படத்தின் ஒரு ஒரு frame ல் தெரிவது பிரமாண்டம் , அந்த பிரமாண்டம் கலை இயக்குனர் கங்காவை சேரும் (APN படங்கள் இவரின் brand , hard work ) அதே போன்ற தரம் இசையிலும் , G ராமநாதன் , பெயர் போடும் போதே இவர் ராஜாங்கம் ஆரம்பித்து விடுகிறது படத்துவக்கமே சிவன்-பார்வதி நடனம், படத்தில் முதல் ஐந்து-ஆறு நிமிடம் இசையும்-நடனும் மட்டுமே,தமிழ் சினிமாவின் மிக உக்கிரமான பரதநாட்டியக் காட்சிகளில் ஒன்று இது. ஆனால் சிவனாக சிவாஜி சார் , பார்வதியாக சாவித்ரியும் தான் நினைவுக்கு வருகிறார்கள்
பூமிக்கு வரும் கடவுள் வனத்துக்கு வந்த உடன் வேடர்கள் அறிமுகம் ஆகும் பாடல் ,கோழி உடை அணிந்து கொண்டு ஆடும் நடனம் நன்று என்று சொல்ல வரும் பொது , பெரிய முரசை பார்த்து வாய் அடைத்து உக்கார்ந்து விட்டேன்
அடுத்த spectacle நடிகர் திலகம் தான் , சண்டை காட்சிகள் தூள் - ஆனால் நம்மில் பல நண்பர்கள் நடிகர் திலகத்தின் சண்டை படம் என்றதும் வெகு சில படத்தை பற்றி மட்டுமே சொல்லுகிறோம் , காரணம் வேறு விஷயத்தை நம் கவனம் ஈர்த்து விடுகிறது (குணசித்திர நடிப்பு , கதை )
நடிகர் திலகம் அறிமுகம் ஆகும் காட்சி ( இந்த படத்தை நான் பார்க்க காரணமாக இருந்த இந்த சண்டை காட்சி , வர்ணனை திரு வாசுதேவன் சார்)
ஒரு இடத்தில் கூட 'டூப்' போடாமல் ஒரிஜினலாக மல்யுத்தக் காட்சியில் அசத்தியிருப்பார் N.T. ஒரு ஒரிஜினல் மல்யுத்த வீரனின் அசைவுகளை இம்மி அளவு கூட பிசகாமல் கலக்கி இருப்பார் (ஸ்டண்ட் மாஸ்டர் – சோமு)
போட்டியாள வீரருடன் அவர் மோதத் துவங்கும் போது அந்த வீரர் இருமுறை நடிகர் திலகத்தை கழுத்தையும், உடம்பையும் ஒருசேரப் பிடித்து இடதுபக்கவாட்டில் தூக்கி வீசுவார் , மீண்டும் எழுந்து கொண்டு காலை உதறி கொண்டு அந்த வீரரின் கால்களைப் பிடித்து அவரை தலை கீழாக தூக்கிப் போட்டுவிட்டு (head smash )சண்டை போடும் அந்த 6 நிமிடம் தான் இந்த படத்தில் நடிகர் திலகத்தின் சண்டை காட்சிகள் அணிவகுப்பின் ஆரம்பம் (வாசு சார் அழகாக எழுதி இருப்பார் )