Originally Posted by
adiram
தயாரிப்பாளர் & இயக்குனர் மறைந்த திரு பி.ஆர்.பந்துலு அவர்களின் படங்களை புதுப்பித்து, மெருகேற்றி வெளியிடும் நிறுவனம் ஒன்று (திவ்யா பிலிம்ஸ்), ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் புது மெருகேற்றி வெளியிட்டு மாபெரும் வெற்றி கண்ட நடிகர்திலகத்தின் 'கர்ணன்' காவியத்தை தொடர்ந்து தற்போது மக்கள் திலகம் நடித்து வெளியான 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தை புது மெருகேற்றி வெளியிடுகின்றனர். பழம்பெரும் திரைப்படங்களை இன்றைய தலைமுறைக்கு ஏற்ற வகையில் மெருகேற்றித்தரும் அவர்கள் முயற்சி பெரும் வெற்றியடைய வாழ்த்துகிறோம்.
அதே வேளையில், இதனை முன்னிட்டு ஆளும் கட்சியின் ஆதரவு தொலைக்காட்சி சேனல் ஒன்று, நடிகர்திலகத்தை வைத்து பந்துலு தயாரித்த முந்திய திரைப்படங்களைப் பற்றிய தவறான தகவல்களை தெரிவித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
அவர் தயாரித்த முதல் தேதி, தங்கமலை ரகசியம், வீரபாண்டிய கட்டபொம்மன், சபாஷ் மீனா, பலே பாண்டியா, கர்ணன், முரடன் முத்து ஆகிய அனைத்தும் வெற்றிப்படங்களே. அவை பலமுறை இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.
அவர் தயாரித்து வெற்றி வாய்ப்பை இழந்த ஒரே படம் கப்பலோட்டிய தமிழன் மட்டுமே. அதற்காக வருத்தப்பட வேண்டியது தயாரிப்பாளரோ, நடிகர்திலகமோ, மற்ற கலைஞர்களோ அல்ல.
'கப்பலோட்டிய தமிழன்' வெற்றி வாய்ப்பை இழந்ததற்காக ஒட்டுமொத்த தமிழகமே அவமானப்பட வேண்டும்.