http://i62.tinypic.com/2en249g.jpg
http://i57.tinypic.com/2jaf5me.jpg
Printable View
இனிய நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களே,
சன்லைப், முரசு, கே டி.வி., ஜெயா, ராஜ் , வசந்த் , பொதிகை
போன்ற எண்ணற்ற தொலைகாட்சிகளில் தொடர்ந்து பலமுறை ஒளிபரப்பு செய்யப்பட்ட புரட்சி நடிகர் /மக்கள் திலகம் அவர்களின் அசத்தலான நடிப்பில் உருவான
"குடியிருந்த கோயில் " அபார வசூல் சாதனை
6 நாட்களில் - இரு அரங்குகளில் ரூ.1,42,000/-
தகவலுக்கு நன்றி.
அவினாசி- சிந்தாமணி - அன்பே வா தகவலுக்கும் நன்றி.
குடியிருந்த கோயில் -கோவை நகரில் 5 நாட்களில் இரண்டு திரை அரங்கில் ரூ 1,42,000 வசூலாகியுள்ளது என்ற தகவலை பதிவிட்ட இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி .திரு சைலேஷ் அவர்களின் டைட்டில் நிழற் படங்கள் திருலோகநாதனின் கட்டுரை பதிவுகள் - அருமை .
திரு மணியன் அவர்கள் தயாரிப்பில் நம் மக்கள் திலகம் நடித்த படங்கள்
1. இதய வீணை - 1972
2. சிரித்து வாழ வேண்டும் - 1974
3. பல்லாண்டு வாழ்க - 1975
1. இதய வீணை 20-10-1972
மூன்று படங்களும் மிகவும் சிக்கலான சூழ் நிலையில் வந்து சாதனைகள் புரிந்தது . மக்கள் திலகத்தை திமுகவை விட்டு விலக்கிய 10 வது நாளில் இதய வீணை வந்தது .நாடெங்கும் மக்களின் ஆதரவு அலை .மக்கள் திலகத்தின் அரசியல் செல்வாக்கு உலக அரங்கிற்கு தெரிய வந்தது . அதே நேரத்தில் தமிழகத்தில் அடக்குமுறை , எதிர்ப்புகளையும் மீறி மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அனைவரின் முழு ஒத்துழைப்போடு இதய வீணை மாபெரும் வெற்றி பெற்றது .
1972ல் .இதய வீணை வந்த போது மக்கள் திலகம் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக புரட்சிதலைவர் என்ற பட்டதுடன் இந்திய திரை பட உயரிய விருதான ''பாரத்'' எம்ஜிஆர் என்ற தேசிய விருது பெற்ற பெருமையுடன் மக்கள் திலகம் எம்ஜிஆர் மாபெரும் புகழுடன் இருந்தார் என்பது ''இதய வீணை''க்கு கிடைத்த பெருமையாகும் .சென்னை - மதுரை திருச்சி நகரங்களில் 100 நாட்கள் ஓடியது .
2. சிரித்து வாழ வேண்டும் . 30 -11-1974
இயக்குனர் ஸ்ரீதரின் ''உரிமைக்குரல் '' 7.11.1974 அன்று வெளிவந்து மாபெரும் வெற்றி ஓட்டத்தில் இருந்த நேரத்தில் 23 நாட்கள் இடைவெளியில் மணியனின் ''சிரித்து வாழ வேண்டும் '' படம் வந்தது .பிரமாண்ட படைப்பாக இருந்தும்
இந்த படம் பெற வேண்டிய மிகப்பெரிய வெற்றி என்று சொல்லும் அளவிற்கு இல்லாமல் வெற்றி படமாக மட்டும்
அமைந்து விட்டது .மதுரை நியூ சினிமாவில் மட்டும் 100 நாட்கள் ஓடியது.
3. பல்லாண்டு வாழ்க . 31-10-1975
சத்யா மூவிஸ் ''இதயக்கனி'' வெற்றிகரமாக ஓடிய 11வது வாரத்தில் ''பல்லாண்டு வாழ்க '' திரைக்கு வந்தது .
இதயக்கனியின் பிரமாண்ட வெற்றி முன் பல்லாண்டு வாழ்க சற்று குறைவுதான் . இருந்தாலும் மணியன் தயாரித்த
படங்களில் அதிக இடங்களில் 100 நாட்கள் ஓடி வசூலில் சாதனைகள் புரிந்தது .
பல்லாண்டு வாழ்க - திரைக்கு வந்து 31.10.2014 அன்று 40 வது ஆண்டு துவக்க விழா . நண்பர்கள் அன்றைய தினம்
மக்கள் திலகத்தின் ;''பல்லாண்டு வாழ்க '' படத்தை பற்றியும் தங்களது பதிவுகளை அன்புடன் வழங்குவார்கள் .