-
Dear Mr. Cheran & My Dear N.T. Fans
What an realistic speech, It has inspired every one of us again our Legend is always great! so as our fans, we all should be proud that we are all die hard fan of our Legend. I feel like hugging Mr. Cheran and express my heartfelt thanks to him for coming out with the facts boldly.
Again I repeat all our die hard fans strength/unity will ensure our LEGEND is alive and will be alive for generations generations to come.....
Dr. Sivaji Sir, we all love you and believe me my son who is 9 years old as told in his class room boldly that he first likes Dr. Sivaji and any were any questions about the actor is asked he says he first likes Dr. Sivaji.
I feel satisfied that the our Legend qualities are known to our next generation. You know dear fans, OUR LEGEND IS A MANAGEMENT GURU most of them speak about his high class acting, but please be informed we have to share Dr. Sivaji qualities and his Ethical Values to our next generation.
I do explain and talk about our Legend to my son, believe me he says and he has understood why our Legend is always on top No.1 always.
Long Live Dr. Sivaji Ganesan.
JAIHIND
M. Gnanaguruswamy
-
thanks for sharing the videos and photos.
-
Why is MSV missing in the function? Raghavendar/Murali sir?? any idea???
-
நான் கொஞ்சம் அவசரக் குடுக்கை என்பதை ஒப்புக்கொண்டுவிட்டு என் மனதில் பட்டதை சொல்லலாம் என நினைக்கிறேன் ..குறிப்பாக முரளி சார் போன்ற என்னை அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.
எல்லாம் சரி ..அருமையான விழா ..உணர்ச்சிகரமான பேச்சுகள் ..சிவாஜி ரசிகர்கள் குழுமிய நிகழ்வு .ஆனால் எல்லாம் எதற்காக ..அங்கே பேசியவர்கள் பலரும் குறிப்பிட்டார்கள் ..சிவாஜி ரசிகர்களுக்காக இந்த நிகழ்வு அல்ல ..மாறாக இந்த அரிய முயற்சியை இளையோருக்கு கொண்டு செல்ல , அதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஒரு ட்ரெயிலர்-யை வெளியிடும் விழா ..சரி ..ட்ரெயிலரின் நோக்கம் என்ன ? அது இளையோரின் கண்களுக்கு சென்று சேர வேண்டும் ..ஒய்.ஜி.மகேந்திரன் கூட சொன்னார் ..இது கணிணி யுகம் , ஐபாட் யுகம் .. அப்படியென்றால் செய்ய வேண்டியது உருவாக்கப்பட்ட ட்ரெயிலரை அதன் அசல் தரத்தில் இணையத்தில் உலவ விட வேண்டும் .அதை நான் இளையோருக்கு கொண்டு செல்ல வேண்டும் ..இது தான் இந்த நிகழ்வின் முதன்மை நோக்கம் ..ஒத்துக்கொள்கிறேன் ..அந்த ட்ரெயிலர்கள் திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன ..மகிழ்ச்சி .ஆனால் அது மட்டும் போதுமா ? இன்றைய கொலைவெறி உலகத்தில் மிக எளிதாக இணையத்தின் மூலம் பலர் கண்களை சென்றடையலாம் ..அதையல்லாவா முதன்மையாக செய்ய வேண்டும் ..இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஒளிக்காட்சியில் கூட மருந்துக்கு அந்த ட்ரெயிலர் காண்பிக்கவில்லை ..அது தவிர எல்லாம் இருக்கிறது ..இங்கு தான் நம்மவர்கள் கோட்டை விடுவது .. நீங்களே மீண்டும் மீண்டும் கூடி உங்களுக்குள்ளே பேசிக்கொள்வதால் இளையோரை ஈர்த்து விட முடியாது ..அவர்கள் வழியில் சென்று அவர்களை எதிர் கொள்ள வேண்டும் .
முரளி சார் போன்றவர்கள் என் கரருத்தின் சாரத்தை உணர்ந்து செய்ய வேண்டியதை செய்வார்கள் என நம்புகிறேன். என்னுடைய கருத்தில் தவறிருந்தால் மன்னிக்கவும்.
-
ஜோ சார்,
தங்களுடைய கூற்று முற்றிலும் நியாயமானது. இதில் அவசரக் குடுக்கைத் தனம் என்பதெல்லாம் ஏதுமில்லை, தங்களுக்கு மனதில் பட்டதைத் தாங்கள் கூறுவதற்கு ஏது தடை
விழாவின் நாயகனே டிரைலர் தானே. அதனை மிகச் சிறந்த முறையில் தருவதாக சொல்லியிருக்கிறார். உயர்தரமான resolutionல் கிட்டத்தட்ட hd தரத்தில் அளித்தால் தான் அதற்கு அர்த்த மிருக்கும் என அவர் எண்ணுகிறார். எனவே மிக மிக விரைவில் அந்த டிரைலர் தரவேற்றப் படும் என்று நான் நம்புகிறேன். அடியேனுக்கும் ஒரு பிரதி கேட்டிருக்கிறேன். கிடைத்தவுடன் நாம் எல்லோரும் அதைக் காணலாம். அது வரை சற்றுப் பொறுத்திருப்போம்.
அன்புடன்
-
கர்ணன் டிஜிட்டல் வடிவ டிரைலர், சென்னை பைலட் மற்றும் ஆல்பர்ட் திரையரங்குகளிலும் மற்றும் தமிழகமெங்கும் கிட்டத் தட்ட 200 திரையரங்குகளிலும் ufo - digital satellite broadcast technology - செயற்கைக் கோள் தொழில்நுட்பத்தில் திரையிடப் பட்டு வருகிறது. நாளை 23.02.2012 திரையரங்குகள் தமிழகத்தில் செயல் படாது என ஒரு செய்தி உள்ளது. வெள்ளி முதல் சென்னையில் அம்பத்தூர் ராக்கி, காசி, குரோம்பேட்டை வெற்றி, பாரத் அல்லது மகாராணி உள்ளிட்ட மேலும் சில திரையரங்குகளில் திரையிடப் பட உள்ளது. டிரைலர் திரையிடப் பட்ட அனைத்து ஊர்களிலும் மக்கள் சிறந்த தரத்துடன் கண்டு களித்து மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
-
மதுரை அலங்கார் திரையரங்கில் வரும் வெள்ளி 24.02.2012 முதல் தினசரி 4 காட்சிகளாக வெற்றிக் கொடி நாட்ட வருகிறது
மன்னவன் வந்தானடி.
-
Simple solution would be to record the trailer by visiting one of the theaters with a quality camera(mobile) and uploading it to Youtube!
-
ஜோ,
நீங்கள் சொன்னதில் எந்த தவறுமில்லை. இன்னும் சொல்லப் போனால் இணையத்தில் தரவேற்றுவதுதான் மிக சிறந்த விளம்பரமாக இருக்கும். இதை திரு. சொக்கலிங்கம் அவர்களிடம் சொல்லியிருக்கிறேன். [விழாவிற்கு முன்பே]. இந்தப் படம் மிகப் பெரிய அளவில் பேசப்பட வேண்டும் மீண்டும் திரையரங்குகளில் மிகப் பெரிய வெற்றி பவனி வரவேண்டும் என்ற விஷயத்தில் அவரையும் விட நம்மைப் போன்ற பல்லாயிரக்கணக்கான சிவாஜி ரசிகர்களின் ஆசை அதிகம்.
அதனால்தான் படம் வெளியாகும் தேதி, அந்த நேரத்தில் நடை பெறக்கூடிய பள்ளி தேர்வுகள், ஏப்ரல் மாதம் வெளியாகும் புதிய படங்கள், அந்த மாதம் நடை பெற இருக்கும் ஐ.பி.எல். போட்டிகள், அவை ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகள் அனைத்தையும் திரு சொக்கலிங்கம் அவர்களோடு நான் விவாதித்தேன். மீண்டும் இதை பற்றி அவரிடம் பேசலாம் என்றிருக்கிறேன். உங்கள் கருத்தை அவசியம் அவரிடம் தெரிவித்து ஆவன செய்யுமாறு சொல்கிறேன்.
ராஜேஷ்,
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்கள் கடந்த ஒரு மாத காலமாகவே உடல்நலம் குன்றியிருப்பதால்தான் அவரால் இந்த விழாவிற்கு வர முடியவில்லை. அதே காரணத்தினால்தான் சென்ற மாதம் நமது சொசைட்டியின் சார்பில் நடத்திய பார்த்தால் பசி தீரும் விழாவிற்கும் அவரால் வர இயலவில்லை.
அன்புடன்
-
thank you murali sir
Wishing MSV sir a speedy recovery and be part of these golden events.