ஆம் இந்தி ஒரிஜனல் பிரமாதம் .. பாடலுக்கு நன்றி..
கண்ணாடி மாளிகை என்றொரு படம் .. அசோகன் நாயகனாக நடித்த படங்களில் இதுவும் ஒன்று..
இதோ டி.டி.பத்மன் அவர்களின் இசையில் இசையரசியின் குரலில் அழகான பாடல்
http://www.youtube.com/watch?v=Gf4dvITpxeQ
Printable View
ஆம் இந்தி ஒரிஜனல் பிரமாதம் .. பாடலுக்கு நன்றி..
கண்ணாடி மாளிகை என்றொரு படம் .. அசோகன் நாயகனாக நடித்த படங்களில் இதுவும் ஒன்று..
இதோ டி.டி.பத்மன் அவர்களின் இசையில் இசையரசியின் குரலில் அழகான பாடல்
http://www.youtube.com/watch?v=Gf4dvITpxeQ
நன்றி ராஜேஷ் சார்
15 தினங்களுக்கு முன் இந்த அன்னையும் பிதாவும் படம் லைப் சேனல் இல் பார்த்தேன் . படம் கோர்வை இல்லாமல் வந்தது .
மாலதி கிரிஜா சல்மா ஒரே பொம்பனாட்டி பேர் போங்கோ
சுஜாதா ஒரு புக் நினைவில் உண்டு 'காசளவில் உலகம்'
அதே போன்று ராஜேஷ் சார் 'விரல் நுனியில் ...'
வாசு சார் ப்ளீஸ் பில் up தி blanks
ரவி கிரண் சாய்ஸ் சூப்பர்
மை சாங் இஸ் போர் யு .... that 's true
பாட்டும் பரதமும் அருண் ஸ்ரீப்ரிய மேல் சாய்ந்து ஒரு போஸ் ஒன்னு உண்டு சார் நெல்லை பார்வதியில் பெரிய கட் அவுட்
டெய்லி எவனிங் அந்த பாட்டை கேட்டு விட்டு ஆத்துக்கு ஓடி வருவோம் . காசு இருந்தால் உள்ளே இல்லன வெளியே நின்னு .பக்கத்தில் மணி ரைஸ் மில். நாங்க சில பேர் வெளியே நின்னு பாட்டு கேட்கிறதை பார்த்து வேணும்னே ரைஸ் மில் machine சவுண்ட் கூடும்
எட்டி பார்த்தால் ஆளே இல்லாத டீ கடை.கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை
75-76 கால கட்டம் ஸ்கூல் final இயர் பின்ன்ருவாங்க அடி
பாட்டு வேற படத்தில் இறுதியில் தான் வரும் .
ரேடியோவில் அந்த பாட்டு வேறு அடிகடி வராது சார்.
ரொம்ப ரசித்த பாடல்
thank யு ரவி சார்
இன்றைய ஸ்பெஷல் (35)
மிக மிக அழகான, ரம்மியமான ஒரு பாடல். 'மயிலாடும் பாறை மர்மம்' அல்லது 'இரவு 12 மணி'. ஒரு திகில் சித்திரம். இந்தப் படமும் டைட்டிலைப் போலவே மர்மமான ஒரு படம்தான். ரவிச்சந்திரனும், ராஜஸ்ரீயும் ஜோடி என்று நினைவு. பி.எஸ்.ராஜ் தயாரிப்பில் எஸ்.ராஜேந்திரன் இயக்கியது. ஒரு சில நாட்களே ஓடியது என்று ராகவேந்திரன் சார் சொல்வார். (கார்த்திக் சார் மேலதிக விவரங்களை அளிப்பார் கண்டிப்பாக என்று நினைக்கிறேன்). நான் பார்த்ததில்லை. சங்கர் கணேஷ் மியூசிக் போட்ட பாடல்களில் இந்தப் பாடல் தனி ரகம்.
மிக வித்தியாசமான டியூனில் அமைந்த பாடல். பாடகர் திலகமும், கண்ணியப் பாடகியும் இணைந்து இழைந்து நமக்குத் தந்த தென் விருந்து. அருமையான புல்லாங்குழல் இசையுடன் நம் மனதை மயக்கப் புறப்பட்ட பாடல்
'என்னுயிரே' என்று பாடகர் திலகம் உச்சரிக்கையில் என்ன ஒரு ஆணித்தரமான தெளிவு.
சுசீலா.... கேட்கலாமா... பதினாறு வயது பருவப் பெண் போல குரலை படுஇளமையாக்கி அவர் பாடும் போது மனது சொக்கிப் போகிறது.
மனதை அப்படியே சுண்டி இழுக்கிறது இந்தப் பாடல்.
இப்படத்தின் டிவிடி கிடைக்கவில்லை. இணையத்திலும் தகவல்கள் இல்லை. எனவே பாடலைக் கேளுங்கள். கிடைத்ததும் நிச்சயம் காணொளியாகப் பதிவிடுகிறேன்.
ஓ....ஹோ மயிலாடும் பாறையில் தேனோட
ஓ....ஹோ மலராடும் பார்வையில் மீனாட
பெண்ணழகின் சன்னதியில்
பூமழை பொழிந்திட வா
என்னுயிரே உன் மேனியில்
இளமை எனும் பண் பாட வா வா
கூரான தூண்டியிலே விழுந்து
கூத்தாட மீன் வருமோ
போராடும் நேரத்திலே பருவத்தை
பந்தாடத்தான் வேண்டுமோ
ஆஹா என்னைப் பாரு கண்ணைப் பாரு
தண்ணிக்குள்ளே எண்ணம் பாரு
கடமை என்றும் மறந்திடுமோ
தங்கமுகம் நெஞ்சில்வர
தாமதம் ஏனடியோ
ஓ....ஹோய் மயிலாடும் பாறையில் தேனோட
ஓ....ஹோய் மலராடும் பார்வையில் மீனாட
ஆறோடும் பாதையிலே தங்கமே
ஆராய்ச்சி ஏனடியோ
யாரோடு பேசுகின்றாய்
அறிந்தால் பாராட்ட நானில்லையோ
ஆறோடும் பாதையிலே தங்கமே
ஆராய்ச்சி ஏனடியோ
யாரோடு பேசுகின்றாய்
அறிந்தால் பாராட்ட நானில்லையோ
ஆஹா கன்னிச்சிட்டு என்னைத் தொட்டு
கன்னமிட்ட கள்வனுக்கு
கதையே இன்னும் புரியலையோ
கை இறுக மெய் தழுவி
காரணம் கூறிடவோ
ஓ....ஹோய் மயிலாடும் பாறையில் தேனோட
ஓ....ஹோய் மலராடும் பார்வையில் மீனாட
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=YODjF9TZYSM
super still esvee sir
ரொம்ப நாளா அபர்ணா சவுண்ட் இல்லே எங்கே இருக்காங்க
பவானி கவிதா அப்பப்ப ஏதாவது நியூஸ் வரும்
வாசு சார் அபர்ணா ஒரு பாட்டு சில
'அடியே நீ சமர்தொன்னோ உங்க ஆத்துகாரர் அசடோன்னோ '
justice கோபிநாத் தேங்காய்
ஆளுக்கொரு ஆசை 'மஞ்சள் அரைக்கும் போது மதில் ஏறி பார்த்த மட்ச்சான்'
கராத்தே கமலா 'தேனருவி அதில் ஒரு பூங்குருவி'
நான் வாழ வைப்பேன் ' ஆகாயம் மேல '
கொஞ்ச நாள் நம்ம டைரக்டர் யோகானந்த் அண்ணா (அப) ஸ்வரம் பாடியதாக கேள்வி
கருப்பு வெள்ளை
நெல்லை சிவசக்தி ரிலீஸ் 3 தினங்கள் மட்டும் ஓடிய நினைவு
நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த படம்
ஆனால் இந்த பாட்டு ரொம்ப நல்லா இருக்கும்
ராஜஸ்ரீ ஒரு டைட் pant போட்டு ஒரு சீன் நல்ல நினைவு
இதே போன்று ராஜஸ்ரீ நடித்த 'உலகம் இவ்வளுவு தான் '
நாகேஷ் ஹீரோ மேஜர் அப்பா .
ஈஸ்வரி குரலில் 'இவ்வளவு தான் உலகம் இவ்வளவு தான் ' பாடல் சூப்பர்
திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷன் எல்லாம் படத்தில் வரும்
நாகேஷ் வீட்டை விட்டு வந்து வெளியில் எல்லாம் திரிந்து ஏகப்பட்ட அனுபவங்களை சந்திப்பார்
வணக்கம் கிருஷ்ணா சார்.
http://i1.ytimg.com/vi/PbTe22p2f6M/hqdefault.jpg
நடிகர் திலகத்தின் கிடார் வாசிப்பும், துடிப்பு நடனமும் சும்மா கில்லி சார் கில்லி
அருண் வரும் போது எல்லாம் இந்த பாட்டு background ல ஒலிக்கும் சார்
அந்த ஸ்ரீப்ரிய மேல சாய்ந்து ஒரு ஸ்டில் ஒன்னு உண்டு சார்
இருந்தால் போட்டு விடுங்க ரொம்ப நாள் ஆச்சு சஸ் sir பார்த்து
கிருஷ்ணா சார்
இன்னொரு அம்சமான அபர்ணா பாட்டையும் சேர்த்துக்கோங்க விஜயபாஸ்கரின் கலக்கல் இசையில் மறக்க முடியாத பாட்டு. வாணியின் குரலில் வெறுப்பு, சலிப்பு, மெல்லிய சோகம் அத்தனையும் இழையோடுவதைக் காணலாம். ரஜினி கிடார் சவுண்டுக்கு ஏற்ற மாதிரி சிகரெட்டை வாயில் வைத்து ஆட்டுவார்.
'ஆடு புலி ஆட்டம்' படத்தில்.
அபர்ணா அருமையாக எக்ஸ்பிரஷன்ஸ் ததிருப்பார். பார்க்க சைனா பொம்மை மாதிரி அழகோ அழகு.
மனமே சோலையாம்
நினைவுகள் மலர்களாம்
கோயிலில் சேருவோம்
தெருவிலே போகுவோம்
பூத்த மலர்களெல்லாம் காய்க்குமா
காய்த்த காய்களெல்லாம் கனியுமா
இனிக்குமா புளிக்குமா
உனக்கது தெரியுமா புரியுமா
செம தூள்
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7MnKPiP1A5c
வாசு சார்... தேனடி மீனடி மானடி..கொஞ்சம் சடாலென வரும் துள்ளல் பாட்டு.. கொடுத்தமைக்கு நன்றி..அதே படத்தில் வரும் முந்தானை பந்தாட அம்மானை ஆடுங்கடி... யும் நன்னாயிட்டு இருக்கும்.. அப்புறம்..எல்லாம் உனக்காக..எப்படி மறந்தேன்.. நன்றி..
அது சரி..கிரிஜா சலீமா..கிடார் என நிறைய பக்கங்கள்..மயிலாடும் பாறை மர்மம்..கேள்விப்பட்டது புகையாக இருக்கிறது.. நன்ற்றி..
ம்ம்
இப்போ என்ன பாட்டு மனசுல ஓடுது கண்ணா..
கொஞ்சம் காதல் கொஞ்சம் வேண்டுதல் (?!)..எனத் தெரியாத மாதிரி ஒரு பாட்..என்னவாக்கும் அது..
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா...
இதைப் பற்றி டீடெய்ல் தான் தராமலா இருக்கப் போகிறீர்கள் :)