார் . பின்னர் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நிகழ்ச்சியில் சந்திக்கும் வாய்ப்பு
வந்தபோது , பார்த்தசாரதி சபாவில் பார்த்த செங்குட்டுவன் தானே என்று நினைவு கூர்ந்தார். அவருடைய ஞாபக சக்தி குறித்து அப்போது அசந்து போனேன் .
புதிய பூமி படத்திற்கு , அவர் நினைத்தது போல கொள்கை பாடல் அமையாததால் , எனக்கு அழைப்பு வந்தது , பல்லவி மட்டும் நான்கு வரிகள் எழுதி அனுப்பி வைத்தேன் .உடன் நேரில் வந்து சந்திக்கும்படி அழைத்தார். பின்னர் அவர் விரும்பியபடி சில நாட்களில் சரணம் எழுதி, முழு பாடலையும் தந்தேன் .
வழக்கமாக பாடல்களில் சில வார்த்தைகளையோ , சில வரிகளையோ திருத்தம்
செய்யக்கூடிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். எனது பாடலில் ஒரு வார்த்தை கூட தி ருத்தம் செய்யாது பாடல் பதிவிட உத்திரவிட்டதுடன் கட்டி அணைத்துக்கொண்டார் . அந்த பாடல்தான் இப்போது உலக பிரசித்தம் , தேர்தல்
காலங்களில் மிகவும் உபயோகம் . பல ரசிகர்கள், தங்களது அலைபேசிகளில்
அழைப்பு ட்யூன்களாக வைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது .
விழாவில் அழைத்து , வாய்ப்பு அளித்ததற்கு நன்றி என கூறினார் .
திரு.சிரஞ்சீவி அனீஸ் , பேசும்போது, தான் எழுதிய எம்.ஜி.ஆர். கீதம் பாடலை அனைத்து நிகழ்ச்சிகளிலும் இடம் பெறும்படி பார்த்துக்கொள்ளுமாறு, திரு. பி.எஸ். ராஜு அவர்களை கேட்டுக் கொண்டார் .
பிரபல எழுத்தாளர் திருமதி. மேகலா சித்ரவேல் பேசியபோது, தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த படங்களை மட்டுமே பார்த்துள்ளதாகவும், சிறு வயதில் எம்.ஜி.ஆர். அவர்கள் மீது உள்ள பக்தி, ஆர்வம், கண்டு, எனது தந்தை அப்போதே ஆருடம் சொன்னார் .அதாவது, இவர்களுக்கு எல்லாம் ஓட்டுரிமை வந்தால் நிச்சயம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆராகி , முதல்வர் ஆகிவிடுவார் என்பார் .அது நடந்து முடிந்து 10 ஆண்டுகள் மேல் புரட்சி தலைவர் தமிழ் நாட்டை ஆண்டார் என்பது வரலாறு .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றி நிறைய புத்தகங்கள் எழுதி உள்ளேன் .இன்னும் எழுதுவேன் என்று பேசினார் .
திரு.சிவகுமார் (பொன்மனம் -பண்பலை வரிசை )பேசியபோது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் காலமானதும், விரைந்து வந்து அஞ்சலி செலுத்தியவர்களில் முக்கியமானவர்கள், பாரத பிரதமர் ராஜீவ் காந்தி,
ஜனாதிபதி வெங்கடராமன், துணை ஜனாதிபதி , மற்றும் பல்வேறு மாநில
முதல்வர்கள், கவர்னர்கள், உள்துறை அமைச்சர், போன்ற எண்ணற்றோர்.
பல மாநிலங்கள் , நமது தலைவர் மறைவிற்காக பொது விடுமுறை அறிவித்தன
இந்தியாவின் சிறந்த நடிகருக்கான பாரத் பட்டம், மறைந்த பின்னர் பொதுவாழ்வுக்காக பாரத ரத்னா ஆகிய பட்டங்கள் பெற்றவர் .இப்படி பல சிறப்புகள் பெற்றவர் எவருமிலர் . ஆகவே புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை மிக சிறப்பாக கொண்டாட வேண்டிய தருணத்தில் நாம் உள்ளோம் என்று கூறி, வாய்ப்புக்கு நன்றி கூறினார் .
http://i66.tinypic.com/1hrr75.jpg