http://i50.tinypic.com/2ns0x8m.jpg
Printable View
உலகமெங்கும் இன்று கொண்டாடும் கிறிஸ்துமஸ் ஆனந்த திருநாள் முன்னிட்டு அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்
http://i50.tinypic.com/2n1fk86.jpg
இனிய நண்பர் இராமமூர்த்தி
மக்கள் திலகத்தின் நினைவு நாள் அனுசரித்த வேலூர் நகரம் அதனை சுற்றியுள்ள மேல்விஷாரம் - ஆற்காடு - ராணிபேட்டை - வாலாஜா -சத்துவாச்சாரி-காட்பாடி -பாகாயம் -கஸ்பா - கொணவட்டம் என்று பல்வேறு இடங்களுக்கு சென்று மக்கள் திலகம் அவர்களின் இறைவா புகழினை மக்கள் திலகம் திரிக்கு இரவுபகல் பாராமல் தொடர்ந்து பதிவிட்டு 175-200-225-250 என்ற அளவில் பதிவுகள் அளித்து
சாதனை படைத்த உங்களின் உழைப்புக்கு நன்றி
TIMES OF INDIA
http://i47.tinypic.com/20iys2c.jpg
இறைவன் mgr பக்தர்கள் குழு செயலாளர் பேராசிரியர் செல்வகுமார் அனுப்பிய செய்தி .
இன்று நமது தெய்வம் மக்கள் திலகத்தின் 25வது ஆண்டு நினைவு தினம் உலகமெங்கும் அனுசரிக்கப்பட்டது .
மக்கள் திலகத்தின் பல படங்கள் தமிழ் நாட்டில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடி கொண்டு வருகிறது .
சென்னை நகரில் உலகம் சுற்றும் வாலிபன் நான்கு அரங்கில் முதல் மூன்று நாட்களில் பெற்ற வசூல் ரூ
1,50,000.
ஊடகங்கள் -மக்கள் திலகத்தின் நினைவு நாளை ஒட்டி
அவரின் படங்கள் ,பாடல்கள் ஒளி பரப்பி நம்மை மகிழ வைத்தது .
மக்கள் திலகத்தின் மேல் இந்த அளவிற்கு பாசம் வைத்துள்ள அனைத்து தரப்பு மக்களுக்கு நன்றி கூற வார்த்தை இல்லை .
ஒரு தனி மனிதனுக்கு அவர் மறைந்த 25 ஆண்டுகள் கடந்த பின்னரும் உலகமெங்கும் வாழ்கின்ற அவரது ரசிகர்கள் இன்றும் அவரை நினைத்து போற்றி புகழ் பாடும்
இந்த வாய்ப்பு உலகில் நமது பொற்கால சிற்பி பொன்மனச்செம்மல் mgr ஒருவருக்கே .
மறை முகமாக அவரது பெயரையும் , புகழையும் , சாதனைகளையும் இருட்டடிப்பு செய்து வரும் அவராலேய புகழ் பெற்ற இன்றைய இதயமற்ற மனிதர்களுக்கு அன்றே நமது தெய்வம் பாடிவிட்டு போனார்
.எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் .
காலம் நிச்சயம் அவர்களை மறக்கும் .
எம் தலைவரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் .
பேராசிரியர் செல்வகுமார்
dinakaran - news
http://i47.tinypic.com/2w5qf08.jpg
சென்னை : எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத் தில் முதல்வர் ஜெயலலிதா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 25ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட் டது. இதையொட்டி மெரி னா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, வைத்தியலிங்கம், கோகுல இந்திரா, வளர்மதி, சின்னையா, மாதவரம் மூர்த்தி உள்ளிட்ட அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரை சாமி, அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத், எம்.பி.க்கள் தம்பிதுரை, பாலகங்கா, மனோஜ் பாண்டியன், செம்மலை, ரபி பெர்னார்ட், முன்னாள் சபாநாயகர் டி.ஜெயக் குமார், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி.சண்முகம், நடிகர்கள் ஆனந்தராஜ், ஜெயகோவிந்தன், மயிலை ராஜேஷ் கண்ணன், எம்எல்ஏக்கள் கலைராஜன், செந்தமிழன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர், தமிழ்மாநில முஸ்லீம் லீக் தலைவர் சேக் தாவூத் உள்ளிட்ட தலைவர்கள் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் எம்ஜிஆர் சமாதியில் அஞ்சலி செலுத்த திரண்டதால் கடற்கரை சாலை திக்கு முக்காடியது. இதேபோல், சென்னையில் உள்ள அனைத்து தெருக்களிலும் எம்ஜிஆர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழக முன்னாள் முதல்வரும், புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகருமான மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரனின் 25 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
இதையொட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தனது அண்ணன் சக்ரபாணி வீட்டில், நடிப்புலக வாழ்க்கையை ஆரம்பித்த எம்.ஜி.ஆர் முதலில் மேடை நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். 1947 இல் வெளிவந்த ராஜகுமாரி படம் அவருக்கு நல்ல நடிகர் அந்தஸ்துக்கு உயர்த்தியது. பின்னர் 1950 களில் திரையுலகம் எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டாராக்கி கொண்டாடியது. 1954 இல் வெளிவந்த மலைக்கள்ளன் படம் எம்.ஜி.ஆரை உயரத்தில் கொண்டு நிறுத்தியது. பின்னர் அரசியல் களத்திலும் கோலோச்ச தொடங்கினார். 1977முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடமையிலிருந்தார். மூன்று தடவை தொடர்ச்சியாக இவர் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சானார்.
முதன்முறையாக திரைப்பட நடிகர் ஒருவர் இந்திய மாநிலம் ஒன்றின் முதலமைச்சராக பதவியேற்ற பெருமை எம்.ஜி.ஆரையே சாரும். 1984ம் ஆண்டு கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த போதும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வர் எனும் பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு. இவரது கலைச்சேவை, பொதுச்சேவைக்கு கிடைத்த செல்வாக்கு, கௌரவம் என்பன அத்தேர்தலை அதிமுக வெற்றிகரமாக எதிர்நோக்க பெரிதும் உதவியது.
இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திக கொள்கையை கடைப்பிடிக்கும் திராவிட கட்சியில் இருந்த போதிலும் தமிழ்நாட்டில் பலர் இவரை கடவுள் போன்றே போற்றினார்கள். தமிழ் மொழிக்கு என தனியே ஒரு தமிழ் பல்கலைக்கழகம் வேண்டுமென 1921ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, நடைமுறை சாத்தியமாக்கினார் எம்.ஜி.ஆர்.
1981ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் முயற்சியில் தான் தமிழக அரசால் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம உருவாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் பெற்ற விருதுகளில், பாரத் விருது, பாரத ரத்னா விருது, பத்மசிறீ விருது என்பன குறிப்பிடத்தக்கன. இதில் பத்மசிறீ விருதை அவர் ஏற்க மறுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
யுத்த தேவைகளுக்காக நிதியுதவி செய்த முதலாவது அரசியல் தலைவர் எனும் பெருமையும் எம்.ஜி.ஆரை சாரும். 1962ம் ஆண்டு, சீனாவுடனான யுத்தத்தின் போது ரூ.75,000 யுத்த நிதியுதவியாக இந்திய இராணுவத்திற்கு கையளித்தார். அதோடு இலங்கையிலிருந்து தமிழீழம் தனி நாடாக சுதந்திரம் பெறவேண்டுமென வெளிப்படையாகயே வி.புலிகளுக்கு நிதியுதவி செய்தவ எம்.ஜி.ஆர் ஆவார்.
அதோடு தீ, வெள்ளம், சூறாவாளி போன்ற இயற்கை அழிவுகளில் சிக்கிய பிரதேசங்களின் மீள் நிவாரண பணிகளுக்காகவும் தனிப்பட்ட முறையில் அதிக நிதியுதவி செய்துள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் போதே, 1987ம் ஆண்டு டிச.24ம் திகதி எம்.ஜி.ஆர் மறைவை எய்தினார். எம்.ஜி.ஆர் மீது கொண்டிருக்கும் தனிப் பற்றுதல் காரணமாக மட்டுமே, அதிமுகவுக்கு ஆதரவு வழங்குபவர்கள் இன்று வரை தொடர்கின்றனர்.