சக பதிவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். திரு கோபால் அவர்கள் என் பெயரை குறிப்பிட்டு சொல்லி பதிவு இட்டு இருந்ததால் இந்த பதிவு இங்கே போட வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. மன்னிக்க வேண்டுகிறேன் .
திரு கோபால் அவர்களுக்கு
என்னை பொறுத்தவரை நடிகர் திலகம் ஆதர்சம். (இது ஏற்கனவே நடிகர் திலகத்தின் இன்னும் ஒரு சிறந்த ரசிகர் திரு பார்த்தசாரதி அவர்கள் கூறிய ஒன்று). ஆனால் அதற்காக மற்ற நடிகர்களையோ அவர்களுடைய திறமையையோ மதிக்க கூடாது என்று சொல்லும் வன்முறையை எதிர்ப்பவன் . சிவாஜி ரசிகர் ஆக இருப்பவர் மற்ற நடிகர்களின் சிறந்த குணாதிசயம்களை பாராட்ட கூடாது என்று நீங்கள் எப்படி எதிர்பார்கிறீர்கள் என்று புரியவில்லை.நடிகர் திலகம் அவர்களே தன்னை சந்திக்கும் ரசிகர்கள் எல்லாரிடத்திலும் சொல்லும் வார்த்தைகளே இவை தான். 'என் படத்தை மட்டும் பார்க்காதே .எல்லோரின் படங்களையும் பார் .அப்போது தான் என்னிடத்தில் உள்ள திறமை என்ன மற்றவர்களிடத்தில் உள்ள திறமை என்ன என்று உனக்கு தெரியும்" .
உங்கள் உடைய பிரச்சனை இது தான் . வார்த்தைகளை அள்ளி கொட்டி விடுகிறீர்கள். 'நெல்லை கொட்டினாலும் அள்ளலாம் சொல்லை கொட்டினால்' என்ற முது மொழியை மறந்து விடுகிறீர்கள். இங்கு இரட்டை வேடம் போடும் திறமை எல்லாம் கிடையாது .நான் வெறும் அசடு. உங்கள் வார்த்தையில் சொல்வதனால் மூன்றாம் தர குமாஸ்தா. ஆனால் நான் மூன்றாம் தர குமாஸ்தா வேலை பார்ப்பவன் அல்ல.இன்னும் ஒன்று குமாஸ்தாகள் எல்லாம் மூன்றாம் தரமாக வேலை பார்பவர்கள் அல்ல.
1970 களில் இருந்து பெருந்தலைவர் அவர்களின் ஸ்தாபன காங்கிரஸ் (வெறும் 10 வயது தான்) இல் சிவாஜி மன்றம் மூலமாக மாணவர் அமைப்பில் பணி ஆற்றிய பெருமை உடையவன். பின்னாட்களில் பெரியவர் திரு நெல்லை ஜெபமணி அவர்களின் வெற்றிக்காக சாத்தான் குளம் தொகுதியில் பிரசாரம் செய்தவன் . அந்த தேர்தலில் மிக பெரிய அரசியல்வாதி, தினத்தந்தி என்ற மிக பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்ட முன்னாள் மந்திரி திரு சி பா ஆதித்தனார் (சுயேச்சை சின்னத்தில் போட்டி இட்டவர்) அவர்கள் வெற்றி உறுதி என்று மூலை முடுக்கு எல்லாம் பிரசாரம் நடந்து கொண்டு இருந்த போது ஒரு 20 அல்லது 30 விலைக்கு போகாத, வாங்க முடியாத நடிகர் திலகத்தின் அரசியல் மாற்றத்தை ஏற்று கொள்ள முடியாத சில தன்னலம் அற்ற காமராஜர் தொண்டர்களால் (என்னையும் சேர்த்து ) தான் அடைந்த வெற்றி அது . 37 ஆண்டுகள் கழித்து இன்னும் எனக்குள் அது பசுமை மாறாத நினைவுகளாகதான் உள்ளது
எனக்கு திரு எம் ஜி யார் அவர்களின் உடல் அமைப்பு பிடிக்கும் என்றால் அதை சொல்வதில் எனக்கு என்ன தயக்கம் .தன உடலை பேணி காப்பதில் அக்கறை உள்ளவர் . இறுதி வரை அதாவது திரை உலகில் பணி புரிந்த வரை உடலின் எந்த பாகத்திலும் தேவை அற்ற கொழுப்பு என்ற சமாச்சாரத்தை அண்டவிடாமல் தவிர்த்தவர். முகத்தில் முதுமை வந்த போதும் (60 வயதுகளில் எல்லோருக்கும் வரும் ஒன்று) கழுத்துக்கு கீழ் தன உடல்கட்டை பேணி காத்தவர். சில படங்களில் அவர் உடல் தேக்கு மரம் போல் இருந்தது உண்மை தான் என்னை பொறுத்த வரை .வரலாறு சில சம்பவங்களை நமக்கு சுட்டி காட்டும் .அதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளன நண்பர் கோபால் அவர்களே .
1967 முதல் 1976 வரை நடிகர் திலகமும் தன உடல் கட்டை பேணி காத்தவர் தான். அதனால் தான் அவர் உடைய ராஜாவையும்,சொர்கத்தையும் ,நீதியையும்,கலாட்ட கல்யாணம்,சுமதி என் சுந்தரி,எங்க மாமா,தங்க சுரங்கம்,அஞ்சல் பெட்டி 520 (இவை உதாரணங்களே ) இப்படி எத்தனையோ படங்களை ரசித்தவன்.
எனக்கு யாரையும் கொஞ்ச வேண்டும்,கெஞ்ச வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. திரு கலை வேந்தர் அவர்கள் ஒரு பாடலை குறிப்பிட்டு அந்த பாடலின் சாரம்சத்தை ஒரு சங்கீத ரசிகர் என்ற முறையில் கேட்கும் போது .கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு பாடலை விளக்க எந்த பேதமும் பார்க்காமல் திரு கலை வேந்தர் அவர்கள் அழைக்கும் போது .திரு முரளி அவர்கள் மூலமாக தெரிய வரும் போது அதை விளக்குவதற்கு எனக்கு கடமையும் உண்டு உரிமையும் உண்டு.சங்கீத ராகங்களை பற்றி முழுதும் அறிந்த சாம்ராட் நீங்கள் ஒரு சக பதிவருக்கு ராகங்களின் பெருமையை இன்னொரு பதிவர் சொல்லும் போது சந்தோஷ பட வேண்டுமே தவிர அதில் பேதம் ஏன் கொள்ள வேண்டும். எனக்கும் உங்கள் பதிவு புரியவில்லை.
அந்த பதிவிலே நான் நடிகர்திலகம் அவர்களை தாழ்த்தி எழுதி இருந்தால் நீங்கள் வருத்தப்படலாம் கேள்வி கேட்கலாம். இந்த நேரத்தில் திரு முரளி அவர்களின் ஒரு பதிவில் சொல்லி இருந்த வார்த்தை தான் நினைவிற்கு வருகிறது.காழ்ப்பு உணர்ச்சி தேவை இல்லையே.
இன்னொன்றும் சொல்கிறேன் அடுத்தவர் உடைய (கம்பர் ஜெயராம்) கட்டுரையை எடுத்து உங்கள் பாணியில் சொல்வது போல் கட் அண்ட் பேஸ்ட் செய்யும் போது அதில் மாற்றத்தை விரும்பாதவன்.அதில் சில தவறான தகவல்கள் கட்டுரையாளரால் அல்லது பேட்டியாளரால் சொல்லப்பட்டு இருந்தால் அதை குறிப்பிட்டு இந்த தகவல் தவறு என்று சொல்வதற்கு உங்களுக்கு உரிமை உண்டு.ஆனால் அந்த பதிவு போட கூடாது என்று சொல்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.நீங்கள் ஒரு பதிவர். இரண்டாவது அந்த பதிவு நடிகர் திலகத்தின் திரியில் இடப்பட்ட பதிவு அல்ல. மதுர கானம் என்பது ஒரு பொது திரி. அந்த திரியில் நடிகர் திலகத்தின் மிக சிறந்த ரசிகர் திரு வாசு அவர்களும்,திரு கார்த்திக் அவர்களும் திரு எம்ஜீயார் அவர்களின் பாடலை பதிவு இடவில்லையா ? .மதுர கானம் பிரச்சனை இந்த திரியில் அலசப்பட கூடிய பிரச்சனை அல்ல.அதை நாம் அங்கு பேசி கொள்ளலாம்
இறுதியாக சொல்கிறேன் ஆனால் உறுதியாக சொல்கிறேன்.யாரிடத்திலும் உரசலை ஆரம்பித்தவன் நான் அல்ல.கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் திரியில் இருப்பவன்.வேண்டுமானால் பரபரப்பாக பதிவுகள் போடாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக பதிவுகளை போட்டவன் என்று சொல்லலாம் யாரிடத்திலும் பகைமை பாராட்டியது இல்லை. அன்பு காட்டி நண்பர் ஆகத்தான் பழகி உள்ளேன். கிட்ட தட்ட 800 பக்கங்கள் உள்ள (இரண்டு பாகத்திலும் சேர்த்து ) மதுரகானத்தை எடுத்து பாருங்கள் . என் உடைய பதிவு யாரையாவது காய படுத்துகிறது என்று என் உள் உணர்வு சொன்னால் உடனே அதை பதிவிலோ அல்லது பர்சனல் மெசேஜ் மூலமாகவோ மன்னிப்பு கேட்க தயங்காதவன் .
நீங்கள் எனது பகைவர் அல்ல. நானும் பாதை மாறவில்லை.
நான் சினிமாவை நேசிப்பவன்.நடிகர் திலகத்தின் நல்ல ரசிகர். மற்ற நடிகர்களையும் அவர்களடித்தல் உள்ள நல்ல பல திறமைகளுக்காக நேசிப்பவன். 70 களில் வந்த மெல்லிசை மன்னர்,சங்கர் கணேஷ்,விஜய பாஸ்கர்,வீ குமார்,திரை இசை திலகம்,ஷ்யாம் போன்ற இசை அமைப்பாளர்களின் நல்ல பல பாடல்களை விரும்புவன்.அதே நேரத்தில் இளையராஜா,ரெஹ்மான் போன்ற திறமையாளர்களின் வருகையால் ஏற்பட்ட மாற்றத்தை வரவேற்றவன்,வரவேற்பவன்.
ஏற்கனவே உங்களிடம் சொல்லி இருக்கிறேன் என்று நினைவு பணதிற்க்காகவோ பொருளுக்காகவோ பதிவுகள் போடுபவன் நான் அல்ல .
ஒரு மலரும் நினைவுகளுக்காக தான் இங்கு பதிவுகள் போடுகிறேன். அது பிடிக்கவில்லை என்றால் விலகி கொண்டு திரியின் ஒரு பார்வையாளராக இருந்து விட்டு போகிறேன்.
பதிவு நீண்டு கொண்டே போகிறது .முடித்து கொள்கிறேன்
இது தன்னிலை விளக்கம் மட்டுமே .யாரையும் காயபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்ட ஒன்று அல்ல .