http://i46.tinypic.com/2nvgr3q.jpg
Printable View
ஈடேதும் இல்லாத கலைச்சேவையில் தனி இடம் கண்ட உமைக் கண்டு இப்பூமியில்
ஆடாத மனமும் உண்டோ
கவியரசு கண்ணதாசன்Attachment 1976
மனதோடு மனோ நிகழ்ச்சியிலிருந்து கங்கை அமரன் அவர்களது பேட்டியை பதிவிட்டதற்கு நன்றிகள். இதுவரை கேள்விப்படாத தகவல்கள் நன்றி திரு. கங்கை அமரன் சார்.
மக்கள் திலகம் அவர்களது இயல்பான நடிப்பு பல பரிமாணங்களைக் கொண்டது. அதில் இல்லாத பாவங்களே இல்லை எனலாம். எனினும் பொதுவான குற்றச்சாட்டு சோகக் காட்சிகளில் அவரது நடிப்பினைப் பற்றியது. சோகக் காட்சிகளில் அவரது மிகச் சிறந்த நடிப்பிற்கு உதாரணமாக பின்வருவனவற்றைச் சுட்டிக்காட்டலாம்.
1. தாய்க்குப் பின் தாரம் தந்தையைப் பிரிந்து சிதையின் முன் கதறி அழும் காட்சி - இதற்கு உருகாதவர்கள் உணர்ச்சியற்றவர்களே
2. தாய்க்குத் தலைமகன் படத்தில் அண்ணனை (அசோகனை) இழந்து கதறும் காட்சி
3. பெற்றால் தான் பிள்ளையா படத்தில் தனது வளர்ப்பு மகனை இழந்து நீதிமன்றத்தில் அய்யா சட்டப்படி என் மகனை என்கிட்ட ஒப்படைக்க முடியாவிட்டாலும் தர்மப்படி பிச்சையாவது கொடுங்கய்யா என்று மன்றாடும் காட்சி
4. பெரிய இடத்துப் பெண் படத்தில் பெற்றமகனை பார்க்க இயலாத சூழலில் கலங்கும் காட்சி
5. நாடோடி படத்தில் தன் காதலியின் முகத்தைக் கூட பார்க்க இயலாத கொடுமையான நிலையில் அவளைப் புதைத்த இடத்தில் சென்று கதறும் காட்சி
6. ஊருக்கு உழைப்பவன் படத்தில் இறந்த மகனின் நினைவாக அவன் துயில் கொண்ட தொட்டிலின் முன் கதறும் காட்சி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். எம்.ஜி.ஆர் முகத்தை கைகளால் மறைத்துக் கொள்வதும் இல்லை. சுவரின் பக்கமாகத் திரும்பிக் கொள்ளவும் இல்லை. இது போல இன்னும் எண்ணற்ற சோகக் காட்சிகளைச் சொல்லலாம். (நல்லவன் வாழ்வான், தாய் சொல்லைத் தட்டாதே, திருடாதே இன்னும் பல படங்கள்) இக் காட்சிகளைக் கண்டு கலங்காத கண்களே இல்லை எனலாம் . நவரசங்களையும் பிழிந்து கொடுக்கும் அற்புத நடிகர் இந்தியாவின் சிறந்த நடிகருக்கான பாரத் பட்டம் (1971) பெற்ற எம்.ஜி.ஆர் அவர்கள்.
மக்கள் திலகத்தின் படங்கள் தமிழ் நாட்டில் தொடர்ந்து ஓடி கொண்டிருப்பது சாதனை .
கோவை நகரில் 2012 செப்டம்பர் மாதத்தில் ஒளிவிளக்கு இரண்டு வாரங்கள் ஓடி வசூலில் சாதனை புரிந்தது .
http://i46.tinypic.com/1072m87.jpg
இரண்டு மாத இடைவெளிக்கு பின் மீண்டும் ஒளிவிளக்கு வேறு அரங்கில் திரையிட்டு இரண்டாவது வாரமாக ஓடி கொண்டிருப்பது மக்கள் திலகத்தின் புகழ் , மற்றும் மக்கள் செல்வாக்கு அன்றும் இன்றும் என்றும் நிலையானது என்பது புரிகிறது .
வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர் டவுனில் இந்த வாரம் குமரிகோட்டம் முருகன் அரங்கில் திரையிடப்பட்டுள்ளது .
http://i49.tinypic.com/2hdd1c2.jpg
[ தகவல் -மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் வேலூர் நகர மக்கள் திலகத்தின் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் திரு ராமமூர்த்தி அவர்கள் அனுப்பிய செய்தி .- நன்றி ராமமூர்த்தி சார் ]
ஜெய் சார்
மக்கள் திலகம் அவர்களின் சோக நடிப்பின் பட்டியல் அருமை .மேலும் பல செய்திகள் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்
ANNAMITTA KAI -1972
http://i1273.photobucket.com/albums/...ee6/37-2-1.jpg
KANNI THAAI -1965
http://i1273.photobucket.com/albums/...ee6/60_2-1.jpg
NAAN ANAIYITTAL -1966
http://i1273.photobucket.com/albums/...ee6/61_2-1.jpg
http://i48.tinypic.com/ddpdg5.jpg
A HARDCORE MGR FAN FROM CHENNAI - STILL FROM NET
MAKKAL THILAGAM WITH M.S.SUBBULAKSHMI
http://i47.tinypic.com/30rryc4.jpg
கடந்த வெள்ளி அன்று polimer டிவியில் மதுரை பேராசிரியர் திரு ஞானசம்பந்தன் அவர்களின் தலைமையில் சமீபத்தில் கோவையில் நடைபெற்ற பட்டிமன்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அதில் பேசிய திரு கோ என்பவர் 'மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் மட்டும் இன்றுவரை தொடர்ந்து திரும்ப திரும்ப எல்லா ஊர்களிலும் திரையிடப்பட்டு வருகின்றது. இங்கு இப்பொழுதுகூட எனக்கு தெரியவில்லை அனேகமாக இரு திரை அரங்குகளில் நிச்சயமாக திரையிடப்பட்டு இருக்கும் என்று நம்புகிறேன். அவரின் படங்களை அவை எத்தனை முறை திரையிடப்பட்டாலும் அவைகளை திரும்ப திரும்ப பார்த்து, இடைவேளையில் ரசிகர்கள் அந்த படம் இதற்கு முன்பு ஓடிய விபரங்களை மிக ஆர்வத்தோடு பேசுவர்' என்று பேசியபோது அரங்கில் இருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
முதல்வர் டாக்டர் எம் ஜி இராமச்சந்திரன் அவர்களிடம் மதுரையில் நடைபெற்ற விழாவில் மதுரை பேராசிரியர் டாக்டர் கு ஞானசம்பந்தன் அவர்கள் பரிசு பெறுகிறார்.
http://i48.tinypic.com/1zzkx00.jpg
http://i47.tinypic.com/4sb9kh.jpg
ANNA AND MAKKAL THILAGAM AT KAVALKARAN FUNCTION
அறிஞர் அண்ணா -மக்கள் திலகம்
கண் கொள்ளா காட்சி .
அரிய இந்த நிழற் படங்களை அனுப்பி வைத்த இனிய நண்பர் திரு பேராசிரியர் செல்வகுமார் - செயலாளர் இறைவன் mgr பக்தர்கள் குழு - சென்னை அவர்களுக்கு இனிய நன்றி .
திரு வி என் சிதம்பரம் காலமானார்
புரட்சி தலைவர் அவர்களால் அவரின் ஆட்சி காலத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்காராக நியமிக்கப்பட்டவர் திரு வி என் சிதம்பரம் அவர்கள். பதவி வகித்த பத்து ஆண்டுகளும் மிக திறம்பட கோவில் நிர்வாகத்தை கவனித்து வந்தவர். சென்னை வடபழனி கமலா திரை அரங்கின் உரிமையாளர். சிறந்த நகைச்சுவை பேச்சாளர், மனிதநேயமிக்கவர், அனைத்து துறையினரோடும் நல்ல தொடர்பு வைத்திருந்தவர், மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகத்தோடு பல ஆண்டுகள் பழகியவர். அன்னார் அவர்கள் இன்று காலை மதுரையில் காலமானார்.
சென்ற ஞாயிறு அன்று நானும் எனது அன்பு நண்பர் தேனி ராஜதாசனும் அன்னார் அவர்களை மதுரையில் உள்ள செண்பகம் மருத்துவமனைக்கு சென்று பார்த்தோம். பல ஆண்டுகள் அவரோடு நாங்கள் பழகி வருகின்றோம். அன்று அவரால் பேச முடியவில்லை. சைகையால் நலம் விசாரித்தார்.
அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
http://i49.tinypic.com/30j7mzd.jpg
புரட்சித் தலைவரின் அருமை நண்பரும் சிறந்த ஆன்மிகவாதியுமான திரு.வி.என்.சிதம்பரம் அவர்களது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓ- சத்யாவின் புத்திரனே!
நீ
சத்தியவான்
எனவே தான்
எங்கள் தாய்க்குலம்
சாவித்திரியாக மாறி
உன்னை சாவிலிருந்து மீட்டது!
தெய்வம் நடத்திய தேர்தலில்
எமனோடு நீ
எத்துணைமுறை
போட்டியிட்டிருக்கிறாய்
ஒவ்வொரு முறையும்
தருமம்-
உனக்கே வாக்களித்து
வெற்றிபெறச் செய்திருக்கிறது
எமனின் எருமைச் சின்னத்தை
உன் பொறுமைச் சின்னம் புறம் கண்டிருக்கிறது !
தங்களது வாழ்நாளின் மிச்சத்தை
உன் கணக்கில் வரவு வைத்துவிட்டு
தங்கள் கணக்கை முடித்துக் கொண்டு
தீக்குளித்தார்களே
ஒரு ராமச்சந்திரனுக்காக
இத்துணை சீதைகள் அக்கினி பிரவேசம் செய்ததாக
எந்த ராமாயணத்திலும் இல்லை !
ஊரார் மெத்தப் புகழும் உன் சத்துணவுத் திட்டம்
நாட்டுக்குக் கிடைத்தது இன்று என்
பாட்டுக்குக் கிடைத்தது அன்று
ஆம்
பட்டினி கிடந்த என் பாடல்கள்
உன் சத்துணவால் தான்
செத்துப் போகாமல்
வித்துப் போயின
உன்னை சந்திப்பதற்கு முன்னதாகவே
நான் முந்நூறு வரிகள் எழுதியிருக்கிறேன்.
ஆயினும் உனக்காக எழுதிய முதல்வரியில் தான்
என் முகவரி தெரியவந்தது
அதனால் தான் உன் உதடுகளில் உட்காரும் போதெல்லாம்
என் சொற்கள் சுகம் கண்டன
நான் பாடிய பாடல்களை
நீ பாடிய காரணத்தால்-
நாடு பாடியது
ஏழை எளியவர்களின்
வீடு பாடியது
தமிழ்க்கவிஞர்களை நீ தலைகீழாக மாற்றியிருக்கிறாய்
ஆம்
கவி அரசு என்றிருந்த கண்ணதாசனை
அரசு கவி என்று ஆக்கியவன் நீ தானே !
இன்று கூட அரசை வைதால் அரசவை கவிஞனாகலாம் என்று
அறிந்தவன் தான் நான்
ஆயினும்
உன்னை நான் வைததில்லை
வையவும் மாட்டேன்
ஏனெனில் நீ
வாலியை வீழ்த்திய ராமச்சந்திரனல்ல
வாலியை வாழ்த்திய ராமச்சந்திரன் !
என்னை வாழ்த்திய உன்னை வாழ்த்துகிறேன்
நீ வாழ்க பல்லாண்டு
(1984 ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சை முடிந்து திரும்பிய எம்.ஜி.ஆர் அவர்களுக்கு வாலி எழுதிய வாழ்த்துப்பா)
ராமாவரம் தோட்டத்திலிருந்து தனது காரில் எம்.ஜி.ஆர் வந்து கொண்டிருந்தார். ஏ.வி.எம். ஸ்டூடியோ அருகே வந்த போது சுமார் 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். கசமுசா என சத்தம். கேட் பூட்டப்பட்டிருந்தது. உடனே எம்.ஜி.ஆர் காரை நிறுத்தி விட்டு தன் உதவியாளரை அனுப்பி விசாரித்துவிட்டு வரச்சொன்னார். வந்தவர் உள்ளே ஸ்ரீதர் சார் டைரக் ஷனில் சிவாஜி நடிக்கும் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. சிவாஜியை பார்ப்பதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள் என்று சொன்னார். கேட்டுக் கொண்ட எம்.ஜி.ஆர் கார் கிளம்பியது. மறுபடி, மதிய சாப்பாட்டிற்காக எம்.ஜி.ஆர் ராமாவரம் போய்க்கொண்டிருக்கிறார். காலையில் பார்த்த மாதிரியே அதே ஏ.வி.எம் வாசலில் அதே இளைஞர் கூட்டம். ஆனால், சோர்ந்து போய் இருந்தார்கள். அவர்கள் முகங்களில் வருத்தம்.
பார்த்தார் எம்.ஜி.ஆர். காரை ஓரங்கட்டச் சொன்னார். காரிலிருந்து இறங்கி அந்தக் கூட்டத்தின் முன் போனார். எம்.ஜி.ஆர் வந்து நிற்பதை பார்த்ததும் வாட்ச்மேன் ஓடிவந்தார். எம்.ஜி.ஆர் கேட்டைத் திறக்கச் சொன்னார். எல்லோரும் என் பின்னால் வாருங்கள் என்றார். எம்.ஜி.ஆரை பின்தொடர்ந்து எல்லோரும் போனார்கள். தூரத்தில் இருந்து ஸ்ரீதர் இதைக் கவனித்து விட்டு எம்.ஜி.ஆர் ஒரு கூட்டத்தோடு வருகிறாரே என்று சிவாஜியிடம் செல்ல , சிவாஜியும் எழுந்து நின்றார். எம்.ஜி.ஆர் சிவாஜி அருகில் போனார்.பின்னாடியே அந்தக் கூட்டம்.
என்னண்ணே திடீர்னு என்றார் சிவாஜி
இவங்கல்லாம் உன்னோட ரசிகர்கள். உன்னை பார்ப்பதற்காக காலையிலிருந்து நின்னுகிட்டிருக்காங்க. காலையிலே போகும் போது பார்த்துட்டுப் போனேன். வரும் போது நின்னுகிட்டிருந்தாங்க . அதனால கூப்பிட்டுட்டு வந்தேன். பார்த்து பேசி அனுப்பிச்சு விடு என்று சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர் கிளம்பிப் போய்விட்டார்.
அதன் பிறகு ரசிகர்கள் சிவாஜியை சந்தித்துப் பேசிவிட்டுக் கிளம்பினார்கள். ரசிகர்கள் கிளம்பிய பிறகு இப்போ வந்த ஐம்பது இளைஞர்களும் எனது ரசிகர்கள். ஆனாலும், அதில் 25பேராவது எம்.ஜி.ஆர் ரசிகர்களாக இப்போதே மாறியிருப்பார்கள் என்று ஸ்ரீதரிடம் சொன்னார் சிவாஜி.
எதிரும் புதிருமாக இருந்தாலும் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் பொறாமையின்றி எவ்வளவு அன்னியோன்யமாக ஈகோ இல்லாமல் இருந்தார்கள் என்பதற்கு உதாரணமாக இயக்குநர் ஸ்ரீதர் இதை பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.
பொம்மை மாத இதழில் வெளியான மனதில் மணக்கும் மனிதர்கள் கட்டுரையில் நாகை தருமன்.
இனிய நண்பர் ஜெய் சார்
வாலியின் கவிதை மற்றும் நாகை தருமனின் கட்டுரை மிகவும் அருமை .
ரவிச்சந்திரன் சார்
மதுரை பேராசிரியர் ஞான சம்பந்தம் - மக்கள் திலகம் படம் அருமை
http://i46.tinypic.com/10p0l7n.jpg
rare still