Thanks for the information Vinod Sir.
Printable View
எம்ஜிஆரின் பிம்பம்
http://i64.tinypic.com/29b1rn8.jpg
இந்திய சினிமாவில் கடந்த 75 ஆண்டுகளில் பல் வேறு மொழிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான நடிகர்களை கண்ட ரசிகர்கள் குறிப்பிட்ட சில நடிகர்களை மட்டும் மறக்காமல் இன்னமும் அந்த நடிகர்களை நினைவு கூர்ந்து மகிழ்கிறார்கள் .அந்த வகையில் எம்ஜிஆர் மட்டும்தான் எல்லா துறைகளிலும் முதலிடம் வகிக்கிறார் .
எம்ஜிஆர் எப்போதுமே சமூக அக்கறையோடு தன்னுடைய படங்களில் நல்ல கருத்துக்களை மக்களுக்கு தந்து பல லட்சக்கணக்கான ரசிகர்களை நல் வழி படுத்தியுள்ளார் . உலகத்தில் எந்த ஒரு நடிகரும் செய்ய துணியாத புரட்சியை புரட்சி நடிகர் செய்து காட்டினார் .அதுதான் அவருடைய வெற்றியின் ரகசியம் .
எம்ஜிஆர் படங்களில் புதுமையான சண்டை காட்சிகள் , இனிமையான பாடல்கள் நிச்சயம் இருக்கும் .ரசிகர்கள் தங்களை மறந்து படம் பார்க்கும் அளவிற்கு எம்ஜிஆரின் பிம்பம் மிகவும் நேர்த்தியாக இருக்கும் . அவருடைய ஒப்பனை , உடை அலங்காரம் , நடன அசைவுகள் , வீரமான தமிழரின் பாரம்பரிய காளை அடக்குதல் , மல்யுத்தம் , குத்து சண்டை , வாள் வீச்சு , கம்பு சண்டை மற்றும் பல புதுமையான சண்டை காட்சிகள் எம்ஜிஆர் ரசிகர்களை மட்டுமன்றி மக்களையும் கவர்ந்து இழுத்து .
எம்ஜிஆர் நடிக்கும் காட்சிகளில் ஒரு மின்னல் வேக சுறுசுறுப்பு காட்சிகள் இருக்கும் .பல காட்சிகளில் எம்ஜிஆர் என்ற மனிதரின் பிம்பம் மட்டுமே படத்தில் சுழன்று கொண்டு வரும்என்பது உண்மை .
எம்ஜிஆரின் வசீகர தோற்றம் - கட்டுக்கோப்பான உடற்கட்டு - புன்சிரிப்பு - அளவான வசனங்கள் - நேர்மறை சிந்தனை தூண்டும் காட்சிகள் - இதுதான் எம்ஜிஆரை இமயத்தின் உச்சிக்கே அழைத்து சென்றது .1947-1977
முப்பது ஆண்டுகளில் எம்ஜிஆர் 115 படங்களில் கதாநாயகனாக நடித்து முடி சூடா மன்னனாக இந்திய திரை உலக வசூல் மன்னனாக என்றென்றும் முதலிடம் வகித்தார் .அது மட்டுமா
1977க்கு பிறகு அவருடைய பழைய படங்கள் தென்னாடெங்கும் ஆயிரக்கணக்கான திரை அரங்குகளில் பல படங்கள் வெளிவந்து வசூலை வாரி குவித்தது . 2016 இன்றும் வசூலை குவித்து கொண்டு வருகிறது .எம்ஜிஆர் மறைந்து 29 வது ஆண்டு நெருங்கும் நேரத்தில் எம்ஜிஆரின் சினிமா மற்றும் அரசியல் பிம்பம் இன்னமும் மக்கள் மனதில் குடி கொண்டிருப்பது அதிசயமே .
எம்ஜிஆர் என்ற தனி மனிதர் தன்னுடைய உழைப்பில் கிடைத்த வருமானத்தை தன்னை வாழ வைத்த தமிழ் நாட்டு மக்களுக்கும் , ரசிகர்களுக்கும் , கட்சிகார்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் ,வாரி வாரி வழங்கியதை பற்றி இந்த உலகமே நன்கு அறியும் .
எம்ஜிஆர் ஆட்சியில் அமர்ந்த பின்னர் தன்னுடைய அதிகாரத்தை உட் படுத்தி அவர் ஏழைகளுக்கு செய்த நன்மைகள் திட்டங்கள் சத்துணவு திட்டம் என்று மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தை உருவாக்கியதில் முதலிடம் வகிக்கிறார் .
எம்ஜிஆரின் புகழ் - பிம்பம் ..... இன்னும் எத்தனை நூறு ஆண்டுகள் கடந்தாலும் மக்கள் மனதில் பல தலை முறைகள் தாண்டி அழியா புகழுடன் நிலைத்து நிற்கும் என்பது உண்மை .
அருமையான விமர்சனம். தங்களின் கூற்று மாசற்ற உண்மை.
நண்பர் திரு. வினோத் அவர்களுக்கு நன்றி.