Originally Posted by
esvee
சினிமா என்ற பிம்பத்தை சரியான முறையில் கையாண்டு ரசிகர்களை மகிழ்வித்த பெருமை எம்ஜிஆருக்கு மட்டுமே சாத்தியமானது . எத்தனையோ நடிகர்கள் தங்களுடைய திறமைகளை மட்டுமே ரசிகர்களுக்கு நடிப்பில் காட்டினார்கள் .சில சமயங்களில் அவர்களின் நடிப்பும் ரசிகர்களுக்கு சலிப்பையும் அலுப்பையும் தந்து விட்டது .காரணம் நவரசம் என்ற பெயரில் அளவிற்கு அதிகமாக இயல்பிற்கு மாறாக நடிப்பு அமைந்து விட்டதால் படங்கள் எதிர் பார்த்த வெற்றிகளை பெற இயலவில்லை .இன்று பார்த்தாலும் ரசிக்க முடியவில்லை .
எம்ஜிஆர் படங்கள் இன்று பார்த்தாலும் கதை இல்லாவிட்டாலும் மக்களுக்கு தேவையான சமூக கருத்துக்கள் , தத்துவம் மற்றும் கொள்கை பாடல்கள் , எளிய வசனங்கள் , புதுமையான காட்சிகள் விறுவிறுப்பான சண்டை காட்சிகள் , எம்ஜிஆரின் ஆளுமைகள் நிறைந்த எழிலான தோற்றம் , கட்டுக்கோப்பான உடற்கட்டு , அருமையான பாடல்கள் , சிறப்பான உடை அலங்காரம் , சிந்திக்கவைக்கும் காட்சிகள் என்று அடிமட்ட ரசிகன் முதல் மேல்தட்டு ரசிகன் வரை எம்ஜிஆரை ரசிக்க வைத்தது யதார்த்தமான உண்மை .