https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...84299152_n.jpg
Printable View
The more loyal you are to others, the more disappointment you encounter and experience.
The Google Fact
யார் முதலில் விட்டுக்கொடுப்பது?
இருவருக்கிடையே கருத்து வேறுபாட்டினால் வரும் சண்டை, பெரும்பாலும் யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்தால், விரைவில் சுமூகமான முடிவிற்கு வந்துவிடும், ஆனால் யார் முதலில் விட்டுக்கொடுப்பது?
இருவரில், யாருக்கு அன்பு அதிகமோ; இருவரில், யார் அறிவாளியோ; அவர்தான், முதலில் விட்டுக்கொடுப்பார்.
ஏனென்றால், அன்பு உடையவர் பிறர் வருந்த பொறுக்க மாட்டார், மற்றும் அன்பு உடையவர்களிடம் தன்முனைப்பு (ego) மிகவும் குறைவாக இருக்கும், ஆகையால் அவர்களால் எளிதாக விட்டுக்கொடுக்கமுடியும்.
அறிவாளிகள், ஒரு பிரச்சனைக்கு எளிய வழியில், யாருக்கும் பாதகமில்லாமல், தீர்வு காண முயல்வார்கள்.
ஆகையால் அன்பும் அறிவும் உடையவரே முதலில் விட்டுக்கொடுக்க முன்வருவர். நீங்கள் அன்பும் அறிவும் உடையவரா என்பதை நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்!
- வேதாத்திரி மகரிஷி