http://i68.tinypic.com/ekp1md.jpg
Printable View
மார்ச் மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் .
மார்ச் 3 .ஜோதி மலர் [அ ] தாசிப்பெண்
மார்ச் 5 .நாம்
மார்ச் 5 .நவரத்தினம்
மார்ச் 10 .நல்ல நேரம்
மார்ச் 13 .என்கடமை
மார்ச் 14 .அந்தமான் கைதி
மார்ச் 15 .குடியிருந்த கோயில்
மார்ச் 18 .நீதிக்கு தலைவணங்கு
மார்ச் 23 .திருடாதே
மார்ச் 27. பணம் படைத்தவன்
மார்ச் 28 .சதிலீலாவதி
மார்ச் 31.தக்ஷ் யஞ்சம்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த சமயம் ,காலை சிற்றுண்டி அருந்திவிட்டு ,வெளியே கிளம்ப தயாராகிறார் . அப்பொழுது அவரை அடிக்கடி சந்திக்கும் செல்வாக்கு உள்ள ஒருவர் தன் நண்பர் முருகேசன்(பெயர் உறுதியாக தெரியவில்லை) என்பவருடன் தலைவரை பார்க்க வந்துள்ளார் . அவரை பார்த்த மக்கள் திலகம் , முதலில் சாப்பிட சொல்கிறார் . பின் உதவி ஏதாவது செய்யனுமா என்று தலைவரே கேட்டுள்ளார் .
வந்தவர் சொன்னார் ,"அண்ணே இவர் பெயர் முருகேசன் ; தேனாம்பேட்டை சிக்னல் அருகே பீடா கடை நடத்திவருகிறார் . அதில் ஒரு சிக்கல் ,கடை சற்று ஆக்கிரமித்து தான் கட்டப்பட்டுள்ளது ,இதை காரணமாக வைத்துக்கொண்டு , இவருக்கு ஆகாத சிலர் அதிகாரிகளை வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் . இந்த கடையை நம்பி தான் இவரது குடும்பமும் உள்ளது . வேறுவழியில்லாமல் உங்களிடம் அழைத்துவந்தேன் . " என்றார் .
தலைவர் சில நொடி யோசித்துவிட்டு ,புன்னகையுடன் என்னால் முடிந்ததை செய்கிறேன் என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார் .
அதன் பின் மூன்று நாட்கள் ,கோட்டையிலிருந்து வீட்டிற்கு தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே செல்கிறார் .போகும்பொழுது பீடா கடையை கவனித்துக்கொண்டே செல்கிறார் .ஆக்கிரமிப்பு இருந்தாலும் பீடா கடையினால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடைஞ்சலும் இல்லை என்று அறிந்த மக்கள் திலகம் , முதல்வராக இருந்துகொண்டு ஆக்கிரமிப்பு செய்தவருக்கு ஆதரவாக அதிகாரிகளுக்கு உத்தரவு எப்படி போடமுடியும் என்பதையும் உணர்ந்தே வைத்திருந்தார் .
அடுத்த நாளும் தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே எம்.ஜி.ஆர் செல்கிறார் . பீடா கடை அருகே வந்ததும் , பத்துமீட்டர் தொலைவிலேயே காரை நிறுத்த சொல்கிறார். அதிகாரிகளுக்கோ குழப்பம் , திடீரென்று நிறுத்த சொல்கிறாரே என்று. பின் காரின் கதவை தானே திறந்துகொண்டு , பீடா கடையை நோக்கி வேகமாக தனக்கே உரித்தான அந்த கம்பீர நடையில் நடக்கிறார் .
தலைவர் நம்ம கடையை நோக்கி வர்றாரே என்று முருகேசனுக்கும் குழப்பம் .செய்வதறியாது நிற்கிறார். பீடா கடையை அடைந்த தலைவர் , "என்ன முருகேசா , இப்போல்லாம் தோட்டத்து பக்கம் ஆளையே காணம் . தொழில் லாம் எப்படி போகுது ? என்று ரொம்ப நாள் பழகிய நண்பன் போல் முருகேசனுடன் உரையாடுகிறார் . முருகேசன் எந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் உளறுகிறார் .
"சரி ஏதாவது உதவி வேணும்ன்னா தோட்டத்துக்கு வா "என்று சொல்லிவிட்டு மீண்டும் காரில் ஏறி , கோட்டைக்கு சென்றுவிடுகிறார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அவர் சென்ற அடுத்த நொடியே விஷயம் காட்டுத்தீ போல் பரவுகிறது. முருகேசன் தலைவருக்கு வேண்டப்பட்டவரா ? அவரே இறங்கி வந்து முருகேசன்கிட்ட பேசுனாரா ? சின்ன வயசுல இருந்தே ரெண்டு பேரும் நண்பர்களாம் என்று ஆளாளுக்கு தாங்கள் கேள்விப்பட்டதை பரப்பிவிடுகிறார்கள் .தொல்லை கொடுத்த அதிகாரிகள் பலருக்கும் பயம் தலைக்கேறியது . வேண்டாதவர்கள் என்று சொல்லப்பட்ட பலரும் முருகேசனை பார்த்து சலாம் போட்டதுடன் ,பின்னாளில் அவர் கிட்டேயே ரெக்கமன்ட் க்கு வந்தது வேறு விஷயம்
#தலைவர் நினைத்திருந்தால் , தொல்லை கொடுத்தவர்களை போனில் மிரட்டியிருக்கலாம் , அதெல்லாம் ஒரு முதல்வருக்கோ , தலைவருக்கோ தகுதியான குணமல்ல .வேறு யாராக இருந்திருந்தால் , இதெல்லாம் ஒரு விஷயமா என்று மறந்தே போயிருப்பார்கள் ,இல்லையெனில் ,போனில் மிரட்டியிருப்பார்கள் . அதிகாரிகளுக்கும் சொல்லாமல் , ஆக்கிரமிப்பை அகற்றவும் சொல்லாமல் அந்த பீடா கடைக்காரருக்கு உதவிய வல்லமை நம் கலியுகக் கர்ணனுக்கு மட்டுமே உண்டு . இன்னும் எத்தனை ஆண்டுகள் உருண்டோடினாலும் அவரின் பெயர் தான் தமிழ்நாட்டை ஆளும்
நாளை உலகை ஆளவேண்டும்
கோவை செழியன் அவர்கள் தயாரிப்பில் கே.சி.பிலிம்ஸாரின் உழைக்கும் கரங்கள் திரைப்படம் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில்!!
எம்.ஜி.ஆர். கதாநாயகனாக.. மெல்லிசை மன்னரின் இன்னிசையில் புலவர் புலமைப்பித்தன் வரைந்த பூபாளமிது!
உழைக்கும் மக்களுக்காக வரையப்பட்ட உன்னத சாசனமிது!! கே.ஜே.யேசுதாஸ் என்னும் கானப்பறவை தன் கந்தர்வக்குரலில்..
நாளை உலகை ஆளவேண்டும்..உழைக்கும் கரங்களே!
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே - இந்த
நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே - இந்த
நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே
கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே ஒன்றாய் வாருங்கள் தோழர்களே
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
உழைக்கும் கரங்களே
தன்னானே தானேனானான நானானானா
தானேனானே னனானே
ஏர் பூட்டித் தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து
ஏர் பூட்டித் தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து
போராடும் காலம் எல்லாம் போனதம்மா
எல்லோர்க்கும் யாவும் உண்டு என்றாகும் காலம் இன்று
நேராகக் கண்ணில் வந்து தோன்றுதம்மா
விடியும் வேளை வரப்போகுது தருமம் தீர்ப்பைத் தரப்போகுது
ஞாயங்கள் சாவதில்லை என்றும் ஞாயங்கள் சாவதில்லை
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
உழைக்கும் கரங்களே
ஆஹா ஆஹா ஆஹா நானானானனே ஆஹாஹா
கல்விக்குச் சாலை உண்டு நூலுக்கு ஆலை உண்டு
நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தேடலாம்
தோளுக்கு வீரம் உண்டு தோற்காத ஞானம் உண்டு
நீதிக்கு நெஞ்சம் உண்டு நாம் வாழலாம்
சிரிக்கும் ஏழை முகம் பார்க்கலாம்
சிந்தும் கண்ணீர் தனை மாற்றலாம்
வாருங்கள் தோழர்களே ஒன்றாய் சேருங்கள் தோழர்களே
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே இந்த
நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே
ஏருழவன் சேற்றில் கை வைக்கவில்லையென்றால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது என்பார்கள்!
அவர்தம் ஏழ்மைநிலை நீங்கி.. உருவாக வேண்டிய சமத்துவ சமுதாயம் புலவரின் பொதுவுடைமை நோக்கம் எல்லாம் பாடலின் வரிகளாய்!!
புரட்சிக்கு வித்திடும் போராட்டங்கள்! அப் போராட்டங்கள் உருவாகக் காரணம் ஏற்றத்தாழ்வுகள்!!
கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்பதை நாட்டுக்கு உணர்த்தும் கூட்டுறவு சங்கங்கள்!!
நாளைய விடியல் நம்பிக்கையின் வெளிச்சத்தோடு வெளிவரட்டும்!!
courtesy net
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் ...
பொங்கும் புனல்தானே பாய்ந்துவரும் வெள்ளம்! அணைகளும் தடை செய்ய முடியாத ஆழிவெல்லாம் சூழ்கையில் எல்லாம் அடங்கத்தான் நேருமே! சமுதாய அவலங்களைத் தட்டிக் கேட்கும் எண்ணம் நம் எல்லோருக்கும் இருந்தாலும் நடைமுறையில் அனைவரும் முன்வருவதில்லை! நம் கண் முன்னே நடக்கும் தீயவர்களின் செயல்களைத் தடுத்திடவும் நாம் முனைவதில்லை! எதற்கு வம்பு என்கிற நோக்கில் பெரும்பாலோர் வழிநடக்க.. எதிர்த்துக்குரல் கொடுக்க ஒருவன் பிறப்பெடுத்து வர மாட்டானா என்கிற ஏக்கம் நிறைந்திருக்க, திரைப்படங்களில் அப்படி ஒருவன் வருகின்றான்.. அவனே கதாநாயகனாய் திகழ்கின்றான்.
திரைப்படங்களில் அமைக்கப்பட்ட இதுபோன்ற காட்சிகளில் தன் இயல்பான நடிப்பால், ஏழைகளின் இதயங்களில் எல்லாம் இன்றைக்கும் நிறைந்திருக்கும் வள்ளல் .. எம்.ஜி.ஆர். அவர்கள் உச்சம் எவரும் எட்ட முடியாதது!
சத்யா மூவிசாரின் ரிக்ஷாக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடலிது!
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு..
இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது
அன்று சிரிப்பவர் யார்.. அழுபவர் யார் தெரியும் அப்போது...
நாணல் போல வளைவது தான் சட்டமாகுமா
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா
தர்மத் தாயின் பிள்ளைகள் தாயின் கண்ணை மறைப்பதா
உண்மை தன்னை ஊமையாக்கி தலை குனிய வைப்பதா...
நான் ஒரு கை பார்க்கிறேன்... நேரம் வரும் கேட்கிறேன்...
பூனை அல்ல புலி தான் என்று போகப் போகக் காட்டுகிறேன்
வாலியின் வைர வரிகள் வீறு கொண்டு எழுகின்றன. கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் கதாநாயகனுக்காகவே அமைக்கப்பட்ட காட்சியில் பொருத்தமான உணர்வு மிக்க வார்த்தைகள் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஓங்கார நாதத்தோடு கலந்து உண்டாக்கும் அதிர்வுகள் .. அந்த சமுதாய அவலங்களைத் தகர்க்கும் புரட்சி நடையோடும் பொலிவோடும் அரங்கேறுகின்றன. புரட்சி நடிகர் .. புரட்சித்தலைவராய் பரிணாமம் பெற பயன்பட்ட படிக்கட்டுகளில் இப்பாடலும் அடங்கும் என்பதில் மிகையில்லை!
courtesy kaveri mainthan post