sure . sure
Printable View
ஸ்பெஷல் பதிவு.
http://www.photofast.ca/files/products/5937.jpg
'காதல் ஜோதி' படத்தின் காட்டருவி வேகப் பாடல்
'சாட்டை கையில் கொண்டு
வாங்கக் கண்டு காளை ரெண்டு
ஓடுது பாரு சீறுது பாரு
பாயுது பாரு பறக்குது பாரு'
(அம்மாடி! எத்தனை 'ரு')
ரயில் வந்து கொண்டிருக்கிறது. ரெட்டை மாட்டு வண்டி ஒன்று சாலையில் 'ஜல் ஜல்' சப்தத்துடன் வீறு கொண்டு வேகமெடுத்து ஓடுகிறது. உள்ளே பனியன் தெரியும் கைகள் மடித்துவிடப்பட்ட ஜிப்பா ஒன்றை அணிந்து கொண்டு கழுத்தில் டை ஸ்டைலில் கர்சிப் ஒன்றை கட்டி, மைனர் செயினுடன் அந்த கட்டிளங்காளை மைனர் மிக மிக உற்சாகமாய் மாடுகளை சாட்டை கொண்டு விரட்டியபடியே வண்டியோட்டிப் பாடுகிறான். மாட்டு வண்டியின் வேகத்தை மிஞ்சும் வகையில் அவனது பாடல் இன்னும் வேகப் பிரவாகமெடுக்கிறது.
மழை பெய்து சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்க, அதையெல்லாம் தாண்டி அவன் மாட்டு வண்டி பறக்கிறது. பனை மரங்கள் படுவேகமாய் பார்வையில் இருந்து மறைகின்றன.
ஆப்பக்கூடை சுமந்தபடி ரோடின் நடுவே ஒய்யார நாடி நடக்கும் ஆப்பக்காரி அங்கமுத்து, வண்டியின் 'ஜல்ஜல்' சப்தம் கூடத் தெரியாமல் ஒரு இளம்பெண்ணை ஃபாலோ செய்யும் மைனர் இவர்களை செல்லமாகக் கடிந்தபடியே வண்டியை ஓட்டுகிறான் நம் காளை.
ஆட்டம் போட்டு வரும் ஆப்பக்காரம்மா
ரோட்டு ஓரம் கொஞ்சம் பார்த்துப் போங்கம்மா
நோட்டம் போட்டு வரும் மைனர் யாருங்க
ஓரப் பார்வை கொஞ்சம் மாத்திப் பாருங்க
பாட்டன் போட்ட ரோட்டைப் போல
எண்ணிக்கிட்டுப் போறாங்க
வீட்டுக்குள்ளே வச்சுக்காம
ரோடு வரை வாராங்க'
என்று 'ஜனங்களுக்கு பொது அறிவு இன்னும் வரவில்லையே' என்று சலித்துக் கொள்கிறான் அவன்.
வழியில் மறுபடி ஒரு தடங்கல். ஆட்டுக் கூட்டத்தை மேய்த்துக் கொண்டு ஆடோட்டி ஒருவன் புல்லாங்குழல் வாசித்தபடி நடந்து செல்ல ஆட்டுக் கூட்டம் பாதை மறிக்க, காத்து வேகத்தில் வந்த காளைகள் தவிக்க, நம் மைனர் காளை மாட்டு வண்டியில் மூக்குக் கயிற்றை இழுத்து வைத்து ஒரு பிரேக் போடுகிறான்.
ஆடு மேய்ப்பவனுக்கு அட்வைஸ் செய்து விட்டு
'ஆட்டுக் கூட்டம் வந்து பாதை மறிக்குது
காத்து வேகம் வந்த காளை தவிக்குது
மூக்குக் கயித்துல பிரேக்கப் போடுறேன்
ஆட்ட ஓட்டுய்யா... மாட்ட ஓட்டுறேன்'
என்று தொடர்கிறான்.
'மோட்டார் என்ன சைக்கிள் என்ன
எல்லாம் எனக்குப் பின்னாடி
போட்டா போட்டி வச்சால்
இங்கே நான்தான் போவேன் முன்னாடி'
'என் வேகத்துக்கு எவரும் இல்லை ஈடு' என்று கர்வம் கொண்டு கானம் இசைக்கிறான்.
என்ன அழகான பாடல்! என்ன பொருத்தமான இசை! சீர்மிகு சீர்காழியின் 'கணீர் கணீர்' வெண்கலக் குரல். அழகான ரவி முறுக்கு மீசையுடன் மைனர் செயின் சதம் கிளி, ஜிப்பா இத்யாதிகளுடன் கிராமத்துக் காளையாக மாட்டு வண்டி ஓட்டும் நேர்த்தி. விறுவிறு பாடல். காளைக்கு மூச்சிரைப்பது போல நமக்கு இந்தப் பாடலை சீர்காழி பாடி கேட்கும் போது மூச்சு முட்டுகிறது. அவ்வளவு வேகமான பாடல். மாட்டு வண்டியுடனே பயணித்து வரும் ரயிலின் சப்தம் சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கிறது.
ஆட்டுக் கூட்டம் பாதை மறிக்கும் போது ரவி 'ஹொஹொஹோஹோ' என்று மூக்கணாங் கயிற்றை இழுத்து காளைகளை நிறுத்துமுன் இயல்பான வண்டிக்காரன் நாக்கால் தரும் சப்தம் அழகாகப் பதிவாகி இருக்கும்.
பேக் புரஜெக்ஷன் சித்து வேலைகள் இல்லாமல் நேரிடியாக ரோட்டிலேயே இப்பாடல் காட்சி படமாகியிருக்கும். ரவியே பெரும்பாலும் வண்டி ஓட்டி வருவார். வண்டி சில இடங்களில் அப்படியே நின்று கொண்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
'சாட்டை கையில் கொண்டு வாங்கக் கண்டு காளை ரெண்டு' என்ற பல்லவியின் வரிகளை ஒவ்வொரு முறை கேட்கும் போதும் உற்சாகம் நமக்குள் பீறிடும்.
பாடலின் முடிவில் சீர்காழி அவருக்கே உரித்தான ஸ்டைலில் 'லால லல்லலல்லா லால லாலோ' என்று 'லோ' வில் முடிப்பது பாடலை இன்னும் எங்கோ தூக்கிக் கொண்டுப் போய் விடும். இடையில் ஒவ்வொரு முறையும் அந்த ரயில் சப்தம் மட்டும் வெகு பொருத்தமாய் ஒலிக்கும்.
மெல்லிசை மன்னர்களில் ஒருவரான டி .கே.ராமமூர்த்தி இந்தப் பாடலை அருமையான நாட்டுப்புற மெட்டில் தந்து அசத்தியிருப்பார். மிக மிக வித்தியாசமான ஃபாஸ்ட் டிராக் டியூன். எளிமையான வரிகள். ஆனால் பாடலைப் பாடுவது மிகவும் கஷ்டம்.
பாடலை அனுபவிக்க 3.30 இலிருந்து 6.50 வரை.
http://www.dailymotion.com/video/xto...9gb_shortfilms
வணக்கம் வாசு ஜி
காதல் ஜோதி பாடல்கள் அனைத்தும் அருமையானவை
ஹலோ ராஜேஷ்ஜி! வணக்கம். சௌக்கியம்தானே?
ஜி! தேவா தொடர் முடிந்து விட்டதா?
அனைவருக்கும் வணக்கம்!!!
பாடல் இரண்டு
பாணி ஒன்று
தொடர் 5
மனைவி இல்லாத மாணிக்க நாயகர்கள்.
மனைவியை இழந்த இந்த நாயகன் தன் பேச முடியாத ஊமை மகனோடு ஊர் ஊராக அலைய, தஞ்சம் கொடுக்கிறாள் அந்த சுந்தரக் கன்னி. மகனிடம் நேரடிப் பாசத்தையும், தந்தையிடம் மறைமுகக் காதலையும் கா(கொ)ட்டுகிறாள் அவள்.
'நித்திரையில் வந்து
நெஞ்சில் இடம் கொண்ட
உத்தமன் யாரோடி
தோழி'
அவள் விரகதாபம் கொண்டு தன் காதலை அவனிடம் வெளிப்படுத்த எத்தனிக்க,
இறந்த தன் மனைவி மீது இன்னும் மாறா அன்பு வைத்திருக்கும் அவன் அந்தக் கன்னியின் காதலை மறுக்கிறான். வாழ்க்கையை வெறுத்துப் பாடுகிறான்.
'நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை'
என்று மனம் வெறுத்துப் பாடுகிறான்.
'கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ?'
'நிம்மதி இழந்து நான் அலைந்தேன்
இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்?'
என்று மனம் வெதும்புகிறான். அவன் மனம் கண்டு அந்தப் பேதை தவிக்கிறாள்.
ஜெமினி, விஜயா நடித்த 'ராமு' படத்தில் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய காலத்தால் அழிக்க முடியாத கணம். ஜெமினியின் சோகம், விஜயாவின் தாபம் அருமை.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=F0xW0-EfOrQ
இந்த நாயகர் மனைவி இருந்தும் இழந்தவர். இவர் ஒரு போலிஸ் அதிகாரி. ஆனால் சிறு வயதில் சில திருட்டுத் தொழில்கள் செய்துதான் வாழ்க்கையில் இவர் முன்னேற வேண்டி இருந்தது. ஆனால் அவர் குற்றவாளி அல்ல. அவர் இப்போது கண்ணியமான கடமை தவறாத போலீஸ் அதிகாரி. இவர் மனைவி மிக நேர்மையானவள். கண்டிப்பானவள். ஒரு சந்தர்ப்பத்தில் தந்து கணவன் சிறு வயதில் குற்றங்கள் புரிந்தவன் என்று தெரிந்துவிட அதனால் கொதிப்படைகிறாள். தன் கணவன் மீது வெறுப்படைகிறாள். கணவன் இப்போது நல்லவன் ஆயினும் அவனை அவள் மன்னிக்கத் தயாராய் இல்லை. கணவனை விட்டு பிரிகிறாள். அவர்களுக்குப் பிறந்த மகன் இப்போது தந்தையோடு. நாயகனோ மனசாட்சி கேட்காமல் வேலையை துறந்து ஒரு தேயிலை எஸ்டேட்டில் பொறுப்பான வேலைக்கு சேர்கிறான்.
போன கதை போலவே இந்த நாயகன் வாழ்விலும் இங்கு ஒரு இளம்பெண் குறுக்கிடுகிறாள். அதுபோலவே குழந்தையுடன் பாசம் காட்டுகிறாள். அந்தக் கதையில் வருவது போலவே நாயகனை விரும்புகிறாள் வயது வித்தியாசங்களையும் மீறி. தன் மனதிலுள்ள காதலை இந்த இளம் மங்கை நாயகரின் குழந்தையை கொஞ்சுவது போலப் பாடி சூசகமாகவும், நாசூக்காகவும் தன் மனதிலுள்ள காதலைத் தெரியப்படுத்துகிறாள்.
'வாடா என் ராஜா கண்ணா
வாடாத ரோஜாப் பூவே
தாயும் இங்கே
தந்தை இங்கே
யாரும் பெற்றால்தானா பிள்ளை கண்ணா?!
மன்னனைப் போல் தந்தை பக்கம் ராணி இல்லை
கண்ணனைப் போல் தேவன் பக்கம் ராதை இல்லை
ஊமை நெஞ்சில் கோடி எண்ணம்
தேவன் வந்தால் கோபம் கொள்வான்
ஏழைக் கனவே காலம் வருமா
என்றாவது வந்தால் அதைக் கொண்டாடும் நெஞ்சம்'.
என்று ஏங்கி நாயகன் சம்மதிப்பானா என்று ஏக்கம் கொள்கிறாள்.
'ரிஷிமூலம்' படத்தில் இளையராஜாவின் இசையில் மிக மிக அற்புதமான பாடல் இது. ரீனாவும் அமர்க்களம்.
இப்போது எனக்காக. ப்ளீஸ்!
இப்போது என் திருப்திக்குக் கொஞ்சம் எழுதிக்கவா? எழுதாம இருக்க முடியலையே! புத்தி முழுக்க அங்கேதானே போகுது.:)
இப்படத்தின் நாயகர் நடிகர் திலகம். ரீனா சாரதாப்ரீதா குழந்தையுடன் கொஞ்சியபடியே தன் காதலை நடிகர் திலகத்திடம் நயமாக வெளிப்படுத்த, அதைப் புரிந்து கொண்ட நடிகர் திலகம் தரும் ஒவ்வொரு போஸையும் பாருங்கள். அசந்து அசந்து போவீர்கள். 'வாடா என் ராஜாக் கண்ணா' முதல் வரியின் போது பூவாளியில் பூஞ்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் நடிகர் திலகம் வாயில் 'தம்'முடன், கையில் பூவாளியுடன், கண்களில் கையகல கூலிங் கிளாஸுடன் 'டக்'கென்று திரும்பி அளிக்கும் அந்த 'போஸை'க் கவனியுங்கள். 'வாடா என் ராஜாக் கண்ணா' வரியை இரண்டாவது முறை ரீனா பாடும் போதும் வெகு ஸ்டைலாக 'தம்'மை வாயிலிருந்து எடுப்பார். அந்த போஸ் ஒரு செகண்ட். இந்த போஸ் ஒரு செகண்ட். ஆனால் ஈரேழு ஜென்மம் எடுத்தாலும் மறக்க இயலாத போஸ்கள். 'வாடாத ரோஜாப்பூவே' எனும் போது மறுபடியும் ஸ்டைலாக சிகரெட்டை வாயில் வைப்பார். நிற்கும் போஸ் அபாரமாக இருக்கும். பல்லவி முடிந்து இடையிசை வரும்போது ரீனா ஆடிக் கொண்டிருப்பார். அப்போது நடிகர் திலகம் 'இன்' பண்ணிய ஸ்டைலான உடையுடன் இடுப்பில் கைவைத்து மகா மெகா ஸ்டைலாக நிற்பதைப் பார்க்க வேண்டுமே. அத்தனை கண்களும் பட்டுவிடும்.
ஆனால் ரீனாவின் ஆசை அறிந்து, புரிந்து, முகத்தில் 'நீ நினைப்பது நடக்காத, முடியாத காரியம்' என்று வெகு ஈஸியாக பார்வையாலேயே எக்ஸ்பிரஷன்ஸும் காட்டி விடுவார்
அப்பாடா! இப்பத்தான் முழுத் திருப்தி.
https://www.youtube.com/watch?v=kcvBFu3bbCs&feature=player_detailpage
வணக்கம் கல்நாயக்.
ஹாய் ஆல்
காதல் ஜோதியும் வாடா என் ராஜாக்கண்ணாவையும் இனிமேல் தான் பாக்கணும் வாசு சார்.. பாட் கேட்டது வெகுகாலத்துக்குமுன் ரிஷிமூலம் பார்த்தப்ப.. பார்த்தது மதுரையிலில்லை..கோயம்புத்தூர்!
ஆமா..இது மாலை நேரத்து மயக்கம் நடிப்புச் சுடர் பாட்டும் இதே மாதிரி தானா?
*
வணக்கம். சி.க.சார்.
கிட்டத்தட்ட அது குடும்பப் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் மனைவி, மக்கள், அன்னை, தந்தை, சகோதரர்களை விட்டுவிட்டு வாழ்க்கை வெறுத்து ஓடிய, வாழ்க்கையில் பிடிப்பிழந்த ஒரு இயாலதவனின் சோகம் சி.க.சார். இன்னொருத்தி (என் பிரிய சைலஸ்ரீ) லட்டு மாதிரி கிடைத்து ஆசையை பகிரங்கமாகவே வெளியிட்டாலும் (முனிவன் மனமும் மயங்கும் பூமி... மோக வாசல்தானே!?) இது கொஞ்சமும் மசியாத கட்டை. முன்னால் சொன்ன அந்த இருவரும் கட்டுப்பாடு. இது கிட்டத்தட்ட சந்நியாச கேஸ். அவ்வளவே!