விமானத்திற்குள் எடுக்கப் பட்ட பாடல்கள் என்றால் இரண்டு தான் நினைவுக்கு வருகின்றன..எழுதியதற்குப் பொருத்தமெல்லாம் இல்லை.. வேறு வேறு சூழல்களில் இருக்கும் விமானப் பாட்டுக்கள் தந்திருக்கிறேன்.
சி.க.
உங்கள் மாமியார் மரணச் செய்தியைப் படித்து சோகமானது உண்மை. விதி வலியது. யாரால் மாற்ற இயலும்? அதுவும் சடென் டெத் என்றால் ஏக டென்ஷனாகும். ஆபிஸ் கெடுபிடிகள் எங்குமே இப்படித்தானோ!பார்மாலிட்டீஸ் என்ற பெயரில் சித்ரவதைகள். ஆனால் வேறு வழியில்லை.
நான் இன்னும் விமானப் பயணம் மேற்கொண்டதே இல்லை. பாருங்கள்.. இணையத்தின் மூலம் நட்பானவர்கள் பலரும் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். இங்கே இந்தியாவில் ஹைதராபாத் ரவி சார் பெரும்பாலும் ஏர்போர்ட்டில் இருந்தபடியேதான் எனக்கு கால் பண்ணுவார். இரண்டு நாட்களுக்கு முன் கூட மும்பை ஏர்போர்ட்டிலிருந்து கால் பண்ணினார். கோபாலும் பலமுறை அப்படித்தான் பண்ணுவார். இப்போது கூட நெய்வேலியின் மேல் பறக்கும் குட்டி விமானத்தின் சத்தம் கேட்டு வெளியே ஓடிப் போய் அண்ணாந்து கண்டுபிடித்து பார்த்து விடுவதுண்டு. பறந்து விரிந்து அடர்ந்து கிடக்கும் மரங்களின் இடைவெளிகளுக்கு மத்தியில் இத்துன்னூண்டு கோயம்புத்தூர் போகும் விமானம் தென்படும்போது ஒரு சிறு மகிழ்ச்சிதான். சென்னை சென்றால் தலைக்கு மேலே பெரிசு பெரிசா பறக்கும் விமானங்களை பார்க்க ஆசையாய் இருக்கும். ஆனால் பிரஸ்டிஜ்? ஆசையை அடக்கிக் கொண்டே யாராவது கேலியாக நினைக்கப் போகிறார்கள் என்று மனம் முழுக்க விமானத்தை நினைத்துக் கொண்டு வெளியே பார்வையில் அலட்சிய பாவம் காட்டி நானும் நடிகர் திலகமாகி விடுவது உண்டு. கொஞ்சம் விமானம் அநதப் பக்கம் போனவுடன் ஓரக்கண்ணால் பார்த்து கொஞ்சம் திருப்திப்பட்டுக் கொள்வதும் உண்டு.
இதைச் சொல்ல என்ன வெட்கம்? எல்லோருக்கும் உள்ளதுதானே!