again
Printable View
again
KAVINJAR POOVAI SENGUTTUVAN 80TH BIRTHDAY
பிரபல தயாரிப்பாளர் A.L .அழகப்பனின் மூத்த சகோதரரும்,நடிகர் உதயா,இயக்குனர் விஜய்யின் பெரியப்பாவுமான பிரபல கவிஞர் "பூவை .செங்குட்டுவன்"80வது பிறந்த நாள்(12-2-2015) விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப் பட்டது.
https://www.youtube.com/watch?v=eof1kadWA-o#t=293
https://www.youtube.com/watch?v=cXQxVEbSwIM
"எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே என்னை ஆளும்" என்றும் மாறாத உண்மை தெய்வமே
பெங்களூர் தமிழ் சங்க விழா மேடையின் தோற்றம்
http://i57.tinypic.com/1zlepaq.jpg
உரிமைக்குரல் பாரதரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நற்பணி அறக்கட்டளை உறுப்பினர்கள் , பார்வையாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்க
அணிவகுத்து நின்ற காட்சி.
http://i59.tinypic.com/2rc0fwm.jpg
பெங்களூர் தமிழ் சங்க வாயிலில் திருவாளர்கள் :லோகநாதன், எம்.ரவி, கா. நா. பழனி
http://i59.tinypic.com/34in3hx.jpg
பெங்களூர் தமிழ் சங்க அரங்கத்தின் உள்ளே பார்வையாளர்கள் திரண்டிருந்த
காட்சி.
http://i57.tinypic.com/2rxtfmh.jpg
அரங்கத்தினுள் திருவாளர்கள்:.சி எஸ்.குமார் , பெருமாள் , சிவகுமார் , வினோத் ,
கஜநாத் ஆகியோர்
http://i61.tinypic.com/2va0ghc.jpg
விழாவின் சிறப்பு விருந்தினரான பிரபல நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா
அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது ..
http://i59.tinypic.com/1z69obp.jpg
‘பாவம்! திரு.சிவாஜி கணேசன் அவர்கள்’
தலைவருக்கு பாரத் பட்டம் குறித்து சமீபத்தில் மாற்றுத் திரியில் பதிவிடப்பட்ட கருத்தால் சர்ச்சை எழுந்து நாம் விளக்கமும் அளித்து விட்டோம். மீண்டும் தேவையில்லாமல் ‘இனி’ என்ற பத்திரிகையில் இருந்து சில பக்கங்களை பதிவிட்டுள்ளனர். அரசியல் ஆபத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக கலைஞர் கருணாநிதி பாரத் பட்டத்தை தலைவருக்கு வாங்கிக் கொடுத்ததாகவும் பின்னர், கட்சி உடைந்ததும் திரு. கருணாநிதி, தானே, அந்தப் பட்டத்தை வாங்கிக் கொடுத்ததாக கூறியதால் தலைவர் அந்தப் பட்டத்தை திருப்பி கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
வாங்கிக் கொடுத்த பட்டம் என்று கூறப்பட்டதால், தலைவர் பாரத் பட்டத்தை தூக்கி எறிந்தது உண்மை. ஆனால், அந்தப் பட்டத்தை வாங்கித் தருமாறு தலைவர் யாரையும் கோரவில்லை. கருணாநிதியே கூட அப்படி கூறியதில்லை. மாற்றுத் திரியில் பதிவிட்டிருக்கும் ‘இனி’பத்திரிகையிலும் அப்படிக் கூறவில்லை. எந்தப் பதவிக்காகவும், விருதுக்காகவும் தலைவர் யாரையும் எப்போதும் கெஞ்சியவரல்ல.
ஆனால், அந்த பதிவில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. அதை அப்படியே குறிப்பிடுகிறேன்.
‘நர்கீஸ் செத்துப் போனதால் காலியான மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெற (ஒரு வருடத்திற்கு மட்டும்) யார் யார் தயவையோ கெஞ்சிக் கேட்கும் நிலைக்கு சிவாஜியை தள்ளியது காங்கிரஸ் அரசு.’
...என்று இருக்கிறது. இதுநாள் வரை நாம் கூட அந்த எம்.பி.பதவி ஏதோ திரு.சிவாஜிகணேசன் அவர்களின் கலைத் திறமைக்காக கொடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது (அதற்கு அவர் தகுதியானவர்தான்) என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், அவர் யார், யார் தயவையோ கெஞ்சிக் கேட்கும் நிலைக்கு ஆளாகி அந்த பதவியைப் பெற்றிருக்கிறார் என்பது ‘இனி’ பத்திரிகையில் வெளியான தகவல் மூலம் தெரிகிறது.
எம்.பி.பதவிக்காக யார், யார் தயவையோ கெஞ்சிக் கேட்கும் நிலை திரு.சிவாஜிகணேசன் அவர்களுக்கு வந்திருக்க வேண்டாம். பாவம். அந்தக் கலைஞனுக்கு நேர்ந்த இந்தக் கொடுமையை அம்பலப்படுத்தியதற்காக நண்பர் திரு.செந்தில்வேல் சிவராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி.
நமது சகோதரர்களுக்கு, இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். 1994ம் வருடம் வந்த ‘இனி’ என்ற வார இதழில் வெளியான கட்டுரையில் இருந்து, அவர்களது திரியின் 15ம் பாகம் 5வது பக்கத்தில் 43வது பதிவாக இது வந்திருக்கிறது. பின்னால், தேவைப்படும்போது உதவும்.
மீனவ நண்பன் படத்தில் தலைவர் கூறுவார்.
‘என்னை அவமானப்படுத்தறதா நினைக்கிறவங்க, தன்னைத் தானே ஏமாத்திக்கிறாங்க’
உண்மைதான் தலைவரே.
அன்புடன் :கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
சைலேஷ் சார், விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான ‘மன்னாதி மன்னன்’ நிகழ்ச்சி 14 நாட்களில் 77,000 பேர் யூ டியூப்பில் பார்த்து சாதனை படைத்துள்ளது. வேறு எந்த நிகழ்ச்சியும் யூ டியூபில் இந்த அளவு வரவேற்பு பெற்றதில்லை.இந்த வரவேற்பை பார்த்து அதை தனியாக டிவிடி வடிவில் விற்பனைக்கு வெளியிட இருப்பதாக அறிகிறேன்.
அன்புடன்: கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Ninaivugal
நான் பள்ளியில் படித்து கொண்டிருந்த
நேரம், திரு.எம்.ஜி.ஆர் நடித்த ராஜராஜன்
மகாதேவி ஆகிய படங்களை நானும் என்
சகோதரனுமாகப் பார்த்து விடுவோம்.
வீட்டில் ஆளுக்கொரு கம்பை எடுத்து
கொண்டு சண்டை போடுவோம்.
நான் தான் எம். ஜி.ஆர். , நீ வீரப்பா ' என்று
நான் சகோதரனிடம் சொல் வேன். அவனோ , நான் தான் எம்ஜிஆர், .நீ தான்
வீரப்பா 'என்பான். எங்களுக்குள் சண்டை
வந்து விடும். பலத்த கூச்சல் போட்டு
சண்டையிடுவதைக் கண்டு அம்மா
வந்து எங்களுடைய சண்டையை
விலக்குவார். சண்டையின் காரணத்தை
அம்மாவிடம் சொல்வோம். உடனே
அம்மா ஒருகாசை எடுத்து சுண்டி மேலே
போட்டு 'பூவா தலையா? ' என்று எங்களை
கேட்டு, எங்களில் யார் எம் ஜி ஆர்,
யார் வீரப்பா என்பதை பற்றித் தீர்மானம்
செய்வார். பிறகு எங்களது சண்டை
தொடரும். சில சமயங்களில் நான்
எம்ஜிஆராகவும், சில சமயங்களில் வீரப்பாவாகவும் சண்டை போட்டிருக்கிறேன்.
Courtesy net
இயக்குநர் கார்வண்ணன் மரணம்... எம்ஜிஆர் கையால் ஆட்டோ பெற்றவர்!
இயக்குநர், நடிகர் கார்வண்ணன் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 55. பாலம், புதிய காற்று, மூன்றாம்படி, தொண்டன் உள்பட 6 படங்களை இயக்கியவர் கார்வண்ணன். இவர் சில படங்களைத் தயாரித்துமிருக்கிறார். இவர் எடுத்த அனைத்துப் படங்களுமே புதிய விஷயங்களை மையப்படுத்தியிருக்கும். பாலம் படத்தில்தான் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முதல் முறையாக சினிமாவில் நடித்தார். கார்வண்ணனின் புதிய காற்று படத்தைத் தழுவி வந்த படம்தான் இயக்குநர் ஷங்கரின் இந்தியன் என்பார்கள். கார்வண்ணனின் இளமை பின்னணி மிகுந்த சுவாரஸ்யமானது. அவர் நந்தனம் கல்லூரியில் எம்ஏ படித்தபோது, அன்றைய முதல்வர் அமரர் எம்ஜிஆர் கையால் பரிசு பெற்றிருக்கிறார். பின்னொரு நாள் சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த முதல்வர் எம்ஜிஆர் பார்வையில் அவர் பட்டுவிட, காரை நிறுத்தி, தன் உதவியாளரை அனுப்பி கார்வண்ணனை அழைத்து வரச் சொன்னாராம் எம்ஜிஆர். அவரை தன் காரில் ஏற்றிக் கொண்டு, பரிசு பெறும் அளவு நன்றாகப் படித்த மாணவனான நீ, இப்போது என்ன செய்கிறாய் என விசாரித்தாராம். வேலையில்லாமல் அலைந்து கொண்டிருப்பதை கார்வண்ணன் சொன்னதும், முகவரியை வாங்கிக் கொண்டு இறக்கிவிட்டாராம். அடுத்த சில தினங்களில் அன்றைய போக்குவரத்து துறை அமைச்சர் முத்துசாமி மூலம் ஒரு புதிய ஆட்டோவைக் கொடுத்தனுப்பியுள்ளார் எம்ஜிஆர். படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும்வரை அந்த ஆட்டோவை ஓட்டி பிழைத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார். பின்னர் பல ஆண்டுகள் கழித்து 1990-ல் திரைப்பட இயக்குநரானார் கார்வண்ணன். அப்போது எம்ஜிஆர் அமரராகிவிட்டிருந்தார். அந்த ஆட்டோவை இப்போதும் வீட்டுக்கு முன் நிறுத்தி வைத்திருக்கிறார் கார்வண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. கார்வண்ணன் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் நடக்கின்றன.
Courtesy one india tamil