'தேங்காய்' சீனிவாசன், சுஜாதா, அபர்ணா, ஸ்ரீகாந்த் நடித்த 'ஸ்ரீ ராம ஜெயம்' படத்தில் இருந்து ஒரு பாடல். டி.எம்.எஸ், சுசீலா டூயட். மெல்லிசை மன்னரின் இசையமைப்பில்.
நல்ல பாடல்.
வெள்ளி சலங்கை துள்ளிக் குலுங்க
கள்ளச் சிரிப்பு பின்னி இழுக்க
சொல்லுங்கள் சுவை காவியம்
சூட்டுங்கள் தமிழ் ஓவியம்
வெள்ளி சலங்கை துள்ளிக் குலுங்க
கள்ளச் சிரிப்பு பின்னி இழுக்க
சொல்லுங்கள் சுவை காவியம்
சூட்டுங்கள் தமிழ் ஓவியம்
மஞ்சள் முகத்தை நெஞ்சில் நினைத்தால்
கொஞ்சத் துடிக்கும் எந்தன் நினைவு
மஞ்சள் முகத்தை நெஞ்சில் நினைத்தால்
கொஞ்சத் துடிக்கும் எந்தன் நினைவு
இலை பூவாகி காயாகி கனியானது
இதழ் பாலாகி தேனாகி பதமானது
இலை பூவாகி காயாகி கனியானது
இதழ் பாலாகி தேனாகி பதமானது
பூச்சூடி சூடி கொடி போல ஆடி
பொன்னாக வந்த வெண்ணிலா
காற்றாட ஆட கண்ஜாடை பேசும்
கண்ணான கண்ணன் திருவிழா
கண்ணான கண்ணன் திருவிழா
திருவிழா !
வெள்ளி சலங்கை துள்ளிக் குலுங்க
கள்ளச் சிரிப்பு பின்னி இழுக்க
சொல்லுங்கள் சுவை காவியம்
சூட்டுங்கள் தமிழ் ஓவியம்
கம்பன் எழுத்தில் பொங்கும் கருத்தை
கொஞ்சம் நினைத்து என்னை அணைத்து
கம்பன் எழுத்தில் பொங்கும் கருத்தை
கொஞ்சம் நினைத்து என்னை அணைத்து
இனி நாள்தோறும் விளையாட துணை வந்தது
அதில் நானூறு விதமான கலை வந்தது
இனி நாள்தோறும் விளையாட துணை வந்தது
அதில் நானூறு விதமான கலை வந்தது
நாள் பார்த்து பார்த்து நீ வந்ததென்ன
என் ராசி நல்ல ராசிதான்
கண்ணான ஜோடி பொன்னான வாழ்வு
கல்யாணம் தந்த ராசிதான் கல்யாணம் தந்த ராசிதான்
ராசிதான்!
வெள்ளி சலங்கை துள்ளிக் குலுங்க
கள்ளச் சிரிப்பு பின்னி இழுக்க
சொல்லுங்கள் சுவை காவியம்
சூட்டுங்கள் தமிழ் ஓவியம் !
http://www.inbaminge.com/t/s/Sri%20Rama%20Jayam/