mottai adikka poraarnu solringala?
appo dhaadi engae.?
Printable View
ரஜினி குணமடைய வேண்டி கேரளாவைச் சேர்ந்த மோகினியாட்ட கலைஞர் ஹேமலதா குருவாயூர் கோயிலில் இன்று நடனமாடி பிரார்த்தனை செய்கிறார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் சிங்கபூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமடைய வேண்டி பல்வேறு ஆலயங்களில் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த புகழ் பெற்ற மோகினியாட்ட கலைஞரான ஹேமலதாவும் விசேஷ பிரார்த்தனை செய்யவிருக்கிறார்.
ரஜினி குணமடைய வேண்டி குருவாயூர் கோயிலில் இன்று ஒன்றரை மணி நேரம் கிருஷ்ணர் பாடல்களுக்கு அவர் நடனமாடி பிரார்த்தனை செய்கிறார். பிற்பகல் 2.45 மணிக்கு நடனம் தொடங்குகிறது. கடந்த ஆண்டில் திருச்சூரில் தொடர்ந்து 123 மணி நேரம் 15 நிமிடங்கள் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த இவர் ரஜினியின் தீவிர ரசிகை.
இது குறித்து ஹேமலதா கூறுகையில்,
ரஜினியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கு உடல் நலம் பாதித்ததை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். எனவே அவர் குணமடைய என்னால் ஆன ஒரு பிரார்த்தனை செய்கிறேன் என்றார்.
சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் இப்போது நலமாக இருக்கிறார் என்றும், விரைவில் நலமுடன் நாடு திரும்புவார் என்றும் அவரது அண்ணன் சத்தியநாராயணா தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் புதன்கிழமை நடைபெற்ற ரஜினி ரசிகரின் திருமணத்தில் சத்தியநாராயணா பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"சிறுநீரக கோளாறுக்கு சிகிச்சைப் பெற சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினி இப்போது நலமாக இருக்கிறார். நாங்கள் தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறோம். ரஜினி குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுகிறார். விரைவில் திரும்பி வந்துவிடுவார். ரசிகர்களுடன் பேசுவார்," என்றார்.
paramu... idpi edho oru post podradhu...
apram adhukku oru kaelvi kaetta... ipdi sammandhamae illaama joke'nu solli oru reply pannittu escape aaguradhu...
idha eppadhaan niruttha poreenga...