MEENAVA NANBAN AND MANITHAN
http://www.youtube.com/watch?v=ugn-gCX_pvc
Printable View
MEENAVA NANBAN AND MANITHAN
http://www.youtube.com/watch?v=ugn-gCX_pvc
NAALAI NAMATHE AND PADAYAPPA
http://www.youtube.com/watch?v=Gxj8bGmx2ec
தமிழ் சினிமாவின் அவலநிலை .
தொழில்நுட்ப வளர்ச்சியில் அசூர முன்னேற்றம் கண்டுள்ள திரை உலகில் வியாபாரம் ஒன்றே குறிக்கோள் என்று தயாரிப்பளர்களும் , விநியோகஸ்தர்களும் , திரை அரங்கு உரிமையாளர்களும் , பத்திரிகை மற்றும் ஊடகங்கள்
அதிபர்களும் , விமர்சகர்களும் தங்களுடைய தொழில் தர்மத்தை மறந்து வெள்ளி -சனி - ஞாயிறு மூன்று நாட்கள்
வசூலை நம்பி பொய்யான விளம்பரங்கள் - மித மிஞ்சிய விமர்சனம் -கையூட்டு பணம் கொடுத்து ரசிகர்களையும் மக்களையும் ஏமாற்றுகின்ற அவல நிலை தற்போது வந்துள்ளது .நடிகரின் சம்பளம் கோடிகள் - தயாரிப்பு செலவு - பலகோடிகள் - விளம்பர செலவு- கோடிகள் .. .வியாபாரத்தில் கொட்டிய பணத்தை லாபத்துடன் மீட்க ஒரே நேரத்தில்
எல்லா திரை அரங்குகளை புக் செய்தல் - சமீபத்தில் புதுவையில் உள்ள எல்லா அரங்குகளும் ஒரே படத்தை திரை இட்டார்கள் . கொள்ளை லாபம் சம்பாதிக்க ?
ப்ளாக் விற்பனை மன்னர்கள் பல அரங்குகளில் முன்கூட்டியேடிக்கெட் வாங்கிவிட்டு வாங்கஆள் இல்லாமல் விழி பிதுங்கி நின்ற பரிதாபம் பார்க்க நேர்ந்தது .இன்றைய தமிழ் சினிமாவின் அவலநிலை எப்போது மாறுமோ ?
மிகச் சரியாகச் சொன்னீர்கள் வினோத் சார்.
இன்றைய தமிழ் சினிமாவின் போக்கு மிகவும் அபாயகரமான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஒரு தனி மனிதனின் ஆளுமையை நிலைநாட்ட ஒரு துறையே வரிந்து கட்டிக்கொண்டு நிற்கும் போக்கு மன வருத்தம் தருகிறது. படைப்பாளிகளுக்கு உரிமை மறுக்கப்படும் நிலைமை வெகு தூரத்தில் இல்லை.
அது மட்டுமல்ல. நேற்றைய தினம் சென்னையில் ஓரிரு திரையரங்குகளில் வாயிற் கதவுகள் மூடப்பட்டிருந்தன. இப்படி ஒரு காட்சியை அந்தத் திரையரங்குகளில் கண்ட நினைவில்லை. இதற்கு என்ன காரணம் என்பது எல்லாம் வல்ல அந்த ........ஈஸ்வரனுக்கே வெளிச்சம்.
இதை சரிசெய்யக்கூடிய வல்லமை படைத்தவர்கள் ரசிகர்கள் மட்டுமே.
http://s17.postimg.org/s8xyzrr8f/unnamed.jpg
FORWARDED BY MR.V.P.HARIDAS, COIMBATORE
Ithayakani movie video clip captured in Mahalakshmi theatre, the response of MGR fans.
http://mgrroop.blogspot.in/2014/12/r...ayakani-2.html
ஊழலுக்கு வக்காலத்து
மேற்குவங்க மாநிலத்தில் சாரதா சீட்டு நிதி நிறுவனம் மூலம் மோசடி நடத்தப்பட்டு மக்களின் பல கோடி ரூபாய் பணம் சுவாகா செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே சில அரசியல்வாதிகள் , எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஊழலில் தொடர்புடையதாக மாநிலத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த மதன் மித்ரா என்பவரும் சிபிஐயால் கைதாகியுள்ளார். ஊழலில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பது புதிதல்ல. அதற்காக, சிலர் வக்காலத்து வாங்குவதும் புதிதல்ல. ஆனாலும், அந்த அமைச்சருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாங்கும் வக்காலத்து ஆபத்தாக இருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் அதுவும் கைதானவர்கள் பதவி விலகுவது தார்மீக மரபு. ஆனால், ஊழலில் தொடர்புடையதாக கைதானாலும் அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்க முடியாது என்று மம்தா கூறுகிறார். இது எங்கு போய் முடியுமோ?
ஊழல் சமுதாயத்தில் எந்த அளவுக்கு புரையோடிப் போயிருக்கிறது பாருங்கள். ஊழலுக்கு என்றே ஒரு மாநில அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது என்றால் அது திரு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசுதான். 1976ல் ஜனவரி 31ம் தேதி அவரது அரசை திருமதி. இந்திரா காந்தி அம்மையார் டிஸ்மிஸ் செய்தார். விஞ்ஞானபூர்வ முறையில் ஊழல் புரிந்தவர் கருணாநிதி என்று அம்மையார் கூறினார்.
அப்போது, தேர்தல் பிரசாரத்தில் திரு.சிவாஜி கணேசன் அவர்கள், ‘திமுக அரசை நாயை அடித்து தூக்கிப் போட்டது போல போட்டுவிட்டார்கள்’ என்று கூறினார். அதற்கு பதிலளித்த கருணாநிதி அவர்கள், ‘‘நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்ததே நான்தான். எனக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்’’ என்று கடுமையாக தாக்கினார். இதை இங்கே பதிவு செய்வதற்காக வருந்துகிறேன். இருந்தாலும் கூறக் காரணம் உண்டு. ஒருவரை பிடிக்கவில்லை என்றால் கருணாநிதி எந்த அளவுக்கு மோசமாக விமர்சனம் செய்வார் என்பதற்குத்தான்.
பின்னர், நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் இந்திரா காந்தி அம்மையார் பிரதமர் பதவி இழந்து, தமிழகம் வந்தபோது மதுரையில் அவர் மீது கொலைவெறி தாக்குதலை திமுகவினர் நடத்தினர். ஆனால், மூன்றே ஆண்டுகளில் அரசியல் நிலைமைகள் மாறின. புரட்சித் தலைவரின் அரசை இந்திரா காந்தி அம்மையார் டிஸ்மிஸ் செய்தார். திமுகவோடு கூட்டணி என்ற தவறான முடிவெடுத்தார். அப்போது, தமிழன் தமிழனாக வாழ திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று முரசொலியில் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் விளம்பரம் கொடுத்தார். அவர் மீது தவறில்லை. காங்கிரஸ் மேலிடம் எடுத்த தவறான முடிவால் யாரை ஊழல்வாதி என்று சொன்னாரோ அதே கருணாநிதியின் ஊழலுக்கு வக்காலத்து வாங்க வேண்டிய நிலைமைக்கு அவர் ஆளானார். இந்திரா காந்தி அம்மையார் எடுத்த முடிவு தவறானது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டியது. கருணாநிதியின் சூழ்ச்சிகளை முறியடித்து புரட்சித் தலைவர் மீண்டும் முதல்வரானார்.
ஊழலுக்கு வக்காலத்து வாங்குவதை அரசியல் வரலாறு கண்டிருக்கிறது என்றாலும் மம்தாவின் வக்காலத்து ஆபத்தானது.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்