http://i60.tinypic.com/9ivbbn.jpg
Printable View
1973 வருட படங்களின் என் பிடித்தங்கள்.
Gap filler nostalgia on Naam Pirandha Mann (1977)
https://www.youtube.com/watch?v=RaLTL6UhyCI
நடிகர்திலகத்தின் உடல்மொழி:
நடிகர்ததிலகத்தின் உடல்மொழி,வனஜா,கண்பத்,காவேரி கண்ணன்,Sarathy மற்றும் நான்(Gopal) இணைந்து நடத்திய ஜூகல்பந்தி கச்சேரி பகுதி-10 இல் பல இடங்களில் சிதறி கிடந்த முத்துக்கள் உங்களுக்காக ,தொகுக்க பட்டு.
---பந்தம் படத்தில் break down ஆன காரிலிருந்து இறங்கி ஒன்றும் சொல்லாமல் அந்த driver ஐ ஒரு பார்வை பார்த்துவிட்டு நடந்து போவார்.
---தன் தம்பி மகள் (குழந்தை) நடனமாட அதை ரசித்துக்கொண்டே ,ஏதோ சொல்லவரும் தன் தம்பி மனைவியை தன் வலது மணிக்கட்டு அசைவிலேயே dispose செய்யும் "வீர பாண்டிய கட்டபொம்மன்"
---புது வேலைக்காரன் தவறு செய்து விட்டான் என்று தன் மனைவி அவனைக்காய்ச்சி எடுத்துக்கொண்டிருக்கும்போது,கையில் ஒரு செய்தித்தாள் சகிதம் அமர்ந்து அதை கேட்காமல் கேட்டு ரசிக்கும் "உயர்ந்த மனிதன்"
---தன் நண்பன் அவன் காதலியுடன் பேசிக்கொண்டிருக்கையில்,சற்றே தள்ளி சங்கோஜத்துடன் நின்றுகொண்டு கையில் உள்ள suitcase handle ஐ இரண்டு கைகளாலும் பிடித்திருக்கும் அக்காட்சி நம் "நெஞ்சிருக்கும் வரை" அகலுமா?
---தன் உடல், மனைவி யாக நடிக்கும் பெண்ணை நோக்கி இருக்க ,முகமோ தான் நேசிக்கும் "புதிய பறவையை" நோக்கி இருக்க முன்னவள் சொல்லும் பொய்யை பின்னவள் நம்பி விடபோகிறாளே என்ற பதட்டம் உடலில் தெரிய கண்களால் காதலியை கெஞ்சும் கோபால்.
.
---"தில்லானா மோகனம்பாள்" உள்ளே நுழைய,அவளை சைட் அடித்து விட்டு தன் தவில் சகாவைப்பர்த்து 'என்ன பார்த்தீரா?" என கண்சிமிட்டும் நாதஸ்வர வித்வான்,
---வயது பெண் ஒருத்தியின் பின்புறத்தை தட்டும் செயல் ஒன்று காதலை அல்லது காமத்தை, மட்டுமே வெளிக்காட்டும் செயல் என்ற நியதியை மாற்றி அதன் மூலம் உரிமையையும் வெளிக்காட்டலாம் என உணர வைத்த அந்த மஹா கலைஞனுக்கு அல்லவோ நாம் "முதல் மரியாதை" செய்யவேண்டும்.
---நான் நினைப்பதுண்டு. எப்படி இந்த மாதிரி cliched ஆக படங்களில் காட்சியமைப்புகள் வருகின்றனவே என்று!! என்னதான் காதலியை சந்திப்பது இதம் என்றாலும் , கதாநாயகனுக்கு குடும்ப பிரச்சினை காரணமாய் mood -out ஆகியிருந்தாலோ, அல்லது constipation போன்ற உடல் உபாதைகள் இருந்தாலோ, அவனால் காதல் காட்சியில் எப்படி romantic ஆக இருக்க முடியும்?ஆனால் எனக்கொரு பெரிய surprise பந்தபாசம் (1962)படத்தில்.
காதலியை, வழக்கமான பார்க்கில் சந்திப்பார். ஆனால் குடும்ப பிரச்சினை சம்பந்தமாக குழப்பத்தில் இருப்பார். காதலி பேச பேச,பதில் கூட பேசாமல் ,கடு-கடுவென்று உட்கார்ந்திருந்து ,நகர்ந்து விடுவார்.
NT is always a wonder and much ahead of his time !!!
--- சிற்றின்பம் கலவாமல் 100 பாடல்கள் பாடுவதாக ஒப்புக்கொண்டு அம்பிகாபதியாக அவையில் அமர்ந்ததும், இதெல்லாம் தனக்கு ஒரு சிறிய விடயம் என்பதுபோல, ஒரு முழுமையான தன்னம்பிக்கையுடன் ஓரக்கண்ணால் அவையிலிருப்போரை நோட்டம் விடுவார். நம்பியாருக்கு எரிச்சலில் முகம் கோணலாகும்.
---அழகர் கோவிலில் கச்சேரியை பாதி முடித்துக்கொண்டு போகும்போது, எதிரே வரும் மோகனாவை நேருக்கு நேர் அண்மையில் பார்த்ததும் awestruck ஆகி, கண் வெட்டாமல் பார்த்துக்கொண்டே இருப்பதும். (பின்னணியில் "அற்புதம், ஆனந்தம் ....என்று குரல்கள்)
--- மோகனப்புன்னகை'யில் அடுத்தடுத்து வரும் காதல் தோல்விகளால் மெல்ல மெல்ல உடைந்து, கடைசியில் கடற்கரையில் total dismay இல் உட்கார்ந்திருப்பதும்.
---துணையில், மருமகள் தந்த பிரச்சினையால், சோர்ந்து போய், சிந்தனையில், அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் போது ,அங்கு மகன் வந்து அப்பா என்று அழைக்கும் போது ,தன நிலையில் இல்லாது, குரல் வந்த திசை கூட அறியாமல், ஒரு வினாடி, தவறான திசையில் பார்த்து சமாளிப்பது......
---ஆட்டுவித்தால் பாடலில் ,ஆரம்பம். ஏதோ சிந்தனையில் உள்ள போது ,கண்ணன் வேஷத்தில் வந்த ,நண்பனின் குழந்தையை, ஆச்சார்ய பார்வை பார்த்து சுதாரிப்பது.....
---பாசமலர் ,வாராயென் தோழி வாராயோ பாடலில், மலராத பெண்மை மலரும், வரிகளில், தங்கை மற்றும் அவளின் நண்பிகளை கடந்து செல்லும் போது , வெட்கம், embarassment , பெருமிதம் கலந்த 10 வினாடி shot ......
---கிருஷ்ணன் வந்தான் படத்தில் செல்வம் இழந்த நல்லவன் ஒருவனின் மன அழற்சியைக் காட்டும் அந்த வெறித்த பார்வை..மருத்துவ மாணவனாய் அன்று நான் பார்த்த அந்த நடிப்புதெய்வத்தின் முகபாவம் -
பத்தி பத்தியாய் '' டிப்ரஷன்' பற்றிச் சொல்லும் நூல்கள் பலவற்றின் அத்தியாயங்களை வெல்லும் இதிகாசம்!
---நவராத்திரியில் ஆனந்த் தன் காதலி திரும்பியவுடன், வறண்ட கோடை வானத்தில் திடீரென இருண்ட மேகங்கள் திரண்டாற்போல், சிலநாள் தாடி அடர்ந்த சோகமுகபாவத்தைக் கீறிக் கிளம்பும் மின்னல்கள்....
மகிழ்ச்சி, உரிமை, கோபம், பரவசம், பச்சாதாபம்...தளர்ந்த உடல்மொழி மெல்லமெல்லக் கிளர்ந்து கிளைத்து எழும் அந்த அன்பு ஊட்டத்தின் வெளிவேகம்...
---ரோஜாவின் ராஜாவில் ,மன நோயின் ஆரம்ப அறிகுறிகளை காட்டும், யாரோ அருகில் தன்னோடு பேசுவதான பாவம்,
---எங்கிருந்தோ வந்தாள் ,இறுதி காட்சியில், ஏதோ சொல்ல வரும் ஜெயலலிதாவின் பால் பரிவு,அதே நேரம் ஒன்றுமே நினைவில்லாத நிலை, ஒரு மைய்யமான blank expressions கொடுத்து ,ஜெயலலிதா தவறாக நினைக்காமல் இருக்க ஒரு ஆறுதல் பார்வை,ஆறுதல் சிரிப்பு.
---அமர தீபம் படத்தில், amnesia நோயின் அறிகுறியை காட்டும், வெறித்த,சூன்ய பார்வை.
---ராஜாவில் ,ஜெயலிலதா மற்றும் ,அவர் தாயுடன் பொய் பேசும் போது , வாயை மறைத்து பேசுவது.
---அதே ராஜாவில், ஜெயலலிதா,பாலாஜி follow செய்வதை சொல்லும் போது ,சிறிதே திரும்பி, பிறகு பாலாஜிக்கு சந்தேகம் வராத படி, romance செய்ய குனிவது போன்ற பாவனை.
---விண்ணோடும் முகிலோடும் பாடலில்(புதையல்) ,காதலின் இன்ப லாகிரியை உணர்த்தும் குட்டி கரணம்.
--- பேசும் தெய்வத்தில், பத்மினி பிள்ளையை அழைத்து போகும் போது ,மாத்தி மாத்தி instructions மேல் instructions கொடுக்கும் போது ,தலைவரின் reaction .
---நீலவானத்தில், ஓடும் மேகங்களே பாட்டில், வருடம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே என்ற வரிகள் இரண்டாம் முறை உச்சரிக்க படும் போது ,தலைவரின் reaction .
---நான் வாழ வைப்பேன் படத்தில், போலீஸ் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடையும் போது , நினைவு படுத்தி கொள்ள முயலும் தலைவரின் action .
---புதிய பறவை ,பார்த்த ஞாபகம் பாடலில், அன்னையின் இழப்பின் மெல்லிய சோகம், இழப்பை ஈடு செய்யும் ,பாடகியின் பாட்டில் அடையும் பரவசம்,sophisticated upbringing தந்த style ,எல்லாம் தேக்கி, நாக்கில் நெருடும் புகையிலை துகளை ,விரலால் எடுக்கும் நேர்த்தி.
---அதே புதிய பறவையில், கதையை சொல்லி முடித்து, அதீத துக்கத்தினால், அடைத்து கொண்ட மூக்கை, கைகுட்டையால் சிந்தும், improvisation .
---பார் மகளே பார் படத்தில், அழையா விருந்தாளியாய், வந்திருக்கும் வீ.கே.ராமசாமியுடன் காட்டும் நாசுக்கான உதாசீனம் கலந்த அலட்சியம்.
---அதே பார் மகளே பார் படத்தில், தனக்கு பிடிக்காத ஒரு வியாபார விஷயத்தை பேசும், வீ.கே.ஆரிடம், light ஆக சோம்பல் முறித்து, சோர்வையும்,அக்கறையின்மை கலந்த எதிர்ப்பை காட்டும் அற்புத உடல் மொழி.
---பாச மலரில், கொல்ல வந்த revolver ஐ வைத்து,பாசத்தினால் துளிர்க்கும் கண்ணீரை துடைக்கும் கவிதை.
---ஆண்டவன் கட்டளை, ஆறு மனமே ஆறு பாடலில், துறவறம் கலந்த,mystic detachment உடன் வேர்கடலை ஊதி சாப்பிடும் காட்சி.
---திருவருட்செல்வரின், அப்பூதி அடிகள் மனைவியின் முன் காஞ்சி பெரியவர் போல், ஒடுங்கிய துறவற pose .
---வசந்த மாளிகை குடிமகனே பாட்டில், ஒரு காமம் கலந்த mischievous பார்வை. காந்தம் போல் இருக்கும்.
---அதே பாடலில், அலட்சிய செல்லத்துடன் , CID சகுந்தலாவை உதைப்பது.
---வசந்த மாளிகையில், plum கடித்து,தன் வன்காதலை வாணிஸ்ரீயிடம் உணர்த்தும் காமம் தோய்ந்த கவிதை வன்மொழி.
---சவாலே சமாளியில், தற்கொலை முயற்சியில் ஜெயலலிதாவை காப்பாற்றி, அவர் tandrum throw பண்ணும் பொது, இவ்வளவுதானா நீ, என்னை புரிந்து கொண்டது என்று உடலசைவின்றி,பார்வையில் உணர்த்தும் அழகு.
---சுமதி என் சுந்தரியில், பலூன் காட்சியில், மரத்தை கைகளால் சுரண்டி, வாலிபர்களை உன்மத்தம் கொள்ள வைத்த அழகு.
"தலைவர் உடல்மொழியில், அலட்சியம்" எனும் தலைப்பில் நான் பேச விழைகிறேன்:
---ஹ, என்ன துப்பாக்கி காட்டினால் பயந்துவிடுவேன் என நினைத்தாயா? நீ என் மனைவி தானே! கத்துவதை கத்திவிட்டு சமையலறைக்குள் ஒடுங்கு" என சொல்வது போல தான் பாட்டிற்கு துணிமணிகளை பயணத்திற்கு பெட்டிக்குள் வைத்துக்கொண்டே,பண்டரிபாயை அலட்சியப்படுத்துவதை சொல்வதா?
--- "நாயே! சில காலத்திற்கு முன் என்னிடமே வேலைதேடி வந்து, என் தயவால் வாழ்ந்து கொண்டு, இப்போ எனக்கு எதிராகவே கொடி பிடிக்கிறாயா,உன் வாலை ஓட்ட நறுக்குகிறேன் பார்!" என சொல்வது போல , தன் முன்னே குதித்துக்கொண்டிருக்கும் ஜெமினியை, பர்ர்க்ககூட செய்யாமல், ஒரு பென்சிலை தன் கண் முன் நிறுத்தி, அதை பார்த்து பேசும் அலட்சியத்தை சொல்வதா?
---தலைவரே சற்று முன் நீங்களே சொன்னது போல (இது பட்டிமன்ற ஐஸ்) "இவன் என்ன இங்கே? சமய சந்தர்ப்பம் தெரியாமல்!" என நினைத்து தன் முன்னாள் நண்பன் ராமசாமியை, கண்டும் காணாதது போல காட்டும் அலட்சியத்தை சொல்வதா,
--- "என்னால் அலட்சியப்படுத்தப்படும் அளவிற்கு கூட உனக்கு தகுதியில்லை. நீ ஒரு வெத்து சவடால் வைத்தி! கபடனும் கூட" என நாகேஷிற்கு சொல்லாமல் சொல்வது போல அவருடன் இணையும் ஒவ்வொரு காட்சியிலும் காட்டும் அலட்சியத்தை சொல்வதா,
---"நீ நல்லவன் ,ஆனால் அப்பாவி. அதனால் நீ உன் எஜமானியிடம், (அதாவது என் மனைவியிடம்) படும் பாட்டை பார்த்து வருந்திகொண்டே, ரசிக்கிறேன்.ஏனெனில் அவளும் அப்பாவிதான்! ஆனால் என்ன, பணக்கார அப்பாவி! enjoy. ஆனால் நான் உன் எஜமானன்; பணக்கார சமர்த்தன். ஆகவே நம் இடைவெளி அப்படியே இருக்கட்டும்" என சிவகுமாரிடம் சொல்லாமல் சொல்லும் ஒரு உயர்ந்த மனிதனின் நேர்மையான அலட்சியத்தை சொல்வதா,
--- "என்னை அவன் ஜெயிச்சுடுவானோ! ஹ! நாளைக்கு, அவனுக்கு வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு பாடத்தை கோர்ட்டில் கறபிக்கிறேன்!" என அலட்சியத்தை உடலாலும்,ஆனால் 'அப்படி எதாவது அவன் ஜெயிச்சுட்டானா?' எனும் மனதில் உதிக்கும் ஒரு சிறிய பயத்தை கண்ணாலும்,அதை அடக்க இன்னும் அலட்சியத்தை ஏற்ற, புகைக்கும் பைப்பை ஊதி ஊதி காட்டுவது..
எனும் இந்திய திரைப்படங்களுக்கே ஒரு கெளரவம் ஏற்படுத்திய காட்சியை சொல்வதா,
---"எனக்கு எப்படிடா நீ வந்து பொறந்தே? உதவாக்கரை! வயசுதான் ஆறது கழுதைபோல. ஆனால் படிப்பும் கிடையாது! வேலை வெட்டியும் கிடையாது!" என சொலவது போல "அப்பா!" என மரியாதையை கலந்த பயத்துடன் விளிக்கும் பாண்டியராஜனை "என்ன?" என ஒரு சொல்லால் குத்தி சாய்க்கும் அந்த தந்தைக்கே உரித்தான affectionate அலட்சியத்தை சொல்வதா,
--அதே "என்ன?" எனும் சொல்லை, தான் உயிர் நண்பன் என நினைத்திருக்கும் தன் நம்பிக்கை சின்னாபின்னமாக, தன் மேல் அபாண்ட களங்கம் சுமத்தி, தன் தங்கையை திருமணம் செய்ய மறுக்கும் ஒரு சந்தேகப்பேர்வழியை, பயமுறுத்தி, திருமணத்திற்கு இணங்க செய்துவிட்டு, "எப்படியோ எடுக்கப்படவேண்டிய இந்த முடிவு, இப்படி எடுக்க நேரிட்டதே!" எனும் விரக்தி கலந்த துக்கத்தைத் தேக்கி, நண்பன் அறையை விட்டு மெதுவாக வெளியேறும் போது, "ஆனால் ஒன்று!" என அவன் கூவ, மிக அலட்சியமாகக் திரும்பிச் சொல்லும் அந்த காட்சி, நெஞ்சிருக்கும் வரை நிலைத்திருக்கும் அல்லவா?
---உத்தம புத்திரனில் ,மாட்டி கொண்ட பார்த்திபனை, குரூரம்,வன்மம், குரோத சிந்தனை இவற்றோடு சுற்றி வருவது. அதே காட்சியில் பத்மினியிடம், காமம் கலந்த வன்மத்துடன் நோக்குவது.
---தெய்வ மகனில், தன்னை தானே வெறுக்கும், சுய வெறுப்பின் உச்சமாக, கண்ணாடியில் தன உருவத்தின் மீது தானே காறி உமிழ்வது.
---ராஜபார்ட் ரங்கதுரையில், பத்து நிமிட , தங்கையின் கணவனின் இரண்டாவது திருமண காட்சி. வேதனை, வெதும்பல், தன்னிரக்கம், வெறுப்பு, இறைஞ்சல், குற்றம் சாட்டும் குறிப்பு எல்லாம் கலந்த மௌன காட்சி.
---பராசக்தி:- முதலில், சென்னைக்கு வந்து ஹோட்டல் அறையில், அறிமுகமில்லாத பெண்ணைப் பார்த்தவுடன், வேர்த்து, சட்டென்று டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொள்வது; நிறைய சொல்லலாம்;
---தூக்குத் தூக்கி:- "கோமாளி" வேட எபிசோட் முழுவதும்; கடைசியில் நீதி மன்றத்தில், தனக்காக வாதாடத் துவங்கும் போது - "மாசுண்டாள் உமது மகள் ... தெய்வம் பொறுக்குமா இத்திருக்கூத்தை?" என்று முடிக்கும் கோபம், அவமானம், ஆத்திரம், போன்ற ரசங்களைக் கொணர்ந்த அந்த கர்ஜனை;
---ராஜா ராணி- "சேரன் செங்குட்டுவன்" - இந்த ஒரே டேக்கில் எடுக்கப் பட்ட காட்சியைப் பலரும் பேசி சிலாகித்தாகி விட்டது. இந்த ஷாட்டை எடுக்கும் முன், நடிகர் திலகம் அந்த செட் முழுவதையும் ஒரு முறை நோட்டம் விட்டு, பின்னர் சுற்றி ஏகப்பட்ட கோடுகளைப் போடச் சொன்னாராம். யாருக்கும் புரியவில்லை; பின்னர், ராஜ சுலோச்சனாவை, நான் பேசும் வசனங்களில் வரும் அந்தந்த இரசங்களுக்கு / உணர்ச்சிகளுக்கு ஏற்ப சரியான ரியேக்ஷனைத் தரச் சொல்லி விட்டு, ஒரே இடத்தில் நின்று கொண்டு பேசாமல் இங்குமங்கும் இலேசாக நடந்து கொண்டு பேசினாராம். அதை விட, ஒவ்வொரு வர்ணனையாக விவரித்துக் கொண்டே சொல்லும் போது, அவரது கைகளின் அபிநயத்தை கவனியுங்கள். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்த வசனத்தைப் பேசுவது கடினம் என்றால், அதை அந்தந்த உணர்சிகளுக்கேற்ற பாவங்களுடன் நடிப்பது தான் மிக மிகக் கடினம்.
--- இதே படத்தில், சாக்ரடீஸ் பாத்திரத்தில் வரும் போது, வரும் அந்த வயதான பாத்திரத்தின் உடல் மொழி; கூடவே, ஒரு தத்துவ ஞானிக்குரிய உடல் மொழி.
---வணங்காமுடி:- தர்பாரில், தனக்கு பதிலாக, தன்னுடைய நண்பன் தான் பாடகன் என்று தவறாகப் புரிந்து கொண்டு, தங்கவேலுவைப் பாடப் பணித்து, அவர் பாடுவதற்கு யோசிக்க, அவர் அடி வாங்கிய அந்தக் கணமே, "ஆ...ஆ...ஆ... பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் நாட்டுக்கு நல்ல பலன் தருமா?" என்று துவங்கும் பாடலில், அந்த "ஆ...." விற்கு, அவர் காட்டும், கோபமும், ஆத்திரமும், அப்பப்பா! அதாவது, இந்த பாவங்களைக் காட்டிக் கொண்டே பாடத் துவங்க வேண்டும்!
---பாபு , இதோ எந்தன் தெய்வம்--குழந்தையை ஆலவட்டம் சுற்றிய நடுவயது மனிதனுக்கு வரும் அந்த தலைச்சுற்றல்..
சில நொடிகளில் அது சரியாகும்போது வரும் விழி+ முகத்தெளிவு ----> செய்துகொண்டிருக்கும் பணியை அச்சிறு தடங்கல் தாண்டி செவ்வனே தொடரும் மனநிறைவு முகபாவம்..
--- படிக்காத மேதை..பாடச்சொன்னது சௌகார் ஜானகியை..பாடவிரும்பி இடையில் வருபவர் ஓசையின்றி கை ஜாடையால் '' இரு... இங்கு நான் தொடர்வேன்'' என ஜதி விலகாமல் சொல்லும் அந்த வினயமான கைமொழி..
---உயர்ந்த மனிதனில் காதல் மனைவி பார்வதியைத் தீவிபத்தில் பறிகொடுக்கும் முன் அவர் விழிகளில் தெறிக்கும் மகிழ்ச்சியை , பின்னாளில் வரும் காட்சிகளில் ஒன்றிலாவது நான் கண்டேனில்லை..
---ஓட்டுநர் வீட்டு காரசார விருந்து உண்ணும் சிறு சிறு மகிழ்வுக்கட்டங்களில் கூட கோடைக்கானல் மார்கழிக்காலைச் சூரியன் போல் ஒரு சோகச்சீலை போர்த்திய விழிக்கதிர்கள்
---ஒற்றை அடியில் மரத்தடியில் சித்ராவைச் சாய்ப்பதற்கு முன் இருந்த அந்த செல்வக்குழந்தையின் குதூகலம் கொஞ்சும் முகம்...கள்ளமற்ற அந்த வெள்ளைப்பார்வை...அந்த நொடிக்குப் பின் கோபால் விழிகளில் தென்படவே இல்லை..
---பாசமலரில், தன் மனைவியுடன் முதலிரவின் போது ,தங்கை மற்றும் அவள் கணவன் கொண்ட புகைப்படத்தை திருப்பி வைக்கும் ,நாணம் கலந்த பாச பண்பு.
---கௌரவத்தில், மன அமைதியிழந்து தவிக்கும் தந்தை, இரவில் சரியாக தூக்கம் இல்லாத போது , ARTIFACT யானை மரமிழுக்கும் பொம்மையிலுள்ள அறுந்து போன CHAINLINK ஒன்றை சீர் செய்ய முயலும் காட்சி.
---தங்க சுரங்கத்தில், சந்தன குடத்துக்குள்ளே, கிணற்று காட்சியில், SWING ஆகி ,திரும்பி வரும் , BUCKET ஐ ,ஸ்டைல் ஆக காலால் நிறுத்தும் அழகு.
---எங்க மாமாவில், நான் தன்னந்தனிக்காட்டு ராஜா பாடலில், குழந்தைகள் ஊதல்,horn ஊதி லூட்டி அடிக்கும் போது ,அடைத்து கொள்ளும் காதை ,விரலால் CLEAR செய்யும் 10 வினாடி GESTURE .
---சுமதி என் சுந்தரி, ஒரு தரம் பாட்டில், இளமை குறும்புடன், குளத்தில் கல் வீசும் bowling action .
---தெய்வ மகனில், வீட்டில் திருடன் புகுந்து விட்டான் என்றெண்ணி, இளைய மகன் hocky மட்டையை எடுத்து, anxiety , சிறிது அச்சம் கலந்த, தைரியத்துடன் ,முகம் தெரியாத திருடனை எதிர்கொள்ளும் அழகு.
---உத்தம புத்திரனில், பாதி ஆட்டம் பாட்டத்தில், அம்மா அட்வைஸ் பண்ண வரும் இடைஞ்சலை, ஒரு குழந்தையின் பிடிவாத மன நிலையில், காலை உதைத்து வெளியிடும் விக்ரமன்.
---அதே காட்சியில், no love ,no hate ,மனநிலையில், அம்மாவிடம் உணர்ச்சி பூர்வமான ஈடு பாடு இன்றி, மறுத்தும் பேச இயலாமல், ஊஞ்சலில் casual ஆக ஆடி கொண்டு, ஓர கண்ணால் அன்னையை பார்த்து, அவர் அறிவுரைகளை ,காதில் வாங்காத பாங்கு.
---அன்னையின் ஆணையில், உணர்ச்சி வச பட்டு, முரண்டி பனியனை கிழித்து, கீறி விடும் சாவித்திரியிடம் உடனே பதிலுக்கு வன்முறை பிரயோகிக்காமல்,washbasin போய் ,clean செய்து கொள்ளும், காட்சி.
---ரோஜாவின் ராஜாவில் ,மன நோயின் ஆரம்ப அறிகுறிகளை காட்டும், யாரோ அருகில் தன்னோடு பேசுவதான பாவம்,
---எங்கிருந்தோ வந்தாள் ,இறுதி காட்சியில், ஏதோ சொல்ல வரும் ஜெயலலிதாவின் பால் பரிவு,அதே நேரம் ஒன்றுமே நினைவில்லாத நிலை, ஒரு மைய்யமான blank expressions கொடுத்து ,ஜெயலலிதா தவறாக நினைக்காமல் இருக்க ஒரு ஆறுதல் பார்வை,ஆறுதல் சிரிப்பு.
---அமர தீபம் படத்தில், amnesia நோயின் அறிகுறியை காட்டும், வெறித்த,சூன்ய பார்வை.
---ராஜாவில் ,ஜெயலிலதா மற்றும் ,அவர் தாயுடன் பொய் பேசும் போது , வாயை மறைத்து பேசுவது.
---அதே ராஜாவில், ஜெயலலிதா,பாலாஜி follow செய்வதை சொல்லும் போது ,சிறிதே திரும்பி, பிறகு பாலாஜிக்கு சந்தேகம் வராத படி, romance செய்ய குனிவது போன்ற பாவனை.
---விண்ணோடும் முகிலோடும் பாடலில்(புதையல்) ,காதலின் இன்ப லாகிரியை உணர்த்தும் குட்டி கரணம்.
---பேசும் தெய்வத்தில், பத்மினி பிள்ளையை அழைத்து போகும் போது ,மாத்தி மாத்தி instructions மேல் instructions கொடுக்கும் போது ,தலைவரின் reaction. .
---நீலவானத்தில், ஓடும் மேகங்களே பாட்டில், வருடம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே என்ற வரிகள் இரண்டாம் முறை உச்சரிக்க படும் போது ,தலைவரின் reaction .
---நான் வாழ வைப்பேன் படத்தில், போலீஸ் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடையும் போது , நினைவு படுத்தி கொள்ள முயலும் தலைவரின் action .
--- சிவந்த மண் படத்தில் ,ஒரு நாளிலே பாடல் காட்சியில் ,முதல் சரணம் முடிவில் வரும் ,வரும் நாளெல்லாம் இது போதுமே என்ற இடத்தில் ஒரு திருப்தி கலந்த கிறக்க காமத்தில் கண் மூடுவார் பாருங்கள். நான்கு வினாடி கவிதை.
--- சுமதி என் சுந்தரி படத்தில் திடீரென்று தடுப்பின் அந்த பக்கம் ஜெயலலிதா அழ ,கீழே மேலே என்று எதேச்சையாய் சுழன்று ,ஜெயலலிதா பக்கம் திரும்பும் அப்பாவி நகைச்சுவை.
--- அதே படத்தில் முதலிரவுக்காக திட்டமிடும் தங்கவேலு ,டவல் உடன் திருப்பும் ஒவ்வொரு முறையும் திரும்ப வைத்து ஏதோ சொல்ல ,நாலாவது முறை சொல்லாமலே திரும்பும் spontaneity .
--- துணை படத்தில் விரக்தியுடன் பிரமை பிடித்தது போல அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கும் போது , சுரேஷ் அவர் வலப்புறம் வந்து அப்பா என்று கூப்பிட ,திடீரென்று யாருப்பா என்று குரல் வராத திசைகளை நோக்கி, நிதர்சன உலகிற்கு வரும் இடம்.
--- பராசக்தி படத்தில் ,ஹோட்டல் ரூமில் நுழைந்து நோட்டம் விட்டு, ரூம் பாய் நோக்கி காசு சுண்டும் இடம்.
--- பாசமலரில், மலராத பெண்மை மலரும் காட்சியில் , தற்செயலாய் அந்த பக்கமாய் செல்லும் போது ,நாணம், பெருமிதம்,கூச்சம் கலந்த முறுவல்.
--- யாருக்கு மாப்பிள்ளை பாட்டில் பக்க வாட்டில் கீழே நகரும் காமிராவில், ஸ்டைல் கலந்த ,விந்திய நடையுடன் செல்ல சிரிப்புடன் உல்லாசம்.
--- வசந்த மாளிகையில் பிளம் கடித்து காமம் இழையோடும் காதல் வேட்கையை சொல்லி, கொள்ளி கட்டையால் சிகரெட் கொளுத்தும் இடம்.
--- ராஜாவில் , ஓடி போக பார்க்கும் ரந்தாவிடம், ஸ்டைல் கலந்த அலட்சியத்துடன் சிகரட்டை கீழே எறிந்து, ஒரு தீர்மானத்துடன் நசுக்கும் இடம்.