" எங்களை கனவு காண சொன்னீர்கள் !!! இப்பொழுது
காண்கிறேன் இது , கனவாக இருக்கக்கூடாதா என்று !!!!
சாதனைச்சரித்திரம்
சரிந்தது ..
மேகாலயாவில்
மேகத்தினில்
கலந்தார் கலாம் ...
எங்களைக் கனவு காணச் சொன்ன
கனவு நாயகனே...நீர்
காற்றினிலே கலந்ததென்ன?
விண்வெளியின்
நாயகனே...நீர்
விண்ணோடு கலந்ததென்ன?
ஏவுகணை மூலம்
எல்லா இடங்களையும்
கண்டவரே ...நீர்
எட்டா உயரம் சென்றதெங்கே்?
அக்னி யிலே
அகிலம் திரும்பச் செய்தவரே...
அக்னியிலே கலந்ததென்ன??
தமிழகத்தின் தலைமகனே ...
இந்தியாவின் கோமகனே...
தளர்வடையோம்
உம் பிள்ளைகள் நாங்கள் ...
மனதினில் மட்டுமல்ல...
மகவாயும் நீர் வருவாய் ...
மழலை மொழியும் நீர்
சொல்வாய் ...
உனக்காக காத்திருப்போம் ...
அப்பனே நீர் வருவாய் ....