நன்றி திரு.கிருஷ்ணா சார். நீங்கள் இல்லாததால் சில மாதங்களில் எவ்வளவு நல்ல தகவல்களை திரிகள் இழந்திருக்கின்றன. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Printable View
நான் யார்? நான் யார்? நீ யார்?
குடியிருந்த கோயில் படத்தில் நான் யார், நான் யார், நீ யார் பாடல் ஆழ்ந்த பொருளும் சுவையும் நிறைந்த பாடல். ஜி.என்.வேலுமணியின் தயாரிப்பில் 1968 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் பிரளயம் செய்த படம். இந்தப் பாடல் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு முன்பே எடுக்கப்பட்டது. பண்டரிபாயின் தாய்ப்பாசத்தால் தன்னை மறந்து கார் ஓட்டிச் செல்லும்போது விபத்து ஏற்பட்டு மக்கள் திலகம் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பார். அவரை தங்கள் கஸ்டடியில் வைத்திருக்கும் போலீஸார், அவரைப் போல தோற்றமளிக்கும் அவரது தம்பியான (இரட்டையர்கள்) மக்கள் திலகத்தை வைத்து கொள்ளைக் கூட்டத்தை பிடிப்பதற்காக திட்டமிடுவர்.
மனநிலை பாதிக்கப்பட்டவரை காட்டுவதற்காக, அவரது தம்பியை போலீஸ் அதிகாரி சுந்தரராஜன் அழைத்து வருவார். அப்போது இந்தப் பாடல். மனநிலை பாதிக்கப்பட்ட மக்கள் திலகம் லூஸ் ஃபிட்டிங் முழுக்கை சட்டை அணிந்து சற்று குண்டாக தெரிவார். இளையவர் டி-ஷர்ட்டில் சிக். டாக்டராக வருபவர் இயக்குநர் கே.விஜயன் என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான்.
நான் யார் நான் யார், நீ யார்
நாலும் தெரிந்தவர் யார் யார்
தாய் யார் மகன் யார் தெரியார்
தந்தை என்பார் அவர் யார் யார்
.... நான் யார் என்று சிந்தித்தால்..... நாலும் தெரிந்தவர்கள் (எல்லாம் தெரிந்தவர்கள்) என்று யாருமே கிடையாது. ஆத்திகர்களுக்கு மறுபிறப்பில் நம்பிக்கை உண்டு. ‘புனரபி ஜனனம், புனரபி மரணம்’ என்று கூறப்படுவதுபோல, மாறி மாறி வரும் பிறவிகளில், இப்பிறவியில் தாய், மகன், தந்தை என்கிறோம். ஆத்திகர்களின் கோட்பாட்டின்படி, மறுபிறப்பில் யாருக்கு யார் தாய், மகன், தந்தை என்றெல்லாம் தெரியாது.
உறவார் பகையார் உண்மையை உணரார்
உனக்கே நீ யாரோ?
வருவார் இருப்பார் போவார் - நிலையாய்
வாழ்வார் யார் யாரோ?
..... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று வாழ்த்திய வள்ளலாரைப் போல எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்தினால் உறவேது? பகையேது? அந்த பேதமே வராது. அப்படி அன்பு செலுத்தாது போனால், நமக்கே நம்மிடம் வெறுப்புதான் மிஞ்சும். அப்போது.. உனக்கே நீ யாரோ?
உள்ளார் புசிப்பார் இல்லார் பசிப்பார்
உதவிக்கு யார் யாரோ?
..... (பணம்) இருப்பவர்கள் சாப்பிடுவார்கள். இல்லாதவர்களுக்கு கவுரமாக சொன்னால் தினமும் விரதம். அவர்களது உதவிக்கு யாருளர்?
வேலூர் அருகே விரிஞ்சிபுரம் என்ற ஊரில் 1520-ம் ஆண்டு பிறந்து பல்வேறு நூல்களை எழுதிய மேதை அப்பைய தீட்சிதர். சிறந்த சிவபக்தர். அவருக்கு தன் பக்தியின் மீது சந்தேகம். நால்வரில் ஒருவரான சுந்தரர், இறைவனை, ‘பித்தா’ என்று அழைத்து பாடினாரே, அப்படிப்பட்ட பித்தனை, நாமும் பித்து நிலையில் இருந்தால் பாட முடியுமா? என்று அறிய விரும்பினார்.
ஊமத்தங்காயை தின்று விட்டு அதனால் சித்தம் கலங்கியிருக்கும்போது தான் கூறுபவற்றை தன் சீடர்களிடம் எழுதி வைக்கச் சொன்னார். சித்தம் கலங்கி பித்து நிலையில் இருக்கும்போது அவர் பிதற்றலாக கூறியதை சீடர்கள் எழுதிக் கொண்டே வந்தனர். எல்லாம் முடிந்த பின், பார்த்தால் சிவபெருமான் மீது அவர் எழுதிய 50 சுலோகங்களாக அவை இருந்தன. ஏற்கனவே செய்த ஏற்பாட்டின்படி, சீடர்கள் மாற்றுமருந்து கொடுத்து பித்தம் தெளிந்தார். பித்து பிடித்து, உன்மத்த நிலையில் இருந்தபோது அவர் பாடிய 50 சுலோகங்கள் என்பதால் அவற்றுக்கு ‘உன்மத்த பஞ்சாசத்’ என்று பெயர்.
பித்து பிடித்த நிலையில் பாடினாலும் இறைவனைப் பற்றியே அப்பைய தீட்சிதர் பாடியது போல, மனநிலை பாதிக்கப்பட்ட பாத்திரத்தில் பாடப்படும் பாட்டு என்றாலும் தலைவருக்கு அப்போதும் ஏழைகள், இல்லாதவர்கள், பசியோடிருப்பவர்கள் பற்றிய சிந்தனைதான்.
அதில் இன்னொரு ஒற்றுமையை கவனித்தீர்களா? பித்துப் பிடித்த நிலையில் உள்ள பாத்திரம் பாடும் இந்த பாடலை எழுதியவர் கூட ஒரு பித்தன்தான். அவர் புலமைப்பித்தன். இது எதேச்சையாக நடந்ததா? அல்லது மக்கள் திலகம் அவரை விட்டு இந்தப் பாடலை எழுதச் சொன்னாரா? என்று தெரியவில்லை.
அடிப்பார் வலியார், துடிப்பார் மெலியார்
தடுப்பார் யார் யாரோ?
.... அதைத்தான் சமீபத்தில் ஆந்திரா வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச் சுடு சம்பவத்தில் பார்த்தோமே? இதுபோன்று ஏழைகளை, கூலிகளை அடித்தும் சுட்டும் அவர்களது உயிரைப் பறித்து, அந்த ஏழைகளின் குடும்பங்களை துடிக்க வைக்கும் வலியார்களை தடுப்பவர்கள் யார்?
எடுப்பார் சிரிப்பார் இழப்பார் அழுவார்
எதிர்ப்பார் யார் யாரோ?
.....இழப்பவர்களின் அழுகையை விட எடுத்துக் கொண்டவர்களின் சிரிப்பு சத்தம்தான் பலமாகக் கேட்கிறது. இதையெல்லாம் எதிர்ப்பதற்கு யாருமில்லை.
பிணியார் வருவார் மருந்தார் தருவார்
பிழைப்பார் யார் யாரோ?
உயிரார் பறப்பார், உடலார் கிடப்பார்
துணை யார் வருவாரோ?
...பிறந்த உயிர்கள் அனைத்தும் இறந்தே ஆக வேண்டும். என்ன மருந்துகள் கொடுத்தாலும் உலகில் சாவை வென்று பிழைத்தவர் இவர் என்று யாரையாவது காட்ட முடியுமா? உயிர் பறந்து விட்டால் உடல் வெறும் கட்டையாய்தான் கிடக்கும். துணைக்கு யார் வருவாரோ? என்ற கேள்வி இருக்கட்டும். பட்டினத்து அடிகள் சொன்னதுபோல, ‘நாம் அரையில் அணியும் கோவணமும் வராதே?
கட்டையாக கிடக்கும் உடலை கவனிப்பாரின்றி அப்படியே போட்டுப் பார்ப்போமே. என்னாகும்? ‘நரியார், நாயார் கடிப்பார் முடிப்பார்’
என்னதான் படித்து, பெரிய பதவியில், அதிகாரத்தில் இருந்தாலும் கூட இதுதான் நமது உடலின் மதிப்பு.
எவ்வளவு அருமையான பாடல் பாருங்களேன். இன்னொன்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆத்திகர்கள் சொல்வது போல, ஞானத்தபோதனரை வாவென்று அழைக்கும் திருவண்ணாமலையில் அருள் பாலித்தாரே பகவான் ரமண மகரிஷி. அவரும் கூட இந்தக் கோயிலுக்கு போ, அந்த யாத்திரைக்கு செல். தினமும் இந்த தோத்திரம் சொல். என்றெல்லாம் சொன்னதில்லை. நான் யார்? நான் யார்? என்று ஆத்ம விசாரம் செய்யத்தான் சொன்னார்.
அவர் கூறியதுபோல ஆத்ம விசாரம் எல்லாம் நமக்கு, மன்னிக்கவும் எனக்கு தெரியாத விஷயம். ஆனால், நான் யார்? நிரந்தரமா? என்ன செய்தோம்? என்றெல்லாம் சிந்தித்தால் மற்றவர்களுக்கும் சமூகத்துக்கும் உதவி புரிபவர்களாக அதன் மூலம் நாம் வாழ்ந்த வாழ்க்கையின் தடம் பதித்தவர்களாக இருப்போம்.
இதில் இன்னொரு விஷயமும் உண்டு. பகவான் ரமண மகரிஷிக்கும் பேரறிஞர் அண்ணாவுக்கும் ஒற்றுமை உண்டு. இருவருக்கும் வந்தது புற்றுநோய் என்னும் கொடிய நோய்தான். அந்த நோய்தான் அவர்களை நம்மிடம் இருந்து பிரித்தது.
அந்த கொடுமையான நோய் யாருக்கும் வரவேண்டாம். நமக்கு வரவேண்டியது, அவர்களைப் போன்ற, மனிதனின் மேம்பாட்டுக்கும் சமூக முன்னேற்றத்துக்கும் உழைக்கும் பெரியார்கள் மீதான பற்றுநோய்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
மதிப்புக்குரிய
திரு கலைவேந்தன்
அவர்களுக்கு
தங்களின் பாராட்டுக்கு
நன்றி
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்
மக்கள் திலகத்தின் பாடலுடன் அதற்கேற்ப சம்பவங்களை தொகுத்து பல அபூர்வ தகவல்களை தந்து நம் மக்கள் திலகத்தின் பெருமைகளுக்கு பெருமை சேர்க்கும் தங்களுக்கு என்னுடைய அன்பு பாராட்டுக்கள்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் ...
1950 களில் உருவான மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் உருவாக்கிய தளம் ''எம்ஜிஆர் மன்றம் ''. 65 ஆண்டுகளாக பல தலைமுறை ரசிகர்கள் இன்னமும் அதே உத்வேகத்துடன் செயலாற்றி வருவது உலக திரைப்பட வரலாற்றில் முக்கிய இடம் பெற்று உள்ளது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் ஒருங்கிணைந்து மக்கள் திலகம் சார்ந்திருந்த திமுக இயக்கத்தின் வெற்றிக்காக 1957, மற்றும் 1962 தேர்தல்களில் தங்களை ஈடுபடுத்தி கொண்டு வெற்றிகளை குவித்தார்கள் 1967 தேர்தலில் மக்கள் திலகம் எம்ஜிஆர் போட்டியிட்ட பரங்கிமலை தொகுதியில் பம்பரமாக சுழன்று அவருடைய வெற்றிக்கும் மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கும் கடுமையாக உழைத்து வெற்றி கனியை பறித்தார்கள் .
1971 தேர்தலிலும் மிகப்பெரிய சக்தியாக மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றங்கள் தங்களை ஈடு படுத்தி கொண்டு வெற்றி மேல் வெற்றிகளை பறித்தார்கள் .
1972ல் மக்கள் திலகம் துவக்கிய அதிமுகவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் தங்களை அக் கட்சியில் இணைத்து கொண்டு 1973/ 1974 ல் நடைப்பெற்ற இடை தேர்தல்களில் மாபெரும் வெற்றிகளை மக்கள் திலகத்திற்கு வழங்கினார்கள் .1977 /1980/ 1984 மூன்று பொது தேர்தல்களில் ஹாட்ரிக் வெற்றிகளை கண்டார்கள் .
மக்கள் திலகத்தின் அதிமுக , இரட்டை இலை . - எந்த காலத்திலும் அந்த புகழுக்கு இழுக்கு இழுக்கு நேராமல் இருக்க 1991 தேர்தல் முதல் 2014 தேர்தல் வரை எம்ஜிஆர் மன்றங்கள் தங்களை முழுமையாக ஈடு படுத்தி கொண்டு வெற்றி தோல்விகளை சந்தித்தார்கள் .
விரைவில் வர இருக்கும் தேர்தலிலும் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் சக்தியும் வெற்றிகளும் நிச்சயம் ஒரு புதிய அத்தியாயத்தை காணப்போகிறது .
Beautiful explanation Sir.
The above lyrics is inspired from Siddarpadalkal. Not only Pulamaipithan, Kannadasan also has used many lines from Siddar padalkal. One such is Veedu varai uravu veethi varai manaivi kadu varai pillai kadaisivarai yaro? (The same meaningful line appears in Siddar padalgal which I read 18 years back in bound book written by மீ. ப . சோமு titled சித்தர் இலக்கியம், he is a Tamil scholar but my mother took Tamil tutions for his daughters for couple of years).