-
டீச்சரம்மா படத்தில் சிவாஜி எம் ஜி ஆர் பற்றிக் குறிப்பிடும் காட்சி
http://youtu.be/toIcDdhTphA
-
உறுப்பினர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.
கொஞ்ச நாட்களாக திரியில் நமது ஹப்பர்களின் பங்களிப்புகள் மிகக் குறைவாகக் காணப்படுகின்றன. ஒரு சிலரே தொடர்ந்து பங்கு பெரும் நிலைதான் தொடர்கிறது. திரியின் வேகமும், பார்வையாளர்களின் எண்ணிக்கையும் கொஞ்சமும் தொய்வில்லாமல் ஜெட் வேகத்தில் பறந்து கொண்டிருந்தாலும் நம் ஹப்பர்கள் தங்களால் முடிந்த பங்களிப்புகளை அளித்தால் திரி சிகரங்களைத் தாண்டிப் பயணிக்கும் என்பது என் தாழ்மையான கருத்து. அன்பு பம்மலார் அவர்கள் கைகளில் ஏற்பட்டுள்ள மணிக்கட்டு வலியால் திரியில் தற்சமயம் பங்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் நலம் பெற்று திரிக்கு திரும்பி வந்து தன் தனித்தன்மையான முத்திரைகளைப் பதிக்க வேண்டி வாழ்த்துவோம். ஒன்றிரண்டு உறுப்பினர்களே பங்கு பெறுகிறார்கள். தங்களால் முடிந்த ஆவணங்கள், அப்டேட் நியூஸ்கள், நடிகர் திலகத்தைப் பற்றி தங்களுக்குத் தெரிந்த தகவல்கள், பட ஆய்வுகள், நடிகர் திலகத்து காவியங்களில் அவரவர்க்கு மிகவும் பிடித்த சீன்கள் என்று அவர்களால் முடிந்த பங்களிப்பை தரலாமே! பங்களிப்புகள் மிகக் குறைவாக உள்ளது. ஒருவர் இருவராக தேர் இழுப்பதை விட ஊர்கூடித் தேர் இழுத்தால்தானே அற்புதமாக இருக்கும். பதிவிடுவதில் உள்ள சிரமங்களும் தெரியாமலில்லை. குடும்ப வேலைகள், அலுவல வேலைகள் இவைகளுக்கு மத்தியில் மின்வெட்டு என்ற அரக்கனின் பிடியில் சிக்கிக் கொண்டு பதிவுகள் இடுவது சிரமம்தான். பதிவிடுபவர்களும் இத்தகைய சிரமங்களில் உழன்றுதான் பதிவுகள் இடுகிறோம். தங்கள் வேலை நேரம் போக மீதியுள்ள ஒய்வு நேரங்களில் தங்களால் இயன்ற பதிவுகளை உறுப்பினர்கள் அளித்தால் மிக நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். ஆவணங்கள் என்றில்லை. நடிகர் திலகத்தைப் பற்றி எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை பகிர்ந்து கொள்ளலாமே! பதிவுகளை ஒரு சிலரே அளிக்கும் நிலைதான் உள்ளது. இந்நிலை மாற வேண்டும். தொடர்ந்து பதிவளிப்பவர்கள் சரியான துணை இல்லாமல் சலிப்படைய வாய்ப்புள்ளது. பதிவிடுபவர்களுக்கும் பல பிரச்னைகள் உள்ளன. நெய்வேலியில் இருக்கும் போதே எனக்குக் கூட அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு விடுகிறது. அதுமட்டுமல்லாமல் இணைய இணைப்பும் அடிக்கடி பழுதாகி விடுகிறது. மதிய நேரங்களில் பதிவுகளை திரியில் இடவே முடிவதில்லை. நொடிக்கொருதரம் 'லாக் இன்' கேட்கிறது. ஒரு சிறிய பதிவைக் கூட மிகப் போராடி போட வேண்டியுள்ளது.
எனவே தயவு செய்து உறுப்பினர்கள் அவரவர்களுக்கு வசதிப்படும் நேரத்தில் தங்களுடைய உயரிய பங்களிப்பை நல்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி!
அன்புடன்,
வாசுதேவன்.
-
Mr Vasu Sir,
I completely agree with your view point. I am also aware that you are putting lot of efforts in giving us valuable
information as well as pictures of our NT. I would like to inform you that I do not have any system in my house and
doing it from office. I will try to get the facility in the house and spend entire 24 hrs to our NT.
-
-
டியர் ராகவேந்திரன் சார்,
கட்டபொம்மன் புகழ் பாடும் 'டீச்சரம்மா' காணொளி கலக்கல். நன்றி!
-
Rightly said, Mr Vasudevan. I’ve just read the old thread about ‘Sivajikku sariyana jodi’ voting and the thread went with a bang! Fans’ comments are extremely interesting to read and some and they had actively posted their votes. Especially the write-ups from Saratha are fantastically written. The title itself was unmissable to any NT fans! They’d jumped to vote for it. And we should have that sort of voting again on any other NT subject soon.
-
Glad news friends. Vasantha maligai re release date nov 30 confirmed by distributors. List of theatres will be known very soon.
-
Welcome Vasantha Maligai on Nov 30th and expect it will surpass the records
of Karnan.
-
A humble suggestion from my side during the rerelease of VM, is that possible to append some classic old song sequences from films like Paalum Pazhamum, Pudhiya Paravai, Uthama Puthiran, Thookku Thookki, Sivandha Mann, .... like that before the movie starts and after interval before movie continues so that the present generation will have an opportunity to view the multi-dimensional facial expressions and dancing calibre with 100 percent lip synchronization to songs by our NT. VAsU sir can suggest the producers.
-
இன்று மதியம் 'சாய்கணேஷ்' பிலிம்ஸ் திரு.முரளி அவர்களுடன் கை பேசியில் உரையாடியதில் 'வசந்த மாளிகை' 99% நவம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் இருக்கலாம்' என்று கூறினார். தியேட்டர்கள் இன்னும் புக் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார். 'கும்கி' 'நீர்ப்பறவை' படங்களின் வெளியீடுகளைப் பொறுத்து தியேட்டர்கள் அமையலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சாந்தியில் வருவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவாக இருக்கும் போல் தெரிகிறது. ராகவேந்திரன் சாரும், முரளி சாரும் என்ன சொல்கிறார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்ப்போம்.