-
பத்து வயதில் கணக்கு கேட்டார்!
Mgrஎம்.ஜி.ஆர் அவர்கள் பள்ளிக்கூடத்தில் மூன்றாவது வகுப்பு படித்து கொண்டு இருக்கும் காலத்தில் ஒரு நாள் அந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு தண்ணீர் குடிக்க ஒரு மண்பாணையில் தண்ணீரும், பக்கத்தில் ஒரு அலுமினிய டம்பளரும் வைத்து இருப்பார்கள். தினமும் காலையில் பள்ளிக்கூடத்துக்கு வருகிற பிள்ளைகள் வரிசை பிரகாரம் இந்த மண்பானை சுத்தமாக கழுவி தண்ணீர் கொண்டு வந்து வைக்கவேண்டும். இதுமுறை. இந்த பள்ளிகூடத்தின் விதிமுறை
இப்படி இருக்கும் போது ஒரு நாள் தண்ணீர் கொண்டு வரபோகும்போது பானை உடைந்து விடுகிறது. இதற்கு மறு பானை வாங்கி தண்ணீர் வைக்க வேண்டும். ஆனால் இதற்கு காசு யார் கொடுப்பது என்ற விஷயத்தில் வாத்தியார் தலையிட்டு பிள்ளைகளிடம் ஆளுக்கு 1/4 அணா போட்டு பானையை வாங்கி வரவேண்டும் என்று வாத்தியார் சொல்லிவிட்டார். இப்போது வருடம் "1925" 1/4 அணா என்பது இந்த காலத்தில் 100 பைசா கொண்டது ஒரு ரூபாய். அந்த காலத்தில் 16 அணா கொண்டது ஒரு ரூபாய். இந்த ஒரு ரூபாயை வசூல் செய்து கொண்டு அருகாமையில் உள்ள சந்தைக்கு (மார்க்கெட்) சட்டாம்பிள்ளையும் மூன்று மாணவர்களும் பானை வாங்க செல்கிறார்கள். அதில் ஒருவர் எம்.ஜி.ஆர் பானை 3/4 ரூபாய்க்கு வாங்கியது போக மீதி 1/4 ரூபாய் சட்டாம்பிள்ளை கைவசம் உள்ளது. இந்த பானையை வாங்கி எம்.ஜி.ஆரிடமும் இன்னொரு பையனிடமும் கொடுத்து நீங்கள் முன்னால் போங்கள் நாங்கள் பின்னால் வருகிறோம் என்று சொல்லி அனுப்பிவிட்டு சட்டாம்பிள்ளையும் மற்றொரு பையனும் மீதி 1/4 ரூபாயிற்கு பொறி உருண்டையும், முறுக்கும் வாங்கி சாப்பிட்டு கொண்டு வருவதை முன் சென்ற எம்.ஜி.ஆரும் மற்றொரு பையனும் மறைவான ஒரு இடத்தில் நின்று அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று பார்க்கின்றார்கள்.
அந்த நேரத்தில் பின்வரும் சட்டாம்பிள்ளையும் சாப்பிட்டு வருவதை பார்த்து மீதம் உள்ள காசுக்கு இவர்கள் நமக்கு கொடுக்காமல் வாங்கி சாப்பிட்டு கொண்டு வருகிறார்கள் என்று எம்.ஜி.ஆரும் நண்பரும் பேசி கொண்டு வருகிறார்கள். அங்கு சட்டாம்பிள்ளையும் கூட வந்த சட்டாம்பிள்ளை நண்பனை பார்த்து எம்.ஜி.ஆர் கேட்கிறார் பானை வாங்கி விட்டு மீதம் உள்ள காசுக்கு நீங்கள் ரெண்டு பேரும் பொறி உருண்டையும் முறுக்கும் வாங்கி சாப்பிட்டு கொண்ட வருகிறீர்களே பானை வாங்கியது போக மீதம் உள்ள காசு எவ்வளவு என்று கேட்டு இருவருக்கும் வாதம் நடக்கிறது. அப்போது நீ யார்டா என்று சட்டாம்பிள்ளை வாய் வித்தியாசமாக தகாத வார்த்தைகளை பேசும் போது எம்.ஜி.ஆருக்கு கோபம் வந்து சட்டாம்பிள்ளையை அடிக்கின்றார். இதை அறிந்த மற்ற பிள்ளைகள் எல்லோரும் கூக்குரல் போட்டு கொண்டு வாத்தியாரிடம் சென்று இந்த சம்பவத்தை சொல்லுகிறார்கள். உடனே வாத்தியார் வந்து இருவரையும் சமாதனப்படுத்தி நாளை தலைமை வாத்தியாரிடம் சொல்லி ராமச்சந்திரன் நடந்த சம்பவத்தை முழுமையாக சொல்கிறார். இதை கேட்ட தலைமையாசிரியர் சட்டாம்பிள்ளையிடம் கேட்ட போது சரியான பதில்களை சொல்ல முடியவில்லை. அதனால், அந்த நேரத்திலிருந்து சட்டாம்பிள்ளைக்கு பதிலாக எம்.ஜி.ஆரை சட்டாம்பிள்ளையாக தலைமை ஆசிரியர் நியமித்தார். முதல் நாள் பானைக்காக கணக்கு கேட்டு பள்ளிக் கூட வாசலில் சண்டை போட் கொண்டு இருக்கும் போது பள்ளிக்கூட பையன்கள் எம்.ஜி.ஆர் அண்ணன் சக்கரபாணி அவரிடம் தகவல் சொல்லி அழைத்து வருகின்றார்கள். அப்போது சக்கரபாணி வந்து ஏன் சண்டை போடுகிறாய் என்று சொல்லி தம்பியை கண்டிக்கிறார். அண்ணா உங்களுக்கு ஒன்றும் தெரியாது நான் அப்புறம் சொல்கிறேன் என்ற சொல்லிவிட்டார். பிறகு பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் அண்ணன் சக்கரபாணி அவர்கள் சண்டை நடந்த விபரத்தை பற்றி கேட்கிறார். அண்ணனிடம் தம்பி நடந்த விபரத்தை சொல்லி முடிக்கிறார். உடனே சக்கரபாணி சொல்லுவதும் சரிதாண்டா. நீ சட்டாம்பிள்ளையை அடித்துவிட்டே. நாளைக்கு நம்மல பள்ளிக்கூடத்திலிருந்து வெளியே அனுப்பிவிடுவார்கள் நாம் என்ன பன்றது இதை அறிந்தால் அம்மாவின் மனநிலமை எப்படி இருக்கும் என்று சொல்லி தம்பியை கோபப்படுகிறார். உடனே எம்.ஜி.ஆர் அண்ணே தயவு செய்து அம்மாவிடம் சொல்லாதீங்க. நாளை என்ன நடக்கும் என்று பார்ப்போம் என்று சொல்லி அண்ணனை சமாதப்படுத்துகிறார் எம்.ஜி.ஆர்.
அதன்படி மறுநாள் பள்ளிக்கூடத்துக்கே சட்டாம்பிள்ளையாகிவிட்டார். இதை அறிந்து சக்கரபாணி ஆனந்தப்படுகிறார். அன்று வீட்டுக்கு திரும்பும்போது தம்பி நேற்றுக்கு நடந்த விஷயத்தை பற்றி நான் இரவில் நினைத்து என்க்கு தூக்கம் வரவில்லை. இந்த விசயத்தை உடனே அம்மாவிடம் சொல்லப்போகிறேன் இந்த நல்ல செய்தியை என்று தம்பியிடம் சொல்லுகிறார். உடனே எம்.ஜி.ஆர் அண்ணே எதுவானாலும் நம்ம இருவரோடு இருக்கட்டும். அம்மா இதை நம்பமாட்டார்கள். ஏன், எதற்கு என்று துருவி துருவி கேட்பார்கள்.
நடந்த சம்பவத்தை சொல்லி விடுவீர்கள் அது அம்மாவுக்கு தவறாகத்தான் தோந்றும் இது இப்போ நமக்கு தேவையா,
இதை போல் இன்னொரு சம்பவத்தையும் சொல்கிறேன். பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற காலத்தில் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம் லீவுநாள் அன்று காலையில் இவர்களுடைய உடைகளை எல்லாம்எடுத்து கொண்டு காவேரி ஆற்றுக்கு சென்று உடைகளை துவைத்து குளித்து வருவது வழக்கம்.
-
மக்கள் செல்வாக்கு மக்கள் திலகத்திற்கு மட்டும் தான்
மக்கள் செல்வாக்கு மக்கள்திலகத்திற்கு மட்டும்தான் என்ற பெருமையைப் பெற்றவர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவருடைய உருவம் தான் மறைந்தது. அவருடைய புகழ் மறையவில்லை குறையவில்லை மலைபோல் உயர்ந்து வளர்ந்து கொண்டு இருக்கிறது. அந்த வள்ளலின் புகழை நாடெங்கிலும் மண்ணிலே விதைத்து வைத்து இருக்கிறார்கள். மக்கள் அவரை மறைக்கவும் முடியாது மறக்கவும் முடியாது. மக்கள் திலகம் மக்களுக்கு தொண்டு செய்து மக்களின் அன்பை பெற்றவர். பொது மக்களே என் சொத்து என்று சொன்னவர். மக்களால் உயர்ந்தது தான் என் புகழ். நான் மக்கள் சொத்து என்று அடிக்கடி சொல்பவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள்.
-
வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு
மக்கள் திலகம் அவர்களுக்கு கிராமியக் கலைகள் மிகவும் பிடிக்கும்
பொதுவாகவே மக்கள் திலகம் அவர்களுக்கு கிராமிய கலைகளில் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம் போன்றவை மிகவும் பிடிக்கும். இதில் குறிப்பாக சிலம்பாட்டம் இதை அவரே பிரமாதமாக ஆடுவார். இதே போல், கர்நாடக சங்கீதத்தில் இசைக்கச்சேரி வகையில் நாதஸ்வரம், வயலின், வாத்தியம் போன்றவைகள் ஆகும். மாண்டலின் இசை கருவியை பத்து வயது பையன் பெயர் மாஸ்டர் சீனிவாசன் ரொம்பவும் பிரமாதமாக வாசிப்பான் இவனுடைய கச்சேரி சபா மேடைகளில் நடந்தது. இப்படி ஒரு சிறுவன் டி.வி.யிலும் மாண்டலின் வாசிக்கிறான் கச்சேரிகளும் செய்கிறான் என்பதைக் கேள்விப்பட்ட தமிழக முதல்அமைச்சர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள், 1983ல் சென்னையில் கலைவாணர் அரங்கில் மாலை 6.00 மணிக்கு இந்தப் பையனுடைய கச்சேரி நடந்த சமயம் மக்கள் திலகம் அவர்கள் அந்தக் கச்சேரியைப் பார்த்து ரசித்தார். சுமார் 1 மணி நேரம் கச்சேரி நடந்தது. கச்சேரி முடிந்தவுடன் மேடைக்கு வந்து பையனை தட்டிக் கொடுத்து பாராட்டி வாழ்த்திப் பேசிவிட்டு தன்னுடைய ஜிப்பாவின்பையில்வைத்திருந்த 4 பவுன் எடை உள்ள தங்க மைனர் செயினை (சங்கிலி) அவனுடைய கழுத்தில் போட்டு சென்றார்.
இதேபோல் 1976ல் ஒரு முக்கியஸ்தர் குடும்பத் திருமணத்திற்கு மாலை வரவேற்பு விழாவிற்காக 7 மணிக்கு சென்னையில் ராஜேஸ்வரி திருமண மண்டபத்திற்கு சென்றார். அங்கு ஏ.வி. ரமணன் மெல்லிசை பாட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. அந்தக் கச்சேரியில் ஏ.வி. ரமணன் என்பவர் பாடிக்கொண்டு இருந்தார். திருமண வரவேற்பு விழாவிற்கு வருகை தந்துள்ள மக்கள் திலகம் அவர்கள் மணமக்களைப் பார்த்து ஆசிர்வாதம் செய்து, அவர்களுக்குப் பரிசுப் பொருள்களைக் கொடுத்துவிட்டு கச்சேரி நடக்கும் மேடைக்கு அருகில் போய் அமர்ந்து விட்டார். இதைப்பார்த்து பலவிதமான பாட்டுக்களைப் பாடிக்கொண்டு இருக்கும் ரமணன் அவர்கள் மேடையை விட்டு இறங்கி வந்து கலைத்துறை அரசரின் காலைத் தொட்டு வணங்கிவிட்டு எதுவுமே பேசாமல் மேடைக்கு சென்று பாடத் தொடங்கிவிட்டார். இடைவெளியே இல்லாமல் அடுத்தடுத்து தொடர்ந்து பாடிக்கொண்டு இருக்கையில், அந்தப் பாடல்களை ரசித்துக் கொண்டிருந்த கலை அரசருக்கு நேரம் போனதே தெரியவில்லை.
இதை கவனித்த பாடகர் ரமணன் அவர்கள் பாடுவதை நிறுத்தினார். உடனே மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய, வாட்சில் நேரத்தைப் பார்க்கிறார் நேரம் 8.45 ஆக இருந்தது ஆச்சர்யத்துடன் பின்னாடி திரும்பிப் பார்த்தார் எல்லோரும் அமைதியாக இருந்தார்கள் மண்டபம் நிறைந்து இருந்தது. இந்தத் திருமண விழாவிற்கு வந்தவர்கள் எல்லோரும் முன் வரிசையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் அமர்ந்து பாட்டுக் கச்சேரியைக் கேட்டு கொண்டு இருக்கிறார் என்பதை அறிந்தவர்கள் சாப்பாட்டு ஹாலுக்கும் செல்லாமல் திரும்பி வீட்டுக்குப் போகாமல் வந்தவர்கள் எல்லாம் அமர்ந்து விட்டார்கள். பிறகு, மக்கள் திலகம் பாட்டுக்களைப் பாடிய ரமணனையும், இசை வாத்தியங்கள் வாசித்தவர்களையும் பாராட்டிப் பேசிவிட்டு, ரமணன் அவர்களுக்கு, தன் கையிலே கட்டியிருந்த விலையுயர்ந்த வாட்சை கழற்றி ரமணன் கையிலே அவரே கட்டி வாழ்த்திச் சென்றார் என்பது மிக ஆச்சர்யத்திற்குள்ள விஷயமாக இருந்தது எல்லோருக்கும்.
courtesy net
-
எம்.ஜி.ஆர்., ஒரு சுயம்பு. அரை வயிற்றுக் கஞ்சிக்காக நாடு விட்டு நாடு பஞ்சம் பிழைக்க வந்தவர். இனம், மொழி, ஜாதி என்று எந்த ஒரு பின்புல ஆதரவும் கிடையாது. படிப்பும் இல்லை. ஆனாலும் நிமிர்ந்தார். தானாகவே நடந்து.. விழுந்து.. எழுந்து...
இமய எழுச்சி தானென்றாலும், இந்த எழுச்சியை எட்ட அவர் சந்தித்த தோல்விகள், அவமானங்கள், பட்ட அடிகள் தான் ஏராளம். ஆனாலும் சோராத மனோதிடம், தெளிவான இலக்கு, அதை நோக்கி காய்களை நகர்த்திய சாமர்த்தியம், கடின உழைப்பு... இவை மட்டுமின்றி தனக்கு இயல்பாக அமைந்த பலவீனங்களையும் பலங்களாக மாற்றிக் கொண்ட சாதுரியம் ஆகியவையே அவரை கரையேற வைத்தது.
டீன்-ஏஜ் பருவத்தில் பையன்களுக்கு தொண்டை உடைந்து ( இதை ' மகரக்கட்டு ' என்பார்கள்) பிறகு சரியாகும். ஆனால் எம்.ஜி.ஆருக்கு இது முழுமையாக சீராகவில்லை. நாடகமானாலும் சினிமாவானாலும் பாட்டே பிரதானமாக அப்போதிருந்த நிலையில் , இது பெரிய பலவீனம் தான். பாடுமளவுக்கு தனக்கு குரல் வளமில்லை என்று உணர்ந்து கொண்டார் எம்.ஜி.ஆர். இந்த பலவீனத்துக்காக அவர் சோர்ந்து விடவில்லை. மாற்றாக, வாள் வீச்சு, சிலம்பம், குஸ்தி என்று வீர விளையாட்டுக் கலைகளை கற்றுக் கொண்டார். உடலை அதற்கேற்ப கட்டுமஸ்தாக வைத்துக் கொண்டார். இது சினிமாவில் அவருக்கு பெரிதும் கைகொடுத்தது. ஆரம்பத்தில் சினிமாவில் ஒதுக்கப்பட்டாலும் பின்னாளில் அவரை கவனிக்க வைத்தது. தமிழ் சினிமாவின் முழுமையான முதல் ' ஆக்ஷன் கிங்' ஆக உருவெடுக்க உதவியது. கடைசி வரை அதாவது அவரது 60வது வயதிலும் சாகச நாயகனாக ரசிகர்களை ஏற்றுக் கொள்ள செய்தது.
அடுத்து , அவரது முக அமைப்பு. முதல் படமான ' சதிலீலாவதி 'யில் (1936ல் வெளியானது) நடிக்கும் போது எம்.ஜி.ஆருக்கு வயது 19 தான். முதன்முதலாக கதாநாயகனாக 'ராஜகுமாரி' (1947) படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது 30. இளவயது தான். ஆனாலும், உன்னிப்பாகப் பார்த்தால் நீள் சதுர வடிவிலான அவரது முகத்தில் அந்த வயதை மீறிய முதிர்ச்சி மெலிதாகப் படர்ந்திருப்பதை அவரது மிக ஆரம்ப கால படங்களில் காணலாம். இதற்கு, அனுபவித்த வறுமை காரணமா அல்லது பிறப்பிலேயே அப்படியா என்று தெரியவில்லை.
ஆனால் அதே முகம், அதற்கு பிறகு முதிர்ந்ததாக காணப்படவில்லை. ஆரம்பத்தில் வயதிடம் தோற்ற அந்த முகம் பின்னாளில் வயதையே தோற்கடித்தது தான் ஆச்சரியம். அதாவது தனது 45, 50 வயதிலும் எம்.ஜி.ஆரின் முகம், 30, 35 வயதைத் தான் காட்டியது. அதற்கேற்ப அவர் பராமரித்து வந்த தொந்தி தள்ளாத 'சிக்' உடற்கட்டும், துள்ளல் நடிப்பும், இளமையை வெளிப்படுத்தும் 'பாடி லேங்குவேஜ்'ம் உறுதுணையாக இருந்தன. (உதாரணத்துக்கு: 'தாழம்பூ, அன்பேவா, சந்திரோதயம், நம்நாடு ...' என்று படங்கள் பட்டியலை அடுக்கிக் கொண்டேப் போகலாம்)
அதே போல், அவரது முகம் நுணுக்கமான, நெகிழ்வான உணர்வுகளை பளீரென பிரதிபலிக்காத தன்மை கொண்ட 'Metallic' என்றும் 'தூண்' என்றும் விமர்சித்து பலர் ஆரம்ப காலத்தில் சினிமாவில் சான்ஸ் தராமல் நிராகரித்தார்களாம். இந்த பலவீனத்தையும் புரிந்துக் கொண்ட எம்.ஜிஆர்., அதற்கேற்ப மாறுபட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் உணர்ச்சிப்பிழம்பான கதையம்சங்களை தவிர்த்தார். தனக்கு தோதான கதாபாத்திரங்களையேத் தேர்ந்தெடுத்தார். தனக்கு பலமாக இருக்கும் சண்டைக்கலையை முழுமையாக பிரயோகித்தார். படத்தின்
திரைக்கதை, வசனம், பாடல் காட்சிகள், பட டைட்டில் போன்றவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தினார். ' எம்.ஜி.ஆர். ·பார்முலா ' என தனி பாணியையே உருவாக்கினார். மாபெரும் வெற்றியும் கண்டார்.
' நடிக்கவே தெரியாத நடிகன்', ' கெழட்டு நடிகன் ', ' அட்டைக் கத்தி வீரன்'.... இப்படியான கிண்டல்கள் கேலிகளுக்கு மத்தியில் சாதிக்க முடிந்ததற்கு காரணம், மைனஸ் பாயிண்ட்டுகளை ப்ளஸ் பாயிண்ட்டுகளாக மாற்ற எம்.ஜி.ஆர் காட்டிய உழைப்பும், நம்பிக்கையும், மனோ உறுதியும் தான்.
அரசியலிலும் அவர் சுலபமாக நீந்தி விடவில்லை. அரசியலில் தான் எதிர்த்து நிற்க வேண்டிய நபரின் கெட்டிக்காரத்தனத்தையும் சாணக்கியத்தனத்தையும் நன்கு அறிந்துமே துணிந்து களம் இறங்கினார் எம்ஜிஆர். மக்களின் நாடித் துடிப்பை மட்டுமின்றி தனது பலவீனத்தை அறிந்திருந்த அளவுக்கு எதிரியின் பலவீனத்தையும் நன்கு புரிந்து வைத்திருக்கும் புத்திசாலித்தனத்தால் அரசியலிலும் ஜெயித்தார் எம்ஜிஆர். உலகிலேயே, ஒரு சினிமா நடிகர் தனியாக ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து ஜெயித்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகவும் ஆகி சாதித்த முதலாமவர் என்ற பெருமையை பெற்றார்.
'அரசியல் விதூஷகன்' என்று கேலி பேசியவர்களும், 'அரிதாரம் பூசிவனெல்லாம் அரசாள முடியுமா? ' என்று கிண்டலாக கேட்டவர்களையும் கூட பின்னாளில் அவரை 'புரட்சித்தலைவர்' என்று புகழ வைத்தது அவரது வெற்றி.
அவருக்கு பிள்ளைச் செல்வம் இல்லாத குறையும் கூட அவருக்கும் அவர் மீதான 'இமேஜ்'க்கும் ஒரு வகையில் இயற்கையாகவே சாதகமாக அமைந்தது எனலாம். முதலமைச்சராக இருந்த போது அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எதிர்தரப்பால் அடுக்கப்பட்ட போது, "அவருக்கென்ன. பிள்ளையா குட்டியா? பிறகெதுக்கு. ஊழல் செய்து சொத்து சேர்க்க வேண்டிய அவசியமே அவருக்கில்லை. ஏழைகளுக்கு அள்ளிக் அள்ளி கொடுக்கிறவராச்சே. சும்மா சொல்றாங்க" என்று மக்கள் மன்றத்தில் புகார்கள் எடுபடாமல் போகச் செய்தது.
1967ல் சக நடிகர் ஒருவரால் எம்.ஜி.ஆர். நேருக்கு நேர் துப்பாக்கியால் சுடப்பட்டார். 1984ல் உடல் நலம் குன்றி சாவின் விளிம்பை தொட்டு வந்தார். இந்த இரண்டு நிகழ்வுகளிலுமே உயிருடன் மீண்டு , ஒரு மனிதன் ஒரே பிறவியில் மூன்று முறை பிறவி கண்ட அதிசயமாக பாமரர்கள் மத்தியில் தானொரு அபூர்வப் பிறவியாக பிரமிக்க வைத்தார் எம்.ஜி.ஆர். சாவையே தோற்கடித்த சாகச வீரனாகவும், ' தர்மம் தலைகாக்கும் ' என்கிற உபதேசத்தின் உதாரண புருஷனாகவும் அவர் சாமானிய மக்கள் மத்தியில் உலா வர, அந்த 1967, 1984 அசம்பாவிதங்களும் கூட அவருக்கு சாதகமாக அமைந்த அதிசயத்தை என்னவென்று சொல்வது !
அதே 1967ல் துப்பாக்கி குண்டு காயத்துடன் சென்னை ஆஸ்பத்திரியிலும் இருந்த போதும், 1984ல் சிறுநீரக கோளாறு அறுவை சிகிச்சைக்காக அமெரிக்க ஆஸ்பத்திரியிலும் படுத்திருந்த நிலையிலும் பிரச்சாரத்துக்கு தொகுதிக்கே போகாமல் சட்டசபைத் தேர்தலில் நின்று ஜெயித்து அரசியல் எதிரிகளை அதிர வைத்த செல்வாக்கு!
அதுமட்டுமா, மேற்குறிப்பிட்ட அவ்விரு சம்பவங்களிலும் எம்.ஜி.ஆரின் பேச்சுத் திறன் பாதிக்கப்பட்ட போதும் அவரை அவராகவே அப்படியே ஏற்று அள்ளி அரவணைத்துக் கொண்ட மக்களின் அபிமானம் !!
இப்படி ஆச்சரியம் அல்லது அதிசய நிகழ்வுகளை உள்ளடக்கிய எம்.ஜி.ஆரின் வாழ்க்கைக் காலம் மொத்தம் 70 ஆண்டுகள். அதில் சுமார் 40 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் (1936- 1977) அவர் நடித்தது மொத்தமே 136 படங்கள் தான். இதன் ஊடே 1953ம் ஆண்டு எம்.ஜி.ஆர். திமுகவில் சேர்ந்தது தொடங்கி அரசியலில் முழுவீச்சில் ஈடுபட்டது (1987ல் தமிழக முதலமைச்சராக மரணமடையும் வரை) 34 ஆண்டுகள் தான்.
ஆரம்பத்தில் அவர் ஆட்சியை பிடித்த போது 'சினிமா கவர்ச்சி' என்றார்கள். இந்த மாயை சீக்கிரமே விலகி விடுமென்றார்கள். ஆனால், இன்றளவுக்கும் கணக்குப் பார்த்தால் எம்.ஜி.ஆர். சினிமாவை விட்டு விலகி சரியாக 30 ஆண்டுகள் ஆகிறது. அவ்வளவேன், அவர் மண்ணை விட்டு மறைந்தே சுமார் 20 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் இன்றளவும் அவர் முகமும் பெயரும் தான் தமிழக அரசியலில் அசைக்க முடியாத ஓட்டு வங்கி. அவரது காலத்தில் அவருக்கு அரசியல் எதிரிகளாக இருந்தவர்களானாலும் சரி... நேற்றைக்கு புதியதாக கட்சி ஆரம்பித்தவர்களானாலும் சரி.. எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லி தான் ஓட்டுகள் வாங்க முடியுமே தவிர திட்டி வாங்கிட முடியாது என்பது தான் நிகழ்கால நிதர்சனம் !
courtesynet
-
நம் மக்கள் திலகத்தின் புகழ் பாடி வந்த " மன்னாதி மன்னன் எம். ஜி. ஆர். ரசிகன் " என்ற பத்திரிகையின் ஆசிரியரும், புரட்சித் தலைவரின் முழு அன்பையும் பெற்ற அவரது உறவினர் கே. விஜயன் என்றழைக்கப்படும் கே. விஜயகுமார் அவர்களின் 6 வது நினைவு நாள், இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் குடியிருந்த கோயில் அமைந்துள்ள ராமாபுரம் தோட்டத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் சார்பில், ராமாபுரம் தோட்டத்தில் அமைந்துள்ள நம் பொன்மனசெம்மலின் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்த பின்பு, மறைதிரு விஜயன் அவர்களின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தபின் அன்னதானம் வழங்கப்பட்டது.
மறைதிரு விஜயன் மனைவி திருமதி சுதா விஜயன் அவர்கள் அவரது மகன் இராமச்சந்திரன் உதவியுடன் இந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் - பெரியவர், பொறியாளர் கோவை துரைசாமி, சேலம் குப்புசுவாமி, சேலம் ஜெயப்பிரகாஷ் மற்றும் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தை சார்ந்த திருவாளர்கள் எம். தம்பாச்சாரி, சௌ. செல்வகுமார், பொறியாளர் மனோகரன், ஏ. ஹயாத், கே. பாபு, பி.டி.சி. நாகராஜன், கே. மாரிமுத்து, ரவிஷங்கர், உட்பட எம். ஜி. ஆர். பக்தர்கள் பலரும், ஆலந்தூர் வைரமுத்து, வரதராசன் மற்றும் ஏராளமான அன்பர்கள் பலரும் பங்கேற்றனர்.
மறைதிரு விஜயன் அவர்கள் காலத்தை வென்ற நமது காவிய நாயகனுடன் - சில புகைப்படங்கள்http://i60.tinypic.com/ibc6rl.jpg
கே. விஜயன் என்றழைக்கப்படும் கே. விஜயகுமார் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்த " மன்னாதி மன்னன் எம். ஜி. ஆர். ரசிகன்" பத்திரிகையிலிருந்து
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
http://i59.tinypic.com/dm8t95.jpg
கே. விஜயன் என்றழைக்கப்படும் கே. விஜயகுமார் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்த " மன்னாதி மன்னன் எம். ஜி. ஆர். ரசிகன்" பத்திரிகையிலிருந்து
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
http://i59.tinypic.com/28khnja.jpg
கே. விஜயன் என்றழைக்கப்படும் கே. விஜயகுமார் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்த " மன்னாதி மன்னன் எம். ஜி. ஆர். ரசிகன் " பத்திரிகையிலிருந்து
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
http://i59.tinypic.com/9qgwgw.jpg
கே. விஜயன் என்றழைக்கப்படும் கே. விஜயகுமார் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்த " மன்னாதி மன்னன் எம். ஜி. ஆர். ரசிகன்" பத்திரிகையிலிருந்து
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
-