நன்றி, திரு.ரவிச்சந்திரன்
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Printable View
என் அப்பாவோட ஆபிஸில் இப்போ அவரை தேடி 85 வயது உள்ள பாட்டி வந்தாங்க அவரு இல்லமா வெளியே போயிட்டாருனு சொல்லிட்டேன் உடனே எங்கப்பாவோட டேபிளில் புரட்சிதலைவர் படம் இருக்கும் அந்த அம்மா அந்த படத்த ஒரு நிமிடம் கூர்ந்து கவனித்துவிட்டு புரட்சிதலைவரின் படத்தை தொட்டு வணஙகிட்டு போனத பார்க்கும் போது உண்மையிலே மனதில் எல்லையில்லா மகிழ்ச்சி தலைவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்திருப்பது இது போல வேறு எந்த தலைவராலுமே இந்த புகழை பெறுவது கடினம் என்று .
வாழ்க புரட்சிதலைவர்
courtesy fb
" கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள், தன் கொடைத்திறனால் மக்கள் மன்றத்தில் பெருமதிப்புப் பெற்றவர். பிறர் கண்ணீரைக் காணச் சகியாத உள்ளம், அவர் உள்ளம். இல்லையென வருவோருக்கு, இயன்ற மட்டும் தருவது அவர் பழக்கம். கைப்பணத்திலும் ஆயிரமோ, இரண்டாயிரமோ கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.
அந்த வரிசையிலே இப்பொழுது புரட்சி நடிகர் எம்ஜியார் இடம் பெறுகிறார். புயல் நிவாரண நிதிக்கு அவர் வாரி வழங்கிய தன்மையை நாடறியும். இப்பொழுது மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்கும், தெற்குத் திட்டங்களத்து ஆதிதிராவிடப் பள்ளிக்கும், சென்னை தியாகராயர் கல்லூரிக்கும் முறையே ரூ 1000, 2000, 2500 நன்கொடையாகத் தந்துள்ளார். அதன்றியும் அகில இந்தியப் பெண்கள் உணவு சங்கத்தின் சென்னைக் கிளைக்கும் ரூ. 500ம் தந்துள்ளார்.
வருமானம் அதிகரிக்கலாம்; புகழ் பெருகலாம். பெரிய மனிதர்கள் கூட்டுறவு ஏற்படலாம். ஆனாலும் நாராள மனது எல்லாருக்கும் வந்துவிடுவதில்லை. கையிலிருந்து பணம் கொடுப்பது என்றாலே, கண்களில் ரத்தம் கசியும் சிலருக்கு. வந்த பணத்தை, எப்படித் தன் குடும்பத்துக்குச் சொத்தாக்குவது என்றுதான் எல்லோருமே செய்யும் உபதேசமே, ‘பணத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ளப்பா’ என்பதுதான். பணம் கைக்கு வந்ததும் மடிக்கு மாறி, பெட்டிக்குள் பதுங்கப் பார்க்கிறது. ‘நாம் தொல்லைப்படும் போது, யார் நமக்குத் தருகிறார்கள்? நமக்கெதற்கு வள்ளன்மை!’ என்ற பேச்சுப் புறப்படுகிறது.
‘ஐயா பசி!’ என்று அலறுபவனைப் பார்த்து, ‘எல்லார்க்கும் அப்படித்தான்! போ! போ!’ என்று இரக்கமின்றிக் கூறத் தோன்றுகிறது. கைப்பணத்துக்கும், தன் பெண்டு பிள்ளைகளுக்குமே தொடர்பு ஏற்படுத்தி, மனம் கணக்கிடுகிறது. பெரும்பகுதி மனித மனம் இப்படி இருப்பதால்தான், ஈந்து சிவக்கும் இருகரம் படைத்தோரை வாயார வாழ்த்தத் தோன்றுகிறது.
கலைவாணர் என.எஸ்.கே, நடிப்பிசைப் புலவர் ராமசாமி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். முதலியோர் நடிகர்களில் வள்ளல்கள் ஆவார்கள்."
- கவியரசு கண்ணதாசன் , ( 25-10-1956 ,தென்றல் இதழில் )
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்
மக்கள் திலகம் எம்ஜிஆர் 1947ல் கதாநாயகனாக ராஜ குமாரியில் நடித்து 1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை 115
படங்களில் பல் வேறு கதைகளில் திறமை மிக்க நடிகராக , மக்கள் விரும்பிய கதாநாயகனாக ,சாகச வீரராக , கொள்கை வேந்தராக ,ஒரு இயக்கத்தின் முன்னணி தலைவராக , புதுமை விரும்பியாக , புரட்சி நடிகராக , என்றென்றும் வெற்றி வீரராக முப்பது ஆண்டு காலம் திரை உலக வசூல் சக்ரவர்த்தியாக வந்த மக்கள் திலகத்தின் சாதனைகள் பற்றி நாடே அறிந்த வரலாற்றை சலவை செய்தவர்கள் அறியாமல் உளறுவது வாடிக்கை .
[QUOTE=esvee;1213866]நல்ல நேரம் -10.3.1972
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் திரை உலக வெற்றிகளிலும் , அரசியல் ஆளுமைகளிலும் கிடைத்த மாபெரும் வெற்றியின் அடையாளம் 1972.
புரட்சி நடிகர் - புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்ற பெருமை கிடைத்தது -1972
பாரத் பட்டம் கிடைத்து விழா நடந்த ஆண்டு - 1972
எம்ஜிஆர் ரசிகர்கள் - எம்ஜிஆர் மன்றங்கள் விஸ்வரூபம் எடுத்த ஆண்டு - 1972
எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் சக்தி - உலகம் அறிந்த ஆண்டு -1972
சினிமாவிலும் - அரசியலிலும் எம்ஜிஆர் ஹீரோ என்பதை நிரூபித்த ஆண்டு - 1972
வெற்றி என்ற தாரக மந்திரத்தோடு சங்கே முழங்கு
எங்கும் எதிலும் என்றும் எம்ஜிஆர் நல்ல நேரம்
ரசிகர்களை திருப்தி செய்த ராமன் தேடிய சீதை.
வாழ்வியல் தத்துவம் உணர்த்திய நான் ஏன் பிறந்தேன்
மக்களுக்காக வாழ்ந்த அன்னமிட்டகை
கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் வாழும் இதய வீணை.
மக்கள் திலகத்தின் மகத்தான பெருமைகள் உணர்த்திய ஆண்டு -1972
மக்கள் திலகம் எம்ஜிஆர் வரலாற்றில் என்றுமே ''நல்ல நேரம் ''
vinod sir
1972ல் நல்ல நேரம் வெற்றியை பற்றி அன்றைய தினத்தில் சிலர் பல் வேறு காரணங்களை கூறி விம்மினார்கள் .ஏன் என்றால்
சென்னை நகரில் 4 அரங்கில் 100 நாட்கள் , பி , சி , இடங்களில் திரை இட்ட இடங்களில் எல்லாம் வசூலில் சாதனை , நல்ல நேரம் மறு வெளியீடுகளில் புரிந்த சாதனை கணக்கில் அடங்காது .
திரு.ஆர்.கே.எஸ்.
‘கதாநாயகனாக’ முதலில் நடித்தது ராஜகுமாரியில்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கோபால்,
நீங்கள் பெரியார் கருத்தை ஒத்த பாடல் என்று கூறியதற்காக, அதே போன்ற பாடலை முதலில் நீங்கள் ஆய்வு செய்யுங்கள் என்று கூறினேன்.
‘இப்படித்தான் இருக்க வேணும்..’ பாடல் பெண்களை போகப் பொருளாகவோ, அடிமையாகவோ சித்தரிக்கும் பாடல் அல்ல. வயலில் உழைக்கும் விவசாயிக்குத் துணையாக அவன் மனைவி ‘காத்த பாத்து தூத்தி (நெல் மணியை) விடணும்..’ என்றும், வீட்டுக்குள் கட்டுப் பெட்டியாய் இருக்காமல் ‘நாலா வேலையும் நாமே பார்க்கணும்..’ என்று ஆங்கிலம் படித்தாலும் தலைக்கனம் இல்லாமல் இருந்து, ஏழைகளை தூற்றாமல் இருந்து (படத்தில் கே.ஆர்.விஜயா தூற்றுவார்) மகளிரையும் சம உரிமை கொடுத்து சமுதாயத்துக்கு உழைக்க அழைத்து அதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் புரட்சிகரமான பாடல்.
மகாத்மா காந்தி வக்கீலாகத்தான் இருந்தார் என்றாலும் அவர் உண்மைக்காகவே வாதாடியவர். கேஸ் கேஸ் கிடைத்தால் போதும் பணம் வந்தால் போதும் என்று பொய் வழக்குகளில் ஆஜரானதில்லை. தொழிலிலும் ஒரு தர்மத்தை காத்தார். எங்கள் தர்மதேவனும் அப்படித்தான். தொழிலிலும் ஒரு தர்மத்தை காத்தார். பாத்திரத்தின் தன்மையோடு மட்டும் நிற்காமல் நல்ல கருத்துக்களை அந்த பாத்திரத்தின் மூலம் சொன்னார்.
நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். பெரியாரின் சாதி ஒழிப்பு, தமிழனுக்கு அறிவை, மான உணர்வை ஊட்டியது ஆகிய தொண்டுகளை பிடிக்கும் என்றால், அவர் பிள்ளையாரை உடைத்ததையும் பிடிக்கும் என்று அர்த்தமல்ல. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கைப்படி பிள்ளையாரை உடைக்காதவர்கள் நாங்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
மக்களின் நல்ல நேரம் - மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிகரானார் .
மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்தார் ,
மக்கள் விரும்பிய நடிப்பை அள்ளி வழங்கினார்
மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கை என்ற ஒளிவிளக்கை ஏற்றினர்
மக்களின் துயர் துடைக்கும் வழிகளை கண்டறிந்தார் .
நாடோடி மன்னனில் தனது திட்டங்களை அறிவித்தார்
நாடே போற்றும் மன்னனாக 1977ல் பதவி ஏற்றார்
திரை வானில் நட்சத்திரமாக மின்னினார் . இன்றும் மின்னுகிறார் .
அரசியல் வானில் நம்பிக்கை நட்சத்திரம் . ஜொலித்தார் ...ஜொலிக்கிறார் .ஜொலிப்பார்.
ரசிகர்கள் - தொண்டர்கள் - மக்கள் என்று மூன்று தரப்பினரை தன்னகத்தே ஆட்கொண்ட ஒரே தலைவன் - நடிகன் மக்கள் திலகம் எம்ஜிஆர் - உலக எட்டாவது அதிசயம் எம்ஜிஆர் .
மக்கள் நேசித்த மாபெரும் நடிகரின் -தலைவரின் உன்னத வாழ்வு ஒரு நல்ல நேரம் .
38 ஆண்டுகள் எம்ஜிஆர் இல்லாத சினிமா - அவர் பாடல்கள் - அவரது திருமுகம் இல்லாத படங்களே இல்லை .
இதுவே எம்ஜிஆர் ரசிகர்களின் வெற்றி .
அரசியலில் எம்ஜிஆர் - இரட்டை இலை தொடரும் வெற்றிகள் - வெற்றி மேல் வெற்றி
கனவிலும் நினைத்து பார்க்க முடியுமா - மற்றவர்கள் ?
கனவு கண்டோம் - ஜெயித்தோம் .நாளை நமதே .