http://i66.tinypic.com/34pyqgg.jpg
Printable View
செந்தில்வேல்
குணசேகரனின் குரலோசை எழுப்பிய புதிய அலையோசை ஓயாது...அந்த ஓசையை மீறி வேறெந்த ஓசையும் நம் காது கேளாது. சரித்திரம் படைத்த பாடலாய் சரித்திரம் படைத்த நாயகனின் வரவு பற்றி அமர்க்களமாய் எழுதி விட்டீர்கள்.
உளமார்ந்த பாராட்டுக்கள்.
Pon Ravichandran
It is happy and great to note that NT has proved he is beyond generations with you as a typical example.
Eager to know your experiences as a Sivaji fan.
முத்தையன் அம்மு
உத்தமன் நடிகர் திலகத்தின் உத்தமன் ஸ்டில்கள் ஒவ்வொன்றும் உத்தமம்.
உளமார்ந்த பாராட்டுக்கள்.
Muthaiyan,
Amazing Saval. Arumaiyana samalippu.It is an absolute marvel. Thanks for Bringing out the Dravida Manmadhan in full bloom in a Dravidian Attire.
TAMILNADU CM Ms.JAYALALITHA HAILS THE PERIOD OF NADIGAR THILAGAM AS NADIGAR SANGA THALAIVAR WAS THE GOLDEN PERIOD & ASKED VISHAL TO REVIVE THAT GOLDEN PERIOD !!!!
This morning,(16th Nov), the newly elected members of Nadigar Sangam - Vishal, Nasser, Karunas, Karthi and Ponvannan met the honorable Chief Minister of Tamil Nadu J Jayalalitha at the Secretariat.
While welcoming them with a pleasant smile, the CM had apparently congratulated the team for their victory in the recently held Nadigar Sangam elections. She is also said to have recalled the golden age of the Nadigar Sangam when Sivaji Ganesan and Major Sundarrajan were the governing members, and had reportedly advised the new team to revive that golden period again. Later she is said to have extended her government’s complete support to the welfare activities of the Sangam, stating that she has complete faith on them.
Vishal further tweeted, “Jus met our honourable CM. fantastic meeting. told us that Govt will extend full support 2 nadigar sangam. very positive. v sincerely thank our CM”.
http://behindwoods.com/tamil-movies-...tha-today.html
RKS
செந்தில்வேல் சார்
இந்திய திரை உலக வரலாறில் "புரட்சி" என்ற வார்த்தையை முதல் முதலில் புழக்கத்தில் கொண்டுவந்ததோடு மட்டும் அல்லாமல் அதனை தொடர்ந்து திரை உலகைபோருத்தவரை நடைமுறைபடுத்தி கொண்டிருந்த உன்னத நடிகர் நமது நடிகர் திலகம் அவர்கள் !
அவர் பேசுவதை,
நடப்பதை,
சிரிப்பதை,
அழுவதை,
புன்வுருவலை,
கோபத்தை
ஸ்டைலை
இப்படி பல உணர்ச்சிகளை பார்த்துதான் அன்றைய நடிகர்களில் இருந்து இன்றைய நடிகர்வரை நடித்து கொண்டிருக்கிறார்கள் ! சமீபத்திய தெலுங்கு நடிகர் ரண டுகபட்டி உட்பட !
Rks
கப்பலோட்டிய தமிழன்-1961(Memory of Thiru.V.O.Chidambaram Pillai-5/9/1872 to 18/11/1936)
இந்தியாவிலேயே Docu -drama என வகை படும் ,biographical படங்களுக்கு முன்னோடி கப்பலோட்டிய தமிழன். அகில இந்திய அளவில் கொண்டாட பட்டு ,உலக அளவில் தூக்கி பிடிக்க பட்டிருக்க வேண்டிய உன்னத சிறந்த படைப்பு. திலக், விபின் சந்திரா, அரவிந்தர், லாலா லஜபதி முதலியோர் வழியில் வந்து இந்திய சுதந்திரத்திற்காக பல தியாகங்கள் செய்த ஒப்பற்ற தமிழன் வ.உ .சிதம்பரம் பிள்ளை. காங்கிரஸ் ,மற்றும் காந்தியோடு முரண் பட்டவர் என்பதாலேயே ,single political agenda கொண்டிருந்த (அதாவது சுதந்திரமே காந்தி,நேரு, காங்கிரஸ் சாதனை. மற்றோர் ஒரு பங்களிப்பும் இல்லை ) அன்றைய அரசாங்கத்திற்கு இந்த படம் உவப்பில்லை.திராவிட கட்சிகளுக்கும், உண்மையான தலைவர்களிடம் ஈடு பாடில்லை. (அது பிள்ளை ஆகவே இருந்த போதும்).ஆனால் உன்னத தேச பக்தர்களான பந்துலுவும்,நடிகர்திலகமும் இந்த தமிழனை தமிழர்களுக்கு கொண்டு சேர்த்தனர்.
இந்த படம் நடிகர்திலகத்தின் histrionics என்று சொல்ல படும் உன்னத வேறுபட்ட நடிப்புக்கு அதிகம் scope இல்லாதது.உள்ளதை உள்ள படி உரைக்க வேண்டும். பார்த்து பழகிய contemporaries உயிரோடிருக்கும் போது ,இந்த தலைவனை ரத்தமும் சதையுமாக நம் முன் நிறுத்த வேண்டும்.கட்ட பொம்மன் போல அபார நடிப்பு திறமையால் கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று காட்டியது போல் செய்ய முடியாது. கப்பலோட்டிய தமிழன் எப்படி இருந்தார் என்று காட்ட வேண்டும்.
இந்த மேதை தேர்ந்தெடுத்த நடிப்பு பள்ளி முறை Stanislavsky ,Strasberg method Acting சார்ந்தது. method Acting is not just acting or Reacting but behaving the way character should have done .அந்த பாத்திரமாக வாழ வேண்டும் ,அந்த வாழ்க்கை முறையின் உணர்வுகள் போலி செய்ய படாமல் ,நடிப்பவனின் நினைவில் அடுக்ககளில் இருந்து கட்டமைக்க பட்டு, வ.உ.சி. வாழ்க்கையோடு,பாத்திரத்தோடு பொறுத்த பட்டு இணைவு பெற வேண்டும்.
நடிகர்திலகம் தேச பக்தி கொண்ட பாரம்பரியத்தில் இருந்து வந்தவர். அவரது தந்தை சுதந்திர போராட்டத்தில் ஈடு பட்டு குடும்பத்தை தவிக்க விட்ட தியாகி. சிறை சென்று பல அவதிகள் உற்றவர் .நினைவின் அடுக்குகளுக்கு பஞ்சமில்லாத வகையில் பின்னணி.
இவ்வளவு அற்புதமான advantage இருக்கும் போது ,உண்மைக்கு மிக மிக அருகில் வந்த அற்புதமான திரைக்கதையும் தயாரான போது ,ஒரு கலைஞனின் அறிவும்,மனமும் ,உணர்வும் அதில் தோயும் பொது ,அதில் தோய்பவன் உலகத்திலேயே மிக சிறந்த நடிகனாக இருக்கும் போது, அந்த magic நிகழத் தானே வேண்டும்?
நிகழ்ந்ததா?
கப்பலோட்டிய தமிழனின் நோக்கம், தேசியம், விடுதலைக்காக செய்த உன்னத தியாகங்கள்.ஒரு தனி மனிதன் தன் சொந்த பந்தங்கள் சொத்து சுகங்கள் அத்தனையும் தேசத்துக்காக அர்ப்பணித்த உன்னதம், தேச விடுதலைக்காக பொருளாதார ,வியாபார உத்தியை கையிலெடுத்த துணிச்சல் மிகுந்த enterprenership ,ஒரு முதலாளியாகவே இருந்தும், தொழிலாளர் உரிமைக்காக போராடும் நேர்மை, ஆதிக்கத்தை கண்டு அஞ்சாமை,ஆனால் கடைசியில் நம்பியவர்களால் கை விடப்பட்டதும் அல்லாமல், கண்டு கொள்ளாமலும் விட பட்ட சோகம் இவற்றை முன்னிறுத்திய super -objective கொண்ட உண்மை theme .
இதில் வ.உ .சி இளமை காலங்கள் சொல்ல படவே இல்லை. ஆரம்பமே கல்யாணமாகி ,pleader பணியில் இருக்கும் நாட்களே. பொது வாழ்வின் ஆரம்ப நாட்களில் இருந்து தொடக்கம். பிறகு அவருடைய அந்நிய பொருள் பகிஷ்கரிப்பு, சுதேசி கப்பல் கம்பெனிக்கான முனைவு, தொழிற்சங்க, அரசியல் போராட்டங்கள் என்று விரியும். பிறகு சிறை வாழ்க்கை, வெளியில் வந்ததும் ஏமாற்றம் நிறைந்த பொது வாழ்வு மற்றும் தனி வாழ்வு. என்று மூன்று கட்டங்களில் விரியும்.
இதற்காக நடிகர் திலகம் செய்த home work அபாரமானது. முதலில் மொழி. தமிழில் slangs ,ஓட்டபிடாரம் பிள்ளைகளுக்கு உரிய வட்டார மொழி என்பது இருந்தாலும் அது தொட்டு கொள்ள ஊறுகாய் போல ஒரு சில குடும்ப காட்சிகளில் உபயோக படுத்த படுவதோடு சரி.மற்ற படி ஒரு வழக்கறிஞர், பொது வாழ்க்கைக்கு வந்த, இலக்கியம் ,ஆங்கிலம் அறிந்த மனிதர்களுக்கு உண்டாகும் பொது மொழி தேர்ந்தெடுப்பு மிக சரியானது.(நினைத்திருந்தால் மக்களை பெற்ற மகராசி கொங்கு தமிழ் போல பிள்ளை தமிழ் பேசியிருக்கலாம்.).
அடுத்து personality . ஒரு வசதியான வீட்டு படித்த மனிதர். முதலாளி ,leadership quality உள்ள abnormal enterprener and a practising lawyer .அதற்குரிய constructive arrogance ,மிடுக்கு, அதே நேரத்தில்
exhibitionist politeness , commitment to the cause ,எதிரில் இருப்பவரின் தரமறிந்து நடக்கும் பழகும் இங்கிதம்,public life outwardly courageous conviction என்பவை கொண்ட முதல் கட்ட பாத்திர குண வார்ப்பு.
இரண்டாவது கட்ட பாத்திர வார்ப்பு ,அவர் சிறையில் தனக்கு பழக்கமில்லா கடின உடலுழைப்பு, சிறிதே physical abuse , தனிமை சிறை வாசம் என்று உடலை சோர வைத்தாலும் மனதில் உறுதி தளரா நிலைமை.
மூன்றாவது கட்டமோ , குடும்பம் சிதைந்து, அவர் உருவாக்கிய கம்பனியை வெள்ளையனுக்கே விற்று விட்ட துரோகம்,மக்களின் பாரா முகம், ஒன்றன் பின் ஒன்றாக நண்பர்களின் துயரம் மற்றும் இழப்பு, ஒரு defeatist introverted சுருங்கல், உடலும் மனமும் சோர்ந்து இலக்கிய பணியில் ஒதுங்கி மீதி நாட்களை இறப்பு வரை கடத்துவது என்கிற phase
படத்தின் துவக்கத்திலேயே எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. எனக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் போது class teacher என் அம்மாதான்.டீச்சர் என்றுதான் வகுப்பிலும், பள்ளியிலும் கூப்பிட வேண்டும், அம்மா என்று கூப்பிட கூடாது என்று கண்டிப்பான உத்தரவு. கூப்பிட கூடாது என்ற deliberate consciousness என்னை அடிக்கடி தவற வைக்கும். முதல் காட்சியில் தந்தைக்கெதிராக ஒரு வழக்கில் ஆஜராகும் போது வாய் தவறி அப்பா என்று ஆரம்பித்து மன்னிக்கவும் எதிர் கட்சி வக்கீல் என்பார். சிறிதானாலும் என்னால் மறக்க முடியாது.
ஒவ்வொருவருடனும் interract பண்ணும் போது அதற்குரிய ஒரு தனி சிறப்பான விசேஷம். சிவாவுடன் ஒரு மதிப்புக்குரிய ஆசிரிய தோழன் ,பாரதியுடன் விளையாட்டு கலந்த புரவல உரிமை, மாடசாமியிடம் மகனை போன்ற ஆனால் வேலையாள் என்ற நிலையும் தலை காட்டும் தோரணை, கப்பல் கம்பனி இயக்குன நிர்வாகிகளுடன் வணிக நோக்கம் கலந்த நட்பு,தொழிலாளர்களிடம் பரிவான ஒரு வாஞ்சை(பரிமாறிய சோற்றை எடுத்து உண்டு தரம் பார்க்கும் ஒரு leadership கலந்த exhibitionist good gesture ), adverse situation போது வெளிப்படும் assertive firmness (கப்பல் தர மறுக்கும் ஷா விடம்),திலக்கிடம் பேசும் போது பணிவும் ,மரியாதையும் கலந்த ஆங்கில(எவ்வளவு நல்ல உச்சரிப்பு) விண்ணப்பம்,ஆஷ் மற்றும் விஞ்ச் இவர்களுடன் விட்டு கொடுக்காத அலட்சிய பேச்சு என்று வ.உ .சி போல behave செய்து பாத்திரமாக வாழ்ந்திருப்பார்.
சிறையில் தனக்கு பழக்கமில்லாத உடலுழைப்பில் ஈடு படுத்த படும் போது விருப்பமில்லா கஷ்டத்தை வெளியிடும் முறை, மனத்தை உறுதியாக வைத்திருக்க பிரயத்தனம் கலந்த மெனக்கெடல், டாக்டருடன் interract செய்யும் போது அலட்சியம் காட்டினாலும் இதற்கு மேல் என்ன என்ற வகையிலேயே, சிறையிலிருந்து விடுதலை என்றதும் நாட்டுக்கா விடுதலை என்று மேலுக்கு பேசினாலும், வெளியில் வந்ததும் அடையும் சுதந்திர உணர்வை ,அந்த காற்று பட்ட உணர்வை, பறவைகளை பார்த்து அடையும் பரவசத்தை காட்டியும் விடுவார்.
ஏமாற்றத்தை உணர்ந்தாலும் (ஒருவர் கூட அழைக்க வராததில்), மேலுக்கு சமாதானம். சிவாவை பார்த்து அடையும் அதிர்ச்சி கலந்த பரவசம்,தம்பி மனநிலை பிறழ்வில் தலையில் அடித்து அடையும் தாங்கொணா துயரம், மக்களின் உதாசீனத்தை அனுபவித்து கூட்டுக்குள் முடங்கும் சுருக்கம், இழப்பில் காட்டும் ஏமாற்றம் நிறைந்த தனிமை சோகம் என்ற அளவில் method acting முறையில் மூன்று phases என்று வரும் நிலைகளிலும் பாத்திரத்தை வார்த்ததில் மூன்று முக்கிய compliments .
முதல் ஒன்று சிவாஜியிடம் இருந்து சிவாஜிக்கு---- நான் நடித்ததிலேயே மிக சிறந்த பாத்திரம் என்று. இரண்டாவது வ.உ.சி மகன் ஆறுமுகத்திடம் இருந்து தந்தையை தத்ரூபமாக கண்டேன் என்றது. மூன்றாவது வ.உ .சி மற்றும் சுப்ரமணிய சிவாவை அனைத்து நிலைகளிலும் நேரில் கண்ட என் தாத்தா வின் பரவச compliment . "வேறு எவண்டா இப்படி பண்ண முடியும்? நடிக்கலைடா. அப்படியே வாழ்ந்துட்டான், நான் நேர்லயே பாத்திருக்கேண்டா அவர்களை எல்லாம். அதை வைச்சு சொல்றேன்". என்ற மனமார்ந்த பரவசம்.
இதற்கு மேலும் வார்த்தை ஏது சொல்ல?
எங்கும் என்றும் சாதனைகளுக்கெல்லாம் முதல்வர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசனே..
இதோ இதற்கான இன்னோர் சான்று.
முந்தைய நாள் இரவே சைக்கிள் போட்டு டோக்கன் வாங்கி டிக்கெட்டிற்கு உறுதி செய்து கொண்ட மக்கள்..
இது நடந்தது 1952 தீபாவளியன்று அறிமுகமாகி 1954 தீபாவளியில் இரு ஆண்டுகளே பூர்த்தி செய்திருந்த ஒரு புது நடிகரின் திரைப்படத்திற்கு..
இதே போல கோவை நகரில் முதன் முதலில் தூரிகை ஓவியம் பேனர் வரைந்து வைக்கப்பட்ட திரைப்படத்தின் ஹீரோ ...
சொல்வது தினமலர் நாளிதழ் - கோவைப் பதிப்பில் 17.11.2015 அன்று வெளியான இதழில்..
http://epaper.dinamalar.com/PUBLICAT...15_102_005.jpg
சாதனை என்றால் நிகழ்த்திக் காட்டுவது... அந்த சாதனையை நிகழ்த்திக் காட்டி சாதனைகளுக்கெல்லாம் சாதனை புரிந்தவர்
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரே கலைஞன்...
திரையில் மட்டுமே நடிக்கத் தெரிந்த உத்தமன்...
மக்கள் தலைவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களே..
மேற்காணும் தினமலர் தகவலுக்கு நன்றி.. அருமை நண்பர் கோவை ரமேஷ்பாபு அவர்கள்.
குறிப்பு...
தூக்குத்தூக்கி வெளியானது ஆகஸ்ட் 1954ல்.எனவே இது நடந்தது தூக்குத்தூக்கி வெளியான நாளன்றாக இருக்கலாம். 1954 தீபாவளிக்கு நடிகர் திலகத்தின் படம் எதுவும் வெளியாகவில்லை. எனவே கோவை ராயலில் 1954 தீபாவளிக்கு தூக்குத்தூக்கி மறு வெளியீடாகி இருக்கலாம். அப்படி மறுவெளியீட்டில் தீபாவளியன்று நடைபெற்றிருந்ததென்றால் அது இன்னும் மகத்தான சாதனை.
எது எப்படியோ மேலே கூறப்பட்ட நிகழ்வுகளில் திரிபு ஏதும் இல்லை என்பது உறுதி.
UNCOMMON GOD&a common man
What was the environment?
My parents were elementary school teachers.Naturally as a working women,in bringing me up,my mother was depended fully on her sisters and mother who were living in the next street.Infact I was fully brought up by mother"s sisters who were in their teens.They were already fans of Nadigar Thilagam and almost my parents,her parents,brothers everyone was NT fans.Only difference was how they exposed it.I have been taken to the theatres by all to watch NT movies and made me to listen only NT songs in radio?!
All this environment were the reason for me to become a disciple of NT.
To the best of my knowledge"IRU DHRUVAM "was the first movie which I remember.Upto my first 10years,Ihad been to the films with someone in the family.Generally in the outskirts of the city,new movies released in city will come after 6months or 1year or in any big festival."Without anybody I saw needhi in tharaiticket,the opening song Naalai mudhal is evergreen on my mind.It was a matinee in touring theatre and cursed everytime someone came inside or came out.Because they lift the cloth tied to cover the sunlight and everytime they lifted ,the screen will be dull.But exactly when ,what made to become a disciple?
(to be continued)
Dear Gopal Sir,Kappalotiya thamilan" article is excellent as usual.Many times I think it is very difficult to be a NT fan and it needs blessings.Why I am saying this is CINEMA is always a source of entertainment only as many people think.But we alone,the NT fans go beyond that or NT makes us to go beyond that and we forget the entertainment value and emotions capture us.I once again feel blessed to be a NT fan.
Attachment 4684
காதல் மன்னன் ஜெமினி கணேசன் உடன் நடிகர் திலகம் சிவாஜி
ஜெமினி யின் பேரன் பேட்டியில் கிடைத்தது
நடிகர் திலகம் காலமான போது "இருந்த ஒரு நடிகனையும் கொன்னுடீங்களேடா" என்று ஒரு ரசிக வெறியன் சொன்னதை வடிவேலு அவர் பாணி சொல்லும் யூ டீயூப்...
https://www.youtube.com/watch?v=TZJqgM86fyY
http://bp2.blogger.com/_flfvbxESWP4/...ji+Ganesan.gif
என்றைக்கும் தன் நெஞ்சில் நடிகர் திலகத்திற்குத் தனியிடம் கொடுத்து, அவருடைய மேன்மையைப் புரிந்து வைத்திருந்த அன்னை இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு நமது இதயபூர்வமான அஞ்சலியுடன் தொடர்ந்து அவர் நினைவைப் போற்றுவோம்..
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...83&oe=56B947F9
உலகில் கண்களை உதாரணம் காட்டுவதற்கென்றே பிரம்மன் படைத்த அவதார புருஷன்
தரிசனம்-1. இரு மலர்கள்.
----------------------------
தொடர்கிறது...
---------------
கவலை அகன்று சந்தோஷம்
புகுந்து விட்ட இதயத்திற்கு
சொந்தக்காரன் ஆனான் சுந்தர்.
அந்த மகிழ்வோடு, தன் கையில்
இருக்கும் மலர்ப் பந்தை
சாந்தியிடம் கொடுக்கிறான்.
உமாவுக்காக வாங்கிய பூ
தனக்குச் சேர்வதா என சாந்தி
தயங்குகிறாள்.
மங்கலப் பொருட்களை
பெண்கள் மறுக்கக் கூடாதென
அறிவுறுத்தி சுந்தர், சாந்தியிடம்
பூவைக் கொடுக்கிறான்.
அத்தான் கையால் பூ வாங்கும்
சாந்தி, தானும் ஒரு பூவாய்
மலர்ந்து சிரிக்கிறாள்.
அந்தப் பூப்பந்தும், விளையாடும் ரப்பர் பந்து
போல்...
கைக்குக் கை மாறுகிறது.
----------------
உமாவின் வீடு அவளை உவகையுடன் வரவேற்கிறது.
தந்தையும்,தாயுமாகவே மாறி
விட்ட அவளது அண்ணனும்.
அண்ணியும் பொழியும் அன்பு
மழையில் கூச்சக் குடையெல்லாம் பிடிக்காமல்
ஆனந்தமாய் நனைகிறாள்..
உமா.
வேலைப் பரபரப்பிலிருக்கும்
அண்ணனிடம், தன் காதலை
வெளிப்படையாகப் போட்டு
உடைக்காவிட்டாலும், ஏதோ
சுற்றி வளைத்துச் சொல்லி
இருக்கிறாள்.
அவசர அலுவல்களை எல்லாம்
முடித்து விட்டு இரவு வீடு
திரும்பினதும் அவளிடம்
விரிவாகப் பேசுவதாகக் கூறி
விடைபெறுகிறார் அண்ணன்.
உடன் கிளம்புகிறாள் அண்ணியும்.
இராணுவ கம்பீரத்துடன் கையசைக்கும் அண்ணனுக்கு
பதிலுக்குக் கையசைத்து விடை
கொடுக்கும் உமா, அந்த நிமிஷத்திலிருந்து இரவு
வரைக்கும் தன்னை விட்டுப்
பிரிந்து செல்லும் அண்ணனுக்கும், அண்ணிக்கும்
கொடுக்கும் சந்தோஷமான,
சம்பிரதாயமான விடையளிப்பு
என்றுதான் அதை நினைத்திருப்பாள்.
விதி, அவளைப் போல் நல்லவிதமாய் நினைக்கவில்லை.
அது, கொஞ்ச நேரப் பிரிவில்லை.. நிரந்தரமானது
என்றும், அவள் கையசைப்பு,
அந்த அன்புயிர்கள் இரண்டுக்குமான கடைசி
வழியனுப்புதலுக்குரிய ஒத்திகை என்றும் அது
எக்காளமாய்ச் சிரித்தது.
அண்ணனின் மூன்று குழந்தைகளும் அவளன்பில்
மகிழ்ந்து அவளைச் சூழ்ந்திருக்க, அண்ணனிடம்
அவர்களது காதல் குறித்து பேசத் துவங்கி விட்டதையும்,
இரவு அண்ணன் வந்ததும்
விரிவாகப் பேசி சம்மதம்
பெற்று விடப் போகும் தனது
நம்பிக்கையையும், உமா தன்
சந்தோஷ மையில் தோய்த்து
சுந்தருக்கு கடிதமாக வரைகிறாள்.
அவளது காதலைச் சிதைப்பதென்றே கங்கணம்
கட்டிக் கொண்ட காலம், தனது
அழித்தல் வேலை ஆரம்பமாகி
விட்டதற்கான அறிகுறிகளாக..
அண்ணனும், அண்ணியும்
சேர்ந்து சிரிக்கும் புகைப்படத்தை அவர்களின்
குழந்தையைக் கொண்டே
கோரமாய் உடைக்க வைக்கிறது.
தொடரப் போகும் மரண ஓலத்தின் எதிரொலி போல்
தொலைபேசி மணியை
சப்திக்க வைக்கிறது.
தொலைபேசி வழியே சொல்லப்படவிருக்கிற செய்தி
அதிநிச்சயமாய் நல்லசெய்தி
இல்லை என்பதைத் தெரியப்படுத்த, அண்ணனின்
சின்னஞ்சிறிய பெண்குழந்தையை வீறிட்டு
அழச் செய்கிறது.
நல்லவற்றைக் காலம் தாழ்த்திக் கூடச் செய்யாத
காலத்திற்கு, கெடுதலை உடனே செய்து விடுகிற தீர்க்கம் இருக்கிறது.
உமாவின் அண்ணனுக்கும்,
அண்ணிக்கும் ஏற்பட்ட விபத்தில், அண்ணி சம்பவ
இடத்திலேயே இறந்து விடுகிறாள். அண்ணன் உயிரைக் கையில் பிடித்துக்
கொண்டு அவள் முகம் காணத்
துடிக்கும் கடைசித் தருணத்தில்
இருக்கிறாள்.
உமா அவரிடம் சொல்ல யத்தனித்த அந்த விஷயம்
என்னவென்று கேட்க, உமா
எதுவுமில்லை என கண்ணீரோடு பொய் சொல்கிறாள்.
அவளுக்காகவே உலகில் வாழ்ந்த அந்த உயிர், அவளுக்கு
நம்பிக்கை கொடுத்து, அன்பான
குழந்தைகளுக்கு முத்தங்கள்
கொடுத்து...
அத்தனை நாள் தங்கியிருந்த
உடல் நீங்கிப் பறக்கிறது.
உமா கனவு கண்ட இன்பமான
காதல் வாழ்க்கை, எங்கோ
எட்டாத உயரத்தில் நின்று
கொண்டு, அவளைப் பார்த்து
கேலியாய்ச் சிரிக்கிறது.
உமா சிந்திக்கிறாள்.
தனக்குள் மலர்ந்து சிரிக்கும்
காதலைக் காட்டிலும், தன்னை
நம்பி ஒப்படைக்கப்பட்ட
மூன்று அரும்புகளின் எதிர்காலத்திற்காகத் தன்
வாழ்வையே தருவதுதான் உயர்வென்று கருதுகிறாள்.
சற்று முன் சுந்தருக்குத் தன்
காதலையும், நம்பிக்கையையும்
தெரிவித்தெழுதிய கடிதத்தில்,
அவளது கண்ணீர் எரிபொருளாய்ச் சிந்துகிறது.
குளிர்காய மூட்டப்பட்ட அடுப்பில் எரிபொருள் தடவிய
கடிதத்தை வருத்தமாக
வீசுகிறாள்..உமா.
"நீயாப் போட்டு உடைச்சாலே
ஒழிய, என் இதயம்ங்கிற
கண்ணாடியில உன் உருவம்தான் தெரியும்."
காதலன் கூறிய வார்த்தைகள்
அவளது செய்கையைப்
பழிக்கிறது.
உமா அடுப்பில் வீசிய
சுந்தரின் கடிதத்தை, விரைந்து
உள்வாங்கிக் கொண்டு
எரித்தழித்தது... நெருப்பு.
நெருப்பு-
இதயமற்றது.
இங்கிதமில்லாதது.
எதை அழிக்கிறோம்
என்கிற விபரமறியாதது.
கோடி இதயங்களில்
காலம் எழுதிய
நடிகர் திலகமெனும்
கவிதையையே
தன் செந்நாவால்
தீண்டிப் பார்த்த
திமிர் பிடித்த நெருப்புக்கு...
சுந்தர் எழுதிய
கடிதக் காகிதம்
எம்மாத்திரம்?
(...தொடரும்...)
Doha bank CEO Dr. Seetharaman Interview in Sun TV
https://www.youtube.com/watch?v=IsPw16xvj3s