மிக்க நன்றி..கலியபெருமாள் ஸார்.
Printable View
அன்னையர் தினம் தொடர்பாக திரு.வினோத், திரு. ரவிச்சந்திரன், திரு. வாசுதேவன் மற்றும் திரு. சௌரிராஜன் - ஆகியோரின் பதிவுகள் அருமை. அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.
திரு மாசானம் அவர்களே ,
உங்களுடைய பாராட்டிற்கு மிக்க நன்றி !
அன்புடன்
srs
ஏழிசைவேந்தர் டி எம் சௌந்தரராஜன் அவர்கள் நலமுடன் உள்ளார். அவரின் புதல்வருடன் (டி எம் எஸ் பால்ராஜ்) தொலைபேசியில் பேசினேன். தனது தந்தை நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
https://www.youtube.com/watch?v=Al-7ePA9IqA
HAPPY MOTHERS DAY, திரு டி எம் எஸ் பாடிய அம்மா என்றல் அன்பு என்ற பாடல்
அன்பு மாசானம் சார்,
மிக்க நன்றி!
நூறு பதிவுகளைத் தாண்டி பயணிக்கும் தங்களுக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள்.
http://wallpoper.com/images/00/07/92...r_00079226.jpg
மறக்க முடியாத அந்த நாட்கள்- மே -1973
மே -11 அன்று வெளியான மக்கள் திலகத்தின்'' உலகம் சுற்றும்
வாலிபன் '' மகத்தான வெற்றி செய்தி கிடைத்தவுடன் மதுரை
மாநகரம் நோக்கி மக்கள் திலகம் ரசிகர்கள் திண்டுக்கல்
இடைதேர்தல் வெற்றிக்காக குவிந்தனர் .
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் கட்டு கோப்புடன் , திட்டமிட்டு 6 சட்ட
மன்ற தொகுதிகளை பிரித்து கொண்டு இரவு பகல் பாராது
புரட்சித்தலைவரின் இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு
சேகரித்து தங்களுடைய அயராத உழைப்பை வெற்றிக்கு
பாடு பட்டார்கள் .
அன்றைய தினம் மத்திய ஆளும் காங்கிரஸ் -பிரதமர் இந்திராகாந்தி
ஸ்தாபன காங்கிரஸ் - பெருந்தலைவர் காமராஜர்
திராவிட கழகம் - பெரியார்
திராவிட முன்னேற்றகழகம்
கண்ணதாசன்
நடிகர் திலகம் மற்றும் பல நடிகர்கள்
மற்றும் அனைத்து பத்திரிகைகள் - வடநாட்டு பத்திரிகைகள் -
ஆளும் கட்ட்சிகளின் அதிகார பலம்
என்ற பல நெருக்கடிகளை எதிர் கொண்டு நம் மக்கள் திலகம்
நூறு நாள் கட்சி
நடிகர் கட்சி
அரிதாரம் பூசியவர்
அரசியல் அனுபவம் இல்லாதவர்
மலையாளி
என்றெல்லாம் தரமற்ற வார்த்தைகளால்
மக்கள் திலகத்தை எதிரணியினர் மேடை பேச்சாளர்கள் பலரும்
தரமற்ற முறையில் பேசினர்
பொது மக்களும் - மக்கள் திலகத்தின் ரசிகர்களும் - கம்யுனிஸ்ட் தோழர்களும் நம் மக்கள் திலகத்துக்கு அளித்த மாபெரும் வெற்றி பரிசு ''திண்டுக்கல் வெற்றி மாலை ''.
எனவே அன்று தொடங்கி 40 ஆண்டுகளாக
நம்முடைய மக்கள் திலகத்தின் சினிமா
நம்முடைய மக்கள் திலகத்தின் அரசியல்
புகழ் என்றென்றும் ஆளுகிறது .
உலகமெங்கும் உள்ள மக்கள் திலகத்தின் ரசிகர்களும் -
அபிமானிகளும் - நடுநிலையாளர்களும் என்றென்றும் பெருமை
கொள்ளும் விதமாக நல்ல கலை உலகம் - அரசியல் சாதனைகள்
நடத்தி நம்மை எல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தவிட்ட
மக்கள் திலகம் ஒரு'' உலக வரலாற்று நாயகன் ''
இந்தப் பட்டியலில் நடிகர் திலகத்தை சேர்த்திருப்பது துரதிருஷ்டவசமானது. தன்னுடைய இறுதி நாள் வரையில் நாகரீகமான உரையைத் தவிர எந்த ஒரு மேடையிலும் தரமிறங்கி பேசியதில்லை நடிகர் திலகம் அவர்கள். எதிர்க் கருத்தை கருத்தினால் தான் விடையளிப்பாரே தவிர ஜாதி, மத, இன பேதம் என்பதைத் தன் வாழ்விலும் பார்க்காதவர் நடிகர் திலகம். அவர் படங்களால் மட்டுமல்ல தன் வாழ்வினாலும் ஒற்றுமை உணர்வை வலியுறுத்தி அதை செயல் படுத்தியும் காட்டியவர்.Quote:
என்றெல்லாம் தரமற்ற வார்த்தைகளால் இரவு பகல் பிரச்சாரம்
செய்தனர் மேற்கண்ட ஜாம்பவான்கள் .
வினோத் சார், you too?
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்
1973 திண்டுக்கல் இடைதேர்தல் பிரசாரத்தில் நானும் நேரிடையாக நான்கு நாட்கள் தொடர்ந்து எம்ஜியார் மன்றத்து சார்பாக கலந்து கொண்ட நேரத்தில் அங்கு நடந்த நிகழ்வுகள் பற்றி தொகுப்பாக எழுதினேன் .
மக்கள் திலகத்தை எதிரணியினர் மேடை பேச்சாளர்கள் பலரும்
தரமற்ற முறையில் பேசியதை குறிப்பிட்டேன் .
தேர்தல் பிரச்சார தலைவர்கள் பட்டியலில் நடிகர் திலகம் பெயரை மட்டும் குறிப்பிட்டேன்
சரியான வாக்கியத்தை பதிவு செய்துள்ளேன்
தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் .
தங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி, வினோத் சார்.
அன்புள்ள வினோத் சார்
பழைய புத்தகங்களில் இருந்து நிறைய நானும் படிதிருகிரேன். மக்கள் திலகத்தை எவ்வாறெல்லாம் தரமற்ற முறையில் பேசினார்கள் என்று. ஆனால் பேசியவர்கள் மக்கள் திலகத்தாலும் வளர்ந்த திமுக கட்சியை சேர்ந்தவர்களே தவிர நடிகர் திலகம் அல்ல. !
ஆகையால் நடிகர் திலகத்தை அந்த திமுக கும்பலுடன் சேர்ப்பது என்பது மிகவும் துரத்ரிஷ்டமானது. இப்படி தான் வரலாற்றின் பல சம்பவங்கள் சரியாக விளக்காததால் தவறாக புரிந்துகொள்ளபடுகின்றன. !
மட்ட்ரவர்கள் அப்படி பேசினாலும் நடிகர் திலகம் அப்படி தரமற்ற முறையில் பேசவில்லை என்று நீங்களே விளக்கம் கொடுக்கலாமே அங்கு நீங்கள் பணியாற்றியவர் என்ற முறையில். !
வருத்தத்துடன்
மனம் சோர்வாக இருந்தால்
ஏமாற்றமாக இருந்தால்
நினைத்தது நடக்காமல் போனால்
மக்கள் திலகத்தின் பாடல்கள் ஆறுதலாக இருக்கும் .
http://youtu.be/iRCbapq1fMA
http://youtu.be/pLXWZDSy7FY
அரசியல் அனுபவம் இல்லாதவர் என்று எப்படி கூறினார்கள் என்று புரியவில்லை....1953 (நடிகர் திலகம் உறுப்பினராக இல்லாதபோதும் தி மு க விலிருந்து வெளியில் வந்த பிறகிலிருந்து ) முதல் 1972 வரை கிட்டத்தட்ட 19 வருடம் திரு mgr அவர்கள் திமுக வில் முக்கிய அங்கம் வகித்தவர். பல பொதுகூட்டங்களிலும் தன்னுடைய திரைப்படங்களிலும் திமுக வின் கொள்கைகளை பறைசாற்றியவர் திரு mgr . பரஸ்பரம் உறவு நன்றாக இருந்தவரை திரு.mgr ஆல் திமுக வும் , திமுக வால் திரு.mgr உம் வளர்ந்ததை இந்த உலகறியும் விஷயம் தானே !
இதை உலகறியும் !
அப்படி இருக்க இந்த ஒருவாதத்தை மக்கள் முன் கொண்டு சென்றது ஏன் என்று விளங்கவில்லை !
1973 திண்டுக்கல் இடைத்தேர்தல் - நீங்களும் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட - சம்பவத்தை சுருக்கமாக நினைவூட்டியதற்கு நன்றி.. வினோத் ஸார். வாதங்கள், விவாதங்கள் - இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு மக்கள் திலகம் மாபெரும் வெற்றி பெற்றார் என்பது வரலாறு. (சௌரிராஜன் ஸார் இதற்கு எதிர் கருத்து சொல்ல மாட்டார் என நம்புகிறேன்...)
படம் அல்ல பாடம் - உரிமைக்குரல்
http://i41.tinypic.com/29m9myp.jpg
நம் தலைவனின் உரிமைக்குரலை கேட்க சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை மாலை காட்சிகள் திரையரங்கிற்கு சென்றேன்.பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க தூண்டும் படம்..எல்லா காலத்திற்கும் பொருந்துவது எம்ஜிஆர் படங்கள் மட்டுமே ..எழில் வேந்தனின் அழகு இந்த படத்தில் கூடுதல் பலம்..இளமைத்துள்ளல் இன்னும் அழகு..அதனால்தான் இந்த வெள்ளிவிழா காவியம் இன்னும் வெற்றி காவியமாக இருக்கிறது..தலைவரின் காவியங்கள் அன்றும் வெற்றி கண்டு இன்றும் தொடர் வெற்றி காணுகிறது...ஆனால் பலரின் நிறைய வெற்றி படங்கள் இன்று இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதற்கு காரணம் தலைவரின் தீர்க்க தரிசனமே..தலைவர் திரைப்படங்களின் நுணுக்கங்கள் மட்டும் அறிந்தவர் அல்லர்..எல்லா அம்சங்களையும் கொண்டு எக்காலமும் மக்கள் விரும்பும் படங்களை கொடுப்பதில் வல்லவர்..இன்னும் அவர் படங்கள் வசூலை குவிப்பதற்கு அதுவே காரணம்..அந்த படவரிசையில் உரிமைக்குரலும் ஒன்று..மிக அழகான காதல் காவியமே இந்த படத்தில் உள்ளது..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
[QUOTE=esvee;1042346]மனம் சோர்வாக இருந்தால்
ஏமாற்றமாக இருந்தால்
நினைத்தது நடக்காமல் போனால்
மக்கள் திலகத்தின் பாடல்கள் ஆறுதலாக இருக்கும் .
அப்படி தோன்றினால், தோன்றும்போது நான் விரும்பி கேட்கும்பாடல் இது.
திருக்குறள் மற்றும் பகவத்கீதையின் கருத்துக்களை எளிய நடையில் கவிஞர் எழுதிய பாடல்களில் இதுவும் ஒன்று..!
http://www.youtube.com/watch?v=Jicjj...0AD1B2ABB5D385
திரு சவுரி சார்
யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை .
நான் நேரில் சந்தித்த சம்பவங்களை கூறினேன் .
கிட்ட தட்ட ஒரு போர்க்களம் போல காட்சி தந்த
திண்டுக்கல் நகரம்
திண்டுக்கல் உட்பட 6 சட்ட மன்ற தொகுதிகளில் தீவிர பிரச்ச்சாரம் .
அதில் கலந்து கொண்ட முக்கிய அரசியல் - நடிகர்கள் பற்றி குறிப்பிட்டேன் .
''ஒரு நடிகர் ஆரம்பித்த புதிய கட்சி சந்தித்த தேர்தல் சவால்கள் - நேரிடை - மறைமுக தாக்குதல்கள் -ஆளும் கட்சியின் அராஜகம் - பண நெருக்கடி -மிரட்டல்கள் -அடிதடி
என்ற பலமுனை தாக்குதல்களை நம் மக்கள் திலகம் எப்படில்லாம் எதிர்கொண்டு வெற்றி கண்டார் ''
இந்த செய்தியினை பற்றிதான் குறிப்பிட்டேன் .
அன்புள்ள எஸ்வி சார்
நீங்கள் குறிப்பிட்டதை நான் தவறு என்று கூறவில்லையே...நீங்கள் எழுதியது பல குற்றவாளிகள் நடுவில் உள்ள ஒரு நல்லவனும் குற்றவாளி என்று நினைக்கும் காலமிது.
அப்படி இருக்க நீங்கள் நடிகர் திலகத்தின் பெயரை இதில் பொத்தன்பொதுவாக சேர்த்தது வருத்தமளிக்கிறது என்று கூறினேன்...அவதூறு கூறியவர்கள் யார் யாரோ ...அந்த லிஸ்டில் நடிகர் திலகம் பேரும் நீங்கள் எழுதும்போது படிப்பவர்கள் என்ன நினைப்பார்கள் ?
இது உங்களுக்கும் தெரியும் !
நீங்கள் நினைத்திருந்தால் அப்படி பேசியவர்கள் மத்தியில் நடிகர் திலகம் ஒரு விதிவிலக்கு என்று எழுதியிருக்க வேண்டும். ! இல்லையா ?
இதுவரையில் தாங்கள் அதை மாற்றி எழுதவில்லை. அப்படிஎன்றால் என்ன அர்த்தம் ? படிப்பவர்கள் தவறான தகவல்களையும் உள்ளடக்கிய நீங்கள் எழுதியதை படிக்கட்டும் என்று தானே ?
சவுரி சார்
அனல் பறக்கும் பிரச்சாரத்தில் காரசாரமான -நிலை தாழ்ந்து
பிரயோகித்த வாசகங்கள் ..........
இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த தலைவர்கள் பெயர்கள் குறிப்பிட்டேன் .நடிகர் திலகம் இப்படி பேசினார் என்று எங்குமே குறிப்பிடாத போது ''தவறாக புரிதல் '' வந்தது வியப்பாக உள்ளது .
அன்பு நண்பர் திரு.மாசனம் அவர்களுக்கு
எல்லா கருத்திற்கும் வீம்புக்கென்று மறுப்பு தெரிவிப்பவன் அல்ல நான் என்பதை நீங்களும் மட்ட்ரவர்களும் அறிவீர்களோ இல்லையோ எனக்கு தெரியாது..ஆனால் திரு.வினோத் அவர்கள் என்னைப்பற்றி நன்கு அறிவார்கள். இது உங்களுக்கு தெரியுமா இல்லையா என்பது எனக்கு தெரியாது !
நடந்த வரல்லற்று சம்பவங்கள் அப்படியே நடந்திருக்குமாயின் அதை நான் என்றுமே மறுக்கவோ வார்த்தைகள் இட்டு மறைக்கவோ மாட்டேன்...!
உண்மை ..உண்மையாக , உண்மையாக போக வேண்டும் என்பது தான் என் நேற்றைய, இன்றைய, நாளைய நோக்கமாகும். ! பாருங்கள் இதில் கூட மக்கள் திலகத்தின் திரைப்பட பெயர் தான் நான் பயன் படுத்துகிறேன் !
உங்களுக்கு எல்லாமே வியப்பு தான் சார்...! உங்களுடைய வியப்பின் வன்மையை நான் அறியாதவன ?
ஒரு உதாரணம் :
ஒரு கொலை நடந்திருகிறது
அந்த இடத்தில் சடலத்திற்கு பக்கத்தில் கத்தியை பிடித்தபடி ஒருவன் நின்றுகொண்டிருந்தான் அவனை போலீஸ் கைது செய்தது என்ற செய்தியை பொதுவாக ஒருவர் படிக்கும்போது கத்திவைதவன் கொலை செய்திருப்பான் என்றும் கொலை செய்திருப்பானோ என்றும் தான் நினைப்பார்கள் பெரும்பான்மையானவர்கள்.
அவன் நிரபராதி என்பது அவனை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயமாக இருக்கும். ஆனால் பெரும்பான்மை மக்களை பொறுத்தவரையில் அவன் பெயர் ?
இந்த பாடலும் அருமையான கருத்தை கூறும் பாடல் தான் சார் ! ஆசை முகம் பாடலை போல !
http://www.youtube.com/watch?v=kl5OvbE6EOk
விவாதத்திற்கு இத்துடன் முற்றுபுள்ளி வைக்கலாமே சவுரி சார் .நடிகர் திலகம் -வந்தார் -ஆதரவு திரட்டினார் .யாரையும் தவறாக பேசவில்லை .
உங்களின் கூற்றுப்படி
உங்களின் கற்பனைப்படி
விட்டு விடுங்கள் ....
உங்களின் ரசனைக்காக
http://youtu.be/QyRvWAGP1XM
எஸ்வி சார்,
எனக்காக நீங்கள் எதுவும் செய்யவேண்டாம் !
என் கற்பனை எதுவும் இல்லை..
காரணம் நீங்கள் அந்த காலத்தில் பங்குகொண்டவர் ..எனக்கு அப்போது 3 வயது ( பிறந்த தேதி மாதம் வருடம் 8-4-1971)
நான் படித்த பழைய புத்தகத்தில் யார் யார் பேசினார்களோ அதை வைத்து நான் எழுதினேன்..! எதையும் திரிக்கவும் இல்லை..மறைக்கவும் இல்லை...
இதற்காக நீங்கள் தேடி..தேடி..Paadal padhiya vendaam...காரணம்...அது எனக்கும் கை வந்த கலை தான் ! நானும் கிட்டத்தட்ட 95% MGR padalgalai Arivaen !
இதற்க்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை எது சொல்ல ?
http://www.youtube.com/watch?v=iw3zAZn_iss
The God who devastate untouchability
http://i39.tinypic.com/6z4vpe.jpg
எங்கேயும் நடனமாடும் எங்கள் தெய்வம்
http://i42.tinypic.com/33u4aqg.jpg
அறுபதிலும் இருபதை கண்ட இதய தெய்வம்
http://i44.tinypic.com/ax02mg.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
In theatre
http://i39.tinypic.com/23441k.jpg