-
மக்கள் திலகம் நினைவு தினம் :
உலகத்தமிழர்கள் அஞ்சலி
ம க்கள் திலகம்' என புகழப்பட்ட, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 1917 ஜனவரி 17 ல் பிறந்தார். தமிழக முதல்வர் பதவியில் இருந்த போதே, உடல்நலக்குறைவால், 1987 டிச., 24 ல் மறைந்தார். அவரின் நினைவு தினம் இன்று. உலகமெங்கும் வாழும் அவரது ரசிகர்கள், தொண்டர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த பேரதிர்ச்சியான செய்தி வந்ததுமே டூவீலரில் ராமாவரம் தோட்டத்திற்குப்பறந்தேன். தோட்டத்தின் கேட்டிற்கு வெளியே ஆயிரக்கணக்காணோர் கண்ணீருடன் தலையில் அடித்துக்கொண்டே முண்டியடித்துக்கொண்டிருந்தனர். யாரையும் உள்ளே அனுமதிக்க வில்லை. வாசல் கேட்டில் எனக்குத்தெரிந்தவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். ஆனால், கூட்டத்தை சமாளித்துக்கொண்டு கேட் அருகே போகமுடியவில்லை. அப்படியே போனாலும் அந்த சூழ்நிலையில் எனக்காக கேட்டை திறக்கச்சொல்லி கேட்க முடியுமா?
நேரம் ஆக..ஆக கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. இதற்கு மேலும் நின்றுகொண்டிருந்தால் சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்தேன்.
புது டூவீலர்; வாங்கி ஒருவாரம்தான் ஆகியிருந்தது. ஸ்டாண்ட் போடக்கூட பொறுமையில்லை; அதை அப்படியே ஒரு ஓரமாய் சாய்த்தேன். பூட்டு போடக்கூட இல்லை. அந்த சிந்தனை எல்லாம் அப்போது இல்லை.
சுவர் ஏறிக்குதிச்சு உள்ளே போய்விட்டேன். நேரே மாடிக்கு ஓடினேன். அப்படி ஓடியும் அந்த முகத்தை பார்க்க முடியவில்லை. டாக்டர்களுடன் சேர்ந்து அவர் உடலை சரிபடுத்திக்கொண்டிருந்தார்கள்.
இமேஜ் என்ற பெயரின் மறு பெயராக மக்கள் திலகம் விளங்கினார். அந்த அளவிற்கு கடைசி வரையில் தனது இமேஜ் கெடாமல் பார்த்துக்கொண்டார்.
பெரும்பாலும் அவர் நாற்காலியில் உட்காரமாட்டார். ஸ்டூலில்தான் உட்காருவார். ‘’நாற்காலியில் உட்கார்ந்தால் சாய்ந்துகொண்டு உட்கார தோன்றும். அது சோம்பேறித்தனத்தை கொடுக்கும்’’ என்பார். அப்படிப்பட்டவரை படுக்க வைத்துவிட்டதே காலம் என்று நினைத்து மனம் கலங்கினேன்.
பர்ஸனாலிட்டியில் அவரை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முறை சேவிங் செய்து கொள்வார். அப்படிப்பட்டவரை அதே பர்சனாலிட்டியுடன் கொஞ்சமும் இமேஜ் கெடாமல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவரை அலங்கரித் துக்கொண்டிருந்தார்கள்.
‘தரணி கண்ட அந்த தனிப்பிறவி’ உடல் ராஜாஜி ஹாலுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக எடுத்து செல்ல ஏற்பாடு ஆகிக்கொண்டிருக்கிறது எனபதை அறிந்தவுடன் ராஜாஜி ஹாலுக்கு சென்று காத்திருந்தேன்.
அந்த தனிப்பிறவியின் உடல் வந்ததும் கொஞ்ச நேரம் அருகிலேயே இருந்து பார்த்தேன். ’’நான் மாமா என்று பாசமாக கூப்பிடுவேன்’’ என இசையமைப்பாளர் கங்கை அமரன் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார்.
பெண்களின் ஒப்பாரியும், ஆண்களின் கதறலும் மனசை என்னவோ செய்தது. அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் நகர்ந்தேன். பொதுமக்கள் கூடிக்கொண்டே இருந்தார்கள். ஒரு ஓரமாய் போய் தூணில் சாய்ந்துகொண்டு நின்றிருந்தேன்.
என் காமிரா அந்த தங்க முகத்தை எத்தனை ஆயிரம் முறை பதிவு செய்திருக்கும். ஆனால் அப்போது என் மனக்கண்கள் மட்டுமே பதிவு செய்துகொண்டிருந்தன.
எத்தனையோ போட்டோகிராபர்கள், போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது என்னிடம் காமிரா இல்லை. எடுத்து வரவோ, எடுத்துவரச்சொல்லவோ நினைக்கவில்லை.
எத்தனை எத்தனை கோலத்தில் என் காமிராவுக்கு போஸ் கொடுத்த தனிப்பிறவியை அந்த கோலத்தில் படம் எடுக்க எனக்கு மனசில்லை’’ என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த 35 படங்களுக்கு போட்டோகிராபராக பணியாற்றிய எ.சங்கர்ராவ் கூறுகிறார்.
-
நினைத்ததை முடிக்கும் நெப்போலியத்தனம்
எதிரிகள் தன்னைச் சிலுவையில் அறைந்து இம்சித்த போதுகூட,”தாங்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள். பிதாவே அவர்களை மன்னியும்….” என்று ஏசுபிரான் சொன்னதாக விவிலியம் சொல்கிறது.
ஆனால் இந்த இருபதாம் நூற்றாண்டில் நடந்த நிஜம் ஒன்று. இன்னும் நம் கண்முன்னே நிழலாடிக்கொண்டிருக்கிறது
1967 ஜனவரி பன்னிரண்டாம் தேதி ஐந்து மணிவாக்கில் வேளச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு, தன் இராமவர தோட்ட இல்லத்திற்கு சிறிது நேரம் ஓய்வெடுக்க வருகிறார் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். சில நிமிடங்களில், அந்த இராமாவரம் தொட இல்லத்துக்குள்ளேயே புகுந்த எம்.ஆர். இராதா அவர்கள், நடுஹாலில் வைத்து வள்ளலைத் துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார். தானும் சுட்டுக்கொள்கிறார். கழுத்தில் குண்டு பாய்ந்ததால் இரத்தம்பீறிட்டு வருகிறது. வள்ளல் அதைக் கையால் அழுத்திப் பிடித்துக்கொண்டு, எம்.ஆர். இராதாவைத் தாக்க முயன்ற தன் விசவாசிகளிடம், “இராதா அண்ணனை ஒன்றும் செய்துவிடாதீர்கள். அவரைப் பத்திரமாக வெளியில் கொண்டுபோய்விட்டு விடுங்கள்…” என்று ஆணையிடுகிறார்.
வள்ளல் தன் விழிப்புருவம் அசைத்து, ‘என் வீட்டிற்குள்ளேயே புகுந்து, என்னையே கொலை செய்யத் துணிந்து விட்டான். அவனை வெட்டி வீழ்த்துங்கள்!’ என்று சொல்லும் சராசரி மனிதனைப் போல் நடந்துகொள்ளவில்லை.
அந்த நேரத்தில்கூட தன்னைத் கொல்ல வந்த கொலையாளியைக சர்வ்வல்லமையும், சகல செல்வாக்கும் படைத்த செம்மல், ‘ராதா அண்ணன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் என்றால், இந்த இதிகாசத் தலைவனை ஏசுவின் நிழல் என்று சொல்வதா? நிஜம் என்று சொல்வதா? “த்த்தா நமர்”- த்த்தா அவன் நம்முடையவன்… என்று தன்னை கொல்லும் பொருட்டு தன்மீது கத்தி எறிந்த சிவனடியார் வேடத்தில் வந்த மூத்தநாதனை, அவன் உயிருக்கு ஆபத்து ஏற்படா வண்ணன், அவனை ஊருக்கு வெளியே கொண்டு போய் பத்திரமாக விட்டுவா என்று தத்தனை ஏவிய, மெய்ப் பொருள் நாயனார் மறு உருவமன்றோ மக்கட் திலகம்.
வள்ளல் மானுடப் பிறவிதான் என்பதற்கு அவருடைய இறப்பு ஒன்றுதான் ஆதாரமாகிப் போய்விட்டது.
-
MGR remembered- THE HINDU
Garlanding of the statue marked the death anniversary of former Chief Minister and All India Anna Dravida Munnetra Kazhagam founder, M.G. Ramachandran, here on Monday.
The AIADMK cadres, led by party district presidium chairman Duraipandian, garlanded the statue at K.K. Nagar. Among them were corporation councillors. The cadres paid floral tributes to the portrait of the matinee idol of yesteryears at several places in the city.
Public address system belted out songs from MGR-starrers at various places.
-
A diehard MGR fan, who left his family 50 years ago due to his love for the hero, had a teary reunion with his kith and kin on Monday, the 25th death anniversary of the screen legend.
Mani (73), a resident of K R Toppur, Salem District, never missed a chance to watch MGR movies in his young days. A carpenter, he frequently bunked work to watch movies of his matinee idol at the local theatre, much to the ire of his father, Kuppusamy.
http://i50.tinypic.com/2lc71a8.jpg
A reprimand from his father against the hero-worship angered Mani and he ran away to Chennai in 1962. In the capital, he managed to find employment in Kollywood as a set assistant and worked in over 150 movies.
Though he found a place in the tinsel town, his heart wept for his dear ones back home. He sent letters to his family, but the habit gradually died after the replies were not encouraging.
At the time of partition of family property, some of his relatives tried to grab his share, taking advantage of his absence. This prompted his five brothers and three sisters to track him down using clues in the old letters.
Mani visited his house on Monday, embraced his mother Nagammal and shared his joy with relatives. “My father beat me up for watching MGR movies. However, I feel fortunate to have worked for his movie Maduraiyai Meeta Sundarapandiyan,” Mani recalled, with a sparkle in his eye.
-
DECCAN CHORONICLE
MGR magic alive and ‘ticking’
Chennai: A woman placed her ear to his marble tomb to check if his fabled wristwatch was still ticking; a middle-aged man did the same while his son folded his hands in prayer; another woman sobbed silently telling the superman lying under the marble he should have lived for ever for the sake of the poor, while a young man helped his little son through the crowd to drop flowers. These people and the many others who converged at the MGR memorial at the Marina were proof that the magic of MGR remains even today, the 25th anniversary of his death.
Ardent fan of the late matinee idol, Vijaya, 64, came all the way from Tiruvallur to pay obeisance to her leader. “MGR was a hero both in reel and real life. He was down to earth and always listened to people. My two daughters studied in government schools and never starved because of his noon-meal scheme,” Vijaya recounted with tears.
She put her ear to the samadhi to see if she could catch the sound of the famous MGR watch ticking, then went around thrice with folded hands and took some flower petals back home to mark her visit to the beachside resting place of the man she still adored.
Middle-aged businessman Ramasubbu drove with entire family from his farmhouse near Vellore.
“I brought my grandson too this year. He already knows a lot about MGR. His father has told him how generous and pro-poor Puratchi Thala*ivar had been”, he said. His son added that while MGR was handsome, his successor Jayalalithaa was “both beautiful and bold as she did not flinch from challenging the Centre”.
-
Floral tributes were paid to former Tamil Nadu Chief Minister and the founder of AIADMK M G Ramachandran on the occasion of his 25th death anniversary by Chief Minister N Rangasamy, his cabinet, Speaker V Sababathi and legislators here on Monday at the party headquarters and LB Shasthri Road.
http://i47.tinypic.com/51c7l4.jpg
AIADMK cadre, led by State Secretary and MLA A Anbazhagan, took out a silent procession and garlanded the statue. The CM, his cabinet, Speaker, DMK and AIADMK leafers garlanded the statue of Periyar E V K Ramasamy, whose death anniversary was observed.
-
25–வது நினைவுநாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை
-A+A
பதிவு செய்த நாள் : Dec 25 | 03:35 am
திருவண்ணாமலை,
எம்.ஜி.ஆர். நினைவு நாளை முன்னிட்டு திரு வண்ணாமலை மாவட் டத்தில் நேற்று அவரு டைய சிலை, உருவப் படத் திற்கு மாலை அணி வித்து மரியாதை செலுத் தப்பட்டது.
செய்யாறு
செய்யாறு டவுனில் சட்ட மன்ற உறுப்பினர் அலு வலகம் முன்பு எம்.ஜி.ஆர் உருவப் படத்திற்கு மாவட்ட செயலா ளரும், தகவல் தொழில்நுட் பத்துறை அமைச்சருமான முக்கூர் என்.சுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்யாறு நகர அ.தி.மு.க சார்பில் எம்.ஜி. ஆரின் நினைவு தினத்தை யொட்டி ஆரணி கூட்ரோட் டில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு மாலை அணி வித்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநில பொதுக் குழு உறுப்பினர் எஸ்.ரவிச் சந்திரன், நகர செயலாளர் சி.கங்காதரன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி ஏ.அரு ணகிரி, தொகுதி துணைச் செயலாளர் பி.லோகநாதன், ஒன்றிய மாணவரணி செய லாளர் எம்.மகேந்திரன், ஒன்றிய அவைத்தலைவர் அரங்கநாதன்ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருவண்ணாமலை கடலைக்கடை மூலையில் அலங்கரித்து வைக்கப்பட் டிருந்த எம்.ஜி.ஆர். உருவப் படத்திற்கு மாவட்ட செய லாளரும், நராட்சி தலைவ ருமான என்.பாலச்சந்தர் தலைமையில் மாலை அணி விக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகர செயலா ளர் வி.கனகராஜ், மாவட்ட அவைத்தலைவர் வி.பவன் குமார், பேரவை செயலாளர் கே.ராஜன், இணைசெயலா ளர் என்.பாண்டு, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எம்.எஸ்.நைனாக்கண்ணு, பேரவை தலைவர் இளவழ கன், நகர துணை செயலாளர் அரசப்பன், மாவட்ட துணை செயலாளர் ஏ.பி.குப்புசாமி, ஒன்றிய செயலாளர் ஏ.கே. குமாரசாமி, ராஜா, நகராட்சு உறுப்பினர்கள் போர்மன் னன் ராஜா, இளஞ்செழியன், ஜெ.செல்வம், பர்குணகுமார், முருகன் மற்றும் ஆர்.சி.ராஜாங் கம் உள்பட பலர் கலந்து கொண் டனர்.
ஆரணி
ஆரணி தொகுதி அ.தி.மு.க. சார்பில் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் அ.கோவிந்தராசன் தலைமை யில் அண்ணாசிலையில் இருந்து ஊர்வலமாக சென்று பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் பையூர் ஏ.சந்தானம், ஆரணி நகர மன்ற தலைவர் க.ஆனந்த குமாரி கருணாகரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செய லாளர் சேவூர் எஸ்.ராமச் சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., ஜெமினி கே.ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலா ளர்கள் டி.கருணாகரன், ரமணிநீலமேகம், ஆரணி ஒன்றிய செயலாளர் பி.ஆர்.ஜி.சேகர், நகர செயலாளர் அசோக்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் கே.ராஜமாணிக் கம், மாவட்ட பொருளாளர் சுபாஷ்சந்திரபோஸ், மாவட்ட கவுன்சிலர் மாமண்டூர் பி.சுப்பிரமணி மற்றும் நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.
இதே போல் தே.மு.தி.க. சார்பில் நகர செயலாளர் ஆர்.தங்கராஜ் தலைமையில் மாவட்ட செயலாளர் என்.கார்த்திகேயன் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத் தினார். உடன் மாவட்ட மாணவரணி செயலாளர் வாசுதேவன், மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் மோகன், தலைமை கழக பேச்சாளர் ஆறுமுகபாண்டியன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.
புதியநீதிக்கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.ஜெய்குமார் தலைமையில் மண்டல செயலாளர் ஏ.சி.பாபு எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்தார். உடன் நகர செயலாளர் ஜி.ஏ.கணே சன், மாவட்ட இளைஞரணி செயலாளர் எம்.ஆர்.தினேஷ் பாபு, நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆரணி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சேவூர் ஊராட்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலை மையில் ஒன்றிய செயலாளர் பி.ஆர்.ஜி.சேகர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித் தார். உடன் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வந்தவாசி
வந்தவாசியில் எம்.எல்.ஏ. அலுவகம், பஸ்நிலையம், பஜார், அரசு மருத்துவமனை எதிரில், 5 முலை சாலை சந் திப்பு ஆகிய இடங்களில் எம்.ஜி.ஆர். திருஉருவ படத் திற்கு மாலை அணிவிக்கப் பட்டது. நிகழ்ச்சிகளில் வே.குணசீலன் எம்.எல்.ஏ., மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் ஜெ.பாலு, மாவட்ட கவுன்சிலர் கே.பாஸ்கர் ரெட்டியார், ஒன்றிய செய லாளர் அர்ஜுனன், ஒன்றிய குழு உறுப்பினர் லோகேஷ் வரன், நகர செயலாளர் பாஷா, நகர பேரவை செயலாளர் மேகநாதன், நகர துணை செய லாளர் கிறிஸ்டி, சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் விஜயன் உள்பட பலரும் கலந்து கொண் டனர்.
வந்தவாசி தேரடியில் நடந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் லதாகுமார் தலை மையில் எம்.ஜி.ஆர்.உருவ படத்திற்கு மாலை அணிவிக் கப்பட்டது, ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளை ஞர் அணி செயலாளர் ராஜேஷ்கண் ணன், முன்னாள் எம்.எல்.ஏ. முனுசாமி, முன்னாள் நகர செயலாளர் கள் ரத்தினசாமி, கமாலுதின், ஒன்றிய துணை செயலாளர் சேகர் உள்பட பலரும் கலந்து கொண்ட னர்.
செங்கம்
செங்கம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் ஆர்.மதியழகன் தலைமை யில், ஒன்றியக்குழு தலைவர் எம்.கணேசன் முன்னிலையில் போளூர் ரோடு சந்திப்பில் இருந்து ஊர்வலமாக சென்று துக்காப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் தினர். ஒன்றியக்குழு உறுப்பி னர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அ.தி.மு.க. அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண் டனர்.
போளூர்
போளூர் ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலா ளரும், ஒன்றியக்குழு தலைவ ருமான ஏ.ராஜன் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர்.படத் திற்கு மாலை அணிவித்தார். நகர அவைத்தலைவர் ஏழு மலை, நகர செயலாளர் பாண்டுரங்கன், இணை செயலாளர் சாந்தி, துணை செயலாளர் காவேரி, எம்.ஜி. ஆர்.மன்ற இணை செயலாளர் ஜல்லிக்குமார், ஒன்றிய கவுன் சிலர்கள் கீதா கணேஷ், பொன்னம்பலம், மகாலிங்கம், ஒன்றிய விவசாய அணி அவைத்தலைவர் பழனி நாதன் மற்றும் கலந்து கொண் டனர்.
போளூர் பேரூராட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு பேரூராட்சி துணைத்தலைவர் ஏ.செல்வன் மாலை அணிவித்தார். கவுன் சிலர்கள் மதன்ஜெயின், ஏழுமலை, சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாம் பட்டு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகரன் தலைமையில் எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவிக் கப்பட்டது. விளாங்குப்பத்தில் மாவட்ட பிரதிநிதி பொன்னம் பலம் தலைமையிலும், ஆத்து வாம்பாடியில் ஒன்றிய கவுன் சிலர் மகாலிங்கம் தலைமை யிலும் மாலை அணிவிக்கப் பட்டது.
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அடுத்த கொங்கராம்பட்டு கிராமத்தில் கண்ணமங்கலம் நகர செய லாளர் எம்.பாண்டியன், எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார். ஊராட்சி செயலாளர் சத்திய மூர்த்தி தலைமை தாங்கினார். வக்கீல் சரவணன் முன்னிலை வகித்தார்.
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் பத்மாவதி சின்னக்குழந்தை லைமையில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. முன் னாள் எம்.எல்.ஏ. அரிக்குமார், நகர செயலாளர் ராதாகிருஷ் ணன், போளூர் தொகுதி செயலாளர் சி.எம்.முருகன், ஒன்றிய துணை செயலாளர் மணிவண்ணன், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர்கள் சம்பத், ஏழுமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
-
COURTESY - KAMALAHAASAN -FACE BOOK
http://i46.tinypic.com/500bw9.jpg
-
-
குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்து வரும் இத்திரியை முன்னின்று நடத்திச் செல்லும் வினோத் மற்றும் நண்பர்களுக்கு பாராட்டுக்கள். புதிய ஆண்டில் தாங்களெல்லாம் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ உளமார வாழ்த்துகிறேன்.
தங்கள் அனைவருக்காக முப்பரிமாண வடிவில் எம்.ஜி.ஆர். படம் போட்ட நாட்காட்டி. இதை தாங்கள் அப்படியே அச்சடித்து வீட்டில் மாட்டிக் கொள்ளலாம். பார்ப்பத்தற்கு 3டி கண்ணாடி தேவைப்படும்.
http://i1146.photobucket.com/albums/.../ap3dcalfw.jpg
3டி வேண்டாம் என்போருக்கு சாதாரண நாட்காட்டி
http://i1146.photobucket.com/albums/...3d/apcalfw.jpg