-
http://i66.tinypic.com/2ahs5m8.jpg
இரண்டு நாளுக்கு முன்னால் போட்ட பதிவை நீக்கிவிட்டீர்கள். ரொம்ப சந்தோசம். அப்படி நான் என்ன சொல்லியிருந்தேன்.
ஜெயா மூவீஸ் டிவியில் குடும்பத் தலைவன் படமும் ஜெயா டிவியில் இரவு 12 மணி்கு ஒருதாய் மக்கள் படமும் போட்டார்கள். குடும்பத் தலைவன் முழுசாய் பார்த்தேன்.
தாய் சொல்லை தட்டாதே, தாயை காத்த தனயன், தர்மம் தலைகாக்கும், குடும்பத் தலைவன் இந்த மாதிரி தேவர் படங்களில் எல்லம் கே.வி மாகாதேவன் இசையில் எல்லா பாடல்களும் ஒரே மாதிரி இருக்கும். குடும்பத் தலைவன் படம் பார்க்கும்போது இந்த எண்ணம் வந்துது. அவ்வளவு வறச்சியா? புரட்சித் தலைவர் எப்படி விட்டார்?
என்று சொன்னேன்் இதில் என்ன தப்பு கண்டீர்கள்?
புரட்சித் தலைவரையும் குறை சொல்லவில்லையே. மற்ற திரிியிலோ ஏதாவது பத்திரிகையிலோ புரட்சித் தலைவரை குறை சொல்லி பொய்யாக மட்டம்தட்டி வந்தால்கூட நான்தானே பதில் சொல்வேன்? வேற யாரும் வரருவதில்லையே. அப்படிப்பட்ட நான் புரட்ிச்சித் தலைவரை குறை சொல்வேனா?
பாட்டுக்கள் இசை ஒரே மாதிரி இருக்கே? புரட்சித் தலைவர் எ்ப்படி விட்டார்? என்று கேட்டதில் என்ன தப்பு? ஏதாவது அரசியல் வேலை இல்லாவிட்டால் வேறு பட வேலைகளில் அவர் தீவிரமாக இருந்திருக்கலாம். இது ஒன்றும் குறை இல்லையே. கே.வி.மகாதேன் ஒரே மாதிரி பாட்டு போட்டிருக்கார் என்று சொல்லக் கூட கூடாதா?
அதை எதுக்காக நீக்குகிறீர்கள்? இதை எல்லாம் கூட நீக்கினால் மாற்றுமுகாம் நண்பர்கள் ஏன் நம்பளைப் பார்த்து சிரிக்க மாட்டார்கள்?
இப்பவும் சொல்கிறேன். தாய் சொல்லை தட்டாதே. தர்மம் தலைகாக்கும், தாயை கா்த்த தனயன், எல்லா படத்திலும் பாட்டுக்கள் ஒரே மாதிரி இருக்கும். நமக்கே குழப்பம் வரும். இல்லை உங்களுக்கெல்லாம் வெவ்வேறு டியூனில் கேட்ிகிறதோ தெரியாது. எனக்கு இந்த படங்களில் பாட்டுக்கள் ஒரே மாதிரி கேட்கிறது. இதில் என்ன தவறு? நியாயமாக யோசியுங்கள். மற்றவர்கள் நம்பளை பார்த்து சிரிக்கிற மாதரி நடக்கக் கூடாது. உண்மைமை மனதில் பட்டதை சொல்வதில் தவறு இல்லை. புரட்சித் தலைவர் அதைத்தான் விரும்புவார். அப்படித்தான் நடந்து கொண்டார். நேத்தி கூட முகநூல் பதிவு போட்டிருந்தேன். நான் திமுகதான் என்று சொன்ன துரைமுருகனை புரட்சித் தலைவர் கட்டியணைத்து பாராட்டினார் என்பதை முகநூலில் இருந்து எடுத்து போட்டிருந்தேன்.
நியாயமான கருத்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையா? உங்களுக்குப் பிடிக்கலையா? இல்லை மஸ்தான். நீங்கள் சொல்வது தவறு. இந்த படங்களில் பாட்டுக்கள் வேற வேற மாதிரிதான் இருக்கு. உங்களுக்குத்தான் ஒரே மாதிரி தோன்றகிறது என்று சொல்லுங்கள். முடிஞ்சது கதை.
இதையும் நீக்காதீர்கள். புரட்சித் தலைவர் பாதையில் நியாயமாக நடங்கள்.
-
நண்பர் திரு.மஸ்தான் சாஹிப் அவர்களுக்கு வணக்கம்.
தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த தாய் சொல்லை தட்டாதே, தாயை காத்த தனயன், தர்மம் தலை காக்கும், நீதிக்கு பின் பாசம், குடும்ப தலைவன் போன்ற படங்களில் இடம் பெற்ற பாடல்கள் ஒரே மாதிரி .மற்றும் குழப்புவதாக உள்ளன என்று கூறியது உங்கள் சொந்த கருத்து
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். விருப்பப்படியே,கவிஞர் கண்ணதாசன் கைவண்ணத்தில் கே.வி.மகாதேவன் அவர்களின் அருமையான இசை அமைப்பில் உருவானவை .மேற்படி இந்த மூவரின் கூட்டணியில் உருவான வெற்றிப்படங்களின் பாடல்கள் 55 ஆண்டுகள் கழித்தும் ரசிகர்களால் /நேயர்களால் இன்றும் மிகவும் விரும்பி பார்க்கப்படுகின்றன /கேட்கப்படுகின்றன ,இத்தனை ஆண்டுகள் கழித்து தங்களுக்கு
இந்த ஐயம் வந்தது ஏனோ விந்தையாக உள்ளது.
பாடல்கள் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக ,இசை அமைப்பாளர் திரு. கே. வி. மகாதேவன் அவர்களுக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சில முக்கிய மற்றும் இன்றியமையாத இசை கருவிகளை தன் சொந்த செலவில் வாங்கி அளித்துள்ளார் என்கிற செய்தி தங்களின் கவனத்திற்கு .
அந்த காலத்தில் சுமாரான வெற்றி பெற்ற கன்னித்தாய், தேர்த்திருவிழா, தாய்க்கு தலைமகன்,தனிப்பிறவி ,குறுகிய நாட்களில் தயாராகி , அமோக வெற்றி பெற்ற முகராசி பட பாடல்கள்கூட இன்றும் ரசிக்கும்படியும், கேட்கும்படியும் உள்ளன .
தாய்க்கு பின் தாரம், வேட்டைக்காரன், தொழிலாளி, விவசாயி, நல்ல நேரம்
படங்களின் பாடல்கள்ர அன்று ரசிகர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் கே.வி. மகாதேவன் இசை அமைத்திருந்தார். இன்றும், தொலைக்காட்சிகளில்
ரசித்து மகிழ்கிறோம் .
தி.மு.க. உறுப்பினர் திரு.துரைமுருகன் அவர்களுக்கு, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
ஆரம்ப காலத்தில் இருந்து உதவியது ஊரறிந்த விஷயம் .அதை தாங்கள் பதிவிட்டதற்கு நன்றி. அது பற்றி மறுத்து பேச யாரும் இயலாது .யாருக்கும் புலப்படாத, சில எதிர்மறை கருத்துக்களை பதிவு செய்வதை தாங்கள் கைவிட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.அந்த நோக்கத்தில்தான் தங்களின்
பதிவு நீக்கப்பட்டுள்ளது என்று நான் கருதுகிறேன் .நட்பு, மற்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் எனது கருத்தை பதிவு செய்கிறேன். தவறாக
கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன் .
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு
ஆர். லோகநாதன்.
-
நன்றி லோகநாதன்.
எனக்கு தோன்றியதை சொன்னன். உங்கள் கருத்துக்கு நன்றி. இதுதான் விசயம். இதற்கு ஏன் பதிவை நீக்க வேண்டும். உங்கள் கருத்துக்களை ஏற்று் கொள்கிறேன். நன்றி
-
நண்பர் திரு. மஸ்தான் சாஹிப் அவர்களே,
தங்களின் பதிலை கண்டேன். எனது கருத்தின் முழு அர்த்தத்தையும் தாங்கள்
புரிந்து கொண்டதாக புலப்படவில்லை. மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு ரசிகர்களாக மூத்த குடிமக்களும், முதியவர்களும், நடுத்தர வயதினரும் ,இன்றைய இளைய தலைமுறையினரும் உள்ளனர். காலம், வயது, தொழில்நுட்பம்,புதுமை , இசையில் மாறுபாடு, போன்ற பலவற்றின் காரணமாக ரசனைகள் மாறலாம்.
மூத்த குடிமக்கள், முதியவர்கள்,நடுத்தர வயதினர் ரசனையில் நிச்சயமாக மாறுபாடு இருக்க வாய்ப்பில்லை. அதனால்தான் புரட்சி தலைவரின் படங்கள் அத்தகைய ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு திரையுலகில் நீண்ட காலம் ஆட்சி புரிந்து முதலிடத்தை தக்க வைத்தது . தாங்கள் இளைய தலைமுறையை சார்ந்தவராக இருப்பதால் என்னவோ ரசனையில் மாற்றங்கள் தெரிகின்றன .மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பழைய திரைப்படங்கள் அரங்குகளில் மறுவெளியீடுகளில் வெளியாகும்போது, இளைய சமுதாயத்தை சார்ந்த ரசிகர்கள்
எந்தவித ரசனை மாறுபாடு இன்றி, கருத்து வேறுபாடின்றி, சர்ச்சையில் ஈடுபடாமல் காட்சிகளை, பாடல்களை ரசித்து வரவேற்று மகிழ்கிறார்கள் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம் .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தனது படங்களில் பாடல்கள் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக ஒரு பாடலுக்கு, பல பல்லவிகள், சரணங்கள் , பலவித ட்யூன்கள் என கவிஞர்களையும், இசை அமைப்பாளர்களையும் நன்கு வேலை வாங்கி அவர்களின் முழு திறமையையும் வெளி கொணர்ந்ததின் காரணமாக
அன்றும், இன்றும், பாடல்கள் ரசிக்கப்பட்டன . என்றும் ரசிக்கப்படும் என்பதற்கு
மாற்று கருத்திருக்காது .தங்களுடைய ரசனையில்தான் குழப்பம் உள்ளது .என்று
நான் கருதுகிறேன் .
மீண்டும் நல்லெண்ண அடிப்படையில் தங்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் இதுபோன்ற எதிர்மறை கருத்துக்கள் கொண்ட பதிவுகளை தொடராமல் ,
தங்களை அறிமுகப்படுத்திய நண்பர் மூலம் என்னுடன் கைபேசியிலோ, தொலைபேசியிலோ தொடர்பு கொண்டாலோ, அல்லது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளின்போது நேரில் சந்தித்தாலோ, இது பற்றி விவாதிக்கலாம் , சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்
முடிந்தால் தங்களின் கைபேசி எண்ணை பதிவிடவும் .கட்டாயமில்லை .
இதன்மூலம் தாங்கள் பதிவிடும் எதிர்மறை கருத்துக்கள் நீக்கப்படுவதை
தவிர்க்கலாம் .
-
இன்று காலை 11 மணிக்கு சன்லைப் சானலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "அன்னமிட்டகை " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i1077.photobucket.com/albums/...psbifgxocf.jpg
-
இன்று இரவு 7 மணிக்கு சன்லைப் சானலில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகழ்
"பல்லாண்டு வாழ்க" திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i1077.photobucket.com/albums/...psmcxjxhcc.jpg
-
-
இன்று இரவு 10 மணி முதல் ஜெயா மூவிஸில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "தர்மம் தலைகாக்கும் " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i1077.photobucket.com/albums/...pswuyi07ci.jpg
-
-