http://i68.tinypic.com/v4orgl.jpg
Printable View
http://i66.tinypic.com/262b1ud.jpg
ஒரே முகம். அது நூறு முகம். அது என்றும் ஆசைமுகம்.
http://i68.tinypic.com/zvq7on.jpg
ரத்தத்தின் ரத்தங்களுக்கு புரட்சித் தலைவர் நூற்றாண்டு பிறந்த நாள் விழா நல் வாழ்த்துகள்!
புரட்சித் தலைவரின் நூற்றாண்டு விழா மகிழ்ச்சியாக இருந்தாலும் உள் மனதில் இப்போது தலைவர் இல்லையே என்ற ஏக்கம் இருக்கிறது. கொண்டாட்டமாக இருக்க வேண்டிய நேரத்தில் அதையும் மீறி அவர் இப்போது இல்லையே என்று நினைத்தால் அழுகைதான் வருகிறது. நெஞ்சை குடைகிறது.
எல்லாரும் ஒருநாள் இறந்துதான் போவார்கள். இதை அறிவு சொன்னாலும் உணர்ச்சி ஏற்க மாட்டேன் என்கிறது. புரட்சித் தலைவர் அமெரி்க்காவுக்கு சென்றிருக்கிறார் என்று நினைத்துக் கொள்வோம். என்றாவது ஒரு நாள் அவர் நிச்சயம் வருவார். தமிழ்நாட்டிலேயே அவர் மறுபடியும் அப்படியே எம்.ஜி.ஆராகவே பிறக்க வேண்டும். இந்தப் பேராசை நடக்குமா?
தலைவரின் ஆசீர் நம் எல்லாருக்கும் கிடைக்க அவரது பாதம் பணிந்து வேண்டுகிறேன்.
என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் மண் மணக்கும் எங்கள் மதுரையில் மாவட்ட நீதிமன்றம் புரட்சித் தலைவரின் சிலை அருகில் இன்று காலை 10 மணிக்கு ஏழை எளியோருக்கு இலவச வேட்டி, துண்டு வழங்கும் விழா நடக்கிறது. அமைச்சர் அண்ணன் செல்லூர் ராஜூ, அமைச்சர் உதயகுமார், அண்ணன் ராஜன் செல்லப்பா ஆகியோர் விழாவில் கலந்து கொள்கின்றனர்.
http://i66.tinypic.com/51yl20.jpg
http://i66.tinypic.com/jrtmxy.jpg
நன்றி மறவாத நல்ல மனம் போதும்!
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்!
http://s30.postimg.org/l2kx2qhj5/IMG_3221.jpg
இன்று மக்கள் திலகத்தின் 100வது பிறந்த நாள்.
ஒவ்வொரு மக்கள் திலகத்தின் பக்தரும்
பெருமை கொள்ளும் நன்னாள்.
அவரின் கொள்கைகளை வாழ்வில் கடைபிடித்து
நம்மால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்வதை
நமது வாழ்வின் லட்சியமாக கொள்வோம்.
நமது திரியில் பயணிக்கும் அனைத்து பதிவாளர்கள் மற்றும்
பார்வையாளர்களுக்கு மக்கள் திலகம்
பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
- எஸ் ரவிச்சந்திரன்