-
Tamil cinema varalaru - part-1
highlight about mgr
தமிழ்த் திரை உலகில் முடிசூடா மன்னராக விளங்கிய எம்.கே.தியாகராஜ பாகவதரும், நகைச்சுவை மன்னராகத் திகழ்ந்த என்.எஸ்.கிருஷ்ணனும் புகழின் உச்சியில் இருந்தபோது லட்சுமி காந்தன் கொலை வழக்கில் சிக்கி ஆயுள் தண்டனை பெற்றனர்; கிட்டப்பா–கே.பி.சுந்தராம்பாள் காதல் திருமணம், 28 வயதில் கிட்டப்பா இறந்ததால் சுந்தராம்பாள் துறவுக்கோலம்; பாகவதருக்கு அடுத்த இடத்தை பெற்றிருந்த பி.யு.சின்னப்பா யாரும் எதிர்பாராதவகையில் ரத்த வாந்தி எடுத்து 35 வயதில் மரணம் அடைந்தார்; ரூ.2 லட்சம் செலவில் ஏவி.எம். தயாரித்த ‘ஸ்ரீ வள்ளி’ ரூ.20 லட்சம் லாபம் சம்பாதித்துக் கொடுத்தது; அந்த காலத்து பிரமாண்ட தயாரிப்பான ‘சந்திரலேகா’வைத் தயாரிக்கும்போது எஸ்.எஸ்.வாசன் சந்தித்த சோதனைகள்; சிறு வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர். ‘ராஜகுமாரி’ மூலம் கதாநாயகன் ஆகி ‘வசூல் சக்கரவர்த்தி’யான வரலாறு; ‘
-
பிரபல பாடாலசிரியர் முத்து கூத்தன் இயற்றிய பாடல் அரசகட்டளையில் இடம் பெற்ற ''ஆடி வா ..ஆடி வா '' பாடல்
இசைத்திலகம் கே.வி .மகாதேவனின் இசையில் பாடகர் திலகம் குரலில் மக்கள் திலகத்தின் நடிப்பில் புதுமையான
முறையில் படமாக்கப்பட்ட பாடல் .
புரட்சி சிந்தனைகள் தூண்டும் எழுச்சி நடனக்காரி சரோஜாதேவி மேடையில் ஆட தடைபோட்ட நேரத்தில்
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை
என்று மக்கள் திலகம் கம்பீர தோற்றத்தில் பாடும் காட்சியில் வீரத்தின் அடையாளமாக தோன்றி அருமையாக
நடித்திருப்பார் . பாடல் நடுவே வீரர்களுடன் கத்தி சண்டை போட்டு கொண்டே பாடியும் நடனமாடியும் அதே நேரத்தில் சரோஜாதேவியின் நடனத்துடன் பாடல் காட்சி விறுவிறுப்பாக அமைந்திருந்தது .
மயிலாட வான்கோழி தடை செய்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ
முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ
இந்த பாடல் வரிகள் மக்கள் திலகத்தின் நடிப்பை - அரசியல் வெற்றிகளை குறை கூறியவர்களுக்கு பதில்
கூறுவது போல் காட்சி அமைந்தது .
-
மக்கள் திலகத்தின் படங்களில்ஒன்றுக்கு மேற்பட்ட வில்லன்கள் நடித்திருந்தாலும் கீழ் கண்ட மூன்று
படங்களில் 4 வில்லன்கள் நடிகர்கள் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது .
நான் ஆணையிட்டால் - நம்பியார் - அசோகன் - மனோகர் - ஒ.ஏ .கே .தேவர்
பறக்கும் பாவை நம்பியார் - அசோகன் - மனோகர் - ஒ.ஏ .கே .தேவர்
அரசகட்டளை நம்பியார் - அசோகன் - மனோகர் - பி.எஸ்.வீரப்பா
3 படங்களிலும் இந்த 4 நடிகர்களின் நடிப்பு படத்தின் விறுவிறுப்புக்கு கூடுதல் பலம் .ரசிகர்களுக்கு உற்சாகம்
தந்த படங்கள் . இன்று பார்த்தாலும் இந்த படங்கள் மனதிற்கு முழு நிறைவை தருகின்றன .
-
-
-
-
-
-
-