https://youtu.be/RuTjXd7OEJU
Printable View
Thiru Vinod sir
Congrats for reaching the 14000 postings.
http://i66.tinypic.com/2po5nhz.jpg
http://i68.tinypic.com/2hi82lt.jpg
http://i65.tinypic.com/muwjnq.jpg
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ,10வது வரை படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் 50ரூபாயும் , பி.யூ .சி. படித்தவர்களுக்கு மாதம் 65 ரூபாயும் உதவித் தொகை அளிக்கும் திட்டத்தை
அமுல்படுத்தினார் .
http://i67.tinypic.com/o77z3s.jpg
நாளை (26/06/2016) மாலை 6 மணியளவில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற உள்ள இன்னிசை நிகழ்ச்சி பற்றிய பேனர் .
http://i66.tinypic.com/1532zwy.jpg
வரும் சனிக்கிழமை (02/07/2016)மாலை 6 மணியளவில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற உள்ள இன்னிசை நிகழ்ச்சி பற்றிய விளம்பர
சுவரொட்டி .
http://i67.tinypic.com/2u5ayc8.jpg
http://i66.tinypic.com/20aaphh.jpg
http://i67.tinypic.com/4iinbm.jpg
நாளை (26/06/2016) ஞாயிறு காலை 11 மணிக்கு மக்கள் தலைவர் /புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய " நாளை நமதே " திரைப்படம் சன் லைப்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .
http://i66.tinypic.com/2eun5m1.jpg
நாளை இரவு 7.30 மணிக்கு முரசு டிவியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
"தாயின் மடியில் " திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது .
http://i63.tinypic.com/sauyjm.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர் .
மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களின் பக்தரும் நமது திரியின் பதிவாளருமான திரு வேலூர் ராமமூர்த்தியின் அன்புத்தாயார் இன்று இரவு 9 மணியளவில் காலமானார். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
https://s32.postimg.org/8gmqkmiud/13...12434987_n.jpg
நண்பர் திரு ராமமூர்த்தியின் தாயார் மறைவு அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன் .ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்
நண்பர் திரு. ராமமூர்த்தி அவர்களின் தாயார் மறைவு செய்தி கேட்டு மிக்க துயருற்றேன் . அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவன் எம்.ஜி.ஆர். அருள்
புரியட்டும்.
என் சார்பாகவும் , இறைவன் எம்.ஜி.ஆர்.பக்தர்கள் குழு சார்பாகவும் நண்பர்
திரு. ராமமூர்த்தி அவர்களுக்கும், மற்றும் அவரது குடும்பத்தினருக்கும்
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் .
ஆர். லோகநாதன் .
நமது திரியின் பிரதான பதிவாளர்கள்
திருவாளர்கள்
வினோத் மற்றும் பேராசிரியர் செல்வகுமார்
இருவரும் மக்கள் திலகத்தை சந்தித்த நிகழ்வை
தி ஹிந்து தமிழ் செய்தித்தாளில் 'எம் ஜி ஆர் 100'
என்ற தொடரில் பகிர்ந்துள்ளனர்.
இந்த தொடரை மிக சுவைபட எழுதி வரும்
திரு ஸ்ரீதர் சுவாமிநாதன் அவர்களுக்கும்
வெளியிட்டுவரும் தி ஹிந்து தமிழ் செய்தித்தாள்
நிறுவனத்திற்கும் நமது திரிந்த சார்பாக நன்றியை
தெரிவித்துக்கொள்கிறேன்.
எஸ். ரவிச்சந்திரன்
https://s31.postimg.org/oylevkjkr/scan0001.jpg
தினமணிக்கதிர் -26/06/2016
http://i66.tinypic.com/30i7wjl.jpg
http://i65.tinypic.com/ixciso.jpg
இன்று (26/06/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் நடிக பேரரசர்
எம்.ஜி.ஆர். நடித்த "அரச கட்டளை " திரைப்படம் ஒளிபரப்பாகிறது
http://i63.tinypic.com/34nfpyo.jpg
உடம்பு சரியில்லை..
http://i63.tinypic.com/33nyek1.jpg
இனிய நண்பர் திரு முத்தையன் சார்
தங்கள் உடல் நலனை நன்கு கவனித்து கொள்ளவும் .விரைவில் பூர்ண குணமடைய பிராத்திக்கிறேன் .
https://youtu.be/ft44mIGumqY
makkal thilagam m.g.r in manthirikumari -24.6.1950
மந்திரிகுமாரி (1950)
1950-ம் ஆண்டு மாடர்ன் தியேட்டர்ஸ், வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய ""திகம்பர சாமியார்'' கதையை, அதே பெயரிலும், மந்திரிகுமாரி என்ற இன்னொரு படத்தையும் தயாரித்தது. இரண்டு படங்களுமே வெற்றிப் படமானது என்றாலும், மந்திரிகுமாரியில், எம்.ஜி.ஆர். நடிப்பும், கலைஞரின் வசனமும், மக்களை அதிகம் கவர்ந்தது. மந்திரிகுமாரியின் கதை ஒரு புராண கதையின் பின்னணியில் உருவாக்கப்பட்டிருந்தது.
கொள்ளை அடிப்பதையும், கொலை பாதகம் செய்வதையும் தொழிலாக செய்து வருகிறான் ஒரு கொடியவன். அந்த நாட்டு மக்கள் அரசனிடம் சென்று முறையிடுகிறார்கள். அந்தக் கொடியவனையும், அவன் கூட்டத்தையும் கூண்டோடு பிடிக்க, தளபதி வீரமோகன் நியமிக்கப்படுகிறான். அவனது முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு கெடுத்து வருகிறார் ராஜகுரு
அரசனின் மகள் ஜீவரேகா, ஒரு பேரழகி. மந்திரியின் மகள் அமுதாவும், அவளும் நெருங்கிய தோழிகள்.
தளபதி வீரமோகனின் தோற்றத்தையும் அவனது வீரதீரச் செயல்களிலும் மனதைப் பறிகொடுத்த ராஜகுமாரிக்கு அவன் மேல் காதல் பிறக்கிறது. ராஜகுருவின் மகன் பார்திபனோ, ஜீவரேகாவை ஒருதலையாகக் காதலிப்பதோடு, அவளது அன்பையும் காதலையும் பெற பல வழிகளில் முயற்சிக்கிறான்.
பார்திபன், ஜீவரேகாவுக்கு தன்னைச் சந்திக்க வரும்படியாக கடிதம் எழுதி, ஒரு சேவகனிடம் கொடுக்கிறான். தற்செயலாக, அந்தக் கடிதத்தைப் பார்த்த மந்திரிகுமாரி அமுதா அதிர்ச்சியடைகிறாள். காரணம், பார்திபன் அவளை காதலிப்பதாகவும், கல்யாணம் செய்து கொள்வதாகவும் உறுதியளித்திருந்தான். கடிதத்தைப் பார்த்த அவளுக்கு ஒருவேளை இருவருக்கும் காதல் இருக்குமோ என்று சந்தேகம் தோன்றுகிறது.
ஒருநாள் ஜீவரேகாவைப் பின்தொடர்ந்து உண்மையை தெரிந்து கொள்ளச் சென்ற "அமுதா'வை, பார்திபன் எதிர்பாராமல் சந்திக்கிறான். காதல் மொழி பேசி, அவளை மயக்கி தன் வலையில் விழச் செய்து விடுகிறான் அவன்.
வீரமோகன், கொள்ளைக் கூட்டத் தலைவனை கையும் களவுமாகப் பிடித்து விடுகிறான். அவன் வேறு யாருமல்ல, ராஜகுருவின் மகன் பார்திபன்தான். பொதுமக்களுக்கோ மகிழ்ச்சி. ஆனால் அரசவையில் குழப்பம். விவரம் அறிந்த மந்திரிகுமாரி அமுதா துடிக்கிறாள். எப்படியும் அவனுக்கு மரணதண்டனை நிச்சயம் கிடைக்கும்.
அவனைத் திருத்திவிடலாம், என்ற எண்ணத்தில் தன் தந்தை மந்திரி நீதிதேவனிடம் கெஞ்சுகிறாள். ஆனால் அவரோ பாசத்துக்காக நீதியை பலியிட விரும்பவில்லை என்று கண்டிப்பாகச் சொல்லி விடுகிறார். அவனுக்குத் தீர்ப்பளிக்குமாறு மந்திரி நீதிதேவனிடம் கூறுகிறார் அரசர். அவர் ஒரு தேவி பக்தர் என்பதால் தெய்வத்திடம், நீதி கேட்டு வேண்டி நிற்கிறார். அவனுக்கு தூக்குத் தண்டனை விதிக்க முடிவு செய்யப்படும் நேரம், தேவியின் சிலையில் ஒரு அசரீரி குரல் ஒலிக்கிறது.
""பார்திபன் குற்றமற்றவன். அவனை விடுதலை செய்'' என்ற அருள்வாக்கு உத்தரவிடுகிறது. அவர் அதை உண்மை என்று எண்ணி, மன்னரிடம் சென்று கூறி அவனை விடுதலை செய்து காப்பாற்றுகிறார். தளபதி வீரமோகனுக்கு ஒரே குழப்பம்.
ராஜகுருவின் சூழ்ச்சியால் வீரமோகன் நாடு கடத்தப்படுகிறான். பார்திபன் தளபதியாக்கப்படுகிறான். மந்திரிகுமாரி அமுதவல்லிக்குக் கணவனாகிறான்.
நாடு கடத்தப்பட்ட வீரமோகனை ராஜகுரு கொடுமையான முறையில் நடத்தி அதிகார பலத்தால் அடித்து விடுகிறார். இந்தச் சம்பவம், மன்னருக்கும் ராஜகுருவுக்கும் இடையே மனக்கசப்பை ஏற்படுத்துகிறது. ராஜகுருவுக்கு மன்னனாகும் ஆசை துளிர்விட்டு வளர்கிறது. ஒரு கொடியவன் அவர் எண்ணத்திற்கு தூபம் போடவே, அவர் எண்ணம், வலுவடையத் தொடங்குகிறது.
அரசகுமாரி ஜீவரேகா நாடு கடத்தப்பட்ட தன் காதலன் வீரமோகனைத் தேடிப் புறப்படுகிறாள். பார்திபன், மந்திரிகுமாரியை மணமுடித்த பின்பும் ஜீவரேகாவை, அடைய வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை.
வீரமோகன் இருக்கும் இடம் தனக்குத் தெரியும் என்று யாரோ ஒருவன் மூலம் சொல்ல வைத்து அவளை தனது குகைக்கு வரவழைத்து விடுகிறான்.
அங்கே, அவள் கற்புக்கு களங்கம் ஏற்படப் போகும் தருணத்தில் ஆண் உடை தரித்து அவளைப் பின் தொடர்ந்து வந்த மந்திரிகுமாரி அமுதா, பார்திபனுடன் மோதுகிறாள். ஜீவரேகாவைக் காப்பாற்றித் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள்.
அமுதாவை பழிவாங்க திட்டம் தீட்டுகிறான் பார்திபன். காதல் மொழி பேசி, மலை உச்சிக்கு அழைத்துப் போய், அங்கிருந்து அவளை தள்ளிவிட்டு- விபத்து என்று சொல்லிவிடும் திட்டத்தில் அவளை அழைத்துக் கொண்டு மலைஉச்சிக்குப் போகிறான். உச்சியில், அமுதாவை கொன்று விடும் திட்டத்தை சொல்லவே, அவள் இறக்கப் போவதில் வருத்தமில்லை, என் கணவரை, நான் வணங்க வேண்டாமா? அதனால் உங்களை மூன்று முறை சுற்றி வணங்கிய பின்பு தங்கள் விருப்பம் போல என்னை தள்ளிக் கொலை செய்து விடுங்கள் என்று சொல்லி, மூன்றாவது சுற்று முடியும் போது தன் கணவனை அங்கிருந்து தள்ளி கொன்று விடுகிறாள்.
வீரமோகன் ஜீவரேகாவைத் தேடி அரண்மனைக்கு வருகிறான். அரசனைக் கொல்ல ராஜகுரு முயல்கிறான். மந்திரிகுமாரி மேல் கத்தி வீசப்பட்டு விடுகிறது. தேவி சிலைக்கு பின்னால் அருள்வாக்கு பேசியது முதல், தன் கணவன் பார்திபன் தன்னை கொல்ல முயற்சித்தது.
ஜீவரேகாவை, அவனிடமிருந்து காப்பாற்றியது போன்ற எல்லா உண்மைகளையும் சொல்லி, ஜீவரேகாவையும் வீரமோகனையும் இணைத்து வைத்து விட்டு இறந்து விடுகிறாள். ராஜகுருவின் சூழ்ச்சி அம்பலமாகி விடுகிறது. அவர் சிறைப்படுத்தப்படுகிறார்.
கனல் பறக்கும் வீரமான வசனங்களைப் போலவே, கருணாநிதியின் காதல் வசனங்களும், பாராட்டும்படி இருந்தது படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாகும்.
பார்திபனாக நடித்த எஸ்.ஏ. நடராஜன் தனக்கே உரித்தான, தனித்தன்மையான குரலாலும் வித்தியாசமான நடிப்பாலும், பாராட்டுக்களைத் தட்டிச் சென்றார். ராஜகுருவாக, எம்.என். நம்பியார் சிறப்பாக நடித்திருந்தார். வீரமோகன் பாத்திரத்தில் எம்.ஜி.ஆர். தன் நடிப்பாலும், சண்டைக் காட்சிகளில் தனது வாள் வீச்சாலும் புகழை வளர்த்துக் கொண்டார். அவருக்கு ஜோடியாக ஜி. சகுந்தலா. மந்திரிகுமாரி டைட்டில் ரோலில் நடித்த மாதுரிதேவி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
"உலவும் தென்றல் காற்றினிலே'. "அந்தி சாயிர நேரம்', "எருமைக் கன்னுக்குட்டி', "வாராய், நீ வாராய்', "அன்னமிட்ட வீட்டிலே' போன்ற அத்தனை பாடல்களும் இன்றைய கால கட்டத்திலும் விரும்பிக் கேட்கும் பாடல்களாகும்.
தரமான படப்பிடிப்பும் திறமையான டைரக்ஷனும், வசனமும், பாடல்களும் நடிப்பும், ஒன்றோடு ஒன்று இணைந்து விட்டதால், மந்திரிகுமாரி மறக்க முடியாத படமாகவும் வெற்றிப் படமாகவும் அமைந்துவிட்டது.
நடிக, நடிகையர்
எம்.ஜி. ராமச்சந்திரன், எம்.என். நம்பியார், எஸ்.ஏ. நடராஜன், சி.வி. நாயகம், சிவசூரியன், கே.வி. சீனிவாசன், ஏ. கருணாநிதி, மாதுரிதேவி, ஜி. சகுந்தலா, டி.பி. முத்துலட்சுமி, அங்கமுத்து மற்றும் பலர்.
திரைக்குப்பின்னால்...
கதை வசனம் : மு. கருணாநிதி
இசை : ஜி. ராமநாதன்
தயாரிப்பு : மாடர்ன் தியேட்டர்ஸ்
டைரக்ஷன் : டி.ஆர். சுந்தரம்,
எல்லிஸ். ஆர்.டங்கன்.
Courtesy - cinema express
மந்திரிகுமாரியின் கதாநாயகனாக யாரைப் போடுவது என்று சுந்தரம் யோசித்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே கருணாநிதி வசனம் எழுதிய ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்திருந்ததால், அவருக்கும், கருணாநிதிக்கும் நெருங்கிய நட்புறவு ஏற்பட்டிருந்தது. எனவே, கதாநாயகன் வேடத்துக்கு எம்.ஜி.ஆரை கருணாநிதி பலமாக சிபாரிசு செய்தார்.
“ராஜகுமாரி” படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்திருந்தாலும், தொடர்ந்து அவருக்கு கதாநாயகன் வேடம் கிடைக்கவில்லை. சுந்தரமும் உடனடியாக அவரை கதாநாயகனாகத் தேர்வு செய்யாமல், “அவருக்கு தாடையில் பெரிய குழி இருக்கிறதே” என்றார். “அங்கு சிறிய தாடியை ஒட்ட வைத்து விட்டால் சரியாகிவிடும். தளபதி வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பார். சண்டைக் காட்சிகளில் பிரமாதமாக நடிப்பார்” என்று கருணாநிதி எடுத்துக் கூறினார். அதன்பின் எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்தார் சுந்தரம்.
மந்திரிகுமாரியில் வில்லன் வேடம் முக்கியமானது. அதற்கு நாடக நடிகர் எஸ்.ஏ.நடராஜன் தேர்வு செய்யப்பட்டார். மற்றும் ராஜகுமாரி வேடத்துக்கு ஜி.சகுந்தலா, மந்திரிகுமாரி வேடத்துக்கு மாதுரிதேவி, ராஜகுரு வேடத்துக்கு எம்.என். நம்பியார் ஒப்பந்தமானார்கள்.
“மந்திரி குமாரி”யின் கதை, திருப்பங்கள் நிறைந்தது. முல்லை நாட்டு மன்னரின் மகள் ஜீவரேகவும் (ஜி.சகுந்தலா) மந்திரியின் மகள் அமுதாவும் (மாதுரிதேவி) ஆருயிர் தோழிகள். தளபதி வீரமோகனை ராஜகுமாரி காதலிக்கிறாள்.
மன்னரை ஆட்டிப்படைக்கும் ராஜகுருவின் (எம்.என்.நம்பியார்) மகன் பார்த்திபன் (எஸ்.ஏ.நடராஜன்) கொடூரமானவன். பகலில் ராஜகுருவின் மகன். இரவில் பயங்கர கொள்ளைக்காரன். “கொள்ளையடிப்பது ஒரு கலை” என்பது அவன் கொள்கை.
மந்திரிகுமாரி அமுதாவைக் கண்டதும் அவளை அடையத்துடிக்கிறான். அவனுடைய சுயரூபத்தை அறியாத அவள், அவனை மணக்கிறாள். கொள்ளைக் கூட்டத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் தளபதி ராஜமோகன் ஈடுபட்டு, பார்த்திபனை பிடித்து அரசவையின் முன் நிறுத்துகிறான். ஆனால் ராஜகுருவின் சூழ்ச்சியால் பழி ராஜமோகன் மீது விழுகிறது.
தன் கணவன் கொடியவன் _ கொள்ளைக்காரன் என்பதை, அமுதா அறிந்து கொள்கிறாள். அவனைத் திருத்த முயல்கிறாள். உண்மையை அறிந்து கொண்டு விட்டாளே என்ற ஆத்திரத்தில், அவளைத் தீர்த்துக்கட்ட பார்த்திபன் முடிவு செய்கிறான்.
“வாராய் நீ வாராய்” என்று பாட்டுப்பாடி, அவளை மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அங்கிருந்து அவளைத் தள்ளிவிட அவன் முயற்சி செய்யும்போது, “சாவதற்கு முன் உங்களை மூன்று முறை சுற்றி வந்து வணங்க அனுமதியுங்கள்” என்று வேண்டுகிறாள், அமுதா.
அதற்கு அவன் சம்மதிக்கிறான். மூன்றாவது முறை சுற்றி வரும் போது, அவனை மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி விடுகிறாள். அவள் மூலம், உண்மையை அறிகிறார், அரசர். ராஜகுரு சிறைப்படுத்தப்படுகிறார். அரசகுமாரியும், தளபதியும் ஒன்று சேருகின்றனர்.
ஆரம்பத்தில் “மந்திரிகுமாரி”யை எல்லிஸ் ஆர்.டங்கன் டைரக்ட் செய்தார். அவர் அவசரமாக அமெரிக்கா போக வேண்டி இருந்ததால், டைரக்ஷனை டி.ஆர்.சுந்தரம் தொடர்ந்தார். சென்சார் கெடுபிடியை சமாளித்து, 1950_ல் படத்தை வெளியிட்டார், டி.ஆர்.சுந்தரம். படம் மகத்தான வெற்றி பெற்றது.
கதை, வசனம், நடிப்பு, இசை எல்லாமே இதில் சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக, கருணாநிதியின் வசனங்கள் கூர்மையாக அமைந்திருந்தன. “அனல் பறக்கும் வசனம்; கனல் தெறிக்கும் நடிப்பு” என்று விளம்பரம் செய்தார்கள்.
நம்பியாருக்கும், எஸ்.ஏ.நடராஜனுக்கும் இடையே நடைபெறும் ஒரு உரையாடல்:
“பார்த்திபா! நீ கொள்ளையடிப்பதை விட்டுவிடக் கூடாதா?”
“கொள்ளை அடிப்பதை விட்டு விடுவதா? அது கலையப்பா, கலை!”
“என்ன! கொள்ளையடிப்பது கலையா?”
“ஆம் தந்தையே! அது கலைதான். வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. ஆனால், வில்வித்தை என்ற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியக் கலையின் பெயரால், காமம் அங்கே கலையாகிறது. அதுபோல இதுவும் ஒரு கலைதான்!”
“இந்தக் கலையை விட்டுவிடக் கூடாதா?”
“கொக்கு மீனைப் பிடிக்காமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால், நானும் என் கலையை விட்டு விடுவேன்.” இத்தகையை வசனங்கள் ஏராளம்.
“கொள்ளை அடிப்பதை கலை என்று கருணாநிதி கூறுகிறார்” என்று மாற்றுக் கட்சியினர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.
அதற்குக் கருணாநிதி கூறிய பதில்: “கொள்ளை அடிப்பதும் ஒரு கலை என்று, அப்படத்தில் தீயவன் ஒருவன்தான் கூறுகிறான். கடைசியில் அவன் அழிந்து போகிறான். ராமாயணத்தை எழுதியவர், கூனி பாத்திரத்தையும் படைத்தாரே, கூனியின் சுபாவம் அதை எழுதியவருக்கு சொந்தமானதா? மகாபாரதத்தை எழுதியவர், சகுனி பாத்திரத்தைப் படைத்தாரே. அப்படியானால் அவர் சகுனியின் செய்கைகளை ஆதரிப்பதாக அர்த்தமா?”
_ இவ்வாறு எதிர்ப்பாளர்களுக்குப் பதில் அளித்தார், கருணாநிதி.
எம்.ஜி.ஆர், நம்பியார், மாதுரிதேவி ஆகிய அனைவரும் நன்றாக நடித்திருந்தபோதிலும், புதிய பாணியில் பேசி நடித்த எஸ்.ஏ.நடராஜன் பெரும் புகழ் பெற்றார்.
(மந்திரிகுமாரியைத் தொடர்ந்து, எஸ்.ஏ.நடராஜனுக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. கதாநாயகனாகவும் நடித்தார். ஆனால் அதில் அவர் சோபிக்க முடியவில்லை. மந்திரிகுமாரிக்குப் பிறகு, அவருக்கு பெயர் சொல்லும் படமாக “மனோகரா” மட்டுமே அமைந்தது.)
“மந்திரிகுமாரி”யின் பாடல்களை கா.மு.ஷெரீப், மருதகாசி ஆகியோர் எழுதினர். ஜி.ராமநாதன் இசை அமைத்தார். திருச்சி லோகநாதனும், ஜிக்கியும் பாடிய “வாராய், நீ வாராய்” என்ற பாடல், இன்றைய ரசிகர்கள் கூட விரும்பும் பாடலாக விளங்குகிறது
நன்றி : மாலை மலர்
மக்கள் திலகத்தின் 98வது திரைக்காவியம்
புதிய பூமி - 27.6.1968
முதல் வெளியீட்டு விளம்பரம் : முத்தாரம் : 1.7.1968
http://i66.tinypic.com/2vacz6h.jpg
MGR's Grand Son Debut film Launched titled 'Kabali Thottam'
https://www.youtube.com/watch?v=HJ8QQEPqW9w
MGR's Grand Son Debut film Launched titled 'Kabali Thottam'
http://i65.tinypic.com/2ufrgb4.jpg
Congratulations esvee sir for crossing 14000+ postings...