-
#எழுத்தாளர் #கிரிதரன் #என்பவரின் #பக்கங்களிலிருந்து :
நீங்கள் சினிமா ரசனை உள்ளவர் என்பதை உங்கள் முகநூல் காட்டித் தருகின்றது. அதிலும் எம்ஜிஆர் பற்றி உங்கள் ரசனை அபரிமிதமாக உள்ளது... கொஞ்சம் அதைப்பற்றிச் ?சொல்லுங்கள்...?
என்னைப்பொறுத்தவரையில் பல்வேறு கருத்துகளை, உணர்வுகளை வெளிப்படுத்தும் இசை, பாடகர்களின் குரல், பாடல்வரிகள் ஆகியவற்றுக்காகச் சினிமாப்பாடல்கள் என்னைக் கவர்வன. உண்மையில் நான் அதிகமாகச் சினிமாப்படங்களைப் பார்த்தவனல்லன். சிறுவயதில் அறுபதுகளில் எம்ஜிஆரின் படங்களை அதிகமாகக் பார்த்த காரணத்தால் அவரின் திரைப்படங்கள் மூலமே நான் சினிமா பார்க்கத் தொடங்கியதன் காரணமாக என் பால்ய காலத்தின் என் விருப்பத்துக்குரிய நடிகராக எம்ஜிஆர் இருந்தார்.
அவ்விதம் என் நெஞ்சில் ஆழமாக எம்ஜிஆர் பதிந்ததற்கு முக்கிய காரணங்கள் அவரது வசீகரம் மிக்க முகராசி. அடுத்து அவரது திரைப்படங்களில் வரும் ஆரோக்கியமான எண்ணங்களை வெளிப்படுத்தும் கருத்துள்ள பாடல்கள். அப்பாடல்களே எனக்கு எம்ஜிஆர் திரைப்படங்கள் பிடிக்கக் காரணம்...
அதுவும் குறிப்பாக அறுபதுகளில் , ஐம்பதுகளில் வெளியான அவரது திரைப்படங்கள். அவரின் இறுதிக்காலப்படங்கள் பலவற்றை நான் அதிகம் பார்க்கவில்லை. அவற்றிலுமுள்ள ஆரோக்கியமான எண்ணங்களை வெளிப்படுத்தும் பாடல்களை நான் இரசிப்பதுண்டு.
உளவியல் அறிஞர்தம் கோட்பாடுகளின்படி ஒரு விடயத்தை மீண்டும் மீண்டும் ஒருவர் தனக்குத்தானே கூறிக்கொண்டு வருவாரானால் #அக்கோட்பாடுகள் அவருடன் #ஒட்டிப்பிறந்தவையாய் இருந்திருக்கும். மேலும் அதைக்கேட்கும் மனிதரின் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து அம்மனிதரின் வாழ்வை #ஆரோக்கியப் #பாதைக்குத் திருப்பும். உண்மையில் எம்ஜிஆரின் திரைப்படப்பாடல்கள், ஆரோக்கியமான எண்ணங்களை வெளிப்படுத்தும் திரைப்படப்பாடல்கள், மீண்டும் மீண்டும் கேட்கும்பொழுது , கேட்பவர்கள் மனதில் ஆழமாகப்பதிந்து விடுகின்றன.
இவ்வகையில் ஆரோக்கியமான விளைவினைக் கேட்பவருக்கு ஏற்படுத்துகின்றன. உண்மையில் எம்ஜிஆரின் இரசிகர்களான #பாமர #மக்கள் பலருக்கு நூல்கள் வாங்க, வாசிக்க எல்லாம் நேரம், சந்தர்ப்பமில்லை. ஆனால் எம்ஜிஆரின் பாடல்களை அவர்கள் கேட்டார்கள். அவை அவர்களின் வாழ்க்கையில் நிச்சயம் ஆரோக்கியமான விளைவுகளை, சிந்தனைகளை ஏற்படுத்தியிருக்குமென்றே நிச்சயமாகக் கருதுகின்றேன்.
இலக்கியத்திலுள்ளது போல் கலைகளிலின்றான சினிமாவிலும் பல பிரிவுகள் உள்ளன. குழந்தைகளுக்கான படம், பக்திப்படம், அறிவியற்படம், பொழுதுபோக்கு வெகுசனத்திரைப்படம், #கலைத்துவம் மிக்க திரைப்படம் என்று பிரிவுகள் பல.
எம்ஜிஆரின் திரைப்படங்களைப் பொழுது போக்குப் படங்களில் வைத்துக்கணிப்பிட்டாலும், நல்ல கருத்துகளைப் போதித்ததால் அவை சமுதாயத்திற்கு #ஆரோக்கியமான பங்களிப்பினைச் செய்துள்ளன என்பது என் உறுதியான கருத்து.............
-
தெரியாதது #கடலளவு
சென்னை சத்யா ஸ்டூடியோவில் உரிமைக்குரல் படப்பிடிப்பில் வாத்தியாரைக் காண, தேனி மாவட்டத்திலிருந்து சண்முகவேலு என்ற தீவிர ரசிகர் காணச் சென்ற போது, ""என் கூட நடிக்கிறீயா...'' எனக்கேட்டார்.
"உங்க பக்கத்தில் நிற்கும்போதே, எனக்கு கை, கால் உதறுது; உங்க அன்பே போதும்,' என, அந்த ரசிகர் கூறியதும், அவரைக் கட்டிப்பிடித்து, போட்டோ எடுக்கச் சொன்னார் வாத்தியார்...
பின்னர்,
அருப்புக்கோட்டை வறட்சி நிதி வசூலுக்கு வந்த அவர், மதுரை தமிழ்நாடு ஓட்டலில் தங்கியிருந்த போது, வாத்தியாரைச் சந்திக்க, அந்த ரசிகர் மனைவி குழந்தைகளுடன் காத்திருந்தார்...நிறைய பார்வையாளர்கள் இருந்தபோதும், சண்முகவேலுவை அடையாளம் கண்டு, உதவியாளரிடம் அழைத்து வரச்செய்தார்.
அந்த ரசிகரின் இரு மகள்களுக்கு சத்யா, ராணி என பெயரிட்டு, "சத்யா, எனது தாய், ராணி எனது அண்ணியார்,' எனக் கூறி, அவர் மனைவியிடம் நலம் விசாரித்து, 'என்ன உதவி வேண்டுமானாலும், இந்த அண்ணனிடம் தயக்கமில்லாமல் கேளுங்கள்...' என்றார். வெளியே வந்த சண்முகவேலுவின் மனைவி மிகவும் நெகிழ்ந்து, "கட்சிக்காக, சொத்துக்களை நீங்கள் விற்ற போது, எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது... ஆனால் இந்த கூட்டத்தில், உங்களை அடையாளம் கண்டு பேசி நமக்கு உதவியும் செய்கிறேன்... என்றால்,
#அவருக்காக #நம் #சொத்துக்களை #இழந்தாலும், #பரவாயில்லை,' என்று கண்ணீருடன் கூறினார்...
வெளியே தெரியாத இப்பேர்ப்பட்ட பகட்டில்லா பக்தர்கள் இன்னும் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்...
படித்ததைப் பகிர்கிறேன்...
வாத்தியாரின் மனிதநேயம் 'நமக்குத் தெரிந்தது கையளவு, தெரியாதது கடலளவு'.........
-
#பண்பு
1977 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் மதுரை மாவட்டம் தேனியில் தேர்தல் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார்...
அப்போது விஷமி ( வேற யாரு, கட்டுமரம் கும்பல் தான்...) ஒருவர், ஒரு பொட்டலத்தை எம்ஜிஆர் மீது வீசினார்.
எம்ஜிஆர் தற்செயலாக விலக, அந்தப் பொட்டலம் அருகிலிருந்த பாதுகாவலர் மேல் விழுந்தது...
அது மாட்டுச்சாணம் என்பதைத் தெரிந்துகொண்ட மக்கள்திலகம், 'என் மீது விழுந்தது பூ பொட்டலம்... அதனால் அனைவரும் அமைதியாக இருக்கவும்...' என்று கூறினார்...
உடனே அருகிலிருந்த மக்கள், 'இது பூ பொட்டலம் இல்லை, மாட்டுச்சாணம்.. என்று சொல்லி அதைக் காண்பிக்கவும் செய்தனர்...
அப்போது மக்கள்திலகம், 'இதனாலனென்ன குறைந்துவிடப்போகிறது, மாட்டுச்சாணத்தைப் பூவாக நினைத்துக் கொள்வோம்.....'
என்றார் பெருந்தன்மையுடன்........
-
"நான் ஆணையிட்டால் அது நடந்தது விட்டால், இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்; உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை, அவர் கண்ணீர் கடலிலேயே விழமாட்டார்."
எம்.ஜி.ஆரின் திரைப்பட கொள்கை அரசியல்...
எம்.ஜி.ஆர் திரைத்துறைக்கு வந்தது எந்த நோக்கத்திற்கு என்பது அவருக்கு மட்டுமே தெரியும் என்றாலும், அவரது ஒவ்வொரு அடியும் தன் தாயார் பட்ட கஷ்டங்கள், அண்ணன் சக்கரபாணி மும் தானும் சிறுவயதில் அனுபவித்த சிரமங்களை, வேறு எவருக்கும் ஏற்பட்டு அனுபவிக்க கூடாது என்ற நோக்கத்தில் இருந்ததை அவருடைய நகர்வுகள் தெரிவிக்கின்றன. வரலாறும் அப்படித்தான் சொல்கிறது.
துவக்கத்தில் துணை நடிகராக கால் பதித்தார். சிறிது சிறிதாக முன்னேறி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். காங்கிரஸ் சார்புடைய அவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு அவர்களோடு நட்பாகி, அண்ணாவின் பிடித்தமானவரானார். நாடகங்களில் வசனம் எழுதிக் கொண்டிருந்த கருணாநிதி நட்பாகி, மார்டன் தியேட்டரில் வசனகர்த்தா வாக் எம்.ஜி.ஆர் அறிமுகம் செய்கிறார். அதனால் எம்.ஜி.ஆர் தான் நடித்த ராஜகுமாரி, மந்திரி குமாரி போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார். படங்களும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிலிருந்து எம்.ஜி.ஆர், யார் வசனம் பாடல்கள் எழுதினாலும் மக்களுக்கு புரியும்படி யாகவும் நல்ல கருத்துக்கள் கொண்டதாகவும் பார்த்து கொள்வார்.
1950 களில் மருதநாட்டு இளவரசி, மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதில்தான், எத்தனை காலம்தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே என்ற பாடல் இடம் பெற்றது. எம்.ஜி.ஆரின் முதல் அரசியல் பாடலும் அதுதான். அதிலிருந்து கட்சியின் கொள்கைகளை கதைகளிலும் பாடல்களிலும் இடம்பெற செய்தார். அரசியலிலும் தீவிரமானார்.
"மலைக்கள்ளன்" திரைப்படம் அந்த வரிசையில் எம்.ஜி.ஆருக்கு வேறொரு அடையாளத்தைக் கொடுத்தது. பணக்காரர்களிடம் கொள்ளை அடித்து ஏழைகளுக்கு வாரி வழங்கும் "ராபின் ஹுட்" கேரக்டர்.
டைரக்டர் ஸ்ரீராமுலு நாயுடு இயக்கிய படம். ஆங்கிலப் படத்தின் தழுவலாக, வெற்றிக்கான கதையாக இயக்குநர் இக்கதையை தேர்ந்தெடுத்திருக்கக் கூடும். ஆனால் இந்தப் படம் எம்.ஜி.ஆரின் திரைப்படப் பாதைக்கு திசை காட்டியாக அமைந்தது.
திரைப்படத்தின் பெயர் மலைக்கள்ளன் ஆக இருந்தாலும் கதாநாயகன் திருடுவதாகக் காட்சி அமைப்பு கிடையாது. மற்றவர்கள் கொள்ளை அடித்ததை பறித்து காவல்துறையிடம் ஒப்படைக்கும் பாத்திரமாகத் தான் படைக்கப்பட்டிருக்கும்.
இந்தப் படத்திற்கும் வசனகர்த்தா மு.க தான். வசனங்களில் ஆங்காங்கு லேசாக அரசியல் தூவப் பட்டிருக்கும். வெளிப்படையாக இல்லாவிட்டாலும், அந்த கால சமூக வாழ்க்கையையும், அரசியலையும் இடித்துக் காட்டும் வசனங்கள் இடம் பெற்றிருந்தது.
இந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் இன்னும் ஒரு படி மேலே சென்றிருக்கும்.
"எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்று துவங்கும் பாடலில் ஒரு அரசிற்கான கொள்கைத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கும்.
"எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே - இன்னும்
எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி
தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் -
கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
கருத்தாகப் பலதொழில் பயிலுவோம் -
ஊரில் கஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம்
ஆளுக்கொரு வீடு கட்டுவோம் -
அதில்ஆன கலைகளை சீராகப் பயில்வோம்
கேளிக்கையாகவே நாளினைப் போக்கிட
கேள்வியும் ஞானமும் ஒன்றாகப் திரட்டுவோம்".
ஒரு அரசு அமைந்தால் செய்யப் போகிற பணிகளை தொகுத்து அறிவிப்பது " தேர்தல் அறிக்கை". இந்தப் பாடல் கிட்டத்தட்ட ஒரு தேர்தல் அறிக்கை போலவே அமைந்திருக்கிறது. கல்வி, தொழில், வீடு என அடிப்படை தேவைகளை செய்வதான வாக்குறுதிகள் இந்தப் பாடலில் அளிக்கப்படுகின்றன.
தவறு இழைக்கிற ஒரு அரசாங்கத்தை இடித்துக் காட்ட, இன்றைய தேதிக்கும் இந்தப் பாடல் பயன்படுகிறது என்பது இந்தப் பாடலின் சிறப்பை வெளிப்படுத்துகிறது. எம்.ஜி.ஆர் திரைபடத்தின் அரசியல் பார்வையை வெளிப்படுத்திய முதல் பாடல்.
அடுத்து "மர்மயோகி" திரைப்படம் எம்.ஜி.ஆரின் நாயக பிம்பத்தை கட்டமைத்த வரிசைப் படம். அரசை தவறான வழியில் கைப்பற்றிய அரசியிடம் இருந்து நாட்டை மீட்கும் போராட்டம். அதே சமயம் ஏழை, எளியோருக்கு பாடுபடும் நாயகன் வேடம். அப்படியே மக்கள் மனம் கவர்ந்த நாயகனாக உருவாக்கப்பட்டது 'கரிகாலன்' கதாப்பாத்திரம்.
"மதுரை வீரன்" திரைப்படம் ஒரு குல தெய்வமாக விளங்கும் மதுரை வட்டார வீரனின் கதையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததன் மூலம் மதுரைவீரன் சாமியை வணங்கும் ஒரு சமூகத்திற்கு எம்.ஜி.ஆர் ஆதர்ச நாயகன் ஆனார். இந்தத் திரைப்படத்தினால் அவர் பின் அணி திரண்டவர்கள், எம்.ஜி.ஆரின் இறுதி காலம் வரை அவருக்கு அரசியல் ரீதியாக பலமாக இருந்தார்கள். இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற "ஏய்ச்சிப் பிழைக்கும் பிழைப்பே சரிதானா" என்றப் பாடல் சமூக பிரச்சினைகளை பட்டியலிடுகிறது. நுணுக்கமாக இப்படி பாடல்கள் மூலம் அரசியல் செறிவூட்டப்பட்டன
எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் அரசியல் கருத்துகளை கொண்டிருந்தன. அவருக்கு அரசியல் அடையாளத்தை ஏற்படுத்தின. அவரை அரசியல்வாதியாக்கின.
இந்த வரிசையில் எம்.ஜி.ஆர் அரசியல் புகுத்தி ஒரு திரைப்படத்தை கொண்டு வந்தார். அது "நாடோடி மன்னன்". அவரே தயாரிப்பாளர், அவரே இயக்குநர், அவரே கதாநாயகன். அதிலும் இரட்டை வேடம்.
படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அவரே செதுக்கி, செதுக்கி உருவாகினார். இசையை அவரே தேர்ந்தெடுத்தார். பாடல் வரிகளை அவரே தீர்மானித்தார். நாயக பிம்பத்தை கட்டியமைப்பதாக ஒவ்வொரு காட்சியையும் அமைத்தார்.
"நாடோடி மன்னன் " திரைப்படத்திற்கு பின்னதான படங்களின் இயக்குனர்கள் யாராக இருந்தாலும், கதை, காட்சி, வசனம், இசை, பாடல் என அத்தனையிலும் எம்.ஜி.ஆரின் பங்களிப்பும், தலையீடும் இருந்தன. தனக்கான அரசியல் இவை அத்தனையிலும் பிரதிபலிக்குமாறு பார்த்துக் கொண்டார்.
இந்தப் படத்தின் ஹிட் பாடல்,
"தூங்காதே தம்பி தூங்காதே
நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்
சத்திரம்தான் உனக்கு இடம் கொடுக்கும்
நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழிப்பவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும்கெட்டார் -
சிலர்அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
உன்போல் குறட்டைவிட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்
போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான் -
உயர்பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதலிழந்தான் -
கொண்டகடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் -
சிலபொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் -
பலபொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா".
இனத்தின் பெருமைகளை அடுக்கி, கேட்போரை தன்வயப்படுத்திக் கொண்டு அவர்களுக்கு அறிவுரைகளை தரும் பாடல். பகுத்தறிவுக் கருத்துகளை சொல்லும் பாடல் முடியும் போது அரசியல் பேசுகிறது. இப்படியான அறிவுரை கூறும் 'கொள்கைப் பாடல்' தவறாமல் எம்.ஜி.ஆர் படங்களில் இடம் பிடித்தது.
அதேப் படத்தில், மற்றொருப் பாடல் தமிழை வணங்கி அதன் பெருமைகளை எடுத்துரைக்கிறது. அதே சமயம் அரசியலையும் சொல்கிறது.
"செந்தமிழே வணக்கம்
ஆதி திராவிடர் வாழ்வினை சீரோடு விளக்கும்
செந்தமிழே வணக்கம்
ஐந்து இலக்கணங்கள் ஆய்ந்தே உலக
அரங்கினுக்கே முதன் முதல் நீ தந்ததாலும்
செந்தமிழே வணக்கம்
மக்களின் உள்ளமே கோயில் என்ற
மாசற்ற கொள்கையில் வாழ்ந்ததனாலே
பெற்ற அன்னை தந்தை அன்றி
மேலாய்
பிறிதொரு தெய்வம் இலை என்பதாலே
செந்தமிழே வணக்கம்
ஜாதி சமயங்கள் இல்லா நல்ல
சட்ட அமைப்பினைக் கொண்டே
நீதி நெறி வழி கண்டாய் எங்கள்
நெஞ்சிலும் வாழ்விலும் ஒன்றாகி நின்றாய் ".
தமிழ், திராவிடம் என்ற திராவிட இயக்க அரசியலை பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியதால், திராவிடப் பற்றாளர்களின் இதயத்தில் இடம் பிடித்தார். திராவிட, தமிழ் உணர்வை பாமர மக்களிடமும் கொண்டு சேர்த்தார்.
இதற்கு பிறகு எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் அவருக்கான அரசியலை மையமாக வைத்தே பின்னப்பட்டன. அவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்கள் அவருக்காகவே வடிவமைக்கப்பட்டன.
எம்.ஜி.ஆர் ஏற்று நடித்த பாத்திரங்கள் மது அருந்த மாட்டார்கள், புகை பிடிக்க மாட்டார்கள், தவறான வார்த்தைகளை பிரயோகிக்க மாட்டார்கள்.
ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் குரல் கொடுப்பவராக, பாடுபடுபவராக, தன்னையே தியாகம் செய்பவராக எம்.ஜி.ஆரின் கதாபாத்திரம் அமைக்கப்படும். ஒரு கட்டத்தில் கதாபாத்திரம் என்பதைத் தாண்டி எம்.ஜி.ஆரே அப்படித் தான். வாழ்ந்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார். தான் கொண்ட கொள்கையை மக்களும் ஏற்றுக்கொள்ளும்படி செய்தாது. அவர்களின் மனங்களில் நீங்கா இடம்பெறலானார்.
கதாநாயகியை தவிர மற்ற பெண்களை தாயாக, சகோதரியாகத் தான் பாவிப்பார்.
அரசர் காலத்து படம் என்றால், இழந்த நாட்டை மீட்பவராக, புரட்சியாளராக, அரசை நேர் வழிப்படுத்துபவராக எம்.ஜி.ஆர் கதாப்பாத்திரம் அமைந்திருக்கும். இது மெல்ல, மெல்ல மக்கள் மனதில் அவர் தான் நாட்டை வழிநடத்த சரியானவர் என்ற எண்ணத்தை பதியம் போட்டது.
பிறகு உழைக்கும் மக்களின் பிரதிநிதியாக தன் கதாபாத்திரங்களை அமைத்துக் கொண்டார். விவசாயியாக, தொழிலாளியாக, மீனவராக, ரிக்*ஷா ஒட்டுபவராக என அவர் ஏற்கும் கதாபாத்திரம், அந்த சாராரின் மனதில் தங்களை அந்தக் கதாபாத்திரமாக வரித்துக் கொள்ளும் மனோ நிலைக்கு கொண்டு சென்றது.
ஒரு கட்டத்தில் தங்களை அவர்கள் எம்.ஜி.ஆராகவே வரித்துக் கொண்டார்கள். அதில் தான் எம்.ஜி.ஆரின் வெற்றி அடங்கியிருந்தது.
தம்மால் முடியாதவற்றை, கதாநாயகன் செய்யும் போது தாங்களே அந்த இடத்தில் இருப்பதாக நினைத்து கைத்தட்டி விசில் அடிக்கும் மனப்பான்மையை ரசிகர்களிடம் ஏற்படுத்துவதில் தான் திரைப்படத்தின் வெற்றி அடங்கி இருக்கிறது. அதை மிக அழகாக, நைச்சியமாக தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் செய்து காட்டியவர் எம்.ஜி.ஆர்.
திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு வில்லனாக நடித்த எம்.என்.நம்பியாரை நிஜ வாழ்க்கை வில்லனாக நினைக்கும் அளவிற்கு மக்கள் மனநிலை இருந்தது.
திரைப்படத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் எம்.ஜி.ஆரை தாக்க வரும் நம்பியாரை பார்த்த உடன், "தலைவரே, எழுந்திருங்க. கத்தியால குத்த வர்றான்", என்று குரல் எழுப்புமளவிற்கு அவரது ரசிகர்கள் அப்பாவிகளாக இருந்தது அவருக்கு இன்னும் வசதியாகப் போனது.
ரசிகர்களை தொண்டர்களாகவும், மக்களை ரசிகர்களாகவும் மாற்றும் ரசவாதத்துடன் தான் எம்.ஜி.ஆரின் திரைப்படங்களின் திரைக்கதையும், வசனமும், பாடலும் அமைக்கப்பட்டன.
அப்படி தான் நாடோடி மன்னன் திரைப்பட வசனங்கள். எம்.ஜி.ஆர் எப்படி மக்கள் மனதில் இடம்பிடித்தார் என்பதற்கான உதாரணம்.
அரசன் இறந்து விட்ட நேரத்தில் மார்த்தாண்டன் அரசவையால் அரசனாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறான். ஆனால் இன்னொரு கும்பல் பின்னிருந்து ஆள்கிறது. உணவு இல்லாமல் சமூகத்தில் பதற்றம். மக்கள் வீராங்கன் தலைமையில் போராடுகிறார்கள். மார்த்தாண்டன், வீராங்கன் இரு பாத்திரங்களையும் எம்.ஜி.ஆரே ஏற்று நடித்தார்.
மார்த்தாண்டன் இடத்தில், வீராங்கன் எம்.ஜி.ஆர் மன்னராகப் பதவி ஏற்க வேண்டிய சூழல். அப்போது சில நிபந்தனைகளை விதிக்கிறார் வீராங்கன். அப்போது நடக்கும் உரையாடல்.
"நான் சாதாரணக்குடியில் பிறந்தவன். பலமில்லாத மாடு, உழமுடியாத கலப்பை, அதிகாரமில்லாதப் பதவி இவைகளை நான் விரும்புவதே இல்லை. உங்கள் கட்டாயத்திற்காக மன்னனாக இருக்க சம்மதிக்கிறேன். ஆனால் சட்டமியற்றும் அதிகாரம் என் கையில் தான் இருக்க வேண்டும்", வீராங்கன்.
"மக்களின் நிலை அறியா புதியவனை பதவியில் அமர்த்தி, அதிகாரத்தை அவன் கையில் கொடுப்பது ஆபத்து வீராங்கா".
"மக்களின் நிலை அறியாதவன் நானா, நீங்களா ?. அமைச்சரே நீங்கள் மாளிகையில் இருந்து மக்களைப் பார்க்கிறவர்கள். நான் மக்களோடு இருந்து மாளிகையை கவனிக்கிறவன். பெரிய இடத்தின் உள்ளே புகுந்து தான் என் உலகம் மாறியிருக்கிறது. என் உள்ளம் மாறிவிடவில்லை".
வீராங்கனாக எம்.ஜி.ஆரின் இந்த வசனங்கள் ஒரு எதிர்காலத் தலைவரின் பிரகடனமாகவே மக்களால் பார்க்கப்பட்டிருக்கிறது.
மன்னனாகப் பொறுப்பேற்கும் வீராங்கன் அரசவையில் வெளியிடும் அறிவிப்புகள் அடுத்து.
"மற்றவர்கள் பின்பற்றுவதற்காக நானே முதலில் செய்து காட்ட விரும்புகிறேன்.
வேலை செய்ய முடியாத வயோதிகர்களுக்காகவும், கூன், குருடு, முடம் போன்றவர்களின் வாழ்வுக்காகவும் வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க தொழில் நிலையங்கள் அமைப்பதற்காகவும், பள்ளிகள் கட்டுவதற்காகவும் என்னுடைய சொந்த சொத்தில் பாதியை அளிக்கிறேன்", வீராங்கனாக எம்.ஜி.ஆரின் இந்த அறிவிப்பு உண்மையாக எம்.ஜி.ஆர் அறிவித்ததாகவே மக்கள் மனதில் பதிந்திருக்கிறது. இதுவே பிற்காலத்தில் அவர் வள்ளலாக பார்க்கப்பட அடிப்படையாக அமைந்திருக்கும்.
"பெரியோர்களே, பொதுமக்களே நம் நாட்டின் நலன் கருதி சில புதிய சட்டங்களை அவசரமாக நிறைவேற்றி, உடனடியாக அமலுக்கு கொண்டு வர விரும்புகிறேன்", மன்னன் அறிவிக்க, அறிவிப்பு துவங்குகிறது.
"உழுபவனுக்கே நிலம் உரிமையாக்கப் படுகிறது. உரிமைக்காரருக்கு நஷ்ட ஈடு, நிலத்தின் வருமானத்தில் கால் பங்கு.
விளைச்சல் காலத்தில் நிலவரி விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு, இரண்டாண்டுகள் தொடர்ந்து விளையாமல் போனால் குடும்பத்தின் தேவைக்கேற்ப மானியம் வழங்கப்படும்.
பெரிய மாளிகைகளில், சிறு எண்ணிக்கை கொண்ட குடும்பங்கள் வாழ்வது கூடாது. ஒரு பகுதி அவர்களுக்கு போக, மீதிப் பகுதி குடிசை வாழ்வோரை கொண்டு வைக்கப்படும். "
"குடிசைகளை என்ன செய்வது?" , அமைச்சர் குறுக்கிட
"தேவை இல்லாத காரணத்தால் குடிசைகள் கொளுத்தப்படும்", மன்னர் பதில் அளிக்கிறார்.
அறிவிப்பு தொடர்கிறது,
" தொழில் முதலீடு செய்பவர்களுக்கு லாபத்தில் பத்து சதவீதமும்மற்றவை தொழிலாளர்களுக்கும் பிரித்துத் தரப் பட வேண்டும்."
"அப்படி என்றால் பணக்காரர்களே இருக்க மாட்டார்களா?", கேள்வி குறுக்கிடுகிறது.
" தவறு. பணக்காரர்கள் இருப்பார்கள், ஏழைகள் இருக்க மாட்டார்கள் ", அரசனாக வீற்றிருக்கும் எம்.ஜி.ஆர் புன்னகையோடு அறிவிக்கிறார்.
திரையரங்குகளில் இருந்த ரசிகர்கள், எம்.ஜி.ஆர் தம்மிடம் நேரடியாக இதை அறிவித்ததாக உணர்ந்திருப்பார்கள்.
அறிவிப்பு , " அய்ந்து வயதான உடனே குழந்தைகளை கட்டாயமாக பள்ளிகளில் சேர்க்க வேண்டும். தவறினால் பெற்றோர்களுக்கு தண்டனை உண்டு".
"வசதி இல்லாத பெற்றோர்கள் என்ன செய்வது?", நக்கல் கேள்வி.
" அவசரப்படாதீர்கள்", கையமர்த்துகிறார் எம்.ஜி.ஆர்.
"பள்ளிப் படிப்பு முடிந்து தொழிலில் ஈடுபடும் வரை, மாணவர்களை பராமரிக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது", அறிவிப்பாளர்.
" பொக்கிஷம் காலி", வில்லன் நம்பியார் பொங்குகிறார்.
"மக்களிடம் இருந்து பெற்ற வரிப்பணத்தை மக்களுக்காக செலவிடுகிறோம்", அரசர் எம்.ஜி.ஆர் பதிலளிக்கிறார்.
கலப்பு மணம் செய்வோருக்கு அரசாங்க செலவில் திருமணம் செய்து வைக்கப்படும். கலப்பு மணத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அரசாங்க உத்தியோகத்தில் முதல் சலுகை அளிக்கப்படும். "
திராவிட இயக்கத்தின் சாதி ஒழிப்பிற்கான புரட்சிகர நடவடிக்கை இங்கு வீராங்கன் அறிவிப்பாக வெளிப்பட்டது.
"பிச்சை எடுப்பது குற்றம், பிச்சை இடுவதும் குற்றம்.
விவசாயிகள் குடும்பம் ஒவ்வொன்றிற்கும் ஒரு வீடு, அய்ந்து காணி நிலம், இரண்டு காளைகள், நாலு மூட்டை விதை நெல், ஒரு கலப்பை தரப்படும்."
"விவசாயிகளையே பார்க்கிறார் மன்னர். நகரத்தைப் பற்றி கவலையேப் படவில்லையே", ஒரு கலகக் குரல்.
முழுவதையும் கேளுங்கள் ", அரசர் எம்.ஜி.ஆர்.
" நகரத்தில் வாழ்பவருக்கு திறமைக்கேற்ற தொழில் கொடுக்கப்படும். ஒவ்வொருவருக்கும் தேவைக்கேற்ற ஊதியம் கொடுக்கப்படும். ", அறிவிப்பை கேட்ட மக்கள் ஆரவாரம் செய்கிறார்கள். " இதுவல்லவா சட்டம் ", என்று குரல் எழுப்புகிறார்கள்.
" இந்த சட்டங்களை நாங்கள் எதிர்க்கிறோம்", கொதிக்கிறார் வில்லன் நம்பியார். அவருக்கு துணையாக அரசவையோரும் எதிர்க்கின்றனர்.
"தேவை இல்லையா. இந்த சட்டங்கள் உங்களுக்கானது மட்டுமல்ல.", என்று அரசவையை பார்த்து கூறிய மன்னர் எம்.ஜி.ஆர் மக்களை பார்த்து," உங்கள் அபிப்ராயம் என்ன?" என்று கேட்கிறார்.
"எங்களுக்கு இந்த சட்டங்கள் தான் தேவை", மக்கள் குரல் உயர்ந்து எழுகிறது. ஆரவாரம் உச்சம் அடைகிறது.
"பார்த்தீர்களா, உட்காருங்கள்", என்று அரச சபையினரை பார்த்து இந்தப் படத்தின் அவரது தனி செய்கையான, தன் மூக்கை விரலால் சுண்டி விடுவார்.
பிறகு மக்களைப் பார்த்து, " கூடிய விரைவில் உங்கள் ஆட்சி நிறுவப்படும்", என் புன்னகைப்பார்.
அது தமிழக மக்களை பார்த்துக் கூறிய வார்த்தைகள்.
பாமர மக்களுக்கு இந்தப் புரட்சிகர திட்டங்கள் பிடித்துப் போனது.
"எம்.ஜி.ராம்சந்தர் ஆக அறிமுகமானவர், எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகி, எம்.ஜி.ஆர் எனப்பட்டு "புரட்சி நடிகர்" ஆகிப் போனார்.
ஒரு ஆட்சிக்கான செயல்திட்டங்கள் மொத்தமும், வீராங்கன் எம்.ஜி.ஆர் திட்டங்களாக அறிவிக்கப்பட்டன.
விமர்சகர்கள் தி.மு.கவின் திட்டங்களை திரைப்படங்களில் புகுத்துகிறார் எம்.ஜி.ஆர் என்று சொன்னார்கள்.
"நாடோடி மன்னன் " திரைப்பட வெற்றி விழாவில் பேசிய எம்.ஜி.ஆர், "தி.மு.க நாட்டு மக்களுக்கு பணியாற்றுகிறது
ஆளுகின்ற அரசானது இப்படித்தான் மக்களுக்கு சேவைசெய்ய வேண்டும்
என்பதை சொல்லவே நாடோடி மன்னன் தயாரிக்கப்பட்டது", என்று உரையாற்றினார்.
நாடோடி மன்னன் திரைப்படத்தை, பெரும் முதலீட்டில் தயாரித்த பிறகு எம்.ஜி.ஆர் சொன்னதாக ஒரு செய்தி உண்டு. "படம் ஓடினால் நான் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி". படம் மிகப்பெரும் வெற்றி பெற்றதும் , எந்த கொள்கைக்கா திரைப்படத்தில் நடித்தாரோ, அதன்படி வாழ்ந்து காட்டி மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்று எம்.ஜி.ஆர், மன்னரானதும் வரலாறு..........
-
''எம்.ஜி.ஆரைக் கண்டு பிரமித்த சின்னப்பா தேவர்": நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர். அத்தியாயம்-20
1945 ல் வெளியான 'சாலிவாஹனன்' எம்.ஜி.ஆரின் திரைப்பட வாழ்வில் பெரிய அளவு அந்தஸ்து அளித்த படம் என்று சொல்லமுடியாவிட்டாலும் திரையுலகில் வெற்றிபெறுவதற்காக எம்.ஜி.ஆர் சில முன்னெடுப்புகளை எடுத்துக்கொள்ளக் காரணமான படம் எனலாம். பின்னாளில் தன் திரைப்பட வாழ்க்கையில் முக்கியத்துவம் பெறப்போகும் தயாரி்ப்பாளர் ஒருவரை சாதாரண நடிகராக இந்தப் படத்தயாரிப்பின்போதுதான் எம்.ஜி.ஆர் சந்தித்தார். அவர் சாண்டோ எம்.எம்.ஏ சின்னப்பா தேவர்!
எம்.ஜி.ஆர் தன் நெருங்கிய நண்பர்களில் சிலரைத்தான் 'முதலாளி' என அழைப்பார். அந்த அரிதான மனிதர்களில் சின்னப்பா தேவர் குறிப்பிடத்தக்கவர். தேவர், எம்.ஜி.ஆரை 'ஆண்டவனே' என்று அழைப்பார். அத்தகைய நெருக்கமான நட்பு கொண்டிருந்தனர் ஒருவருக்கொருவர்.
கோவை ராமநாதபுரத்தில் 1915 ஜுன் 28-ம் தேதி பிறந்தவர், மருதமலை மருதாச்சல மூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர் என்கிற எம். எம். ஏ சின்னப்பா தேவர். பெரும் முதலாளிகள் கோலோச்சி வந்த திரையுலகில், அரைகுறை ஆங்கிலமும் கொச்சைத் தமிழுமாக திரையுலகில் வெற்றிகரமான தயாரிப்பாளராக விளங்கியவர் அவர்.
வறுமையினால் ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல்,கோவை "ஸ்டேன்ஸ் மோட்டார் கம்பெனி" யில் தொழிலாளியாக சேர்ந்து, தொடர்ந்து பால் முகவர், அரிசி வியாபாரி என அடுத்தடுத்து பல தொழில்களில் ஈடுபட்டு, எல்லாவற்றிலும் நட்டமடைந்து பிறகு சோடா கம்பெனி ஒன்றையும் கொஞ்ச காலம் நடத்தியவர். ஆனால் சோர்ந்துபோகாமல் தன் உழைப்பின்மீது நம்பிக்கையோடு தொடர்ந்து உழைத்தவர் சின்னப்பா தேவர்.
இயல்பிலேயே வீர தீர விளையாட்டுகளில் ஆர்வமுடையவரான சின்னப்பா தேவர், தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து "வீரமாருதி தேகப் பயிற்சி சாலை" என்ற உடற்பயிற்சி நிலையத்தையும் தன் இளமைப் பருவத்தில் நடத்தியவர். ஓய்வு நேரங்களில் மல்யுத்தம், கத்திச்சண்டை, கம்புச்சண்டை ஆகியவற்றில் பயிற்சி பெற்றதனால் கட்டு மஸ்தான தேகத்துடன் கம்பீரமாக இருப்பார். இதுவே அவரது வாழ்க்கையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.
நாடக உலகிலிருந்து சினிமாவுக்கு நடிகர்கள் ஊர்ந்துகொண்டிருந்த அக்காலத்தில், நாடக உலகில் வரவேற்பு பெற்றிருந்த புராண இதிகாச படங்களே, திரைப்படங்களாக மீண்டும் தயாரிக்கப்பட்டன. இது மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றன. புராண வேடங்களுக்கு ஏற்ற உடற்கட்டு மிக்க நடிகர்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தேவைப்பட்டனர். புராண படங்களை எடுப்பதில் அப்போது புகழ்பெற்றிருந்த 'ஜுபிடர் பிக்சர்ஸ்' நிறுவனம் அப்போது வரிசையாக அம்மாதிரி திரைப்படங்களைத் தயாரித்து வந்தது. பின்னாளில் பிரபலமாக விளங்கிய கலைஞர்கள் பலர் அந்நாளில் ஜுபிடரில் மாதச் சம்பள ஊழியர்கள். சின்னப்பா தேவருக்கு அந்த நிறுவனத்தின் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. மற்ற சில நிறுவனங்களிலும் அவர் தொடர்ந்து நடித்துவந்தார்.
அப்படி கிடைத்த ஒரு வாய்ப்புதான் 'சாலிவாஹனனி'ல் பட்டி என்கிற வேடம். முதன்முறையாக எம்.ஜி.ஆருடன் இணைந்த அவர் அந்தப் படத்தில், தான் எம்.ஜி.ஆரை சந்தித்த அனுபவத்தை அந்நாளைய பத்திரிகை பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்...
“கோவையில் 'சாலிவாஹனன்' படம் தயாராக ஆரம்பித்திருந்த சமயம், விக்ரமாதித்தனுக்கு துணையான பட்டி வேஷத்தை எனக்கு அதில் கொடுத்திருந்தார்கள். ஒருநாள் மேக்கப் அறையிலிருந்து முருகா என்று சொல்லியபடி வேஷம் அணிந்து வெளியே வந்தபோது, எதிரே கம்பீரத்துடன் ராஜ உடையில் ஒருவர் நின்றிருந்தார். பார்த்த மாத்திரத்திலேயே வசீகரப்படுத்தும் உருவம். தங்கத்தை ஒத்த மினுமினுப்பான தேகம்.உள்ளத்தின் தெளிந்த நிலையையும், களங்கமற்றத் தன்மையையும் காட்டும் முகம். கருணை கொண்ட ஒளி வீசும் கண்கள். நான் ஒரு வினாடி நின்றுவிட்டேன். என்னைப் பார்த்த அவரும் அப்படியே நின்றுவி்ட்டார். என் கண்கள் முதலில் பேசின. உதடுகள்மெல்ல அசைந்தன. 'நீங்கதான் பட்டியாக இதில் நடிக்கிறீர்களா...' குரலில் வெண்கலத்தின் எதிரொலி.
'ஆமாம்.'
மேலே நான் ஏதோ கேட்க விரும்புகிறேன் என்பதை அவர் எப்படியோ புரிந்துகொண்டுவிட்டார்.
'நான்தான் இதிலே விக்கிரமாதித்தன். என் பெயர் எம்.ஜி. ராமச்சந்திரன். உங்கள் பெயரை நான் தெரிந்துகொள்ளலாமா?' என்றார் அடக்கத்துடன்.
ஆச்சர்யம் விலகாமல் என் பெயர் ஊர் வகுப்பு இவற்றை சொல்ல ஆரம்பித்தேன்.
அப்போது நான் நல்ல திடகாத்திரமாக இருப்பேன். அகன்ற மார்பு, குன்றுகளை நிகர்த்த தோள்கள் என்றெல்லாம் சொல்வார்களே அதேபோல எனது தேகமும் இருக்கும். இதற்குக் காரணம் நான் செய்துவந்த தேகப்பயிற்சியும் கலந்துகொண்ட விளையாட்டுக்களுமே.
எனது தேகத்தை பார்த்த எம்.ஜி.ஆர், 'உங்க பாடியை நன்றாக வைத்திருக்கிறீர்கள். ஏதாவது தேகப்பயிற்சி செய்கிறீர்களா' என்று வினவினார். 'ஆம்' என்றேன். இப்படி எங்களது அறிமுகம் எங்களுக்குள்ளேயே நடந்தது. வேறு யாரும் எங்களை அறிமுகம் செய்து வைக்கவில்லை வணக்கம் என்ற வார்த்தையுடன் அன்று நாங்கள் பிரிந்தோம். ஆனால் அதே வார்த்தையுடன் மறுநாள் மீண்டும் சந்தித்தோம்.
தொடர்ந்து எங்களைப்பற்றிய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டோம். எங்கள் நட்பு வளர ஆரம்பித்தது. ஆலவிருட்சத்தின் வேர்களைப் போன்று ஆழமாகப் பதிந்து அதன் விழுதுகளைப்போல படர ஆரம்பித்தது.
கோவை ராமநாதபுரத்தில் வீரமாருதி தேகப்பயிற்சி சாலை என ஒன்றுள்ளது. அங்கு அடிக்கடி நான் போய் தேகப்பயற்சி செய்வேன். எம்.ஜி.ஆருடன் அறிமுகமானபின் அங்கு நாங்கள் சேர்ந்தே செல்வோம். எம்.ஜி.ஆர் அங்கு அடிக்கடி வந்து பலவிதமான தேகப்பயிற்சிகளை செய்வார். பளுதூக்குதல், பார் வேலைகள் செய்தல், மல்யுத்தம், குத்துச்சண்டை கத்திச்சண்டை சிலம்பம், கட்டாரி இப்படியாக பலப் பயிற்சிகளில் ஈடுபடுவார்.
அவர் மட்டுமே பயிற்சிகளைச் செய்துவிட்டு போக மாட்டார். அங்கு பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கும் இவற்றை பொறுமையுடன் சொல்லிக்கொடுப்பார். அவர் கற்றுக்கொடுப்பாரே தவிர, அவருக்கு யாரும் எதையும் கற்றுக்கொடுத்து நான் பார்த்ததில்லை. இவற்றையெல்லாம் நான் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருப்பேன். எனக்கும் இம்மாதிரியான ஸ்டண்ட் வேலைகளில் விருப்பம் அதிகமுண்டு என்பதை தெரிந்துகொண்ட அவர், என்னை அழைத்து. 'சினிமாவில் இப்படித்தான் கத்திச்சண்டை இருக்கவேண்டும். கம்புச் சண்டைகளும் சிலம்புச் சண்டைகளும் இப்படித்தான் அமைக்கவேண்டும்' என்று சொல்வார்.
குறிப்பாக சினிமாவில் ஸ்டண்ட் காட்சிகளை எப்படி புகுத்தவேண்டும் எந்த இடத்தில் புகுத்தவேண்டும், எப்படி அமைக்கவேண்டும் என்பதையெல்லாம் எனக்கு சொல்லிக்கொடுத்தவர் அவர்தான்.
கோவையில் என் வீடும் அவர் தங்கியிருந்த இடமும் சில அடி தூரங்களில்தான் இருந்தது. படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் நாங்கள் உலாவுவோம். அப்படி பல சமயங்களில் மருதமலை முருகன் கோவிலுக்குப் போவோம்.
ஜுபிடரில் ஸ்ரீமுருகன் படத்தில் நடித்து முடித்தபின் அவருக்கு 'ராஜகுமாரி' வாய்ப்பு வந்தது. ஆனால் அத்தனை எளிதாக அது கிடைக்கவில்லை. போராடித்தான் அப்படியொரு வாய்ப்பை பெற்றார். அதுவும் நிச்சயமானதா என்று நிலையில்லை.
அந்த படத்தில் கதாநாயகனுடன் சண்டையிடும் ஒரு முரடன்வேடம் உண்டு. 'அதில் நீங்கள்தான் நடிக்கவேண்டும்' என்றார். எனக்கு மகிழ்ச்சிதான். மறுநாள் தயாரிப்பாளர்களை சந்தித்து என்னை அந்த வேடத்துக்குப் போடும்படி சிபாரிசு செய்தார்.
'உங்களை கதாநாயகனாகப்போட்டு படம் எடுப்பது இதுதான் முதல்தடவை. அப்படியிருக்க பிரபலமில்லாத ஒருவரைப்போய் நீங்கள் இப்படி சிபாரிசு செய்யலாமா?... பெரிய ஆளாகப்போட்டு எடுத்தால் நல்ல விளம்பரம் கிடைக்கும்' என்று அவர்கள் எதிர்வாதம் செய்தார்கள்.
ஆனால் எம்.ஜி.ஆர் விடவில்லை.
'நம்மிடையே திறமையுள்ளவர்கள் இருக்கும்போது வெளி ஆள் எதற்கு? படம் எடுத்துப்பார்ப்போம். திருப்தியாக இருந்தால் வைத்துக்கொள்வோம். எந்தவித வாய்ப்பும் தராமல் ஒருவரின் திறமையை எடைபோட்டுவிடக்கூடாது தேவரையே போடுங்கள்' என்று ஆணித்தரமாக சொல்லிவிட்டார். தனது நிலையே ஆட்டம் கண்டுகொண்டிருக்கும் நேரத்தில் எதிராளிக்கு சிபாரிசு செய்த நல்ல உள்ளம் கொண்ட ஒரு நடிகரை அப்போதுதான் முதன்முறையாகப் பார்த்தேன்.
இறுதியாக அந்த வேடத்தை எனக்கே தந்தார்கள்.
'அண்ணே இந்த ஃபைட்டிங் சீன்ல பிச்சு உதறுறீங்க.. பிரமாதமாக செய்யுங்க...' என்று படம் முழுக்க உற்சாகப்படுத்தினார்.
முன்னுக்கு வரவேண்டும் என்ற ஆர்வம். அதேசமயம் எனக்கும் அவருக்கும் சேர்ந்து கிடைத்திருக்கும் முதல் பெரிய சந்தர்ப்பம். இரண்டும் எங்கள் உற்சாகத்தை வளர்த்தன.”
இப்படி தான் புகழடையாத காலத்திலேயே மனிதாபிமானம் மிக்கவராக எம்.ஜி.ஆர் திகழ்ந்ததை விவரித்திருக்கிறார் தேவர்.
எம்.ஜி.ஆரின் ஆரம்ப கால நண்பரான தேவர் பின்னாளில் படத்தயாரிப்பாளராக மாறி படங்களைத் தயாரித்தபோது எம்.ஜி.ஆர் மீதான ஒரு அவப்பெயரை நீக்கி எம்.ஜி.ஆரின் வாழ்வில் முக்கியமான ஒரு நபராகவும் மாறினார்.
திரையுலகில் எம்.ஜி.ஆருக்கு இருந்த அவப்பெயர் என்ன...அதை தேவர் எப்படி நீக்கினார்?...
தொடரும்.... .........
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., அவர்களுக்கு மிகவும் ராசியான "மே " மாதம் .....
மே மாதத்தில் வெளிவந்து வெற்றி கண்ட படங்கள் ..........
பெரிய இடத்துப் பெண் - 1963
சந்திரோதயம் - 1966
அடிமைப்பெண் - 1969
என் அண்ணன் - 1970
ரிக்க்ஷாக்காரன்- 1971
உலகம் சுற்றும் வாலிபன் -1973
நினைத்ததை முடிப்பவன் - 1975
உழைக்கும் கரங்கள் - 1976
இன்றுபோல் என்றும் வாழ்க -1977
உலக அரசியல் வரலாற்றில் ஒரு நடிகர் தனி இயக்கம் கண்டு கட்சி துவங்கிய 6 மாத நிறைவடைந்து, 7ம் மாதம் தொடங்கிய
சமயத்தில் நடைபெற்ற திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் புரட்சித்தலைவரின் அதிமுக மாபெரும் வெற்றி அடைந்த வரலாற்று சிறப்பு மிக்க மாதம் மே -1973............
-
"ஒளி விளக்கு" ... காவியம் மன்னர் மன்னவரின்
"100" பெருமிதம் ததும்பும் நிறைவான படைப்பு... இந்த காவியம் அடைந்த அற்புதமான வெற்றியை நமது ரசிகர்களே சில சமயங்களில் 1968ம் ஆண்டில் 2ம் ரேங் (இரண்டாமிடம்) வசூலில் என கருத்து தெரிவிக்கின்றனர்... 1 ரேங் எது?! அதுவும் நமது வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கும் மற்றுமொரு அற்புதமான படைப்பு "குடியிருந்த கோயில்" ...மேற்கண்ட 2 படங்களும் ஹிந்தி பட தழுவல் தாம். ஆனாலும் நம் சிற்பி அவர்கள் தம் எண்ணத்திற்கேற்ப பல்வேறு விடயங்களை தான் நமகேற்ப மாற்றி அளிக்கும் அதி உன்னத கலை மேதையாயிற்றே... அவ்வாறு உளி கொண்டு செதுக்கப்பட்ட காவியங்கள் தான் சோடை போயிருமா?!... இரண்டும் இரு வேறு முறைகளில் சிறப்பான அமைப்பாக வெளியானவை... அதனால் தான் இரண்டு காவியங்களும் முதலிடம் என கருத தக்கவை தரத்திலும், வசூலிலும்...
-
உதாரணமாக திருச்சி & தஞ்சை (tt) ஏரியாவில் " ஒளி விளக்கு" பல இடங்களில் 50 நாட்கள் தாண்டி ஓடி வசூலில் தனி பெரும் சாதனை செய்திருக்கிறார் மக்கள் திலகம்... திருச்சி - ராஜா, கும்பகோணம்- ஸ்ரீ விஜயலட்சுமி திரையரங்குகளில் மட்டும் 100 நாட்கள் ஓடிய விளம்பரம் வந்தது. ஆனால் தஞ்சை- ஸ்ரீ கிருஷ்ணா, மன்னார்குடி - ஸ்ரீ செண்பகா அரங்குகளில் 99 நாட்களில் நல்ல வசூலுடன் ஓடி கொண்டிருக்கும் போதே நிறுத்தப்பட்டது. காரணம் 100 நாட்கள் ஓடியதற்கு போனஸ் உட்பட பல பரிசுகள் அளிக்க வேண்டிய கட்டாயத்தை தவிர்க்க இது போல திரையரங்க உரிமையாளர்கள், பட விநியோகஸ்தர்கள் செய்து பலி கொடுக்க நம் தலைவர் படங்கள் மாட்டிக்கொண்டன... பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி ஊர்களில் வெற்றிகரமாக 11 வாரங்கள் அட்டகாசமாக ஓடியது ஒளி விளக்கு. அதேபோல் " குடியிருந்த கோயில்" பல்வேறு இடங்களில் 10 - 13 வாரங்கள் சூப்பர் வசூலுடன் 1968ம் வருடத்தை கலக்கியது எனில் மிகையாகாது...
-
#எம்ஜிஆர் #மதித்த #தாய்குலம்
பெண்களை மிகவும் மதித்தவர் எம்.ஜி.ஆர்.அவர் அனைத்துப் பெண்களையும் தாயாக பாவித்தார்.
ஒருமுறை எம்.ஜி.ஆர் சத்யா ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் இருந்தார்.இடைவேளையில் ஒரு பெண் கையில் குழந்தையுடன் வந்து எம்.ஜி.ஆர் காலில் விழுந்து கண்ணீர் விட்டார்.
கணவரை இழந்த அந்த பெண் உணவுக்கே கஷ்டப்படுவதாக கூறினார்.உடனடியாக எம்.ஜி.ஆர் அவரது உதவியாளரை அழைத்து அந்த பெண்ணை அவரது அலுவலகத்தில் உட்கார செய்யுமாறு உத்தரவிட்டார்.அதன்படி உதவியாளரும் செய்தார்.
சிறிது நேரம் சென்றபின் எம்.ஜி.ஆர். வரும் நேரம்.உதவியாளர் உள்ளே வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அந்த அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். தனது தாயார் சத்தியாவின் முழு உருவப் படத்தை வைத்து, அதன் முன்பு அவருடைய ஆசனத்தை வைத்திருப்பார்.தினமும் அம்மாவை வணங்கிவிட்டு அந்த இருக்கையில் உட்காருவது வழக்கம்.அவரைத்தவிர வேறு யாரும் அதில் உட்காருவது இல்லை.
ஆனால் அறையில் உட்கார வைக்கப்பட்ட பெண், அதில் உட்கார்ந்து வியர்வை வழிய அசதியில் தூங்கிக் கொண்டிருந்தார்.அதைப் பார்த்த உதவியாளர் அதிர்ச்சியில் நின்றார்.
அதே நேரம் எம்.ஜி.ஆரும் உள்ளே வந்தார்.அவர் அந்த பெண் அசந்து தூங்குவதைப் பார்த்து சிரித்துக் கொண்டே, மின் விசிறியைப் போட்டு விட்டார்.பின்னர் அங்கு விளையாடிக்கொண்டியிருந்த குழந்தையை தூக்கிக் கொஞ்சிக்கொண்டு இருந்தார்.
அந்த பெண் கண் விழித்தபோது, அஞ்சிய பெண்ணைப் பார்த்து, "உன் வீட்டுக்கு அனைத்து உதவிகளும் வரும். நீ செல் அம்மா" என்று எம்.ஜி.ஆர் கூறி வழியனுப்பி வைத்தார்.
இதுதான் எம்.ஜி.ஆரின் பண்பு.எல்லா பெண்களையும் தாயாக நேசித்தவர். இந்த சம்பவம் இலக்கியத்தில், முரசுக்கட்டிலில் அமர்ந்த பிசிராந்தையாருக்கு சேர அரசன் வெண்சாமரம் வீசிய நிகழ்ச்சியை ஒத்துள்ளது அல்லவா!!
எம்.ஜி.ஆர் வெள்ளை மனம் கொண்டவர்.எவராலும் வெல்ல முடியாத 'வெல்ல' மனம் கொண்டவர்.திரைப்படத்தில் அவரை வீழ்த்த நினைத்தவர்கள் வீழ்ந்து போனார்கள்.அதைப் போலவே நிஜத்திலும் அவரை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள்.அவர் வெற்றி பெற்ற போதெல்லாம் அந்த வெற்றிக்குக் காரணமாக தமக்கு ஆதரவளித்த மக்களையே கூறினார். எனவேதான் அவர் மக்களாட்சியைக் கொடுத்தார்..........
-
தேவருடன் எம்.ஜி.ஆர் செய்துக்கொண்ட ஒப்பந்தம்; நூற்றாண்டு நாயகன் எம்*.ஜி.ஆர். அத்தியாயம் -21.
'சாலிவாஹனன்' படத்தின் படப்பிடிப்பில் சந்தித்துக்கொண்ட சாண்டோ சின்னப்பா தேவர் - எம்.ஜி.ஆர் நட்பு இறுகி இருவரும் தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தனர். பிரபலமாகாத காலத்தில் பழக்கமான இருவரும் புகழடைந்தபின்னும் அதைத் தொடர்ந்தனர். நடிகரிலிருந்து தயாரிப்பாளராக உயர்ந்த சின்னப்பா தேவர் எம்.ஜி.ஆரைக் கொண்டே தன் முதற்படத்தைத் துவக்கினார். தேவர் படங்களில் தொடர்ந்து நடித்ததன்மூலம் திரையுலகில் எம்.ஜி.ஆர் தன்மீதிருந்த அவப்பெயரை நீக்கிக்கொண்டார்.
ஆம், 'எம்.ஜி.ஆர் படங்கள் குறித்த தேதியில் வெளிவராது. அந்தளவுக்கு கால்ஷீட் சொதப்புவார். தன் விருப்பம்போல்தான் படத்தைத் திரையிட அனுமதிப்பார். தயாரிப்பாளரை படுத்தி எடுத்துவிடுவார். மொத்தத்தில் எம்.ஜி.ஆரை வைத்துப் படமெடுப்பது லாபம்தான் என்றாலும் அது யானையைக் கட்டித் தீனிபோடுவது போன்ற பெரும் பணி' - இவைதாம் அந்தப் புகார்கள். எம்.ஜி.ஆருக்கு இருந்த இந்தக் களங்கத்தைத் துடைத்தவர் சின்னப்பா தேவர்தான். 50 களின் மத்தியில் தேவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்திருந்தது. அதேசமயம் கையில் கொஞ்சம் காசும் இருந்தது. தன் தம்பி திருமுகமும் சினிமாவில் எடிட்டிங் மற்றும் இயக்கத்தில் அனுபவம் பெற்றிருந்ததால் சினிமாப்படங்கள் தயாரிப்பதென்ற முடிவுக்கு வந்தார். முடிவெடுத்ததும் நேரே போய் அவர் நின்றது எம்.ஜி.ஆரின் லாயிட்ஸ் சாலை இல்லத்தில்தான்.
வீட்டின் வாசலில் சில நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரிடம், “முருகா நான் படம் தயாரிக்கிறேன். நீங்கதான் ஹீரோ. நல்லபடியா நடிச்சுக்கொடுங்க... இந்தாங்க அட்வான்ஸ்” என வெள்ளந்தியாக சொன்ன தேவரை ஆச்சர்யத்துடன் பார்த்தார் எம்.ஜி.ஆர். காரணம் எம்.ஜி.ஆருக்கு அப்போது கொஞ்சம் மார்க்கெட் குறைந்திருந்த நேரம். தன் படங்கள் சரிவர போகாத நேரத்திலும் தன் மீது நம்பிக்கை வைத்து தேவர் தன்னை ஒப்பந்தம் செய்யவந்ததே எம்.ஜி.ஆரின் ஆச்சர்யத்துக்கு காரணம்.
அதேசமயம் மார்க்கெட் குறைந்திருந்த அந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு அப்போது தேவை ஒரு நல்ல கதையும் அதை எடுக்க சினிமாவில் அனுபவமும் நிர்வாகத்திறமையும் கொண்ட ஒரு பெரிய நிறுவனம். இதனாலேயே பல சிறுநிறுவனங்கள், அனுபவமில்லாதவர்களிள் வாய்ப்புகளை ஒப்புக்கொள்ளாமல் அப்போது தவிர்த்துவந்தார் எம்.ஜி.ஆர். மீண்டும் திரையுலகில் புகழ்வெளிச்சம் கிடைக்க ஒரு பெரிய நிறுவனத்தை எதிர்பார்த்திருந்த நேரத்தில்தான் முன்பணத்துடன் அவரைத்தேடி வந்தார் தேவர்.
படம் இல்லாத நேரத்தில் வரும் பட வாய்ப்பை ஒப்புக்கொள்வது புத்திசாலித்தனம் என்றாலும், 'சினிமா தயாரிப்பில் தேவருக்கு இது முதல்முயற்சி.. சினிமா தயாரிப்புக்கு முற்றிலும் புதியவர். ஏற்கெனவே, தான் ஆரம்பித்த சில தொழில்களில் நட்டங்களை சந்தித்தவர். அனுபவமிக்க புகழ்பெற்ற நிறுவனங்களே வெற்றியைத் தக்கவைக்கமுடியாமல் தள்ளாடிக்கொண்டிருக்கும் நிலையில் தேவர் படம் தனக்கு எந்தளவுக்கு வெற்றியைத் தரும்' என்ற சிந்தனை எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. ஆனாலும் யோசித்து நேரம் கடத்தவில்லை. தேவர் மீது முழு நம்பிக்கையோடு மறுபேச்சின்றி வீட்டின் வாசலிலேயே வைத்து அட்வான்ஸ் தொகையைப் பெற்றுக்கொண்டார். எம்.ஜி.ஆரின் இந்த உடனடி சம்மதத்திற்குப் பின்னணி ஒன்றுண்டு.
அது என்ன பின்னணி?!
எம்.ஜி.ஆரும் தேவரும் தொடர்ந்து படங்களில் இணைந்து நடித்துக்கொண்டிருந்த நேரம் அது. 'மர்மயோகி' படத்தில் தேவரும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்துக்கொண்டிருந்த போது இருவருமே சினிமாவில் வெற்றிக்கோட்டைத் தொடப் போராடிக்கொண்டிருந்தார்கள்.
கோவையில் படப்பிடிப்பு நடக்கும் சமயங்களில் இருவருக்கும் ஓய்வு கிடைத்தால் மருதமலைக்குச் செல்வார்கள். ஒருமுறை அப்படிச் சென்றபோது, “முருகா, திறமையும் உழைப்பையும் போட்டு சினிமாவுல நாம் போராடுகிறோம். ஒருநாள் நாம இதில் கண்டிப்பாக வெற்றிபெறுவோம். அப்படி நம்மில் யார் ஒருவர் நல்ல நிலைக்கு வந்தாலும் மற்றொருவரை மறக்காமல் கைதூக்கிவிடவேண்டும்”- என்றார் தேவர். அதற்கு எம்.ஜி.ஆர், “கண்டிப்பாண்ணே” என உறுதி கொடுத்தார். தேவர் தன்னை ஒப்பந்தம் செய்ய வந்தபோது இந்த 'பழைய ஒப்பந்தம் எம்.ஜி.ஆரின் நினைவில் ஒருகணம் வந்துபோயிருக்கவேண்டும். அதனால்தான் படத்தின் வெற்றி தோல்வியைப்பற்றி சிந்திக்காமல் 'தாய்க்குப்பின் தாரம்' என்ற அந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
இரண்டு நண்பர்களின் நம்பிக்கையும் வீண்போகவில்லை. 'தாய்க்குப்பின் தாரம்' வெளியானபின் எம்.ஜி.ஆரின் மார்க்கெட் மீண்டும் உயர்ந்தது. மீண்டும் பெரிய தயாரிப்பாளர்களின் கார்கள் லாயிட்ஸ் சாலையில் அணிவகுக்க ஆரம்பித்தன. தேவரும் தொடர்ந்து படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார். பெரிய பெரிய நிறுவனங்களே மூக்கில் விரல்வைக்கும் அளவுக்கு படத்தயாரிப்பில் தேவர் ஒரு விஷயத்தைச் செயல்படுத்திக் காட்டினார். ஆம், தன் படங்களின் பூஜையன்றே அதன் வெளியீட்டுத்தேதியையும் அறிவிப்பார்.
ஒருநாள் முன்னதாகவோ தள்ளியோ இன்றி, குறித்தநேரத்தில் அது வெளியாகும். பெரிய நிறுவனங்களே பின்பற்றமுடியாத இந்த விஷயத்தை தேவர் எளிதாக சாத்தியப்படுத்தினார்.
தாய்க்குப்பின் தாரம் படத்தில் துவங்கி 1973 ல் வெளியான நல்லநேரம் வரை மொத்தம் 16 படங்கள் தேவர் ஃபிலிம்சுக்கு நடித்துக்கொடுத்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
ஆச்சர்யம் என்னவென்றால், 'படத்தைத் தாமதமாக முடித்துக்கொடுப்பார்’ என்றும் ’சரியான ஒத்துழைப்பு தரமாட்டார்' என்றும் கூறப்பட்ட எம்.ஜி.ஆரின் இந்தப் படங்கள் அனைத்தும் குறித்த தேதியில் வெளியாயின என்பதுதான். இதில் 'தேர்த்திருவிழா' என்ற படம் 16 நாட்களில் தயாரிக்கப்பட்டு வெளியானது என்பது திரையுலகம் இன்றும் நம்பாத விஷயம். இப்படி எம்.ஜி.ஆரை வைத்து, தான் தயாரித்த படங்களை குறித்த தேதியில் வெளியிட்டு அவருக்கு இருந்த அவப்பெயரை நீக்கினார் தேவர். எம்.ஜி.ஆர் படங்கள் தாமதமாவதற்கு எம்.ஜி.ஆர் மட்டுமே காரணமில்லை என்று திரையுலகம் அப்போதுதான் உணர்ந்தது.
தன் திரையுலக வாழ்க்கையில் ஒரு தயாரிப்பாளரின் படங்களில் எம்.ஜி.ஆர் அதிகம் நடித்திருக்கிறார் என்றால் அவர், சின்னப்பா தேவர் ஒருவர்தான். எம்.ஜி.ஆர், ஜானகியை மணந்தபோது சாட்சிக் கையெழுத்திட்டதும் தேவர்தான் என்பது பலரும் அறியாத செய்தி.
தொடரும்.........