-
இந்த நேரத்தில் ஒரு பக்கம் திராவிட இயக்கம் மிக வேகமாக மக்கள் மத்தியில் பரவத் தொடங்கியது. அவர்களுடைய பகுத்தறிவுப் பிரச்சாரம் மக்களிடையே வேகமாக ஆழமாக வேரூன்றத் தொடங்கிய காலம். இன்னொரு பக்கம் அவர் சார்ந்த அரசியல் இயக்கமோ இது பற்றி சற்றும் கவலைப் படாமல் மக்களிடம் உருவாகத் தொடங்கிய மனமாற்றத்தைப் பற்றி சற்றும் சிந்திக்காமல் இருந்த நேரம். இதனால் ஆன்மீக வாதிகள் கவலை கொள்ளத் தொடங்கினர். திரு ஏபி.என். அவர்கள் நான் பெற்ற செல்வம் படத்தில் வைத்த திருவிளையாடல் நக்கீரன் தருமி சிவன் காட்சி சில ஆன்மீக வாதிகளால் ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளப் பட்டு அதனடிப்படையிலேயே ஒரு தெய்வீக படத்தை எடுக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், அதில் திரு ம.பொ.சி. அவர்களின் பங்கும் இருந்தது என்றும் ஒரு கருத்து அப்போது இருந்ததாக நான் கேள்விப் பட்டிருக்கிறேன்.
-
கர்ணன் மிகப் பெரிய வெற்றியுடன் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக சாந்தியிலும் மற்ற திரையரங்குகளிலும் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, அதனைத் தோல்விப் படம் என்று சித்தரிப்பதில் வெற்றியடைந்தனர் திராவிட இயக்கத்தினர். இதன் மூலம் அவர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க முனைந்தனர். நடிகர் திலகத்தின் படம் தோல்வி என்பது ஒன்று, கர்ணன் படம் தோல்வி என்பதன் மூலம் புராணப் படங்களையும் தெய்வ பக்திப் படங்களையும் எடுக்க முனைவோரிடம் ஒரு அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கம் இன்னொன்று. இந்த சூழ்நிலையில் தான் திருவிளையாடல் படத்தின் உருவாக்கத்தைப் பார்க்க வேண்டும்.
நடிகர் திலகம் இறை நம்பிக்கை இருந்தாலும் தீவிரமான ஆஸ்திகர் அல்லர். என்ற போதிலும் ஏபி.என். அவர்கள் இப்படி ஒரு எண்ணம் இருப்பதை சொல்ல, அதனை உடனே ஏற்றுக் கொண்டார் நடிகர் திலகம். பின்னர் நடந்ததெல்லாம் வரலாறு.
-
நடிகர் திலகத்தையும் அவருடைய செல்வாக்கையும் குறைவாக மதிப்பிட்டு செய்யப் பட்ட தவறான பிரச்சாரங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே கண்ணதாசன் எழுதிய வரிகள் தான் நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே .... பாட்டும் நானே பாடலில் இடம் பெற்ற இவ்வரிகள் அன்று தொடங்கி இன்று வரைக்கும் ரசிகர்களின் நெஞ்சில் மகிழ்ச்சியூட்டும் வரிகள். உண்மையான வரிகள் கூட.
தங்களுடைய திருவிளையாடல் பதிவின் மூலம் கடந்த கால நினைவுகளை அசை போட வாய்ப்புத் தந்த ராகுல் சார், தங்களுக்கு என் நன்றி.
-
-
டியர் வாசு சார்
மிக மிக அரிய பொக்கிஷமாக செவாலியே விருது விழாவைப் பற்றிய புதிய பார்வை இதழ்க் கட்டுரையினை நம்முடன் பகிர்ந்து கொண்ட அன்பு நண்பர் கோபால் அவர்களுக்கு என் முதற்கண் உளமார்ந்த நன்றி. அதனை மிகுந்த சிரத்தையுடன் நிழற்படமாக இங்கே பதிவிட்ட தங்களுக்கும் என் உளமார்ந்த நன்றி.
கோபால் சார்,
இது போல் தங்களிடம் உள்ள பல அரிய ஆவணங்களை இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
வருங்கால தலைமுறையினர் நடிகர் திலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள பெரிதும் துணை புரிபவை இது போன்ற ஆவணங்களும் நிழற்படங்களும். தாங்கள் மட்டுமின்றி நம்முடைய அனைத்து நண்பர்களும் முயல வேண்டுகிறேன்.
அன்புடன்
-
Dear Rahul sir,
Your writeup about Thiruvilaiyadal is very nice
-
டியர் வாசுதேவன் சார்,
செவாலியெ விருது விழா குறித்து புதிய பார்வை பதிவிற்கு (+ கொடுத்து உதவிய திரு.கோபால்) நன்றி.
-
Rare article of NT. Simply Superb Mr Vasu Sir as well as Mr Gopal Sir,
-
-
Mr. Neyveli Vasudevan sir & Mr. S.Gopal sir,
Excellent article about "Chevalier Award Function' published in Puthiya Paarvai. Tears in my eyes when reading the article, particularly our NT's speech.
Thanks a lot for both of you for this wonderful treasure.