-
பாஸ்கர் சார்/ஆதிராம்,
நான் முன்பே கேட்டுக் கொண்டது போல் நடிகர் திலகத்தின் அரசியல் பற்றிய வாக்கு வாதங்களை தொடராமல் பதிவுகளை தொடருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
ஆகேஎஸ்,
சில நேரங்களில் சில பதிவுகளை செய்யும்போது அது தேவையானதுதானா என்று யோசித்து செய்தால் பலரும் மனம் புண்படுவதை தடுக்கலாம். நீங்களே சொன்னது போல் இந்த வாக்குவாதம் எதை சுற்றி நிகழ்கிறதோ அந்த நிகழ்வுகள் அரங்கேறும்போது உங்களுக்கு 3 வயது எனும்போது அதைப் பற்றி கருத்துக் கூறுதல் தவறில்லை. ஆனால் அன்றைய Ground Reality தெரியாமல் அன்று களத்தில் நின்றவர்கள் மனம் புண்பட பேசுவதை தவிர்க்கலாமே.
ராகவேந்தர் சார்,
இந்த திரியின் நெறியாளர் [மாடரேட்டர்] என்ற பதவி என்பது வானளாவிய அதிகாரம் படைத்த பதவியொன்றுமில்லை. யாரையும் நீக்கவோ சேர்க்கவோ எனக்கு அதிகாரமில்லை என்று உங்களுக்கே நன்றாக தெரியும். இருந்தும் ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.
என்னைப் பொறுத்தவரை ஜனநாயகத்தில் முழு நம்பிக்கை உள்ளவன். அனைவரின் கருத்துக்கும் மதிப்பு கொடுப்பவன்.இங்கே நாகரீகத்தின் எல்லைக்குட்பட்டு யார் எழுதினாலும் அதை அனுமதிப்பவன். இவ்வளவு ஏன் என்னை விமர்சித்து மாற்று முகாம் நண்பர்கள் நடிகர் திலகம் திரியில் எத்தனயோ முறை எழுதியபோது கூட அதை நீக்காதவன் நான். இதை தற்பெருமைக்காக சொல்லிக்கொள்ளவில்லை. உண்மை அப்படியிருக்க நான் ஏதோ உங்களை திரியை விட்டு விலக்கி விடுவேன் என்பது போல் நீங்கள் எழுதியிருப்பது வேதனையளிக்கிறது. நீங்கள் உடனே அப்படி சொல்லவில்லை என்பீர்கள். இதற்கு மேல் இந்த விவாதத்தை நீட்டிக் கொண்டு போக விரும்பவில்லை.
ஒன்றே ஒன்று. ஒரு நல்ல விவாத அரங்கம் என்ற அமைப்பு நிறுவப்படுவதின் நோக்கமே பல்வேறு கருத்துகள் நாகரீகமாக முன்வைக்கப்பட்டு வரம்பு மீறாமல் விவாதிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான். அப்படியிருக்க எதிர் கருத்துக்களே வரக்கூடாது என்று சொன்னால் ------ என்ன சொல்வது?
அன்புடன்
-
-
-
-
-
-
-
-
-