http://i58.tinypic.com/t89maw.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Printable View
http://i58.tinypic.com/t89maw.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i57.tinypic.com/2ro5fgk.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
TOMORROW ONWARDS NELLAI ARUNACHALAM A/cDts
grand gala opening
http://i1170.photobucket.com/albums/...psd261fd51.jpg
thanks to chokalingam shared in his facebook
நாடோடி மன்னன் ' திரைப்படம் வெளிவந்த போது
எம்ஜியார் பிக்சர்ஸ் உபயோகித்த கடித உறை .
http://i1170.photobucket.com/albums/...psdf0a5f4b.jpg
தீனதயாளு தெருவில் நான் தங்கியிருந்த அறையில், என்னுடைய உடைமைகள் என்று சொல்லிக் கொள்ளும்படியாக பெரிசாக ஏதும் கிடையாது. வயிற்று வலி நோயாளியாக நடித்து, எம்.ஜி.ஆர். கையால் வாங்கிய கோப்பையை மட்டும், அறையின் அலமாரியில் பெருமையோடு வைத்திருந்தேன்.
அந்தக் கோப்பையின் முகத்தில்தான் நான் தினமும் கண் விழிப்பேன் என்றாலும்கூட அது மிகையில்லை. அவ்வப்போது, அந்தக் கோப்பை என்னுடைய கற்பனைக் குதிரையைத் தட்டி விடத் தவறவில்லை.
எனக்குக் கோப்பையைக் கொடுத்தபின், என் நடிப்புத் திறமையால் பெரிதும் கவரப்பட்ட எம்.ஜி.ஆர். எங்கே போனாலும், தன்னுடன் என்னையும் அழைத்துக்கொண்டு போவது போலவும் பார்க்கிற ரசிகர்கள் எல்லாம், என்னைப் பார்த்து கையசைத்து ஆரவாரம் செய்வது போலவும், கும்பிடு போடுவது போலவும், அதைப் பார்த்து நான் முதலில் சந்தோஷப்பட்டாலும் உடனே, ‘அடேய்! இந்த வரவேற்பெல்லாம் எம்.ஜி.ஆருக்குத்தான்; உனக்கில்லை. புரிந்து கொள்!’ என்று என் மனச்சாட்சி என்னை இடிப்பது போலவும்கூட நான் கற்பனை செய்து கொள்ளுவேன்.
எனக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கிறபோது அதைப் பற்றி மற்றவர்கள் விசாரிக்க வேண்டும் என்று என் மனசு நினைக்கும். ஆனால், ஒருவரும் அதைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.
உதாரணத்துக்கு, எம்.ஜி.ஆர். கொடுத்த கோப்பையையே சொல்லலாம். நாடகத்தில் வயிற்று வலிக்காரராக நடித்து, எம்.ஜி.ஆரே பாராட்டி கோப்பையைக் கொடுத்து விட்டார். அதை எடுத்துக்கொண்டு, நாடகம் நடந்த டவுன் கோகலே ஹாலிலிருந்து நடந்தே புறப்பட்டேன். கோப்பையை ரோட்டில் போகிறவர்கள் கண்ணில் படும்படி பிடித்துக்கொண்டு மவுண்ட் ரோடு முழுக்க நடந்தே வந்தேன்.
‘அட! என்ன கோப்பை இது? யார் கொடுத்தாங்க? எதற்காகக் கொடுத்தாங்க’ என்ற யாராவது கேட்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். அப்படி யாராவது கேட்கும் பட்சத்தில், நாடகத்தில் ஒரே காட்சியில் நடித்து, எம்.ஜி.ஆர். கையால் கோப்பை வாங்கின விஷயத்தைச் சொல்லத் துடித்தேன். கேட்பவர் பொறுமையோடும், ஆர்வத்தோடும் இருந்தால் நடு ரோட்டிலேயே வயிற்று வலிக்காரராக நடித்துக் காட்டவும் தயாராக இருந்தேன். ஆனால், என் துரதிருஷ்டம்! ஒரு பயல் கோப்பையைப் பற்றி விசாரிக்கவில்லை.
வழியில் ஒரு போலீஸ்காரர் தலையைக் கண்டதும் பயம். இவர், ‘ஏது கோப்பை?’ என்று கேட்டு நான் ‘நடிப்புக்காக எம்.ஜி.ஆர். கையால் வாங்கிய பரிசு’ என்று சொன்னால், அவர் நம்பாமல் ‘டேய்! நல்லா நடிக்கிறியே! எங்கே திருடினே? சொல்லு!’ என்று இரண்டு தட்டுத் தட்டி விடுவாரோ என்று பயம் பிடித்துக்கொண்டது. கோப்பையைச் சட்டைக்குள் மறைத்துக்கொண்டேன்.
யாருமே கோப்பையைப் பற்றிக் கேட்கவில்லையே என்ற வருத்தத்துடன் அறைக்கு எடுத்துக்கொண்டு வந்து பரிசுக் கோப்பையை அலமாரியில் கம்பீரமாக நிறுத்தி வைத்தேன். தினமும் ரசித்தேன். கற்பனையில் மிதந்தேன். "
- ' நான் நாகேஷ் ' , நூலிலிருந்து .
repeated artcile but interesting
சிவாஜிகணேசனை வைத்துப் படம் எடுக்க வேண்டும் என்ற கோவைத்தம்பியின் விருப்பம், "மண்ணுக்குள் வைரம்'' படத்தின் மூலம் நிறைவேறியது. கோவைத்தம்பி, எம்.ஜி.ஆரின் பரம பக்தர். எனினும், தனது மதர்லேண்ட் பிக்சர்ஸ் சார்பில், சிவாஜிகணேசனை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று விரும்பினார்.
இந்த சமயத்தில், இளம் டைரக்டர் மனோஜ்குமாரிடம் ஒரு நல்ல கதை இருப்பதாகவும், அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று கோவைத்தம்பியிடம் பாரதிராஜா சிபாரிசு செய்தார். அதைத்தொடர்ந்து, கோவைத்தம்பியை மனோஜ்குமார் சந்தித்து, "மண்ணுக்குள் வைரம்'' கதையைச் சொன்னார். கதை, கோவைத் தம்பிக்கு பிடித்துவிட்டது. "இது சிவாஜிக்கு ஏற்ற கதை'' என்று தீர்மானித்தார்.
அப்போது, ஒரு தெலுங்குப் படத்தில் நடிப்பதற்காக சிவாஜி ஐதராபாத்துக்கு சென்றிருந்தார். கோவைத்தம்பி, ஐதராபாத்துக்குச் சென்றார். படப்பிடிப்பில் இருந்த சிவாஜியை சந்தித்து `மண்ணுக்குள் வைரம்' கதையைச் சொன்னார்.
கதையைக் கேட்ட சிவாஜி, "கதை எனக்குப் பிடித்திருக்கிறது. மதர்லேண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் படத்தில் நடிப்பதில் எனக்குப்பெருமைதான். ஆனால், என்னை நடிக்க வைப்பதாக அண்ணன் எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டீர்களா?'' என்று கேட்டார்.
"அண்ணனிடம் இதுபற்றி பேசி விட்டுத்தான் இங்கு வருகிறேன். என் படத்தில் நீங்கள் நடிப்பதில் அண்ணனுக்கு மகிழ்ச்சிதான்!'' என்று பதில் அளித்தார், கோவைத்தம்பி.
"அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி. உங்கள் படத்தில் நடிக்க எனக்கு சம்மதம்'' என்று சிவாஜிகணேசன் தெரிவித்தார்.
மனோஜ்குமார் டைரக்ஷனில், "மண்ணுக்குள் வைரம்'' படப்பிடிப்பு தொடங்கியது. சிவாஜிக்கு ஜோடியாக சுஜாதா நடித்தார். தேவேந்திரன் என்ற புதிய இசை அமைப்பாளர் இசை அமைத்தார்.
இதுபற்றி கோவைத்தம்பி கூறுகையில், "மண்ணுக்குள் வைரம் படம் 11-12-1986-ல் வெளிவந்து, 75 நாட்கள் ஓடியது. படம் நூறு நாட்கள் ஓடவில்லை என்றாலும், நடிகர் திலகத்தை வைத்து படம் எடுத்த மன நிறைவு இன்றளவும் எனக்கு இருக்கிறது'' என்றார்.
அடுத்து, "மங்கை ஒரு கங்கை'' என்ற படத்தை கோவைத்தம்பி எடுத்தார். இதில் சுரேஷ் -நதியா நடித்தார்கள்.
படத்தை மலையாள பட டைரக்டர் ஹரிஹரன் டைரக்ட் செய்தார். லட்சுமிகாந்த் -பியாரிலால் இசை அமைத்தனர்.
25-7-1987-ல் வெளியான இப்படம் 50 நாட்களே ஓடியது.
1987 டிசம்பர் 24-ந்தேதி எம்.ஜி.ஆர். மறைந்தபோது, கோவைத்தம்பி நிலைகுலைந்து போனார்.
அதுபற்றி அவர் கூறியதாவது:-
"எம்.ஜி.ஆர். மறைந்த அந்த நாள், என் வாழ்க்கையில் மிகத் துயரமான நாள். வானமே இடிந்து என் தலையில் விழுந்தது போல இருந்தது. நூறு குத்தீட்டிகளைக்கொண்டு, யாரோ என் இதயத்தைக் கிழிப்பது போன்ற ரண வேதனை ஏற்பட்டது. புகழின் உச்சியில் இருந்து, புழுதி மேட்டுக்குத் தள்ளப்பட்டு விட்டது போன்ற உணர்வு.
இந்தத் துயரில் இருந்து நான் விடுபட பல நாட்கள் ஆயின.
இந்த நாளில் அன்று (28.10.1983); ""ராணுவத்தை அனுப்புமாறு இலங்கைத் தலைவர்கள் கோரவில்லை'' சட்டசபையில் எம்.ஜி.ஆர். பதில்
இலங்கை அமைச்சர் தொண்டமானோ அமிர்தலிங்கம் போன்ற இலங்கைத் தமிழர் தலைவர்களோ ஈழ விடுதலைப் புலிகளோ இந்தியா ராணுவத்தை அனுப்ப வேண்டும்
என்று கேட்காதபோது, இங்கிருப்பவர்கள் சிலர் இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று கேட்பது எப்படிப் பொருத்தமுடையதாகும்'' என்று சட்டப் பேரவையில் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் கேட்டார்.
""விடுதலைப் புலிகள்கூட இந்தியா ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று கேட்கவில்லை. எங்களுக்கு உதவி செய்யுங்கள்; முடிந்தால் ஆயுதம் கொடுங்கள் என்றுதான் கேட்கிறார்கள்.
தனி ஈழம் வேண்டும் என்று முடிவு செய்வதோ கேட்பதோ அங்கு வாழும் தமிழ் மக்களே தவிர நாம் அதை முடிவு செய்து விட முடியாது. ஈழத் தமிழர்களோ விடுதலைப்
புலிகளோ இலங்கைத் தமிழர் தலைவர்களோ படை அனுப்புங்கள் என்று கேட்கவில்லை. இந்த உண்மையை மறைத்துப் பேசுகிறோம். இது பல சிக்கலை உருவாக்கும்'' என்றும் முதல்வர் சொன்னார்.
நவீன அரிசி அரவை ஆலைகளை அமைக்க திட்டம்
சென்னை, அக்.27- நாள் ஒன்றுக்கு 100 டன் நெல்லை அரவை செய்யும் திறன் கொண்ட நவீன அரிசி ஆலை சீர்காழி அருகே எருக்கூர் என்ற கிராமத்தில் அமைக்கப்படுகிறது.
மேலும் 5 இடங்களில் நவீன அரிசி ஆலைகளை ஏற்படுத்த மத்திய அரசிடம் அனுமதி கோரி இருக்கிறோம். இவற்றில் ஒன்றை தஞ்சை மாவட்டம், குத்தாலத்தில் அமைப்பது
பற்றி பரிசீலிக்கப்படும் என்று ஆர். ராஜமாணிக்கம் (தி.மு.க.) கேள்விக்கு பதிலளிக்கையில் தொழில் அமைச்சர் எஸ். திருநாவுக்கரசு தெரிவித்தார்.
( 28.10.1983 தினமணியில் வெளியான செய்திகள்... )
http://i57.tinypic.com/10mssuf.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Mayil Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
http://i58.tinypic.com/2mdlxkk.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Mayil Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
மக்களோடு மக்களாய் - இங்கிவரை யாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம்.
http://i61.tinypic.com/o89iyu.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Mayil Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia