http://www.youtube.com/watch?v=w1IRq...ature=youtu.be
Printable View
MAKKAL THILAGAM IN SUPER ACTION
http://youtu.be/zWrGsG_4pxY?list=UUZ...QIJ_q7Ap2gq-vw
MAKKAL THILAGAM IN ACTION.
http://youtu.be/lcbGnAvLcSA?list=UUZ...QIJ_q7Ap2gq-vw
vinodh sir pls post many action scenes of thalaivar after 1970's
BANGALORE MAKKAL THILAGAM FANS... ADIMAIPEN- 2011 NATARAJ THEATER.
http://youtu.be/0Zyvm8OL800?list=UUZ...QIJ_q7Ap2gq-vw
what a style
http://i59.tinypic.com/1621nc4.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
திராவிட இயக்க நடிகர் என்று அறியப்பட்டாலும் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை அவருக்கு திமுக தான் குறிப்பாக அண்ணா தான் பிரதானமாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு படத்திலும் அறிஞர் அண்ணா .
அதே போல் வசனங்களின் மூலமாகவோ அல்லது காட்சிகள் வடிவிலோ கடவுள்களை மட்டம் தட்டி காட்சிகள் அமைத்ததில்லை எம்.ஜி.ஆர். மேலும், அவர் நாத்திகவாதத்தையும் மிகவும் நாசூக்காக பட்டும்படாமலும் தான் சினிமாவில் காண்பித்துக் கொள்வார். (சாம்பிள் உதாரணம்: ' ஒளிவிளக்கு ' படத்தில் செளகார் ஜானகிக்கு முருகன் சிலை.
இந்துசமய சடங்கு சம்பிரதாயங்களையும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரையும் கிண்டலடித்தும் இல்லை.
அதே போல், நாட்டின் சுதந்திரத்துக்காக தியாகங்கள் செய்த தலைவர்கள் மீதான பக்தியும் தேசப்பற்றும் வெகுஜனங்கள் மனதில் அழிக்க முடியாதக் கல்வெட்டாக பதிந்திருக்கும் நிதர்சனத்தைப் புரிந்து வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். ஒருகட்டத்தில், மற்ற நடிகர்களிடமிருந்து வேறுபட்டு தேசிய முகத்தையும் சினிமாவில் காட்டத் துணிந்தார் எம்.ஜி.ஆர். தான் சார்ந்திருந்த இயக்கப் பிரச்சாரத்தின் ஊடே தேசிய உணர்வையும் கெட்டிக்காரத்தனமாக இழைத்து திரையில் ஓடவிட்டார்.
இதற்கு உதாரணமாக, நாடோடி (1966) படத்தில் இடம் பெறும்
'' நாடு அதை நாடு - அதை நாடாவிட்டால் ஏது வீடு ?
பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு.
.......................................
.....................................
பாலைவனம் என்ற போதும் நம்நாடு
பாறை மலைக் கூட நம் எல்லைக் கோடு
ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம் "
-என்று தேசப் பற்றை ஊட்டி பாடிய இந்த பாடலில் " வீரர் சமுதாயமே எங்கள் கூட்டம் " என்ற வரி வரும் போது தனது முகத்தை ' டைட் குளோசப் 'பில் காண்பிக்க வைத்து இந்த வரி தான் சார்ந்துள்ள திமுகவின் தொண்டர்களை உயர்த்துவதாக அர்த்தம் கொள்ள வைத்து குஷிப்படுத்தினார் எம்.ஜி.ஆர்.
---------
இதே இணைப்பை ' இதயவீணை' படத்தில் வரும் 'காஷ்மீர் பியூட்டி·புல் காஷ்மீர்' பாடலிலும் காண்பித்தார். அப்பாடலில்,
" என் தாய் திருநாட்டுக்கு வாசலிது
என்னாட்டவருக்கும் கலை கோவிலிது.
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப் போல்
நேருவின் புகழ் சொல்லும் பூமியிது "
- என்றவர், இதே பாடலில்
" யாரும் வந்து சொந்தம் கொள்ளக் கூடுமோ ?
வீரம் மானம் நம்மை விட்டுப் போகுமோ? "
என்று காஷ்மீர் பிரச்னையையும் லேசாக தொட்டுப் போவார் எம்.ஜி.ஆர்.
-----------
அடிப்படையில் மகாத்மா காந்தியின் தீவிர பக்தரான எம்.ஜி.ஆர், தனது பக்தியை வெளிப்படுத்தவும் தயங்கிடவில்லை. எப்படி தனது ஒவ்வொரு படத்திலும் அறிஞர்அண்ணாவின் படம் அல்லது சிலை இடம் பெற்று வந்ததோ அதற்கிணையாக காந்தியும் அங்கம் வகித்து வந்தார்.
'பணம் படைத்தவன்' (1965) படத்தில் வரும் " கண் போன போக்கிலே" பாடலில் " மனிதன் போன பாதையை மறந்து போகலாமா " என்ற வரிகள் வரும் போது காந்தி தடியூன்றி நடந்து போகும் ஓவியப்படத்தை குளோசபில் காண்பிப்பார்
எம்.ஜி.ஆர்.
இதே படத்தில் " எனக்கொரு மகன் பிறப்பான்.." பாடலில்
" சாந்தி வழியென்று காந்தி வழிச் சென்று
கருணைத் தேன் கொண்டு தருவான் "
- என்று ஆசைப்பட்டார்.
-----------
' எங்க வீட்டுப் பிள்ளை'யில் (1965) " நான் ஆணையிட்டால்..." பாடலில்,
" முன்பு ஏசு வந்தார்; பின்பு காந்தி வந்தார் - இந்த
மானிடர் திருந்திடப் பிறந்தார் - இவர்
திருந்தவில்லை; மனம் வருந்தவில்லை.
அந்த மேலோர் சொன்னதை மறந்தார் "
- என்று வருத்தப்பட்டார்.
---------
" புத்தன் ஏசு காந்தி பிறந்தது
பூமியில் எதற்காக தோழா
ஏழை நமக்காக ''
- என்று 'சந்திரோதயம்' (1966) படத்தில் பாடலாக சொன்னார்.
---------
நம்நாடு (1969) படத்தில் வில்லன்களால் பலமாக அடிபட்ட நிலையில் காந்தியடிகள் சிலைக்கடியில் தான் எம்.ஜி.ஆர். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து கிடப்பார். அந்த கோலத்தைக் கண்டு நாயகி (ஜெயலலிதா) காந்தி சிலையை பார்த்து ஆதங்கத்தோடு பேசும் வசனம்:
" பார்த்தீங்களாய்யா.. உங்க வழியே உயர்ந்த வழி ; உன்னத வழின்னு சொல்லிகிட்டிருந்த இவரோட நிலையை ? அடிச்சி உங்க காலடியிலேயே போட்டுட்டு போயிட்டாங்க "
அதே படத்தில் " வாங்கையா வாத்தியாரய்யா..." பாடலில்,
" தியாகிகளான தலைவர்களாலே
சுதந்திரமென்பதை அடைந்தோமே
ஒரு சிலர் மட்டும் அனுபவிக்காமல்
பலருக்கும் பயன் பெறச் செய்வோமே.."
- என பாடல் வரிகளின் போது காந்தி, நேரு ஆகியோரின் படத்துணுக்குகள் (கிளிப்பிங்ஸ்) காண்பிக்கப்படும்.
courtesy - net
திமுக ஆட்சி அமைந்ததும் எம்.ஜி.ஆரை, அமைச்சர் அந்தஸ்துக்குச் சமமான
சிறுசேமிப்புத் துறை தலைவர் ஆக்கினார் முதலமைச்சர் அண்ணா. எம்.ஜி.ஆரின் பிரச்சார தொனியும் திமுக அரசு அமைந்ததும் மாறியது. தாக்குதல் பாணி போய், திமுக அரசின், முதலமைச்சர் அண்ணாவின் சாதனைகளை அருமைப் பெருமைகளை மக்களிடம் கொண்டு செல்லும் பணியில் (பிரச்சாரத்தில்) ஈடுபட்டார்.
கணவன் என்ற படத்தில் (1968) ஒரு பாடல். "அடியாத்தி. யாருக்கு நீ பேத்தி..." என்று தொடங்கும். அதில்:
" அதிகாரம் செய்தவனோ ஆட்டத்தை முடித்தான்.
அன்பு வழி சென்றவனோ கோட்டையைப் பிடித்தான்.
இது உழைப்பவரின் பொற்காலம், உலக ஏட்டிலே
இதை உணராத பேர்களெல்லாம் குப்பை மேட்டிலே..."
-------------
" நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை "
..........................
..................................
இளையோர் கூட்டம் தலைமைத் தாங்கும்
பூமியே புதிய பூமி " (புதியபூமி- 1968)
இந்த புதியபூமி படத்தில் கதாநாயகன் எம்.ஜி.ஆர் பெயர் கதிரவன். (உதயசூரியனை நினைவுக்கு கொண்டு வாருங்கள்). வில்லன் நம்பியாரின் பெயர் காங்கேயன்.(காங்கேயம் என்பது காளைமாடுகளுக்கு பெயர் பெற்ற ஊர். காளைமாடு சின்னம் அப்போது காங்கிரஸ்
கட்சியின் தேர்தல் சின்னம்). ஆக கிளைமாக்ஸில் நாயகனிடம் வில்லன் தோற்கும்போது உதயசூரியனிடம் காளைமாடு தோற்பதாக அர்த்தமாகிறது. கூடவே இந்த டயலாக்குகள் :
" கதிரவனுக்கு தான் இப்போதும் எப்போதுமே வெற்றி."
" கதிரவன் போன்றோரால் தான் நாடே புதியபூமியாகும்"
---------------
" நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடி தானுங்க
.......................
.........................
படியரிசி கிடைக்கிற காலத்திலே - நாங்க
படியேறி பிச்சை கேட்கப் போவதில்லே.
குடிசையெல்லாம் வீடாகும் நேரத்திலே - நாங்க
தெருவோரம் குடியேறத் தேவையில்லே.
சர்க்காரு ஏழைப் பக்கமிருக்கையிலே - நாங்க
சட்டத்திட்டம் மீறியிங்கே நடப்பதில்லே.."
- ' ஒளிவிளக்கு ' (1968). அப்போதைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா கொண்டு வந்த ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி திட்டம் மற்றும் குடிசைகளை கட்டட வீடுகளாக மாற்றும்
திட்டம் ஆகியவற்றிற்கு தான் இப்படி பப்ளிசிட்டி.
----------------
" வாங்கைய்யா வாத்தியாரய்யா
........................................
......................................
அண்ணனின் தம்பி; உண்மையின் தோழன்
ஏழைக்குத் தலைவன் நீங்களய்யா
சமயம் வந்தது; தருமம் வென்றது
நல்லதை நினைத்தோம் நடந்ததையா!
.............................................
..............................................
பொய்யும் புரட்டும் துணையாய் கொண்டு
பிழைச்சவரெல்லாம் போனாங்க.
மூலைக்கு மூலை தூக்கியெறிஞ்சும்
தலை குனிவாக ஆனாங்க.
......................................
........................................
கடமைக் கண்ணியம் கட்டுப்பாடு
காலத்தினாலே அழியாது.
சூரியன் உதிச்சதுங்க - இங்கே
காரிருள் மறைஞ்சதுங்க
சரித்திரம் மாறுதுங்க -இனிமே
சரியாப் போகுமுங்க..." ( நம்நாடு - 1969)
இந்த 'நம்நாடு' படம் மாமூல் எம்.ஜி.ஆர். ·பார்முலா படமானாலும் இதில் முனிசிபல் தேர்தல் முக்கிய இடம் பிடித்திருக்கும். நடந்து முடிந்த 1967 சட்டமன்றப் பொதுத் தேர்தலின் உருவகமாக இந்த முனிசிபல் தேர்தல் சித்தரிக்கப்பட்டிருக்கும். அதாவது படத்தில் முனிசிபால் தலைவராக ஜெயிக்கும் எம்.ஜி.ஆர். = சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஜெயித்த அண்ணாதுரை. இந்த படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தின் பெயரும் 'துரை' என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் சில சுருக் வசனங்கள்:
" பசியை தீர்க்கறவங்களா பார்த்து ஓட்டு போடுங்க."
" யாருக்கு ஓட்டுப் போடணும்னு சமயம் வரும்போது அய்யாவே (எம்ஜிஆர்) உங்களுக்கெல்லாம் சொல்லுவாரு. "
" குழாய் தண்ணீ வசதி கேட்டா கவுன்சிலரு 'ஆகட்டும் பார்க்கலாம்'னு சொல்லிட்டு
போயிடறாரு "
coutresy - net
**************
Courtesy - thirumathi seethalakshmi- net
எம்,ஜி. ஆர் அவர்கள் ஓர் சினிமாக்காரர்தான். அவர் ஓர் நல்ல மனிதர். அரசியல் உலகில் காலில் வீழும் கலாச்சாரத்தைக் கிண்டல் செய்கின்றவள் நான். ஆனால் நானே என்னை மறந்து ஒருவரை வணங்கினேன். அது எம்.ஜி. ஆர் அவர்கள். பன்னாட்டுத் தொழிற்சங்கத்தில் மகளிர் நலக் குழுவிற்கு என்னை நியமித்திருந்தார்கள். இது ஓர் தொழில் சங்கம். அரசின் பரிந்துரையல்ல. ஒருவரின் சாதனைகளை வைத்து தேர்ந்தெடுப்பார்கள். ஆசியாக் கண்டத்திற்கும் பசிபிக் பகுதிக்கும் என்னைப் பொறுப்பாளராக்கி யிருந்தார்கள். இந்த செய்தியைக் கூறப் போயிருந்த பொழுது அவர் என்னை வாழ்த்தினார். அந்த முகமும் குரலும் என்னை அவரை வணங்க வைத்தது. தாய்க் குலத்தை மதிக்கும் அவர் குரலில் அன்று தாய்மைப் பரிவை உணர்ந்தேன். யாரையும் புகழ்ந்து எனக்கு இப்பொழுது எந்தக் காரியத்தையும் சாதிக்க வேண்டிய தில்லை. என் உணர்வுகளை எழுதுகின்றேன்
மனித நேயம் உள்ளவர்கள்தான் மனிதம் காப்பாற்றுகின்றார்கள்.
http://i57.tinypic.com/m8ifyb.jpg
THANKS TO MR.V.P.HARIDAS, CBE