-
அரசியல் தத்துவம், சாதி ஆதிக்கம், பெண்ணடிமை தீண்டாமை என பல பக்கங்களை அலசிய நாடோடி மன்னன் படத்தில் எல்லாவற்றிற்கு மேலாக தன் தனித்தன்மையை ஒரே வசனத்தின் மூலம் நிலைநிறுத்தி தியேட்டரையே அதிரவைத்தவர் எம்ஜிஆர்..
‘’என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டே தவிர என்னை நம்பிக்கெட்டவர்கள் இன்று வரை இல்லை’’ ,சாகா வரம் பெற்றது அவரின் இந்த வசனம்..
வசனகர்த்தா ஜாம்பவான் கலைஞர் நாடோடிமன்னனில் இடம் பெறவில்லை. பெரும் பொருட்செலவில் தயாராகும் தனது கனவுப் படத்திற்கு கலைஞரை வசனம் எழுதவிட்டால், அவர் அதை அவரின் டிரேட்மார்க் படமாக கடத்திச் சென்று விடுவார் என்ற எச்சரிக்கை உணர்வு..
படத்தில் மன்னன்போல ஆட்சிக்கு வந்து ஒரு நாடோடி அறிவிக்கும் புரட்சிகரமான பட்ஜெட் காட்சிகள் முழுக்க முழுக்க தன் சிந்தனைகளாகவே தெரியவேண்டும் என்பதில் எம்ஜிஆர் தீர்மானமாக இருந்தார். அவை கலைஞரின் சிந்தனைகள் என்று பேச்சுவந்துவிடக்கூடாது என்பதே அவரின் மனஓட்டம்..
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸுக்கு கலைஞர் கருணாநிதி அவர்களை அறிமுகம் செய்து வைத்த கவி கா.மு.ஷெரீப் அவர்களைப்போல, காஜா மொய்தீனை எம்.ஜி.ஆரிடம் அறிமுகம் செய்து வைத்தவர் டணால் கே.தங்கவேலு அவர்கள்.
1953-ஆம் ஆண்டு மே மாதம் 24-ஆம் தேதி மாலை சுமார் 5 மணிக்கு நடிகர் தங்கவேலு அவர்களுடைய சிபாரிஸின் பேரில் முதன் முதலாக எம்.ஜி.ஆரை சந்திக்கச் செல்கிறார் காஜா மொய்தீன்.
எம்.ஜி.ஆர். அவர்கள் அப்போது லாயிட்ஸ் சாலையில் (தற்போது ஒளவை சண்முகம் சாலை) 160-ஆம் எண் இல்லத்தில் குடியிருந்தார். கருப்பு நிற டாட்ஜ் காரை அனுப்பி ஓட்டுனர் கதிரேசனிடம் காஜா மொய்தீனை அழைத்து வரச் சொல்கிறார் எம்.ஜி.ஆர்.
வீட்டு வாசல் முகப்பில் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி, சின்னவர் எம்.ஜி.ஆர். இருவருக்கும் இடையே காஜா மொய்தீனை பணிக்கும் அமர்த்தும் தேர்வில் நடுவில் வீற்றிருந்தவர் எம்.கே.முஸ்தபா எம்.ஜி.ஆரின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். குறிப்பாக பெரியவர் எம்.ஜி.சக்கரபாணியின் பாசத்திற்குரியவர்.
“வாங்க.. வாங்க….” என்று அன்புடன் அழைத்து அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமரச் சொல்கிறார் எம்.ஜி,ஆர்.
எம்.ஜிஆர் அவர்களின் உபசரிப்பை விவரிக்கையில் இஸ்லாமிய வரலாற்றில் மூன்றாவது கலீபாவான உதுமான் (ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை தனது பதிவொன்றில் நினைவு கூர்கிறார் இவர்.
“உலகில் பெரிய பண்பு எது?” என்று கலீபா உதுமான் அவர்களிடம் கேட்கிறார் ஒருவர்.
“நம்மைத் தேடி வருபவர்களை உட்கார வைத்து பேசுவது” என்று வருகிறது கலீபாவின் பதில்.
இந்தச் சொல் என் நினைவுக்கு வந்தது என்று மனம் நெகிழ்ந்துப் போகிறார் பணித்தேர்வுக்குச் சென்ற காஜா மொய்தீன்.
வேலை தேடி வந்த அவரிடம் எம்.ஜி.ஆர். தொடர்கிறார். “உங்க ஊர் பெயரை தங்கவேலு சொன்னார். முஸ்லீம் மதத்தில் பிறந்த உங்கள் எழுத்து, தமிழுக்கு ரொம்ப சிறப்பைத் தருவதாக இருக்குதுன்னு சொன்னாரு. இவங்களும் உங்க இனம்தான் எம்.கே.முஸ்தபா, எங்க குடுமப நண்பர்.” என்று அவரை அறிமுகப்படுத்தினார்கள்.
காஜா மொய்தீனைப்பற்றி பற்றி ஏற்கனவே அறிந்து வைத்திருந்த எம்.கே.முஸ்தபா மேலும்சில தகவல்களை பகிர்கிறார், “சுதந்திர நாடு தின இதழில் இவர் நிறைய எழுதி வருகிறார். அதுமட்டுமின்றி பூவிழி என்ற பத்திரிக்கையையும் நடத்தி வந்தவர்”
“முஸ்தபா சொல்வதைப் பார்த்தால் நீங்க ஆறு வருஷத்துக்கு முன்னாலேயே நல்லா எழுதியிருக்கீங்க. இனிமேலும் பெரிய சந்தர்ப்பங்கள் வரலாம். உங்க சொந்த பெயரில் எழுதுவதைவிட ஒரு பொதுப் பெயரிலே எழுதினா நல்லாயிருக்கும். அதனால பெயரை மாத்தி வச்சுக்கிறீங்களா?”
“உங்க இஷ்டம். மாத்தி வைங்க” என்கிறார் காஜா மொய்தீன்.
“உங்களுக்கு எந்த ஆசிரியரைப் பிடிக்கும்?. பெரியவங்களா இருக்கணும்” – இது எம்.ஜி.ஆர்.
“ரவீந்திரநாத் தாகூரை எனக்குப் பிடிக்கும். அவுங்க கதை கவிதைங்க நிறைய படித்திருக்கிறேன்”
“சரி. அவர் ரவீந்திரநாத் தாகூர். நீங்க தாகூர்”
“ஆகா.. நாகூரிலிருந்து வந்த தாகூர், நல்ல பெயர்ப் பொருத்தம்” என்று சிரித்தபடியே சொல்கிறார் முஸ்தபா.
“நாத், வேண்டாம். உங்க பேரை ரவீந்தரன் என்று வச்சுக்குங்க” என்கிறார் பெரியவர் எம்.ஜி,சக்கரபாணி
“சரி” என்று சம்மதித்து தலையாட்டுகிறார் இவர்.
சிறிது நேரம் மெளனத்திற்குப் பிறகு ஏதோ மனக்கணக்கு போட்டவாறு “அதுகூட வேணாம். புனைப்பெயரா தெரியணும். அதனாலே “ரவீந்தர்” என்ற பெயர் சரியா இருக்கும். அப்படிப் பார்த்தா நியூமராலஜி 6 வரும். கலைக்கு நல்லது” என்கிறார் எம்.ஜி,ஆர்.
ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் முடி சூட்டிக்கொண்ட நாளில் அவருக்கும் புதுப்பெயர் சூட்டப்படுகிறது. பெரியவர், சின்னவர், எம்.கே.முஸ்தபா மூவரும் அவருக்கு வாழ்த்துச் சொல்கிறார்கள்.
“சரி. இனிமே உமக்கு எல்லாம் வரும். போய்ட்டு நாளைக்கு வாரும். கார் அனுப்பறோம்.” என்று வழியனுப்பி வைக்கிறார் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி.
காஜா மொய்தீனாகச் சென்ற அவர் ரவீந்தராக வீடு திரும்புகிறார். ஒளிமயமான எதிர்காலம் அவர் உள்ளத்தில் தெரிகிறது
இப்போது எம்.கே.முஸ்தபாவின் கலைத்துறை வாழ்க்கையை சற்று பார்ப்போம். ரவீந்தருடன் நெருக்கமான நட்புறவு கொண்டிருந்த எம்.கே.முஸ்தாபாவின் பெயரும் பெரிதாக வெளியில் தெரிய வரவில்லை. நிறைகுடம் தளும்பாது என்பார்கள். இயக்குனர் சமுத்திரகனியின் பாஷையில் சொல்ல வெண்டுமென்றால் “இந்த இருவருமே இருக்கும் இடம் தெரியாமல் இருந்துவிட்டு போய்விட்டார்கள்’.
அதாவது நாடோடி மன்னன் படம் வசனம் என்றால் டைட்டிலில் கண்ணதாசன்- ரவீந்தர் என்றே வரும்.கலைஞருக்கு பதில் கண்ணதாசனை வசனம் எழுத அழைத்தார். மிகமிக முக்கியமான பதினைந்து காட்சிகளுக்கு மட்டுமே கண்ணதாசன் எழுதினார். மற்ற வசனங்களை எழுதியவர், எம்ஜிஆர் பிக்சர்சை சேர்ந்த ரவீந்தர்.தமிழ் திரை உலகின் நெம்பர் என் வசனகர்த்தாவான இளங்கோவனிடம் உதவியாளராக இருந்தவர்.
1942-ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.மணி இயக்கத்தில் சோமுவும் , மொகிதீனும் “ஜுபிடர் பிக்சர்ஸ்” பெயரில் தயாரித்து வெளியிட்ட “கண்ணகி” படத்திற்கு வீர வசனம் எழுதியது இளங்கோவன்தான். இந்தப் படத்தில், கண்ணகியாகவே மாறிவிட்டிருந்தார் கண்ணாம்பா. திரையரங்கில் ஒவ்வொரு வசன முடிவிலும் கரகோஷம் வானைப் பிளந்தது.
1958-ல் வெளிவந்த “நாடோடி மன்னன்” திரைப்படம்தான் ரவீந்தர் பெயரை முதன்முதலாக வெள்ளித்திரையில் வெளிச்சம் போட்டுக் காட்டியது என்று பலரும் எழுதுகிறார்கள். அது உண்மையல்ல. அதற்கு ஓராண்டுக்கு முன்பே “ராஜ ராஜன்” (1957) படத்தில் ரவீந்தருடைய பெயர் பட டைட்டிலில் காட்டப்பட்டது.இளங்கோவனுக்கும் ரவீந்தருக்கும் ஏராளமான ஒற்றுமை உண்டு. திரையுலகில் சிறந்த வசனகர்த்தாக்களாக பெயர் பெற்றிருந்தும்கூட இருவரும் இறுதிக் காலத்தில் பொருளாதார ரீதியில் கஷ்டங்களை அனுபவித்தவர்கள்.
இருவரும் தமிழ்த் திரையுலகிற்கு தங்கள் திறமையினால் அபார பங்களிப்பை வழங்கியவர்கள். இருவரும் தமிழக அரசின் “கலைமாமணி” பட்டம் பெற்றவர்கள்.
இருவரும் திரையுலகம் மறந்துப்போன முன்னோடிகள். ஊடகங்களால் கண்டும் காணாமலும் நிராகரிக்கப்பட்டவர்கள்
பிறமொழி நாவல்களை இறக்குமதி செய்து, தமிழ்மொழிக்கு ஏற்றவாறு வசனங்களை மாற்றியமைத்து இருவரும் திரையுலகிற்கு புதுமை சேர்த்தார்கள்.
Victor Hugo எழுதிய “Les Mis’erables” என்ற பிரெஞ்சு நாவலை அடிப்படையாகக் கொண்டு 1950-ல் உருவாக்கப்பட்ட படம் “ஏழை படும் பாடு” இளங்கோவனின் கைவண்ணத்தில் உருவான படம் இது.
அதேபோன்று Antony Hope எழுதிய “The Prisoner of Zenda” மற்றும் Justin Huntly Mccarthy எழுதிய “If I were King” ஆங்கில நாவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட “நாடோடி மன்னன்” ரவீந்தரின் வசனத்தில் உருவான படம்.
இருவரும் திராவிடக் கட்சி எழுத்தாளர்களின் அரசியல் பின்புல ஆளுமையினால் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்கள்.
ரவீந்தர் என்பவர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான வட்டத்தில் இருந்தவர். இஸ் லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த இவரின் இயற்பெயர் காஜா முகைதீன். சொந்த ஊர் நாகூர். எம்.ஜி.ஆர். வைத்த பெயர் ரவீந்தர். எம்.ஜி.ஆர். நாடகமன்றத்தின் ‘இடிந்த கோயில்’ நாடகத்துக்கு (இந்த நாடகம்தான் பின்னர் ‘இன்பக் கனவு’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது) வசனம் எழுதியவர். ‘நாடோடி மன்னன்’ படத்திலும் கவியரசு கண்ணதாசனுடன் சேர்ந்து வசனம் எழுதியுள்ளார். ‘நாடோடி மன்னன்’ படத்தின் வெற்றி பற்றி குறிப் பிடும்போது ரவீந்தரின் திறமையை எம்.ஜி.ஆர். பாராட்டியுள்ளார். எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். ‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் ரவீந்தர்’ என்று அறியப்பட்டவர்.
ரவீந்தருக்கு 1958-ம் ஆண்டு திருமண ஏற்பாடுகள் நடந்தன. அதுபற்றி எம்.ஜி.ஆரிடமும் அவரது அண்ணன் சக்ரபாணியிடமும் ரவீந்தர் தெரிவித்தார். ‘‘திருமண தேதியை பெரியவர்கள் நிச் சயித்துவிட்டார்கள்’’ என்று ரவீந்தர் கூறி யதும், ‘‘ரொம்ப சந்தோஷம். எவ்வளவு பணம் வேண்டும்?’’ என்று சக்ரபாணி கேட் டார். ‘‘வெறும் பதினாறு ரூபாய் மட்டும் கொடுங்கள்’’ என்றார் ரவீந்தர். எம்.ஜி.ஆருக்கும் சக்ரபாணிக்கும் சற்று குழப்பம்.
பின்னர், கலகலவென சிரித்த சக்ர பாணி, ‘‘என்னய்யா 16 ரூபாய்க்கு கல்யாணம். ஒரு பிளேட் பிரியாணிக்குக்கூட ஆகாதே?’’ என்றார். அதற்கு ரவீந்தர், ‘‘எங்கள் வழக்கப்படி தாலி ஒரு கிராம் எடை யில் இருக்கும். இப்போது அதன் விலை பதினாறு ரூபாய். அதற்கு மட்டும் நீங்கள் பணம் கொடுத்தால் போதும். மத்த படி உங்க தயவுல என்கிட்ட இருக்கிற பணமே போதும்’’ என்றார்.
எம்.ஜி.ஆரும் சக்ரபாணியும் உள்ளே சென்றனர். சக்ரபாணி மட் டுமே வெளியே வந்து, ரவீந்தர் கேட்ட படி, பதினாறு ரூபாயை அவரிடம் கொடுத்தார். எம்.ஜி.ஆர். வர வில்லை. சிறிது நேரம் ரவீந்தர் அங் கேயே காத்திருந்தார். எம்.ஜி.ஆர். தனது கையால் அந்தப் பணத்தைக் கொடுக்கவில்லையே என்று ரவீந் தருக்கு குறை.
சற்று நேரம் கழித்து வெளியே வந்த எம்.ஜி.ஆர்., ரவீந்தரைப் பார்த்து, ‘‘என்ன ரவீந்தர்? இன்னும் பணம் வேணுமா? உமக்காக பத் தாயிரம் ரூபாய் எடுத்து வெச்சிருக்கேன். தர்றேன்’’ என்றார். 1958-ல் பவுன் விலை ஏறத்தாழ நூறு ரூபாய் விற்ற நிலையில், பத்தாயிரம் ரூபாய்க்கு கிட்டத்தட்ட நூறு பவுன் வாங்கலாம். இன்றைய பவுன் விலையோடு ஒப்பிடும்போது அன்றைய பத்தாயிரம் ரூபாய், இப்போது இருபது லட்ச ரூபாய்க்கு சமம்.
ரவீந்தர் உடனே, ‘‘அதுக்கில்லே அண்ணே, பதினாறு ரூபாயை உங்க கையாலேயே என்கிட்ட கொடுப்பீங் கன்னு நினைச்சேன்’’ என்று தன் ஆதங் கத்தை வெளிப்படுத்தினார். எம்.ஜி.ஆர். லேசாக புன்னகைத்து, ‘‘என்னய்யா புரி யாத ஆளா இருக்கே. கல்யாணத்துக்கு தாலி வாங்க பணம் கேட்கிறே. எங்க அண்ணன் புள்ளை குட்டிக்காரர். எனக்கு அந்த பாக்கியம் இல்லே. அதனால்தான் அவர் கையாலேயே உன்கிட்ட கொடுக்கச் சொன்னேன்’’ என்றார்.
எம்.ஜி.ஆரின் இந்த எதிர்பாராத பதிலையும் அவரது நல்லெண்ணத்தை யும் அறிந்து ரவீந்தர் அழுதேவிட்டோர். எம்.ஜி.ஆரும் கண்கலங்கி ரவீந்தரை அணைத்தபடி, ‘‘நல்லா இரும்’’ என்று வாழ்த்தினார். பின்னர், ரவீந்தர் ஆறு குழந்தைகளுக்குத் தந்தையானார்..........SBB.,
-
ரவீந்தர் அவர்கள் நூல்கள்
முழுநேர எழுத்தாளராக தன் வாழ்க்கைப் பாதையை வகுத்துக் கொண்ட ரவீந்தர் அவர்கள் நூல்கள் ஏதேனும் எழுதியிருக்கிறாரா என்று வாசகர்கள் கேட்கலாம். அவர் எழுதிய நூல்கள் எண்ணிக்கையில் குறைவுதான். ஆரம்ப நாட்களில் `கன்னி`, `குற்றத்தின் பரிசு`, `பெண்ணே என் கண்ணே` ஆகிய மூன்று நாவல்களை எழுதியுள்ளார். “பொம்மை” பத்திரிக்கையில் எம்.ஜி.ஆரைப் பற்றி தொடர் கட்டுரை எழுதி வந்தார்.
பிற்காலத்தில் தன் நல்வாழ்வுக்கு வழியமைத்து வழிகாட்டி, தன்னைக் கூடவே துணையாக வைத்திருந்த எம்.ஜி.ஆரின் நினைவாக இரண்டு நூல்கள் எழுதினார். ஒன்று “விழா நாயகன் எம்.ஜி.ஆர்”.. மற்றொன்று “பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்”.
எம்.ஜி.ஆரைப் பற்றி எத்தனையோ பேர்கள் எத்தனையோ நூல்கள் எழுதியிருக்கின்றார்கள். எ.சங்கர் ராவ் எழுதிய “தரணி கண்ட தனிப்பிறவி”, நாகை தருமன் எழுதிய “மாமனிதர் எம்.ஜி.ஆர்.”, சபீதா ஜோசப் எழுதிய “மறக்க முடியாத மக்கள் திலகம்”, பா.தீனதயாளன் எழுதிய “எம்.ஜி.ஆர்.”, ரங்கவாசன் எழுதிய “மக்கள் ஆசான்”, ஆர்.முத்துக்குமார் எழுதிய “வாத்யார்”, மணவை பொன் மாணிக்கம் எழுதிய “எட்டாவது வள்ளல்”, எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பளராக பணியாற்றிய கே.பி.ராமகிருஷ்ணன் எழுதிய “மனிதப் புனிதம்” மற்றும் “எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்” போன்ற எண்ணற்ற நூல்கள் பதிப்பாக வெளிவந்திருந்த போதிலும் கலைமாமணி நாகூர் கே.ரவீந்தர் எழுதிய இரண்டு நூல்களும் முக்கியப் பதிவாக எல்லோராலும் கருதப்படுகிறது.
எம்.ஜி.ஆரின் கலைவாழ்வில் ஆரம்ப நாட்கள் முதற்கொண்டே அவரது உயர்வு தாழ்வுகளின் போதெல்லாம் உடனிருந்து, இன்ப துன்பங்களில் பங்கு கொண்ட ரவீந்தரைத் தவிர எம்.ஜி.ஆரின் குணநலன்களை வேறு யாராலும் அவ்வளவு துல்லியமாக பதிவு செய்ய இயலாது. எம்.ஜி.ஆரின் பாராட்டத்தக்க பழக்க வழக்கங்கள், அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சுவையான நிகழ்ச்சிகள், அவரது தாராள மனம், கொடைத்தன்மை, சந்தித்த நண்பர்கள் போன்ற விடயங்களை ஒன்று விடாமல் எழுதி வைத்திருப்பதால் ரவீந்தருடைய நூல்கள் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.
“முள்ளும் மலரும்” என்று தன் படத்திற்கு இயக்குனர் மகேந்திரன் பெயர் வைத்திருப்பார். அதன் பொருள் ஆங்கிலத்தில் ” Thorn and Flower” என்றுதான் நானும் நினைத்திருந்தேன். பிறகுதான் தெரிந்தது அந்த படத்தலைப்பின் பொருள் “Thorn also blossoms” என்று.
அதே போன்று விஜயா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட ரவீந்தர் எழுதிய நூலின் தலைப்பு “விழா நாயகன்” ” என்பதாகும். விழாவுக்கெல்லாம் நாயகன் என்ற அர்த்தத்தில் அத்தலைப்பு கொடுக்கப்படவில்லை. அதன் பொருள் “விழா(த) நாயகன்” என்பதாகும். வாழ்க்கையில் மூன்று முறை பேராபத்துக்களைச் சந்தித்து “முப்பிறவி கண்டவர்” என்று பெயரெடுத்தவர் எம்.ஜி.ஆர். எத்தனையோ பேர்கள் அவரை வீழ்த்த நினைத்தபோதும் “விழாத நாயகனாக” இறுதிவரை தன் வெற்றியை நிலைநாட்டிக் கொண்டவர். இருபொருள் கொண்ட இந்த நூலின் தலைப்பு எல்லோர் கவனத்தையும் ஈர்த்து ஏகோபித்த பாராட்டுதலைப் பெற்றுத் தந்தது.
“விழா நாயகன்” நூலில் கீழ்க்கண்ட தலைப்பில் எம்.ஜி,ஆரின் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகளை கோர்வையாக சுவைபட தனக்கே உரிய எளிய நடையில் விவரித்திருப்பார் ரவீந்தர்.
ராமச்சந்திரன்,
செம்மலின் வாழ்க்கைக்கு,
புரட்சி குமார்,
நெஞ்சு குளிர்ந்த நிகழ்ச்சி,
நீங்களே எங்கள் மன்னர்,
கலைக்கு விலை,
தசாவதாரம்,
தமிழுக்குச் சிறப்பு எழுத்து,
திரை ஏணி, காவியம் எது?,
நாளை நடப்பதை அறிந்தவர்,
தங்க நிழல்,
உங்களில் ஒருவன்,
பெண் சிரித்தால்,
பூட்டு வந்த பின்தான்,
என்னைப் போல் நீங்கள்,
உலகம் உருண்டை ஏன்,
ஜானு சொன்னது,
படத்தின் தலைப்பு,
நேற்று இன்று நாளை,
மூன்றெழுத்து வேந்தன்,
நல்ல நேரம்,
இதோ.. இவர்கள்,
டாக்டர் பட்டம் யாருக்கு?,
தாய் சொல்லை தட்டவில்லை,
அவருடைய எண்ணம்,
ஆடவந்த தெய்வம்,
நட்பு என்பது,
இதய தெய்வம்,
மக்களின் நினைவில்
ரவீந்தரின் மற்றொரு படைப்பான “பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.” என்ற நூலில் எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்வில் இடம்பெற்ற அரிய பல நிகழ்ச்சிகளை அற்புதமான முறையில் விவரித்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் மனித நேயத்தை வாசகர்களுக்கும் எடுத்துரைக்கும் வண்ணம் பல சுவையான நிகழ்வுகளை ரவீந்தரின் நூல் நமக்கு விருந்து படைக்கின்றது. .........SBB...
-
எம்ஜிஆர் குறித்து வெளிவந்த நூல்களின் மொத்தத் தொகுப்பு பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்...
எம்ஜி ஆரைப் பற்றித் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் பல நூல்கள் வெளிவந்துள்ளன,தமிழ் நூல்கள்...
முதலமைச்சர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் - டி.வி.சிவப்பிரகாசம்,வெளியீடு - கல்வி உலகம், இளந்தேரி (1977))
புரட்சித்தலைவரின் பொன்மொழிகள் (ஆசிரியர் – சாலி.இக்பால், வெளியீடு – நூர் பதிப்பகம், சென்னை (1980))
மக்கள் திலகம் இருவரலாற்றுப்படை (ஆசிரியர் – புலவர்.கே.பெரு.திருவரங்கன்,வெளியீடு - இராமலட்சுமி பதிப்பகம் , சென்னை (1980))
அண்ணனுக்குப் பின் மன்னன்,(ஆசிரியர் – அடியார்,வெளியீடு - மல்லி பதிப்பகம், சென்னை (1978))
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – வித்துவான் வே.லட்சுமணன்,வெளியீடு – வானதி பதிப்பகம், சென்னை (1985))
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்,வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1983))
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு - அறிஞர் அண்ணா பதிப்பகம், சென்னை (1979))
வரலாற்று நாயகன் (ஆசிரியர் – திருமூலன்,வெளியீடு – கவிதா பப்ளிகேசன்ஸ் , சென்னை (1978))
காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன்,வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985))
எம்.ஜி.ஆர். என் இதயக்கனி (ஆசிரியர் – அறிஞர் அண்ணா, தொகுப்பு- ஆர்.சீனிவாசன்,வெளியீடு – சத்தியத்தாய் பதிப்பகம் , சென்னை (1984))
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ் (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்,வெளியீடு – நீரோட்டம் வெளியீடு , சென்னை (1981))
அண்ணா தி.மு.க. வரலாறு (ஆசிரியர் – ஆர்.ரெங்காராவ்,வெளியீடு – செவ்வாய் வெளியீடு , சென்னை (1986))
நெஞ்சில் ஆடும் தீபம் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் டி.கே.மதியானந்தம்,வெளியீடு – கவிதாபானு, சென்னை (1983))
சத்துணவும் சத்துணர்வும் (ஆசிரியர் – கிருஷ்ணகாந்தன்,வெளியீடு – வள்ளி புத்தக நிலையம், சென்னை (1984))
அறிஞர் அண்ணா நமக்கு அறிவூட்டுகிற கடவுள் ( எம்.ஜி.ஆர். சொற்பொழிவுகள்) (ஆசிரியர் – தொகுப்பு-கழஞ்சூர் சொ.செல்வராஜ்,வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், சென்னை (1985))
தங்கத்தமிழர் எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மாணிக்கம்-சீனிவாசன், வெளியீடு – வெல்கம் பப்ளிகேஷன்ஸ் , சென்னை (1986))
எம் தலைவன் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்,வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1987))
அமெரிக்காவில் அண்ணா, எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி,வெளியீடு – வித்வான் பதிப்பகம், சென்னை (1975))
பொன்மனமே நீடு வாழ்க (கவிதை) (ஆசிரியர் – ராஜவர்மன், வெளியீடு – ஏ.எஸ்.ஆர்.பப்ளிகேசன்ஸ், சென்னை (1984))
மக்கள் தலைவருக்கு மன்றத்தலைவர் டாக்டர் பட்டம்- சேலத்தில் எடுத்த விழா மலர் (ஆசிரியர் – தஞ்சை வி.எஸ்.இராசு, வெளியீடு – புரட்சிக்குயில் பப்ளிகேசன்ஸ், சென்னை (1983))
சரித்திரத்தை மாற்றிய சத்புருஷர் (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1986))
நினைவுகளின் ஊர்வலம் (ஆசிரியர் – கவிஞர் புலமைப்பித்தன், வெளியீடு – திருமகள் நிலையம், சென்னை (1986))
எமனை வென்ற எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தஞ்சை தமிழழகன், வெளியீடு - மக்கள் பதிப்பகம், சென்னை (1985))
டாக்டர் எம்.ஜி.ஆர் ஒரு பொருளாதார வல்லுநர் (ஆசிரியர் – அ.வசந்தகுமார், வெளியீடு – கண்ணம்மாள் பதிப்பகம், சென்னை (1985))
பொன்மனச் செமமலும், புன்னகை மலர்களும் (ஆசிரியர் – எஸ்.குலசேகரன், வெளியீடு - அமிழ்தம் பதிப்பகம், சென்னை (1985))
தெற்கு என்பது திசை அல்ல (கவிதை) (ஆசிரியர் – வலம்புரிஜான், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))
சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – பாலாஜி, வெளியீடு – கீதா பிரசுரம், சென்னை (1987))
டாக்டர். எம்.ஜி.ஆர் வீரக்காவியம் (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
அப்பலோ டு அமெரிக்கா (ஆசிரியர் – பா.ஜீவகன், வெளியீடு – மேத்தா பிரசுரம், சிவகாசி (1985))
சத்துணவு பாடல்கள் (ஆசிரியர் – புலவர்.பி.வெங்கடேசன், வெளியீடு - அறிவரசி பதிப்பகம், தருமபுரி (1984))
இந்தி ஆதிக்கப் போரில் புரட்சித்தலைவர் (ஆசிரியர் – கவிஞர் மணிமொழி-நாஞ்சில் நீ.மணிமாறன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))
நான் ஏன் பிறந்தேன்? (ஆசிரியர் – வேலன், வெளியீடு – வேல் பாண்டியன் பிரசுரம், சென்னை (1988))
புரட்சித்தலைவர் அரசின் சமதர்மச் சட்டங்கள், (ஆசிரியர் – கா.சுப்பு, வெளியீடு - அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சென்னை (1984))
நான் கண்ட எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))
எம்.ஜி.ஆர் ஒரு குமணன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1988))
முப்பிறவி எடுத்த முதல்வர் (ஆசிரியர் – திருப்பூர் வெ.சம்பத்குமார், வெளியீடு - சாயிகீதா பதிப்பகம், சென்னை (1985))
சொல்லும் செயலும் (ஆசிரியர் – ஆ.அசோக்குமார், வெளியீடு – நியூ ஸ்டார் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))
செந்தமிழ் வேளீர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – புலவர்.செ.இராசு, வெளியீடு – கொங்கு ஆய்வு மையம், ஈரோடு (1985))
எம்.ஜி.ஆர் சரணம் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு - நெய்தல் பதிப்பகம், சென்னை (1988))
எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் (ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன், வெளியீடு – தனலட்சுமி பதிப்பகம், சென்னை (1981))
1980-85 சட்டமன்ற நாடாளுமன்ற வேட்பாளர்கள் (ஆசிரியர் – எம்.சுப்பிரமணியம், வெளியீடு – சித்ரா பப்ளிகேசன்ஸ், சென்னை (1986))
சாதனைப்பூவின் சரித்திர வசந்தம் (ஆசிரியர் – டாக்டர் ஜெகத்ரட்சகன், வெளியீடு – அப்போலா வெளியீடு, சென்னை (1988))
முப்பிறவி கண்ட முதல்வர் (ஆசிரியர் – டி.எம்.சௌந்திரராஜன், வெளியீடு - ரேவதி பதிப்பகம், சென்னை (1985))
செம்மலின் பொன்மனம் (ஆசிரியர் – கவிஞர்.ச.பஞ்சநாதன், வெளியீடு – என்.எஸ்.பப்ளிகேசன்ஸ், மதுரை (1988))
புரட்சியார் ஒரு காவியம், (ஆசிரியர் – கவிஞர்.தெ.பெ.கோ.சாமி, வெளியீடு - சித்ரா பதிப்பகம், வேலூர் (1987))
எம்.ஜி.ஆர்.உயில்களும் உயில் சாசன சட்டங்களும் (ஆசிரியர் – வை.சண்முகசுந்தரம், வெளியீடு – கலைக்கருவூலம், சென்னை (1988))
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.உலா (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு – பூம்புகார் பிரசுரம், சென்னை (1983))
மக்கள் திலகம் பற்றிய மாணவராற்றுப்படை (ஆசிரியர் – மாருதிதாசன், வெளியீடு - அருள்ஜோதிப் பதிப்பகம், நாமக்கல் (1981))
உலா வரும் உருவங்கள் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் இளந்தேவன், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))
அ.இ.அ.தி.மு.க வின் தோற்றமும் வளர்ச்சியும் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1985))
சந்திரனைப் போற்றும் நட்சத்திரங்கள் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))
புரட்சித்தலைவர் அவர்களுக்கு அறிஞர்கள் புகழ் மாலை (ஆசிரியர் – கழஞ்சூர் சொ.செல்வராஜி, வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், வேலூர் (1985))
வெற்றித்தலைவர் வீர வரலாறு (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
எம்.ஜி.ஆர். ஒரு காவியம் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லை பதிப்பகம், சேலம் (1987))
ஜீவ நதிகள் (ஆசிரியர் – கலைமாமணி மா.லட்சுமணன், வெளியீடு - அன்னை ஜே.ஆர். பதிப்பகம், சென்னை (1988))
புரட்சித்தலைவர் புகழ் அந்தாதி, (ஆசிரியர் – மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன், வெளியீடு - தாமரைப் பதிப்பகம், சென்னை (1985))
தந்தை பெரியார் முதல் புரட்சித்தலைவர் வரை (ஆசிரியர் – ஏ.கே.வில்வம், வெளியீடு - ரோமா பதிப்பகம், சென்னை (1985))
வள்ளலும் உள்ளமும் (ஆசிரியர் – டாக்டர்.எஸ்.தங்கமணி, வெளியீடு - ஆரோம் பதிப்பகம், குமரி (1987))
நடிகர் திலகமும் புரட்சித்தலைவரும் (ஆசிரியர் – ரசிகன் அருணன், வெளியீடு - அருணா பப்ளிசிட்டி, சென்னை (1987))
திருக்குறள் பாதையில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1984))
எம்.ஜி.ஆர் பெயரில் மன்றம் தேவையா? (ஆசிரியர் – திருவை ஆ.அண்ணாமலை, வெளியீடு – நெல்சன் பதிப்பகம், சென்னை (1961))
தர்மம் வென்றது (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1987))
எம்.ஜி.ஆர் கதை பாகம்-1 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு – ஜியோ பப்ளிகேசன்ஸ், சென்னை (1989))
மறு பிறவி கண்ட மக்கள் திலகம் (ஆசிரியர் – எம்.ஜி.ஆர் தாசன், வெளியீடு – கன்னி பதிப்பகம், சென்னை (1985))
சத்தியா மைந்தன் சாதனை (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – மறைதிரு எம்.ஏ.கோலாஸ், சேலம் (1978))
சத்துணவு நாயகன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லைநாயகி பதிப்பகம், சேலம் (1987))
இதயவானில் உதய நிலவு (ஆசிரியர் – தண்டு குன்னத்தூர் தமிழன், வெளியீடு - இளவளகி பதிப்பகம், வேலூர் (1985))
பரிபூரண அவதாரம் (நாடகம்) (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1985))
எம்.ஜி.ஆர் கதை பாகம்-2 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு - அருள்மொழி பதிப்பகம், சென்னை (1991))
எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படை சரிதானா? (ஆசிரியர் – கி.வீரமணி, வெளியீடு – திராவிடர் கழக வெளியீடு, சென்னை (1982))
நிலவை நேசிக்கும் நெஞ்சங்கள் (ஆசிரியர் – இனியவன், வெளியீடு – அவ்வை மன்றம், சென்னை (1986))
புரட்சித்தலைவர் பிள்ளைத் தமிழ் (ஆசிரியர் – கவிஞர் அக்கினிப்புத்திரன், வெளியீடு - குறளகம், பழனி (1988))
புரட்சித்லைவர் எம்.ஜி.ஆர். வீர வரலாறு (ஆசிரியர் – ஜோதிமணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சிவகாசி (1993))
எம்.ஜி.ஆர் நிழலும் நிஜமும் (ஆசிரியர் – மோகன்தாஸ், வெளியீடு – பந்தர் பப்ளிகேசன்ஸ், பெங்களுர் (1993))
காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பதிப்பகம், நாகப்பட்டினம் (1991))
சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர். சாதனைகள் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1991))
சரித்திரம் படைத்த எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஏ.கே.சேஷய்யா, வெளியீடு – மயிலவன் பதிப்பகம், சென்னை (1993))
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கு.சண்முகசந்தரம், வெளியீடு – குமரன் பதிப்பகம், சென்னை (1992))
எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மு.தம்பித்துரை எம்.ஏ, வெளியீடு – ஞானச்சுடர் பதிப்பகம், சென்னை)
தலைவனே எங்களுக்குத் தத்துவம் (ஆசிரியர் – மெய்க்கீர்த்தி, வெளியீடு - அன்னை சத்யா புத்தகப்பண்ணை, சென்னை (1978))
எம்.ஜி.ஆர் ஆட்சியும் சிவாஜி ரசிகர்களும் (ஆசிரியர் – எஸ்.வீரபத்திரன், வெளியீடு – புரட்சியார் ரசிகன், சென்னை (1985))
அண்ணா கொள்கைக்கு நாமம் (ஆசிரியர் – விடுதலை தலையங்கங்கள், வெளியீடு – திராவிடக்கழக வெளியீடு, சென்னை)
வெற்றி நமதே (ஆசிரியர் – ஜோதி மணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சென்னை (1991))
அரசும் தமிழும் (ஆசிரியர் – ஒப்பிலா மதிவாணன், வெளியீடு - தமிழ்ச்சுரங்கம், மதுரை (1986))
தன்னிறைவுத் திட்டத்தில் தமிழகம் (ஆசிரியர் – குமரிச் செல்வன், வெளியீடு - நாகர்கோவில் (1982))
காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தேனி ராஜதாசன், வெளியீடு - மணிமேகலைப் பிரசுரம், சென்னை (2010))
எம். ஜி. ஆர். கொலை வழக்கு: சிறுகதைகள்- ஷோபாசக்தி - 2016
எம். ஜி. ஆர். ஓரு சகாப்தம் கே. பி ராமகிருஷ்ணன் - 2007
பொன்மனச் செம்மல் எம். ஜி. ஆர் கீர்த்தி - 2007
நான் கண்ட எம். ஜி. ஆர் நவீனன் - 2009
எம். ஜி. ஆர். ஒரு சகாப்தம் நியூஸ் ஆனந்தன் - 1987
எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர் S. தேவாதிராஜன் - 2011
விழா நாயகன் எம். ஜி. ஆர் கலைமாமணி கே ரவீந்தர் - 2009
காலத்தை வென்ற புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர் நாஞ்சில் ஸ்ரீவிஷ்ணு – 2004
எம். ஜி. ஆர்: அதிகம் வெளிவராத தகவல்கள். ஆனால், அத்தனையும் பா தீனதயாளன் - 2015
பொன்மனச் செம்மல் எம். ஜி. ஆர் கே ரவீந்தர் - 2009 -
செந்தமிழ் வேளிர் எம். ஜி. ஆர்: ஒரு வரலாற்று ஆய்வு செ இராசு - 1985
8-வது வள்ளல் எம்.ஜி.ஆர் முரு. சொ. நாச்சியப்பன் - 1969 -
எம். ஜி. ஆர். திரைப்படங்களில் காணப்படும் திராவிடர் இயக்கச் ...கோகிலவாணி கோவிந்தராஜன் - 2010
எம். ஜி. ஆர் ஒரு சகாப்தம் Rajasekaran - 2007 -
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் என் ரமேஷ் - 2011
மக்கள் ஆசான் எம். ஜி. ஆர் ரங்கவாசன் - 2011 –
எனக்குள் எம்.ஜி.ஆர், காவியக் கவிஞர் வாலி வாலி - 2013
எம். ஜி. ஆர் கதை, திருத்தப்பட்ட பதிப்பு எஸ் விஜயன் - 2016
எல்லாம் அறிந்த எம். ஜி. ஆர் எஸ் விஜயன், விகடன் பிரசுரம் – 2008
எம்.ஜி.ஆர். பேட்டிகள்: மக்கள் திலகத்தின் அரிய பேட்டிகள் மற்றும் ...2013
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் எம். ஆர் ரகுநாதன் – 2015
பாரத ரத்னா: எம். ஜி. ஆர் சௌந்தர் - 2016 -
மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர்
நம்மோடு வாழும் மக்கள் திலகம் எம். ஜி. ஆர் டி. எம் சண்முகவடிவேல் - 2010 -
வாழ்ந்து காட்டிய வள்ளல் எம்.ஜி.ஆர் சாரதி - 2011 - No preview -
எட்டாவது வள்ளல் எம். ஜி. ஆர் மணவை பொன்மாணிக்கம் - 2000
வாத்யார்: எம். ஜி. ஆரின் வாழ்க்கை ஆர் முத்துக்குமார் - 2009
எம். ஜி. ஆர். ஓர் சகாப்தம் Kē. Pi Rāmakiruṣṇan̲, Es Rajat - 2007 –
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆசிரியர்: மேகலா சித்ரவேல் சேகர் பதிப்பகம்
ஆங்கில நூல்கள் (English Books)
Dr.M.G.R.A.Phenomenon (Author- Dr.Jagathrakshakan, Publisher- Appolo Publications, Chennai (1984))
All India Anna Diravida Munnetra Kazhagam (Author- Dr.R.Thandavan, Publisher- T.N.Academy of Political Science, Chennai (1984))
Poems- I Call M.G.R an Angel (Author- S.Yesupatham, Publisher- Packiam Publications, Chennai (1984))
Impact M.G.R.Films (Author- V.Kesavalu, Publisher- Movie Appreciation Society, Chennai (1990))
The Dynamic M.G.R (Author- A.P.Janarthanam M.P., Publisher- Chennai (1978))
M.G.R.-The Man and Myth (Author- K.Mohndass, Publisher- Panther Publishers, Chennai (1992))
The Image Trap (M.G.R Film & Politics) (Author- M.S.S.Pandian, Publisher- Sage Publications India, New Delhi (1992))
On the life and achievements of Marudur Gopalan Ramachandran, 1917-1987, Tamil film actor and former chief minister of Tamil Nadu, India.
Biography of Em. Ji. Rāmaccantiran̲, 1917-1987, actor and former chief minister of Tamil Nadu.
Biography of Em. Ji. Rāmaccantiran̲, 1917-1987, actor and former chief minister of Tamil Nadu... ......
-
எம்.ஜி.ஆர். எந்த அளவுக்கு மத நல்லிணக்கம் கொண்டிருந்தார் என்பதற்கு ரவீந்தர் எடுத்துரைக்கும் இந்த சம்பவம் நம்மை பரவசப்படுத்துகிறது. பிற மதத்தவரை சகோதர பாசத்தோடு அரவணைத்துச் செல்லும் அவரது உயர்ந்த பண்பில் நாம் கரைந்து போகிறோம். இதோ “விழா நாயகன்” நூலில் ரவீந்தர் வருணிப்பதை நாம் காண்போம்.
ஒரு சமயம் காரில் செம்மலுடன் நானும் இசையமைப்பாளர் சுப்பையா நாயுடுவும் போய்க் கொண்டிருக்கிறோம். வட ஆற்காடு மாவட்டம் சேத்துப்பட்டு என்ற ஊரைக் கடந்து வேலூர் நோக்கிப் போகிறோம். காலை வேளை “பசிக்குது இங்கே எங்கேயாவது காரை நிறுத்தி டிக்கியில் இருக்கும் டிபனை சாப்பிட்டுக் கொள்ளலாம்” என்றதும் காரோட்டி கதிரேசன் அங்கு தென்பட்ட ஒரு மாதா கோயில் காம்பவுண்டுகுள்ளே காரை செலுத்தி நிறுத்தினார். அது பெரிய கோவில். சோலைக்குள் இருந்தது.
செம்மலின் கார் நம்பர் தமிழகத்தில் எல்லோருக்கும் தெரியும். கூட்டம் கூடி விட்டது.
கூட்டத்தைக் கண்ட ஒரு பாதிரியார் உள்ளிருந்து வந்தார். செம்மலைக் கண்டதும், “வாங்க, ஏன் இங்கேயே நின்று விட்டீங்க! உள்ளே வந்து சாப்பிடுங்க” என்று அழைத்துப் போனார். கோயில் பணியாட்களிடம் சொல்லி. காரில் இருந்து சிற்றுண்டிகளைக் கொண்டு வரச் சொன்னார்.
உள்ளே அழைத்துப் போய் பேராயரை அறிமுகப் படுத்தினார்கள். அவர் ரோமிலிருந்து வந்திருந்த பெரியவர். கம்பீரத் தோற்றம். அறிவுக்களை அருள் நிறைந்த முகம். செம்மலை அழைத்துப் போய் தன் உணவறையில் அமரவைத்து, தனக்கென வந்த உணவுகளையும் பரிமாறினார். அவரும் எங்களுடன் உண்டார். செம்மல் அவரையே பார்த்துக் கொண்டு சிற்றுண்டியைப் புசித்தார். பேராயாருக்கு இருபுறமும் இரு பூனைகள் வந்து மேசை மேல் அமர்ந்தன. பொசு பொசு என்றும் வால் மொத்தமாக முடி நிறைந்தும் பார்க்க அழகாக இருந்தது. செம்மல் அதனை ரசித்து இப்பூனைகள் எங்குள்ளவை என்று கேட்க. ”ஜாவா நாட்டுப் பூனை. ஒரு பக்தர் கொண்டு வந்து கொடுத்தார்.” என்று பெரியவர் சொன்னார். யாரிடமும் எதையும் கேட்காத செம்மல் “இது குட்டி போட்டால் ஒன்று கொடுங்கள்” என்று கேட்டார். அவரும் “தாராளமாக” என்றார்.
ஆலயத்தைச் சுற்றிக் காண்பித்தார்கள். செம்மல் மண்டியிட்டு முறைப்படி ஏசுவை வணங்கினார். கன்னிகா ஸ்திரீகள் வாழுமிடம், அனாதை குழந்தைகள் வசிக்குமிடம் அனைத்தையும் பார்த்த பின் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டோம். “இங்கு செலவழித்த இரண்டு மணி நேரத்தில் கண்ட நிம்மதியை வேறு எங்கும் காணவில்லை” என்று சொன்னார் செம்மல்.
காரில் போய்க் கொண்டிருக்கும் போது எங்களிடம் அப்பேராயரின் அன்பு, அடக்கம், அழகு, கம்பீரத்தைப் பற்றி பேசிக் கொண்டு வந்தார். ”மக்களுக்கு நேரிடையாக நின்று அருள்பணி புரிபவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும். அவர்களை நிமிர்ந்து பார்த்தால் கை எடுத்துக் கும்பிடும் அளவுக்கு அவர்கள் முகம் இருக்க வேண்டும்” என்றவர், அத்துடன் ”இப்பெரியவரைப்பார்த்த பின் எனக்கும் பாதிரியாக நடிக்க வேண்டும் போலிருக்கிறது” என்றார். இதுதான் ‘பரமபிதா’ படத்துக்கு அடிப்படை.
டிசூஸா என்ற கிருஸ்துவப் பெரியவர் லயோலா கல்லூரியின் முதல்வர். கறாரும் கண்டிப்பும் மிக்கவர். அவர் போப் ஆண்டவருக்கு கீழுள்ள பன்னிரண்டு கார்டினல்களில் ஒருவராக நியமிக்கப்பட்டு ரோமுக்கு போக இருக்கையில், டாக்டர் ரெக்ஸ் அவரை செம்மலிடம் அழைத்து வந்தார்.
செம்மல் முறைப்படி வரவேற்று ”என்னைப் பார்க்க நீங்க வந்ததை விட உங்களைப் பார்க்க நான் வந்திருந்தால் அதுவே முறையாக இருந்திருக்கும்” என்றார்.
அதற்கு அவர் “இல்லை, இல்லை, நான் ஒரு காம்பவுண்டுக்குப் பெரியவர், நீங்கள் இந்த நாட்டுக்குப் பெரியவர். உங்களைப் பற்றி என் அருமை நண்பர் ரெக்ஸ் சொன்னார். அதனால் பார்க்க வந்தேன்” என்றார்.
அதற்கு செம்மல் ”மிக்க நன்றி” உங்களை விட நான் எந்த வகையில் பெரியவன் என்று எனக்கு தெரியலை” என்றார்.
அதற்கு அப்பெரியவர் “இப்போது நான் வெளியே போனால் என்னை யார் என்று தெரியாது. ஆனால் நீங்கள் வெளியே தலைகாட்டினாலும் போதும், யார் என்று சொல்லிவிடுவார்கள். மக்களால் சூழப்படுபவன் எவனோ அவனே மகான்” என்றார். செம்மல் வழக்கம் போல் சிறு புன்னகை செய்து கொண்டார்.
அங்கு பேச்சு வாக்கில் ‘பரமபிதா’ படத்தின் பேச்சும் நடந்தது. அதன் கதையமைப்பை டிசூஸா கேட்டார். ”பாதிரியார் மனதில் சலனங்கள் கூடாது. கதையின்படி நாயகன் காதலில் ஈடுபட்டிருக்கிறான். அவன் அப்படியான சூழ்நிலைக்கு ஆளாகி இருக்கலாகாது. அப்படிப்பட்டவன் பாதிரியாக வர முடியாது. கதையின் அடிப்படையே தவறாக இருக்கிறது” எனச் சொன்னார் டிசூஸா.
அதைக் கேட்டபின் இரண்டாயிரம் அடி எடுத்திருந்த ’பரமபிதா’ படத்தை கைவிட்டார் செம்மல். வெகு நாட்கள்வரை டிசூஸாவின் பேச்சு கம்பீரம், அறிவு, அழகுக் கலையைப் பற்றியே பேசிக் கொண்டே இருந்தார் செம்மல்.
எம்.ஜி.ஆரை பண்புகளை அறிந்துக் கொள்ள விரும்புவர்களுக்கு ரவீந்தரின் நூல்கள் கலைக்களஞ்சியமாக விளங்குகிறது என்றால் அது மிகையாகாது............sbb...
-
சினிமாத் துறையில் செம்பி நெய்னா காக்காவை தெரியாதவர் யாரும் இருக்க முடியாது, “செம்பி டிரேடர்ஸ் & பப்ளிசிட்டீஸ்” நிறுவனத்தின் மேலாளர்.
எம்.ஜி.ஆர்.அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி புதுக்கட்சி தொடங்க ஆயத்தமானபோது அவர் செய்த முதற் காரியம் என்ன தெரியுமா? அவருக்கு பழக்கமான நண்பர்களிடம் குறிப்பாக மிகநெருக்கமாக பழகிய முஸ்லீம் பிரமுகர்களிடம் நேரடியாகச் சென்று ஆதரவு திரட்டியதுதான். கட்சிக்கு நிதிதிரட்டும் பணியில் அவர்கள் தாராளமாக அள்ளித் தந்தார்கள்.
“கல்வித் தந்தை” என போற்றப்படும் பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்களின் வீட்டிற்கு மக்கள் திலகம் வருகை தந்தபோது, சேனா அனா அவர்களின் துணைவியார் தமிழர் கலாச்சாரப்படி வெற்றிலை பாக்கு ஒரு தட்டையில் கொண்டுவந்து வந்து வாழ்த்தியிருக்கிறார்கள்.
அப்போது இரு வெற்றிலை ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டிருந்ததாம். அதையே ஒரு நல்ல சகுனமாகக் கருதி எம்.ஜி.ஆர். தன் கட்சிக்கு சின்னமாக இரட்டை இலையை பயன்படுத்தினார் என்கிறார்கள்.
சேனா ஆனா குடும்பத்தாருடன் எம்.ஜி.ஆர். – ஜானகி
அதற்கு முன்பு ஒருமுறை எம்.ஜி.ஆர் இவர்கள் வீட்டுக்கு வருகை தந்தபோது அவர்கள் குடும்பத்தில் யாரோ ஒருவர் அவருக்கு ஒரு தொப்பியை அணிவித்திருக்கிறார். இந்த கெட்-அப் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப்போக இதையே தன் Celbrity Image-க்கு நிரந்தரமாக்கிக் கொண்டுள்ளார்.
எம்.ஜி.ஆர். பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கியது ஒரு சிலருக்கு மட்டும்தான். அது அவரின் அன்பின் வெளிப்பாடாகவே நாம் கருத வேண்டும். கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த நடிகர் எம்.கே.ராதா மற்றும் அவருக்கு ரோல் மாடலாக இருந்த ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். அதேபோன்று கையோடு கைசேர்த்து, தலைகுனிந்து பவ்யமுடன் ஆசிபெற்ற அன்பர்களில் குறிப்பிடத்தக்க இருவர். 1. இரண்டாம் முறை பதவியேற்றபோது நீதிபதி மு.மு.இஸ்மாயில், 2. எம்.ஜி.ஆரின் அன்புக்கு பாத்திரமான பி.எஸ்.அப்துல் ரஹ்மான்.
“சிரித்து வாழ வேண்டும் ” படத்தில் எம்.ஜி.ஆர்.
“ஜன்ஜீர்” என்ற இந்திப்படம் தமிழில் “சிரித்து வாழ வேண்டும்” என்ற பெயரில் தயாரிக்கப்பட்டபோது அதில் பிரான் ஏற்று நடித்த முஸ்லீம் பாத்திரத்தில் மக்கள் திலகம் நடித்தார். தன் நண்பருக்கு விசுவாசம் காட்டும் விதத்தில் அந்த பாத்திரத்திற்கு அப்துல் ரஹ்மான் என்ற பெயரை தேர்ந்தெடுத்தார்.
அத்தோடு நிற்கவில்லை. பாடலாசிரியர் புலமைப் பித்தனை அழைத்து தன் நண்பரின் பெயர் வருமாறு பாட்டை அமைக்க உத்தரவிட்டார்.
மெல்லிசை மன்னர் இசையமைக்க, டி.எம்.எஸ். பாட ரசிகர்கள் மனதில் இடம்பெற்ற பாடலிது:
ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்அவனே அப்துல் ரஹ்மானாம்ஆண்டான் இல்லை அடிமை இல்லைஎனக்கு நானே எஜமானாம்
உற்ற நண்பர் ஒருவருக்கு இதைவிட ஒரு அன்பான சமர்ப்பணம் வேறு என்ன செய்ய முடியும்..?
அதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட வரிகள் மறைந்த எம்.ஜி.ஆர். மற்றும் மறைந்த பி.எஸ்.அப்துல் ரஹ்மான் இருவர்களுக்கும் இப்பவும் பொருந்தும்
வந்தான் வாழ்ந்தான் போனான் என்றாஉலகம் நினைக்க வேண்டும் ?சொன்னான் செய்தான் ! என்றே நாளும்ஊரார் சொல்ல வேண்டும் !!!
காலத்தால் அழியாத வரிகள் இவை. Hats-Off to புலமைப் பித்தன்.
“இதயக்கனி” மற்றும் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்திற்கு பொருளாதார உதவி செய்தது பி.எஸ்.ஏ.ரஹ்மான் அவர்கள்தான். கீழைநாடுகளில் அதற்கான தங்கும் வசதி மற்றும் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி போன்றவைகள் பெற்றுத் தந்தது யாசீன் காக்கா அவர்கள். எம்.ஜி.ஆருக்கும் இவர்களுக்கும் இடைத்தரகராக செயல்பட்டவர் “இதயம் பேசுகிறது” மணியன்.
அதற்கு முன்பு, மணியன் ஒவ்வொரு நாடாக சுற்றி வந்து பயணத் தொடர்கதை எழுதுவதற்கு அந்தந்த நாடுகளில் பலவகைகளிலும் உதவி செய்தவர்கள் இந்த கீழக்கரை பிரமுகர்கள். ஆனால் அவரது பயணத் தொடரில் இவர்களைப் பற்றிய குறிப்பு எதையும் மணியன் எழுதி வைத்ததாக எனக்கு நினைவில்லை.
1970-ஆம் ஆண்டில் “உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக “எங்கள் தங்கம்” படம் முடிந்த கையோடு புறப்பட வேண்டியிருந்தது. இங்கு அரசியல் சூழ்நிலையும் அவருக்கு நெருக்கடி கொடுத்தது. “நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். எல்லா ஏற்பாடுகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று யாசீன் காக்கா உறுதியளித்த பின்புதான் எம்.ஜி.ஆருக்கு உற்சாகமே பிறந்தது.
யாசீன் காக்கா, கலைஞர் தன் மகன் மு.க.முத்துவை கதாநாயகனாக நடிக்க வைத்து. முரசொலி செல்வத்தை தயாரிப்பாளராக்கி, “அஞ்சுகம் பிக்சர்ஸ்” என்ற பெயரில் “பிள்ளையோ பிள்ளை” (1972) படத்தை தயாரித்தபோது அதற்கான செலவு மொத்தம் 15 லட்சம்.
பிரபலமாகாத ஒரு புதுமுகத்தை வைத்து எடுக்கும் ஒரு படத்திற்கு யார்தான் தாமாகவே முன்வந்து பண முதலீடு செய்வார்கள்..?
இப்படத்திற்கான செலவை முன்கூட்டியே வழங்கி விநியோக உரிமையை பெற்றது கிரசெண்ட் மூவீஸ், சேது பிலிம்ஸ் டிஸ்டிரிபியூட்டர்ஸ், ராசி அண்ட் கோ இந்த மூன்றும்தான். இந்த மூன்று நிறுவனங்களிலும் யாசீன் காக்கா அவர்கள் பங்குதாரர்களாக இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்தான சர்ச்சையில் துபாய் ETA நிறுவனத்தின் மேலாளர் சலாஹுத்தீன் அவர்களுக்கு இதில் தொடர்பு உள்ளது என்ற புகார் எழுந்தபோது, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா “பிள்ளையோ பிள்ளை” படம் எடுக்கப்பட்ட அந்தக் கால கதையை மறுபடியும் நினைவுபடுத்தி, சூசகமாகச் திமுக தலைவர் கருணாநிதிக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பை 2010-ஆம் ஆண்டு கோவை பொதுக்கூட்டத்திலேயே பகிரங்கமாக அறிவித்தார்.
சர்க்காரியா கமிஷன் விசாரணையின்போது, எத்தனையோ சாட்சிகளில் யாசீன் காக்காவும் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டார். உண்மையே பேசி பழக்கப்பட்ட யாசீன் காக்கா சர்க்காரியா கமிஷன் முன்பு வழங்கிய வாக்குமூலம் இதுதான்.
“சாதாரண சமயமாக இருந்தால், ‘பிள்ளையோ பிள்ளை’ திரைப்படத்திற்கான விநியோக உரிமைகளை வாங்குவதற்கு நான் முன் வந்திருக்கவே மாட்டேன். இருப்பினும், அப்போது சென்னையில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தில் கூட்டுப் பங்குதாரராகவும் இருந்தேன். எனது நிறுவனம் தமிழக அரசுக்காக அண்ணா மேம்பாலம் கட்டும் முக்கிய ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்தது. வேறு சில ஒப்பந்தங்களை நிறைவேற்ற முயன்று கொண்டிருந்தது. அந்த வியாபாரத்தில் குறிப்பிட்ட சில சலுகைகளுக்காக சென்னைக்குத் தெற்கிலுள்ள பகுதிகளுக்கு இத்திரைப்பட விநியோகஸ்தர் உரிமையை வாங்கிக் கொள்ளுமாறு நான் அப்போதைய ஆட்சியாளர்களால் வற்புறுத்தப்பட்டேன். அப்படத்திற்கான விநியோக உரிமையை வாங்கிக் கொண்டு கருணாநிதியை திருப்திப்படுத்துவதைத் தவிர வேறு மாற்று வழியேதும் எனக்கு இல்லை..”
அவரது இந்த வாக்குமூலம் அரசியல் வானில் ஒரு பெரும் பிரளயத்தையே உண்டு பண்ணியது. இச்செய்தி 31.03.2011 அன்று வெளிவந்த குமுதம் ரிப்போர்ட்டர் மற்றும் மாலைமலர் நாளிதழ்கள் வெளியிட்டு மீண்டும் பெரும் பரபரப்பை உண்டு பண்ணின..........SBB.........
-
பாட்டாலே*புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*21/09/20 அன்று அளித்த*தகவல்கள் (122 வது தொடர் )
------------------------------------------------------------------------------------------------------
சகாப்தம் நிகழ்ச்சி இன்றைக்கு தமிழகம் முழுவதும்* மட்டுமல்லாமல் மலேசியா சிங்கப்பூர்,பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகளிலும் , இணையதளம் மூலமாக சென்று கொண்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு* , ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு ,நிர்வாகி திரு.லோகநாதன் ராமச்சந்திரன்*என்பவர் தகவல் அளித்துள்ளார் . குறிப்பாக கடந்த வாரம் மட்டும் சுமார் 1,00,000பேர் சகாப்தம் நிகழ்ச்சியை பார்த்திருக்கிறார்கள் என்பதை திரு.லோகநாதன் ராமச்சந்திரன் தனது வாட்ஸ் அப் தகவல் மூலமாக* தெரிவித்துள்ளார் .உண்மையிலேயே அவர் புகழை பரப்புவதற்காகவும் , அவருடைய புகழை காப்பாற்றுவதற்காகவும் இன்றைக்கும் இத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அந்த மாமனிதரின் ஆன்மா .பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே என்கிற மாதிரி அவரிடமிருந்த அந்த மகோன்னதமான* மனிதத்துவம், பிறரை நேசித்தல் ,பிறர் மீது அக்கறை காட்டுதல் ,பிறருடைய உணர்வுகளை புரிந்து கொள்ளுதல் ,என்பதை தனது திரைப்படங்கள் என்கிற சாதனங்கள்*மூலம் கருத்துக்களை சொல்லிக்கொண்டே வந்தார் .அதனால்தான் இன்றைக்கும் அவர் மறைந்தும் மறையாத மக்கள் தலைவராக மக்கள் மத்தியில் இடம் பெற்று இருக்கிறார் .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தினசரி அதிகாலை 5 மணியளவில் எழுந்து ராமாவரம் இல்லத்தை சுற்றியுள்ள* தோட்டத்தில் நடைபயிற்சி* செய்துவிட்டு ,வீட்டுக்கு திரும்பியதும் சிறிது நேரம் உடற்பயிற்சி ,கிட்டத்தட்ட வியர்வை சிந்த*செய்தபின் குளித்துவிட்டு காலை 8 மணியளவில்* சிற்றுண்டி அருந்துவது வழக்கம் . அதன்பின் வீட்டை விட்டு புறப்பட்டு செல்பவர்எப்போது வீடு திரும்புவார் என்று தெரியாத நிலையில்* சுமார் 15 மணி நேரம் உழைத்த பின்தான் வீட்டுக்கு திரும்புவார் காரணம் அவருக்கு நேரம் என்பது அரிய வகை சொத்தாக இருந்தது .
ஒருநாள் படப்பிடிப்பிற்கு நடிகர்* அசோகன் கொஞ்சம் தாமதமாக வருகிறார்*அசந்து சற்று தூங்கிவிட்டேன் என்று சொல்கிறார். உடனே எம்.ஜி.ஆர். பதில் அளிக்கிறார் .அசோகன் நீங்கள் கிறிஸ்துவராக இருக்கலாம் ஆனால் ஒரு விஷயம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் . நடராஜர் சிலையை பாருங்கள்*கலையின் வடிவமாக சொல்லப்படுகிற நடராஜர் ஒற்றை காலில் நிற்கிறார் .ஏனென்றால் ஒற்றை காலில் நின்றுகொண்டிருந்தால்* ஒருவர் தூங்கவே முடியாது . அப்படி உற்சாகமாக எப்போதும் உழைத்து கொண்டே இருக்க வேண்டும்*.என்பதை காட்டுவதற்காகத்தான்* இப்படி ஒரு கடவுள் சிலையை, சிற்பத்தை அமைத்திருக்கிறார்கள் . அதே போல விலங்குகளை பார்த்தால் பலத்திலே பெரியதாக சிங்கத்தை சொல்வார்கள் .உருவத்தில் பெரியதாக யானையை சொல்வார்கள் . ஆனால் வேகம் என்று பார்த்தால் குதிரையைத்தான் சொல்வார்கள் .இன்றைக்கு கூட குதிரை பவர் என்று சக்தியை அர்த்தமாக சொல்கிறார்கள் அந்த குதிரையானது ஒருபோதும்* படுத்து தூங்கியதில்லை . நின்று கொண்டேதான் தூங்கும் .நீங்கள் உழைப்பதற்கு என்று வந்துவிட்டீர்கள்*என்றால் கொஞ்சம் உறக்கத்தை குறைத்து கொள்ள வேண்டும் . அதாவது நீங்கள் கனத்தை தூக்க வேண்டும் என்றால் உங்கள் பலத்தை பெருக்கி கொள்ள வேண்டும்* பதவிக்கு வரவேண்டும் என்றால் தகுதியை பெருக்கி கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார் எம்.ஜி.ஆர். .
பிரபல அரசியல் தலைவர் திரு.லியாகத் அலிகான் அளித்த பேட்டி விவரம்*
-----------------------------------------------------------------------------------------------------------------------
நம்பிக்கை நாற்றாக விதைக்கப்பட்டு இருக்கிற அந்த மன்னாதி மன்னன் , இதயத்தில் இடம் பெறுவது என்பது சுலபமான விஷயம் அல்ல .ஆனால் இளம் வயதிலேயே மாணவனாக இருந்த திரு.லியாகத் அலிகான் அவர்களை அரசியலுக்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். கையை பிடித்து இழுத்து வந்திருக்கிறார் . அவரது அனுபவங்களை நேரில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் அதை தெரிந்து கொள்வோம்*
எம்.ஜி.ஆர். அவர்கள் பிரபல சினிமா நடிகர் ,வசூல் சக்கரவர்த்தி, வள்ளல் தன்மை*கொண்டவர் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு கட்சியின் பொருளாளராக இருந்தவர் ,அந்த கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார் என்பதற்காக இவ்வளவு பேர்*தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தியது போல வேறு எவருக்காகவாவது நடத்தியது உண்டா ? அல்லது எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மட்டும்தான் நடந்ததா*அந்த சமயத்தில் கல்லூரி மாணவனாக இருந்த நீங்கள் எந்த ஈர்ப்பினால் இந்த மாதிரியான போராட்டங்களில் ஈடுபட்டீர்கள்*
லியாகத் அலிகான் : எங்கள் தந்தையார் அடிப்படையில் எம்.ஜி.ஆர். ரசிகர் .நான் என் தந்தையுடன் பார்த்த முதல் படம் தாய்க்கு பின் தாரம் . அந்த படத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் காளையுடன்* போராடி அதை அடக்கும் காட்சி என்னை மிகவும் கவர்ந்தது .எனக்கு அப்போது சுமார் 8 வயது இருக்கும் . தொடர்ந்து எம்.ஜி.ஆர். படங்கள் பார்க்கும் சூழ்நிலையால் ,அவரது படங்களின் தாக்கம் ,சாகசங்கள் அவரது இமேஜ் ,உருவம் ஆகியன என் மனதில் ஆழ பதிந்துவிட்டதுஒரு கட்டத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 100 வது* படமாகிய* ஒளிவிளக்கு*100 வது நாள் வெற்றிவிழா**.கொண்டாடி , நான்கைந்து பேர் சேர்ந்து பணம் முதலீடு செய்து ,ஒளிவிளக்கு எம்.ஜி.ஆர்.ஸ்டில்லை போட்டோ எடுத்து (,அப்போதெல்லாம் போட்டோ பிரிண்ட் போடுவதற்கு 2 நாட்கள் காத்திருக்க வேண்டும் .இப்போதெல்லாம் ஒரு நிமிடத்தில் பிரிண்ட் வந்துவிடும் .)சுமார் 100 நபர்களுக்கு ரூ.400/- செலவு செய்து கொடுத்தோம் அந்த காலத்தில் இது ஒரு பெரிய தொகை .இந்த விஷயங்கள் எல்லாம் மனதில் ஆழ பதிந்து எம்.ஜி.ஆர்.எங்களுக்குள் ஐக்கியம் ஆகிவிட்டார் . பின்னர் 1972ல் அவரை கட்சியில் இருந்து நீக்கியபோது எங்களுக்கு மன உளைச்சலை கொடுத்தது .நான் அப்போது தி.மு.க.வில் கோவை மாவட்ட மாணவர் அணியில் மாணவ* பிரதிநிதியாக இருந்தேன் . எனக்கு அப்போது மேடை பேச்சு அனுபவம் கொஞ்சம் இருந்தது . அதனால் தி.மு.க.கட்சியினரிடம் நான் எம்.ஜி.ஆர். கட்சி நீக்கம் பற்றி அடிக்கடி வாதம் செய்து வந்தது அவர்களுக்கு பிடிக்காததால் ,நீ வயதில் சிறியவன் ,மாணவன் உனக்கு ஒன்றும் தெரியாது ,மேலிடத்தில் நடக்கும் விஷயங்கள் உனக்கு தெரிய வாய்ப்பில்லை தங்க கத்தி என்றால் வயிற்றில் குத்திக்* கொள்ளவா முடியும் என்று அவர்கள் பேசவே எனக்குள் ஆவேசம் பொங்கி எழுந்தது .என்னால் ஜீரணிக்க முடியவில்லை . அப்போது நான் உடுமலை கலை கல்லூரியில் மாணவர் சங்க* தலைவராக இருந்தேன் .அப்போது எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக ஊர்வலம் போராட்டங்கள் நடத்த நாங்கள் முடிவு செய்தபோது தி.மு.க. வினர் என்னை பிடிக்க முயன்றனர் .இதை அறிந்த நானும் ஒருசில முக்கிய நண்பர்களும் கனகராஜ் என்பவரின் வட்டிக்கடை வீட்டில் யாருக்கும் தெரியாமல் சில நாட்கள் தங்கினோம் .நாங்கள் 15/10/1972 அன்று உடுமலையில் ஊர்வலம் நடத்த திட்டமிட்டோம் .அக்டொபர்* 10மத்தேதி எம்.ஜி.ஆர். கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார் என்கிற செய்தி அறிந்து உடுமலையில் இஸ்மாயில் என்கிற எம்.ஜி.ஆர்.ரசிகர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் .இந்த செய்தி பத்திரிகையில் வெளிவராமல் தி.மு.க. வினர் தடுத்தனர் .உடுமலையில் உள்ள அச்சகங்களில் சென்று நோட்டீஸ் அச்சடிக்க முயன்றபோது ,தி.மு.க.வின் அராஜகம் காரணமாக ஒருவரும் முன்வரவில்லை. எல்லோரும் பயந்தனர் . அப்போது பாஷா என்பவர்*விடாமுயற்சியின் காரணமாக எம்.ஜி.ஆருக்காக இஸ்மாயில் என்பவர் உடுமலையில் விஷம் அருந்தி தற்கொலை என்று பத்திரிகையில்* செய்தி வெளிவரச்செய்தார் .இது குறித்து ஊர்வலம் நடத்த, நோட்டீஸ் அச்சடிக்க ஒருவரும் முன்வரவில்லை .அப்போது பாபு என்கிற எம்.ஜி.ஆர். பற்றாளர் அச்சகம் வைத்திருந்தார் . அவரும் நோட்டீஸ் அச்சடிக்க முன்வராமல் ஒரு பேப்பர் பண்டல் மட்டும் கொடுத்து உதவினார் .அதன்பின் நாங்கள் ஒரு ரகசிய இடத்தில கூடி , எங்கள் கைப்பட ,எம்.ஜி..ஆர்.அவர்களை தி.மு.க.வி.ல் இருந்து நீக்கியது தவறு .இது குறித்த கண்டன ஊர்வலம் உடுமலை கல்பனா அரங்கில் இருந்து காலை 9 மணிக்கு 15ந்தேதி புறப்படும் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தருக என்று எழுதி எம்.ஜி.ஆர். ரசிகர்கள், பற்றாளர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு அளித்தோம் . ஊர்வலத்திற்கு ஆரம்பத்தில் சுமார் 30 நபர்கள்தான் இருந்தனர் .ஆனால் முடியும் தருவாயில் பார்த்தால் 3000 பேர் திரண்டு இருந்தனர் .அந்த கூட்டத்தில் என்னை எம்.ஜி.ஆர். மன்ற தலைவராக தேர்ந்து எடுத்தனர் .* இந்த சம்பவம் அடுத்த நாள் 16ந்தேதி தினமலர் நாளிதழில் வெளியாகி இருந்தது .அப்போது இதை அறிந்த எம்.ஜி.ஆர். அவர்கள் என் பெயரை பற்றி குறித்து வைத்திருந்தார் .அப்போது வழக்கறிஞர் குழந்தைவேலு அவர்கள் 20ந்தேதி சென்னைக்கு போக இருந்த சமயத்தில் நானும் சில நண்பர்களும் அவருடன் இணைந்து சென்றோம் அடுத்த நாள் 21ந்தேதி சென்னையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை நாங்கள் சந்திக்க முயன்றோம் முடியவில்லை .அப்போது கே.ஏ.கே. அவர்கள்தான் புரட்சி தலைவர் முன்னிலையில் எங்களை கட்சியில் சேர்த்தார் .அனகாபுத்தூர் ராமலிங்கம் மூலம்தான் அ.தி.மு.க. தோற்றுவிக்கப்படுகிறது என்று முறையாக அறிவிப்பு 17/10/72அன்று வந்திருந்தது .21ந்தேதி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருடன் சுமார் 2 மணி நேரம் பேசும் அருமையான வாய்ப்பு கிடைத்தது . அப்போது அ,தி,மு.க. கட்சி கொடியை உருவாக்கி* பிரபல சினிமா கலை இயக்குனர் அங்கமுத்து தயார் செய்து கொண்டு வந்ததை முறைப்படி எம்.ஜி.ஆர். அறிவிக்கிறார் .இந்த கொடியை* வடிவமைத்தவர் நடிகர் பாண்டு என சொல்லப்படுகிறது .அவர் அந்த கூட்டத்தில் கீழே அமர்ந்து கொள்கிறார் .அந்த கொடியில் பேரறிஞர் அண்ணா அவர்கள் தன்*ஆள் காட்டி விரலை வலது புறம் ,இடது புறம் காட்டும் வடிவத்திலும் ,அண்ணாவின் உருவம் நேராக இருப்பது போலும் உள்ள கொடிகளை எங்களிடம் காண்பித்து*,இதில் எது மிக நன்றாக இருக்கிறது என்று ஆலோசனை கேட்டார் .அதில் நான் முக்கிய பங்கு வகித்தேன் என்பது எனக்கு பெருமையான விஷயம்*என் வாழ்நாளில் எனக்கு இது மறக்கமுடியாத தருணம் .
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நான்கு படங்களின் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். கலந்து கொள்கிறார் .அங்குள்ள தமிழர்கள் ,பலரும் தங்கள் வீட்டிற்கு எம்.ஜி.ஆர். உணவருந்த வரவேண்டும்*என்று விரும்பி, வற்புறுத்தி அழைக்கிறார்கள் .எம்.ஜி.ஆரிடம் கார் டிரைவராக இருந்த*அப்துல்லா என்பவர் அங்கிருக்கிறார் .எம்.ஜி.ஆருடன் சென்ற* உதவியாளர்**.ரவீந்தரும்*உடனிருக்கிறார் .அப்துல்லாவிற்கு உருது கலந்த காஷ்மீரி மொழி* பேசக்கூடியவர் .அப்துல்லா என்பவர் ரவீந்தரிடம் எங்கள் வீட்டிற்கு இந்தி நடிகர் திலீப்குமார், ராஜ்கபூர் போன்றவர்கள் எல்லாம் வந்துள்ளார்கள் .அதே போல எம்.ஜி.ஆர். அவர்களும் என் வீட்டிற்குஉணவருந்த* விஜயம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார் .இதை அறிந்த எம்.ஜி.ஆர். நாளை அவர் வீட்டிற்கு செல்லலாம் என்றார் மறுநாள் எம்.ஜி.ஆர். அப்துல்லா வீட்டிற்கு விஜயம் செய்கிறார் .வீட்டுக்குள் நுழைந்ததும் அப்துல்லாவின் தாத்தா காஷ்மீர் சால்வையில் பூ வடிவில்நேர்த்தியான* எம்ப்ராய்டரிமற்றும் ஜரிகை* வேலைகள் செய்து கொண்டிருக்கிறார் .அப்துல்லாவின் தந்தை வேறுவிதமான வேலையில் ஈடுபட்டிருக்கிறார் .அங்குள்ள பெண்களோ காஷ்மீர் சேலைகளில் வடிவமைக்கும் வேலைகள் செய்து கொண்டிருக்கிறார்கள் .அங்குள்ள குழந்தைகள் கூட அவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள் .இவற்றை எல்லாம் நேரில் பார்த்த எம்.ஜி.ஆர்.பூரித்து போகிறார் . ஒரு வீட்டில் அனைவரும் தங்களுக்கு உகந்த ஏதாவது ஒரு வேலையில்* ஈடுபட்டிருப்பதை கண்டு ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்து புல்லரித்து போகிறார் .அந்த வீட்டில் விருந்து உண்டபின் ,அங்கிருந்த குழந்தைகளுக்கு தன் கை நிறைய பணத்தை அள்ளி கொடுக்கிறார் .எம்.ஜி.ஆர். புறப்படும்போது அவர் கால்களில் அணிவதற்கு ஒரு ஜோடி காஷ்மீர் செருப்பை தருகிறார்கள் .தலையில் அணிவதற்கு ஒரு தொப்பியை தருகிறார்கள் . அந்த தொப்பியை அப்துல்லாவின் தாத்தா எம்.ஜி.ஆருக்கு அணிவிக்கும்போது* உருது மொழியில் ஏதோ சொல்கிறார் .ரவீந்தருக்கு உருது,அரபி மொழிகள் நன்றாக தெரியும் .எனவே எம்.ஜி.ஆர். ரவீந்தரிடம் அவர் என்ன சொன்னார் என்று கேட்க ,நீங்கள் ஒரு பேரரசர்தான் ஆனால் இந்த ஏழையால்* உங்கள் தலைக்கு வைரக்கிரீடம் சூட்ட முடியவில்லை .அதனால் எங்கள் வீட்டிற்கு விஜயம் செய்து உணவருந்தியதற்காக இந்த ஏழையின் கைகளால் செய்த குல்லாவை உங்களுக்கு* அணிவிக்கிறேன் .உங்களோடு எப்போதும் அல்லா துணையிருப்பார் என்று வாழ்த்தியதாக ரவீந்தர் எம்.ஜி.ஆரிடம் கூறினார் .அப்படி வாழ்த்துக்களுடன் தலையில் அணிந்த குல்லாவுடன் எம்.ஜி.ஆர். படப்பிடிப்பு தளத்திற்கு வரும் வரை கழற்றவேயில்லை .* இவ்வளவு அன்போடும்,பரிவோடும்* வாழ்த்துக்களோடும் எனக்கு அணிவிக்கப்பட்ட இந்த காஷ்மீர் குல்லா இனி எம்.ஜி.ஆர். குல்லா என்று அழைக்கப்படுவதோடு என்னை விட்டு பிரியாது என்று சொன்னாராம் .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
---------------------------------------------------------------------------------
1.சிரித்து வாழ வேண்டும்* - உலகம் சுற்றும் வாலிபன்*
2.எம்.ஜி.ஆர்.-சரோஜாதேவி உரையாடல் - அன்பே வா*
3.தூங்காதே தம்பி தூங்காதே - நாடோடி மன்னன்*
4.திரு.லியாகத் அலிகான் அவர்களின் பேட்டி*
5..ஒன்றே சொல்வான் ஒன்றே செய்வான் -சிரித்து வாழ வேண்டும்*
-
தனியார் தொலைக்காட்சிகளில் கலைவேந்தன் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் ஒளிபரப்பான*பட்டியல் (17/09/20 முதல் 23/09/20 வரை )
--------------------------------------------------------------------------------------------------------------------------------17/09/20* -மெகா டிவி - மதியம் 12 மணி -* ஆனந்த ஜோதி*
* * * * * * * * *புதுயுகம்* * *-பிற்பகல் 1.30 மணி - நீரும் நெருப்பும்*
* * * * * * * *மெகா 24* * * - பிற்பகல் 2.30 மணி -காதல் வாகனம்*
* * * * * * * *சன் லைப்* * - மாலை 4 மணி* * * *- நீதிக்கு* பின் பாசம்*
18/09/20 -சன்* லைப்* - காலை 11 மணி - பல்லாண்டு வாழ்க*
19/09/20 -சன் லைப் -* காலை 11 மணி - பெற்றால்தான் பிள்ளையா*
* * * * * * * பாலிமர் டிவி -இரவு 11 மணி** -இன்றுபோல் என்றும் வாழ்க*
*20/09/20-மெகா டிவி* *-மதியம் 12 மணி - குடியிருந்த கோயில்*
* * * * * * * *மெகா 24* * * *-பிற்பகல்**2.30 மணி -தாயை காத்த தனயன்*
21/09/20-சன் லைப்* *-காலை 11 மணி* * - நம் நாடு*
* * * * * * * * முரசு* -மதியம் 12மணி /இரவு 7 மணி -தாய் சொல்லை தட்டாதே** **
* * * * * * * * *புதுயுகம்* * * *- இரவு 7 மணி* -- காதல் வாகனம்* * * * * * * * **
* * * * * * * * *மீனாட்சி டிவி - இரவு 9.30 மணி -விவசாயி* * * * * * * *
* * * * * * * * *வேந்தர் டிவி -இரவு 10.30 மணி -தாயின் மடியில்*
* * * * * * * * * பாலிமர் டிவி -இரவு 11 மணி - நீதிக்கு பின் பாசம்*
22/09/20* *-சன் லைப் -* காலை 11 மணி - திருடாதே*
* * * * * * * * * சித்திரம் டிவி -காலை 11மணி /மாலை* 6மணி**-அபிமன்யு*
* * * * * * * * *வசந்த் டிவி -பிற்பகல் 1.30மணி -மருதநாட்டு இளவரசி*
* * * * * * * * *மூன் டிவி* *-இரவு 7.30 மணி -* நீதிக்கு பின் பாசம்*
23/09/20* * சன் லைப்* -காலை 11 மணி - நீதிக்கு தலைவணங்கு*
* * * * * * * * * மெகா 24* *-பிற்பகல் 2.30 மணி - முகராசி*
* * * * * * * * *மூன் டிவி* -இரவு 7.30 மணி -தாய்க்கு பின் தாரம்**
* * * * * * * * *தமிழ் மீடியா டிவி -இரவு 8.30 மணி -ஆயிரத்தில் ஒருவன்*
* * *
* * * * * * * **
-
’இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு’ பாடல்; 52 ஆண்டுகளானாலும் சரித்திரமாகி மறையாத ‘ஒளிவிளக்கு’ பாடல்! - எம்ஜிஆரின் ‘ஒளிவிளக்கு’; வாலியின் பாட்டு செய்த பிரார்த்தனை
எப்போதோ வந்த வடிவேலுவின் காமெடி, பல வருடங்களுக்குப் பிறகு டிரெண்டானது. இன்றைய கணினி யுகத்தில் இது சாத்தியமாகலாம். ஆனால் அப்போது ஒட்டுமொத்த தமிழகமெங்கும் ஒரு பாடல்... ஒலித்தது. ‘பாட்டு நல்லாருக்கு’ என்றோ ‘நல்ல வரிகள்’ என்றோ, ‘ரேடியோல பாட்டு போடுறாங்க, கேப்போம்’ என்றோ மட்டுமே பாட்டு ஒலிபரப்பவில்லை. அதற்காக மட்டுமே கேட்கப்படவில்லை. பிரார்த்தனைக்காக, வேண்டுதலுக்காக, உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக ஒலிபரப்பப்பட்டது. எல்லோரின் பிரார்த்தனையாகவும் இப்படி திரும்பத்திரும்ப ஒலித்த அந்தப் பாடல்... ‘இறைவான் உன் மாளிகையில்...’. அப்படி பாடலை ஒலிக்கவிட்டு, பிரார்த்தனை செய்தது... எம்.ஜி.ஆருக்காக!
ஜெமினி பிரமாண்டமான செலவில் தயாரித்த வண்ணப்படம் ‘ஒளிவிளக்கு’. சாணக்யாவின் இயக்கத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா, செளகார் ஜானகி முதலானோர் நடித்திருந்தார்கள். எம்.எஸ்.வி. இசையமைக்க, வாலி பாடல்கள் எழுத எம்ஜிஆரின் நூறாவது படமாக வந்தது ‘ஒளிவிளக்கு’.கொள்ளைக் கூட்டத்தில் இருந்தாலும் நல்ல மனமும் அன்பு குணமும் கொண்ட கதாபாத்திரம் எம்ஜிஆருக்கு. இன்றைக்கு கரோனா போல், அன்றைக்கு ஊரில் ஒரு நோய் வந்துவிட, ஊரே காலியாகிவிடும். ஒரு பங்களாவில் திருட வரும் எம்ஜிஆர், அங்கே உடல்நலமின்றி இருக்கும் செளகார் ஜானகியைப் பார்ப்பார். மனமிரங்கி உதவுவார். பிறகு ஒருகட்டத்தில் செளகாரை அழைத்துக்கொண்டு அடைக்கலம் தந்து காப்பார். கொஞ்சம் கொஞ்சமாக திருட்டுத் தொழிலை விடுவார்.
இதேகட்டத்தில், ஜெயலலிதாவை விரும்புவார். இவருடைய கொள்ளைக்கும்பல், குடிசைகளுக்கு தீவைத்துவிடும். எல்லோரையும் காப்பார். அப்படி ஒரு குழந்தையைக் காப்பாற்றும் போது, தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடுவார். செளகார் ஜானகி, எம்ஜிஆருக்காக, எம்ஜிஆர் குணமாக வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்து பாடுவார்.
”இறைவா, உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு’ என்று மனமுருகி, கதறி, கண்ணீர்விட்டுப் பாடுவார். எம்ஜிஆர் குணமாவார்.
இந்திப் படத்தின் ரீமேக் இது. எம்ஜிஆரிஸம் கொண்ட கதை. தவிர, எம்ஜிஆருக்கு 100வது படமும் கூட. ‘தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?’ என்றொரு பாடல். அநேகமாக, எம்ஜிஆர் குடித்துவிட்டு நடித்த படமும் போதையில் பாடுகிற படமும் இதுவாகத்தான் இருக்கும். ‘ருக்குமணியே பறபற’ என்றொரு பாடலும் ஹிட்டானது. ’மாம்பழத் தோட்டம்’ என்றும் ‘நான் கண்ட கனவினில்’ என்றும் பாடல்கள் உண்டு. ஆனாலும் ‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க’ என்ற பாடல், இந்தப் படத்தை பட்டிதொட்டியெங்கும் கொண்டுப்போய்ச் சேர்த்தது. மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற பாடலாக அமைந்தது1968 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ம் தேதி, வெளியானது ‘ஒளிவிளக்கு. இதன் பிறகு எம்ஜிஆர் எத்தனையோ படங்களில் நடித்தார். பிறகு கட்சி தொடங்கினார். 77ம் ஆண்டு ஆட்சியமைத்தார். பிறகு மீண்டும் தேர்தல் வந்தது. 80ம் ஆண்டு திரும்பவும் ஆட்சி அமைத்தார். அதன் பின்னர் 84ம் ஆண்டில் மீண்டும் தேர்தல் வரும் நேரத்தில், அவருக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டன. சென்னை மருத்துவமனை, அமெரிக்க மருத்துவமனை என சிகிச்சையில் இருந்தார்.
அப்போது, எம்ஜிஆருக்கு என்னென்ன நோய்களெல்லாம் இருக்கின்றன என்று தமிழகத்துக்குத் தெரிந்தது. மக்கள் கலங்கினார்கள். துடித்தார்கள். கதறினார்கள். வெடித்துக் கண்ணீர்விட்டு அழுதார்கள்.
எல்லோரும் ஒருமித்த மனதுடன் எம்ஜிஆர் குணமாகவேண்டும் என பிரார்த்தனை செய்தார்கள். அந்தப் பிரார்த்தனையின் முக்கிய அம்சம்... ‘இறைவா உன் மாளிகையில்’ பாடல்தான். கவிஞர் வாலி எழுதிய பாடல் இது.
இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு, தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளி விளக்கு,
ஆண்டவனே உன் பாதங்களை - நான் கண்ணீரில் நீராட்டினேன் இந்த ஓருயிரை நீ வாழ வைக்க இன்று உன்னிடம் கையேந்தினேன்.. முருகையா...
பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும் என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும் உள்ளமது உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்.
மேகங்கள் கண் கலங்கும் மின்னல் வந்து துடிதுடிக்கும் வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல் உன்னுடனே வருகின்றேன் - என் உயிரைத் தருகின்றேன் மன்னன் உயிர் போகாமல்
என்ற வரிகள் ஒவ்வொன்றும் எம்ஜிஆருக்காக, எம்ஜிஆரின் கேரக்டருக்காக, ‘ஒளிவிளக்கு’ படத்தின் கேரக்டருக்காக மட்டுமில்லாமல், எம்ஜிஆரின் இயல்பான குணத்தைக்கொண்டும் எழுதப்பட்டது. பி.சுசீலா, உருகி உருகிப் பாடியிருப்பார். அந்தப் பாடல் கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து, எம்ஜிஆரின் உடல் நலனுக்காக, பூரண குணம் அடைவதற்காக, தமிழகம் முழுவதும் ஒலித்தது. படம் வெளியான போது கூட அந்தளவுக்கு இந்தப் பாடல் முக்கியத்துவம் பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
அப்போது தியேட்டர்களில், கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், முரளி, மோகன் என யார் நடித்த படங்கள் ஓடினாலும், படம் தொடங்குவதற்கு முன்னதாக, ‘ஒளிவிளக்கு’ படத்தின் ‘இறைவா உன் மாளிகையில்’ பாடல் காட்சி, ஒளிபரப்பாகும். மொத்த தியேட்டரும் எம்ஜிஆரைப் பார்த்து கதறியது. கைகூப்பியது. சூடமேற்றப்பட்டு, வேண்டிக்கொண்டது.
தமிழ் சினிமாவில், இப்படியொரு பாடல், ஒரு நடிகரின் திரையிலும் வாழ்விலும் மக்களுடனும் இரண்டறக் கலந்ததென்றால்... அநேகமாக இந்தப் பாடலாகத்தான் இருக்கும்.
‘ஒளிவிளக்கு’ படம் வெளியாகி, 52 ஆண்டுகளாகின்றன. எம்ஜிஆருக்கு நூற்றாண்டு விழாவெல்லாம் கொண்டாடப்பட்டு விட்டது. எம்ஜிஆரின் 200வது ஆண்டுவிழா கொண்டாடுகிற போதும் ‘இறைவா உன் மாளிகையில்’ பாடலும் அங்கம்வகிக்கும்.
https://www.hindutamil.in/news/cinem...-52-years.html
நன்றி: இந்து தமிழ்.........VD.,.........
-
சினிமாத் துறையில் செம்பி நெய்னா காக்காவை தெரியாதவர் யாரும் இருக்க முடியாது, “செம்பி டிரேடர்ஸ் & பப்ளிசிட்டீஸ்” நிறுவனத்தின் மேலாளர்.
எம்.ஜி.ஆர்.அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி புதுக்கட்சி தொடங்க ஆயத்தமானபோது அவர் செய்த முதற் காரியம் என்ன தெரியுமா? அவருக்கு பழக்கமான நண்பர்களிடம் குறிப்பாக மிகநெருக்கமாக பழகிய முஸ்லீம் பிரமுகர்களிடம் நேரடியாகச் சென்று ஆதரவு திரட்டியதுதான். கட்சிக்கு நிதிதிரட்டும் பணியில் அவர்கள் தாராளமாக அள்ளித் தந்தார்கள்.
“கல்வித் தந்தை” என போற்றப்படும் பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்களின் வீட்டிற்கு மக்கள் திலகம் வருகை தந்தபோது, சேனா அனா அவர்களின் துணைவியார் தமிழர் கலாச்சாரப்படி வெற்றிலை பாக்கு ஒரு தட்டையில் கொண்டுவந்து வந்து வாழ்த்தியிருக்கிறார்கள்.
அப்போது இரு வெற்றிலை ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டிருந்ததாம். அதையே ஒரு நல்ல சகுனமாகக் கருதி எம்.ஜி.ஆர். தன் கட்சிக்கு சின்னமாக இரட்டை இலையை பயன்படுத்தினார் என்கிறார்கள்.
சேனா ஆனா குடும்பத்தாருடன் எம்.ஜி.ஆர். – ஜானகி
அதற்கு முன்பு ஒருமுறை எம்.ஜி.ஆர் இவர்கள் வீட்டுக்கு வருகை தந்தபோது அவர்கள் குடும்பத்தில் யாரோ ஒருவர் அவருக்கு ஒரு தொப்பியை அணிவித்திருக்கிறார். இந்த கெட்-அப் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப்போக இதையே தன் Celbrity Image-க்கு நிரந்தரமாக்கிக் கொண்டுள்ளார்.
எம்.ஜி.ஆர். பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கியது ஒரு சிலருக்கு மட்டும்தான். அது அவரின் அன்பின் வெளிப்பாடாகவே நாம் கருத வேண்டும். கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த நடிகர் எம்.கே.ராதா மற்றும் அவருக்கு ரோல் மாடலாக இருந்த ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். அதேபோன்று கையோடு கைசேர்த்து, தலைகுனிந்து பவ்யமுடன் ஆசிபெற்ற அன்பர்களில் குறிப்பிடத்தக்க இருவர். 1. இரண்டாம் முறை பதவியேற்றபோது நீதிபதி மு.மு.இஸ்மாயில், 2. எம்.ஜி.ஆரின் அன்புக்கு பாத்திரமான பி.எஸ்.அப்துல் ரஹ்மான்.
“சிரித்து வாழ வேண்டும் ” படத்தில் எம்.ஜி.ஆர்.
“ஜன்ஜீர்” என்ற இந்திப்படம் தமிழில் “சிரித்து வாழ வேண்டும்” என்ற பெயரில் தயாரிக்கப்பட்டபோது அதில் பிரான் ஏற்று நடித்த முஸ்லீம் பாத்திரத்தில் மக்கள் திலகம் நடித்தார். தன் நண்பருக்கு விசுவாசம் காட்டும் விதத்தில் அந்த பாத்திரத்திற்கு அப்துல் ரஹ்மான் என்ற பெயரை தேர்ந்தெடுத்தார்.
அத்தோடு நிற்கவில்லை. பாடலாசிரியர் புலமைப் பித்தனை அழைத்து தன் நண்பரின் பெயர் வருமாறு பாட்டை அமைக்க உத்தரவிட்டார்.
மெல்லிசை மன்னர் இசையமைக்க, டி.எம்.எஸ். பாட ரசிகர்கள் மனதில் இடம்பெற்ற பாடலிது:
ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்அவனே அப்துல் ரஹ்மானாம்ஆண்டான் இல்லை அடிமை இல்லைஎனக்கு நானே எஜமானாம்
உற்ற நண்பர் ஒருவருக்கு இதைவிட ஒரு அன்பான சமர்ப்பணம் வேறு என்ன செய்ய முடியும்..?
அதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட வரிகள் மறைந்த எம்.ஜி.ஆர். மற்றும் மறைந்த பி.எஸ்.அப்துல் ரஹ்மான் இருவர்களுக்கும் இப்பவும் பொருந்தும்
வந்தான் வாழ்ந்தான் போனான் என்றாஉலகம் நினைக்க வேண்டும் ?சொன்னான் செய்தான் ! என்றே நாளும்ஊரார் சொல்ல வேண்டும் !!!
காலத்தால் அழியாத வரிகள் இவை. Hats-Off to புலமைப் பித்தன்.
“இதயக்கனி” மற்றும் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்திற்கு பொருளாதார உதவி செய்தது பி.எஸ்.ஏ.ரஹ்மான் அவர்கள்தான். கீழைநாடுகளில் அதற்கான தங்கும் வசதி மற்றும் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி போன்றவைகள் பெற்றுத் தந்தது யாசீன் காக்கா அவர்கள். எம்.ஜி.ஆருக்கும் இவர்களுக்கும் இடைத்தரகராக செயல்பட்டவர் “இதயம் பேசுகிறது” மணியன்.
அதற்கு முன்பு, மணியன் ஒவ்வொரு நாடாக சுற்றி வந்து பயணத் தொடர்கதை எழுதுவதற்கு அந்தந்த நாடுகளில் பலவகைகளிலும் உதவி செய்தவர்கள் இந்த கீழக்கரை பிரமுகர்கள். ஆனால் அவரது பயணத் தொடரில் இவர்களைப் பற்றிய குறிப்பு எதையும் மணியன் எழுதி வைத்ததாக எனக்கு நினைவில்லை.
1970-ஆம் ஆண்டில் “உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக “எங்கள் தங்கம்” படம் முடிந்த கையோடு புறப்பட வேண்டியிருந்தது. இங்கு அரசியல் சூழ்நிலையும் அவருக்கு நெருக்கடி கொடுத்தது. “நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். எல்லா ஏற்பாடுகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று யாசீன் காக்கா உறுதியளித்த பின்புதான் எம்.ஜி.ஆருக்கு உற்சாகமே பிறந்தது.
யாசீன் காக்கா, கலைஞர் தன் மகன் மு.க.முத்துவை கதாநாயகனாக நடிக்க வைத்து. முரசொலி செல்வத்தை தயாரிப்பாளராக்கி, “அஞ்சுகம் பிக்சர்ஸ்” என்ற பெயரில் “பிள்ளையோ பிள்ளை” (1972) படத்தை தயாரித்தபோது அதற்கான செலவு மொத்தம் 15 லட்சம்.
பிரபலமாகாத ஒரு புதுமுகத்தை வைத்து எடுக்கும் ஒரு படத்திற்கு யார்தான் தாமாகவே முன்வந்து பண முதலீடு செய்வார்கள்..?
இப்படத்திற்கான செலவை முன்கூட்டியே வழங்கி விநியோக உரிமையை பெற்றது கிரசெண்ட் மூவீஸ், சேது பிலிம்ஸ் டிஸ்டிரிபியூட்டர்ஸ், ராசி அண்ட் கோ இந்த மூன்றும்தான். இந்த மூன்று நிறுவனங்களிலும் யாசீன் காக்கா அவர்கள் பங்குதாரர்களாக இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்தான சர்ச்சையில் துபாய் ETA நிறுவனத்தின் மேலாளர் சலாஹுத்தீன் அவர்களுக்கு இதில் தொடர்பு உள்ளது என்ற புகார் எழுந்தபோது, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா “பிள்ளையோ பிள்ளை” படம் எடுக்கப்பட்ட அந்தக் கால கதையை மறுபடியும் நினைவுபடுத்தி, சூசகமாகச் திமுக தலைவர் கருணாநிதிக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பை 2010-ஆம் ஆண்டு கோவை பொதுக்கூட்டத்திலேயே பகிரங்கமாக அறிவித்தார்.
சர்க்காரியா கமிஷன் விசாரணையின்போது, எத்தனையோ சாட்சிகளில் யாசீன் காக்காவும் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டார். உண்மையே பேசி பழக்கப்பட்ட யாசீன் காக்கா சர்க்காரியா கமிஷன் முன்பு வழங்கிய வாக்குமூலம் இதுதான்.
“சாதாரண சமயமாக இருந்தால், ‘பிள்ளையோ பிள்ளை’ திரைப்படத்திற்கான விநியோக உரிமைகளை வாங்குவதற்கு நான் முன் வந்திருக்கவே மாட்டேன். இருப்பினும், அப்போது சென்னையில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தில் கூட்டுப் பங்குதாரராகவும் இருந்தேன். எனது நிறுவனம் தமிழக அரசுக்காக அண்ணா மேம்பாலம் கட்டும் முக்கிய ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்தது. வேறு சில ஒப்பந்தங்களை நிறைவேற்ற முயன்று கொண்டிருந்தது. அந்த வியாபாரத்தில் குறிப்பிட்ட சில சலுகைகளுக்காக சென்னைக்குத் தெற்கிலுள்ள பகுதிகளுக்கு இத்திரைப்பட விநியோகஸ்தர் உரிமையை வாங்கிக் கொள்ளுமாறு நான் அப்போதைய ஆட்சியாளர்களால் வற்புறுத்தப்பட்டேன். அப்படத்திற்கான விநியோக உரிமையை வாங்கிக் கொண்டு கருணாநிதியை திருப்திப்படுத்துவதைத் தவிர வேறு மாற்று வழியேதும் எனக்கு இல்லை..”
அவரது இந்த வாக்குமூலம் அரசியல் வானில் ஒரு பெரும் பிரளயத்தையே உண்டு பண்ணியது. இச்செய்தி 31.03.2011 அன்று வெளிவந்த குமுதம் ரிப்போர்ட்டர் மற்றும் மாலைமலர் நாளிதழ்கள் வெளியிட்டு மீண்டும் பெரும் பரபரப்பை உண்டு பண்ணின..........SBB.........
-
தமிழக திரை உலக சரித்திரத்தில் பொன்மனச்செம்மல் மக்கள் திலகம் வசூல்பட பேரரசு எம்.ஜி.ஆர். அவர்களின் மிகப்பெரிய சாதனைகளின் தொகுப்புகள்....
ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாதனைகளை தமிழக திரைப்படத் துறையில் பதித்த ஒரே திரையுலக வேந்தன் பொன்மனச்செம்மல்*
எம் .ஜி .ஆர் ஒருவர் மட்டுமே!
போலிகெல்லாம் பல்லக்கில் வந்து சாதனையை படைத்தது என்று கொக்கரிக்கும் பொழுது.*
மக்கள் திலகத்தின் வெற்றி காவியங்களின் சாதனையை வெளியீடுவதில் மட்டற்ற மகிழ்ச்சியாகும்.
**************************************
சென்னை நகர வரலாற்றில்
மக்கள் திலகம் படைத்த முதன் முதல் சாதனையில் வெற்றிக் கொடி நாட்டிய. சரித்திரங்கள்....
**************************************
1) நகரில் நான்கு திரையரங்கில் 100 நாட்களை கடந்து முதன் முறையாக அதிக வசூலை படைத்த முன்னணி பெற்ற காவியம்*
புரட்சி நடிகரின் மதுரை வீரன் ஆகும்.*
திரையரங்குகள் : சித்ரா 105 நாள்,
பிரபாத் 126 நாள்,சரஸ்வதி126 நாள் காமதேனு 105 நாள்
2) சென்னை நகரில் ஆறு திரையரங்குகளில் திரையிடப்பட்ட முதல் காவியம் மக்கள் திலகத்தின் மகாதேவி ஆகும்.
வெலிங்டன் 56 நாள்,*
ஸ்ரீ கிருஷ்ணா 70 நாள்,
உமா 56 நாள், சயானி 42 நாள்,
ராஜகுமாரி 42 நாள், தங்கம் 35 நாள்11) சென்னை அண்ணாசாலையில் வெளியிடப்பட்ட நாடோடி மன்னன் திரைக்காவியம் ....
பாரகன் திரையரங்கில் 133 நாட்கள் (19 வாரங்கள் ) ஒடியப்பின் தொடர்ந்து சன் திரையரங்கில் (11வாரங்கள் ) 77 நாட்கள் ஓடி தொடர்ந்து 30 வாரங்கள்*
(210 நாட்கள்) ஓடி சாதனை பெற்ற திரைப்படமாக திகழ்ந்தது.
12).நாடோடி மன்னன் காவியத்திற்கு பின் 1961ம்*
ஆண்டு வெளியான திருடாதே,*
தாய் சொல்லை தட்டாதே இரண்டு திரைப்படங்களும் பிளாசா திரையரங்கில் 100 காட்சிகள் அரங்கு நிறைந்து ஒரே ஆண்டில் தொடர் சாதனையாகும்.
13) சென்னை பிளாசா திரையரங்கில் தொடர்ந்து*வெளியான
மக்கள் திலகத்தின் நான்கு திரைப்படங்கள் சாதனையின் வரிசையில்...*
திருடாதே
105 நாட்கள்.......
சபாஷ் மாப்பிள்ளை
47 நாட்கள்......
நல்லவன் வாழ்வான்
68 நாட்கள்.....
தாய் சொல்லைத் தட்டாதே**
105 நாட்கள்......
இதில் திருடாதே,
தாய் சொல்லை தட்டாதே 100 நாட்கள் ஓடி சாதனையாகும்.
14) மக்கள் திலகம் பவனி வந்த அதாவது தேவர் பிலிம்ஸில் தொடர்ந்து வெளியான தாய்க்குப்பின் தாரம் தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன் சென்னை நகரில்
100 நாட்களை கடந்து வெற்றியை பெற்றது.
15 ) சென்னை நகரில் 1963 ஆம் ஆண்டு வெளியான பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் அவர்களின் 9 திரைப்படங்கள் வெளிவந்து
கிட்டத்தட்ட அதிகமான திரைஅரங்கில் வெளிவந்து அனைத்து திரைப்படங்களும்
50 நாட்களை கடந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
பணத்தோட்டம்
84 நாட்கள்
கொடுத்து வைத்தவள்
71 நாட்கள்
தர்மம் தலைக்காக்கும்
70 நாட்கள்
கலையரசி
50 நாட்கள்
பெரிய இடத்துப்பெண்
101 நாட்கள்
ஆனந்த ஜோதி
56 நாட்கள்
நீதிக்குப்பின் பாசம்
63 நாட்கள்
காஞ்சித்தலைவன்
56 நாட்கள்
பரிசு
77 நாட்கள்...
மேலும் தொடரும்...
உரிமைக்குரல் ராஜூ...
3) நகரில் 3 திரையரங்குகளில் அதிக நாள் ஓடி 3 திரையரங்கு களிலும் 100 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை ஏற்படுத்தி... மதுரை வீரன் வசூலை வென்று முதலிடம் பெற்ற காவியமாக நாடோடி மன்னன் திகழ்ந்தது.
100 நாட்களுக்கு மேல் சாதனை புரிந்த திரையரங்குகள்*
ஸ்ரீ கிருஷ்ணா 147 நாட்கள்,
பாரகன் 133 நாட்கள்,*
உமா 127 நாட்கள்.
4)சென்னை நகரில் அதிக வசூலை பெற்ற நாடோடி மன்னன் திரைப்படத்தின் வசூலை ஏழு ஆண்டுகள் கழித்து எங்க வீட்டு பிள்ளை திரைப்படம் 1965 ல் வெளிவந்து முறியடித்து புதிய சாதனையை படைத்தது.
5).சென்னை நகர மையப்பகுதியான அண்ணா சாலையில் உள்ள சித்ரா திரையரங்கில் மக்கள் திலகத்தின் நான்கு திரைப்படங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு சாதனையாகும்.*
அலிபாபாவும் 40 திருடர்களும்*
92 நாட்கள்.....
மதுரைவீரன் ...105 நாட்கள்
தாய்க்குப்பின் தாரம்*
119 நாட்கள்.....
சக்கரவர்த்தி திருமகள்
84 நாட்கள்.....
*
6) சென்னை காசினோ திரையரங்கில் முதன் முறையாக 100 நாள் கடந்த திரைப்படம்*
புரட்சி நடிகரின் மலைக்கள்ளன் திரைப்படம் ஆகும்.
7) சென்னை மிட்லண்ட் திரையரங்கில் முதன் முறையாக 100 நாள் ஓடிய காவியம்*
மக்கள் திலகத்தின் புதுமைப்பித்தன் ஆகும்.
8) சென்னை சத்யம் திரையரங்கில் முதல் 100 நாள் ஓடிய தமிழ் திரைப்படம் மக்கள் திலகத்தின் இதயக்கனி ஆகும்.
9).சென்னை நகரில் நான்கு காட்சியில் நூறு நாள் ஓடிய முதல் காவியம் என்ற பெருமையை மக்கள் திலகத்தின்.....*
நீதிக்குத்தலைவணங்கு பெற்றது.* அரங்கு : தேவிகலா 106 நாட்கள்
அரங்கு நிறைந்த காட்சிகள் : 266*
10) சென்னை காமதேனு திரையரங்கில் முதன் முறையாக நூறு நாட்கள் ஓடிய திரைப்படமாக மக்கள் திலகத்தின் மதுரை வீரன் சாதனையாகும்.......... Ur.........
-
"தர்மம் தலை காக்கும்" தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்ஜிஆர் நடித்த 5 வது படம். இதுவரை வெளிவந்த நான்கு படங்களும் 100 நாட்களை தாண்டி சிறப்பான வெற்றியை பதிவு செய்ததை தொடர்ந்து வெளியான படம். இதுவும் 100 நாட்களை தாண்டி ஓடியது குறிப்பிடத்தக்கது.
வழக்கம் போல தேவர் பிலிம்ஸின் ஆஸ்தான கலைஞர்களை கொண்டு தயாரிக்கப் பட்ட படம். சில டைரக்டர்கள் பாடுபட்டு உருவாக்கிய கதையை வசனம் பாடல்கள் என மெனக்கெட்டு ராசிக்காக 'ப,பா' வரிசையில் பெரும் நட்சத்திர கூட்டத்துடன் எடுத்த படத்தை எம்ஜிஆர் தேவருடன் இணைந்து
த வரிசையில் 10 முதல் 30 நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்தி 'ப' வரிசை படங்களை தூக்கி தூளியில் தூங்க வைத்து விட்டு 'த' வரிசையை தாயின் ஆசிர்வாதத்தால் வென்ற
கதை தெரிந்து கொள்ளுங்கள். 'ப' வரிசை படம் எடுத்தவர் பரிதாபமாக நின்றார். 'த' வரிசை படம் எடுத்தவர் தரணியில் தலைநிமிர்ந்து நின்றார்.
இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம் எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் ஆற்றல் என்னவென்று?.
படத்தின் ஆரம்ப காட்சி இருளில் தொடங்கி சற்று நேரம் வரை இருளிலேயே செல்வதால் முதலில் மாட்னி ஷோ பார்த்ததால் திரையில் நடப்பது என்னவென்று புரியவில்லை. பின்பு இரவுக்காட்சி பார்த்தவுடன்தான் காட்சிகள் புரிந்தது.
ஆரம்ப காட்சியிலேயே சஸ்பென்ஸ் வைத்து பரபரப்பை ஏற்றி விடுவார் தேவர். எம்ஜிஆர் டாக்டராக வந்தாலும் அவரை
ஜேம்ஸ்பாண்டாக மாற்றி விடுவார்.
அதுவும் படத்தில் வரும் பின்னணி இசை ஆங்கிலப்படத்தின் தழுவல் பிரமிப்பூட்டுவதாக இருக்கும்.
படம் பார்த்த அனைவரும் 'த' வரிசை படங்களை பற்றித்தான் அதிகம் பேசினார்கள். 'ப' வரிசை படுத்து விட்டது. 'த' வரிசை வென்று விட்டது.
'ப' வரிசை படங்கள் ஓட்ட ஸ்டிரெச்சர்
தேவைப்பட்டது. 'த' வரிசை படம் எடுத்தவர் இந்தி படம் எடுக்கும் அளவுக்கு உயரத்துக்கு சென்றதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
அருமையான பாடல்கள்தான் தேவர் எம்ஜிஆர் கூட்டணியின் சிறப்பு. எம்ஜிஆரும் k.v மாமாவுக்கு அதிகம்
முக்கியத்துவம் கொடுப்பவர். "அடிமைப்பெண்" "மாட்டுக்கார வேலன்" போன்ற பெரிய படங்களை மாமாவுக்கு கொடுத்தார்.
ஆனால் மாற்று நடிகரோ தன்னை நம்புவதை விட விஸ்வநாதன், கண்ணதாசன் போன்றவர்களைத்தான் நம்புவார்.
எம்ஜிஆர் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் தன்னை மட்டுமே நம்புவார்.
அடுத்தவர் உழைப்பிலே தன்னை பெரிதாக காட்டிக் கொள்பவர்கள் மத்தியில் தலைவர் ஒரு தனிப்பிறவி. 'கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்' என்ற
பாடலை வரவழைக்க யாராலும் முடியவில்லை என்பதை உணர்ந்து மருதகாசியிடம் அந்த பாடல் வரிகள் ஒளிந்திருப்பதை தலைவர் கண்டறிந்தார் என்றால் அவருடைய திறமை அடுத்தவர் மனதிற்குள் நுழைந்து அறியும் ஆற்றல் பெற்றது
என்பதை உணர வேண்டும்.
மாற்று நடிகர் கண்ணதாசன் எழுதிய பாடலுக்கு எம் எஸ் வி
அருமையான மெட்டு போட்டு கொடுத்தாலும் அதற்கு உடனே நடிப்பு வரலையாம். உடனே பலவிதமான ஆங்கிலப்படங்களை பார்த்து முடிச்க ஒருவாரம் ஆனவுடன்
அந்த நடிப்பை, நடையை, சிகரெட் ஊதலை காப்பியடித்து நடித்ததாக படித்தேன். இது எப்படி இருக்கு?
இதில் சரோஜாதேவிக்கு இரண்டு தனிப்பாடல்கள். 'அழகான வாழை மரத்தோட்டம்' 'பறவைகளே பறவைகளே எங்கே போறீங்க' இரண்டு பாடலிலும் சற்று கூடுதல் அழகாக தெரிவார். 'தர்மம் தலை காக்கும்' பாடலில் தலைவர் கார் ஓட்டுவதை காணலாம். அந்த பாடலின் இசை மிகவும் அருமை.
மூன்று டூயட் சாங். மூன்றுமே அருமையான பாடல்கள். 'ஹலோ ஹலோ சுகமா'? போனிலே முழு பாடல் காட்சியும். புது முயற்சியில்
கலக்கியிருப்பார்கள்.
'மூடுபனி குளிரெடுத்து' 'தொட்டுவிட தொட்டுவிட தொடரும்' எல்லாமே தலைவரை தொட்டு விட்டால் அதிர்ஷ்டம் தொடரத்தானே செய்யும்.
ஒரு தனிப்பாடல் 'ஒருவன் மனது ஒன்பதடா' அதுவும் மனித மனங்களை பற்றி அமைந்த தத்துவப்பாடல். க்ளைமாக்ஸில் ட்விஸ்ட் என படம் பார்ப்பவர்களுக்கு
விருந்து படைத்திருந்தார்கள்.
மொத்தத்தில் படத்தை பார்த்த இளைஞர்கள் மீண்டும் மீண்டும் பார்த்தார்கள்..
சென்னையில் சித்ரா பிரபாத் சரஸ்வதியில் வெளியாகி மூன்றிலும் 70 நாட்கள் ஓடியது. கோவை ராயலில் 86 நாட்களும் சேலம் நியூசினிமாவில் 84 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது. தமிழகத்தின் பல இடங்களில் 50 நாட்களை கடந்து வெற்றி பெற்றது. ஆனால் இலங்கை கொட்டாஞ்சேனை கெயிட்டியில் 100 நாட்கள் ஓடி இலங்கை தலைவரின் வெற்றிச்சலங்கை என்பதை நிரூபித்தது..........ks...
-
நவம்பர் 1976
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த '' ஊருக்கு உழைப்பவன்'' 12.11.1976 அன்று திரைக்கு வந்தது . சென்னை நகரில் பைலட் , மகாராணி , அபிராமி , கமலா திரை அரங்கில் வெளியானது . சென்சார் பிடியில் இப் படத்தில் இடம் பெற்ற எம்ஜிஆரின் ஹெலிகாப்டர் சண்டை காட்சிகள் , மற்றும் இந்தி ஸ்டண்ட் நடிகர் ஷெட்டியுடன் மோதும் அனல் பறக்கும் காட்சிகள் வெட்டப்பட்டன . இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்கள் .
இந்த நிலையில் யாருமே எதிர்ப்பாராத வண்ணம் மக்கள் திலகம் எம்ஜிஆர் சென்னை நகரில் மேற்கண்ட 4 திரை அரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் அமர்ந்தது சில நிமிடங்கள் படத்தை பார்த்து விட்டு சென்றார் . ரசிகர்கள் அனைவரும் தங்களுடன் எம்ஜிஆர் படத்தை பார்த்ததை மிகவும் பெருமையாக கருதினார்கள் ............vd...
-
தலைவரே நீங்க வேறு லெவல்...இனி ஒருவரை எங்கே காண்போம் இது போல படிப்பினை திரையில் சொல்ல..வாழ்க உங்கள் புகழ்...நன்றி.
இதை போல கருத்து உள்ள பாடலை எங்கே இனி தேட...
அவர்போல முதல்வர் கனவில் மிதக்கும் பலர் வேறு பணம் தேடி சின்ன திரை தேடி அலையும் காலம் இது.
ஒரே பிக்பாஸ்..மாஸ்டர் எந்திரன் இந்திரன் எல்லாம் என்றும் இவரே..வேறு பக்கம் தேடி வீணாக போகவேண்டாம்..
நீங்கள் நடிக்கும் வரை எங்களுக்கு கவலை இல்லை ரசிப்போம்.
இவர் இடத்தை பிடிக்க நினைக்கும் போது உணர்வுகள் கொண்டு நியாயம் கேட்போம். இது சரியா என்று.
முடிந்தால் தலைவன் ஆகுங்கள்..இருந்தால் நீங்கள் இருந்தால் தொண்டர் ஆகிறோம்.
1967 இல் தலைவர் படத்தில் பாட்டு இது 93 வது படம் அவருக்கு. 53 வருடங்கள் முன்பு...
இதை போல கருத்து சொல்லும் பாடல்கள் உங்கள் படங்களில் வந்ததா சகோஸ்....Mn...
-
எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படம் 1965ம் ஆண்டில் 7 திரையரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடி அதுவரை வெளியான எல்லா படங்களின் வசூலையும் தூக்கியடித்து துவம்சம் செய்தது. மக்கள் திலகம் திரையுலகில் இருந்தவரை எங்க வீட்டு பிள்ளையின் 7 தியேட்டர் வெள்ளிவிழாவை எந்த நடிகரின் படமும் முறியடிக்கவில்லை.
கோழை ராமுவாகவும் வீரமிக்க இளங்கோவாகவும் படத்தில் மக்கள் திலகம் இரண்டு வெவ்வேறு மனிதர்களாகவே வாழ்ந்திருப்பார். ராமுவுக்கு சரோஜாதேவியை திருமணம் பேசி முடிக்க ரங்காராவ் வீட்டுக்கு நம்பியார் வருவார். மாப்பிள்ளை பற்றிய கேள்விகளுக்கு ‘ பட்டம்- ஜமீன்தார்’, ‘இஷ்டம்-என் இஷ்டம்’ என்று கேள்விகளுக்கு நம்பியார் பதில் சொல்வார். மாப்பிள்ளை என்ன கலர்? என்ற கேள்விக்கு, ‘ரோஸ் கலந்த சிகப்பு’ என்று பதிலளிப்பார்.
நீங்களே சொல்லுங்க... இந்த நிறத்தை குறிப்பிட்டு வேறு எந்த நடிகருக்காவது ஒரு வசனகர்த்தா வசனம் எழுதமுடியுமா?
ரோஜா நிறத் தலைவரின் அழகைப் பாருங்கள்.......... Swamy.........
-
இந்த பாடலை எழுதியவர் யார் ?
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்....
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்....
நீதிக்கு இது ஒரு போராட்டம் – இதை
நிச்சயம் உலகம் பாராட்டும்...... (வெற்றி)
வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை,
இல்லாமல் மாறும் ஒரு தேதி – அன்று,
இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ,
இந்நாட்டில் மலரும் சம நீதி – நம்மை
ஏய்ப்பவர் கையில் அதிகாரம்,
இருந்திடும் என்றும் கதை மாறும்
ஆற்றலும் அறிவும்
நன்மையை வளர்க்க,
இயற்கை தந்த பரிசாகும் – அதில்
நாட்டினைக் கெடுத்து,
நன்மையை அழிக்க
நினைத்தால், எவர்க்கும் அழிவாகும்.
நல்லதை வளர்ப்பது அறிவாற்றல்,
அல்லதை நினைப்பது அழிவாற்றல்.
‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் டைடில் பாடல் இது.
இந்தப் பாடலை எழுதியவர் புலவர் புலமைப்பித்தனாய் இருந்தாலும், பட பெயர் பட்டியலில் பாடலாசிரியர் வேதா என்று வெளிவந்தது. அந்த பாடலுக்கான ஊதியமும் அவருக்கே கொடுக்கப்பட்டது!
உரிய நேரத்தில் பாடலை வேதா எழுதித் தராதால், எம்.ஜி.ஆர். வேண்டுகோளின்படி புலமைப்பித்தன்
பாடலை எழுதித்தந்து வேதாவின் பெயரை டைட்டிலில் இடம் பெறச்செய்து
ஒத்துழைத்தார். இந்த விளக்க விபரம்
புலவர் கூறி 'இதயக்கனி' இதழில்
இடம் பெற்றது. 'இதயக்கனி' நடத்திய
விழா மேடையிலும் தெரிவித்தார்.
(திருத்தப்பட்ட மறு பதிவு)
‘#இதயக்கனி’.எஸ்.விஜயன்.........
-
#புரட்சி_தலைவர்
#இதயதெய்வம்
#மக்கள்_திலகம்
#பாரத_ரத்னா_டாக்டர்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். #அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய
#வியாழக்கிழமை_காலை_வணக்கம்..
இதயதெய்வம் எம்ஜியார்
தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு மட்டுமின்றி, கேட்காதவர்களுக்கும் அவர்களுடைய நிலையை அறிந்து உதவிகள் செய்யக் கூடியவர். இதற்கு உதாரணமாக எத்தனையோ சம்பவங்கள் உண்டு...
இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் அவ்வளவாக அரங்குகள் கிடையாது. மயிலாப்பூரில் ரசிக ரஞ்சனி சபாவுக்கு சொந்தமான சுந்தரேஸ்வரர் அரங்கு, எழும்பூரில் அரசுக்கு சொந்தமான மியூஸியம் தியேட்டர், வால்டாக்ஸ் சாலையில் அமைந்திருந்த ஒற்றை வாடை தியேட்டர், மாநகராட்சி
அலுவலகத்தை ஒட்டிய வி.பி.ஹால், அண்ணா மலை மன்றம் போன்ற ஒருசில அரங்குகள்தான் இருந்தன.
இந்த அரங்குகளில் நடந்த பல கலை நிகழ்ச்சிகளுக்கு எம்.ஜி.ஆர். வருகை தந்து தலைமை தாங்கியிருக்கிறார். மாநகராட்சி அலுவலகம் அருகே இருந்த வி.பி.ஹாலில் ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர். சென்றார். நிகழ்ச்சி முடிந்து கலைஞர்களை பாராட்டிவிட்டு காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அந்தக்
காலகட்டத்தில் அவர் ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் வசித்து வந்தார். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்துக்கு எதிரே ஒரு ரயில்வே (பூங்கா ரயில் நிலையம்)
கேட் உண்டு. இப்போது அந்த பகுதியில் மேம்பாலம் உள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து ரயில்வே கேட்டைக் கடந்து (சென்னை மத்திய சிறை பின்புறம்) சிந்தாதிரிப்பேட்டை வழியாக ராயப்பேட் டைக்கு எம்.ஜி.ஆர். செல்ல வேண்டும்.
எம்.ஜி.ஆரின் கார் வந்து
கொண்டிருந்தபோது ரயில்வே கேட் மூடப் பட்டிருந்தது. அது திறப்பதற்காக கார் காத்திருந்தது. ரயில்வே கேட் அருகே ஒரு குதிரை லாயம்.
(இன்றும் அந்த குதிரை லாயம் உள்ளது) காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது, சுற்றும்முற்றும் கூர்ந்து கவனித்தபடி இருப்பார். அவர் பார்த்த போது குதிரை லாயம் அருகே சிறு கூட்டம். கூடவே அழுகை சத்தமும் கேட்டது. என்ன வென்று விசாரித்து வருமாறு காரில் இருந்த தனது மேனேஜர் சாமியிடம் எம்.ஜி.ஆர். சொல்ல, அவரும் விசாரித்து வந்தார்.
அங்கிருந்த ஒரு குதிரை
வண்டிக்காரருக்கு சொந்தமான
குதிரை திடீரென இறந்துவிட்டது. வண்டிக்காரரின் குடும்பமே குதிரை சவாரியை நம்பித்தான் இருந்தது. திடீரென குதிரை இறந்த அதிர்ச்சி, துக்கம், இனி பிழைப்புக்கு என்ன செய்வது என்ற கவலை எல்லாம் சேர, அவரது குடும்பமே இறந்த குதிரையின் அருகில் அமர்ந்து கதறியது. அதைவிடக் கொடுமை, அந்தக் குதிரையை அடக்கம் செய்யக்கூட அவர்களிடம் பணம் இல்லை.
இந்த விவரங்களை எம்.ஜி.ஆரிடம் மேனேஜர் சாமி தெரிவித்தார். பொறுமையாகக் கேட்ட எம்.ஜி.ஆர்., ‘‘புதுக் குதிரை வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும்?’’ என்றார். ‘‘600 ரூபாய் தேவைப்படலாம்’’ என்றார் சாமி. ஒரு பொருளின் விலையை கடைக்காரர் அதிகமாக சொன்னால், ‘‘என்னய்யா... யானை விலை, குதிரை விலை சொல்ற?’’ என்ற வசனத்தை முன்பெல்லாம் கேட்டிருப்போம். 50 ஆண்டுகளுக்கு முன் குதிரை விலை 600 ரூபாய் என்பது அதிகம்.
சாமி சொன்னதைக் கேட்ட எம்.ஜி.ஆர்., ‘‘புதுக்குதிரை வாங்கி வந்து வண்டியில் பூட்டி ஓட்ட வேண்டும். இதற்கு சில
நாட்கள் ஆகலாம். அதுவரை அந்த வண்டிக்காரரின் குடும்பம் கஷ்டப்படக் கூடாது. இறந்த குதிரையையும் அடக்கம் செய்ய வேண்டும். எனவே, குதிரை விலையோடு சேர்த்து தேவை யான பணத்தை வண்டிக்காரரிடம் கொடுத்துவிடுங்கள்’’ என்றார். பணத்தோடு சென்ற சாமி, வண்டிக்காரரிடம் விவரங்களைச் சொல்லி பணத்தைக் கொடுத்தார்.
வண்டிக்காரருக்கு இன்ப அதிர்ச்சி.
நம்ப முடியாமல் கூட்டத்தை விலக்கி எம்.ஜி.ஆர். வந்த காரைப் பார்த்தார். காரில் எம்.ஜி.ஆர். இருப்பதை கவனித்துவிட்டு இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட்டபடி, கண் ணீருடன் காரை நோக்கி ஓடிவந்து அப்படியே தரையில் விழுந்து
வணங்கினார். காரில் இருந்து இறங்கிய எம்.ஜி.ஆர்., அவரை தூக்கி ஆறுதல் சொன்னார். ‘‘இறந்த குதிரையை
அடக்கம் செய்துவிட்டு, புதுக் குதிரை வாங்கி தொழிலை கவனியுங்கள்’’ என்றார். அதற்குள், விஷயம் பரவி அங்கு பெரும் கூட்டம் சேர்த்துவிட்டது. அந்த நேரத்தில், ரயில்வே கேட் திறக்கப்பட, மக்களைப் பார்த்து கையசைத்து விடைபெற்றபடி எம்.ஜி.ஆர். புறப்பட்டார்.
அந்தக் குதிரை வண்டிக்காரர் நன்றி மறக்காதவர். அடுத்த சில நாட்களில் ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டுக்கு புதிய குதிரை பூட்டிய வண்டியை ஓட்டிக் கொண்டு வந்துவிட்டார். எம்.ஜி.ஆரை சந்தித்து அவரது காலில் விழுந்து நன்றி சொன்னார். அவரை வாழ்த்தி குதிரையையும் பார்த்து மகிழ்ச்சியுடன் அதைத் தட்டிக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.!
‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் ஜெயிலர் ராஜன் என்ற பாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்திருப்பார். கொடிய குற்றங்கள் செய்த சிறைக் கைதிகள் 6 பேரை தனது பொறுப்பில் அழைத்துவந்து, அவர்களோடு தானும் வாழ்ந்து கைதிகளை திருத்தும் முயற்சியில் ஈடுபடுவார். குற்றவாளிகளில் ஒருவராக நடிக்கும் ஆர்.எஸ். மனோகர், கதைப்படி தனது மனைவியை கொன்றுவிட்டதால் சிறை தண்டனை அடைந்திருப்பார். அவரைப் பார்க்க மனோகரின் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவரது தாயார் வருவார்.
தனது தள்ளாத வயதில், வீடுகளில் வேலைசெய்து குழந்தைகளைக் காப்பாற்றி வருவதாகவும் தானும் இறந்துவிட்டால் இந்தக் குழந்தைகளின் கதி என்ன என்று மனோகரிடம் கூறி அவரது தாயார் கலங்குவார். என்ன செய்வதென்று புரியாமல் மனோகரும் கண் கலங்கும் கட்டம் பார்ப்பவர் மனதை உருக்கும்.
இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர்., இரு குழந்தைகளையும் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறுவார். அந்தத் தாய், நன்றியும் மகிழ்ச்சியும் போட்டிபோட, உணர்ச்சிப் பெருக்கோடு எம்.ஜி.ஆரைப் பார்த்துச் சொல்வார்…
‘‘#இந்த_உலகத்துலே_ஏழைங்களோட #கஷ்டத்தைப்_புரிஞ்சவங்க_உன்னை #மாதிரி_வேற_யாரும்_இல்லப்பா!’’
எம்.ஜி.ஆர். குதிரையேற்றம் அறிந்தவர். மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரமும் குதிரை சவாரியில் விருப்பம் உள்ளவர். பல குதிரைகளை வளர்த்து வந்தார். மாடர்ன் தியேட்டர்ஸின் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் குதிரை சவாரி காட்சியில் எம்.ஜி.ஆர். ஓட்டியது, டி.ஆர். சுந்தரத்துக்கு சொந்தமான குதிரை....
அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு.........
-
#புர*ட்சித்த*லைவ*ரின் வ*ழித்தோன்ற*ல்க*ள்...
‘கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும்..’ -எம்.ஜி.ஆர். சொன்னதை செய்யும் அமைச்சர்கள்..
‘வாழும் கர்ணன்’ என, அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரைப் புகழ்ந்து மதுரையில் போஸ்டர் ஒட்டியிருந்தனர். காரணம் – மதுரை மாவட்டத்தில், கரோனா நோய்க் காலத்தில், மாநகர், புறநகர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கு, 68 நாட்களாக, தினமும் மூன்று வேளை உணவளித்து வருகிறாராம்.
அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும் அப்படித்தான்! சொந்த நிதியிலிருந்து, வறுமையில் வாடும் அ.தி.மு.க நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, தொடர்ந்து லட்ச லட்சமாக வழங்கி வருகிறார். இதன் நீட்சியாக, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும், தலைமைக் கழகப் பேச்சாளர்களான சிவகாசி தீப்பொறி சின்னத்தம்பி, அருப்புக்கோட்டை சரவெடி சம்ஸ்கனி, விருதுநகர் இளந்தளிர் பழனிகுமார், சங்கரன்கோவில் சங்கை கணபதி, தீக்கனல் லட்சுமணன் ஆகியோருக்கு, தனது சொந்த நிதியிலிருந்து, தலா ரூ1 லட்சம் வீதம், மொத்தம் ரூ.5 லட்சம் நிதி வழங்கியிருக்கிறார்.
‘கட்சி நிர்வாகிகளோ, தொண்டர்களோ, பொதுமக்களோ, எத்தனை பேருக்குத்தான், இப்படி நிதி வழங்கி உதவிட முடியும்? கஷ்டப்படும் மக்கள் எங்கெங்கும் இருக்கிறார்களே? இது தேர்தல் நேரத்து அரசியல் என்றும் விமர்சிக்கப்படுகிறதே?’ என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பிடம் கேட்டோம்.
“பத்து வருடங்களுக்கு முன், அவர் அமைச்சராவதற்கு முன்பிருந்தே, நலிந்தோருக்கு உதவத்தானே செய்கிறார். தேர்தல் நேரத்து அரசியலென்றால், எதிர்க்கட்சிகளும், தாராளமாக இதைச் செய்ய வேண்டியதுதானே? யார் செய்தால் என்ன? எளியோருக்கு உதவி போய்ச் சேர்ந்தால், மகிழ்ச்சிதானே!
புரட்சித்தலைவரின் பேட்டி ஒன்றை ராஜேந்திரபாலாஜி அடிக்கடி நினைவுகூர்வார். எம்.ஜி.ஆரை அப்போது பேட்டி கண்டபோது, ‘உங்களைப் போல மற்ற நடிகர்கள் ஏழைகளுக்கு வாரி வழங்குவது இல்லையே?’ என்பதுதான் கேள்வி. அதற்கு எம்.ஜி.ஆர். “வாரியெல்லாம் நான் வழங்குவது இல்லை. தேவைகளைப் பார்த்துக் கொடுக்கிறேன். அதிலும், உதவி கேட்ட எல்லோருக்கும் செய்ய முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. மற்ற நடிகர்கள் செய்யவில்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அவரவர் வசதிக்கேற்ப கொடுத்துக்கொண்டுதான் இருப்பார்கள். வெளியே தெரியாமல் இருக்கலாம். கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் அவர்களுக்குத் தெரியாமலா இருக்கும்?” என்று பேட்டி கண்டவரையே திருப்பிக் கேட்டார்.
‘இருப்பதையெல்லாம் கொடுத்துவிட்டால் என்னாவது? உங்களுக்குத்தானே இழப்பு? எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையே இல்லையா?’ என்று அமைச்சரிடம் உரிமையுடன் கேட்பவர்கள் உண்டு. அதற்கு அவர் ‘இழப்பா? எனக்கா? கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும், கொடுப்பதைவிட பல மடங்கு திரும்பக் கிடைக்கிறதே?’ என அன்று எம்.ஜி.ஆர். சொன்னதை ‘ரிபீட்’ செய்வார்.
ராஜேந்திரபாலாஜி பாசக்காரர் என்பது பலருக்கும் தெரியாது. தொகுதிக்கு வந்துவிட்டால், காலை மற்றும் இரவு உணவை அம்மா கையால்தான் சாப்பிடுவார். தற்போது, அவருடைய தந்தை தவசிலிங்கமும், தாயார் கிருஷ்ணம்மாளும், கரோனா தொற்றுக்கு ஆளாகி, மதுரையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதனால், அவர் வீட்டுக்கே செல்வதில்லை. இங்கே தனியார் கெஸ்ட் ஹவுஸில்தான், சாப்பாடு, தூக்கமெல்லாம்.” என்றனர்.
குடும்பப் பாசத்தோடு, தொகுதிப் பாசமும் இருந்துவிட்டால், நல்லதுதானே..
#தலைவ*ர்வ*ழி வ*ந்த* த*ங்க*ங்க*ள் எல்லாம் ஓர்வ*ழி நின்று நேர்வ*ழி சென்றால் நாளை ந*ம*தே! இந்த* நாளும் ந*மதே!.........Babu...
-
தர்மம் தலைகாக்கும் படத்தில் முகமூடி மனிதன் எம்.ஆர்.ராதா என்றே காட்டியிருப்பார்கள். கடைசியில் ட்விஸ்ட் எதிர்பாராதது. முகமூடி மனிதன் வரும் காட்சிகளில் திகிலூட்டும் பின்னணி இசை அருமை. மக்கள் திலகம் டாக்டராக அற்புதமாக நடித்திருப்பார். அவரது உடல்மொழி இயற்கையாக இருக்கும். மக்கள் திலகத்தை நோட்டம் விடுவதற்காக கையில் வலி என்று சின்னப்பா தேவர் வருவார். வேறொருவரை மக்கள் திலகம் பரிசோதிக்கும்போதே கதவை திறந்து வலி.. வலி. என்றபடி மக்கள் திலகத்தை நோட்டமிடுவார். அவரை வெளியே காத்திருக்குமாறு கூறி அவரது முறை வந்ததும் கம்பவுண்டரிடம் மக்கள் திலகம், ‘அந்த கைவலிக்காரரை வரச் சொல்லுங்க’ என்று ரொம்ப கேஷூவலாகச் சொல்லிவிட்டு, அவர் வரும்வரை தன் கையில் உள்ள பேனாவை ஸ்டைலாக பார்த்து ஆராய்ந்தபடி இருப்பார்.
அந்த சில விநாடிகளில் சுவற்றை வெறித்துப் பார்த்தபடியோ, கேமராவைப் பார்த்தபடியோவா இருக்க முடியும்? எதிரே வேறு ஆளும் இல்லை. எப்படி ரியாக்ட் செய்ய முடியும்? அந்த விநாடிகளில் மக்கள் திலகம் ஒரு டாக்டருக்குரிய மேனரிஸத்தைக் காட்டியிருப்பார். கம்பவுண்டர் வந்து தேவர் அங்கே இல்லை என்று சொன்னதும், மக்கள் திலகத்தின் முகம் .. ஏன்? எதற்காக காண்பிக்காமலேயே போய்விட்டார்? வந்தது யார்? .... என்ற சிந்தனையையும் குழப்பத்தையும் வசனம் இல்லாமலே பிரதிபலிக்கும்.
சிவாஜி கணேசனை வைத்து பீம்சிங் எடுத்த கடைசி படம் பாதுகாப்பு. அதுவும் பா வரிசைதான். அந்தப் படத்தால் பொருளாதார பாதுகாப்பு கிடைக்காமல் நஷ்டமடைந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதோடு சிவாஜி கணேசனை பீம்சிங் தலைமுழுகியது உலகமே அறிந்ததுதான். ... Swamy
-
நடிகர் வி.சி.கணேசன் பிள்ளைகள் பொய்கள் வாரி இரைப்பார்கள். தனிப்பட்ட தங்கள் முகநூலில் புரட்சித் தலைவர் மீது அவதூறாக சொல்வார்கள். அவர்களை முதலில் நிறுத்த சொல்லுங்கள். சி.கணேசன் ரசிகர்கள் பொய் சொல்லுவான்கள் இத்ற்கு ஒரு உதாரணம். ஒரு ஆளு சொன்னதற்கு கோபி பீம்சிங் இன்னிக்கி செருப்பால அடிச்சா மாதிரி பதில் சொல்லிருக்கார். பாகப்பிரிவினை டைரக்டர் படம். சி.கணேசனால் மட்டுமே அந்தப்படம் ஓடவில்லை என்று சொல்லிருக்கார். இந்த கணேசன் ரசிகனுக்கு கொஞ்சம் கூட சினிமா அறிவு கிடையாது. பாகப்பிரிவினை இந்தியில் தோல்வி என்று பொய் சொல்லிருக்கான். அதுக்கு உனக்கு சினிமா வரலாறு தெரியுமா என்று கோபி பீம்சிங் நாக்கை பிடுங்கறா மாதிரி கேட்டிருக்கார்..........Feedbacks @fb.,
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*22/09/20 அன்று அளித்த*தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு புன்னகை என்பது*தொற்றிக் கொள்கிற நல்ல ஒரு உபாயம் என்பதை*மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் வாழ்க்கையில்*கற்று*கொடுத்திருந்தார் .இந்தி நடிகர்*திலீப்குமார் எம்.ஜி.ஆரின்*புன்னகை பல கோடி*அளவிற்கு*மதிப்புள்ளது என்று கருத்து*தெரிவித்துள்ளார் .தன்னுடைய திரைப்படங்களில் அதிகபட்சமாக சோக*காட்சிகள் , மன*அழுத்தம் ,துயரம் ,அழுகை, மன வருத்தம் தரும்*காட்சிகளை முடிந்த*அளவிற்கு*தவிர்த்து ,திரைப்படங்களை காண வருபவர்கள்அனைவரும்* எந்த காரணத்தை முன்னிட்டும் இந்த பாதிப்புகளை*அடைய கூடாது*என்பதால்* ஒவ்வொரு நொடியும்**திரைக்கதையை*அமைப்பதில்* முழு கவனம்*செலுத்தி*வந்தார்*.அதனால்தான் அவரது படங்களில் சோக முத்திரை இருக்காது .அதே சமயத்தில் மக்களின்*மனதில்*ஆழமாக*சில கருத்துக்களை*பதிய செய்தார் . அதாவது நீங்கள் கடுமையாக உழைத்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் .நீங்கள் நல்லவராக இருந்தால்*உங்களுக்கு வெற்றி என்பது*எப்போதும் சாத்தியம்*.* ஊருக்கு*உதவிகள்*, நன்மைகள் செய்தால் வாழ்வில்*உயர்வு பெறலாம்*என்ற படிப்பினைகள், பாடங்களை*மட்டுமே*தன் படங்களில் விதைத்திருந்தார் .*
குறிப்பாக*ஆண்டிபட்டியில் இருந்து திருமதி வசந்தி*அவர்கள் பேசினார்களே ,என்னுடைய* மரணத்தருவாயில் இருந்து காப்பாற்றிய பாடல்கள்*எம்.ஜி.ஆருடையது* என்று ,அப்படியான பாடல்களை* பலருக்கும் உருவாக்கி தந்தவர் எம்.ஜி.ஆர். என்றால் அவருக்கு*இசை ஞானம் இருந்தது . அவருக்கு*மொழி ஞானம் இருந்தது ,அவருக்கு*கர்நாடக சங்கீதம் ,படத்தொகுப்பு ,காமிரா*இயக்கம், தொழில்நுட்பம் ,மேல் நாட்டு இசை, நடிப்பு , இயக்கம், திரைக்கதை அமைப்பு, வசனங்கள் அமைப்பு , பாடல்கள்*தேர்வு செய்வது*,அவற்றை*திருத்துவது*என்று எல்லா*விஷயங்களிலும்,நுட்பங்களிலும்* கைதேர்ந்தவர் .என்பதால் திரைப்பட*துறையை அவர் பெரிதும்**நேசித்தார் அதில் சாதித்தார் .
திரைப்படத்துறையை எந்த அளவிற்கு*எம்.ஜி.ஆர்.நேசித்தார் என்பதற்கு ஒரு உதாரணம் கூறலாம் .அடிமைப்பெண் படத்திற்காக கிளைமாக்ஸ் காட்சியில் சிங்கத்துடன் மோதும்*காட்சியை*படம் பிடிக்க சத்யா*ஸ்டுடியோவில் ஒரு மரணக்கிணறு போல ஒருஅரங்கம்* வடிவமைக்கப்பட்டது .கிட்டத்தட்ட ஒருவார*காலமாக*படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அந்த கால கட்டத்தில்தான் பேரறிஞர் அண்ணா*மறைந்த*பின் அடுத்த தமிழக*முதல்வர்* யாராக இருக்க கூடும்*என்ற யூகம்,விவாதம் ஆங்காங்கே* பரவிக்கொண்டிருந்தது* அதைப்பற்றி அனைவரும் தீவிரமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் இந்த விஷயத்தில் எம்.ஜி.ஆரின்*முடிவு என்னவாக இருக்கும்*என்பதில்*பலரும்*தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர் .குறிப்பாக*சத்யா ஸ்டுடியோவில் தொழிலாளர்களும் இது குறித்து*தீவிரமாக பேசி கொண்டிருந்தார்கள் .எம்.ஜி.ஆர். சிங்கத்துடன் மோதும் காட்சிகள் பரபரப்பாக எடுத்து கொண்டிருந்த நேரம் ,எம்.ஜி.ஆர்.தன் உதவியாளரிடம்*இன்று மதியம் நாம் உணவருந்திய பின் ,மாலை 4 மணியளவில் கலைஞர் கருணாநிதி அவர்கள் வர உள்ளார் . அவருடன் வருபவர்களை ஸ்டுடியோவில் தங்குமிடத்தில் இருக்க வைத்து கருணாநிதி அவர்களை மட்டும் இந்த மரணக்கிணறு க்கு*அனுப்பி வைக்க சொன்னார் .வேறு யாரையும்*கண்டிப்பாக அனுப்ப கூடாது*என்று உத்தரவிட்டார் .* சத்யா ஸ்டூடியோ மேலாளர் திரு.பத்மநாபன் கருணாநிதியை மட்டும் மரண கிணறு அரங்கத்திற்கு அழைத்து செல்கிறார் . கருணாநிதியை பார்த்ததும்*எம்.ஜி.ஆர். கீழே இறங்கி வாருங்கள் என்கிறார் .கருணாநிதி நான் இதற்குள் இறங்கி வரவேண்டுமா என்கிறார் .பத்மநாபன் கருணாநிதியிடம் நீங்கள் கீழே இறங்கி*போங்கள்* அப்போதுதான்*நீங்கள் நல்ல முடிவோடு*மேலே வர முடியும்*.உங்களை*ஏற்றிவிடத்தான் உங்கள் நண்பர் எம்.ஜி.ஆர். காத்திருக்கிறார் என்றார்*.கருணாநிதி கீழே சென்றதும் எம்.ஜி.ஆருடன் ரகசிய ஆலோசனை நடத்தினார் .அந்த வார்த்தைகளின் ரகசியங்கள் எம்.ஜி.ஆர். கருணாநிதி ,சிங்கம்*ஆகிய மூவருக்கு*மட்டுமே தெரிந்தவை*.மேலே இருந்த*பத்மநாபனுக்கு* *கூட*தெரியாது .ஆனால் பேச்சு வார்த்தை முடிந்து மேலே வந்தபின் கருணாநிதி தமிழகத்தின் அடுத்த முதல்வராக அறிவிக்கப்பட்டார் . ஆகவே, எந்த தீர்மானம் ,எந்த முடிவு எடுப்பதாக* இருந்தாலும் ,எங்கு, எப்படி யாருடன்*பேசுவது*என்கிற*பண்பாடு, பழக்கம் , அனுகுமுறை*எல்லாம் எம்.ஜி.ஆருக்கு*கை*தேர்ந்த விஷயங்கள் .
திரு. கா.லியாகத்*அலிகானுடன் திரு.துரை பாரதி*பேட்டி*
------------------------------------------------------------------------------------------
இன்றைக்கும்*எம்.ஜி.ஆரின் வாக்கு வங்கி என்பது*தமிழகத்தில் பல்வேறு கட்சிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது .அது எப்படி சாத்தியம்*.மேலும் தி.மு.க. வின் முரசொலியில் திரு.செல்வம்*என்பவர் இன்றைக்கும் எம்.ஜி.ஆரை*பற்றி கேலி*சித்திரங்கள், கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதி வருகிறார்*அதுபற்றி உங்கள் கருத்து என்னஎன்று** திரு.துரை பாரதி கேட்க ,பின்வருமாறு திரு.லியாகத் அலிகான்*பேசினார் .
இதுபற்றி*விவரங்கள் அறிந்தபோது எனக்கு*முரசொலி செல்வம் மீது கோபம்தான் வந்தது . ஏனென்றால் எம்.ஜி.ஆர். வளர்த்த கட்சி*தி.மு.க.*,அவரால்தான் கட்சி*தமிழகத்தில் பிரபலம் ஆனது என்று பேரறிஞர் அண்ணாவே*பல மேடைகளில் குறிப்பிட்டு பேசியுள்ளார் .தி.மு.க. வெற்றி பெற்றதும் வெற்றி மாலையை அவருக்கு சூட்ட வரும்போது*இந்த மாலைக்கு சொந்தக்காரர் மருத்துவமனையில் உள்ளார்* அவருக்கு*போய் சூட்டுங்கள் என்றார்*.மந்திரிசபை பட்டியல் தயார் ஆனதும்*எம்.ஜி.ஆரின் நேரடி பார்வைக்கும் ,ஆலோசனைக்கும் அனுப்பி வைத்தவர்*அண்ணா . தி.மு.க.மாநில மாநாட்டை*ஒருமுறை எம்.ஜி.ஆர். தலைமையில் நடத்திய*பெருந்தமை*வாய்ந்த தலைவர் பேரறிஞர் அண்ணா .இப்படி தி.மு.க.விற்காக உழைத்த*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை இவர்கள் விமர்சிப்பது ஏற்கத்தக்கது அல்ல .முரசொலி செல்வம்*அண்ணா*மறைந்தபோது அமரர் அண்ணா என்று பத்திரிகைகளில் எழுதினார் .அனைவரும் இதுசரியா என்று கேள்வி எழுப்பினார்கள் .* அமரர் என்றால் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம் . அண்ணா*அவர்கள் என் இதயத்தில் மட்டும் அல்லாமல் தமிழர்கள் இதயங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற அர்த்தத்தில் தான் எழுதுவதாக கூறினார் . அதுபோலத்தான் எம்.ஜி.ஆர். அவர்களை இன்றைக்கும் தமிழர்கள் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று அனைவரும் கருதுகிறார்கள் ஜெயலலிதா அவர்கள், கருணாநிதி அவர்கள் எல்லாம் மறந்துவிட்டார்கள் அவர்களும் அமரர்கள்தான் .அவர்களை கேலியாக, கிண்டலாக செய்யவில்லை .ஆனால் காழ்ப்புணர்ச்சி*காரணமாக, இன்னும் காலம் கடந்து எம்.ஜி.ஆர். அவர்கள் மறைந்தும் மறையாமல்*மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் , அவருடைய வாக்கு வங்கியை அசைக்க முடியவில்லை*என்கிற காரணத்தால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் நடைபெற்ற சில* குறைபாடுகளை சுட்டி காட்டி ,ஏன் தி.மு.க.வில் இருந்து விலகினார் , மத்தியில் உள்ள காங்கிரசின் நிர்பந்தம் காரணமாக விலகினார்* என்று சொல்லி*எம்.ஜி.ஆர். அவர்களை கொச்சைப்படுத்தி ஏன் இப்படி எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை .கருணாநிதி காலத்திலும், ஸ்டாலின் காலத்திலும் இப்படி எல்லாமில்லை* நாங்களும் போதிய இடைவெளி விட்டுத்தான் இவர்களிடம் உறவு கொண்டிருந்தோம் . .இப்போது என் இப்படி முரசொலி செல்வம் எழுதுகிறார் என்பது புரியாத புதிர் .இப்போது நான் முரசொலி செல்வத்திற்கு பண்புடன் சொல்லி கொள்வது என்னவென்றால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் எவ்வளவு பெரிய* ஒரு நீதிமான் ,,நேர்மையானவர் , நியாயமானவர் என்பதை நாம் சொல்வதைவிட தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்*.எம்.ஜி.ஆர் அவர்களுக்கு எவ்வளவு பெரிய வாக்கு வங்கி இருக்கிறது என்பதை*அவருக்கு தெரியாத காலகட்டத்தில் ,தனக்கு*இழைத்த அநீதிக்காக, ஏற்பட்ட கோபத்திற்காக ,184 சட்டமன்ற உறுப்பினர்களை தனியொரு மனிதனாக*நின்று திருக்கழுக்குன்றத்திலும், ராயப்பேட்டையிலும் எதிர்த்து ,மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் .*யாராக இருந்தாலும் சரி, இன்று உலகத்திலே எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் ,மிருகபலம்கொண்ட மெஜாரிட்டி** என்று சொல்வார்களே அப்படி பெரும்பான்மை பலம் பொருந்திய ஒரு அரசை, 184 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட அரசை*எதிர்க்க*ஒரு சாதாரண*தைரியம் இருந்தால் போதாது . காங்கிரஸ் கட்சியோ,அல்லது அவர்கள் சொல்வது*போல வேறு யார் பின்புறம் இருந்து இயக்குவதாக இருந்தாலும் அது நடக்கிற காரியம் இல்லை . தனது செல்வாக்கு மங்கிவிடுமேயானால் , தான் செல்லாக்காசு ஆகிவிடுவோம் என்ற நிர்பந்தத்தின் காரணமாக*,தன்னுடைய வாழ்க்கையை*பணயம் வைத்து எதிர்த்து குரல் கொடுத்தார்*நான் ஊழல் குற்றச்சாட்டு சுமத்துகிறேன் .. ஆரம்பத்தில் ஒன்றுமில்லாதவர்கள் எல்லாம் இன்று கோடிக்கணக்கில் ,லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள் இது எப்படி சாத்தியம்*என்று கேள்வி எழுப்பி கணக்கு கேட்டேன்,எப்படி வந்ததுஎன்ன தவறு* *என்று கேட்கக்கூடிய மனோதிடமும், தைரியமும்*படைத்த ஒப்பற்ற தலைவர் இன்றுவரையில்*வேறு எவரும் கிடையாது .இன்றைக்கு ஊழல் குற்றச்சாட்டு பொத்தாம்*பொதுவாக சுமத்தினாலே யாரும் அதை பொருட்படுத்துவது கிடையாது* ஆனால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கேள்வி எழுப்பிய நேரத்திலே*,யாருக்கும்*அந்த மாதிரி மனதைரியம் வரவில்லை .* திரைப்படங்களில் எப்படி வீரனாக நடித்தாரோ ,அதுபோல அரசியலிலும், பொது வாழ்விலும் வீரனாக வளர்ந்து வாழ்ந்து மறைந்தும் மறையாமல்*,வாழ்ந்து கொண்டிருக்கிற**ஒரே தலைவர் புரட்சி தலைவர் அமரர்* எம்.ஜி.ஆர்.தான் .
பழம்பெரும் நடிகர் திருப்பதிசாமி எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் . எம்.ஜி.ஆர் படப்பிடிப்பு* தளங்களில் அசதியாக ஓய்வெடுக்கும் நேரங்களில் எம்.ஜி.ஆரின் கால்களை பிடித்து விடுவார் .அவருக்கு உதவியாக கூடவே இருப்பார் .எம்.ஜி.ஆரின் படங்களில் அவர் இல்லாத படங்களே இல்லை என்ற அளவிற்கு*பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார் .ஒருமுறை ஊட்டியில் படப்பிடிப்பில் இருந்த சமயம் இடைவேளையில் உணவருந்திய பிறகு எம்.ஜி.ஆரின் கால்களை*பிடித்து அமுக்கி*கொண்டிருந்தார் .அந்த நேரத்தில் எம்.ஜி.ஆரின் கதை ஆசிரியர் ரவீந்தர் அங்கு வரும்போது ,அவரிடம் திருப்பதிசாமி சைகை மூலம் தான் ஒய்வு*அறைக்கு சென்று வருவதாக*சொல்லி*எம்.ஜி.ஆரின் கால்களை பிடித்து விடுமாறு கூறுகிறார் .* அதன்படி ரவீந்தர் எம்.ஜி.ஆரின் கால்களை பிடித்து விடுகிறார்*.தன் கால்களை பிடிக்கும் கைகளின் வேறுபாட்டை உணர்ந்த எம்.ஜி.ஆர். சட்டென விழித்து பார்க்கிறார் . ரவீந்தரிடம் நீங்கள் இதையெல்லாம் செய்ய கூடாது என்கிறார் எம்.ஜி.ஆர். அப்படி இல்லை ,நான் உங்களின் வளர்ப்பு தானே . உங்களுடன்தானே இருக்கிறேன் .இதை நான் செய்தால் என்ன தவறு என்று கேட்கிறார் ரவீந்தர் .* அப்படியல்ல. தமிழ் மொழியை எழுதும் இந்த கையால்*இந்த வேலைகள் செய்யக்கூடாது .உங்களுக்கு என்று பல்வேறு வேலைகள் உள்ளன . நீங்கள் இந்த வேலையை செய்ய கூடாது என்கிறார் .அப்படி தமிழ் மொழியையும், அதை எழுதுகிறவர் கையையும் நேசித்தவர் எம்.ஜி.ஆர். மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் ...
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம் .
--------------------------------------------------------------------------------
1.சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய் -தாய் சொல்லை தட்டாதே*
2.நான் அளவோடு ரசிப்பவன்* - எங்கள் தங்கம்*
3.எம்.ஜி.ஆர்.சிங்கத்துடன் மோதும் சண்டை காட்சி -அடிமைப்பெண்*
4.திரு.கா.லியாகத் அலிகான் அவர்களின் பேட்டி*
5.அமுத தமிழில் எழுதும் கவிதை -மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்*
-
நினைப்பால்!
நடிப்பால்!
உழைப்பால்!
ஏழைகளுக்காகவே என
முப்பால் கண்டவர் எம் ஜி ஆர்!
எம்.ஜி.ஆர் என்று மூன்று எழுத்து நடிகராக எம்ஜிஆர் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார் என்றால் ஆச்சரியபட வேண்டிய விஷயம் காரணம் இதை வடமாநில நடிகர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.ஒரு முறை வடமாநில திரையுல ஜாம்பவான்களான ராஜேஷ்கன்னாவும் திலீப்குமாரும் கூட எம்ஜிஆர் படங்களை இந்தியில் ரீமேக் செய்கிறோம் அதில் அவரைப் போல நீங்கள் நடிக்க வேண்டும் என்று கேட்டதற்கு எங்களால் எம்ஜிஆர் போல நடிக்க முடியாது என தெரிவித்தனர்.
எம்.ஜி.ஆர் என்றால் நல்ல சுறுசுறுப்புத்தனம், அந்த சிவந்த உதட்டின் ஒரத்தில் எப்பொழுதும் உற்சாக பொருந்திய சிரிப்பு, எந்த நடனத்திற்கும் ஈடுகொடுக்கும் நடனம், சண்டைப் பயிற்சி, மாறாக்கொள்கை,ஏழைகள் மீது கருணை மற்றும் தொழிலாளர்கள் மீது அன்பு கலந்த மரியாதை,தாய் மீது பக்தி, தேசத்தின் மீதும் மக்கள் மீதுமான சேவை ஈடுபாடு போன்ற எம்ஜிஆரின் பாத்திரங்கள் மக்களை வசீகரித்தது. திரையுலகில் எப்படி வேண்டுமானால் நடித்துக் கொள்ளலாம் ஆனால் நிஜவாழ்வில் அவ்வாறு இருப்பது சற்று கடினம் ஆனால் இதில் எம்.ஜி,ஆர் விதிவிலக்கு பல லட்சக்கணக்கான திரைப்படத் தொழிலாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் வாழ வைத்தார் எம்ஜிஆர் என்றால் என்ன சொல்வது திரையில் மட்டும் கதநாயகன் இல்லை நிஜத்திலும் கதாநாயகன் தான் இன்றும் அவருடைய திரைப்படங்கள் மக்களால் விரும்பி பார்க்கப்படுகின்றன.அதிக பெண் ரசிகர்களை கொண்ட நடிகராக அந்தக்காலம் முதல் தற்போது வரை வலம் வருபவர்..........
-
தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவதால் ஏற்படும் அலைச்சல், பண விரயம், போக்குவரத்து சிக்கல் உட்பட மக்களின் பல்வேறு சிரமங்களைக் களையும் வகையில் திருச்சி மாவட்டத்தை 2-வது தலைநகராக்க முதல்வராக இருந்த எம்ஜிஆர் முடிவு செய்தார்.
அதன் தொடக்கமாக திருச்சி நவல்பட்டு அண்ணா நகரில் 1,000 ஏக்கரில் துணை நகரத்தை 1984 செப்.15-ம் தேதி எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது தொடக்கி வைத்தார். மேலும், திருச்சியில் தங்கிப் பணியாற்றும் வகையில் உறையூரில் குடமுருட்டி ஆற்றங்கரையில் எம்ஜிஆருக்கென பங்களாவும் வாங்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் எம்ஜிஆரின் கனவு நிறைவேறவில்லை..........
-
#புரட்சி_தலைவர்
#இதயதெய்வம்
#மக்கள்_திலகம்
#பாரத_ரத்னா_டாக்டர்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். #அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய
#வியாழக்கிழமை_காலை_வணக்கம்..
இதயதெய்வம் எம்ஜியார்
தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு மட்டுமின்றி, கேட்காதவர்களுக்கும் அவர்களுடைய நிலையை அறிந்து உதவிகள் செய்யக் கூடியவர். இதற்கு உதாரணமாக எத்தனையோ சம்பவங்கள் உண்டு...
இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் அவ்வளவாக அரங்குகள் கிடையாது. மயிலாப்பூரில் ரசிக ரஞ்சனி சபாவுக்கு சொந்தமான சுந்தரேஸ்வரர் அரங்கு, எழும்பூரில் அரசுக்கு சொந்தமான மியூஸியம் தியேட்டர், வால்டாக்ஸ் சாலையில் அமைந்திருந்த ஒற்றை வாடை தியேட்டர், மாநகராட்சி
அலுவலகத்தை ஒட்டிய வி.பி.ஹால், அண்ணா மலை மன்றம் போன்ற ஒருசில அரங்குகள்தான் இருந்தன.
இந்த அரங்குகளில் நடந்த பல கலை நிகழ்ச்சிகளுக்கு எம்.ஜி.ஆர். வருகை தந்து தலைமை தாங்கியிருக்கிறார். மாநகராட்சி அலுவலகம் அருகே இருந்த வி.பி.ஹாலில் ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர். சென்றார். நிகழ்ச்சி முடிந்து கலைஞர்களை பாராட்டிவிட்டு காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அந்தக்
காலகட்டத்தில் அவர் ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் வசித்து வந்தார். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்துக்கு எதிரே ஒரு ரயில்வே (பூங்கா ரயில் நிலையம்)
கேட் உண்டு. இப்போது அந்த பகுதியில் மேம்பாலம் உள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து ரயில்வே கேட்டைக் கடந்து (சென்னை மத்திய சிறை பின்புறம்) சிந்தாதிரிப்பேட்டை வழியாக ராயப்பேட் டைக்கு எம்.ஜி.ஆர். செல்ல வேண்டும்.
எம்.ஜி.ஆரின் கார் வந்து
கொண்டிருந்தபோது ரயில்வே கேட் மூடப் பட்டிருந்தது. அது திறப்பதற்காக கார் காத்திருந்தது. ரயில்வே கேட் அருகே ஒரு குதிரை லாயம்.
(இன்றும் அந்த குதிரை லாயம் உள்ளது) காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது, சுற்றும்முற்றும் கூர்ந்து கவனித்தபடி இருப்பார். அவர் பார்த்த போது குதிரை லாயம் அருகே சிறு கூட்டம். கூடவே அழுகை சத்தமும் கேட்டது. என்ன வென்று விசாரித்து வருமாறு காரில் இருந்த தனது மேனேஜர் சாமியிடம் எம்.ஜி.ஆர். சொல்ல, அவரும் விசாரித்து வந்தார்.
அங்கிருந்த ஒரு குதிரை
வண்டிக்காரருக்கு சொந்தமான
குதிரை திடீரென இறந்துவிட்டது. வண்டிக்காரரின் குடும்பமே குதிரை சவாரியை நம்பித்தான் இருந்தது. திடீரென குதிரை இறந்த அதிர்ச்சி, துக்கம், இனி பிழைப்புக்கு என்ன செய்வது என்ற கவலை எல்லாம் சேர, அவரது குடும்பமே இறந்த குதிரையின் அருகில் அமர்ந்து கதறியது. அதைவிடக் கொடுமை, அந்தக் குதிரையை அடக்கம் செய்யக்கூட அவர்களிடம் பணம் இல்லை.
இந்த விவரங்களை எம்.ஜி.ஆரிடம் மேனேஜர் சாமி தெரிவித்தார். பொறுமையாகக் கேட்ட எம்.ஜி.ஆர்., ‘‘புதுக் குதிரை வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும்?’’ என்றார். ‘‘600 ரூபாய் தேவைப்படலாம்’’ என்றார் சாமி. ஒரு பொருளின் விலையை கடைக்காரர் அதிகமாக சொன்னால், ‘‘என்னய்யா... யானை விலை, குதிரை விலை சொல்ற?’’ என்ற வசனத்தை முன்பெல்லாம் கேட்டிருப்போம். 50 ஆண்டுகளுக்கு முன் குதிரை விலை 600 ரூபாய் என்பது அதிகம்.
சாமி சொன்னதைக் கேட்ட எம்.ஜி.ஆர்., ‘‘புதுக்குதிரை வாங்கி வந்து வண்டியில் பூட்டி ஓட்ட வேண்டும். இதற்கு சில
நாட்கள் ஆகலாம். அதுவரை அந்த வண்டிக்காரரின் குடும்பம் கஷ்டப்படக் கூடாது. இறந்த குதிரையையும் அடக்கம் செய்ய வேண்டும். எனவே, குதிரை விலையோடு சேர்த்து தேவை யான பணத்தை வண்டிக்காரரிடம் கொடுத்துவிடுங்கள்’’ என்றார். பணத்தோடு சென்ற சாமி, வண்டிக்காரரிடம் விவரங்களைச் சொல்லி பணத்தைக் கொடுத்தார்.
வண்டிக்காரருக்கு இன்ப அதிர்ச்சி.
நம்ப முடியாமல் கூட்டத்தை விலக்கி எம்.ஜி.ஆர். வந்த காரைப் பார்த்தார். காரில் எம்.ஜி.ஆர். இருப்பதை கவனித்துவிட்டு இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட்டபடி, கண் ணீருடன் காரை நோக்கி ஓடிவந்து அப்படியே தரையில் விழுந்து
வணங்கினார். காரில் இருந்து இறங்கிய எம்.ஜி.ஆர்., அவரை தூக்கி ஆறுதல் சொன்னார். ‘‘இறந்த குதிரையை
அடக்கம் செய்துவிட்டு, புதுக் குதிரை வாங்கி தொழிலை கவனியுங்கள்’’ என்றார். அதற்குள், விஷயம் பரவி அங்கு பெரும் கூட்டம் சேர்த்துவிட்டது. அந்த நேரத்தில், ரயில்வே கேட் திறக்கப்பட, மக்களைப் பார்த்து கையசைத்து விடைபெற்றபடி எம்.ஜி.ஆர். புறப்பட்டார்.
அந்தக் குதிரை வண்டிக்காரர் நன்றி மறக்காதவர். அடுத்த சில நாட்களில் ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டுக்கு புதிய குதிரை பூட்டிய வண்டியை ஓட்டிக் கொண்டு வந்துவிட்டார். எம்.ஜி.ஆரை சந்தித்து அவரது காலில் விழுந்து நன்றி சொன்னார். அவரை வாழ்த்தி குதிரையையும் பார்த்து மகிழ்ச்சியுடன் அதைத் தட்டிக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.!
‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் ஜெயிலர் ராஜன் என்ற பாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்திருப்பார். கொடிய குற்றங்கள் செய்த சிறைக் கைதிகள் 6 பேரை தனது பொறுப்பில் அழைத்துவந்து, அவர்களோடு தானும் வாழ்ந்து கைதிகளை திருத்தும் முயற்சியில் ஈடுபடுவார். குற்றவாளிகளில் ஒருவராக நடிக்கும் ஆர்.எஸ். மனோகர், கதைப்படி தனது மனைவியை கொன்றுவிட்டதால் சிறை தண்டனை அடைந்திருப்பார். அவரைப் பார்க்க மனோகரின் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவரது தாயார் வருவார்.
தனது தள்ளாத வயதில், வீடுகளில் வேலைசெய்து குழந்தைகளைக் காப்பாற்றி வருவதாகவும் தானும் இறந்துவிட்டால் இந்தக் குழந்தைகளின் கதி என்ன என்று மனோகரிடம் கூறி அவரது தாயார் கலங்குவார். என்ன செய்வதென்று புரியாமல் மனோகரும் கண் கலங்கும் கட்டம் பார்ப்பவர் மனதை உருக்கும்.
இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர்., இரு குழந்தைகளையும் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறுவார். அந்தத் தாய், நன்றியும் மகிழ்ச்சியும் போட்டிபோட, உணர்ச்சிப் பெருக்கோடு எம்.ஜி.ஆரைப் பார்த்துச் சொல்வார்…
‘‘#இந்த_உலகத்துலே_ஏழைங்களோட #கஷ்டத்தைப்_புரிஞ்சவங்க_உன்னை #மாதிரி_வேற_யாரும்_இல்லப்பா!’’
எம்.ஜி.ஆர். குதிரையேற்றம் அறிந்தவர். மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரமும் குதிரை சவாரியில் விருப்பம் உள்ளவர். பல குதிரைகளை வளர்த்து வந்தார். மாடர்ன் தியேட்டர்ஸின் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் குதிரை சவாரி காட்சியில் எம்.ஜி.ஆர். ஓட்டியது, டி.ஆர். சுந்தரத்துக்கு சொந்தமான குதிரை....
அன்புடன்
பாபு...
-
வசூல் சக்கரவர்த்தி!!
--------------------------------
எம்.ஜி.ஆருக்கு தமிழ் நாட்டில் வட மாவட்டங்களை விட தென் மாவட்டங்களில் உணர்ச்சி பூர்வ விசுவாசிகள் அதிகம்!
அதிலும்,,மதுரையை மீட்ட வீரனுக்கு அங்கேக் காணப்படுவது விசுவாசிகள் கூட அல்ல--பக்தர்கள்!!
இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்!!
கற்பகம் படத்தின் மூலமாக நமக்கு கே.ஆர்.விஜயாவையும் வாலியையும் தந்தவர்! குடும்பப் படங்களுக்கு ஒரு கோபாலகிருஶ்ணன் என்று பெயர் எடுத்தவர்!
அது,,அவரின் இயக்கத்தில் மலர்ந்த பணமா பாசமா படத்தின் வெற்றி விழா!
பணமா பாசமா?
கே.வி.மகாதேவன்--கண்ணதாசன் கூட்டணியில் எலந்தப் பயம்--எலந்தப் பயம் என்ற ஈடில்லா இலக்கியப் பாடல் இடம் பெற்ற படம்?
அந்தப் பாட்டுக்காகவே படம் ஓடியதோ என்னவோ யார் கண்டது?
மதுரை தங்கம் தியேட்டரில்,,படத்தின் வெற்றிவிழா நடக்கிறது!
கே.எஸ்.ஜி பேசும்போது--இந்தப் படத்தின் வசூல் மூலம் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாக ஜெமினிகணேசன் விளங்குகிறார் என்று குறிப்பிடுகிறார்??
அவர் அப்படிக் குறிப்பிடும்போது,,ரசிகர்கள் குரல் எழுப்பி ஆரவாரம் செய்கிறார்கள்!
நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த கே.எஸ்.ஜிக்கு பயங்கர அதிர்ச்சி??
ஆம்! அவரது கார் மிக நேர்த்தியாக,,தொழில் சுத்தமாக உடைக்கப்பட்டு,,பாகங்கள் ஒரு ஓரமாகக் குவிக்கப்பட்டு இருக்கிறது??
தங்கம் தியேட்டரின் நிர்வாகி,,கே.எஸ்.ஜியிடம் கூறுகிறார்--
சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி என்றால் அது எம்.ஜி.ஆர் ஒருவர் தான்!
நீங்கள் ஜெமினியைக் குறிப்பிட்டு,,அதுவும் இந்தத் தங்கம் தியேட்டரில் அப்படிப் பேசியிருக்கக் கூடாது1
ரசிகர்கள் சங்கேதமாக ஒலி கொடுத்து உங்களை எச்சரித்ததை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை!!
நீங்க தங்கியிருக்கற லாட்ஜுக்கு இப்போது போவது கூட உசிதமில்லை. ஓட்டலையே உடைப்பதற்கு ஒரு கூட்டம் பின்னால் வரும்!1
தியேட்டர் நிர்வாகி சொன்ன ஆலோசனையின் பேரில் ரகசியமாக ஒரு லாரியில் ஏறி,,செங்கல்பட்டில் அப்போது இருந்த அண்ணாதுரையிடம் தஞ்சம் புகுந்து விஷயத்தைச் சொல்ல--
அண்ணாதுரை,,எம்.ஜி.ஆரிடம் அதைப் பக்குவமாகத் தெரிவிக்க--எம்.ஜி.ஆரும்,,கே.எஸ்.ஜியிடம் வருத்தம் தெரிவித்து,,காருக்கான நஷ்ட ஈடைத் தாமே வழங்குகிறார்!
பிறகு ஏன் அண்ணா அப்படி சொல்ல மாட்டார்--
முகத்தைக் காட்டினால் முப்பதாயிரம் ஓட்டு!!!.........vt...
-
#காணாமல் #போனவை
#நம்நாடு திரைப்படத்தில், தான் சேர்மன் ஆக தேர்ந்தெடுக்கப்படும் இந்த காட்சியில் வாத்தியார் மிக சுருக்கமாக, உயர்ந்த கருத்துக்களை கொண்ட வரிகளைப் பேசுவார்.
'உண்மையா சொல்றேன்...!
நீங்க என்னெ தேர்ந்தெடுப்பீங்கன்னு
நான் எதிர்பார்க்கவே இல்ல...
ஆனா, ஒண்ணு மட்டும்
உறுதியா சொல்றேன்...!
என் உயிருள்ளவரை
கொஞ்சங்கூட சுயநலமில்லாம
உங்களுக்காக உழைப்பேன்
இது உறுதி.
மூத்தவங்கெல்லாம்
என்ன வாழ்த்துங்க...
இளையவர்களெல்லாம் எனக்கு
கைகொடுங்க...
இத்தோடு இக்கூட்டம்
கலைகிறது
நன்றி வணக்கம்'
என் மனதில் என்றுமே நிலைத்து நிற்கும் காட்சி... வாத்தியாரின் மிக எளிமையான பேச்சு, கனிவான, சாந்தம் நிறைந்த முகம், மிக எளிய ஆயினும் மிக பொருத்தமான உடுப்பு மற்றும் ஒப்பனை.. ...அத்தோடு வாத்தியார் கும்பிடற ஸ்டைல்...!!!......
-
அண்ணன் spபாலசுப்பிரமணியன் அவர்களின் மறைவிற்கு என் கண்ணீர் அஞ்சலி.
எஸ்.பி.பி.க்காக காத்திருந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஆயிரம் நிலவே வா ரகசியம்
உழைப்பு உயர்வைக் கொடுக்கும். நல்ல நேரம் இருந்தால் உழைப்புக்கேற்ற பலனாக பெயரும் புகழும் பணமும் கிடைக்கும்.
உண்மையான திறமையிருந்தால்தான் உயர்ந்த நிலையைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். இது எல்லாமே பாலுவின் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.
தமிழில் பாட வருவதற்குள் சில தெலுங்கு படங்களுக்காகப் பாடியிருக்கிறார். தமிழில் முதலில் பாடிய பாடல் 'இயற்கையென்னும் இளைய கன்னி' என்ற டூயட்.
இது 'சாந்தி நிலையம்' படத்திற்காக மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் பாடியது. ஆனால் பாலுவை தமிழ்ப் பட உலக ரசிகர்களிடையே பிரபலமாக்கிய பாட்டு ஒன்று உண்டு.
எஸ்.பி.பாலசுப்ரமணியம்: சங்கீத உலகில் ஓர் அத்தியாயம்
அந்தப் பாடல் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை எல்லாரையும் கவர்ந்த பாடல். ஒரே பாடலால் தமிழகம் முழுவதும் தெரிந்த பின்னணி பாடகர் எஸ். பி. பி. ஒருவராகத்தான் இருக்க முடியும். அவருக்கு புகழை வாங்கித் தந்த பாடல் 'ஆயிரம் நிலவே வா' என்று 'அடிமைப் பெண்'ணில் ஒலித்த பாடல்தான்.
'ஆயிரம் நிலவே வா' பாடலை எஸ்.பி.பி. பாடக் காரணமாயிருந்தவர் மக்கள் திலகம் தான். பாலு அந்தப் பாடலைப் பாட வேண்டிய நாளில், நல்ல காய்ச்சலில் படுத்திருந்தார் என்பதை முன்பே சொல்லியிருந்தார்.
பாலு இல்லாமல் கார் திரும்பி வந்ததும், விஷயத்தைப் புரிந்துகொண்ட மக்கள் திலகம், ரிக்கார்டிங்கை ரத்து செய்துவிட்டார்.
இந்த விவரம் பாலுவிற்குத் தெரியாது. தனக்கு பதிலாக வேறு யாரோ ஒருவர் அந்தப் பாட்டைப் பாடியிருப்பார் என்று தான் நினைத்திருந்தார்.
இரண்டு மாதத்திற்குப் பிறகு, மீண்டும் எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் கார் பாலுவை அழைக்க வந்தபோது, பாலுவிற்கு அதை நம்பவே முடியவில்லை.
எஸ்.பி.பாலசுப்ரமணியம்: சங்கீத உலகில் ஓர் அத்தியாயம்
தன்னைப்போல பிரபலமாகாத ஒரு பாடகனுக்காக எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் போன்ற ஒரு பெரிய நிறுவனம் இரண்டு மாதங்கள் காத்திருப்பார்கள் என்பதை பாலுவால் நம்ப முடியவில்லை.
பாடலைப் பாடிய பிறகு மக்கள் திலகத்தைச் சந்தித்து நன்றி சொன்னார். அப்பொழுது மக்கள் திலகம் பாலுவிடம் 'தம்பி என் படத்திலே பாட்டுப் பாடப் போறீங்கன்னு நீங்க எல்லார்கிட்டேயும் சொல்லியிருப்பீங்க. உங்க நண்பர்கள் இந்தப் படத்தில் உங்க பாடலை ஆவலோடு எதிர்பார்த்திருப்பாங்க, உங்களுக்கு பதிலாக வேறு ஒருவரைப் பாடவைத்து உங்களையும், உங்கள் நண்பர்களையும் ஏமாற்ற நான் விரும்பல. அதனால்தான் உங்களுக்காக இந்தப் பாட்டு காத்திருந்தது' என்று கூறி வழியனுப்பினார்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.........ad.,
-
கண்ணீர் அஞ்சலி !!!
------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண் படத்தின்*பாடலான*ஆயிரம் நிலவே*வா பாடல் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆகிய பாடும்*நிலா திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று மறைந்து விட்டார்*என்ற செய்தி அறிந்து*மிகவும் துயரமுற்றேன் .*
அவர் பாடியது*போல அவரின்*தேகம் மறைந்தாலும் உலகெங்கும்**இசையால்*மலர்ந்து கொண்டிருப்பார் .
மறைந்த*திரு.எஸ்.பி.பி.அவர்களின் ஆன்மா சாந்தி அடைய*அவரை*தமிழ் திரை உலகிற்கு*அறிமுகப்படுத்திய*இறைவன் எம்.ஜி.ஆர். அருள் புரியட்டும்*.அன்னாரது பிரிவால்*வாடும்*அவரது*மனைவி, மகன், மகள்,குடும்பத்தினர், உறவினர்கள் ,கோடிக்கணக்கான**அவரது*ரசிகர்கள் அனைவருக்கும் ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்*குழு சார்பில்*ஆழ்ந்த அனுதாபங்களையும் ,இரங்கலையும் தெரிவித்துக்*கொள்கிறேன் .
ஆர். லோகநாதன் .
-
மன்னர் மகள் பார்க்க விரும்பிய நம் மன்னர்.
கதையல்ல நிஜம்..நம் தங்க தலைவரின் அற்புத நடிப்பில் உருவான ஏ.வி.எம். நிறுவனம் தயாரிப்பில் அமைந்த மாபெரும் வெற்றி சித்திரம் அன்பே வா.
தலைவர் நடிப்பில் முற்றிலும் மாறுபட்ட பொழுதுபோக்கு சித்திரம் இது.....சிம்லா மற்றும் காஷ்மீர் பகுதிகளில் கண்ணை கவரும் இடங்களில் படமாக்கப்பட்ட படம்.
படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்த வேளையில் நம் தலைவர்எம்ஜிஆர் அவர்கள் படப்பிடிப்புக்கு காஷ்மீர் வந்து உள்ள செய்தியை வட நாட்டு பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்து எழுத.
செய்தியை படித்த ஒரு நாட்டு மன்னர் மகள் அப்பா நாம் குடும்பத்துடன் சென்று எம்ஜிஆர் அவர்களை சந்தித்து ஒரு புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும் என்று அவர் ஆசையை சொல்ல...
நாட்டுக்கு மன்னர் என்றாலும் வீட்டுக்கு தலைவர் ஆக அவர் உடன் பட்டு அன்பே வா பட தயாரிப்பாளர் வசம் தங்கள் குடும்ப விருப்பம் சொல்ல.
அவரும் மகிழ்ச்சியுடன் சம்மதித்து மன்னர் அவர்களை குடும்பத்துடன் வர சொல்ல..
அவர்கள் வந்த நேரம் படத்தின் முக்கிய பாட்டில் நடனத்தில் நம் மன்னர் அசத்திய பாடல் ஏய்... நாடோடி போகவேண்டும் போக வேண்டும் ஓடோடி என்ற வரலாறு பேசிய அந்த அற்புத பாடல் காட்சி படம் எடுக்கும் நேரம் மன்னர் தன் மனைவி மற்றும் மகளுடன் வர.
முழு பாட்டு பாடல் காட்சிகள் எடுத்து முடியும் வரை காத்து இருந்து பாடல் காட்சிகள் எடுப்பதை பார்த்து இருந்து இடைவேளையில் எடுக்க பட்ட அரங்கில் நேபாள மன்னர் மகேந்திரா அவர்கள் அவர் மனைவி மற்றும் அவர் மகள் மூவரும் தலைவருடன் அந்த பாடல் உடையுடன் எடுக்க பட்ட அரிய படம் நம் குழுவினர் பார்வைக்கு.
மன்னர் குடும்பம் மகிழ்ச்சியுடன் தலைவர் அவர்களுடன் பேசி முடிந்து அவர்கள் வீடு திரும்பும் போது மன்னர் மகள் சொன்ன வார்த்தை அப்பா எம்ஜிஆர் அவர்கள் என்ன அழகு இல்ல என்று.
வாழ்க தலைவர் புகழ்.
என்றும் அவர் புகழ் காப்போம்...உங்களில் ஒருவன்...நன்றி..
தொடரும்...
அந்த கருப்பு டி.ஷர்ட்...அந்த கருப்பு pant இடையில் வெள்ளை பெல்ட்.. என்ன ஒரு அழகு நம் மன்னர் இல்லையா பின்னே.
சில தலைவர் உண்மை நெஞ்சங்கள் பதிவை தவறாக புரிந்து கொள்ள ஒரு விளக்கம்....நாடோடி பாடல் எடுக்க பட்ட அரங்கில் எடுக்க பட்ட புகைப்படம் பதிவில்..
பாடல் காட்சி எங்கு எடுக்க பட்டது...தெரியவில்லை.
ஊட்டியில் உள்ள ஒரு பங்களா என்றா சென்னையில் போட பட்ட அரங்கில் என்றா என்பது தெரியவில்லை.
அப்போது நேபாள மன்னர் குடும்பம் தமிழகம் வந்து இருந்தது தெரியும்..........Mn...
-
புரட்சி தலைவர் mgr......
======================
தேவர், பிள்ளை, முதலியார், செட்டியார், படையாட்சி , கவுண்டர், நாயக்கர், ஐயர், அய்யங்கார் என தங்கள் சாதி அடையாளங்களை பெருமையாக பேசி வந்த தமிழ் சினிமாவில்
(அதிலும் 50 களில் சாதி தீ கொழுந்து விட்டு எரிந்த அந்த கால கட்டத்தில்,)
58 ஆண்டுகளுக்கு முன் 1956 இல் வெளிவந்த "மதுரைவீரன்" திரைப்படத்தில்
நான் சக்கிலியன் என மார்தட்டி சாதி வேறுபாட்டை சாடி நடித்த நடிகர் எம்ஜிஆர். கலைவாணர் ns கிருஷ்ணன் - மதுரம் ஆகியோர் எம்ஜிஆரின் பெற்றோராக நடித்தது இன்னொரு சிறப்பு.
கதைகளிலே தன் கருத்தை வெளியிட இரண்டு நடிகர்களுக்குக் கற்பனை ஓட்டம் உண்டு.
ஒருவர் கலைவாணர். மற்றொருவர் புரட்சி நடிகர்.
இன்றைக்கும் சினிமா பொழுதுபோக்கிற்காகவும், பணம் பண்ணும் தொழிலாகவும் பார்க்கபடுகிறது.
இன்றைக்கும் கூட ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த வாலிப ஹீரோவாக யாரும் நடிப்பதில்லை.
சினிமா என்பது பொழுது போக்கு அம்சம் மட்டுமல்ல. சமூக புரட்சிக்கான ஆயுதம், அதை சரியாக பயன்படுத்தியவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர்.
ஏன் எம்ஜிஆர் மற்ற நடிகரிடம் இருந்து வேறுபடுகிறார். ஆதிக்க சாதிகளின் பெருமை பேசாமல்,
ஒடுக்க பட்ட மக்களின் பிரதிநியாக தன்னை முன்னிலை படுத்தி வர்க்க பேதத்தை சினிமா என்ற ஆயுதத்தின் மூலம் சாடினார்.
சாதித்தும் காட்டினார். மறைந்தும் மக்களின் நெஞ்சங்களில் எம்.ஜி.ஆர். வாழ்கிறார்..........Am...
-
எஸ்.பி.பி.,க்காக காத்திருந்த எம்.ஜி.ஆர்.,
எஸ்.பி.பி.க்கு தமிழில் முதன் முதலில் ஹோட்டல் ரம்பா என்ற படத்தில் பின்னணிப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியுடன் சேர்ந்து பாடும் வாய்ப்பை வழங்கினார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். ஆனால் அந்தப் படம் வெளியாகவில்லை. அதன்பின் சாந்தி நிலையம் படத்தில் ''இயற்கை என்னும் இளைய கன்னி...'' என்ற பாடலை பி.சுசீலாவுடன் இணைந்து பாடினார். ஆனால் இதற்கு முன்னதாக எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப்பெண் படத்தில் இடம் பெற்ற 'ஆயிரம் நிலவே வா' பாடல் முதலில் வெளிவந்தது. இந்த பாடலின் பின்னணியில் ஒரு பெரிய சுவாரஸ்யமே இருக்கிறது.
அடிமைப்பெண் படத்தில் புலமைப்பித்தன் எழுதிய 'ஆயிரம் நிலவே வா' பாடலை எஸ்.பி.பி., பாடுவதாக இருந்தது. ஜெய்ப்பூர் அரண்மனையில் படமாக்க திட்டமிட்டிருந்த நிலையில், எஸ்.பி.பி.,க்கு காய்ச்சல். வேறு பாடகரை வைத்து பாடலை பதிவு செய்யவா என இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர், 'பத்திரிகையில் எம்.ஜி.ஆர்., நிராகரித்த குரல் என எழுதுவர். அது, சகாப்தம் படைக்க போகிற இளைஞனின் வாழ்க்கையை வீணாக்கிவிடும். படப்பிடிப்பை தள்ளி வைக்கிறேன்,' என்றார்.
சில மாதம் கழித்து எஸ்.பி.பி.,யை பாட அழைத்த போது, அவரால் நம்ப முடியவில்லை. பாடலை முடித்ததும் எம்.ஜி.ஆரை சந்தித்து நன்றி கூறினார். அப்போது எம்.ஜி.ஆர்., ''என் படத்தில் பாடுவதாக நண்பர்களிடம் தெரிவித்திருப்பாய். வாய்ப்பு கிடைத்தும் பாடும் வாய்ப்பு தடைபட்டால், நீ ராசியில்லாதவன் என பிறர் கூறத்தொடங்கி விடுவர். நீ வளர வேண்டியவன். உனக்காகவே இப்பாட்டு காத்திருந்தது' என்றார். இப்பாடலை இலங்கை வானொலி மூலம் உலகம் எங்கும் ஒலிக்கச் செய்தார் எம்.ஜி.ஆர்.......... Kannan...
-
"ராஜா" வை "ரிக்ஷாக்காரனு"க்கு போட்டியாக நினைத்து சிவாஜி ரசிகர்கள் மண்ணை கவ்வியதும் சும்மா இருக்கவில்லை. உடனே பாலாஜியின் அடுத்த படமான "நீதி"
"துஷ்மன்" என்ற பெரும் வெற்றி பெற்ற இந்தி படத்தை, தமிழில் சிவாஜியை வைத்து மொழிமாற்றம் செய்தார். அங்கு சில்வர் ஜீபிலி கொண்டாடிய படம், இங்கு ஒரே தியேட்டர் தேவி பாரடைஸில் ஸ்டெச்சர் உதவியுடன் போராடி 100
நாட்கள் ஓட்ட முனைந்தனர்.
என்ன செய்ய, ஸ்டெச்சரில் இருந்த பாடி 99 வது நாளில் கீழே குதித்து உயிரை மாய்த்து கொண்டது. அதையும் அவர்கள் விடவில்லை. "நீதி" 99 வது நாள் விளம்பரத்தை முழு பக்கம் கொடுத்து
மனதை தேற்றிக் கொண்டனர்.
A சென்ட்டரில் மட்டுமே இந்த ஜகஜால வித்தைகள்.மற்ற ஊர்களை எல்லாம் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.
அங்கெல்லாம் இரண்டே வாரங்களில் படத்தை தூக்கி விட்டு வந்த நஷ்டத்தை சமாளிக்க பழைய எம்ஜிஆர் படத்தை போட்டு ஓட்டி இழந்த காசை மீண்டும் எடுப்பார்கள்.
அதனால்தான் அநேக சிவாஜி படங்கள் தமிழகத்தில் 30 பிரிண்ட்கள்தான் போடுவார்கள். நிறைய ஊர்களில் 2 வது வெளியீடாகத்தான் வரும்.
இது தெரிந்தும் சிவாஜி ரசிகர்கள் உதார் விடுவது நகைப்புக்கிடமாக உள்ளது. எம்ஜிஆர் படங்கள் குறைந்தது 40 பிரிண்ட் முதல்
60 பிரிண்ட் வரை
திரையிடுவார்கள். அந்தக் காலத்தில் வெளியான எம்ஜிஆரின் சாதாரண திரைப்படமான "ராஜாதேசிங்கு" கிட்டத்தட்ட 40 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது.
ஆனால் மிகவும் எதிர்பார்த்த 1960 தீபாவளிக்கு வந்த சிவாஜி நடித்த "பாவைவிளக்கு" சுமார் 30 திரையரங்குகளில் தான் வெளியானது. சிவாஜி நடித்த "இல்லறஜோதி" மொத்தம் 21 திரையரங்குகளில்தான் வெளியானது.மொத்தமே இவ்வளவு திரையரங்குகளில் வெளியானால் எப்படி வசூலில் சாதனை செய்ய முடியும்?. ஏனென்றால் மறுவெளியீடு சிவாஜி படத்துக்கு அதிகம் கிடையாது. அதனால் அதிக பிரிண்ட் சிவாஜி படத்துக்கு தேவைப்படாது. தேவையில்லாத சரக்கை யார் வாங்குவார்கள்.
அதனால்தான் எம்ஜிஆருக்கு இங்கு "வசூல் சக்கரவர்த்தி" என்றும் இலங்கையில் "நிர்த்திய சக்கரவர்த்தி" என்ற பெயரையும் விநியோகஸ்தர்கள் கொடுத்தார்கள். "ஒளிவிளக்கு" கிட்டத்தட்ட 60 க்கும் அதிகமான பிரிண்ட்கள் போடப்பட்டன. முதன்முதலாக 1957 லேயே சென்னையில் 5 திரையரங்கில் வெளியான படம் "மகாதேவி". அதன்பிறகு "தாயின் மடியில்" "ரகசிய போலீஸ் 115" "ஒளிவிளக்கு" "நீதிக்கு தலை வணங்கு" முதலான படங்கள் 5 திரையரங்குகளில் வெளியான படங்கள்.
எம்ஜிஆரின் அநேக படங்கள் 4 திரையரங்குகளில் வெளியாகின. ஆனால் சிவாஜிக்கு ஒரு சில படங்கள்தான் 4 திரையரங்குகளில் வெளியாகின. மற்ற படங்கள் எல்லாம் அநேகமாக சாந்தி கிரவுன் புவனேஸ்வரி இல்லை யென்றால் சித்ராவுடன் ஜோடி சேரும் தியேட்டர்களில்தான் வெளிவரும். சென்னையில் மூன்று தியேட்டர்களில்தான் வெளிவரும் ஒரு சில படங்களை தவிர. குறைவான தியேட்டர்களில் வெளியிட்டு ஒரு தியேட்டரிலாவது 100 நாட்கள் ஓட்டி விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பார்கள்.
"புதிய பறவை" "திருவிளையாடல்" "சரஸ்வதி சபதம்" "தங்கப் பதக்கம்" "வசந்த மாளிகை" போன்ற பிரமாண்ட படங்களை மூன்று தியேட்டருக்கு மேல் வெளியிட மாட்டார்கள். ஆனால் தலைவருக்கு "அடிமைப்பெண்" "மா.வேலன்" "உரிமைக்குரல்" "நம்நாடு"
போன்ற பிரமாண்ட படங்களை 4 திரையரங்கில் வெளியிட்டு குறைந்த காலத்தில் நிறைந்த வசூலை தயாரிப்பாளர்கள் பார்த்து விடுவார்கள்.
தலைவர் படங்களுக்கு வசூல் மட்டும் தான் குறிக்கோள். ஆனால் மாற்று நடிகரின் படங்கள் வசூல் அதிகமானால் அது தயாரிப்பாளருக்கு அல்லவா போகும். அதைப் பற்றியெல்லாம் அதிகம் கவலை கொள்ள மாட்டார்கள். 100 நாட்கள் சாதனை தனக்கல்லவா வரும் என்பதை நன்கறிவார்கள்.
சாந்தி தியேட்டரே தன் சாதனையை
காட்டுவதற்காக வாங்கப்பட்டதுதான்.
சாந்தி தியேட்டர்தான்
"சந்திரமுகி"யை 5 அல்லது. 6 பேர்களை கொண்டே
800 நாட்கள் ஓட்டிய அதிசய திரையரங்கம் அல்லவா?
இப்பவே அப்படியென்றால் அப்போது நினைத்து பாருங்கள்.
சிவாஜி படங்கள் எல்லாம் அப்படி ஓட்டியதுதான். சாதனை என்பது தானாக நிகழ வேண்டும். நாமாக நிகழ்த்தக் கூடாது. பாகவதரின் "ஹரிதாஸ்" வெற்றி உண்மையான வெற்றி. ஆனால் "சந்திரமுகி"யின் வெற்றி உருவாக்கப்பட்ட வெற்றி.
அதுபோல் சிவாஜியின் சாந்தி தியேட்டர் சாதனையை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சாந்தியின் முதல் சிவாஜி படமான "பாவ மன்னிப்பு" ஓட்டுவதற்கு பாடல் பரிசு போட்டி என பலவிதமான ஆசை வார்த்தைகளை காட்டியும் ஓட்ட முடியவில்லை என்பதை உணர்ந்து
பலூனை பறக்க விட்டார்கள். தியேட்டர் சைக்கிள் ஸ்டாண்டு மற்றும் ஸ்டால் நடத்தும் அனைவரின் நஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் 175 நாட்கள் ஓட்டி. தங்களது முதல். இழுவை சாதனையை
அரங்கேற்றியதை
அனைவரும் அறிவார்கள்.
"பாவமன்னிப்பை" 175 நாட்கள் ஓட்டுவதற்காக சொந்த படமான "பாசமலரை" கூட சித்ராவில் ரிலீஸ் செய்து விட்டு "பாவமன்னிப்பை" வெள்ளி விழா ஓட்டி. விட்டு வெள்ளி விழா கணக்கில் சேர்த்துக் கொண்டார்கள். 1961 ம் ஆண்டு 2 படங்களையும் வெள்ளிவிழா ஓட்டி இழுவையில் ஒரு புதிய சாதனையை தொடங்கி வைத்தார்கள். ஆனால் அந்த ஆண்டின் ப்ளாக்பஸ்டர் வெற்றி அந்த 2 படமும் கிடையாது. வெள்ளிவிழா ஓடாத "திருடாதே" மற்றும் "தாய் சொல்லை தட்டாதே" படங்கள்தான்.
இதுபோல ஒவ்வொரு படத்தையும் அவர்கள் இஷ்டத்திற்கு 100 நாட்கள் ஓட்டுவதும் வெள்ளிவிழா ஓட்டுவதும் அவர்கள் கையில்தான். வசூல் தேவையான அளவுக்கு கூட்டி காண்பிக்கவும் அவர்களால் முடியும்.
அதனால் சாந்தி தியேட்டர் சாதனையை பொதுவாக யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.. அது இயல்பான சாதனை கிடையாது. அவர்களது சொந்த இழுவை சாதனையாக வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம்..........ks.........
-
ம*றைந்த* மாபெரும் இசைக்க*லைஞ*ர் எஸ்.பி.பால*சுப்பிர*ம*ணிய*ம் அவ*ர்க*ள் ந*ம் புர*ட்சித்த*லைவ*ருக்காக பாடிய* பாட*ல்க*ளின் அணிவ*குப்பு ..
1. ஆயிர*ம் நில*வே வா..அடிமைப்பெண்
2. நீராழி ம*ண்ட*ப*த்தில்..த*லைவ*ன்
3. வெற்றி மீது வெற்றி வ*ந்து...தேடிவ*ந்த* மாப்பிள்ளை
4. பாடும்போது நான் தென்ற*ல்காற்று..நேற்று இன்று நாளை
5. அங்கே வ*ருவ*து யாரோ..நேற்று இன்று நாளை
6. அவ*ள் ஒரு ந*வ*ர*ச* நாட*க*ம்..
உல*க*ம் சுற்றும் வாலிப*ன்
7. நாட் சோ ஈஸி டு ப்ரூவ்..
ஊருக்கு உழைப்ப*வ*ன்
8. இத*ழே இத*ழே தேன் வேண்டும்..இத*ய*க்க*னி
9. அன்பு ம*ல*ர்க*ளே ந*ம்பியிருங்க*ளே..நாளை ந*ம*தே
10. நான் ஒரு மேடைப்பாட*க*ன்..நாளை ந*ம*தே
11. லவ்விங் ஈஸ் ய கேம்..நாளை ந*ம*தே
12. இர*வுக*ளே பார்த்த*தில்லை..ப*ட்டிக்காட்டு பொன்னையா
13. நேர*ம் ப*வுர்ண*மி நேர*ம்..
மீன*வ* ந*ண்ப*ன்..
14. உங்க*ளில் ந*ம் அண்ணாவை பார்க்கிறேன்..ந*வ*ர*த்தின*ம்
15. மாலை நேர* தென்ற*ல் வ*ந்து பாடுதோ..நீரும் நெருப்பும்
16. உன் யோக*ஜாத*க*ம் நீ என்னை சேர்ந்த*து..இன்றுபோல் என்றும் வாழ்க*.
17. இர*ண்டு க*ண்க*ள் பேசும் மொழியில்..ச*ங்கே முழ*ங்கு
#வெளிவ*ராத* ப*ட*ங்க*ளின் பாட*ல்க*ள்..
1. என்னை தேடிவ*ந்தாள் த*மிழ் ம*க*ராணி..அண்ணா நீ என் தெய்வ*ம்
2. அன்ப*ர்க*ளே என் அருமை ந*ண்ப*ர்க*ளே..இதோ என் ப*தில்
3. வ*ண்ண*ப்பூஞ்சோலை..
இதோ என் ப*தில்
4. வீர*த்திலேக*வியெழுதி...
.........அடிமைப்பண் (ப*ட*த்தின் நீள*ம் க*ருதி ப*ட*மாக்க*வில்லை)
5. தாயில்லாம*ல் நான் இல்லை..அடிமைப்பெண் (ப*ட*த்தில் டி.எம்.எஸ். பாடிய*து ம*ட்டுமே இட*ம்பெறும்).........Rj, Ero
-
கிளம்பு!! ஆபத்து??
--------------------------
எம்.ஜி.ஆர் கண்ணில் பூ விழுந்தாலும் புழுவாகத் துடிப்பார்கள் மதுரை ரசிகர்கள் என்பார் நம் முக நூல் ஹயாத்!!
அப்படி ஒரு சம்பவத்தை இன்று காணலாம்!
நெல்லை கண்ணன்!
ஒட்டு மொத்தமாக அத்தனை பேரும் இவரைக் கட்சிக் கண்ணோட்டத்தில் தூற்றினாலும்--
எனக்கு மிகவும் பிடித்த மனிதர்! அதாவது இவரது மேடைப் பேச்சு,,கேட்பவரைக் கட்டிப் போடும்!
எம்.ஜி.ஆரைப் பற்றி இவர் பேசி நாம் கேட்க வேண்டும்! நகைச்சுவையும் நடிப்பும் கலந்து இவர் பேசும் பாணியில் எம்.ஜி.ஆரைப் பற்றி இவர் பேசுவது வெகு நிச்சயம் நம்மையே மறக்கச் செய்யும்!
தூத்துக்குடி துறைமுகம்!!
வரலாற்றில் ஒரு மைல் கல்லான இந்தத் துறைமுகம் எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடை பெறுகிறது!!
கேபினட் அமைச்சர் ஆர் வெங்கடராமன் அவர்கள் தூத்துக்குடி துறைமுகத்தைத் திறந்து வைக்கிறார்!
முதல்வர் எம்.ஜி.ஆர் முன்னிலை!
எம்.ஜி.ஆர் பேசும்போது குறிப்பிடுகிறார்--
ஒரு முதல்வர் என்ற முறையில் உரிய முறையில் எனக்கு அழைப்பு விடுத்திருக்க வேண்டும்! என்ன காரணத்தாலோ,,எவருடைய நிர்ப்பந்த்தினாலோ அதைச் செய்யாமல் விட்டு விட்டாரகள்.
என் தமிழ் நாட்டுக்கு இப்படியொரு துறைமுகம் அமைகிறதே என்ற மகிழ்ச்சியினாலேயே இந்த விழாவுக்கு நான் வந்திருக்கிறேன்??
எம்.ஜி.ஆர்,,இப்படிப் பேசியது தான் தாமதம்--
நெல்லைக் கண்ணன்,,அருகில் அமர்ந்திருந்த காங்கிரஸ் எம்.பி.கோசல்ராம் காதில் கிசுகிசுக்கிறார்--
நாமக் கிளம்பிடுவோம்? இனி ஒருக் கணம் இங்கிருந்தாலும் நமக்கு ஆபத்து?
குறிப்பாக மீனவக் குப்பத் தலைவர் பெர்னாண்டோவின் முகம் மாறுகிறதை கவனியுங்கள்!
கோசல்ராம் கேட்கிறார்--
அப்படி என்ன திடீர் ஆபத்து?
என்ன ஆபத்தா?? எம்.ஜி.ஆர் குறிப்பிட்டதைக் கவனீச்சீங்க இல்லே?
என் தலைவனை உரிய முறையில் கூப்பிடாமல் எங்கப் பகுதியில் நீங்க எப்படி விழா நடத்தலாம் என்று ஜனங்கப் பொங்க ஆரம்பிச்சுடுவாங்க!
அதிலும் இந்தக் குப்பத் தலைவர் பெர்னாண்டோ இருக்காரே--
கையை ஊனாமலேயேக் கர்ணம் அடிக்கறவர்??
கோசல்ராம் கவலையுடன் கேட்கிறார்--
அப்ப நம்ம மினிஸ்டர் ஆர்.வியோட கதி?
அவர் புத்திசாலித்தனமா எம்.ஜி.ஆர் கார்லேயே ஒட்டிக் கொண்டு போயிடுவார். நமக்குத் தான் ஒரு வண்டியும் கிடைக்காது??
இங்கே நிலவரம் இப்படியிருக்க--
மேடையில் பேசி முடித்த எம்.ஜி.ஆர்,,தன் கட்சியினரிடம் சொல்கிறார்--
ஆர்.வி.யை பத்திரமா காரில் அனுப்பிடுங்க. நான் இன்னிக்கு நைட் இங்கே தங்கிட்டு,,,காலையில் புறப்படுகிறேன்!!
அதாவது தாம் பேசும்போதே கூட்டத்தினரின் நாடித் துடிப்பை அளந்துவிட்ட முதல்வர்!!!
அன்று இரவு அங்கேத் தங்குகிறார் எம்.ஜி.ஆர்!
தூத்துக்குடி பிழைத்துக் கொள்கிறது!!!
கோட்டையில் ஒரு அரசாங்கம் நடத்திக் கொண்டே--மக்களின்--
இதயத்தில் ஒரு ஆட்சி செய்தவர் எம்.ஜி.ஆர் ஒருவர் தான் என்பதில் மறுப்பு உண்டா தோழமைகளே???.........
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*23/09/20 அன்று அளித்த தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------------
புரட்சி தலைவர், பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆசி பெற்ற ரசிகர்கள் ,அவரது அன்புக்குரியவர்கள்*கூட்டம் நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருகிறது .குறிப்பாக சொல்ல போனால் திரு.லோகநாதன் ராமச்சந்திரன் என்பவர் (ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு,சென்னை ) எனக்கு ஒரு இ மெயில் அனுப்பி உள்ளார் .அந்த செய்தியில் கிட்டத்தட்ட* ஒரு நாளைக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இணையதளம் மூலமாக ,குறிப்பாக சென்னை பெருநகர முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி, பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் திரு.முருகு பத்மநாபன், பத்திரிகை ஆசிரியர் திரு.துரை கருணா உள்பட சுமார் 100 பேர்களுக்கு அனுப்புவதாக சொல்லியிருக்கிறார் .* கடந்த வாரம் மட்டும் அந்த இணைய தளத்தில் ஒரு லட்சம் பேர்கள் பார்த்திருக்கிறார்கள் .இது இந்த இணையதளத்தின் சாதனை என்று சொல்லி இருப்பதோடு, சில தவறுகளை சுட்டி காட்டியிருக்கிறார் .*நீங்கள் நேற்று இன்று நாளை படம் வெளியானது தேர்தலுக்கு முன்பாக என்று அறிவித்தீர்கள் .அது கட்சி தேர்தலுக்கு முன்பாக இல்லை என்று* பல்வேறு குற்றச்சாட்டுக்களை சொல்லி இருக்கிறார் .உண்மையிலேயே திரு.லோகநாதன் ராமச்சந்திரன் அவர்களுக்கு அந்த தவறுகளை சுட்டி காட்டியதற்கு வரவேற்று நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன் .சகாப்தம் நிகழ்ச்சி என்பது ஒரு வரலாற்று பதிவு அல்ல .இது வாழ்க்கைக்கு நம்பிக்கை ஊட்டுகின்ற ஒரு தொடர் .**
எம்.ஜி.ஆர். என்கிற சாதாரண ,சாமான்ய மனிதர் வடசென்னை வால்டாக்ஸ் சாலை அருகில் மாதம் ரூ.15/- வாடகைக்கு தன் தாய், அண்ணன் , அண்ணி ,ஆகியோருடன் குடியிருந்தவர் ,தமிழகத்தை சுமார் 11 ஆண்டுகாலம் ஆட்சி செய்தது எப்படி என்பதை 10வது வகுப்பு, 12 வது* வகுப்பு மாணவ சமுதாயம் தேர்வில் தோற்றதும் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறதே ,அந்த சமூகம் இந்த உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும் . அவர் படிப்படியாக தன்னை வறுமையில் இருந்தும் ,இல்லாமையில் இருந்தும் ,படிப்பறிவும் இல்லாமல் எப்படி தன்னை வளர்த்துக் கொண்டார் அந்த ஆளுமை நமக்கு சொல்லித் தருகின்ற* பாடங்கள் என்ன என்பதைத்தான் நாம் தொடர்ந்து பார்க்க உள்ளோம் .
ஆண்டிபட்டியில் இருந்து திருமதி வசந்தி என்கிற சகோதரி பேசுகிறார் .* அவர் சொன்ன விஷயம் என்னவென்றால், நாங்கள் இன்றைக்கு இந்த கொரோனா பயத்திற்கு ,அச்சமின்றி வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம்* நீங்கள் தந்து கொண்டிருக்கிற சகாப்தம் தொடரில்அவர் குறித்து* அளிக்கிற தகவல்கள்தான் .நாங்கள் இரு சகோதரிகள் .எங்களுக்கு தாய், தந்தை இல்லை. ஆனாலும் கூட நாங்கள் எம்.ஜி.ஆர் அவர்களைத்தான் மூத்த சகோதரராக பாவித்து வாழ்ந்து வருகிறோம் .அவர் 1967 ஜனவரி 12ந்தேதி நடிகர் எம்.ஆர்.ராதாவால் துப்பாக்கியால் சுடப்பட்டார் . அன்றைக்கு நாங்கள் அழுத கண்ணீர் ஆறாக பெருகியது .அன்றைய தினம் முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 12ந்தேதி நாங்கள் ஒரு சொட்டு தண்ணீர் கூட* நாள் முழுக்க**அருந்தாமல் உண்ணாவிரதத்தை கடைபிடித்து வருகிறோம் . அந்த மகானை போற்றி அவர் நினைவாகவே வாழ்ந்து வருகிறோம் இப்படிப்பட்ட ஒரு ஆன்மா, ஒரு படிப்பினை ,ஒரு பாடம் வேறு யாருக்காவது* இந்திய வரலாற்றில் இருந்திருக்குமா என்றால் சந்தேகமே .
திரு.கா .லியாகத் அலிகான் அவர்களின் பேட்டி*
--------------------------------------------------------------------------
அந்த காலத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட குணங்களா, அல்லது திரைப்பட வெற்றியின் குணங்களா ,எந்த குணங்களால் கல்லூரியில் இருந்து நீங்கள் எம்.ஜி.ஆர்.அவர்களால் ஈர்க்கப்பட்டீர்கள் .
கா.லியாகத் அலிகான் :* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் எப்போதுமே ஆழ்மன ஆராய்ச்சி என்று ஒன்றை செய்வார் .ஒரு மனிதனை பார்த்த உடனேயே ,இவர் எதற்காக வந்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்வதில் வல்லவர் அவர் .வந்திருப்பவரின் குறையை,தேவைகளை கண்டுபிடித்து, அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக்கூடிய ஒரு மிக பெரிய எக்ஸ்ரே கருவிதான் அவர் .ஸ்கேனிங் மைண்டட் பர்சனாலிட்டிதான் எம்.ஜி.ஆர். அவர்கள் .எம்.ஜி.ஆரை பொறுத்தவரை அவரை சாதாரணமாக* யாரும் எளிதில் எடை போட முடியாது .அவர் பிறப்பிலேயே, தன வாழ்நாளில் மூன்று நாட்கள்* பட்டினி கிடந்து*உணவிற்காக திண்டாடிய நினைவுகளை**தான் முதல்வரான பின்பு*தைரியமாக நான் சிறு வயதில் பட்டினி கிடந்தது உணவிற்காக வருந்தியவன் ,இன்று நாட்டை ஆளக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது என்று கூறி சத்துணவு திட்டத்தை அமுலாக்கியவர் .இவற்றை சொல்வதற்கு கூச்சப்படுவதில்லை வெட்கப்படுவதில்லை .தன்னை நினைத்து பார்க்கக்கூடிய தனிப்பட்ட தகுதியுடையவர் .* இன்றைக்கு எப்படி பரதன் நாட்டை ஆளும் வாய்ப்பு வரும்போது ராமனின் பாதஅணிகளை,வைத்து** வணங்கி ஆட்சியை செய்தாரோ, அதுபோல அண்ணாவை மனதில் நிலைநிறுத்தி, எதற்கெடுத்தாலும் அண்ணா, அண்ணா என்று அண்ணாவின் உருவத்தை கொடியில் பதித்தார் .அண்ணா அளித்த ஸ்பேனர் என்ற கருவியை**வைத்து அண்ணா* தொழிற்சங்கம் உருவாக்கினார் .தி.மு.க. வில் இருந்து நீக்கியதும் அண்ணாவின் பெயரால் அண்ணா தி.மு.க. என்ற கட்சியை தொடங்கினார் .எதற்கும் அவர் பயப்படவில்லை காரணம் மக்கள், தொண்டர்கள் ,ரசிகர்களின் செல்வாக்கு .நீங்கள் சொன்னது போல காங்கிரஸ் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோது திரைப்படத்தில் தான் காளையை அடக்குவது போல நடித்து ,காங்கிரசின் சின்னமான காளையை நான் அடக்க கூடியவன் என்பதை மறைமுகமாக சுட்டி காட்டியதோடு அல்லாமல் ,காங்கிரஸ் கட்சியை, ஆட்சியை விமர்சித்து தி.மு.க.வின் சின்னம்*,உதயசூரியன் என்ற பெயரை பிரபலம் அடைய செய்தார் . 1962 தேர்தலுக்கு பின்னர் ஓரளவு காங்கிரஸ் விழித்து கொண்டபோது ,1966ல் வெளியான அன்பே வா படத்தில் உதயசூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே என்ற பாடல் வரிகளுக்கு நடித்தார் அப்போதைய தணிக்கைக்குழு அதை ஏற்காததால், பாடல் வரிகளில் மாற்றம் செய்து புதிய சூரியனின் பார்வையிலே என்று பாடலை வடிவமைத்தார் .இப்படி விடாமல் போராடி உதய சூரியன் சின்னத்தை பிரபல படுத்த திரைப்படங்களில் தனிப்பட்ட முயற்சி எடுத்து கொண்ட எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு இருந்ததை போல மனோதைரியம் வேறு எவருக்கும் இருந்ததில்லை என்று இருக்கும்போது அவர் மற்றவர்க்கு பயப்படுவார் ,பயந்து கொண்டு நடப்பார் என்று எப்படி இவர்களால் கருத்து சொல்ல முடிகிறது என்று தெரியவில்லை .*
ஆண்டிபட்டி சகோதரி வசந்தி அவர்களுக்கு வாழ்க்கையில் மிக பெரிய துயரம் .சமூகத்தில் இருந்து தள்ளி வைக்கப்பட்டார் .உறவினர்களால் புறக்கணிக்கப்பட்டார் .வருத்தம் ,சோகம், வாழ்க்கையில் தற்கொலை செய்துகொள்ளலாமா என்கிற நெருக்கடி .அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர்.அவர்களின் பாடல்கள்தான் மனதைரியம் கொடுத்தது ,என்னை காப்பாற்றியது என்று அவர் சொல்கிறார் .* வேட்டைக்காரன் படத்தில்வெள்ளிநிலா முற்றத்திலே**பாடலிலே அவர் பாடிய வரிகள் நான்கு பேர்கள் போற்றவும் , நாடு உன்னை வாழ்த்தவும் ,மானத்தோடு வாழ்வதுதான் சுயமரியாதை, நல்ல மனமுடையோர்* காண்பதுதான் தனிமரியாதை .அரச கட்டளை படத்தில் ,வேட்டையாடு ,விளையாடு *பாடலில் நேர்மை உள்ளத்திலே ,நீந்தும் எண்ணத்திலே, தீமை வந்ததில்லை தெரிந்தால் துன்பமில்லை .உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் சிரித்து வாழ வேண்டும் ,பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே, உழைத்து வாழ வேண்டும் ,பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே* என்று பல பாடல்கள் எனக்கு படிப்பினையாகவும், படங்களாகவும் இருந்தன . இந்த பாடல்களை யார் யார் எழுதினார்களோ,அவற்றை எனக்காகவே எழுதியது போல நான் நினைத்து என் மனதில் வைத்து நான் வாழ்ந்து காட்டினேன் என்று உறுதியாக ,அவரது பாடல் வரிகளுக்கு வரலாற்று சாட்சியாக ஆண்டிபட்டி சகோதரி வசந்தி இருந்து கொண்டிருக்கிறார் .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒவ்வொரு பாடல் வரிகளிலும் ,காட்சிகள் அமைப்பிலும் ஏன் அவ்வளவு ஆழமாக ,ஒரு அர்ப்பணிப்போடு கவனம் செலுத்தியிருக்கிறார் என்பதற்கு காரணம் இது ஒன்றும் வெறும்* பொழுதுபோக்கு அல்ல .மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது பொழுதுபோக்கு சாதனமாக இருக்கலாம் .ஆனால் எனக்கு இது மக்களுக்கான ஒரு உறவுப்பாலம் .அதனால்தான் யார் எந்த படத்தில் நடித்தாலும் ,இது எம்.ஜி.ஆர். படம். எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் தயாரிப்பு .யார் தயாரித்தாலும் எம்.ஜி.ஆர். நடிக்கும்போது சில நிபந்தனைகள் போடுவார் .இந்த படத்தில் இடம் பெறும் பாடலோ, பேசுகின்ற வசனமோ ,சொல்லப்படுகின்ற கருத்துக்களோ,எல்லா விஷயங்களும் என்னுடைய அனுமதியின் பேரில்தான் இடம் பெறும்,என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் . உலக புகழ் நடிகர் மார்லன் பிராண்டோ கூட* இப்படி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டதில்லை .இப்படி ஒப்பந்தம் செய்த முதல் நடிகர் உலகத்திலேயே எம்.ஜி.ஆர். ஒருவர்தான் .இதை அவரே பல பேட்டிகளில்* சொல்லி இருக்கிறார் . மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------
1.அன்பு மலர்களே, நம்பி இருங்களேன் - நாளை நமதே*
2.ஒரே முறைதான் உன்னோடு பேசி பார்த்தேன்* -தனிப்பிறவி*
3.ஒரு கொடியில் இரு மலர்கள் - காஞ்சி தலைவன்*
4.திரு.கா .லியாகத் அலிகான் அவர்களின் பேட்டி*
5.வெள்ளிநிலா முற்றத்திலே -வேட்டைக்காரன்*
6.நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன் - நான் ஆணையிட்டால்*
-
“ ‘அடிமைப்பெண்’ வெற்றியடைந்தது எப்படி?” - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-2
புதியவர்களும் இளைஞர்களும் `அது என்ன, எம்.ஜி.ஆரின் செல்வாக்கு இப்படிப் பெருகிக்கொண்டே போகிறதே!' என ஆச்சர்யப்பட்டு, அவர் படங்களை போனிலும் கம்ப்யூட்டரிலும் பார்க்கிறார்கள். ``பழைய படங்களை, என்னால் பத்து நிமிடம்கூடப் பார்க்க முடியாது'' என்று சொல்லும் எழுத்தாளர் ஜெயமோகன்கூட, ``எம்.ஜி.ஆர் படங்களை கடைசி வரை என்னால் பார்க்க முடிகிறது'' என்று ஆனந்த விகடனில் தெரிவித்திருந்தார். அதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி ஃபார்முலா. பிடிக்காதவரையும் தம் படத்தைப் பார்க்கவைத்துவிடுவார்.
திரைப்படங்களில் வன்முறை அதிகரிப்பதுகுறித்து தனது கவலையைத் தெரிவித்த உளவியல் நிபுணர் ருத்ரைய்யாவும் “அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் பத்து பேரை எதிர்த்து சண்டைபோடும்போது கஷ்டமாக இருக்காது; அருவருப்பாக இருக்காது; UNEASY-ஆக இருக்காது’’ என்று குறிப்பிட்டிருந்தார். ஏனென்றால், எம்.ஜி.ஆர் எப்படியும் ஜெயித்துவிடுவார் என்பதால், ரசிகர்கள் பயப்படாமல் படம் பார்க்கலாம். நல்லவன் வாழ்வான் என்பதில், எம்.ஜி.ஆர் படங்களில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.
எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் மீது கடுமையாக விமர்சனம் வைக்கும் பலரும், அவரை ஏதேனும் ஒரு வகையில் ரசித்தனர். சிலர் அவர் திரையில் நடித்த காலத்தில் விமர்சித்துவிட்டு, பிற்காலத்தில் அவரைப் பாராட்டியதும் உண்டு. தூரத்தில் இருந்து அவரைப் பார்த்தும் கேள்விப்பட்டும் விமர்சித்தவர்கள் அவரை அருகில் நெருங்கிப் பார்த்துப் பழகியபோது, அவரது நற்குணங்களைக் கண்டு தம் தவறை உணர்ந்திருக்கின்றனர்.
ஒருமுறை சினிமாவில் எதிர் அணியைச் சேர்ந்த ஒருவர், தன் மகள் திருமணத்துக்கு பணம் இல்லாமல் அலைந்தபோது சிலர் அவரை “எம்.ஜி.ஆரிடம் போய்க் கேளுங்கள்'' என்றனர். அவரும் வேறு வழியின்றி போய்க் கேட்டார். எம்.ஜி.ஆர் ``உங்கள் முகவரியைக் கொடுத்துவிட்டு போங்கள்'' என்றார். இரவு ஆகிவிட்டது. பணம் கிடைக்கவில்லை. `இனி மானம் போய்விடும்' என்று நினைத்த அவர்கள், தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தனர். ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆர்., சட்டைப் பையில் இருந்த முகவரிச் சீட்டைப் பார்த்தார். திடீரென ஞாபகம் வந்தவராக தன் உதவியாளரை அழைத்து உடனே பணம் கொடுத்து அனுப்பினார். நல்ல வேளை அவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்குள் எம்.ஜி.ஆரின் உதவியாளர் போய்விட்டார். எதிர் அணியைச் சேர்ந்தவர் என்பதால், அவர் உதவவில்லை என நினைத்திருந்த அந்தக் குடும்பத்தினர், தம் நன்றியைச் சொல்ல இயலாமல் திண்டாடினர். தங்கள் குடும்ப மானமும் தங்கள் மகளின் வாழ்க்கையும் காப்பாற்றப்பட்டுவிட்டதால், அவர்கள் எம்.ஜி.ஆரை தெய்வமாகக் கருதினர். இவ்வாறு நண்பர்-பகைவர் எனப் பாரபட்சம் பார்க்காமல், எம்.ஜி.ஆர் பலருக்கும் உதவியுள்ளார். அதனால்தான் இன்னும் அவரைப் பற்றி மக்கள் பேசிக்கொண்டே இருக்கின்றனர்.
எம்.ஜி.ஆர்., சினிமாவைவிட்டு விலகி நாற்பது ஆண்டுகளாகிவிட்டன; இந்தப் பூவுலகைவிட்டு மறைந்து முப்பது வருடங்களாகிவிட்டன. இன்னும் அவர் இருப்பது போன்ற ஓர் எண்ணமும் பேச்சும் நிலவிக்கொண்டிருப்பதை யாரும் மறுக்க இயலாது. காலத்தால் அழியாத காவிய நாயகனாக இன்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இதற்கான காரணங்களை இப்போது வெளிவந்திருக்கும் `அடிமைப்பெண்' படத்தை மட்டும் வைத்து ஆராய்வோம்.
எம்.ஜி.ஆரிடம் “உங்களை எவ்வளவு நாள் மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள்?” என்று கேட்டபோது “என் படங்களின் நெகட்டிவ் இருக்கும் வரை'' என்றார். ஆம், அது சத்தியவாக்கு. அவர் படங்களின் நெகட்டிவ் இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் திரை அரங்குகளில் வெற்றி நடைபோடுவதைக் காண்கிறோம். இனி இந்தப் படங்களைப் பாதுகாப்பதும் எளிது. அவர் படங்களை திரை அரங்குக்குப் போய்தான் பார்க்க வேண்டும் என்றில்லை, நம்முடைய மொபைல்போனில்கூட நினைத்த நேரத்தில் நினைத்த காட்சிகளைப் பார்க்கலாம் என்ற நிலை தோன்றிவிட்டது. `பாகுபலி'யின் இமாலய வெற்றியும் கதைப் பொருத்தமும் இப்போது சேர்ந்துகொண்டு `அடிமைப்பெண்'ணுக்கு வெண் சாமரம் வீசுகின்றன.
அன்று அடிமைப்பெண்
`அடிமைப்பெண்' படம், 1969-ம் ஆண்டு மே தினத்தன்று வெளிவந்தது. அது ஒரு சாதனைப் படம். எம்.ஜி.ஆரின் முந்தைய சாதனைகளை அவரது படங்களே முறியடிப்பது வழக்கம். `எங்க வீட்டுப் பிள்ளை' படத்தின் சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைத்தது `அடிமைப்பெண்'. எம்.ஜி.ஆர் தமிழ் திரையுலகின் உச்சத்தை எட்டியபோது இந்தப் படம் வெளிவந்தது. `அடிமைப்பெண்' படம் எடுத்தபோது ஜெயலலிதாவும் அதிக செல்வாக்குடன் இருந்தார். இவரது ஆளுமையையும் செல்வாக்கையும் படம் முழுக்கக் காணலாம். இந்தப் படத்தை எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் தயாரித்தது, கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் சம்பந்தி கே.சங்கர் இயக்கினார். கலைஞரின் மைத்துனர் சொர்ணம் வசனம் எழுதினார். ஜெயலலிதா கதாநாயகி மற்றும் வில்லி என இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இப்போது விளம்பரங்களில் அவரது வில்லி தோற்றத்தை அதிகமாக வெளியிடுகின்றனர். எம்.ஜி.ஆர்., அப்பா-மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தாலும், அப்பா வேடம் மிகவும் சிறியது. ஒரு சண்டைக் காட்சியும் சில வசனங்களும் மட்டுமே அவருக்கு உண்டு. ஜெயலலிதாவுக்கு இரண்டும் பெரிய கதாபாத்திரங்கள். அத்துடன் ஒரு பாடலும். இதற்கு திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன், எம்.ஜி.ஆரிடம் 90 மெட்டுக்கள் போட்டுக்காட்டினார். `அம்மா என்றால் அன்பு...' என்ற அந்தப் பாடல், எம்.ஜி.ஆர் பாடுவதற்காக டி. எம்.எஸ்-ஸைக் கொண்டு மீண்டும் குழுப்பாடலாகப் பதிவுசெய்யப்பட்டது. ஆனால், படத்தில் இடம்பெறவில்லை.
`அடிமைப்பெண்'ணின் சாதனை
தமிழில் 1969-ல் வெளிவந்த படங்களில் `அடிமைப்பெண்' மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த ஆண்டின் ஒரே வெள்ளிவிழா படம். சென்னை நகரில் முதன்முதலாக நான்கு திரை அரங்குகளில் திரையிடப்பட்டு, நூறு நாள்கள் ஓடிய வெற்றிப்படம். திருவண்ணாமலை, சேலம், கடலூர் ஆகிய ஊர்களில் மூன்று திரை அரங்குகள், கோவையில் இரண்டு திரையரங்குகள், பெங்களூரில் மூன்று திரை அரங்குகள், இலங்கையில் ஏழு திரையரங்குகளில் மட்டுமல்லாது, திரையிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி வாகை சூடியது `அடிமைப்பெண்'. மதுரையில் சிந்தாமணி தியேட்டரில் வெளியிட்டு நூறாவது நாள் வெற்றி விழாவின்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பண்டரிபாய், அசோகன் போன்றோர் ரசிகர்களுக்கு நேரடியாகக் காட்சியளித்தனர்.
இன்றைக்கு `அடிமைப்பெண்' (2017) வெளியாவதற்கு டிஜிட்டல் மாற்றம் காரணமாக பெரியளவில் விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால், பத்து வருடங்களுக்கு முன்னால் சென்னையில் உள்ள மெலடி, அபிராமி, பிருந்தா போன்ற ஏசி திரையரங்குகளில் வெளியாகி, தன் வெற்றியை மீண்டும் பறைசாற்றியது `அடிமைப்பெண்'. இதேபோன்று மற்ற ஊர்களிலும் நல்ல லாபத்தைப் பெற்றுத்தந்தது. எம்.ஜி.ஆர் படங்களுக்குக் கிடைக்கும் வசூல் காரணமாக, அரசுக்கு நல்ல வரித்தொகையும் கிடைத்தது. இன்றைக்கு படங்களுக்கு வரிவிலக்கு கேட்கின்றனரே தவிர, வரி செலுத்த யாரும் முன்வருவதில்லை. ஆனால், எம்.ஜி.ஆர் பட விளம்பரங்களில் அரசுக்குச் செலுத்திய வரித்தொகையைக் குறிப்பிட்டு ஒருவரும் விளம்பரம் செய்வது கிடையாது. அரசுக்கு வரி செலுத்துவதைத் தவிர்க்கவே திட்டமிடுகின்றனர்.
அரசியலுக்கு அழைத்த ‘அடிமைப்பெண்’
‘அடிமைப்பெண்'ணின் வெற்றி, எம்.ஜி.ஆருக்கு அரசியலில் நேரடியாக அடி எடுத்துவைக்கும் ஊக்கத்தைக் கொடுத்தது. அரசியலுக்கு வந்தால் தன்னை ஆதரிப்பார்களா என்பதை அறிய விரும்பிய எம்.ஜி.ஆர்., தயாரிப்பாளர் நாகிரெட்டியிடம் இதுகுறித்து பேசி, தன்னை வைத்து ஒரு படம் எடுக்கும்படி கூறினார். இந்தியில் வெளிவந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருந்த `அப்னா தேஷ்' என்ற படத்தை `நம் நாடு' என்ற பெயரில் தமிழில் எடுத்தனர். அந்தப் படம் `அடிமைப்பெண்' ரிலீஸாகி ஆறு மாதங்கள் கழித்து வெளிவந்தது. அதுவரை அவர் தன் படம் எதையும் வெளியிடவில்லை. 1969-ம் ஆண்டு நவம்பர் மாதம் எம்.ஜி.ஆரின் அதிர்ஷ்ட எண்ணான 7- நாள் அன்று தமிழகம் எங்கும் வெளியாயிற்று. சென்னையில் முதல் நாள் திரையரங்குக்கு வந்து நாகி ரெட்டியுடன் `நம் நாடு' படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர்., ரசிகர்களின் வரவேற்பைப் பார்த்து அவரைக் கட்டிப்பிடித்து தன் மகிழ்ச்சியைக் வெளிப்படுத்தினார். ``மக்கள் என்னை ஏற்றுக்கொண்டுவிட்டனர். வெற்றி... வெற்றி!'' என்று கூறி மகிழ்ந்தார்.
பத்திரிகைகளில் `அடிமைப்பெண்'
`அடிமைப்பெண்' பற்றி பத்திரிகைகள் பல ஆண்டுக்கு முன்பிருந்தே செய்திகளை
வெளியிட்டுவந்தது. முதலில் பானுமதி, அஞ்சலிதேவி நடித்து வெளிவருவதாக இருந்தது. பிறகு, சரோஜாதேவி கே.ஆர்.விஜயா மற்றும் ஜெயலலிதா நடித்து படப்பிடிப்பும் நடந்தது. அப்போது ஏற்பட்ட தீவிபத்தினால் படம் நின்றுபோயிற்று. இந்தப் படத்தில் இளவரசியான ஜெயலலிதா அடிமைப்பெண்ணாக இருப்பதாகவும், அவரை எம்.ஜி.ஆர் காப்பற்றிக் கொண்டுவந்து அரசியாக்குவதாகவும் கதை அமைந்திருந்தது. இந்தக் கதை கிட்டத்தட்ட `நாடோடி மன்னன்' கதைபோல் இருப்பதால், புதிய கதை உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு அதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
ஜெயலலிதா நடிப்பது முடிவானதும், தமிழின் முன்னணிப் பத்திரிகைகளில் `அடிமைப்பெண்'ணின் படப்பிடிப்பு குறித்து பல செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. பாலைவனத்தில் ஜெயலலிதா ஆடும் நடனத்துக்கு தைக்கப்பட்ட உடைக்கு பல மீட்டர் நீளமான துணி எடுக்கப்பட்டதாக ஒரு செய்தி வெளிவந்தது. அத்துடன் அவர் ஆடும் மற்றொரு நடனத்தில் அவர் சிறிய முரசுகளைக் கட்டிக்கொண்டு ஆடுகிறார். இதில் அவர் நடனங்கள் வெளிநாட்டுப் பாணியில் அமைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அவரது நடனப் பசிக்கு இந்தப் படம் நல்ல தீனியாக அமைந்ததை மறுக்க இயலாது. எகிப்தில் ஆடும் `பெல்லி டான்ஸில்’ உள்ள நடன அசைவுகளை `ஏமாற்றாதே ஏமாறாதே...' பாடலில் தமிழ்ப் படத்துக்கு ஏற்ற வகையில் நடன அசைவுகளை அளவாக வெளிப்படுத்தியிருப்பார் ஜெயலலிதா. `காவல்காரன்' படத்தில் `நினைத்தேன் வந்தாய் நூறு வயது...' பாடல் காட்சியிலும் இதே பெல்லி டான்ஸ் மூவ்மென்ட்ஸைப் பார்க்கலாம்.
புஷ் குல்லா
`அடிமைப்பெண்' படத்துக்காக படப்பிடிப்புக்குப் போயிருந்த வேளையில்தான் எம்.ஜி.ஆருக்கு புஷ் குல்லா பரிசாகக் கிடைத்தது. அது அவருக்கு அழகாக இருப்பதாக அவர் மனைவி ஜானகி சொன்னதால், அன்று முதல் அவர் அந்த புஷ் குல்லாவைத் தொடர்ந்து அணிந்துவந்தார். அப்போது ஒரு நிருபர், ``நீங்கள் வழுக்கையை மறைக்கத்தான் புஷ் குல்லா அணிகிறீர்களா?'' என்று கேட்டபோது, ``எனக்கு வழுக்கை இருந்தால், மக்கள் என்னை எம்.ஜி.ஆர் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்களா?'' என்று பதில் கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கான பதிலை, அந்த நிருபர் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் 1985-ம் ஆண்டில் சிகிச்சை பெற்றுவந்தபோது வெளியான புகைப்படங்களைப் பார்த்து மக்கள் அவருக்கு அமோகமாக ஓட்டளித்து வெற்றி பெறச்செய்தபோது புரிந்துகொண்டார். அவரது கதை கதாபத்திரம் மற்றும் கொடை உள்ளம் இவையே மக்களை மிகவும் கவர்ந்தன.
1936-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர் `சதிலீலாவதி' என்ற படத்தில் நடித்தது முதல் 1969-ம் ஆண்டில் `அடிமைப்பெண்' வெளிவரும் வரை அவரைப் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு, அவர் வயது என்ன என்பதைக் கணக்கிடத் தெரியாதா? அவருக்கும் அந்தந்த வயதுக்குரிய உடலியல் மாற்றங்கள் வரும் என்பது புரியாதா? இருந்தாலும் அவரை மக்கள் ரசித்து மகிழ்ந்ததற்குக் காரணம், அவரது கதையமைப்பும் அதற்கேற்ற கதாபாத்திரப் பொருத்தமும் இளமைத் தோற்றமும் அவரது சுறுசுறுப்பும்தான்.
பாடல் காட்சிகளில் அவர் சும்மா நின்றுகொண்டு பாட மாட்டார். அவரிடம் ஒரு துள்ளலும் உற்சாகமும் ததும்பிக்கொண்டேயிருப்பதைப் பார்க்கலாம். அதனால்தான் `வேட்டைக்காரன்' பட விமர்சனத்தில் `கால்களில் சக்கரம் கட்டியிருக்கிறாரோ!' எனக் கேட்டிருந்தது. ஆக, `அடிமைப்பெண்' படப்பிடிப்புக்குப் பிறகு எம்.ஜி.ஆரின் உடல் மெரினாவுக்குக் கொண்டு சென்று அடக்கம் செய்யப்படும் வரை அவர் புஷ் குல்லா அணிந்திருந்தார்.
எம்.ஜி.ஆரின் கையில் ஒரு வாட்ச்
``நூறு முறையாவது `அடிமைப்பெண்' படத்தைப் பார்த்திருப்பேன்'' என்று கூறும் ஒரு ரசிகர், ஒருநாள் எம்.ஜி.ஆர் கையைப் பிடித்து முத்தம் கொடுத்து அவருடன் கைகுலுக்கி இருக்கிறார். அவர் எம்.ஜி.ஆர் ப்ரியர் அல்லர் வெறியர். எம்.ஜி.ஆர் கார் அங்கு இருந்து நகர்ந்த பிறகும் எம்.ஜி.ஆரைத் தொட்ட இன்பத்திலேயே திளைத்திருந்தார். அப்போது அந்தப் பகுதியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. எம்.ஜி.ஆரின் கார் சற்று தொலைவில் நின்றுவிட்டது. மீண்டும் எல்லோரும் கார் அருகில் ஓடினர். அவர் ஒரு வாட்சை நீட்டியபடி வெளியே எட்டிப்பார்த்தார். பிறகுதான் தெரிந்தது, இந்த ரசிகர் எம்.ஜி.ஆர் கையைப் பிடித்தபடி காருடன் சிறிது தூரம் ஓடியபோது, அவரது வாட்ச் கழன்று எம்.ஜி.ஆர் மடியில் விழுந்திருப்பது. ரசிகருக்கு இரட்டிப்பு சந்தோஷம். எம்.ஜி.ஆர் தொட்டுத் தந்த வாட்ச், இன்றும் அவருக்குப் பொக்கிஷமாகத் தெரிகிறது. அந்தப் பகுதியில் இரண்டு நாள்களுக்கு அதுதான் பேச்சு.
கொடுக்கக் கொடுக்க இன்பம் பிறக்குமே!
எம்.ஜி.ஆரின் கொடை உள்ளம் எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், பாலைவனத்து ஒட்டகவாலாக்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏராளமான ஒட்டகங்கள் இடம்பெறும் காட்சி ஒன்றில் நடிக்க பாலைவனத்துக்கு வந்த அவர்களுக்கு, தாகம் தீர்க்க எம்.ஜி.ஆர் கிரேடு கிரேடாக கோகோகோலா வரவழைத்துக் கொடுத்தார். அவர்கள் மனமுவந்து `பெரியமனுஷன்யா அவரு' என்ற அர்த்தத்தில் `படா ஆத்மி’ எனப் புகழ்ந்தனர். படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் வந்த எம்.ஜி.ஆர்., அங்கு நடந்த விபத்துக்கான நிவாரண உதவியாக பெருந்தொகை ஒன்றை முதலமைச்சரிடம் கொடுத்து உதவியிருக்கிறார். மறுநாள் பத்திரிகைகளில் எம்.ஜி.ஆரின் புகழ் கொடிகட்டிப் பறந்தது. எங்கு இருந்தாலும் மலர் மணக்கும் என்பதில் ஆச்சர்யமில்லையே! இந்தப் பாலைவனப் படப்பிடிப்பின்போது ஜெயலலிதாவால் மண்ணில் கால் புதைந்து நடக்க இயலவில்லை என்பதால், எம்.ஜி.ஆர் அவரை குழந்தைபோல தூக்கிக்கொண்டு சென்றாராம். உதவி என்பது, பணத்தால் மட்டுமல்ல... நல்ல மனத்தாலும் நடக்கும்.
நிலைத்து நிற்கும் பாத்திரப் படைப்பு
சமீபத்தில் வட மாநிலத்தில் ஒரு விவசாயி, தன்னிடம் உழவு மாடு இல்லாத காரணத்தால் தன் மகள்களை ஏரில் பூட்டி, தன் நிலத்தை உழும் செய்தியைப் படித்தோம். பலர் வருத்தப்பட்டனர். இதே நிலைதான் `அடிமைப்பெண்' படத்தில் வரும் பெண்களுக்கும். அவர்கள் வண்டி இழுக்க வேண்டும், ஏர் உழ வேண்டும், செக்கு இழுக்க வேண்டும். இவர்களை சூரக்காட்டு மன்னனிடமிருந்து வேங்கையன் (எம்.ஜி.ஆர்) காப்பாற்ற வேண்டும். `இது ஏதோ ராஜா காலத்துக் கதை. இதெல்லாம் இன்றைக்கு சரிவராது' என நினைத்து ஒதுக்க முடியாது. எம்.ஜி.ஆரின் படங்கள் எல்லா காலங்களுக்கும் பொருந்தும் கதையையும் கதாபாத்திரங்களையும் கொண்டிருப்பதால்தான், அவை இன்றும் இளைய சமுதாயத்தினராலும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன; வரவேற்பு பெறுகின்றன.
ஹீரோ-வை உருவாக்கும் ஜீவா
கிராமங்களில் கட்டுக்கடங்காத காளிபோல திரியும் ஒருவனைத் திருத்த வேண்டும் என்றால், `ஒரு கால்கட்டு போட்டுவிட்டால் சரியாகிவிடும்' என்பார்கள். அதாவது ஒரு பெண் அவன் வாழ்க்கையில் வந்து அவள் அவனைத் திருத்தி குடும்பப் பொறுப்புள்ளவனாக்கிவிடுவாள் என்பது நம்பிக்கை. இதுதான் ஜீவாவின் பாத்திரப்படைப்பு. மனித சஞ்சாரமற்ற தனிச்சிறையில் அடைந்து கிடந்த ஒருவனை, ஜீவாவின் கையில் ஒப்படைத்துவிட்டு அவளது தாத்தா இறந்துவிடுகிறார். அவள் அவனுக்கு நாகரிகம், பண்பாடு, பாதுகாப்புக் கலைகள், தன் வரலாறு என அனைத்தும் சொல்லிக்கொடுத்து மாவீரனாக உருவாக்குகிறாள். அவனும் தன் கடமையைத் திறம்பட நிறைவேற்றுகிறான். இது அன்றைக்கும் இன்றைக்கும் பொருந்தக்கூடியதுதான் என்பதால், இந்தக் கதாபாத்திரத்தை பெண்களும் ஆண்களும் ஏற்றுக்கொள்கின்றனர். திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர்., ஜீவாவிடம் முத்தம் கேட்கும் காட்சியில் வைத்தியர் (சந்திரபாபு) ஜீவாவிடம் `இவன், உன்னிடம் தவறாக நடந்துகொள்ளப்போகிறான்' என்று எச்சரிக்கிறார். அப்போது திடீரென எங்கள் பின் சீட்டில் இருந்த ஒருவர் ``அதெல்லாம் சிவாஜி படத்தில்தான் நடக்கும்'' என்றார். ஒரு விநாடி பயங்கர அமைதி. அவர் அதுவரை வசனங்களை எல்லாம் முன்கூட்டியே சொல்லிக்கொண்டு வந்தவர், இப்படி ஒரு கமென்ட் அடித்தார்.
தாயின் வைராக்கியம்
வயதான மரத்தை வைரம் பாய்ந்த மரம் என்பர். அதுபோல வயதானவர்களும் வைராக்கியம் படைத்தவர்களாக இருப்பது வழக்கம். `அடிமைப்பெண்' படத்தில் வரும் ராஜமாதா (பண்டரிபாய்) தன் குடிமக்களை அடிமைப் பிடியிலிருந்து காப்பதுதான் தன் முதல் கடமை என்று நம்பியதால், அவர் தன் மகன் விடுதலை அடையாத நிலையிலும் ஓர் உறுதிமொழி எடுத்திருக்கிறார். எனவே, தன்னைக் காண வந்த மகனிடம் `என் முகத்தில் விழிக்காதே! நம் குலப்பெண்கள் அனைவரது காலிலும் உள்ள விலங்குகளை அகற்றிவிட்டு, பிறகு என்னிடம் வா'' என்று இரக்கமே இல்லாமல் அனுப்பிவிடுகிறார். இந்த வைராக்கியம் வேங்கையனுக்கு பெரும் ஊக்கமாக அமைகிறது. அப்போது அவர் பாடும் பாடல் மனிதத் தாயைப் பாடுவதாக இல்லாமல் அன்னை பராசக்தியையே எண்ணிப் பாடுவதுபோல அமைந்திருக்கும். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அ.தி.மு.க-காரர்கள் பலரது போனிலும் இந்தப் பாடலே (தாயில்லாமல் நானில்லை) காலர் ட்யூனாக இருந்ததை நாடறியும்.
சூரக்காடு ஏன்?
எம்.ஜி.ஆரின் சினிமா ரசிகர்கள் தம் எதிரியாகக் கருதிய சிவாஜி, சூரக்கோட்டையின் சொந்தக்காரர். ஆக, சூரக்கோட்டை இந்தப் படத்தில் `சூரக்காடு' என்றாயிற்று. கோட்டை என்றால், அவனை மன்னனாகக் காட்ட வேண்டும். இவன் மன்னன் அல்ல, மனிதப்பண்பு சிறிதும் இல்லாத காட்டான். அதனால்தான் அந்த நாட்டுக்கு பெயர் `சூரக்காடு'. இப்போது ரசிகர்களும் திருப்தி அடைவார்கள். படங்களுக்கும் கதாபாத்திரங்களுக்கும் பெயர் சூட்டுவதில் எம்.ஜி.ஆர் காட்டும் அளவுக்கு வேறு யாராவது அக்கறையும் கவனமும் காட்டியிருப்பார்களா என்றால் சந்தேகம்தான்.
ஜீவா – காதலின் கௌரவம்
எம்.ஜி.ஆர்., படங்களில் நடித்து கொஞ்சம் பிரபலமாகி வந்த நேரம் அவருடன் சில படங்களில் நடித்து வந்த (கதாநாயகியாக அல்ல) ஒரு நடிகைக்கு, இவர் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆர்., காதலில் ஈடுபட்டு திரை வாய்ப்புகளைக் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. அவர் தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அந்த நடிகை, எம்.ஜி.ஆருக்கு வெண்மை நிறம் பிடிக்கும் என்பதால் இரவில் வெள்ளை உடையில் இவர் இருந்த அறையின் கதவை வந்து தட்டினார். நல்ல பாடகியான அவர், நடத்தும் கச்சேரிகளுக்கு எல்லாம் எம்.ஜி.ஆர் முதல் வரிசையில் போய் அமர்ந்து ரசிப்பாராம். ஆனால், காதல் என்றவுடன் காத தூரம் ஓட ஆரம்பித்தார். பாவம் அவர் சூழ்நிலை அப்படி. அவர் அம்மாவிடம் காதல் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு போய் நிற்க இயலாது. அவரால் அந்தக் காதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால், அவர் வெற்று ஆசையை வளர்த்துக்கொள்ளவில்லை. பிறகு திரையுலகில் எம்.ஜி.ஆர் நல்ல நிலைக்கு வந்து சொந்தமாகப் படம் எடுத்தபோது, அந்தப் பாடகி நடிகையின் செல்லப்பெயர்களை, தான் திருமணம் செய்யும் கதாநாயகிகளுக்கு வைத்து அந்தக் காதலை கௌரவித்தார். `நாடோடி மன்னன்' படத்தில் சரோஜாதேவி, `அடிமைப்பெண்'ணில் ஜெயலலிதா, `உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் சந்திரகலா ஆகியோருக்கு அந்தப் பெண்ணின் பெயர்தான் சூட்டப்பட்டது.
குழந்தைகள், ரசிகரான கதை
எம்.ஜி.ஆர் படங்களைப் பார்க்கும் சிறுவர்களுக்கு, அவை நல்ல போதனைகளாக இருந்தது மட்டுமல்லாமல், அவரைப் பின்தொடர வேண்டும் என்ற தீவிர எண்ணத்தையும் அந்தப் படங்கள் ஏற்படுத்தின. மற்ற தமிழ் திரைப்படங்களில்கூட சிறுவர்களைக் காட்டும்போது, அவர்கள் எம்.ஜி.ஆர் படப் பாடல்களைப் பாடுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும். இதுவும் ஒரு தொழில் உத்தி. அடுத்த தலைமுறையை தனக்கு ரசிகராகத் தயார்படுத்தும் சிறப்பான உத்தி. நடிகரும் பத்திரிகையாளருமான சோ, தன் துக்ளக் பத்திரிகையில் எம்.ஜி.ஆரின் தொடரும் செல்வாக்கு பற்றிக் கூறும்போது ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டிருப்பார். அவர் தான் வரும் வழியில் பிளாட்பாரத்தில் ஒட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் படத்தை ஒரு சிறுவன் வணங்கிவிட்டு வந்ததைப் பார்த்திருக்கிறார். அவனை அழைத்து `என்ன செய்தாய்?' என்று கேட்டபோது, அவன் அவரிடம் `எம்.ஜி.ஆரை கும்பிட்டால் நல்லா படிப்பு வரும். அதனால கும்பிட்டுட்டுப் போறேன்' என்றானாம். இவன் வளர்ந்து பெரியவனாகும்போது, தன் பிள்ளைகளுக்கும் இதைத்தான் சொல்வான். அவர்களும் `என் அப்பா தீவிர எம்.ஜி.ஆர் பக்தர்' என்று அவர்கள் பிள்ளைகளிடம் சொல்வார்கள். இப்படித்தான் எம்.ஜி.ஆர் மீதான அன்பு பக்தியாகப் பல இடங்களில் கனிந்துவிட்டது. எம்.ஜி.ஆர் என்ற மனிதர் மாமனிதராகி இப்போது தெய்வமாகிவிட்டார்.
`அடிமைப்பெண்' படத்தில் குழந்தைகள் முதலில் எம்.ஜி.ஆரோடு சேர்ந்து படிப்பார்கள். பிறகு `காலத்தை வென்றவன் நீ...' பாடலில் அவரிடம் கொஞ்சிக் குலவுவார்கள். அவரோடு பேபி ராணிவும் இன்னொரு சிறுவனும் இருக்கும் கட் அவுட்டில் இவர்களுக்கு பதில் அஜித்தின் பிள்ளைகளை இணைத்திருந்தார்கள். மினிப்பிரியா தியேட்டர் வாசலில் வைக்கப்பட்ட அந்தக் கட் அவுட்டைப் பார்த்து பலரும் அஜித் ரசிகர்களின் விவேகத்தைப் பாராட்டினர். `அடிமைப்பெண்' படத்தின் பிற்பகுதியில் பெரியவர்கள் எல்லோரும் தவறான கருத்துடன் எம்.ஜி.ஆரிடம் விரோதப் போக்கைக் காண்பிக்கும்போது, சிறுவர்கள் மட்டும் அவரிடம் ஓடிவந்து `மாமா... மாமா' என்று அழைத்து அன்பு மழை பொழிவார்கள். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பதை நிரூபிக்கும் காட்சி இது.
இந்தப் படத்தில் பேபி ராணி முக்கியமான ரகசியத்தைக் கண்டுபிடிக்கும் புத்திசாலிப் பிள்ளையாகக் காட்டப்பட்டிப்பார். ஜீவாவுக்குப் பதில் பவளவல்லி வந்திருப்பதை அவள் காலில் இருக்கும் ஆறாவது விரலை வைத்து இந்தப் பாப்பா கண்டுபிடித்துவிடும் . அதை வைத்தியரிடம் வந்து கேட்கும்போது, அவர் தூக்கக்கலக்கத்தில் பதில் சொல்லும்போது `பட் பட்' என்று அவர் கன்னத்தில் அடிக்கும். படம் பார்க்கும் பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் சிரித்து ரசித்துப் பார்க்கும் காட்சி இது. கடைசிப் பாடல் காட்சியில் பிள்ளைகளும் தங்களை அந்த விடுதலைப் போரில் இணைத்துக்கொள்வர். `உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது...' என்ற பாடல் காட்சியில் சிறுவர்களும் பங்கேற்றிருப்பது இந்த நாட்டின் நன்மையில் அவர்களுக்கும் நேரடி பங்கு இருப்பதை எம்.ஜி.ஆர் சுட்டிக்காட்டியிருப்பதாகவே தெரிகிறது.
எம்.ஜி.ஆர் ரசிகர்கள் யார்?
எம்.ஜி.ஆருக்கு வயதானவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ரசிகர்கள்தான். அவரது படம், இவர்கள் அனைவரையும் கவரக்கூடியதாக இருந்தது.
கட்சிக் கொள்கை
எம்.ஜி.ஆர்., பகுத்தறிவு பாசறையைச் சேர்ந்தவர். அவர் தன் படத்தில் தன் கட்சியின் சின்னம் மற்றும் கொள்கைகள் இடம்பெறுவதை கட்டாயம் ஆக்கியிருந்தார். அதனால்தான் முக்கியமான தத்துவப் பாடலை தனிப்பாடலை அவர் பாடும்போது தன் கறுப்புச் சட்டை கட்சியைச் சேர்ந்தவன் என்பதை நேரடியாக உணர்த்துவதற்காக அவர் கறுப்புச் சட்டை அணிந்து நடிப்பார். கலர் படமாக இருந்தாலும் அவர் கறுப்புச் சட்டை அணிந்திருப்பார். `எங்க வீட்டுப் பிள்ளை'யில் `நான் ஆணையிட்டால்...' பாடல், `சந்திரோதயம்' படத்தில் `புத்தன், இயேசு, காந்தி பிறந்தது...' போன்ற பாடல் காட்சிகளில் அவர் கறுப்புச் சட்டை போட்டிருப்பதைச் சான்றாகக் கூறலாம்.
`அடிமைப்பெண்' படத்தில். பேய், பிசாசு, மாந்திரீகம் என்பவையெல்லாம் வெறும் பொய் பித்தலாட்டம் எனக் காட்டும் காட்சிகள் இடம்பெற்றன. இந்த விஷயத்தை வேடிக்கையாக நகைச்சுவையாகக் காட்டியிருப்பார். அம்முக்குட்டி புஷ்பமாலா வைத்தியராக இருந்து இப்போது மந்திரவாதியாக மாறி வந்திருக்கும் சந்திரபாபுவை மிரட்டுவதற்காக மண்டையோட்டை பறக்கவிடுவார். பிறகு தானே எலும்புக்கூடு உடையைப் போத்திக்கொண்டு எலும்புக்கூடு நடந்து வருவதுபோல் காட்டி அவரை பயமுறுத்துவார். பிறகு ``இதெல்லாம் பொய். இங்கே பார் மண்டையோட்டுக்குள் புறாவை அழுத்தி வைத்திருக்கிறேன். அதனால் அது அசைகிறது’’ என்பார். படம் பார்க்கும் பிள்ளைகள் சிரித்து மகிழ்வார்கள். சிரிப்புடன் சிந்தனையையும் ஊட்டும் காட்சிகள் இவை.........MGR., Fans International Associations Groups.........
-
"நான் கடவுள் பக்தி உள்ளவன்" கோயிலில் விளக்கேற்றிய எம்.ஜி. ஆர். பேச்சு
"நான் மிகுந்த கடவுள் பக்தியுள்ளவன். கடவுளிடம் எனக்குப் பூரண நம்பிக்கை உண்டு. கடவுளை வணங்காதே கோயிலுக்குப் போகாதே என்று ஒருபோதும் நான் யாரிடமும் கூறியது கிடையாது" இவ்வாறு கோயம்புத்தூர் மருதமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் பொருத்தப்பட்ட மின்சார ஒளி விளக்குகளை ஏற்றி வைத்து புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். பேசினார்.
எம்.ஜி.ஆர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படக் தயாரிப்பாளரான சாண்டோ சின்னப்பா தேவர் மருதமலை சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் மின்சார ஒளி விளக்குகளைப் ஏற்றிவைக்கும் விழாவுக்கு புரட்சி நடிகரையும் அழைத்திருந்தார். எம்.ஜி.ஆர். தொடர்ந்து பேசுகையில் கோவில்களுக் செல்லுபவர்களால் எல்லோரும் பக்திமான் ஆகிவிடப்போவதில்லல். கடவுள் இல்லை என்றோ கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவன் நான் என்றோ ஒருபோதும் சொல்வவில் கடவுள் மேல் பக்தி செலுத்துபவன் நான். ஆனால் கடவுள் பேரைச் சொல்லி ஏமாற்றி பிழைப்பவர்களையும், அதற்கேற்ப சட்டதிட்டங்கள் வகுத்து வைப்பவர்களையும் தான நான் எதிர்கிறேன் என்று கூறினார். ...sb...
-
தாயகம் திரும்பினார் தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் - 3
*18 மாதங்களுக்கு முன்பு பதவி ஏற்றபோது மக்களுக்கு அனித்த வாக்குறுதியில் நாங்கள் சொன்னதைச் செய்ய முடியாமல் போகும்போது எங்கள் ' பதவியைத் தூக்கியெறிந்துவிட்டு மக்களோடு மக்களாக வந்து நிற்போம் என்பதை இங்கே மீண்டும் உறுதிப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.
"இளைஞர்கள் எதிர்காலத் தில் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பொறுப்புகளைப் பெற்றாக வேண்டும். அதற்கான வாய்ப் ஏற்படுத்தித் தரும் மாபெரும் பொறுப்பு நமக்கு உண்டு.
"உழைப்பவர்களே உயர்ந்தவர்கள் என்ற தத்துவத்தைத் தமிழகத்தில் உருவாக்கிக் காட்டுவோம் என்று உறுதி கூறுகிறேன்.
" நான் வெளிநாட்டிற்குச் சென்றிருந்தபோது போராட்டங்கள், கலவரங்கள் இல்லாமல் தமிழகத்தில் அமைதி நிலவ வழி வகுத்த அரசியல் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் அனைவருக்கும் எனது நன்றிபினைத் தெரிவித்துக் கொள்கிறேன், தலைமைச் செயலாளர் அவர்களுக்கும் மற்றும் அனைத்துத்துறை அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
"கடமையைச் செய்வதில் கண்ணியத்தோடும், பொறுப்போடும் கட்டுப்பாட்டோடும், பொறுப் புணர்வோடும் நடந்து கொள்ள வேண்டும் . எதிர்காலத்தில் உழைத்துத்தான் பிழைக்க வேண்டிய மக்களாக வேண்டும்.
" நான் சென்ற மேலை நாடுகளில் வேலைக்கு ஆள் இல்லை என்கிறார்கள். இங்கே ஆளுக்கு வேலை இல்லை. இந்த நிலையை மாற்றிக் காட்டுவோம். அதற்காகப் பல திட்டங்களைத் தீட்டி செயல்படுவது எதிர்காலக்கடமை என்பதை உணர்ந்து செயல்படுவோம் . "அந்த வகையில் நாங்கள் செய்யும் முயற்சிகளுக்கு உங்களுடைய ஒத்துழைப்பைத் தர வேண்டும் .
பிறகு, முதல்வர் அவர்கள் தலைமைச் செயலகம் வந்தார். அங்கு ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அவரை வரவேற்றார்கள், பிறகு தலைமைச் செயலாளர் திரு.வி.கார்த்திகேயன் அவர்கள் அவரை வரவேற்றார்.
முதல்வர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டதாவது " என்னுடைய பயணம் பயன் உள்ள பயணமாகும். தமிழ் நாட்டுத் தொழில் வளர்ச்சிக்காக, தொழில் வளர்வதன் விளைவாக பல்லாயிரக்கணக்கானவர்களுக்குத் தொழில் வாய்ப்புப் பெருக, என்னால் ஆன அனைத்தும் செய்யக் கூடிய வகையில் பல புதிய விவரங்களையும் தொடர்புகளையும் பெற நல்ல வாய்ப்புப் பெற்றேன்.
"அமெரிக்க அரசு நன்றி கூறிப் பாராட்டும் அளவுக்குத் தங்கள் அதிகாரிகள் மூலமாக, பல்வேறு தனியார் துறையைச் சேர்த்த தொழில் அதிபர்கள் போன்றவர்களைச் சந்திக்கவும், மருத்துவத் துறை, கல்வித்துறை காவல்துறை போன்றவைகளில் அவர்கள் செயலாற்றும் விதத்தை ஓர் அரசு எந்த அளவுக்கு வெளிப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு முழு வாய்ப்பை அவர்கள் ஏற்படுத்தித் தந்தார்கள் எனக் கூறும்போது என் உள்ளத்தில் நன்றி உணர்ச்சி ஏற்படுகிறது என்பதை மனநிறைவோடு கூறிக் கொள்கிறேன்.
" நான் சென்ற நாடுகளில் எல்வாம் , குறிப்பாக அமெரிக்க நாட்டில் எங்கெங்கு சென்றேனோ அங்குள்ள இந்தியப் பேரரசின் தூதரக அதிகாரிகளைக் கொண்டு எணக்கம் என்னோடு வந்த என்னுடைய அந்தரங்கச் செயலாளர் லட்சுமிநாராயணனுக்கும் முழு ஒத்துழைப்பையும் தந்ததோடு, அந்தந்த நாட்டு அரசு அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு நாங்கள் பாரைச் சந்திக்க விரும்புகிறோமோ அவர் களைச் சந்திப்பதற்கான வாய்ப்புக்களை நிறைவேற்றித்தரவும், அவர்கள் எடுத்துக்கொண்ட அக்கறையையும் பொறுப்புணர்ச்சியையும், செயலாற்றும் முறையையும் பெரிதும் பாராட்டக்கட கடமைப்பட்டுள்ளேன்.
"என் பயணம், நான் மேலே சொன்ள பல பிரச்சினைகளைப் பற்றி இருந்தது என்றாலும் அத்தோடு கடல் அரிப்பினால் ஏற்படுகிற அபாயத்தைத் தடுத்து நிறுத்தவும், அண்மைக் காலங்களில் கடல் கொண்ட இடங்களைத் திருத்தி அமைத்து நிலமாக்கவும் வேண்டிய களையும் பெற்றதோடு மட்டும் அன்றி, சிங்கப்பூர் நாட்டில் அந்த ஆட்சியினர் இது விஷயத்தில் எடுத்துக்கொண்ட தடைமுறைச் செயல்களின் விளைவாக என்ன பலன் ஏற்பட்டுள்ளது என்பதை நேரடியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும் என்னால் முடிந்தது என்பதைக் குறிப்பிட்டுக் விரும்புகிறேன்.
"தாயகம் திரும்பிய தமிழக முதல்வரைக் காண்பதற்கு தமிழகத்து மக்களே, சென்னை நகரில் திரண்டருந்தனர் என்றால் அது மிகையாகாது. .........sb...
-
#புரட்சி_தலைவர்
#இதயதெய்வம்
மன்னாதி மன்னன்
#பாரத_ரத்னா_டாக்டர்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். #அவர்களின்_ஆசியோடு
#என்_முகநூல்_சொந்தங்கள்
#மற்றும்_நண்பர்கள்_அனைவருக்கும்
#இனிய_ஞாயிற்றுக்கிழமை
#காலை_வணக்கம்...
#திரு_எஸ்_பி_பாலசுப்பிரமணியம் #அவர்களின்_மறைவால்_இரண்டு
#நாட்களாக_தலைவர்_பற்றிய_பதிவுகள்
#பதிவிட_இயலவில்லை
#மன்னிக்கவும்...
புரட்சி தலைவர் எம்ஜியார்
முறைப்படி பள்ளி, கல்லூரிகளில் பெரிய படிப்பு படித்தவர் அல்ல. என்றாலும் கல்லூரிகளில் படித்தவர்களைவிட அதிக விஷயங்களை படித்தவர். தமிழிலே ஆழமான புலமை மிக்கவர்.
சினிமா, அரசியல் என்று இரு துறை களிலும் முதல் இடத்தில் இருந் தவர் எம்.ஜி.ஆர்.! அதற்காக அவர் உழைத்த உழைப்புக்கே நேரம் போதாது எனும்போது, மற்ற துறைகளிலும் ஆழ்ந்த கவனம் செலுத்துவதற்கு எங் கிருந்து அவருக்கு நேரம் கிடைத்திருக் கும் என்று யோசித்தால் பிரமிப்புடன் கூடிய வியப்பு ஏற்படுவது நிச்சயம்.
பல துறைகளிலும் எம்.ஜி.ஆர். பெற்றிருந்த பரந்த, ஆழமான அறிவுக்கு அவர் அதிக அளவில் பல விஷயங் களைப் படித்ததே காரணம். தனது ராமாவரம் தோட்டத்து வீட்டில் நிலவறை கட்டி அதில் ஏராளமான நூல்களை வைத்திருந்தார். கிடைக்கும் நேரத்தில் நூல்களைப் படித்து ஆழமான பொது அறிவையும் தமிழறிவையும் பெற்றிருந்தார். அவர் பயன்படுத்திய நூல்களின் ஒரு பகுதி நினைவு இல் லத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
‘இணைந்த கைகள்’ என்ற படத்தை எடுக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார். பூஜை போடப்பட்டு சில காட்சிகள் படமாக்கப்பட்டன. என்றாலும் பல்வேறு காரணங்களால் படம் நின்றுபோனது. அந்தப் படத்துக்காக நாயகனை எண்ணி நாயகி பாடுவதுபோல, கவிஞர் வாலி எழுதிய ஒரு பாடலின் பல்லவி இது:
‘உன் கைக்கிளையில் நானமரும் கிளியாக மாட்டாமல்
கைக்கிளையில் வாடுகிறேன் கண்ணீரில் ஆடுகிறேன்’’
பல்லவியைக் கேட்டு எம்.ஜி.ஆர்., ‘‘பிரமாதம், பிரமாதம்’’ என்று வாலியைப் பாராட்டினார். அப்படி அவர் பாராட்டுகிறார் என்றால், ‘கைக்கிளை’ என்ற சொல்லை சிலேடையாக வாலி பயன்படுத்தியதை அவர் வெகுவாக ரசித்திருப்பதன் வெளிப்பாடு அது. தமிழ் அறிந்தவர்களுக்கே அந்த சிலேடை புரியும். முதலில் வரும் ‘கைக்கிளை’க்கு, ‘உன் கையாகிய கிளையில்’ என்று பொருள். இரண்டாவதாக வரும் ‘கைக்கிளை’க்கு ‘ஒருதலைக் காதலில் வாடுகிறேன்’ என்று அர்த்தம். அதன் பொருளை எம்.ஜி.ஆர். புரிந்து ரசித்திருப்பதன் மூலம் அவரது தமிழறிவை புரிந்து கொள்ள முடியும்.
‘இன்றுபோல் என்றும் வாழ்க’ படத்தில் ஆரம்பத் தில் ‘இது நாட்டைக் காக்கும் கை…’ என்ற பாடல் இடம் பெறும். பாடலின்போது ஒரு இடத்தில், மாணவர் களுக்கு ஆசிரியர் திருக் குறளை கரும்பலகை யில் எழுதி பாடம் நடத் துவதுபோல காட்சி. ‘சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம், அத னால் உழந்தும் உழவே தலை’ என்ற குறள் கரும்பலகையில் எழுதப்பட்டிருக் கும். காட்சி படமாக்கப்படுவதற்குமுன், கரும் பலகையில் எழுதப் பட்டிருந்த அந்தக் குறளில் பிழை இருப்பதை எம்.ஜி.ஆர். கவ னித்து திருத்தினார். அந்த அளவுக்கு தமிழறிவு மிக்கவர்.
நீதியரசர் மு.மு.இஸ்மா யிலை தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். நீதியின் மறு வடிவமாக விளங்கிய நடுநிலை தவ றாதவர். கம்பனில் தோய்ந்து கரை கண்ட இலக்கியவாதி. கம்பன் கழகத்தின் தலை வராகவும் பணியாற்றியவர்.
ஒருமுறை, கம்பன் கழகம் சார்பில் சென்னையில் நடந்த கம்பன் விழாவை எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். நீதியரசர் மு.மு.இஸ்மாயில் உட்பட தமிழறிஞர்களே வியக்கும் அளவுக்கு கம்ப ராமாயணத்தில் கம்பனுடைய கவிதைகளில் இருந்து இலக்கிய நுணுக்கமும் பொருட்செறிவும் நிறைந்த சில கவிதைகளை எந்தக் குறிப்பும் இல்லாமல் எடுத்துக் காட்டிப் பேசினார். தமிழறிஞர்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.
எம்.ஜி.ஆர். பேசி முடித்து இருக்கை யில் அமர்ந்ததும் அருகே அமர்ந்திருந்த நீதியரசர் மு.மு.இஸ்மாயில் அவரை பாராட்டிவிட்டு, ‘‘உங்களுக்கு கம் பனைப் படிக்கும் வாய்ப்பு எப்படி ஏற்பட் டது?’’ என்று கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘நான் சிறுவனாக இருக் கும்போது ‘சம்பூர்ண ராமாயணம்’ நாடகத்தில் நடிக்க வேண்டியிருந்தது. அப்போது கம்ப ராமாயணத்தைப் படித்திருக்கிறேன். அதனால்தான், அந்தப் பாடல்களைப் பற்றி இப்போது என்னால் பேச முடிந்தது’’ என்றார். எம்.ஜி.ஆரின் தமிழறிவை மட்டுமின்றி, நினைவாற்றலையும் கண்டு வியந்து போனார் நீதியரசர் இஸ்மாயில்.
இதேபோல, மற்றொரு முறையும் கம்பன் கழகம் நடத்திய விழாவிலே எம்.ஜி.ஆர். கலந்து கொண்டபோது, பரிசு பெற்ற சில இளைஞர்கள் பேசினர். தமிழ் இலக்கணத்தில் மெய்ப்பாடு என்று ஒன்று உண்டு. தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியத்திலே மெய்ப்பாட்டு இயல் என்று ஒரு இயலே உண்டு. அந்த இயலின்படி, நகை, அழுகை, இழிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டும் மெய்ப்பாடுகள் என்பது தொல்காப்பியரின் கூற்று.
விழாவில் பேசிய ஒரு இளைஞர், இந்த எட்டையும் குறிப்பிட்டுவிட்டு ‘சம நிலை’ என்பதையும் சேர்த்து மெய்ப்பாடு கள் ஒன்பது என்று பேசினார்.
பின்னால் பேசிய எம்.ஜி.ஆர். அந்த இளைஞர் பேசியதை சுட்டிக்காட்டி, ‘‘தமிழ் இலக்கண மரபுப்படி மெய்ப்பாடு கள் எட்டுதான். சமநிலை என்பது வடமொழி இலக்கியத்தில் இருந்து வந்து பின்னால் சேர்ந்தது’’ என்று கூறினார். எம்.ஜி.ஆரின் தமிழறிவைக் கண்டு இஸ்மாயில் உள்ளிட்ட தமிழறிஞர்கள் வியப்பின் உச்சிக்கே சென்றனர். எம்.ஜி.ஆரிடம், ‘‘இது எப்படி உங் களுக்குத் தெரியும்’’ என்று இஸ்மாயில் கேட்டார். அமைதியாக எம்.ஜி.ஆர். பதிலளித்தார்… ‘‘தொல்காப்பியம் படித்திருக்கிறேன்.’’ அசந்துபோனார் நீதியரசர் இஸ்மாயில்!
எவ்வளவோ விஷயங்கள் படித்திருந் தாலும் தனக்கு எல்லாம் தெரிந்தது போல எம்.ஜி.ஆர். காட்டிக் கொள்ள மாட்டார். ‘இதய வீணை’ படத்தில், ‘காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்...’ பாட லின் நடுவே, எம்.ஜி.ஆரைப் பார்த்து நடிகை மஞ்சுளா, ‘‘ஆமா, நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க? ’’ என்று கேட்பார்.
அதற்கு, தான் படித்த உலகின் உயர் வான புத்தகம் குறித்தும், அந்தப் புத்தகம் தந்த தாக்கத்தால் அறிந்த தத்துவம் பற்றியும் பாடலின் மூலமே அடக்கத் துடன் எம்.ஜி.ஆர். இப்படி பதிலளிப்பார்...
‘சத்தியம்தான் நான் படித்த புத்தகம் அம்மா;
சமத்துவம்தான் நான் அறிந்த தத்துவம் அம்மா!’
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தமிழறிஞர் களின் கோரிக்கையை ஏற்று, தஞ்சையில் தமிழுக்கு என்றே தனியாக தமிழ் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். மற்ற பல்கலைக்கழகங்களைவிட பெரிதாகவும் எல்லா வசதிகளையும் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக 1,000 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார்!
அன்புடன்
படப்பை பாபு...
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி* 24/09/20* அன்று அளித்த*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------
ஒரு புன்னகை என்பது தொற்றிக்கொள்கிற* ஒரு நல்* உபாயம் என்பதை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் வாழ்க்கையில் கற்று கொடுத்திருந்தார் . இந்தி நடிகர் திலீப் குமார் எம்.ஜி.ஆர். அவர்களின் புன்னகை பல கோடி பெறும் என்று சொல்லி இருக்கிறார் . அந்த புன்னகை எல்லோருக்கும் வரவேண்டும் என்று விரும்பியவர் .தன்னுடைய திரைப்படங்களில் கூட அதிகபட்சமாக சோகரச காட்சிகள் இடம் பெறுவதை தவிர்த்து ,தன்னுடைய படங்களை பார்ப்பவர்கள்எல்லோரும்எந்த காரணத்தினாலும்** மன அழுத்தம்,துக்கம், துயரம் ஆகியவற்றுடன் வீடு திரும்ப கூடாது என்பதற்காக திரைக்கதைகள் அமைப்பதில்ஒவ்வொரு நொடியும்* மிகவும் கவனமாக இருந்தார் அதனால்தான் அவரது படங்களில் சோகம் என்பதை அவ்வளவாக காணமுடியாது . அதே நேரத்தில் ஆழமாக உழைத்தால் முன்னேறலாம் . நீங்கள் நல்லவராக இருந்தால் வெற்றி பெறலாம் .* நீங்கள் ஊருக்கு நன்மை செய்தால் உயர்வு பெறலாம் என்கிற படிப்பினைகள் பாடங்களை மட்டுமே தன்னுடைய படங்களில் வைத்திருந்தார் .
ஏதோ சில காரணங்களால் வீடு ஜப்தி செய்ய நேரிட்டால் நீதிமன்ற உத்தரவின்படி அமீனா வந்து அந்த வீட்டை ஜப்தி செய்வார் .* ஒருகால கட்டத்தில் எம்.ஜி.ஆரின் வீடு ஜப்தி ஆகும் நிலையிருந்தது .மாலையில் வந்த நீதிமன்ற உத்தரவால் அது தடுக்கப்பட்டது .அப்போது நெல்லையில் இருந்து ஆமினா என்ற இஸ்லாமிய தாயார் தன்னுடைய இரு மகன்களோடு வந்து எம்.ஜி.ஆரை பார்க்க காத்திருக்கிறார் .இதை அறிந்த எம்.ஜி.ஆரின் கதை இலாகாவை சேர்ந்த ரவீந்தர் அவர்களிடம் நீங்கள் என்ன விஷயமாக வந்தீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார் .இல்லை நான் எம்.ஜி.ஆர்.அவர்களை பார்க்க வந்துள்ளேன் .அவரிடம்தான் சில விஷயங்கள் பேசவும் ,சொல்லவும் வேண்டும் என்றார் .இதை ரவீந்தர் எம்.ஜி.ஆரிடம் சொன்னதும் .இந்த விதவை தாயார்* என்ன விஷயமாக* வந்திருப்பார்கள் என்று ஒரு கணம் யோசித்து ,ரவீந்தரிடம் சரி இவர்களை எதற்கும் சத்யா ஸ்டுடியோவிற்கு அழைத்து வாருங்கள் .நேரமாகிவிட்டது .அங்கு பேசலாம் என்றார் .
ராமாவரத்தில் இருந்து கார் மூலம் ரவீந்தர் அவர்களை அழைத்து கொண்டு சத்யா ஸ்டூடியோ* செல்கிறார் .* படப்பிடிப்பின் இடைவேளையின்போது அவர்களை எம்.ஜி.ஆர். அழைத்து என்ன விஷயமாக வந்தீர்கள் என்று கேட்கிறார் .ஆமினா என்கிற அந்த இஸ்லாமிய தாயார் தன்* கையில் உள்ள வீட்டு பத்திரத்தை எம்.ஜி.ஆரிடம் தருகிறார் . எங்களுக்கு நெல்லையில் ஜவுளிக்கடை, பாத்திரக்கடை எல்லாம் இருக்கிறது .இவர்கள் என்னுடைய மகன்கள் .இவர்களின் முன்னிலையில் எங்கள் வீட்டு பத்திரத்தை உங்களுக்கு அளிக்கிறேன் இது என் பிள்ளைகளின் சொத்துதான் .அந்த மகன்களுக்கு சுமார் 18, 20 வயது இருக்கும் . எம்.ஜி.ஆர்.இதை எல்லாம் கேட்ட பிறகு அவருக்கு ஒன்றும் சரியாக புரியவில்லை . இந்த வீட்டு பத்திரத்தை வைத்து உங்களுக்கு பணம் தர வேண்டுமா* அல்லது வேறு வகையில் ஏதாவது உதவி செய்ய வேண்டுமா என்று கேட்கிறார் .இல்லை ஐயா ,உங்கள் வீடு ஜப்தியாவதாக பத்திரிகைகளில் செய்திகள் படித்தேன் .நீங்கள் இந்த பத்திரத்தை வைத்து வீட்டை தற்சமயம் மீட்டு எடுத்து கொள்ளுங்கள் . உங்களுக்கு எப்போது முடியுமோ அப்போது பத்திரத்தை திருப்பி கொடுத்தால் போதும் ஏனென்றால் எங்களது வாழ்க்கை உங்களால்தான் மலர்ந்தது என்கிறார் . எம்.ஜி.ஆருக்கு அப்போதும் புரியவில்லை .நான் எப்படி உங்களுக்கு உதவிகரமாக இருந்திருக்கிறேன் நான் எப்போதாவது உங்களுக்கு* பண உதவியோ அல்லது வேறு ஏதாவது உதவியோ செய்திருக்கிறேனா என்று கேட்கிறார் .* இல்லை .தந்தையை இழந்த என்* பிள்ளைகள் தாறுமாறாக வளர்ந்து கொண்டிருந்தபோது எங்களது வாழ்க்கை முறையில் திரைப்படங்கள் பார்ப்பதே தவறு என்று ஒரு கட்டுப்பாடு இருந்தது நான் திரைப்படங்கள் பார்த்தது இல்லை .ஆனால் என் மகன்கள் உங்கள் படங்களை பார்த்து பார்த்து என்னையும் பெரியவர்களையும் மதிக்க கற்றுக்கொண்டார்கள் .என்னை போற்றி புகழ்கிறார்கள். அவர்கள் மனம் திருந்தி நல்ல வழியில் வாழ்க்கை நடத்துவதற்கு உங்களின் படங்கள் அவர்களுக்கு பாடங்களாக அமைந்தன .ஆதலால்தான் இந்த சொத்தை உங்களுக்கு நெருக்கடியான* நேரத்தில் கொடுத்து உதவ முன் வந்தேன் என்றார் .எம்.ஜி.ஆர். மனம் நெகிழ்ந்து,அந்த தாயாரை வணங்கி ,தனக்கு உதவ முன் வந்ததற்கு நன்றி தெரிவித்தார் .அத்துடன் என்னுடைய வீடு ஜப்தி ஆகவில்லை .நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வந்துள்ளது . ஆகவே தங்களின் உதவும் பண்பிற்கு* நன்றி என்று சொல்லி அந்த தாயாரிடம் பத்திரத்தை திரும்ப கொடுத்ததோடு ஒரு சிறிய தொகை கொடுத்து நல்லபடியாக வீடு திரும்புங்கள் என்று சொல்லி அனுப்பியதாக இந்த சம்பவத்தை ரவீந்தர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் .
திரு.கா .லியாகத் அலிகான் அவர்களின் பேட்டி*
----------------------------------------------------------------------------
ஆவேசம் எடுத்து ஒருஇளைஞர் பட்டாளமே திரண்டு வந்ததற்கு காரணம் திரைப்படங்களில் அவர் சொல்லிய படிப்பினைகள் பாடங்களா,அல்லது அவரது தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றின் ஈர்ப்பா என்று திரு.துரை பாரதி கேட்க அதற்கு திரு.லியாகத் அலிகான் அளித்த பேட்டியின் விவரம்*
தனிப்பட்ட வாழ்க்கை வரலாறு என்று பார்த்தால்* ஓரளவு தான் மக்கள் மனதில் சென்றடையும் .அவர் திரைப்படங்களில் தான் நடித்தபடி, சொன்னபடி நடந்தார் என்பதால்தான் மக்களுக்கு ,இளைஞர்களுக்கு,குறிப்பாக மாணவர்களுக்கு எல்லாம் ஒருவித ஈர்ப்பு உண்டானது .அவர் திரைப்படங்களில் புகைபிடிப்பது போல நடித்ததில்லை .நிஜ வாழ்க்கையில் புகை பிடிப்பதில்லை .படங்களில் மது அருந்துவது போல நடித்ததில்லை .அதே போல நிஜத்திலும் மது அருந்தியவரில்லை .இந்த கால நடிகர்கள் பார்த்தீர்களேயானால் வாருங்கள் இன்று மகிழ்ச்சியாக கொண்டாடுவோம் என்று மது அருந்துவதில் நேரத்தை செலவழிக்கிறார்கள் .ஆனால் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒளிவிளக்கு படத்தில் மது அருந்துவது தவறு .தீமையை தர கூடியது என்ற வகையில் ஒரு எம்.ஜி.ஆர். மது அருந்துவது போல நடிப்பார் .இன்னொரு எம்.ஜி.ஆர். வந்து அவருக்கு அறிவுரை கூறியபடி தைரியமாக சொல் நீ மனிதன்தானா, நீ தான் ஒரு மிருகம் என்று பாடுவார் .அதன்படிதான் நடந்து காட்டினார் என்பதால் தான் மக்களுக்கு ,இளைஞர்களுக்கு,மாணவர்களுக்கு எல்லாம் அவர்மீது ஒரு மிக பெரிய ஈர்ப்பு ஏற்பட்டது .
தி.மு.க. வளர்ச்சியுற்ற காலத்திலும் சரி , எம்.ஜி.ஆர்.,சிவாஜிகணேசன் காலத்திலும் சரி, அந்த ரவிவர்மா பெயின்டிங் போல சிறு நரைகூட தெரியாதது போலமுடியே தெரியாத அளவிற்கு** சேவிங் செய்யப்பட்டு , வண்ணங்கள் தீட்டப்பட்ட ஓவியமாக இருந்தார் .என்று திரு.துரை பாரதி சொன்னதற்கு*திரு.லியாகத் அலிகான் அளித்த பதில் :நீங்கள் முதலில் சொன்ன வார்த்தை ரவிவர்மா ஓவியம் போல ஒரு சிறு* கருப்பு முடி கூட தெரியாமல் இருக்க வேண்டுமென்று எம்.ஜி.ஆர்.,சிவாஜிகணேசன் போன்றவர்கள் எல்லாம் இருந்தார்கள் என்று சொல்கிறீர்கள் அல்லவா ,எம்.ஜி.ஆர். அவர்களின் எண்ணம் என்னவென்றால் உணவு நமக்காக உண்ணுகிறோம் . வீட்டில் தனியாக உண்கிறோம். அல்லது குடும்பத்தினருடன் உண்ணுகிறோம் .நாம் என்ன உணவு அருந்துகிறோம் என்பதில் வெளியில் தெரிய வாய்ப்பில்லை .* ஆனால் உடை அணிவதை பிறருக்காக செய்கிறோம் பிறர் நம்மை கவனிக்கிறார்கள், பார்க்கிறார்கள்.பிறருடைய பார்வையில் நமது உடையும் ,தோற்ற பொலிவும் அவர்களை ஈர்ப்பது போல இருந்தால்தான் நம் மீது பிறருக்கு மரியாதை வரும் என்பது புரட்சி தலைவரின் சிந்தனை .அதனால்தான் அவர் வெளியே வரும்போதோ,தோன்றும்போதோ,லுங்கி அணிந்து வருவதோ கிழிசலான சட்டை மற்றும் உடைகள் அணிந்து வருவதையோ அவர் விரும்புவதில்லை .யாரும் அப்படி ஒரு தோற்றத்தில் பார்த்திருக்க முடியாது திரைப்படங்களில் தவிர .ஆனால்* பேரறிஞர் அண்ணா உடை விஷயங்களில் தனி கவனம் செலுத்துவதோ, அதை பற்றி கவலைப்படுபவரோ இல்லை .அது வேறு விஷயம் .எம்.ஜி.ஆர்.அவர்கள் நடிகராக இருந்ததால் மக்கள் அதையெல்லாம் எதிர்பார்த்தார்கள் . பேரறிஞர் அண்ணா,பெருந்தலைவர் காமராஜர் போன்றவர்கள் எல்லாம் சாதாரணமாக எளிய முறையில் உடை அணிந்து பழகியவர்கள் .அவர்களிடம் வேறு மாதிரி எதையும் எதிர்பார்க்க முடியாது*
எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை வைத்து இயக்குனர் ஸ்ரீதர் சிவந்த மண் என்ற படத்தை துவக்க இருந்தார் .அந்த படத்தில் வசனங்கள் காட்சிகள் எம்.ஜி.ஆர். அவர்களின் கருத்துக்கள், எண்ணங்களுக்கு மாறுபட்டு இருக்கும்போது நடிக்க மறுத்துவிட்டார் . உடனே ,இயக்குனர் ஸ்ரீதர் ,நீங்கள் சித்ராலயா நிறுவனத்தின் படத்தில் நடிக்கிறீர்கள் என்பதை கொஞ்சம் கவனத்தில் வைத்து கொள்ள வேண்டும் என்கிறார் .பதிலுக்கு எம்.ஜி.ஆர். படப்பிடிப்பை ரத்து* செய்துவிட்டு புறப்பட தயாராகும்போது நான் பொழுது போக்கிற்காகவோ, பணத்திற்காகவோ உங்கள் படத்தில் நடிக்கவில்லை . பொறுப்பான நடிகர் என்ற முறையில் மக்களுக்கு உகந்த,மனித* சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்களை சொல்ல முற்படவே உங்கள் படத்தில் நடிக்க முடிவெடுத்தேன் . இனி நடிப்பதில்லை என்று மறுத்துவிட்டார் .பிறகு சில ஆண்டுகள் கழித்து சிவாஜி கணேசனை வைத்து சில வெளிநாடுகளுக்கு சென்று படம் எடுத்தார் . அப்படி எடுத்த படம்*வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெறவில்லை .இயக்குனர் ஸ்ரீதர் அதன் பின்னர் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டார் . அந்த பாதிப்பில் இருந்து மீள முடியாமல் அவதிப்படும்* நிலையில் நேரடியாக எம்.ஜி.ஆர். அவர்களிடம் செல்லாமல் தயாரிப்பாளர் தேவர் அவர்களிடம் சொல்லி தனது இக்கட்டான சூழ்நிலையை சொல்லி மனம் வருந்தினார் . நான் மீண்டு வந்து திரையுலகில் எழுச்சி பெற ஏதாவது ஒரு நல்ல வழியை சொல்லுங்கள் என்றார் .உடனே தேவர் .கவலைப்படாதீர்கள் .ஆபத்து பாண்டவன், அநாதை ரட்சகன் முருகன்* இருக்கும்போது வீணாக மனதை அலட்டி கொள்ளாமல் எம்.ஜி.ஆரை போய் சந்தியுங்கள் என்றார் .ஆனால் ஸ்ரீதர் ஏற்கனவே அவரை வைத்து நான் ஒரு படம் எடுக்க இருந்தபோது நான் சரியாக நடந்து கொள்ள வில்லை என்று என்மீது அவருக்கு கோபம் இருக்கும் . நான் எப்படி அவரை நேரில் சந்திப்பது என்றார் .ஆனால் தேவர் எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி எம்.ஜி.ஆரிடம் அழைத்து சென்றார் ..எம்.ஜி.ஆர்.தன் வீட்டில் இருவருடனும்*உணவு அருந்தும்போது எதை பற்றியும் பேசவில்லை .உணவருந்திய பின் தேவர்*எம்.ஜி.ஆரிடம் இயக்குனர் ஸ்ரீதருக்கு ஒரு படம் நடித்து தாருங்கள் என்றார் .உடனே எம்.ஜி.ஆர். அதை ஸ்ரீதர் என்னிடமே நேரடியாக கேட்கலாமே .நீங்கள் ஏன் சிபாரிசு செய்ய வேண்டும் .அவர்மீது எனக்கு கோபமில்லை என்றார் .ஸ்ரீதருக்கு உடனே முகத்தில் ஒருவித மலர்ச்சி ஏற்பட்டது .பின்னர் சகஜமாக பேசும்போது*ஒரு பேப்பரில் சித்ராலயா நிறுவனத்தின் தயாரிப்பில் ,ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கும் உரிமைக்குரல் என்று படத்தின் பெயரை குறிப்பிட்டு எழுதி கொடுத்தார் . அத்துடன் நீங்கள் எனக்கு அளித்த பழைய அட்வான்ஸ் தொகையே போதும் .முதலில் படத்தை எடுத்து முடியுங்கள் உடனடியாக கால்ஷீட்டுகள் தருகிறேன் .குறித்த காலத்தில் எடுத்து முடிப்போம் என்றார் .ஸ்ரீதர் இந்த தலைப்பு மிக அற்புதம் ,என்று சொன்னதோடு, எம்.ஜி.ஆரின் பெருந்தன்மையை வியந்து பாராட்டினார் .எம்.ஜி.ஆரின் குணாதிசயங்கள், பொறுமையின் சின்னத்தை ,ஆழ்ந்த மன உளைச்சலில் இருந்த ஒரு மனிதனை எப்படி,எவ்வளவு* சந்தோஷப்படுத்துவது என்கிற உணர்வை எண்ணி இயக்குனர் ஸ்ரீதர் மிக பெரிய ஒரு மலைப்பாக எம்.ஜி.ஆரை பற்றி பேசிய காலம் உண்டு என்று லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .
அள்ள அள்ள* குறையாத பெருமைகள்,தீராத வியாதிபோல நீண்டுகொண்டே இருக்கிறது .அப்படிப்பட்ட மக்கள் திலகத்தின்* நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்ற மக்கள் திலகத்தை தங்கள் நெஞ்சங்களில் வைத்து போற்றுகின்ற ஆண்டிபட்டி வசந்தி, சென்னை லோகநாதன் ராமச்சந்திரன், மும்பை புலவர் ராமச்சந்திரன் ,திருச்சி மிளகுபாறை மஜீத் போன்றவர்கள் எல்லாம் நமக்கு மிகவும் தெரிந்த பெயர்கள் .இன்னும் தெரியாத லட்சக்கணக்கானவர்கள் உள்ளனர் .எங்கே அவரை பற்றி தவறாக கருத்துக்கள் சொல்லிவிடுவோமோ என்றுவருத்தப்பட்டு* கண்ணீர் விட தயாராக உள்ள சகோதரிகளும் இருக்கிறார்கள் .
ஒரு மகா பெரிய புத்தகம் ,பொக்கிஷம் போல* ,ஒரு பல்கலை கழகமாக, பலருக்கு நம்பிக்கை நாற்றாக, ஊற்றாக இன்றைக்கும் இருந்து* இருக்கிறார் எம்.ஜி.ஆர்.* அந்த அற்புத நாயகன் என்பவரின்**சாதனைகள்* பற்றி சொல்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு நான் உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் .தொடர்ந்து மற்ற தகவல்களை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------------
1.சிரித்தாலும் போதுமே,செவ்வானம் தோன்றுமே -நீதிக்கு பின் பாசம்*
2.நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - நம் நாடு*
3.நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி - பெற்றால்தான் பிள்ளையா*
4.திரு.கா.லியாகத் அலிகான் அவர்களின்* பேட்டி*
5.சண்டை காட்சியில் எம்.ஜி.ஆர். - காவல்காரன்*
6.காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ -அடிமைப்பெண்*
-
மக்கள் திலகம் எம் ஜி ஆரால் ...
மேல் ஆதிக்க காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது எம் ஜி ஆரால்
அண்ணா ,கருணாநிதி முதல் திராவிட ஆட்சி இன்று வரை நிலைத்திருப்பது எம் ஜி ஆரால்
தமிழக மக்கள் ஒரு பொற்கால ஆட்சி கண்டது எம் ஜி ஆரால்
சத்துணவு முதல் செருப்பு வரை காணாத மக்களை இவை பயன்பட்டது எம் ஜி ஆரால்
ப்ளஸ் டூ அண்ணா பல்கலைகழகம் உட்பட எட்டு பல்கலைகழகம் தொழிற்க்கல்வி அமைந்தது எம் ஜி ஆரால்
குடிசைகளும் ஒளி வீசியது எம் ஜி ஆரால்
கிராமங்களும் தன்னிறைவு திட்டத்தால் நகரம் ஆனது எம் ஜி ஆரால்
மக்கள் தாகம் தீர கிருஷ்ணா நதி வந்தது எம் ஜி ஆரால்
தமிழ் வளமானது எம் ஜி ஆரால்
தமிழகம் மேற்க்கல்வியில் உலகம் போற்ற சிறந்தது எம் ஜி ஆரால்
பொன்மன செம்மல் தந்தது பொற்கால ஆட்சி
எடுத்து பார்த்த மக்களை கொடுத்து பார்க்கும் முதல்வரை காண வைத்தது எம் ஜி ஆர்
ஆட்சியில் தன் வைத்திய செலவையையே திருப்பி அரசுக்கே கொடுத்த ஒரே இந்திய முதல்வர் எம் ஜி ஆர் ... உலக தலைவரும் எம்.ஜி.ஆர்., தான்...
போற்றுவோம் உலகம் உள்ளவரை பொன்மன செம்மல் எம் ஜி ஆர் புகழை
வளர்க...வாழ்க ...எம். ஜி .ஆர் .,புகழ்.........Amg...