http://youtu.be/rsLBs5DS-Vs
Printable View
கடவுளுக்கு பாராட்டுக்கள் தேவை இல்லை
இப்படி பட்ட வரிகள் தலைவருக்கு மட்டுமே சாத்தியம் தற்போது உள்ள தமிழகத்தின் நிலைதனை 1971-இல் தலைவர் பாடிவிட்டார் இந்த வரிகள் தலைவருக்கும் பொருந்தியது இப்பொழுது தலைவிக்கும் பொருந்துகிறது .
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது,
அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார்
தெரியும் அப்போது
வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி
பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி
மனிதன் என்ற போர்வையில்,
மிருகம் வாழும் நாட்டிலே
நீதிஎன்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே! ....
நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா?
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா?
தர்மத் தாயின் பிள்ளைகள்
தாயின் கண்ணை மறைப்பதா?
உண்மைதன்னை ஊமையாக்கித்
தலைகுனிய வைப்பதா?
திரு.ஆர்.கே.எஸ்.
நேற்றைய தினம் சகோதரர் திரு.செல்வகுமார் அவர்கள் முக்தா சீனிவாசனின் பதிவு பற்றி பதில் அளித்து அதற்கு தாங்களும் விளக்கம் கூறினீர்கள். பின்னர், திரு. முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களும் எதிர்மறையாக இல்லாத பட்சத்தில் தாராளமாக பதிவுகளை வெளியிடுங்கள் என்று கூறியுள்ளார். எந்த எதிர்வினையும் புரிய வேண்டாம் என்று உங்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார். திரு.செல்வகுமார் அவர்கள் யாரையும் புண்படுத்த வேண்டாம் என்ற நோக்கத்தில் பதிவை வெளியிடாமல் இருக்கிறார்.
சகோதரர் திரு. யுகேஷ் பாபு அவர்கள் வெளியிட்ட கருத்து இவற்றுக்கெல்லாம் முன்னால் நேற்று பதிவிட்டது. எல்லாம் முடிந்து அமைதியாக இருக்கும் நிலையில், அவரது பதிவை எடுத்துப் போட்டு கிண்டல் செய்வதன் மூலம் தேவையின்றி இங்கு வந்து வலிய வம்பிழுக்கிறீர்களே, இது நியாயமா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். இல்லை, ஒருவேளை ஆதாரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்பது உங்கள் ஆசையா? உங்கள் செயலை திரு. முரளி ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று நம்புகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்.
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
டைட்டில் கார்ட்-1http://i60.tinypic.com/11btgl4.jpg
ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் படங்களில் பங்கு கொண்ட 4 கலைஞர்கள், பிறகு தமிழக முதல்அமைச்சர்களாக ஆனார்கள். 1946ல் ஜுபிடர் தயாரித்த ஸ்ரீமுருகன் படத்தில், சிவன் வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார்.
அவரும், கே.மாலதியும் ஆடிய சிவபார்வதி தாண்டவம் புகழ் பெற்றது. இப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர் முருகனாக நடித்தார். படத்தை ஜுபிடர் சோமு டைரக்ட் செய்தார். ஏ.காசிலிங்கம், இணை டைரக்டராகப் பணியாற்றினார்.
படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படம் ஜுபிடரின் "ராஜகுமாரி.'' அவருடன் கே.மாலதி இணைந்து நடித்தார். மற்றும் டி.எஸ்.பாலையா, இலங்கைக்குயில் தவமணிதேவி ஆகியோரும் நடித்தனர். கத்திச்சண்டை காட்சிகளும், மாயாஜாலக் காட்சிகளும் நிறைந்த படம்.
இந்தப் படத்தை, ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கினார். இந்தப் படத்திற்குத்தான் முதன் முதலாக கலைஞர் மு.கருணாநிதி வசனம் எழுதினார். எனினும், படத்தின் டைட்டிலில் "வசனம்: ஏ.எஸ்.ஏ.சாமி. உதவி: மு.கருணாநிதி'' என்று போடப்பட்டது.
இந்தப் படத்துக்கு பாடல் எழுதியவர் உடுமலை நாராயணகவி. இசை: எஸ்.எம்.சுப்பையா நாயுடு.
11.4.1947ல் வெளியான "ராஜகுமாரி'', வெற்றிப்படமாக அமைந்தது. எம்.ஜி.ஆரின் வெற்றிப்பயணத்துக்கு வழிவகுத்தது.
இதில் எஸ்.எம்.குமரேசன் அபிமன்ïவாக நடித்தார். அவருக்கு ஜோடி ஆர்.ஜீவரத்தினம். எம்.ஜி.ஆர். அர்ஜீனனாக நடித்தார்.
ஜுபிடர் சோமுவும், ஏ.காசிலிங்கமும் இணைந்து டைரக்ட் செய்தனர். திரைக்கதை வசனம் ஏ.எஸ்.ஏ.சாமி என்று டைட்டில் கார்டு போடப்பட்டது என்றாலும், வசனத்தின் பெரும் பகுதியை எழுதியவர் கருணாநிதிதான். அவர் பெயர் போடப்படவில்லை.
படத்தில் நரசிம்மபாரதி கிருஷ்ணனாக நடித்தார். என்.டி.ராமராவ் பட உலகுக்கு வருவதற்கு முன்பே கிருஷ்ணனாக நடித்து புகழ் பெற்றவர் நரசிம்மபாரதி. அழகிய தோற்றம் கொண்டவர்.
மற்றும் எம்.ஜி.சக்ரபாணி, எஸ்.வி.சுப்பையா, எம்.ஆர்.சந்தானலட்சுமி, கே.மாலதி ஆகியோரும் நடித்தனர்.
வசனமும், இசையும் இந்தப் படத்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவின.
1948ல் ஜுபிடர் தயாரித்த மற்றொரு படம் "மோகினி.'' மாயாஜாலங்கள் நிறைந்த படம்.
இதில் எம்.ஜி.ஆர் வி.என்.ஜானகி இணைந்து நடித்தனர். மற்றும் டி.எஸ்.பாலையா, எம்.என்.நம்பியார், மாதுரிதேவி, மாலதி ஆகியோர் நடித்தனர்.
திரைக்கதையை ஏ.எஸ்.ஏ.சாமி எழுத, எஸ்.டி.சுந்தரம் வசனம் எழுதினார். லங்காசத்யம் டைரக்ட் செய்தார்.
31.10.1948ல் இப்படம் வெளிவந்தது.
இதன்பின் பேரறிஞர் அண்ணாவின் கதைவசனத்தில், "வேலைக்காரி''யை ஜுபிடர் தயாரித்தது. இப்படம் 25.2.1949ல் வெளிவந்தது.
இதில் கே.ஆர்.ராமசாமி, டி.எஸ்.பாலையா, எம்.என்.நம்பியார், வி.என்.ஜானகி, எம்.வி.ராஜம்மா ஆகியோர் நடித்தனர். பாடல்களை உடுமலை நாராயணகவி எழுத, சி.ஆர்.சுப்பராமன், எஸ்.எம்.சுப்பையா இசை அமைத்தனர். டைரக்ஷன்: ஏ.எஸ்.ஏ.சாமி.
புரட்சிகரமான வசனங்களைக் கொண்ட "வேலைக்காரி'', மாபெரும் வெற்றிச்சித்திரமாக அமைந்தது. கே.ஆர்.ராமசாமி வக்கீலாக வந்து, "சட்டம் ஒரு இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு'' என்று வாதாடிய கட்டம் சிறப்பாக அமைந்தது.
1951ம் ஆண்டு "மர்மயோகி'' படத்தை ஜுபிடர் தயாரித்தது. இந்த படம் மர்மம் நிறைந்த காட்சிகளை கொண்டு தயாரிக்கப்பட்டதால், படத்திற்கு "ஏ'' சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழில் வெளிவந்த முதல் "ஏ'' படம் மர்மயோகிதான். படத்தில் கதாநாயகனாக எம்.ஜி.ஆர். நடித்தார். அவருக்கு ஜோடியாக மாதுரிதேவி நடித்தார். அஞ்சலிதேவி, வில்லியாக நடித்தார்.
"மர்மயோகி'', இந்தியில் "ஏக்தராஜா'' என்ற பெயரில் வெளியானது.
1953ம் ஆண்டு ஜுபிடர் பிக்சர்ஸ் "அழகி'', "இன்ஸ்பெக்டர்'', "நாம்'' ஆகிய 3 படங்களை வெளியிட்டது. இதில் `நாம்' படத்தை, மேகலா பிக்சர்சும், ஜுபிடரும் இணைந்து தயாரித்தன. இதில் எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி, பி.எஸ்.வீரப்பா ஆகியோர் நடித்தனர். படத்திற்கு கருணாநிதி கதை, வசனம் எழுதினார். டைரக்ஷன்: ஏ.காசிலிங்கம்.
திரு கலைவேந்தன்
எதற்கு இந்த நாடகம் நீங்கள் அரங்கேற்றுகிரீர்கள் ?
பிரச்சனையை ஆரம்பித்தது உங்கள் திரு செல்வகுமார் அவர்கள் தான் !
நான் அதற்க்கு எந்த கிண்டலோ கேலியோ செய்யவில்லை. குட் ஐடியா என்ற ஒரு icon எடுத்து போட்டேன்.
அந்த icon உக்கு பதில் எழுதியது திரு யுகேஷ் பாபு அவர்கள் தான். அவர் எழுதியதற்கு தான் நான் பயமுருதுகிரீர்களே என்ற தொனியில் ஒரு lighter side ஆக பதிவு செய்தேன்...
அதற்க்கு வரிந்து கட்டிக்கொண்டு செல்வகுமார் எழுதினர் !
இதுதான் நடந்தது !
என்ன கிண்டல் பதிவு நான் போட்டேன் ...ஏன் இப்படி பொய்யுரைக்கிரீர்கள் திரு கலைவேந்தன் ?
எதற்கு இப்படி திரித்து எழுதி பொய்யை உண்மையாக்க பார்க்கிறீர்கள் திரு கலைவேந்தன் ?
காமாலைகாரனுக்கு பார்பதெல்லாம் மஞ்சள் என்பதுபோல எந்த பதிவு போட்டாலும் அதை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதே வழக்கமாகியுள்ளது இப்போதெல்லாம் திரு செல்வகுமார் அவர்களுக்கு.
தேவையில்லாமல் ஒரு statement பதிவு செய்து அதை பற்றி முரளி பதிவிட்டபோது...தேவையில்லாமல் என் பெயரை இழுத்து சம்மாளிக்கபார்த்தார் திரு செல்வகுமார்...! அது உங்களுக்கு வம்பாக தெரியவில்லை திரு கலைவேந்தன்...
பிறகு நீங்களும் கோபாலுக்கு எழுதிய பதிவில் என் பெயரை பயன்படுத்தினீர்கள்...அது பெரிய யோக்ய செயலா திரு கலைவேந்தன் அவர்களே ?
இப்படி எல்லா செயல்களும் நீங்கள் மற்றும் திரு செல்வகுமார் மாறி மாறி செய்துவிட்டு என்னை இழிப்பதும், பழிப்பதும் ரொம்ப நாகரீகம் தான் போங்கள் !
Rks
கோவை டிலைட்
திரை அரங்கில்
இன்று
மக்கள் திலகத்தின்
திரைக்காவியம்
தர்மம் தலைகாக்கும்
கடைசி நாள்.
நாளை முதல்
தாழம்பூ
எஸ். ரவிச்சந்திரன்
-------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-------------------------------------------------
தீபாவளித் திருநாளில்
கோவை நகர மக்கள் திலகத்தின்
ரசிகப்பெருமக்களை
மகிழ்விக்க வரும்
பொன்மனச்செம்மலின்
வெற்றிக்காவியங்கள்
ராயல் - குடியிருந்தகோயில்
டிலைட் - உரிமைக்குரல்
எஸ். ரவிச்சந்திரன்
-------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-------------------------------------------------
11.10.1972 DINAMANI PAPER
http://i62.tinypic.com/2zq4egh.jpg
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்
கோவை நகரில் மக்கள் திலகத்தின் ''தாழம்பூ ''
உரிமைக்குரல்
குடியிருந்த கோயில் மூன்று படங்கள் விருந்தாக உங்களுக்கு கிடைப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி .
தமிழகத்தின் ''அக்டோபர் புரட்சி '' துவங்கிய தினம் இன்று . 10.10 1972
புரட்சி நடிகர் எம்ஜிஆரை திமுகவிலிருந்து ''டிஸ்மிஸ் '' செய்தி - இந்தியா முழுவது பரப்பரப்பாக பேசப்பட்டது .
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் - மன்றங்கள் தங்களை முழுமையாக எம்ஜிஆர் ஆதரவு என்று பிரகடன படுத்தினார்கள் .
குக்கிராமம் முதல் மாநகரம் வரை மக்களும் எம்ஜிஆருக்கு முழு அதரவு அளித்தார்கள் .
ஒரு புதிய அத்தியாம் - சரித்திரம் துவங்கிய நாள் - இன்று .
கடந்த 42 ஆண்டுகளாக அரசியல் - திரை உலகிலும் தொடர்ந்து தினமும் உச்சரிக்கப்டும் பெயராக மக்கள் திலகம்
எம்ஜிஆர் சரித்திர நாயகனாக திகழ்ந்து கொண்டு வருகிறார் .
October Revolution 1972 - The magic moment when MGR approach the People. See the boy’s happiness.
http://i57.tinypic.com/sgqsnc.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
வெற்றித்திருமகன்
http://i58.tinypic.com/i1lhds.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
எம்ஜிஆரிடம் உள்ள தனி சிறப்பு அவர் ஏற்படுத்திய வசூல் சாதனைகளை அவரே வென்று காட்டியதுதான்....
http://i62.tinypic.com/2db2x35.jpg
http://i60.tinypic.com/69n9rb.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayam Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
http://i59.tinypic.com/xeeus5.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Suriyan Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
http://tamil.thehindu.com/multimedia...b_2147830g.jpg
ந்திரலேகா படத்தைப் போலவே ஜெமினி எஸ்.எஸ். வாசன், அவ்வையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரம்மாண்டமாகத் தயாரித்தார். அன்று அவ்வையாராக நடிக்க ஒரே சாய்ஸாக இருந்த கே.பி.எஸ்.ஸுக்கு இன்று 106-வது பிறந்ததினம்.
ஐந்து ஆண்டுகள் படப்பிடிப்பு நடத்தி உருவான அந்தப் படம் 1953-ல் வெளியாகி காவிய வெற்றியைப் பெற்றது. படத்தில் அவ்வையாராகவே வாழ்ந்து காட்டியிருந்தார் கே.பி.சுந்தராம்பாள். அவருடைய குரலும், பாடல்களும், நடிப்பும் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றன.
1965-ல் வெளியான திருவிளையாடல் படத்தில் மீண்டும் அவ்வையாராகவும் நடித்து தமிழர்கள் மத்தியில் அவ்வையாகவே அடையாளம் பெற்றுவிட்ட கே.பி.எஸ். மறைந்தபோது அவரை ‘தேசிய நட்சத்திரம்’ என்று புகழ்ந்தார் எம்.ஜி.ஆர். ஒருமுறை கோவை கொடுமுடியில் உள்ள கே.பி.எஸ். வீட்டுக்குச் சென்றிருந்தார் எம்.ஜி.ஆர். தனது வீட்டின் பூஜையறைக்கு அழைத்துச் சென்று அவரது நெற்றியில் திருநீறும் குங்குமமும் இட்டார் கே.பி.எஸ். பிறகு கே.பி.எஸ்ஸுடன் தரையில் அமர்ந்து எம்.ஜி.ஆர் உரையாடியதை க்ளிக்கியவர் அந்நாளைய புகைப்படக்காரர் கதிரவன்.
http://i125.photobucket.com/albums/p...ps6f315d0f.jpg
MGR Fan Venkatesan.
http://i59.tinypic.com/2ai3eky.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Video News Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
15-10-14 தேதியிட்ட குமுதம் இதழில் பிரசுரிக்கப்பட்ட கீழ்கண்ட செய்தி தமிழர்கள் அனைவரும் பெருமைப்பட்டுக்கொள்ளும் விஷயமாகும்.[
http://i62.tinypic.com/23ie0cw.jpg
இந்த விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், நமது திரியின் பார்வையாளரும், மக்கள் திலகத்தை பற்றிய செய்திகள் பலவற்றினை திரு. வினோத் மூலம் இத்திரிக்கு அளித்தவரும், எம். ஜி. ஆர். ரசிகர்களில் மூத்தவருமான பெங்களூரு சி. எஸ்.குமார் அவர்களின் சகோதரர் (சிற்றப்பா மகன்). புரட்சித்தலைவரின் மீது பெரும் மதிப்பு கொண்டவர்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
இந்த நாளில் அன்று (1.10.1973); பிரிவினை கோரிக்கை மறைமுகமாகவும் அ.தி.மு.க. எழுப்பாது; எம்.ஜி.ஆர். பேச்சு
இந்த நாளில் அன்று (1.10.1973)
பிரிவினை கோரிக்கை மறைமுகமாகவும் அ.தி.மு.க. எழுப்பாது;
எம்.ஜி.ஆர். பேச்சு
சென்னை, செப்.30 - அண்ணா தி.மு.க. பிரிவினைக் கோரிக்கையை மறைமுகமாகவும் எழுப்பாது என்று அக்கட்சியின் தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன் திட்டவட்டமாக அறிவித்தார்.
காலஞ்சென்ற அண்ணாதுரையின் 65வது பிறந்த தினத்தையொட்டி அண்ணா தி.மு.க. ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசினார். பெருமழையையும் பொருட்படுத்தாமல் திருவல்லிக்கேணி சீரணி அரங்கத்தில் கூடியிருந்த பெருந்திரளான மக்கள் எம்.ஜி.ஆரின் பேச்சைக் கேட்டனர்.
தமது கட்சியினுடைய அரசியல், பொருளாதாக் கொள்கைகளை விளக்கிப் பேசிய எம்.ஜி.ராமச்சந்திரன், மாநில - மத்திய அரசுகள் சம பங்காளிகள் என்றும், நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டு சோஷலிச சமுதாயத்தை அமைப்பதில் இரண்டு அரசுகளுக்கும் சமமான பொறுப்பு உண்டு என்றும் கூறினார்.
கருணாநிதி அமைச்சரவை லஞ்சத்திற்கு ஆளாகி விட்டதாகக் குற்றஞ்சாட்டிவிட்டு, அந்த அரசை வெளியேற்றும் வரை தமது கட்சி ஓய்ந்திருக்கப் போவதில்லை என்றும் எம்.ஜி.ஆர். கூறினார்.
courtesy dinamani
மக்கள் திலகத்துடன் ஜெமினி அதிபர் எஸ். எஸ். வாசன் மற்றும் அவர் புதல்வர் எஸ். எஸ். பாலன்.
http://i59.tinypic.com/2a0bbxv.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ்!
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i57.tinypic.com/11qjvr6.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Suriyan Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
TITLE THADAM PATHITHAVARGAL
PURATCHI THALAIVAR Dr.MGR PROGRAMME IS GOING TO BE TELECAST IN VENTHAR TV ON COMING SUNDAY (12-10-2014) AT 1 PM. THIS PROGRAME WILL BE CONTINUED EVERY SUNDAY SAME TIME.
THANKING YOU,
R GOVINDARAJ
திரு. ஆர்.கே.எஸ்.
சகோதரர் யுகேஷ் பாபு அவர்கள் போட்ட பதிவை எடுத்து கிண்டல் செய்கிறீர்களோ என்று நினைத்தேன். ஆனால், lighter side ஆகத்தான் போட்டேன் என்று நீங்கள் விளக்கம் அளித்திருப்பதை பார்த்த பின் உங்கள் நோக்கத்தில் தவறில்லை என்று புரிந்து கொண்டேன்.
சகோதரர் திரு. செல்வகுமார் அவர்களும் உள்நோக்கத்தோடோ, வம்புக்காகவோ உங்கள் பெயரை இழுத்ததாக நினைக்கவில்லை. முரளிக்கு அவர் அளித்த விளக்கமாகவே பார்த்தேன். இப்போது, உங்கள் விளக்கத்தை நான் ஏற்கவில்லையா?
திரு.கோபால் அவர்களுக்கு அளித்த பதிலில் உங்கள் பெயரைப் பயன்படுத்தியது குறித்து நீங்கள் முதலில் ‘அவனுக்கென்ன தூங்கிவிட்டான் ’பதிவு போட்டபோதே விளக்கம் சொல்லலாம் என்றிருந்தேன். ஆனால், தேவையில்லாமல் பிரச்னை செய்கிறாரே என்று நினைத்து கோபம் வந்ததால் விளக்கத்தை தவிர்த்து, இது நியாயமா? என்று கேட்டிருந்தேன். உங்கள் நோக்கத்தை புரிந்து கொண்டதால் இப்போது விளக்கம் அளிக்கிறேன்.
‘தனக்குத் தானே.....’ சொற்றொடரைப் பொறுத்தவரை நீங்கள் அதை திறமையாக கையாண்டிருந்ததும் அதில் தொக்கியிருந்த நகைச்சுவையும் என்னைக் கவர்ந்ததால் அதை அப்படியே பயன்படுத்தினேன். காப்பி அடித்தது போலாகிவிடுமே என்பதால் உங்கள் பெயரை போட்டேன்.
ஐடி விவகாரத்தை பொறுத்தவரை உங்கள் திரியில்தான் அவ்வாறு உண்டு என்று பொதுவாகக் கூறினால், அப்படி எல்லாம் இல்லை என்று யாராவது கூறி, ஆதாரம் எங்கே? என்று கேட்டால் மீண்டும் நான் ஆதாரத்தை சொல்ல வேண்டியிருக்கும். சொல்லாமல் விட்டாலும் நான் பொய் கூறியது போல இருக்கும். விவாதத்தை மேற்கொண்டு தொடர விரும்பாமல் கேள்விக்கே வழி இல்லாத வகையில் ஆதாரத்தோடு சொல்ல நினைத்ததால் நீங்கள் ஏற்கனவே எழுப்பிய சந்தேகத்தை மேற்கோள் காட்ட வேண்டியதாகி விட்டது. மற்றபடி எந்த உள்நோக்கமும் இல்லை. ஏற்பீர்கள் என்று நம்புகிறேன். திரு.கோபால் அவர்களுக்கு அளித்த பதிலைத் தொடர்ந்து விவாதத்தை விரும்பாதது போலவே இப்போதும் விவாதத்தை தொடர விரும்பவில்லை. என்றாலும், உங்கள் பெயரைப் பயன்படுத்தியதற்காக நீங்கள் வருந்தினால் அதற்காக நானும் வருந்துகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பின்குறிப்பு: பண்பாளர்கள், கண்ணியவான்கள் என்று கூறி திரு.ராகவேந்திரா, திரு.ஜி.கிருஷ்ணா, திரு. சிவாஜி செந்தில் ஆகியோர் பெயர்களையும் கூறியிருந்தேன். அதில் ஒரு பெயர் விட்டுப் போய் விட்டது. அவர்.. திரு. நெய்வேலி வாசுதேவன் அவர்கள்.(என்ன வாசு சார், எதிரணியில் நமக்கு நல்ல பெயர் உண்டு என்று இனி நீங்களாகவே நினைத்துக் கொள்ள வேண்டாம். நிஜமாகவே உங்களுக்கு இங்கு நல்ல பெயர் உண்டு. நீங்கள் மட்டுமல்ல, அடிப்படையில் எல்லாருமே நல்லவர்கள்தான், ராட்சச ரசிகர்கள் உட்பட) பண்பாளர்கள், கண்ணியவான்கள் பட்டியலில் உங்கள் பெயர்களை பயன்படுத்தியதற்காக எதிர்ப்பு தெரிவிக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். எதிர்ப்பு தெரிவித்தால் அப்படி சொன்னதற்காக மன்னிப்பு கோர தயாராக இருக்கிறேன்..... என்று எச்சரிக்கிறேன்.
நண்பர்களுக்கு வணக்கம்.
திரு.எஸ்.வி.சார், திரு.செல்வகுமார் சார், திரு.எஸ்.வி.சார் போட்டிருந்த ஆவணப் பதிவுகள் அட்டகாசம். கோவை தலைவரின் கொடி பறக்கும் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் அவரது படங்கள் திரையீடுகளை தெரிவிக்கும் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு பாராட்டுக்கள். களேபரத்தில் சகோதரர் திரு. முத்தையன் அம்மு அவர்களுக்கு வரவேற்பு கூறவும் மறந்ததுடன், எங்கள் தங்கள் திரைப்படம் பற்றிய எனது கருத்துக்களை கூறக் கூட நேரமில்லாமல் போய் விட்டது. திரு.முத்தையன் அம்மு அவர்களை திரிக்கு வரவேற்று தலைவரின் புகழ்பாட வாழ்த்துகிறேன்.
‘கண்ணை மறைக்கின்ற காலம் வரும்போது தர்மம் வெளியேறலாம்’ என்று உரிமைக்குரல் படத்தில் தலைவர் பாடியதுபோல கண்ணை மறைத்ததால் திமுகவில் இருந்து அவர் வெளியேற்றப்பட்ட நாள் இன்று. ‘தர்மம் அரசாளும் தருணம் வரும்போது தவறு வெளியேறலாம்’ என்பதையும் நிரூபித்தவர் தலைவர்.
*எங்கள் தங்கம் படத்தைப் பொறுத்தவரையில் பல்வேறு சிறப்புகள் உண்டு. தலைவராகவே அவர் வரும் இரண்டு படங்களில் இது ஒன்று. (மற்றொன்று தேர்த்திருவிழா)
*அண்ணாவிடம் இருந்து தலைவர் பரிசு பெறுவது போன்ற காட்சி இந்தப் படத்தில் மட்டுமே உண்டு.
* திரு.எஸ்.வி.சார், சகோதரர் யுகேஷ்பாபு ஆகியோர் கூறியதுபோன்று மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தையும் திரு. மு.கருணாநிதி குடும்பத்தையும் இப்படத்தில் இலவசமாக நடித்ததன் மூலம் கடனில் இருந்து மீட்டவர் தலைவர்.
*திரு.முரசொலி மாறன் நடித்த ஒரே படம். சிறுசேமிப்புத்துறை தலைவராக தலைவர் வரும் காட்சியில் அவர் அருகில் அமர்ந்திருப்பார். (அவரது கல்லூரிப் படிப்புக்கு பணம் கொடுத்தது தலைவர்தான் என்பது உபரித் தகவல்)
*அதிலும் கதாகாலட்சேப காட்சி. வழக்கமாக மொட்டை அடித்ததுபோல மேக்கப் போட்டிருப்பவர்களுக்கு தலையை சுற்றி paste செய்தது தெரியும். ஆனால், இதில் தலைவருக்கு கச்சிதமாக மேக்கப் போடப்பட்டிருக்கும். இமேஜைப் பற்றி கவலைப்படாமல் தலைவர் நடித்திருப்பார்.
* திரைப்படங்களில் பல கதாகாலட்சேப காட்சிகள் இடம் பெற்றதுண்டு. நல்ல தம்பி படத்தில் கலைவாணர், தெய்வப்பிறவியில் தங்கவேலு, அன்னபூரணியில் சோ போன்றவர்கள் அந்தக் காட்சிகளில் நடித்துள்ளனர். கலைவாணரைத் தவிர்த்துப் பார்த்தால் (முழு காலட்சேபமும் அவரே)மற்ற படங்களில் நடிக்கும் நடிகர்கள், இடையே வரும் பாடல்களைத் தவிர வசனங்களைத் தாங்களே பேசியிருப்பார்கள். ஆனால், தலைவருக்கு மட்டுமே பாடல்களோடு வசனங்களுக்கும் டி.எம்.எஸ். குரல் கொடுத்திருப்பார்.
பாடல் காட்சிகளுக்கு இசையோடு வரும் வார்த்தைகள் இழுவையாக இருக்கும் என்பதால் அதற்கு வாயசைப்பது கூட சற்று சுலபம். ஆனால், அடுத்தவர் பேசும் வசனத்துக்கு அந்த டைமிங்கில் வாயசைப்பது கடினம். (ஒருவரை பேசவிட்டு காட்சி எடுத்து பின்னர், திரையில் அவரது பேச்சுக்கேற்ப ஒலிப்பதிவு கூடத்தில் மற்றவர்கள் டப்பிங் கொடுப்பது வேறு. ஆனால் இதில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட டி.எம்.எஸ்.சின் வசனங்கள்) அதற்கேற்ப தலைவர் அசால்டாக பேசி நடித்திருப்பார். இத்தனைக்கும் நீண்ட ஷாட்டுகள் வேறு.
* நான் அளவோடு ரசிப்பவன் பாடலின் முதல் வரியை எழுதிய வாலி மேற்கொண்டு என்ன போடுவது என்று யோசித்து கொண்டிருந்தபோது, ‘எதையும் அளவின்றி கொடுப்பவன்’ என்று எடுத்துக் கொடுத்தவர் திரு.மு.கருணாநிதி. இதை புரட்சித் தலைவரிடம் வாலி கூறியதும், பதிலுக்கு அவரை (கருணாநிதியை) பாராட்டுவது போல பாடலை அமைக்குமாறு தலைவர் வாலியை கேட்டுக் கொள்ள.... ‘நான் செத்துப் பிழைச்சவன்டா’ பாடலில் ‘ஓடும் ரயிலை இடைமறித்து....’ வரிகள் இடம் பெற்றன. இதை வாலியே பலமுறை கூறியிருக்கிறார்.
*ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான் பாடலில் தலைவரின் மேக்கப் வித்தியாசமானது. தனக்கு ஆடத் தெரியாதது போலவே ஜெயலலிதாவுடன் அவர் போடும் ஸ்டெப்ஸ் அசத்தல். அந்தப் பாடலில், கத்திச் சண்டை, குத்துச் சண்டை, கம்புச் சண்டை, வம்புச் சண்டை என்ற இந்த வார்த்தைகள் 4 விநாடிகளுக்குள்தான் வரும். அந்த 4 விநாடிகளுக்குள் அந்தந்த சண்டைக்கேற்ற அபிநயங்களை காட்டும் சுறுசுறுப்புக்கு சொந்தக்காரர் தலைவர் மட்டுமே. தொடர்வோம்...
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
சின்ன எம். ஜி. ஆர். என்றழைக்கப்பட்ட மறைந்த நடிகர் ரவிச்சந்திரன் அவர்கள் "திரை உலகம்" இதழுக்காக அளித்த பிரத்தியோக பேட்டி :
http://i59.tinypic.com/wmfjna.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
பொன்மனசெம்மலைப் போற்றி நடிகை சி. ஐ. டி. சகுந்தலா அவர்கள், "திரை உலகம்" இதழுக்காக அளித்த பேட்டி http://i57.tinypic.com/2qjkidu.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்