Originally Posted by
RAGHAVENDRA
தங்கை திரைப்படத்தை இணையத்தில் பார்த்து பிரதி எப்படி உள்ளது என்று பார்த்தால் கோபால் சொன்னது போல் சுமாராகத் தான் உள்ளது.
ஆனால் அதிர்ச்சி என்றால் அப்படி ஓர் அதிர்ச்சி..
தங்கை படத்தின் டைட்டிலில் பின்னணியில் ஒலிப்பது, விஜயா படத்தின் டைட்டில் இசை..
என்ன கொடுமை சார் இது.. மெல்லிசை மன்னர் போன்ற மிகப் பெரிய படைப்பாளிக்கு இப்படி ஓரு மரியாதையா..
ஆண்டவனே.. தெரியாதவர்கள் இது மெல்லிசை மன்னரின் இசை என்றல்லவா எண்ணுவார்கள்...
இல்லை.. எனக்குத் தான் சரியாகத் தெரியவில்லையா...
யாராவது விளக்குங்களேன்.
இதற்கு ஆபத்பாந்தவனாக வரக்கூடியவர் வாசு சார் தான்.