திரு கோபால் - உங்கள் பரிவுக்கு நன்றி - நீங்கள் இதை PM ஆக , இயல்பாக அனுப்பியிருக்கலாமே - பொதுவாக போட்டு ஒருவர் மனதை ஏன் புண் படுத்தவேண்டும் ? திரி தோய்ந்த இருந்த சமயத்தில் ( சிலை காரணமாக ) பதிவுகளை போட்டு இந்த திரியில் ஒரு உற்சாகத்தை கொண்டு வந்தவர் வினோத் - சிலை விஷயம் முடியும் வரை சோக கீதத்தைதான் இந்த திரியில் கேட்கவேண்டும் என்று சொன்னவர்களை அவர் போட்ட பதிவுகள் மனம் மாற வைத்தன ---- இயல்பாக இருப்பவர்கள் நல்ல பதிவுகளை ஏன் போடுவதில்லை ? திரியின் வேகம் ஏன் அடிக்கடி reverse gear இல் செல்கிறது ?
ஏன் நாம் மற்றவர்கள் இங்கு போடும் பதிவுகளை பாராட்ட தயங்குகிறோம்? - போடும் நபர்களை ஏன் உற்சாகம் படுத்துவதில்லை ? காசா ? பணமா ? சில நல்ல வார்த்தைகள் தானே ? கர்ணனை ரசிக்கும், போற்றும் நாம் மற்ற பதிவுகளை பாராட்டுவதில் ஏன் கர்ணனனுக்கு எதிர்மறையாக இருக்கிறோம் ? இதுதான் இயல்பா ? இதன் பெயர் ஈகோ --- மற்றவர்கள் பாராட்டவேண்டுமே என்பதற்காக பதிவுகள் இங்கு யாரும் போடுவதில்லை - ஒரு ஆத்ம திருப்தி அவ்வளவு தான் - இறைவனை வித விதமாக அலங்காரங்கள் செய்து அழகு பார்ப்பது போல நம் acting god யை வித விதமான கோணங்களில் அவருடைய பரிமாணங்களை கோர்த்து இந்த திரியில் அழகு பார்க்கிறோம் - இதை யார் வேண்டுமானாலும் புகழலாம் - இது இயல்புதானே !!
உங்கள் எழுத்தின் வளமையில் மனம் பறி கொடுத்தவர்களில் நானும் ஒருவன் , ஆனால் வளமையை நீங்கள் அதிகமாக மற்றவர்கள் மனதை புண் படுத்துவதில் செலவழிக்கிண்டீர்கள் என்று நினைக்கும் போது மனம் மிகவும் வேதனை படுகின்றது - நான் என் பதிலை PM ஆகத்தான் அனுப்பி இருப்பேன் - ஆனால் என்னுடைய பழைய PM யே நீங்கள் படிக்காத போது , இதை இங்கு பதிவிடுவதை தவிர்க்க முடியவில்லை
அன்புடன்
ரவி