http://i1234.photobucket.com/albums/...psa9a82b95.jpg
http://i1234.photobucket.com/albums/...ps9574da8b.jpg
http://i1234.photobucket.com/albums/...ps2b7d0fa9.jpg
Printable View
நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 87-வது பிறந்தநாளையொட்டி, 11-10-2014 அன்று திருநெல்வேலியில், நெல்லை மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில், பேராசிரியர் திரு.கு. ஞானசம்பந்தம் தலைமையில் ஒரு சிறப்பு பட்டிமன்றம் சிறப்பாக நடைபெற்றது.
3 மணிநேர விழா வர்ணனையை - முரளி சார் மாதிரியோ மற்ற திரி ஜாம்பவான்களைப் போலவோ என்னால் விரிவாக எழுத இயலவில்லை. எனவே சுருக்கமாகப் பதிவிட்டுள்ளேன். மன்னிக்கவும். வீடியோ கிடைத்தவுடன், youtube மூலம் பதிவிட முயற்சி செய்கிறேன்.
பட்டிமன்றத் தலைப்பு -
சிங்கத் தமிழன் சிவாஜி அவர்களின் மங்காப் புகழுக்கு பெரிதும் காரணம்
புராணப் படங்களே!
சரித்திரப் படங்களே!
சமூகப் படங்களே!
அதன் சுருக்கமான தொகுப்பு.
(இந்தப பட்டிமன்றம், அகில இந்திய வானொலியின் கோடை பண்பலையில் (கொடைக்கானலிலிருந்து ஒளிபரப்பப்படுகிறது) தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது)
சரித்திரப்ப்டங்களே - என்ற தலைப்பில் வாதிட வந்த பேராசிரியர் வே.சங்கர்ராம் மற்றும் பேராசிரியை இந்திரா ஆகியோர்,
ராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன், திருப்பூர் குமரன், பகத் சிங், வீரபாண்டிய கட்டபொம்மன், சத்ரபதி சிவாஜி என்று நடிகர்திலகம் நடித்த பல்வேறு சரித்திரத் திரைப்படங்களையும் மேற்கோள் காட்டி, இதுமாதிரி இன்னொருவர் நடிக்கமுடியுமா, இன்று அத்தகைய சரித்திர நாயகர்களை இன்றுள்ள நடிகர்கள் நடித்து நாம் கற்பனையிலாவது காணமுடியுமா? என்று கேள்வி எழுப்பியதோடு, நடிகர்திலகத்தால்தானே இத்தகைய சரித்திர நாயகர்களை நினைவுகூர முடிகிறது என்று கூறினர். நாம் ஒவ்வொருவருடைய ஆசையுமே சரித்திரத்தில் இடம்பெறவேண்டும் என்பதாகத்தானே இருக்கமுடியும்? எனவே சரித்திரப் படங்களின் மூலமே நடிகர்திலகத்தின் புகழ் பெரிதும் உயர்ந்தது என்று வாதிட்டனர்.
புராணப் படங்களே - என்ற தலைப்பில் வாதிட வந்த பேராசிரியை ந.விஜயசுந்தரி மற்றும் பேராசிரியர் செல்ல. கண்ணன் ஆகியோர்,
திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருமால் பெருமை, திருவருட்செல்வர், கர்ணன், அரிச்சந்திரா போன்ற படங்களை மேற்கோள் காட்டிப் பேசினர். இன்று எந்தக் கோவில் திருவிழாக்களானாலும், நம்முடைய வீட்டு வைபவங்களானாலும், பக்திப் படங்கள் என்று சொன்னால் அதற்கு நடிகர்திலகத்தின் படங்களைத்தானே போடவேண்டியிருக்கிறது. அதோடு, சிவனாகவோ, அப்பராகவோ நாம் நினைத்தாலே நம் மனக்கண்முன் சிவாஜிதானே தோன்றுகிறார்? மகாபாரதத்தை புரிந்துகொள்ளமுடியாதவர்கள் கூட கர்ணன் திரைப்படத்தைப் பார்த்தால் பாத்திரங்களை எளிதில் புரிந்துகொள்ளமுடியுமே என்றதோடு, இன்றளவில் நடிகர்திலகத்தின் புராணப் படங்கள் மக்கள் மனதில் நிற்பதால்தானே, 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியானபோதும், கர்ணன் திரைப்படம் சக்கைப்போடு போட்டது என்றும் குறிப்பிட்டு, எனவே புராணப் படங்கள் மூலமாகவே நடிகர்திலகத்தின் புகழ் பெரிதும் உயர்ந்தது என்று வாதிட்டனர்.
சமூகப் படங்களே என்ற தலைப்பில் வாதிட வந்த பேராசிரியர் கோ.பா.ரவிக்குமார் மற்றும், கவிஞர். மலர்விழி ஆகியோர், அண்ணன் தங்கைப் பாசத்திற்கு ஒரு பாசமலர், நேர்மையான போலீஸ் அதிகாரிக்கு தங்கப்பதக்கம், கர்ஜிக்கும் வழக்கறிஞருக்கு கெளரவம், கடமை தவறாத மருத்துவருக்கு பாலும் பழமும், தேசபக்திக்கு பாரதவிலாஸ், அண்ணன் தம்பி பாசத்திற்கு ராஜபார்ட் ரங்கதுரை என்று சமுதாயத்தின் ஒவ்வொறு பாத்திரத்தையும் நடிகர்திலகம் மூலமாக தமிழக மக்கள் கண்டனர். அதோடு நடிகர்திலகத்தை தங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாகவே பாவித்தனர். இந்து, முஸ்லீம், கிருஸ்துவர் என்று எல்லா மதத்தினரும் கொண்டாடும் வேடங்களை ஏற்று நடிகர்திலகம் நடித்ததால், எல்லா மதத்தவரின் அன்பையும் பெற்றார். அத்தகைய சிறப்பைப் பெற்றுத் தந்தது சமூகப் படங்களே. எனவே, சமூகப் படங்கள் மூலமாகவே நடிகர்திலகத்தின் புகழ் பெரிதும் உயர்ந்தது என்று வாதிட்டனர்.
இறுதியாக தீர்ப்பளித்த பேராசிரியர். கு.ஞானசம்பந்தன்,
நடிகர்திலகத்தின் புகழுக்கு மூன்று தலைப்புகளுமே காரணம் என்றாலும், பெரிதும் காரணம் எது எனபதைதான் நாம் காணவேண்டும்.
சரித்திரப் படங்களிலும், புராணப் படங்களிலும் நடிகர்திலகம் அந்தப் பாத்திரத்தில் ஒன்றி நடித்தார், பேசப்பட்டார், புகழ் பெற்றார். புராணப் படங்களிலும், சரித்திரப் படங்களிலும், சரித்திரத்தில், நம் மனதில் வாழ்ந்த ஒரு பாத்திரத்தை மேலும் மெருகேற்றி, திரையில் நடிகர்திலகம் அதனைக் கொண்டுவந்தார். ஏனெனில், அதில் வேறு எதுவும் பெரிய மாற்றம், திருத்தம், செய்துவிடமுடியாது. ஆனால், சமூகப் படங்களில்தான் அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்தார். புதிய புதிய பரிணாமங்களைக் காட்டினார். ஒவ்வொரு வீட்டிலும், தனக்கு பாசமலர் ஆனந்த் மாதிரி ஒரு சகோதரன் இருக்கக்கூடாதா? என்றும் சமூகத்தில் தங்கப்பதக்கம் s .p .செளத்திரி மாதிரி காவல் துறை அதிகாரிகள் இருக்கக்கூடாதா? என்றும் ஏங்கவைத்தது நடிகர்திலகத்தின் சமூகப் படங்களே. சமூகப் படங்களில்தான் நடிகர்திலகத்தின் variety of acting ஐ நாம் காணமுடிந்தது. சரித்திரப் படங்களையும், புராணப் படங்களையும் கூட, நடிகர்திலகத்தின் original திரைப்படங்களின் அருகில்கூட செல்லமுடியாது என்றாலும், இப்போதிருக்கும் animation மற்றும் இதர தொழில்நுட்பங்களின் உதவியுடன் திரும்ப எடுக்க முயற்சிகள் செய்யலாம். ஆனால், நடிகர்திலகத்தின் இயற்கையான நடிப்பில் உருவான சமூகப் படங்களை யாரும், எந்தக் காலத்திலும் முயற்சி செய்யமுடியாது. எனவே, சிங்கத் தமிழன் சிவாஜி கனேசன் அவர்களின் மங்காப் புகழுக்குப் பெரிதும் காரணம் "சமூகப் படங்களே" என்று பலத்த கைத்தட்டல்களுக்கிடையே தீர்ப்பளித்தார்.
திருநெல்வேலி - நூற்றாண்டு மண்டபம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ஆரம்பத்திலிருந்து இறுதிவரை மிகவும் அமைதியாக, சலசலப்பின்றி அதேநேரத்தில் கைதட்டி ஆராவாரம் செய்து ரசித்ததைக் கண்டு பட்டிமன்றக் குழுவினர் வியந்து பாராட்டினர். நெல்லை மாநகர நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப் பேரவையின் சார்பில் நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செயப்பட்டிருந்தது. மண்டபத்தைச் சுற்றிலும் வைக்கப்பட்டிருந்த நடிகர்திலகத்தின் பல்வேறு விதமான புகைப்படங்களை வந்திருந்த அனைவரும் கண்டுகளித்தனர். (My Previous Post as You tube link)
நன்றி.
பார்த்ததில் பிடித்தது 42
இமயம் :
நடிகர் திலகத்தை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்த முக்தா ஸ்ரீனிவாசன் அவர்களின் இயக்கத்தில் , முக்தா ராமசாமி அவர்களின் தயாரிப்பில் Prof AS பிரகாசம் அவர்களின் கதை , வசனத்தில் 1979 ல் வந்த படம் இது .வழக்கமாக முக்தா படங்களில் வருவது போல கதாநாயனுக்கு எந்த விதமான ஒரு நோயும் இந்த படத்தில் இல்லை , மாறாக தன் குடும்பத்தில் வரும் சிக்கலான நிலைமையை நாயகன் சமாளிபதே கதை
எல்லோருக்கும் இந்த படத்தின் கதையை பற்றி தெரிந்து இருக்கும் என்ற நம்பிக்கையில் படத்தின் கதை சுருக்கம் மட்டும்
கங்காதரன் தன் மனைவி , மற்றும் மைத்துனி உடன் வசித்து வருகிறார் , அவருக்கு குழந்தை எல்லை என்பதால் தன் மைத்துனி சிந்துவை தன் மகளாக நினைத்து வளர்கிறார் . தன் நண்பர் , partner அம்பலத்தின் தம்பி கிருஷ்ணாவை காதலிக்கிறார் சிந்து , நிச்சயதார்த்தம் நடக்கும் பொது கிருஷ்ணா ஒரு குழந்தைக்கு தந்தை என்ற உண்மையை அறிந்து கொண்டு பெண் தர மறுக்கிறார் கங்காதரன் , மேலும் அந்த குழந்தையை வைத்து கொண்டு கிருஷ்ணாவின் குற்றத்தை நிரூபிக்க பாடுபடுகிறார் , கிருஷ்ணா அவர் திட்டதை முறியடிக்கிறார் , குடும்பத்தில் அனைவரும் அவரை மதிக்காமல் நடக்க , நண்பரும் தம்பியின் பக்கம் நிக்க
சத்தியத்தை மட்டும் நம்பி தனியாக போராடுகிறார் , வெற்றி யாருக்கு என்பதே முடிவு
இதே கூட்டனியில் 1978 ல் வந்து வெற்றி அடைந்த படம் தான் அந்தமான் காதலி , இந்த படமும் அதே போல் வெற்றியை இந்த படமும் பெட்டரு இருக்க வேண்டும் ஆனால் அப்படி நடக்காது வருத்தமே , படத்தில் குறை என்று பெருசாக தென்படவில்லை , location , புது ஜோடி ஸ்ரீவித்யா , கொஞ்சம் விறுவிறுப்பான கதை எல்லாம் இருந்தது , external factors தான் காரணமாக இருக்கும் என்று நம்புகிறேன் வேறு என்ன நான் வாழ வைப்பேன் படம் இமயம் வெளிவந்து 30 நாட்கள் கடக்கும் முன்பே வெளி வந்து நமக்கு நாமே போட்டி என்ற நிலைமையை மீண்டும் உருவாகியது .
முக்தா ஸ்ரீநிவாசன் படத்தில் நம்மவருக்கு எப்போதும் ஒரு ஸ்பெஷல் ரோல் அதாவது author backed role இருக்கும் , எழுதுவது AS பிரகாசம் என்ற பொது , அந்த எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்தது , படத்தை பார்த்த பொது அந்த எதிர்பார்ப்பு பூர்த்தி ஆனது, முதல் காட்சியில் காபி குடிக்க மறுப்பதும் , பின் தன் நண்பர் மிரட்டியதும் காபி குடிப்பதும் , தன் மனைவியின் வயிற்றில் செல்லமாக குத்துவதும் , தன் மைத்துனி உடன் விளையாடுவதும் ,அதே சமயம் ஒழுக்கத்தை போதிப்பதும் என்று கதைக்கான அடித்தளத்தை நன்றாக அமைத்து விடுகிறார்கள் .
இடையில் கிருஷ்ணாவின் பாத்திரத்தை பற்றி அறிய CID சகுந்தலாவின் பாத்திரம் , மேலும் YGM உடன் சில காட்சிகள் என்று படம் நகர்கிறது .
ரீனா இறந்த பிறகு , அந்த சிறுவன் ஜமுனாவை வைத்து கொண்டு நம்மவர் உண்மைக்காக போராடும் பொது , கிருஷ்ணா அதை வெல்லும் பொது படம் சுடு பிடிக்க தொடங்கி , ஹூக்லி வந்த உடன் படம் முடியும் என்று பார்த்தல் கிருஷ்ணா அதையும் முறியடித்து கடைசியில் நம்மவர் வசம் மாட்டும் பொது சபாஷ் என்று சொல்ல தோன்றுகிறது
படத்தின் பாடல்கள் அனைத்தும் இனிமை , படத்தின் வேகத்தடை என்று பார்த்தல் நகைச்சுவை காட்சிகள் தான் , veterans இருந்தும் காமெடி track complete failure.
இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரங்கள் இரண்டு தான் அது கங்காதரன் மற்றும் கிருஷ்ணா .
முதலில் கங்காதரன் பற்றி சில வரிகள் :
எங்கும் , எதிலும் சுகந்திரம் , அது தான் இவரின் தாரகமந்திரம் . வாரிசு இல்லை என்ற குறை இல்லாமல் , தன் மனைவியின் தங்கையை மகளாக வளர்கிறார் , முதல் காட்சியிலே இவர் படியில் இருந்து இறங்கி வரும் போதே மிடுக்கு தான் , மனைவியிடம் சின்ன சின்ன கொஞ்சல்கள் , மனைவி தன் தங்கையை பற்றி புகார் கூறும் பொது இவர் தன் மைத்துனி சிந்துவை அழைக்கும் விதத்தில் தான் எத்தனை கேலி , கிண்டல் , குழைசல் எல்லாம் . அரைகுறை ஆடை அணிந்து வரும் தன் மைத்துனி சிந்துவுக்கு உடை அணிவது தன் சுகந்திரம் என்று சொல்லுவதும் , நாகரிகமாக உடை அணிய கண்டிப்பதும் என்று தந்தை போல் நடந்து கொள்ளுகிறார்
அலுவகலத்தில் இவர் தன் கூட்டாளி படித்து பார்த்து கையெழுத்து போட்ட உடன் தானும் படிக்காமல் கையெழுத்து போடுவதும் , படித்து பார்த்து கையெழுத்து போடலாமே என்று கேட்கும் பொது , மனுஷனை நம்பனும் என்று சொல்லுவதும்
சிறுவன் ஜமுனாவின் குறும்புகளை பார்த்து தானும் சிறுவனாக ரசிப்பதும் , YGM சிறுவனை கேலி செய்யும் பொது அவரை கடித்து பேசுவதும் தன் அலுவகத்தில் வேலை செய்யும் பெண்மணியை மதிப்பதும் , அவரின் அந்தரங்க வாழ்கை பற்றி பலரும் பலவிதமாக பேசும் பொது அதை பற்றி எதுவும் கேட்காமல் இருப்பது அவரின் குணத்தை நிலைநாட்டும் காட்சிகள் .
சிந்துவுக்கு காதல் போதனை செய்வதும் , அதற்கு தான் தன் மனைவி உடன் பேசுவதை பார்த்து கற்று கொள்ளும் படி சொல்வது , இதே முகத்தா ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த பொம்மலாட்டம் படத்தில் வரும் காட்சி
ஸ்ரீவித்யா உடன் நடிகர் திலகத்தின் காட்சிகள் முன் பாதியில் கணவன் மனைவிக்கு மத்தியில் நடக்கும் ஊடல் , பிற்பாதியில் இதே மனிதர் ஹிட்லர் போல் பார்க்க படுகிறார் , என் ?
யாருக்கும் பிடித்த ஒரு விஷியத்தை , ஆனால் உண்மையை அவர் நம்புவதினால் தான் . தானே தனியாக சீட்டு ஆடுவதும் , 10 மணிக்கு மேல் பெட்ரூம்க்கு வரும் பொது மனைவி பேசும் பொது எரிந்து விழுவதும் , சிறுவன் ஜமுனாவை தன் மனைவி அடிப்பதை பார்த்து மலடி என்று திட்டுவதும் என்று வீட்டிலும் நிம்மதி இழந்து தவிக்கிறார் கங்காதரன்
இரண்டாம் பாதி முழுவதும் (கிருஷ்ணா , கங்காதரன் ராஜ்ஜியம் தான் ) இவர்கள் இடையில் நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான். தான் தோல்வி அடையும் பொது சிரித்து கொண்டே அதை deal செய்யும் விதம் ஆகட்டும் , தன் முயற்சிக்கு தோல்வி மட்டுமே பரிசாக கிடைக்கும் பொது சோர்வு அடையாமல் முயற்சிப்பதும் நாம் நிஜ வாழ்கையில் கற்று கொள்ள வேண்டியது , அதுவும் ரீனாவின் அண்ணன் பிறந்தநாள் விழாக்கு வர வைத்து , உண்மையை நிலை நாட்டும் பொது கிருஷ்ணா அதை முறியடித்த உடன் , நடிகர் திலகம் emotional outburst ஆகி வழக்கம் போல் react செய்வார் என்று பார்த்தல் அவர் சிரித்து கொண்டே பேசுவார் பாருங்கள் நடிகர் திலகத்தின் ரசிகராக இருப்பதை நினைத்து சிலிர்த்த தருணம்
நாம் அனைவருக்கும் அபிமான நடிகர் இந்த காட்சியில் இப்படி தான் நடிப்பார் என்று தெரிந்து இருக்கும் , அதை அப்படியே மாற்றுவது , அதை justify செய்வது நம்மவர் மட்டும் தான் .
அலுவகத்தில் வேலைசெய்யும் விஜயசந்திரிகா ஜமுனாவின் பிறப்பு சான்றிதழ் தேடி தரும் பொது அவர் மேல் பண மழையை பொழிய செய்யும் பொது it shows that how desperate he was to prove the truth . அது கிடைத்த உடன் அவர் கிருஷ்ணாவை பார்க்க போகும் பொது கிருஷ்ணா அவர் வெற்றியை கங்காதரனிடம் பேசுவதும் அனைத்தும் கேட்டு கொண்டு கங்காதரன் birth Certificate எடுத்து காண்பித்து , BETA என் கிட்ட விளையாட்டு காற்றிய என்று கேட்கும் பொது அவர் முகத்தில் கொப்ளிக்கும் பெருமை ஒரு பெரிய பாரத்தை இறக்கி சாதனை செய்தது போல் இருக்கும்
தன் ஜெயிக்க போவது 100 % உறுதி என்பதை அறிந்தும் கிருஷ்ணா தன் தவறை உணர்த்தால் மன்னித்து விடுவதும் , கிருஷ்ணா நல்லவர் என்று சொல்லி திருமணத்தை நடத்த முயற்சிப்பதும் இமயம் தான் இவர் குணம் என்று நிருபித்து விடுகிறார்
ஜெய்கணேஷ்
சிவாஜி போன்ற legend உடன் screen space ஷேர் செய்யும் பொது நாம் நமது ஆளுமையை நிரூபிப்பது கடினம் , ஜெய்கணேஷ் சிறந்த குணசித்திர நடிகர் , அற்புதமாக நடித்து இருப்பார் வில்லனாக தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்து இருப்பார் , ஆனால் திடீர் என்று மனம் மாறுவதும் , ஆவி பேச்சு கேட்டு திருந்துவதும் நம்பும் படி இல்லை , நடிகர் திலகத்துடன் வரும் confrontation scenes நன்றாக இருந்தது
ஸ்ரீ வித்யா :
refreshing pair , இந்த ஜோடி மீண்டும் இணைந்து நடிக்காதது பெரிய வருத்தம் தான் . கங்கை யமுனை பாடல், DR SIVA படத்தில் வரும் மலரே குறிஞ்சி மலரே பாடல் போல் நன்றாக இருந்தது , picturisation அருமை . தன் கணவருடன் சந்தோசமாக இருந்து விட்டு , பிறகு அவருடன் சண்டை போடா நேரும் பொது , கண்களில் ஒரு வெறுமை உணர்வை நன்றாக பிரதிபலிக்கிறார்
தேங்காய் ஸ்ரீனிவாசன்
வழக்கம் போல் அருமை , நகைச்சுவை காட்சிகள் சிறப்பாக இல்லை என்றாலும் செண்டிமெண்ட் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார் , நிச்சயதார்த்தம் நின்று போன உடன் இங்கேயே தொங்குவேன் என்று சொல்லுவதும் , முதல் காட்சியில் தமாசாக மிரட்டுவதும் , பிற்பாதியில் அதே போல் ஒரு சந்தர்பத்தில் மௌனமாக பேசாமல் இருப்பதும் , தம்பி தங்க கம்பி என்று நம்புவதும் , மனைவியிடம் ஏமாறும் காட்சிகள் , பின் அவரை பிடிக்க காசினோ போவதும் என்று நன்றாக செய்து இருக்கிறார்
ரீனா :
கொஞ்ச நேரமே வந்தாலும் படத்தின் திருப்பம் இவரால் தான் அனுதாபத்தை வரவைக்கும் பாத்திரம்
சென்ற முறை கலாட்ட கல்யாணம் படத்தை பற்றி எழுதும் பொது பெருசாக எழுத முடியவில்லை , காரணம் அது dialouge oriented movie , அதனால் தான் கொஞ்சம் அதிகமாக இதில் எழுதி உள்ளேன்
படித்து விட்டு உங்கள் கருத்தை கூறுங்கள்
ராகுல்,
எனக்கு பிடித்த படம் இமயம். ஸ்ரீவித்யா-சிவாஜி இணை இன்னும் வந்திருக்க கூடாதா என்று ஏங்கினேன்.
நீ இடைவெளி விட்டு வந்ததில் உன் பாணி இன்னும் crisp ஆகியுள்ளது.வாழ்த்துக்கள்.
கே.சி.எஸ்.
,நீங்கள் இருப்பது எங்களுக்கு பலம். நன்றிகள் உங்கள் பணிகளுக்கு.அப்படியே you tube கொடுங்கள்.பட்டி மன்றத்தின் சுவையை அறிய வேண்டாமா? அப்படியே சன் நிகழ்ச்சியையும் தரவேற்றுங்கள்.
நான் போட்டதிலேயே சிறந்த ஒன்றாக ,psycho -analysis பாணியில் முழுமை எய்திய, அவர் நடிப்பு திறனை முழு வீச்சில் அலசிய ,வாசுவின் பிடித்தம் என்னுடைய 3000 ஆகட்டும் .இதில் பெருமையே.
ஞான ஒளி-1972
பிறப்பில் தொடங்கி இறப்பில் முடியும் மனித வாழ்க்கை ,முடிந்து விடாத நிலையில் தொடர்வதை இருத்தல் என்று குறிப்போம். இருத்தல் என்பதன் சிறப்பம்சம் மானுட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை படைப்பதுவே ஆகும்.அவ்வப்போது அந்த அர்த்தத்தை புதுப்பித்து ,அதற்குண்டான பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது.வாழ்க்கையின் மதிப்பு இடை விடாத முயற்சியில்தான் உள்ளது.நம் வாழ்க்கைக்கு ஒரு ஞாயம் தானாக கிடைப்பதில்லை என்றாலும்,தொடர்ந்த தங்களது செயல்கள்தான் அதை அளிக்க இயலும்.சுதந்திரமாக இருக்கும் மனிதனால்தான் தன் இருத்தலுக்குண்டான பொறுப்பை ஏற்க இயலும்.இந்த அடிப்படையில் இயங்கும் செயல்பாடுகள் ,ஒட்டுமொத்தமான அவன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளிக்கும்.மற்றவர் எண்ணங்களுக்கும் ,அவர்களுக்கும் தவிர்க்க முடியாத போராட்டம் இருந்து கொண்டே உள்ளது.ஒருவர் சுதந்திரம் ,மற்றவர் சுதந்திரத்தை அழுத்தி, அழித்து விட எத்தனிக்கிறது.
ஒரு அனாதையான மனிதன் வரம்புகளற்ற சுதந்திரம் பெற்றிருக்கிறான்.அவனுடைய பொறுப்புகளும் அதிகம்.அவனுடைய அவசிய தேவைகளுக்கு கூட அவனாகவே செயல் பட வேண்டி உள்ளது.(ஒரு சராசரி மனிதனுக்கு அவசிய தேவைகளுக்கு குடும்பம் பொறுப்பேற்கிறது,ஒழுக்க நெறிகள் வரையறுக்க பட்டு சுதந்திரம் எல்லைக்குள் கட்டமைக்க படுகிறது.) அநாதைகளோ தங்கள் morality என்பதை கூட தாங்களே வகுக்க வேண்டும். அவர்கள் தங்கள் நோக்கத்திற்கு உகந்த master morality என்பதை வகுத்து slave morality என்பதை தவிர்க்கும் கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள்.போலி மனசாட்சியை தவிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள்.
ஒரு முரட்டு தகப்பனின் மகனான அந்தோணி, விவரம் தெரிந்த வயதில் அனாதையாக பட்டு ஒரு கிறிஸ்துவ பாதிரியால் ஆதரிக்க பட்டு ஓரளவு religious institution பாதிப்பில் ,அதுவும் பாதிரியாரின் மேல் உள்ள பக்தி என்ற ஒற்றை இலக்கில் பயணித்தாலும் ஆதார குணங்களை இழக்காதவன் அந்தோணி.
Typical Behaviours of an orphan-
1)Poor Self Regulation
2)Emotional Volatility.
3)Act on Impulse.
4)Immediate Urge for self-gratification.
5)Mixed Maturity levels.
6)Self parenting syndromes-Taking justice in their hands.
7)Learned Helplessness
8)Extreme Attention seeking.
9)Indiscriminate friendliness.
9)Absessive compulsive Tendencies.
10)Idiosynchrasies.
மேற்கூறிய எந்த விஷயங்களும் என் மூளையில் உதித்தவை அல்ல. இவையெல்லாம் பிரபல மெடிக்கல் journals இல் இருந்து post -orphanage behaviour பற்றி திரட்ட பட்ட சில points .
அந்தோணி ஒரு ஒழுங்கற்ற கோபகார தகப்பனுக்கு பிறந்து ஏழ்மையில் வாழ்ந்த போது இல்லாத பிரச்சினைகள், தகப்பன் தன்னை அடித்தவனை வெட்டி விட்டு தண்டனை பெற்று ,தாயையும் இழக்கும் போது ,அவன் trauma மற்றும் அநாதை நிலை ,பாதிரியாரால் படிப்பறிவின்றி , மத நம்பிக்கைகள் மட்டும் சொல்லி வளர்க்க பட்டு ஆதரிக்க பட்டாலும், அவன் அடிப்படை குணங்கள் மாறாமலே வாழும் ஒருவன். பாதிரியாரால் கூட அவன் அடிப்படை குணங்களை மாற்ற முடியாமல் ,பெயில் கொடுத்து போலீஸ் ஸ்டேஷன் போய் அடிக்கடி அழைத்து வந்து damage control தான் செய்ய முடிந்திருக்கிறது.
தனக்கென்று இலட்சியங்கள் இல்லாத அந்தோணி,பாதிரியாரின் லட்சியங்களை சுவீகரிக்கிறான்.. அது சார்ந்த கோட்பாடுகள் மட்டுமே ,அவன் master - morality என்பதை தீர்மானிக்கிறது.தொடர்ந்து தனக்கென்று அமைத்து கொண்ட உறவுகளை இழந்தோ,உறவுகள் சிதைந்தோ அவனின் மற்ற எல்லா ஆசைகளையும் தகர்க்கிறது.
poor self regulation and emotional volatility என்பது முதல் காட்சியில் இருந்தே வெளிபடுத்த படும். மற்ற கதாபாத்திரங்களின் வசனங்களும் அதையே நமக்கு சொல்லும். சிவாஜி அதை இளமையில் ஒரு விதமாகவும், நடு வயதில் ஒரு விதமாகவும், பணக்கார வயதான அருணில் வேறு விதமாகவும் வெளிப்படுத்தும் விதம் பிறகு விவரமாக அலச படும்.
தன் மகளிடம் கூட அவர் ஆசை brolier கோழி போல அவள் வளருவதே தான் தன் பாதிரி சார்ந்த விருப்பங்களை நிறைவேற்றவே ,அவளுக்கு மற்ற ஆசைகள் தவிர்க்க பட வேண்டும் என்று மகளின் விருப்பங்களை சாராத முரட்டு தனமான ஆதிக்க அன்புதான். ஊரில் அநியாயங்களை தட்டி கேட்பதில் சட்டத்தை கையில் எடுக்கும் புத்தி ,மகளுக்காக செய்யும் செயல்களிலும் வெளிப்பட்டு ,நினைத்ததை நினைத்த படி அப்பொழுதே செய்ய துடிக்கும் விளைவுகள் பாராத உணர்வெழுச்சி நிலை.மகள் தவறி விட்டாளே என்பதை விட கனவுகளை தகர்த்த கொடுமைதான் வாழைகளுக்கு யமனாகிறது.சில சமயம் அதீத புத்தியை காட்டி அதிசயிக்க வைத்தாலும், அப்பாவித்தனம் தொனிக்கும், சமயா சந்தர்ப்பம் தெரியாமல் எட்டி பார்க்கும் விளையாட்டு தனம், சவாலை ஜெயிக்க விரும்பும் (அல்லது ஜெயித்து விட்ட) அசட்டு தனம் கலந்த சவடால்கள், சிறு சிறு தற்காலிக வெற்றிகளில் இன்பம் காணும் mixed maturity,learned helplessness ,Idiosynchrasies எட்டி பார்க்கும் இடங்கள் ஏராளம்.
obsessive compulsive நிறைந்த தோள் தடவும் mannerism ,யாராவது ஒன்றை அழுத்தி சொல்லும் போது அதற்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பது (வரேன்டாடாடா )என இடது கை aggressive முரடனுக்கு இந்த படத்தில் நடிப்பிலும் , திரைக்கதை அமைப்பிலும் கொடுக்க பட்டிருக்கும் அற்புதமான psychology கொண்ட ஒத்திசைவு ,சிவாஜி இந்த பாத்திரத்தில் கூடு விட்டு கூடு பாய்ந்து ஒவ்வொரு அசைவிலும் நெளிவிலும் வெளிபடுத்தும் அதிசயத்தை எப்படி வியப்பது?
துளி கூட தன் நண்பனின் லட்சியங்களுக்கு,நம்பிக்கைக்கு,எதிர்காலத்துக்க ு உலை வைப்பதில் குற்ற உணர்ச்சி கொள்ளாமல், அவனை ஜெயித்து விட்ட தொனியில் சவால் விட்டு உலவும் அந்தோணியை எப்படி விவரிப்பது?
இந்த படம் வெளிவரும் போது நடிகர்திலகம் மாநகரம்,நகரம்,பேரூர்,சிற்றூர்,கிராமம்,குக்கிர ாமம் அனைத்திலும் முடிசூடா மன்னன். வசூல் சக்கர வர்த்தி. சூப்பர் ஸ்டார். அதனால் இரும்பு திரை, தெய்வ பிறவி காலம் போல doing justice to the role என்று சென்று விட முடியாது. ஒரு பாத்திரத்தை உள்வாங்கி,அதன் செயல்பாடுகள் தன்மைகளை நிர்ணயித்து ,வெளியீட்டு முறையில் பாத்திரத்தின் தன்மையும் வேறு படாமல் scene stealing ,scene capturing gestures ,ஸ்டைல்,எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சில antics எல்லாவற்றையும் கலந்து கொடுத்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் வசீகரித்து ஈர்த்தே ஆக வேண்டும்.படம் classic வகை என்றால் அந்த class maintain பண்ண பட்டே ஆக வேண்டும். இந்த ரசவாதம் ஞான ஒளியில் நிகழ்ந்தது.
இடைவேளைக்கு பிறகு திரைக்கதை cat -mouse cold war ,ரசிகர்களை கட்டி வைத்து,அந்த பாத்திர தன்மைகள் நீர்க்காமலும் பார்த்து கொண்ட அதிசயமும் நிகழ்ந்தது.
நடிகர்திலகம் அழகு, ஈர்ப்பு,ஆண்மை,கம்பீரம்,காந்த பார்வையுடன் கச்சிதமான உடலமைப்பு கொண்டு ரசிகர்களை கட்டி போட்ட காலகட்டம். இந்த படத்தில் இளைஞனாக half pant ,ஒரு கண்ணிழந்த நடுத்தர வயது, முதிய வயது கனவான் அனைத்து தோற்றங்களிலும் அவ்வளவு வசீகரம் இந்த திராவிட மன்மதனிடம். இப்போது கூட ராகவேந்தர் போட்ட படங்களை கிட்டத்தட்ட அரை மணி வைத்த கண் வாங்காமல் ரசித்தேன்.உலகிலேயே மிக சிறந்த ஆண்மகனாக ஒரு தமிழன் இருந்ததில் எனக்கு பெருமையே.
நடிகர்திலகத்தின் பிரத்யேக திறமைகளை கொண்டு வரும் படி அமைந்த படங்களுள் ஒன்று ஞான ஒளி. உதாரணம் மனைவி இறந்த செய்தி தெரியாமல் அவர் சவ பெட்டி செய்வதில் மும்முரமாக , பாதிரி படிப்படியாக ஏழு கேள்விகளில் முழு விஷயம் விளங்கும் படி செய்வார்.முதல் நிலை சந்தோசம் (குழந்தை பிறந்ததில்),இரண்டாவது குறை(தான் அருகில் இல்லாதது),மூன்றாவது மனைவியின் உடல் நிலை பற்றி சிறிய சந்தேகம், நான்காவது ஏதோ நடந்து விட்டதோ என்ற குழப்பம், ஐந்தாவதில் பாதிரி ஏதோ மறைக்கிறார் என்ற ஐயம் கலந்த வருத்தம், ஆறாவது நிலை நடந்ததை ஜீரணித்து உள்வாங்கும் பிரமையான நிலை, ஏழாவது துக்கத்தை உணர்ந்து கலங்கும் துடிக்கும் நிலை .இவையில் மற்ற நடிகர்களால் முதல், இறுதி ஆகியவற்றுக்குத்தான் முகபாவம் காட்டியிருக்க முடியுமே தவிர படி படியாக குறுகிய தொடர்ச்சியான கால நிலையில் ஏழு வித துரித மாற்ற பாவங்கள்!!!! குறித்து கொள்ளுங்கள்- கடவுள் தானே பூமிக்கு வந்து முயன்றாலும் முடியாது.
அந்தோணியின் rawness அந்த காதல் காட்சிகளிலேயே பளிச்சிடும். முதலிரவில் explicit ஆக திரும்பி நிற்க சொல்லி ரசிப்பது அந்த பாத்திரத்தின் ஆதார குணங்களுடன் இணைந்த காம வெளியீடு.சிறு சிறு வெளியீடுகளில் பின்னுவார். ராணியை திட்டி கொண்டே தொடர்ந்து வரும் போது,சர்ச்சுக்கு வருபவர் ஒருவருக்கு மிகையான சால்ஜாப்பு சலாம் போடுவதை சொல்லலாம்.
நான் பார்த்த உக்கிர ஆக்ரோஷ காட்சிகளில் காவல் தெய்வத்திற்கு அடுத்து இந்த படம்தான். கட்டு படுத்த படும் போது எட்றா என்று பாய யத்தனிப்புடன், கடைசியில் எதையும் ஏற்க முடியாத இயலாமையில் வாழைகளை வெட்டி சாய்க்கும் உக்கிரத்திற்கு இணையானதை இந்திய திரை கண்டதில்லை.
பாதிரி இறந்து கிடக்கும் வேளையிலும் , தப்பி போக முயலும் தன்னிடம் நண்பன் துப்பாக்கி நீட்டும் போது, நான்தான் குண்டை எடுத்துட்டேனே என்று குதூகல மனநிலையில் பேசும் கட்டம் இந்த பாத்திரத்தின் idiosynchrasy மனநிலையும் காட்டி ரசிகர்களையும் வசீகரிக்க முடியும் என்பதற்கு உதாரணம். தன்னிடம் இவ்வளவு உரிமையும் அக்கறையும் மிகுந்த நண்பனுக்கு ,தான் தப்பி சென்று இழைத்த துரோகத்தை பற்றிய சிறு மனசாட்சி தொந்தரவு கூட இன்றி, தன்னை திரும்ப பிடிக்க அலைவதில்,இறந்து விட்டதை நினைத்த மகளை உயிரோடு கண்டும் பேச முடியாத நிலைக்கு தன்னிரக்கம் கொண்டு, முடிந்தால் பிடித்து பார் என்ற சவாலை விட்டு சிறு சிறு தற்காலிக வெற்றிகளையும் explicit ஆகவே மகிழ்ந்து ரசிப்பார்.
இந்த மனநிலை நான் முன்னர் குறிப்பிட்ட mixed maturity கொண்ட idiosynchrasy வகை பட்டது.நடிகர்திலகம் நண்பனின் சந்திப்பு காட்சிகளில் ரசிகர்களை குதிக்க வைப்பார். சாத்துக்குடி பிழியும் காட்சியில் ,திடீரென்று எதிர்பாராமல் கண்ணாடியை உருவுவதில்,கணநேர கோபம் கலந்த ஆச்சர்யத்தை மீறி ,ஒரு விளையாட்டு தனத்துடன் தனது பார்வை திறனை வெளிபடுத்துவதாகட்டும்,ரேகைக்காக டம்ளர் மறைக்கும் நண்பனுடன் அதை குத்தி கையுறையை கழற்றும் காட்சிகள் பாத்திர தன்மை கெடாமல் சுவாரஸ்யம் கூட்டுவதற்கு உதாரணங்கள். லாரென்ஸ் தன்னை வெளியேற விடாமல் trap பண்ணி விட அவர் பேசும் monologue ஒரு வேதனை கூடிய விரக்தி,மிஞ்சி நிற்கும் சவடால் தன்மை, ஒரு uneasy sensation (நம்பிக்கை குலைவு), அத்தனையும் வெளிப்படும் உரத்து. ஆனால் அதனிடையிலும் அந்த பாத்திரம் அத்தனை தீவிரத்தின் நடுவிலும் சொல்லும் நல்ல வேளை பாதர் நீங்க இப்ப உயிரோட இல்லை .....
மகள் தேடி வந்த பரபரப்பில் மேரி என்று excite ஆகி தன்னிலை உணர்ந்து சாதாரணமாய் மேரி என்று மாற்றும் தன்மை,தன் மகளிடம் அடைந்த ஏமாற்றத்தை சொல்லி,அவளை குத்தி விட்டோமோ என்று ஆறுதல் படுத்தும் இடம், அவசர அவசரமாய் இருப்பதையெல்லாம் அள்ளி எடுத்து fridge கதவை உதைத்து சாத்தும் இன்ப அலைவு,தன்னுடைய பேத்திககாவது எல்லாம் சிறப்பாக செய்ய விழையும் தொண்டை அடைக்க கமரும் வசன வெளிப்பாடு,வேண்டாம்மா வயசாயிடுச்சு என்ற இனியும் ஓடி அலைய முடியாத விரக்தி வெளிப்பாடு என்று மகளை சந்திக்கும் கட்டத்தில் நடிகர்திலகம் விஸ்வரூபம் எடுப்பார்.
இந்த படத்தை பற்றி இன்னும் எவ்வளவோ எழுத கைகள் துடித்து கொண்டே உள்ளது.