-
Ranganathan Kalyan
·
நயவஞ்சகம் நம்பிக்கைத் துரோகம் புறம்பேசுதல் முதுகில் குத்துதல் இவையெல்லாம் தன் படங்களில் விட. தனது சொந்த வாழ்க்கையில் நடிகர்திலகம் அனுபவதித்தார் என்றால் அது மிகையில்லை. சிலை விவகாரம் நமக்கு யாருமே இல்லையா என்ற கவலையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது அடுத்தவனுக்கு கோஷம் போட்டே ஆயுளில் பாதி போயிடுச்சி இப்போதைய சிவாஜி ரசிகன் அனைவரும் 40 வயது மேற்பட்டவர் களே இருப்பார்கள் நம் கண்முண்ணே இந்த இழிநிலை என்றால் எனக்கு 52 வயது எப்போது வேண்டுமானாலும் சிவாஜியடி சேரலாம். ஆணால் கண்ட கண்ட .......யெல்லாம் கருத்து என்ற பெயரில் வந்ததை எல்லாம் வாந்தி எடுக்கிறார்கள் அதை கண்டிக்க நமக்கு யாரும் இல்லையே... எல்லாம் இருக்கு, ஆணால் எதுவுமில்லை. காரணம் சிவாஜி ரசிகன் அரசியல் கட்சி பல விதமான அமைப்பு என சுக்கு நூறாக சிதறி கிடக்கிறார்கள். நல்லதுதுக்கு தான் நாம் ஒன்று சேர்வதில்லை இதை பார்த்து இனியும் இப்படியே இருந்தால் சிவாஜி என்ற அந்த இறைவனுக்கே வெளிச்சம் ... ஒரு கடை கோடி சிவாஜி ரசிகனின் மனக்குமுறல் இந்த கருத்தில் உடன்படாதவர்கள் தயவு செய்து மன்னித்து விடுங்கள்.. வாழ்க சிவாஜ!
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...dd&oe=5A2A1031
-
Gopalakrishnan Sundararaman
சிவாஜி என்ற மாமனிதர்.
ஒரு விஷயத்தில் மட்டும் எனது ஏழு வயதில் இருந்து உறுதியாக இருந்துள்ளேன்.அதை ஈடுபாடு,வழிபாடு,அதீத திறமையால் கட்டுண்டல் எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள். அது நடிகர்திலகத்தின் மீது நான் கொண்ட நாளும் வளரும் பக்தி.எனக்கு அவர் உலகத்திலேயே சிறந்த நடிகர் என்பதே போதுமானதாய் இருந்தது.
அந்த கலைஞன் பிறக்கும் போதே ஒளி வட்டத்துடன்,நடிப்பு என்ற கவச குண்டலம் கொண்டு பிறந்ததால் எவராலும் எக்காலத்திலும் வெல்ல முடியாதவராகவே திகழ்ந்தார்,திகழ்கிறார்,திகழ்வார்.அவருடைய கவச குண்டலத்தை ,அனுபவத்தால் பெற்ற ப்ரம்மாஸ்திரங்களை கவர, பல அரசியல் இந்திரர்கள் மாறி மாறி வேடமிட்டு பார்த்தனர்.ஆறு பேர் சேர்ந்து அந்த கர்ணனை அழிக்க முடிந்தது.இந்த நடிப்பு கர்ணனோ ,ஆறு கோடி பேர் மனதில் சிரஞ்சீவியாய் வாழ்வதை கர்ணனே வந்து உலகத்துக்கு நிரூபித்து நிலை நாட்டியாயிற்று.
ஆனாலும் நான் கற்றதும்,பெற்றதும்,உணர்ந்ததும் எனக்கு ஒன்றை ஓங்கி உரைப்பது அவர் ஓர் மாமனிதரும் ஆவார் என்று.
நடிப்பை பற்றித்தான் மாய்ந்து மாய்ந்து எழுதி கொண்டிருக்கிறோமே ? நான் வியக்கும் அவரின் மற்ற குணங்களை எழுதி பெருமை கொள்கிறேன்.
இது சத்திய சோதனைக்கு நிகரான உண்மை பதிவுகள் .
செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் என்ற சொல்லுக்கேற்ப இந்திய கூட்டு குடும்ப மதிப்பு சார் மாண்பின் உயர் பிரதிநிதி.
அசைக்க முடியா தேசிய உணர்வு,இறை பற்று,மனதுக்கு உண்மையான வாழ்க்கை .
வெகுளித்தனம் கொண்டு இவர் பெரியோர்,இவர் சிறியோர் என்று பாராமல் எல்லோரிடமும் உண்மையாய் பழகி உரிமை எடுத்து மனம் திறப்பார்.
எல்லாவற்றிலும் ஒரு முழுமையான அர்ப்பணிப்பு(Perfection ) காட்டுவதுடன்,பிறரிடமும் எதிர்பார்ப்பார் .
கற்றோரை மிக மதிப்பார்.ஆலோசனை கேட்பார். ஆசிரியர்களை போற்றி மதிப்பார்.
சக கலைஞர்களிடம் மிக மிக பெருந்தன்மை காட்டுவார்.வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடோ, பழியுணர்வோ ,கெடுக்கும் எண்ணமோ அவர் மனதில் துளிர்த்ததே இல்லை.
பொது காரியங்களுக்கு நிறைய நன்கொடைகள் விளம்பரம் இல்லாமல் வழங்கியுள்ளார்.
சினிமா,அரசியல்,பொது நிகழ்ச்சி எல்லாவற்றிலும் நேரம் தவறாமையை கடை பிடித்து,மற்றவர் நேரத்தையும் மதித்தவர்.
நடிப்பை பற்றியே சிந்தனை,காரிய கவனம் கொண்ட தனிமை விரும்பி என்றாலும் ,நகைச்சுவை உணர்வுடன் பிறருடன் எளிமையாக மனம் திறப்பார்.
மனம், உடல் இரண்டையுமே மிக மிக சுத்தமாக பராமரித்தவர்.
கடைசி வரை உலக புகழ் பெற்றும் தன் அடிப்படையை மறக்காத குணம் மாறாதவர்.
தன் படங்களே தனக்கு விளம்பரம் தேடி கொள்ளும் என்ற நம்பிக்கையில் product ,Quality இரண்டையும் மட்டுமே நம்பியவர். collection சாதனை செய்த தன் படத்தை பற்றியே பிறர் சொல்லி தெரிந்து கொண்டவர்.
தன் தொழில் தவிர பிற விஷயங்களில் ஆலோசனை கூறுவாரே தவிர தலையிட மாட்டார்.
பல தயாரிப்பாளர்களை ,இயக்குனர்களை உருவாக்கி உள்ளார்.இவரை மட்டுமே நம்பிய முக்தா,பாலாஜி போன்றோர் சிறப்பாக வாழ்ந்தனர்.
ஜாதி ஒழிப்பு என்றெல்லாம் பாவ்லா காட்டாமல்,அதை ஒரு நிதர்சன உண்மையாகவே கொண்டு ,வேறுபாடு பாராமல் எல்லா சாதியினரிடமும் சம அன்பு காட்டி ,சமமாகவே உணர்த்துவார்.
இளைய தலைமுறை வளரும் நடிகர்களுக்கு இவரளவு வாய்ப்பளித்து உயர உதவியவர்கள் யாருமில்லை.
தன் சம்பத்த பட்ட படங்களாக இருந்தாலும் மனதில் உள்ளதை உள்ள படி விமர்சிப்பார்.
அறவே ego இன்றி யாராவது ஏதாவது தன் மனம் கோணும் படி உளறினாலும் மன்னிப்பார்.
நண்பர்களை மிக நம்புவார். வாக்கு கொடுத்தால் மாற மாட்டார்.
படங்களின் Quality க்காக அவர் தன்னை வருத்தி கொண்ட அளவு யாரும் செய்ததில்லை.
பிற மாநில, பிற நாட்டு கலைஞர்களிடம் மிக இணக்கம் காட்டி ,அவர்கள் மதிப்பை பெற்றார்.
யாராவது ஏதாவது சிறப்பாக செய்து விட்டால் ,யாரென்று பாராது மிக மனம் திறந்து பாராட்டுவார்.
தன் சுய image building பற்றி கவலையே பட்டதில்லை.
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியதே இல்லை.
பொது வாழ்வில் தூய்மை கொண்டவர். தன் நன்மைக்காக ரசிகர்களை பயன் படுத்தவே விரும்ப மாட்டார்.அவரவர் படிப்பை,தொழிலை,குடும்பத்தை கவனிக்கவே சொல்வார்.
நல்ல விஷயங்கள் எந்த மொழியில்,திசையில் இருப்பினும் தேடி கொண்டு வருவார்.
தன் திறமை ஒன்றையே நம்பி,வெளிப்படையாய் வாழ்ந்தவர்.
தன் கடைசி படத்திலும், உடல் நிலையை கூட பொருட்படுத்தாமல் ,அதே அர்பணிப்புடன் வேலை செய்தவர்.
-
Natarajen Pachaiappan
தூவானம்
***********
அன்பிற்குரிய அய்யன் சிவாஜியின் தீவிர தொண்டர் பெ.ஜெயகுமார் அய்யா,
வருத்தப்படும் செய்தியாய் ஆகிபோனதுதான் மிச்சம். கூவிக் கூவி சொல்ல வேண்டுமோ அய்யன் சிவாஜி சிலையகற்றல் செய்தியை? உணர்வுள்ள மனிதர்கள் மிகவும் குறைந்து போனார்களய்யா தாய் தமிழ்நாட்டிலே.
... இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசை படலாமோ? கண்ணை விற்று ஓவியம் வாங்க ஆசை படலாமோ? ஒரு பக்கம் அய்யன் சிவாஜி சிலை அகற்றம், இன்னொரு பக்கம் மணிமண்டபம் திறப்பு.
ஏதோ நடக்கிறதென எனச்சொல்லி அமைதியான ஓர் கூட்டம்.
உலகமே பாராட்டிய உத்தமன்,தெய்ப்பிறவி,தெய்வமகன்,
பேசும்தெய்வம் என்றெல்லாம் சொல்லி அவரை அகற்றியாகிவிட்டது. இனி என்ன ஆகபோகிறது?
உணர்வுள்ள கூட்டந்தான் நமது அய்யன் சிவாஜியை சிந்தனை செய்யும் கூட்டம். அக்கூட்டம் சிவாஜி ரசிகர்கள் மட்டுமா?
ஏழு வயதில் நடிக்க வந்த நம்தெய்வம் 65 ஆண்டுகள் நடித்து உலகமெங்கும் இவர்போல் ஓர் நடிகரில்லை என்ற பாராட்டும் பெற்று இந்திய நாட்டிற்கும் தான் பிறந்த தமிழ் நாட்டிற்கும் ஒரு கலையின் அடையாளமாய் திகழ்ந்தது.
திரையுலகின் பிதாமகரை முள் படுக்கையில் படுக்கவைத்து வேடிக்கை பார்க்கும் நடிகர் சங்கத்தால் யாதொரு பயனுமில்லை.
காங்கிரஸுக்காக எத்தனையோ போராட்டங்கள் நடத்தி சிறை சென்றவர்கள்தான் நமது சிவாஜி ரசிகர்கள் ஆனால் அதே காங்கிரஸ் தியாகிதான் வழக்கை போட்டார். காங்கிரஸ் நினைத்திருந்தால் தடுத்து நிறுத்த முயற்சி செய்துயிருக்கலாம். சிலையகற்றிய பின்பாவது குறைந்த பட்ச கண்டன போராட்டம் நடத்தியிருக்கலாம்.
எந்த திமுகவிலிருந்து வந்தாரோ, எந்த திமுக அரசு அய்யனுக்கு சிலை வைத்ததோ அதே திமுகவின் செயல் தலைவர் கண்டனத்தை வாய் மொழியாக மட்டும் கூறிவிட்டார்.
அதேபோல் காங்கிரஸ் கட்சி தலைவரும், நாம் தமிழர் கட்சி தலைவரும், விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும், இதையெல்லாம் தாண்டி பாட்டாளி கட்சியின் நிறுவுனர் சிலையகற்றலின் பின்னனியில் உள்ள சதியையும் சொல்லிவிட்டார்கள்.
நடிகர்கள் சங்கம் வீண்...
ஏதோ கொஞ்சம் நடிகர்களும் ஓர் நடிகையும் தன் ஆதங்கத்தை வெளியிட்டதோடு சரி.
சிலையகற்றம் என்றவுடன் புயலாய் ஆகவேண்டிய நேரத்தில் வெறும் தூவானமாய் போனபின், நாம் என்னதான் செய்ய முடியும்?
இதற்காக இத்தனை காலம் தன் சுய சந்தோஷங்களை தள்ளிவைத்து பொருளாதார இன்னல்கள் அனுபவித்து, மிரட்டல்களை சந்தித்து, ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரியவைத்து. வழக்கையும், மணிமண்டபதிற்காண உண்ணாவிரதத்தையும் நடத்தி, இத்தனை நாட்கள் சிவாஜி அய்யன் சிலை நிற்பதற்கும், மணிமண்டபம் கட்டப்படுவதற்கும் காரணமான நடிகர்திலகம் சிவாஜி சமூகநல பேரவைக்கு நெஞ்சார்ந்த வணக்கங்கள்.
அன்புடன்...
சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...a3&oe=5A31FBFB
-
-
Vee Yaar
நடிகர் திலகத்தின் திரைப்படங்களைப் பார்த்து நான் தமிழைக் கற்றுக்கொண்டேன் ... திருமதி ஜேனட், ஜெர்மானியப் பெண்மணி.
http://timesofindia.indiatimes.com/…/articlesh…/...59870449.cms
....
திருமதி ஜேனட் அவர்கள் ஜெர்மனியைச்சார்ந்தவர். அங்கே காலோன் பல்கலைக்கழகத்தில் Indology & Tamil Studies துறையில் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவராய் பணியாற்றியவர்.
நடிகர் திலகத்தின் சிறப்பைச் சொல்ல இதற்கு மேல் வேறென்ன வேண்டும்.
போங்கடா நீங்களும் உங்க தமிழ்நாடும் என்று தான் சொல்லத் தோன்றுகிறது..
https://external.fybz1-1.fna.fbcdn.n...B0RP6nUQwSOt3l
Keeping Tamil alive in German heartland - Times of India
"Anyone who wishes to join as a student in my department should learn one or more Dravidian languages, and Tamil is a must".
timesofindia.indiatimes.com
-
நிறைகுடத்தின் சிறப்புக்கள்.
1)சுபதினம் படத்தில் ,வாலி எழுதிய ,சீர்காழி பாடிய ,ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி பாட்டில் நிறைகுடம் போலொரு திரைப்படம் வந்தால் ரசிகருக்கதுதான் சுபதினம் என்று ஒரு வைரவரி.
2)நிறைய முதல்கள். முக்தா .ஸ்ரீனிவாசன் சிவாஜியுடன் இயக்குனராக இணைந்த முதல். மகேந்திரன் சிவாஜிக்காக எழுதிய முதல் படம். சோ ,கதை வசனகர்த்தா வாக சிவாஜியுடன் பணி புரிந்த முதல் படம்.(ஒரே படம்).வீ.குமார் ,சிவாஜிக்கு இசையமைத்த முதல் படம்.(ஒரே படம்).வாணிஸ்ரீ ,முழு கதாநாயகியாக சிவாஜியுடன் இணைந்த முதல் படம்.
3)முக்தாவிற்கு மிக பெரிய வெற்றி படம். அவரின் தேன்மழை,நினைவில் நின்றவள் சூத்திர படியே கதை. கல கல முன்பாதி. பிரச்சினையால் ஒருவரோடு மற்றவர் கண்ணாமூச்சி ஆட ,அது வெளிபடாமல் ,காமெடியன் துணையுடன் ஹீரோ போராடும் பின்பாதி.
4)சிவாஜி-வாணிஸ்ரீ காதல் காட்சிகள் இளைஞர்,இளைஞி,பெண்கள்,பெரியோர் எல்லோர் மனைத்தையும் கொள்ளையிட்டது.இருவரின் chemistry பல ஜோடிகளுக்கு முன்னுதாரணம்.
5)இடைவெளி திருப்பு முனையும், இறுதி காட்சி திருப்பமும் லாஜிக் மீறிய சுவை.
6)என் நண்பர்களும் ,நானும் எத்தனை முறை ரசித்தோம் என்ற கணக்கே இல்லை. சிவாஜி ,நகைச்சுவையிலும் பின்னி பெடலெடுப்பார்.
7)சிவாஜியின் வெற்றிக்கு பெரிய வலுவான கதை பின்புலம் தேவையில்லை என்பதை ,கலாட்டா கல்யாணமும்,நிறைகுடமும் நிரூபித்தன.(அஞ்சல் பெட்டியின் .வெற்றியும் கூட)
8)ராஜாராணி போல cute படம்.
-
நடிகர் திலகத்தின் 204 வது வெற்றிக்காவியம்
நான் வாழவைப்பேன் வெளியான நாள் இன்று
நான் வாழவைப்பேன் 10 ஆகஸ்ட் 1979
https://i.ytimg.com/vi/m0Iza1Y83cI/maxresdefault.jpg
https://upload.wikimedia.org/wikiped...zhavaippen.jpg
-
-
By Vasudevan In FB.
சத்ரபதி சிவாஜி' (1974)
மிக மிக அரிய பதிவு. (இதுவரை நீங்கள் காணாத மிக அரிய புகைப்படங்களுடன்)
'சத்ரபதி சிவாஜி' (1974) (தமிழில் முதல் டெலி-பிலிம்) ஒரு முழு பார்வை. நடிகர் திலகம் இதிலும் முதல்வர்.
(நண்பர்களே! இப்பதிவில் எங்கும் கிடைக்காத, அரிய, 'பொதிகை' தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்பிய அற்புத புகைப்படங்களை இணைத்துள்ளேன். மொத்தம் 33 படங்கள்.சேமித்து வைத்துக் கொள்ளவும்)
1974-இல் பம்பாய் வானொலி நிலையத்துடன் பம்பாய்த் தொலைக்காட்சி நிலையம் இணைந்து முதன் முதலில் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் டெலிவிஷனுக்காக முதன் முதலாக தமிழில் ஒரு நாடகம் தயாரிக்கப்பட முடிவெடுக்கப்பட்டது. அப்போது பம்பாய் டெலிவிஷன் நிலையத்திற்கு முதலில் ஞாபகத்திற்கு வந்தது நடிகர் திலகம்தான்.
நடிகர் திலகத்தை நடிக்க வைத்து 'சத்ரபதி சிவாஜி' என்ற நாடகம் தயாரிக்க பம்பாய் டெலிவிஷன் நிலையம் முடிவு செய்து நடிகர் திலகத்தை ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்தது. நடிகர் திலகத்திடம் விஷயம் தெரிவிக்கப்பட சந்தோஷத்துடன் அதில் நடிக்க சம்மதமளித்தார் நடிகர் திலகம். தஞ்சை வாணன் அவர்களின் அனல் கக்கும் தமிழ் வசனங்கள். பம்பாய் டெலிவிஷன் குழுவை சேர்ந்த நாராயணசாமியின் மேற்பார்வையில் சிவாஜி நாடக மன்ற இயக்குனர் திரு எஸ்.ஏ. கண்ணன் அவர்கள் இந்த தொலைக்காட்சிக்கான படத்தை இயக்கினார்.
ஆனால் மிகவும் குறுகிய காலத்திற்குள் எடுக்க வேண்டிய சூழ்நிலை. டெலிவிஷன் நிலையத்தாருடன் நடிகர் திலகம் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு ஒப்பந்தத்ததில் கையொப்பமிட்டார். ஒரு வார காலத்துக்குள் படத்தை எடுக்க வேண்டிய அவசர சூழ்நிலையில் அற்புதமாக ஒத்துழைத்து 'சத்ரபதி சிவாஜி' டெலிவிஷன் படத்தை முடித்துத் தந்தார் நடிகர் திலகம்.
சத்ரபதி சிவாஜியாக நடிகர் திலகம் கர்ஜிக்கும் காட்சிகள் ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டன. சத்ரபதியைக் காண இயக்குனர்கள் ஸ்ரீதர், திருலோகச்சந்தர், பி. மாதவன் மற்றும் வி.சி.குகநாதன் போன்ற திரையுலகப் பிரபலங்கள் ஏ.வி.எம்.க்கு வருகை புரிந்தனர். (நன்றி: பொம்மை சினிமா இதழ்)
படப்பிடிப்பைக் காண வந்திருந்த பத்திரிகை நிருபர்கள் அனைவருக்கும் தன் சார்பில் விருந்து வைத்து கௌரவித்தார் நடிகர் திலகம் அவர்கள்.
மணிமகுடம் தரிக்க தனக்கேற்பட்ட ஒவ்வொரு தடையையும், அதைத் தான் உடைத்தெறிந்த ராஜ தந்திரத்தையும், வீரத்தையும் ஒவ்வொரு படிக்கட்டாக நின்று வீறுகொண்டு மராட்டிய குல திலகம் சிவாஜி பேசுவதாக இந்த டெலி-பிலிம் எடுக்கப்பட்டுள்ளது. 'ராமன் எத்தனை ராமனடி'யில் ஒவ்வொரு கோட்டை மாடல்கள் அருகே நின்று தன் சாதனைகளை முழங்குவாரே அது போல.
1974-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று பம்பாய் டெலிவிஷனில் மராட்டிய மன்னர் சிவாஜியாய் நம் நடிகர் திலகம் சிவாஜி சின்னத் திரையில் கர்ஜித்ததை பலர் கண்டு களித்தனர். ('இந்த நிகழ்ச்சி 1974 ஜூலை 21-ந் தேதிதான் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பபட்டது...சென்னையில் தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்ட 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இதே நிகழ்ச்சி சென்னை தொலைக்காட்சியிலும் காண்பிக்கப்பட்டது'.என்று நமது முரளி சார் சொன்னதும் நினைவிருக்கிறது)
ஆனால் அடித்தட்டு மக்களிடம் டெலிவிஷன் பார்க்கும் வசதி அப்போது வெகுவாக இல்லாததால் வசதியுள்ளோர் மட்டுமே பார்க்கும் வாய்ப்பு. அதன் பின் ஒரிருமுரைதான் இந்த நாடகத்தை பம்பாய் டெலிவிஷன் நிலையம் ஒளிபரப்பு செய்தது.
நம் போதாத காலம் இந்த டெலிவிஷன் படத்தின் ஒலி ஒளி வடிவம் காணமல் போய் விட்டதாகத் தகவலகள் வருகின்றன. பொக்கிஷமாக பாதுகாத்து போற்றப்பட வேண்டிய இந்த 'சத்ரபதி சிவாஜி' டெலிவிஷன் படம் தூர்தர்ஷனின் அலட்சியத்தால் நாம் அனைவரும் இழக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனை தூர்தர்ஷனே ஒத்துக் கொண்டும் உள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக 'சத்ரபதி சிவாஜி' டெலி-பிலிமின் போது எடுக்கப்பட்ட சில நிழற்படங்கள் மட்டும் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டும் சந்தோஷமே. அப்படி தூர்தர்ஷன் ஒளிபரப்பிய அந்த அபூர்வ புகைப்படங்களைத் தான் இங்கு காணப் போகிறீர்கள்.
கீழ்க்காணும் பத்திரிகையில் நீங்கள் பார்க்கும் செய்தி. (படம் பார்க்க)
'நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்துள்ள 'சத்ரபதி சிவாஜி' திரைப்படத்தை தலைவர் காமராஜர் மிகவும் பாராட்டினார். மராட்டிய வீரன் சிவாஜியின் வாழ்க்கை வரலாறு 'சத்ரபதி சிவாஜி' என்ற தலைப்பில் படமாக்கப் பட்டிருப்பதும், கலையுலகச் சக்கரவர்த்தி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மாவீரன் சிவாஜியாக நடித்திருப்பதும் தெரிந்ததே.
பம்பாய் வானொலி நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள பம்பாய் டெலிவிஷன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
முதலில் தமிழில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வேறு மொழிகளிலும் 'டப்' செய்யப்படவிருக்கிறது. (கிட்டத்தட்ட 4 மொழிகளில்)
டெலிவிஷனில் காட்டப்படுவதற்காக தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் படம் இதுதான்.
"மக்களிடையே தேசபக்தியையும், நாட்டின் ஒருமைப்பாட்டையும் உணர்த்தும் வகையில் இப்படம் தயாரிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாக தமிழில் முதன் முதலாக டெலிவிஷனுக்காக இப்படிப்பட்ட ஒரு படம் தயாரிக்கப்பட்டிருப்பது பெருமைப் படத்தக்கதாகும். மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்ல இது போன்ற படங்கள் நல்ல சாதனமாக இருக்கும்" என்று தலைவர் காமராஜர் கூறினார்'.
அந்தப் பத்திரிக்கையில் தஞ்சை வாணனுக்குப் பாராட்டு மற்றும் சிவாஜிக்கு ஏவிஎம் பாராட்டு என்ற தலைப்பில் செய்திகள் வந்துள்ளதை நீங்கள் கவனிக்கலாம்.
சில வருடங்களுக்கு முன் தூர்தர்ஷன் ஒளிபரப்பிய தஞ்சை வாணன் அவர்கள் வழங்கிய இந்த அபூர்வ நிகழ்ச்சியை என்னால் பதிவு செய்ய இயலவில்லை. அதனால் என்னுடைய வீடியோ காமிராவினால் அந்த அபூர்வ ஸ்டில்களை முடிந்த மட்டும் டிவியிலேயே கிளிக் செய்து இங்கே பதித்து வழங்கியுள்ளேன்.
அதன் பின்னணியில் திரு.தஞ்சை வாணன் அவர்கள் தந்த ஒரு சில தகவல்களையும் இங்கு தருகிறேன்.
தஞ்சை வாணன் கூறியவை.
"நடிகர் திலகத்திடம் இப்படத்தைப் பற்றிய கதையை கூறும் போது மிக உன்னிப்பாகக் கேட்டார். வீர சிவாஜியின் உருவ அமைப்பும், அவருடைய மானரிசங்களும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று நடிகர் திலகத்திற்கு டெலிவிஷன் நிலையத்தார் படங்களுடன் விளக்கிக் காட்டியபோது அதை நடிகர் திலகம் உன்னிப்பாக கவனித்து உள்வாங்கிக் கொண்டார்.
பின் ஒரு நடிகன் எப்படி உருவாகிறான்? ஒரு நடிகனுக்கு நடிப்பில் மட்டுமே ஆர்வம் இருந்து பயனில்லை... அந்தப் பாத்திரத்தின் உடையமைப்பு, அந்தப் பாத்திரத்தை பார்ப்பவர் மனதில் பதிய வைக்க போடப்படும் ஒப்பனை என்று அவன் எல்லாவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். அந்த ஆற்றல் நடிகர் திலகத்திற்கு உண்டு. சாதாரணமாக எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்த சிவாஜி கணேசன் இந்த ஒப்பனை முடிந்தவுடன் 'சிவாஜி' யாகவே ஆகி விட்டார். மீசையின் வலது பக்கம், இடது பக்கம், காதோர முடி அமைப்பு, கண்களுக்கும், புருவங்களுக்கும் எவ்வளவு மை தீட்ட வேண்டும் என்றெல்லாம் தன்னுடைய நாடக அனுபவத்தை நிலைநாட்டி வரலாற்று சிறப்பு மிக்க ஒரு கலைப் பொக்கிஷத்தை வழங்கினார். ஒப்பனையிலோ அல்லது வடிவமைப்பிலோ ஒரு சிறு தவறு ஏற்பட்டாலும் தானே கண்ணாடி முன் நின்று சரி செய்து கொள்வார். காமெராவில் வருவதற்கு முன்பு அதற்கு உகந்ததாக தன்னை தயார் செய்து கொள்வதில் நடிகர் திலகத்திற்கு இணை நடிகர் திலகமே! அவருக்கு இந்த தொலைக்காட்சி நாடகம் மூலம் மிகப் பெரிய புகழ் கிடைத்தது. அவரால் எனக்கும் பெரும் புகழ் கிடைத்தது"
ஒளி ஒலிக்காட்சியாக இந்த அற்புத டெலி பிலிமை ஒளிபரப்ப முடியா விட்டாலும் புகைப்படக் காட்சியாகவாவது நம் சத்ரபதியைக் காண முடிந்ததே.
இப்படியாக பொதிகை தஞ்சை வாணன் மூலம் தன் கலை மைந்தனைப் பாராட்டி மகிழ்ந்தது. நமக்கு சில அபூர்வ படங்களையும் தந்தது. நன்றி பொதிகை தொலைக்காட்சிக்கு
மிக முக்கியம்.
இனி மிக அபூர்வமான புகைப்படங்கள் பற்றி. பதிவில் கீழ்க்கண்ட தலைப்புகளுக்கேற்றவாறு இமேஜஸ் கொடுத்துள்ளேன். பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும்
டெலிவிஷன் நிலைய அதிகாரிகளுடன் இதய தெய்வம்
தொலைக்காட்சி நிலைய ஒப்பந்தத்தில் நடிகர்
திலகம் கையெழுத்திடும் மிக மிக அபூர்வமான ஸ்டில்.
'சத்ரபதி சிவாஜி'யைப் பற்றி ஸ்க்ரீன் வாயிலாக விளக்குவதை உன்னிப்பாக கவனிக்கிறார் நடிகர் திலகம்
பத்திரிகையில் செய்தி.
நடிகர் திலகம் சிவாஜி 'சத்ரபதி சிவாஜி' யாக ஒப்பனை செய்ய ஆரம்பிக்கும் அபூர்வமான காட்சி.
'சத்ரபதி சிவாஜி' யாக படிப்படியாக மாறும் காட்சிகள்.
வசன, மற்றும் காட்சி ஒத்திகையில் நடிகர் திலகம்.
அன்னை பவானியிடம் அருள் வேண்டல்.
வெற்றிப்படிக்கட்டுகளின் அருகே மராட்டிய மன்னனின் சிம்ம கர்ஜனை.
சிம்மாசனம் சென்று அமர முதல் படிக்கட்டைத் தொட்டு வழிபாடு முழக்கம்.
மராட்டிய மன்னனுக்கு மண்டியிட்டுக் காத்து நிற்கும் சிம்மாசனம்.
வீர முழக்கம் தொடர்கிறது....
வாளெடுத்து சூளுரைக்கும் சூரக்காட்டை சிவாஜி சிங்கம்.
வெண்கொற்றக்குடையின் கீழ் ஒத்திகை பார்க்கப்படுகிறது.
வெற்றிப்படிக்கட்டுகளைத் தாண்டி சிம்மாசனத்தில் அமர்ந்த அழகு கம்பீரம்.
அழகும், வீரமும், கம்பீரச் சிரிப்பும் ஒருங்கே அமையப் பெற்ற 'வீர சிவாஜி'
இனி தயாரிக்கப்பட்ட காவிய டெலி-பிலிம் தொலைக்காட்சி வடிவத்தில்
இரத்தத் திலகமிட்டு சிம்ம கர்ஜனை முழங்கும் சிம்மக் குரலோன்.
தலைவர் காமராஜர் புகழாரம்.
தஞ்சை வாணன் அவர்களுடன்.
நன்றி நண்பர்களே! சேமித்து வைத்துக் கொண்டீர்களா?
https://scontent.fdoh3-1.fna.fbcdn.n...19&oe=5A349D5F
https://scontent.fdoh3-1.fna.fbcdn.n...e2&oe=59F38C85
https://scontent.fdoh3-1.fna.fbcdn.n...e2&oe=59F38C85
-
-
-
-
-
-
-
கலைக்குரிசில் ,நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்
236 வது திரைக்காவியம் சுமங்கலி
வெளியான நாள் இன்று
சுமங்கலி 12 ஆகஸ்ட் 1983
https://upload.wikimedia.org/wikiped...ngali_1983.jpg
https://i.ytimg.com/vi/7j7NdjD4rt0/hqdefault.jpg
-
-
-
-
-
Sundar Rajan
அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
இன்று 12.08.2017 சனிக்கிழமை சென்னையில் திரைத்துறையினர் பெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமையில்
நமது தலைவர் சிவாஜி அவர்களின் சிலையை மீண்டும் மெரினாவில் நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நமது நடிகர்திலகம் அவர்களின் கலைத்தொண்டு, மற்றும் சாதனைகள் பற்றி அனைவரும் விரிவாக பேசினார்கள்.
... உடனடி நடவடிக்கை இல்லாமல் காலம் தாழ்ந்து தங்களது கண்டணத்தை தெரிவித்தாலும் திரைத்துறையினருக்கு உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்களின் சார்பிலும், நமது சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதே போல் நடிகர் சங்கமும் தனது கண்டனத்தையும், மீண்டும் மெரினாவில் சிவாஜி சிலையை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தும் என்று நம்புகிறேன்.
இருந்தாலும், சிலை அகற்றிய உடனேயே, நடிகர்சங்கம் தனது கண்டனத்தைத் தெரிவித்து இருக்க வேண்டும்.
இதுவரை தனது கண்டனத்தை தெரிவிக்காத நடிகர்சங்கத்தின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.
See more
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...1f&oe=5A3310C6
-
-
-
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...15&oe=5A244FB1
Sundar Rajan மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
கடற்கரைசாலையில் இருந்து நடிகர்திலகத்தின் சிலையை அகற்றியதற்கு கண்டனங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன.
மாண்புமிகு மத்திய அமைச்ச...ர் பொன்னார் அவர்கள், கடற்கரைசாலையில் இருந்த சிவாஜி சிலையை தமிழக அரசு அகற்றியது மாபெரும் தவறு. சிவாஜி சிலை தனிநபர்களால் வைக்கப்பட்டது கிடையாது. தமிழகஅரசின் சார்பில் வைக்கப்பட்டது, எனவே, தமிழகஅரசு சட்டசபையைக் கூட்டி சிவாஜி சிலையை அகற்றியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.
இன்று இயக்குநர் சங்கம், பெப்சி போன்ற அமைப்புகளின் சார்பில் சிவாஜி சிலை சம்பந்தமாக கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில்
பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அவர்கள்,
சிவாஜி அவர்கள் உலகஅளவில் புகழ்பெற்றவர் என்பது அனைவருக்கும் தெரியும். சிவாஜி அவர்கள் மும்பையிலோ அல்லது வேறு மாநிலத்திலோ பிறந்திருந்தால் இந்திய அளவில் புகழ் பெற்றிருப்பார். இந்திய அரசின் அனைத்து விருதுகளையும் பெற்றிருப்பார். இந்திய அளவில் சிவாஜி அவர்கள் தமிழன் என்ற காரணத்தினால் தான் ஒதுக்கப்பட்டார். என்று கூறினார். மேலும், கடற்கரைசாலையில் சிவாஜி அவர்களின் சிலையை நிறுவ வேண்டும். அதற்காக நாங்கள் போராடவும் தயார் என்றார்.
அபிராமி ராமநாதன் அவர்கள் பேசும் போது நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கு மத்திய அரசின் பத்மவிபூசன் விருது வழங்க வேண்டும் என்று கூறினார்.
தமிழகஅரசே,
இன்னும் பல முனைகளி்ல் இருந்தும் கண்டனங்கள் தொடரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
செய்த தவறுக்கு பிராயசித்தமாக உடனே தற்போது மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி சிலையை காமராஜர் சிலைக்கும் காந்தி சிலைக்கும் இடையில் வைத்து விடுங்கள்.
அனைவருக்கும் நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்.
-
Sekar Parasuram
பெருந்தலைவரின் சிலைக்கும் மகாத்மா காந்தியின் சிலைக்கும் இடையே எங்கள் நடிகர்திலகத்தின் சிலை நிறுவப்பட வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை,
இதில் பெருந்தலைவர் சிலை அருகே என்பதில் எந்த எதிர்ப்பு குரலும் கேட்க முடியவில்லை அதற்கான வாய்ப்பும் கிடையாது, அப்படியே யாராவது இருப்பார்கள் என்றால் அவர்கள் பெருந்தலைவரின் வரலாறு தெரியாதவர்கள் என்பது வெளிச்சம், ஆனால் ஒரு சிலர் காந்தியின் பெயரை பயன்படுத்திக் கொண்டு வழக்கு பிழைப்பு நடத்தி அதன் மூலம் பிரபலம் தேட முயற்சிப்பதை... காண முடிகிறது,
பிரபலம் தேடிக் கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கிறது, அதில் சென்று விடுங்கள்,
மகாத்மாவின் தியாகத்தை தனது நடிப்பின் மூலம் எங்களுக்கு வகுப்பு எடுத்ததோடு இருந்து விடாமல் தனது வாழ்நாள் முழுவதும் காந்திய தேசிய வழியில் வாழ்ந்தவர் எங்கள் நடிகர் திலகம்,
நடிகர் திலகத்தை உயிர் மூச்சாய் கொண்டிருக்கும் எங்களது சாபத்திற்கு ஆளாக வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...17&oe=5A236A43
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...73&oe=5A2D5EDF
-
-
Sekar Parasuram
நன்றி திரு chandrasekaran veerachinnu sir,
கடந்த ஆகஸ்ட் 3 அன்று நடிகர் திலகத்தின் திரு உருவச்சிலை சென்னை மெரினாவில் இருந்து இந்த அதிமுக அரசு அநீதியாக அகற்றியது,
நாமெல்லாம் மனமுடைந்து போன நிலையில் நடிகர் திலகத்தின் பெருமையை அறியாத கல் நெஞ்சம் கொண்டோர் சிலர் கருத்து தெரிவிக்கிறோம் என சோஷியல் மீடியாக்களில் ஒரு கருத்தை மட்டுமே திட்டம் இட்டு சொல்லி வருகிறார்கள்,
" சிவாஜி பொது நலன் உதவி என்ன செய்தார்" என்று,...
அவ்வாறு கேட்கும் புல்லுருவிகளுக்கு இது போன்ற பதிவுகள் சென்றடைய வேண்டிய தேவை இருக்கிறது
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...c6&oe=5A28DA55
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-