திரு வினோத்
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் இன்று http://i59.tinypic.com/2rfedr4.gifபதிவுகள் நிறைவு செய்ததற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் ,பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
Printable View
திரு வினோத்
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் இன்று http://i59.tinypic.com/2rfedr4.gifபதிவுகள் நிறைவு செய்ததற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் ,பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
நன்றி திரு.குமார் சார்,
மனசாட்சி இருப்பவர்கள் விருப்பு வெறுப்புகளை ஒதுக்கிவிட்டு நடுநிலையோடு சிந்தித்தால் தலைவரின் பெருமையும் சாதனைகளும் புரியும். தலைவரின் சாதனைகளை மறைக்க முயற்சிக்கிறார்களே, அவதூறுகளை அள்ளி வீசுகிறார்களே என்று மனம் பொறுக்காமல்தான் நாம் ஆதாரங்களோடு பதில் சொல்லி வருகிறோமே தவிர, உண்மையில் வாத, விவாதங்களை எல்லாம் கடந்த புரட்சித் தலைவர் என்னும் மகாசக்தி சத்தியத்தை உலகுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
வினோத் சார் , பாராட்ட வார்த்தைகள் இல்லை . உங்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது , " கருத்து வேற்றுமைகள் வரலாம் , சில தேவைகளுக்காக பல உண்மைகள் மறைக்கப்படலாம் ,ஆனால் அவைகள் ஒரு நல்ல நட்பை பாதிக்காது , அது வேறு , இது வேறு " . மற்றவர்களை பாராட்டுவதில் நீங்கள் வகிக்கும் முதன்மைத்தன்மையை யாராலும் எட்டி பிடிக்கமுடியாது . நல்ல தேக ஆரோக்கியத்தையும் , மன நிம்மதியையும் இறைவன் உங்களுக்கு தர வேண்டும் என்று பிராத்தனை செய்கிறேன் .
நன்றி திரு.ரவி சார்,
கருத்து வேறுபாடுகள், கொள்கை மாறுபாடுகள் காரணமாக மக்கள் திலகத்தின் சாதனைகளை, சாதாரண நடிகனாக இருந்து மாநிலத்தின் முதல்வராக உயர்ந்த உலகின் முதல் நடிகரின் பெருமைகளை மறைக்க சிலர் முயற்சி செய்யலாம். அதற்கு நாங்கள் கண்ணியம் கெடாதபடி, நாகரிகமாக ஆதாரங்களுடன் பதில் அளிக்கலாம். அது வேறு.
அவை எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், நமது நட்புக்கு பழுது ஏற்படாதபடி, எங்கள் திரிக்கு வந்து திரு.வினோத் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தங்களின் பரந்த மனப்பான்மைக்கும் பெருந்தன்மைக்கும் தலைவணங்குகிறேன். நன்றி.
பணிகள் காரணமாக மதுரகானத்துக்கு வரமுடியவில்லை. ஏற்கனவே நான் கேட்டுக் கொண்டபடி, தங்களின் அற்புதமான ‘திருக்குறளும் திரை இசையும்’ தொடரை மீண்டும் தொடங்கி விட்டீர்களா?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
http://i59.tinypic.com/kc1p1g.jpg
மலைக்க வைக்கும் 12,000 அர்த்தமுள்ள பதிவுகள் ! வாழ்த்துக்கள் சகோதரர் திரு. வினோத் அவர்களே !