-
பொங்கும் பூம்புனல்
ஒவ்வொரு நாளும் நாம் கண்ணனை நினைத்துக் கொண்டுள்ளோம்.. என்றாலும் இந்த நாளுக்கென்று ஒரு விசேஷம் இருக்கிறதல்லவா.. அதைப் போலத்தான் நம் மனதிற்குகந்த மனிதர்களை நாம் அவ்வப்போது நினைத்துக் கொண்டாலும் நினைத்துக் கொள்ளாவிட்டாலும் பிறந்த நாள் போன்ற சிறப்பான நாட்களில் தவறாமல் நினைவு கூர்வோம்..
இந்த அடிப்படையில் கண்ணனை நினைக்காத நாளில்லையே..
http://www.youtube.com/watch?v=6ynZk2WmDXY
-
கண்ணனை நினைக்காத நாளில்லையே!
கண்ணதாசன் அவர்கள் கண்ணனை மறப்பதாயில்லை. அற்ப காதல் பாட்டிற்குக் கூட கண்ணன் / ராதையிடம் அழைத்துச் சென்று, நம்மைப் பரவசப் பட வைப்பது கவியரசு அவர்களால் மட்டுமே முடியும்.
கண்ணனை நினைக்காத நாளில்லையே!
காதலில் துடிக்காத நாளில்லையே!
உண்ணும் போதும், உறங்கும் போதும்
எண்ணம் முழுதும் கண்ணன் தானே!
என்று பல்லவியின்போதே ‘அட!’ போடவைத்து,
கண்ணன் மணிவண்ணன் திருவாய் மொழி
உன்னால் மனம் எங்கும் யமுனா நதி
கண்ணா...உன்னை மறப்பேனோ?
நான் உன்னை மறப்பேனோ?
கேட்கும்போது நம்மை அறியாமல் உருக வைக்கிறார் கவியரசு.
காதல் ஜோடி லக்ஷ்மி, முத்துராமன் அவ்வளவு பாந்தமாயிருக்கிறார்கள் பாட்டில். அதுவும் ‘கண்ணனை’ என்று பல்லவியை மீண்டும் பாடும்போது முத்துராமன் பாவனை இயல்பு + அருமை. ஆனால், பாடலின் பெரும்பகுதி தேங்காய், மனோரமாவுக்குத்தான்.
சுசீலாம்மா, ஐஸ் வாட்டர் குரலோன்(ர்) எஸ்.பி.பி பாடுகையில் வரிக்கு மெருகு கூடுகிறது. எம்.எஸ்.வி இசை - தனியாகச் சொல்ல வேண்டுமா?
ராகவேந்தர் அவர்கள் இந்த பாடலின் இணைப்பை மேலே கொடுத்து உள்ளார்கள்
பாருங்களேன்!
-
இந்த சீர்வரிசை பாடலை கேட்கும் போது மனதில் எழுந்த கேள்வி
ஆதித்ய சிரிப்பொலி போன்ற நகைசுவை தொலை காட்சிகளில்
தேங்காய் சம்பந்தப்பட்ட நகைச்சுவை நிறைய நான் பார்த்ததாக நினைவில் இல்லை
-
அற்புதமான சிவாஜி படங்களில் ஒன்று.வளர்பிறை. படம் நினைவிலே இல்லை. ரொம்ப சின்ன வயசில் பார்த்ததால் நினைவில் இல்லை.
சிவாஜியின் ஊமை நடிப்புக்காவும் ,கே.வீ.மகாதேவனின் இசைக்காகவும் பேச பட்டது.
இந்த படத்தில் இரண்டு பாடல்கள் அருமை.பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்யத்தை (டி.எம்.எஸ்.), சல சலக்குது காத்து (டி.எம்.எஸ்.-பீ.எஸ்.)
கண்ணதாசன் ,ஆத்திக வாதியாக மாற துவங்கிய தருணம்.எதிலெல்லாம் இறைவனை தேடியலைகிறார் பாருங்கள்???
பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்,அவனை புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்
தென்னை இளநீருக்குள்ளே,தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே ,தேங்காயை போலிருப்பான் ஒருவன் ,அவனை தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்
முற்றும் துறந்ததென்று ,பற்றறுத்து வந்தவர்க்கு சுற்றமென நின்றிருப்பான் ஒருவன்,அவனை தொடர்ந்து சென்றால் அவனே இறைவன்.
முட்டைக்குள் கோழி வைத்து,கோழிக்குள் முட்டை வைத்து ,வாழைக்கும் கன்று வைப்பான் ஒருவன், அந்த ஏழையின் பேர் உலகில் இறைவன்
http://musicmazaa.com/tamil/audioson...alarpirai.html
-
சீர்வரிசை சொர்ணம் கதை,வசனம்,இயக்கம் என்று ஞாபகம். எதோ மாமியார்-மருமகள் தகராறு வைத்து.
ரெண்டு அற்புத பாடல்கள்.
கண்ணனை நினைக்காத நாளில்லையே.
பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ...
-
புகுந்த வீட்டில் இடம் பெற்ற இந்த பாடல் ...
சுசீலாவின் இனிய குரலில் ......
http://youtu.be/FZotFXUdR-s
-
-
இன்றைய ஸ்பெஷல் (54)
http://i.ytimg.com/vi/27avq1GpIFo/movieposter.jpg
ஒரு அட்டகாசமான கிளப் சாங். கர்ணனின் 'கங்கா' படத்தில். சங்கர் கணேஷ் இரட்டையர்கள் ஹென்றி டேனியல், தாஸ் துணையுடன் புகுந்து விளையாட, ராட்சஸி ரகளை கச்சேரி நடத்துவார். அப்போது மிகவும் ஹிட். கச்சேரி மேடைகளில் கூட ஈஸ்வரி இப்பாடலைப் பாடி நான் கேட்டிருக்கிறேன். ஏனோ தானோ பாடல் போலத் தோன்றும். ஆனால் கில்லியடிக்கும்.
சி.ஐ.டி சகுதலாவின் காபரே. ஓ.ஏ.கே தேவரின் முறைத்த பார்வை, ஜெயசங்கரின் உஷார் பார்வை, அங்கங்கே நிற்கும் கொள்ளைக் காரர்களின் கழுகுப் பார்வை, சுழன்றடிக்கும் கர்ணனின் காமெரா, அதை விட கண்ணதாசனின் சிறப்பான போதை வரிகள்.
'மீனைத் தேடும் நாரை போலே
தேடுங்கள் சிவந்த கண்ணோடு'
அட்டகாசமான வரிகள். சிச்சுவேஷனுக்குத் தகுந்தாற் மாதிரி.
'வேகம் வர மோதிப் பார்க்கலாம்'
கோபாலுக்காகவே எழுதப்பட்ட வரிகள் போன்று.:)
'பாவை எனை வஞ்சி என்று சொன்ன சொல்லை
அனுபவம் காட்டட்டும்'
இதற்கு அர்த்தம் எப்படிக் கூற முடியும்?
'சங்கு பிளந்து அங்கம் வடித்து
ஜாடைகளில் மேடை போட்டது'
அடேயப்பா! உச்சம் தொட்ட வரிகள்.
'கோட்டை அழகும் கோவில் அழகும்
பார்த்தவர்கள் என்னைப் பாருங்கள்
ஆட்டம் முடிந்து தோட்டம் முழுதும்
கேட்பவர்கள் என்னைக் கேளுங்கள்'
அருமை! ஆட்டம் முடிந்தவுடன் அம்மாவைக் கேட்கணுமாம். 'கோட்டையும், கோபுரமும் என்னய்யா பெரிய அழகு! என்னை விடவா?'
'நாளை வரை வாழப் போகும் வீரன்
என்னைத் திருமணம் செய்யட்டும்'
'செத்துப் போகும் வீரனுக்கல்லா நான். நாளை வரை வாழக் கூடிய வீரனாக இருக்கணும் என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள'
'ரகளை' ராட்சஸி
பொறக்கணும்பா! இன்னொருத்தி பொறக்கணும். நெத்தியில் அடித்த மாதிரி வார்த்தைகள் வந்து விழும். அதுவும் 'பதம் பதம் இது பரம பதம்'
இருக்கிறதே. அருமையிலும் அருமை. திரும்பத் திரும்ப அதையே கற்கத் துடிக்கும் மனசு. 'பதம்' முடிந்தவுடன் பாம்பு சீறுவது போல் ஒரு 'ஸ்' சத்தம் வரும் பாருங்கள்!
'தேடுங்கள் சிவந்த கண்ணோடு' முடித்துவிட்டு ஒரு 'யா' அப்படியே வெட்டுமய்யா நம்மளை. கூச்ச நாச்சம், சபை நடுக்கம் எதுவும் இருக்காது. அழுத்தம் திருத்தமாக கருத்துக்கள் நம் நெஞ்சில் ஊன்றப்பட்டு விடும்.
'ஹோய்னா ஹோய்ன ஹோய்ன ஹோய்ன ஹோய்' திடீர்க் கலக்கல்.
என்ன பாடகி! என்ன பாடகி! ஆர்ப்பாட்டத்துக்கு இந்த அரக்கியைத் தவிர வேறு யார்? கண்ணியத்துக்கு 'அவர்' என்றால் கலாட்டாவுக்கு 'இவர'ல்லவோ!
உலகம் உள்ளமட்டும் வாழட்டும் இந்த 'கலாட்டா கழுகு'. (மது அண்ணாவும், கார்த்திக் சாரும் உசுபபேத்திட்டாங்க)
இனி பாடலின் முழு வரிகள்.
http://i1.ytimg.com/vi/fTNjlfjmy3w/sddefault.jpg
ஆகட்டும் பார்க்கலாம்
யாருக்கு வேட்டை ஜெயமாகும்
யாரது ஆசை நிறைவேறும்
மீனைத் தேடும் நாரை போலே
தேடுங்கள் சிவந்த கண்ணோடு
ஆகட்டும் பார்க்கலாம்
யாருக்கு வேட்டை ஜெயமாகும்
யாரது ஆசை நிறைவேறும்
மீனைத் தேடும் நாரை போலே
தேடுங்கள் சிவந்த கண்ணோடு.... யா
கட்டிப் பிடித்தால் முத்தம் கொடுத்தால்
காதலிலும் போதை ஏறலாம்
கொட்டிக் கொடுத்தால் கொஞ்சி அணைத்தால்
வேகம் வர மோதிப் பார்க்கலாம்
கட்டிப் பிடித்தால் முத்தம் கொடுத்தால்
காதலிலும் போதை ஏறலாம்
கொட்டிக் கொடுத்தால் கொஞ்சி அணைத்தால்
வேகம் வர மோதிப் பார்க்கலாம்
பாவை எனை வஞ்சி என்று சொன்ன சொல்லை
அனுபவம் காட்டட்டும்
ஸ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
பதம் பதம் இது பரம பதம் ஸ்
பதம் பதம் இது பரம பதம் ஸ்
பதம் பதம் இது பரம பதம் ஸ்
பதம் பதம் இது பரம பதம்
ஆகட்டும் பார்க்கலாம்
யாருக்கு வேட்டை ஜெயமாகும்
யாரது ஆசை நிறைவேறும்
மீனைத் தேடும் நாரை போலே
தேடுங்கள் சிவந்த கண்ணோடு.... யா
சங்கு பிளந்து அங்கம் வடித்து
ஜாடைகளில் மேடை போட்டது
செண்டு நடுவில் வண்டு அமர்ந்து
ஆடைகளை மூடி வைத்தது
மாது என்னை பூவை என்று
சொன்ன சொல்லை
மதுவுடன் பாருங்கள் (மது அண்ணாவுடனா!)
ஹோய்னா ஹோய்ன ஹோய்ன ஹோய்ன ஹோய்
ஹோய்னா ஹோய்ன ஹோய்ன ஹோய்
பதம் பதம் இது பரம பதம்
பதம் பதம் இது பரம பதம்
பதம் பதம் இது பரம பதம்
பதம் பதம் இது பரம பதம்
ஆகட்டும் பார்க்கலாம்
யாருக்கு வேட்டை ஜெயமாகும்
யாரது ஆசை நிறைவேறும்
மீனைத் தேடும் நாரை போலே
தேடுங்கள் சிவந்த கண்ணோடு யா
கோட்டை அழகும் கோவில் அழகும்
பார்த்தவர்கள் என்னைப் பாருங்கள்
ஆட்டம் முடிந்து தோட்டம் முழுதும்
கேட்பவர்கள் என்னைக் கேளுங்கள்.
கோட்டை அழகும் கோவில் அழகும்
பார்த்தவர்கள் என்னைப் பாருங்கள்
ஆட்டம் முடிந்து தோட்டம் முழுதும்
கேட்பவர்கள் என்னைக் கேளுங்கள்.
நாளை வரை வாழப் போகும் வீரன்
என்னைத் திருமணம் செய்யட்டும்
ஸ் ஹா ஸ் ஹா ஹா ஹா ஹா
பதம் பதம் இது பரம பதம் ஸ்
பதம் பதம் இது பரம பதம் ஸ்
பதம் பதம் இது பரம பதம் ஸ்
பதம் பதம் இது பரம பதம்
ஆகட்டும் பார்க்கலாம்
யாருக்கு வேட்டை ஜெயமாகும்
யாரது ஆசை நிறைவேறும்
மீனைத் தேடும் நாரை போலே
தேடுங்கள் சிவந்த கண்ணோடு
இந்த ஒரு பாட்டு போதுமய்யா வாழ்நாள் மூச்சூடிற்கும்.
https://www.youtube.com/watch?v=fTNj...yer_detailpage
-
பெண்ணை வாழ விடுங்கள் படத்தில்தானே சமையலுக்கும் மையலுக்கும்? காலங்கள் உனக்காக ,நினைவு படுத்தியதற்கு நன்றி.ஆனால் இந்த படத்தின் highlight பாடல் அழகிலே கனி ரசம்.
-
வாசு,
வழக்கம் போலவே வித்தியாச பதிவு. காலம் வெல்லும்,கங்கா -கர்ணனின் அற்புதங்கள். நீ சொன்ன பாடல் நன்றாக படமாக்க பட்ட ஒன்று.
என்னா உழைப்பு!! மெனக்கெடல் !!!