-
அன்பு பம்மலார் சார்,
ஒலிம்பிக்ஸ் ஸ்பெஷல்
அடடா! என்ன ஒரு டைமிங் பதிவு சார்! ஆச்சர்யம், வியப்பு, திகைப்பு, சந்தோஷம், திருப்தி என அத்தனை உணர்ச்சிகளையும் ஒருசேர வரவழைத்து வைத்து விட்டீர்கள்.
இன்ன நேரத்தில் இதைத் தர வேண்டும் என்பதில் உங்களை அடித்துக் கொள்ள ஆளே இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.
மிக மிக அழகான, நேர்த்தியான பதிவு. தலைவரின் நெஞ்சக்குமுறல் பொங்கி வரும் வெள்ளப் பிரவாகமாய் பேட்டி முழுதும் பெருக்கெடுத்து ஓடுகிறது. நம் நாட்டுக்கான அங்கீகாரம் எங்கும் இல்லை, எதிலும் இல்லை என்ற அவருடைய ஆதங்கம் நியாயமானதே! காரணம் பாழாய்ப் போன அரசியல். பல திறமைசாலிகள் அடையாளம் காணப்படாததற்கு இந்த அரசியல் தான் காரணம். உலகம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய நடிகர் திலகத்திற்கு நம் நாட்டில் கிடைத்த அங்கீகாரம் தான் தெரியுமே!
"என்னென்னமோ நடக்குது... ஒரு வார்த்தை இதுவரைக்கும் நான் வாய் திறந்து சொன்னது கிடையாது...
எப்ப நீ இல்லன்னு ஆயிட்டியோ அப்ப நீ எந்த விஷயத்திலும் தலையிடக் கூடாதுங்குறது எனக்கு நல்லாத் தெரியும்...
இது தெரியலன்னா இருந்து என்ன புண்ணியம்...
நீ இல்லேன்னு சொன்னா தலையிடாதேன்னுதானே அர்த்தம்"...
ஆஹா! நடிகர் திலகம் என்ற அந்த தீர்க்கதரிசியின் வரிகள் இன்றைய சூழ்நிலைகளில்கூட எவ்வளவு அழகாகப் பொருந்துகின்றன! நமக்காகவே நடிகர் திலகம் அப்போதே சொல்லிவிட்டாரோ! பலதடவை பலரும் நெருப்பிலே இட்டு பொசுக்கி சாம்பலாக்கினாலும் பீனிக்ஸ் பறவை போல உயிர்த்து வந்து நமெக்கெல்லாம் உவகை தந்தாரே நமது இதய தெய்வம்... அவருக்கிருந்த அதே தன்மான உணர்வு அவர் பக்தர்களான நமக்கு இயற்கையாக அமைந்ததில் ஆச்சரியமென்ன!
விளையாட்டுகளில் நடிகர் திலகத்திற்கு எப்போதுமே மிகுந்த interest உண்டு. அப்போதெல்லாம் தியேட்டர்களில் படம் பார்க்கச் செல்லும் போது படம் துவங்குமுன் காட்டப்படும் செய்திப்பிரிவு படங்களில் (இந்தியன் நியூஸ் ரிவ்யூ) பல கிரிக்கெட் போட்டிகளை அவர் வெளிநாடுகளில் கண்டு களித்ததை நான் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். தலைவருடன் அவருடைய உடன் பிறவா சகோதரி 'இசைக்குயில்' லதா மங்கேஷ்கர் அவர்களும் போட்டிகளை கண்டு ரசிப்பார். ('சிவந்த மண்' காவியத்தில் காளையை அடக்கும் காட்சிகளை படு உற்சாகமாய் கண்டு ரசிப்பாரே அது போல). ம்... அதெல்லாம் ஒரு பொற்காலம்.
ச(சா)ரி! எங்கோ ஆரம்பித்து எங்கோ வந்து விட்டேன்...
தலைவரின் ஐந்து பக்க நேர்க்காணலை ஒரேநேரத்தில் பதிவிட்டு எங்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்த திரியின் பசும்பொன்னே! எங்கள் பத்தரை மாற்றுத் தங்கமே! ஈடு இணை உண்டோ உங்களின் அரிய சேவைக்கு! நன்றிகள்! வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!. தொடரட்டும் தங்களுடைய சர்ப்ரைஸ் அசத்தல்கள்.
-
அன்பு பம்மலார் சார்,
'சித்தூர் ராணி பத்மினி' காவியத்தின் 'விரைவில் வருகிறது' விளம்பரம் பேஷ்! "சித்தூர் ராணி பத்மினி" முதல் வெளியீட்டு விளம்பரங்கள் தொடரும்...என்ற செய்தி தேனாய் இனிக்கிறது.
'என்னைப் போல் ஒருவன்' மறு வெளியீட்டு விளம்பரம் உங்களை விட்டால் இது போன்ற சூப்பர் பதிவுகளுக்கு யார் என்று மீண்டும் கேட்க வைக்கிறது.
திருநெல்வேலி 'சென்ட்ரல்' திரையரங்கில்"எங்க மாமா" தன்னந்தனிக் காட்டு ராஜாவாக சாம்ராஜ்யம் புரிவது ஜோர்.
அற்புத பதிவுகள் அனைத்துக்கும் ஆனந்த ஆராதனை நன்றிகள்.
-
நெல்லை சென்ட்ரல் திரையரங்கில் எங்க மாமா ... நாம் அங்கு இல்லையே என்று அப்போது ஏங்குவோம். இப்போது சென்ட்ரலும் நம் மிடம் எங்க மாமாவும் நம்மிடம். உட்கார்ந்த இடத்தில் சென்ட்ரலையும் பார்க்கலாம், எங்க மாமாவையும் பார்க்கலாம்.
எப்படி
http://nellailive.in/wp-content/uplo...heatreTvli.jpg
http://youtu.be/S2DdvvlgpIA
-
இன்று பிறந்த நாள் காணும் நமது நண்பர் சங்கரா 1970 அவர்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். மென்மேலும் சிறப்பு பெற்று நீண்ட ஆயுளுடனும் நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ்க.
புத்தம் புதிதாய் இணையத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல் அவருக்காக
http://youtu.be/7aDsRLCqxsA
-
சில சமயங்களில் மிகவும் முக்கியமான படங்கள் தோல்வி அடையும் போது பல விதமான பரிமாணங்களில் காரணங்கள் அலசப் படும். ஆனால் சில படங்களுக்கு காரணங்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாய்த் தெரிந்து விடும். அதற்கு உதாரணமாய்...
http://youtu.be/yxRGctq9SJc
-
'ஸ்போர்ட்ஸ் மேன்' நடிகர் திலகம் (ஒலிம்பிக்ஸ் சிறப்பு வீடியோப் பதிவு)
அன்பு பம்மலார் சார் வழங்கிய அற்புத பதிவான 'ஒலிம்பிக்ஸ் ஸ்பெஷல்' நடிகர் திலகத்தின் கட்டுரையை சார்ந்து அடுத்து நடிகர் திலகம் ஸ்போர்ட்ஸ்மேனாக தூள் கிளப்பும் ஒரு காட்சியை 'இரத்தத் திலகம்' படத்தில் 'ஒலிம்பிக்ஸ் ஸ்பெஷல்' ஒலி-ஒளிக் காட்சியாக முதன் முதலாக இணையத்தில் கண்டு ரசிப்போமா!
http://www.youtube.com/watch?v=fMOO34G2dLA&feature=player_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
-
-
ஓய்வின்றி உழைத்து நடிகர் திலகத்திற்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ள நம்முடைய நண்பர்கள் பம்மலார் மற்றும் வாசுதேவன் ஆகியோரின் சிறந்த பதிவுகளுக்கு உள்ள வரவேற்பிற்கான சான்று ...
வாசுதேவன் பாகம் பத்தினைத் துவக்கி வைத்த நாள் - ஜூன் 14.06.2012.
பாகம் பத்தில் ஜூன் 30.06.2012 முடிய இடம் பெற்ற பதிவுகள் எண்ணிக்கை - 548
பாகம் பத்தில் ஜூலை 1 முதல் இன்று 29.07.2012 காலை 9.40 வரை இடம் பெற்ற பதிவுகளின் எண்ணிக்கை - 132.
பாகம் பத்தின் மொத்த பார்வையாளர் எண்ணிக்கை சுமார் 48000. நாட்கள் 46.
ஜூன் 30 வரையிலான பார்வையாளர் எண்ணிக்கை தெரியவில்லை.
தற்போது நமது பம்மலார் துவக்கி வைத்துள்ள திரியின் துவக்க நாள் - 22.07.2012
இன்று 29.07.2012 காலை 9.40 மணி வரை இடம் பெற்றுள்ள பதிவுகளின் எண்ணிக்கை 217.
பார்வையாளர் எண்ணிக்கை சுமார் 6,500 . நாட்கள் 8.
இதனை வெறும் எண்ணிக்கை சாதனையாக மட்டும் கொள்ளாமல் உழைப்பின் அடையாளமாய்க் காண வேண்டும், நண்பர்களின் வரவேற்பின் அடையாளமாய்க் காண வேண்டும். பெரும்பான்மையோர் விரும்பாமல் இந்த எண்ணிக்கையும் இந்த அளவிற்கு பதிவுகளும் இடம் பெறுமா என்பது ...
சிந்திக்க வேண்டிய விஷயம்...
-
டியர் ராகவேந்திரன் சார்,
தங்கள் அன்பிற்கு உயரிய நன்றி!
http://i295.photobucket.com/albums/m...ri/Nandri6.gif
-
]அன்புள்ள நண்பர் திரு பம்மலர் சார் அவர்களுக்கும் , திரு வாசுதேவன் சார் ,அவர்களுக்கும் எனது இனிய நன்றியினை தெரிவித்து கொள்ளுகின்றேன் .http://i47.tinypic.com/2h4lv86.png