நடிகர் திலகம் நடித்து மார்ச் மாதம் வெளியான திரைப்படங்களின் பட்டியல்.
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...56&oe=60659403
Thanks Vaan nilaa
Printable View
நடிகர் திலகம் நடித்து மார்ச் மாதம் வெளியான திரைப்படங்களின் பட்டியல்.
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...56&oe=60659403
Thanks Vaan nilaa
குறவஞ்சி 4/03/1960---இன்று 61 ஆண்டுகள் நிறைவு.
https://scontent-ort2-1.xx.fbcdn.net...51&oe=60671D51
Thanks Petchimuthu Sudalaimuthu
தியாகம் 4/03/1978 --இன்று 43 ஆண்டுகள் நிறைவு .
https://scontent-ort2-1.xx.fbcdn.net...09&oe=6067886Ahttps://scontent.fybz2-2.fna.fbcdn.n...00&oe=606577FE
https://scontent-ort2-1.xx.fbcdn.net...fd&oe=606565AE
மனித வளம் பெற நடிகர் திலகம் வழங்கியது.
உன்னை மிஞ்சும் நடிகன் உலகில் தோன்றவில்லை.
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...a3&oe=606646BD
Thanks Vijaya Rai Kumar
ஒரு நாட்டின் அதிபர் இந்திய விஜயம் மேற்கொண்டு பிரதமரை பார்த்த பிறகு,
உங்கள் நாட்டு நடிகர் சிவாஜி அவர்களை பார்க்கவேண்டும் என்று கூறி,
சிறப்பு protocal (நெறிமுறை) அடிப்படையில் சென்னையில் வந்து அவரை கண்டது,
உலகளலில் திரு சிவாஜி அவர்களை மட்டுமே.
கண்டவர் எகிப்து அதிபர் திரு நாசர் அவர்கள்.
https://scontent-ort2-1.xx.fbcdn.net...bb&oe=606AD3A6
Thanks K V Senthil Nathan
நடிகர்.திரு.M.N. நம்பியார் அவர்கள்.
உலகின் தலைசிறந்த நடிகர்களில் எல்லாம் அவர் தலை சிறந்தவர். எந்த வேடமாக இருந்தாலும் மற்றவர்களைவிட திறமையாக செய்யக்கூடியவர். உத்தமபுத்திரன் படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். வில்லன் சிவாஜிக்கு துணை நின்று ஆலோசனை கூறும் பாத்திரத்தில் நான் நடித்திருப்பேன். அந்தப் படத்துக்குப் பிறகும் சிவாஜி வில்லனாக நடித்திருந்தால், எனக்கெல்லாம் வேலை இல்லாமல் போயிருக்கும்.
யயாதி மகாராஜா, இந்திரலோகத்திலிருக்கும் தேவர்கள் போல் இளமையாகவே வாழ விரும்பினார். அதற்கு அவரது பிள்ளைகளில் எவராவது தனது இளமையைத் தந்தால் அவர் இளைமையுடன் வாழலாமென ரிஷி ஒருவர் வரம் தந்தார். ஆனால் எந்தப் பிள்ளையும் தங்களது இளமையைத் தர முன் வர வில்லை. அவர் பெற்ற பிள்ளைகளில் அரூபியாக இருந்த ஒரு பிள்ளையை மட்டும் அவர் வெறுத்து ஒதுக்கினார். (கிட்டத்தட்ட தெய்வ மகன் கதை போல் இருக்கிறதே)அந்தப்பிள்ளை தனது இளைமையை தன் தந்தைக்கு தந்ததாக புராணக் கதையொன்று உண்டு. யயாதியின் நிலையில் சிவாஜி இருந்திருந்தால், நான் என் இளமையைத் தந்திருப்பேன்.
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...0e&oe=606D6A93
Thanks Ganesh Pandian (Nadigar thilagam sivaji visirigal)
இன்று முதல்(மார்ச் 12 )
சேலம் கீதாலயா,
நெல்லிக்குப்பம் விஜயா&
நடுவீரப்பட்டு ராஜா. நடிகர் திலகத்தின் "கர்ணன்"குதூகல ஆரம்பம்.
Thanks Divyafilms Chokkalingam
வணக்கம் மய்யம் இணைய உறவுகளே!
கடந்த 10 நாட்களுக்குமேலாக இணையத்தில் உள்நுழைந்து பதிவுகள் இடமுடியாமல் இருந்தது.
அட்மின் RR அவர்களுடன் தொடர்பு கொண்டதில் அவர் மூலம் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது.
RR அவர்களுக்கு மிகவும் நன்றி.
பலருக்கும் உள்நுழைவதில் பிரச்சினை இருப்பது தெரிகிறது எனவே உறுப்பினராக இருந்தும்
உள் நுழைவதில் தடங்கல் உள்ளவர்கள் கீழ்க்காணும்
ஈ மெயிலில் RR அவர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் உங்கள் தடங்கல்களை
நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.
நன்றி.
rrprivate-hubadmin@yahoo.com
அட்மின் அவர்களுக்கு வணக்கம்!
எனது hub i d யில் பல தவறுகள் காணப்படுகின்றது.
நான் புதிய உறுப்பினர் என காட்டுகிறது.
இருப்பிடம் தவறாக காட்டுகிறது;
பழைய பதிவுகள் 0 என காட்டுகிறது.
தயவு செய்து இவற்றை கவனித்து நிவர்த்தி செய்யுங்கள் நன்றி.
குலமா குணமா? வெளியான நாள் 26/03/1971
50 ஆண்டுகள் நிறைவுAttachment 5770
·
இன்று முதல்(19-3-2021) திருச்சி தஞ்சை மாவட்ட 21திரை அரங்குகளில் நடிகர் திலகத்தின்" கர்ணன் ".குதூகல ஆரம்பம்.
1. திருச்சி- ரம்பா La cinima.
2,திருச்சி- சோ னா மீனா,
3.தஞ்சை -ஜுபிட்டர்,
4. மாயவரம்-கோமதி,
5. பெரம்பலூர் -கிருஷ்ணா
6. புதுக்கோட்டை -வெஸ்ட்,
7. காரைக்கால் -La-cinima,
8.கரூர் -கவிதாலாய,
9.திருவாரூர் -சோழா,
10. மன்னர்குடி-சாமி,
11. சீர்காழி -OSM,
12.பட்டுக்கோட்டை -ராஜாமணி,
13. ஆலங்குடி V.C. cinemas,
14.முசிறி -ஸ்ரீராம்,
15. T T பூண்டி -AM delux,
16. ஜெயகொண்டான் -ஜநகர்,
17. துறையூர் -லட்சுமி,
18. மணப்பாறை -உதயம்,
19. குளித்தலை -சாண்முகா,
20. அருவம்பூர் -அருணா,
21. செந்துறை -ராமசாமி.
Thanks Divyafilms Chokkalingam
தூத்துக்குடி சத்யாவில்
2/04/2021 முதல்
ராஜபார்ட் ரங்கதுரைAttachment 5771
நடிகர் திலகம் நடித்து ஏப்ரல் மாதத்தில் வெளியான படங்கள்:-
11.இல்லறஜோதி-09/04/54
12 அந்த நாள்-13/4/54
13.கல்யாணம் பண்ணியும்
பிரம்மசாரி-13/4/54
22. உலகம் பலவிதம்-14/4/55.
37..வணங்காமுடி-12/4/57
47.சம்பூர்ண ராமாயணம்-14/4/58
61.தெய்வப்பிறவி-13/4/60
68.புனர்ஜென்மம்-21/4/61
78.படித்தால் மட்டும் போதுமா-14/4/62
87 நான் வணங்கும் தெய்வம்-12/4/63.
95.பச்சை விளக்கு-03/04/64
103.சாந்தி-22/4/65
112.பேசும் தெய்வம்-14/4/67
119.ஹரிசந்திரா-11/4/68
120.கலாட்டா கல்யாணம்-12/4/68.
138. வியட்நாம் வீடு-11/4/70
148.பிராப்தம்-14/4/71.
149.சுமதிஎன் சுந்தரி-14/4/71
170.வாணி ராணி-12/4/74
175. அவன்தான் மனிதன்-11/4/75
182.கிரகபிரவேசம்-10/4/76
201.கவரிமான்-6/04/79
208.தர்மராஜா-26/4/80
214.அமரகாவியம்-24/4/81
223.சங்கிலி-14/4/82.
234.இமைகள்-14/4/83
242.வாழ்க்கை-14/4/84
252. நீதியின் நிழல்-13/4/85
260. விடுதலை-11/4/86.
267. வீரபாண்டியன்-14/4/87
282.பசும்பொன்-14/4/95
287. படையப்பா-10/4/89
கெளரவ வேடத்தில் நடித்த படங்கள்;-
4. ஸ்கூல் மாஸ்டர் (இந்தி)-14/4/59
8. ஸ்கூல் மாஸ்டர் ( ம)-3/4/64.
16. நட்சத்திரம்-12/4/80.
(whatsapp ல் வந்தவை)
தேர்தல் நேரத்தில் தினமலரில் நடிகர் திலகத்தை பற்றி ஒரு நல்ல செய்தி...
(ஆச்சரியமாக உள்ளது..தினமலரா இப்படி என்று) உண்மைகள் நீண்ட நாட்களுக்கு உறங்காது.......🙏🙏🙏
தஞ்சை சதா. வெங்கட்ராமன் அவர்கள் பதிவிலிருந்து......நன்றி🙏🙏🙏
Attachment 5772
46வது ஆண்டுகள் நிறைவு,
அவன்தான் மனிதன்.
11/04/1975 to 11/04/2021
Attachment 5773
53 வது ஆண்டு நிறைவு ஹரிச்சந்திரா. 11/04/1968.
51 வது ஆண்டு நிறைவு வியட்நாம் வீடு.11/04/1970.
46 வது ஆண்டு நிறைவு அவன்தான் மனிதன்.11/04/1975.
35 வது ஆண்டு நிறைவு விடுதலை.11/04/1986.
Attachment 5774
(புகைப்படம் உதவி நன்றி முரளி சிறினிவாசன்)
இன்று 11/04/2021 நடிகர் திலகத்தின் படங்கள். ¶
==================================
1.) நடிகர் திலகம் + ஸ்ரீப்ரியா நடித்த
" வசந்தத்தில் ஒரு நாள் " மதியம் 01.05 p.m. மணிக்கு பாலிமர் டிவி. யிலும்...
2.) நடிகர் திலகம் + சாவித்திரி நடித்த
" பாச மலர் " இரவு 10.00 p.m. மணிக்கு ஜெயா டிவி யிலும்...
3.) நடிகர்திலகம் + கே.ஆர். விஜயா நடித்த " கிருஷ்ணன் வந்தான் " இரவு 10.30 p.m. மணிக்கும் ராஜ் டிவி. யிலும்...
4.) நடிகர் திலகம் + ஜெய லலிதா நடித்த
" பட்டிக்காடா பட்டணமா " மதியம் 02.30 p.m. மெகா 24 மணிக்கும்...
கண்டு களிக்கலாம். ¶
எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கும் சிவாஜிக்கும் மிகுந்த நெருக்கம் உண்டு. அதை அவரே சொல்கிறார்:
'1942ம் வருஷம். ஒரு நாள் டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக்குழுவில 'மகாபாரதம்' நாடகம். நான் சகாதேவனா நடிக்கிறேன். நாடகம் பார்க்க நடிகவேள் எம்.ஆர். ராதா வந்திருந்தார். அவரோடு பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பையனும் வந்திருந்தார். யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் நாடக சபாவில பெண் வேடங்களிலே அந்தப் பையன் நடிப்பதாகச் சொன்னார்கள். பெண் வேடமிடும் அந்த பையனை இரவு மட்டும் எங்களோடு இருக்கச் சொல்லிவிட்டு எம்.ஆர். ராதா போய்விட்டார். மறுநாள் காலை வரை அவர் எங்களோடு தங்கினார். தன் பெயர் கணேசன் என்றார். அவர்தான் அழியாப் புகழ் பெற்ற நடிப்புலக இமயம் சிவாஜி கணேசன்.
நாங்கள் சந்தித்த அந்த ஜூன் இரவின் முதல் நிமிடத்திலிருந்து அவர் மறைந்ததாகத் தகவல் வந்த அந்த கடைசி நிமிடம் வரை சிவாஜி எனக்கு மிகவும் நெருக்கமான சகோதரராகவே விளங்கினார். 'பராசக்தி' படத்தில் வாய்ப்பு வந்த போதும் என்னிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றார்.
பிறகு கதாநாயகன் வேடத்திற்கு தனக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்தார்கள் என்று எனக்கு கடிதம் எழுதினார். பிறகு 'பராசக்தி'யில் சிவாஜிக்கு அண்ணன் வேடத்தில் நடிக்க எனக்கும் அழைப்பு வந்தது. நானும் சென்னைக்கு வந்தேன். 'பராசக்தி' படப்பிடிப்பு நடந்தது. சிவாஜி படத்தில் குணசேகரன் ஆனார். நான் ஞானசேகரன் ஆனேன். 'பராசக்தி' ரிலீசானது. தமிழ் திரையுலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. 'பராசக்தி'யை தொடர்ந்து சிவாஜியோடு மிக அதிக படங்களில் நடிக்கும் வாய்ப்புக்கள் எனக்கு கிடைத்தன.
தமிழ் திரையுலகம் அதுவரை காணாத மிகச்சிறந்த படங்களில், உணர்ச்சிகரமான வேடங்களில், சிவாஜியோடு நானும் நடித்தேன். 'பராசக்தி'க்குப் பிறகு 'பணம்', 'மனோகரா', 'ராஜா ராணி', 'ரங்கோன்ராதா', 'தெய்வப்பிறவி', 'செந்தாமரை', 'ஆலயமணி', 'குங்குமம்', 'பச்சைவிளக்கு', 'கைகொடுத்த தெய்வம்', 'சாந்தி', 'பழநி' என்று பல படங்களில் பெரும்பாலும் அதிக வசூலைக் குவித்து மிகப்பெரிய வெற்றியை சிவாஜியால் நான் அடைந்தேன்.
இந்த தருணத்தில் என்னை விட்டு சிவாஜியை பிரிக்கும் முயற்சியும் நடந்தது. நீ ஏன் சிவாஜியுடன் நடிக்க வேண்டும், சிவாஜியோடு நடிப்பதால் உனக்கு என்ன லாபம் என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. அதற்கு நான் நல்ல பதிலை தந்தேன்.
சிவாஜியும், நானும் சேர்ந்து நடிக்கும் படங்கள் மிக அதிக வரவேற்பை பெறுகின்றன. அதிக வசூல் கிடைக்கிறது. எதுவுமே தோல்வி அடைவதில்லை. தோல்வி அடைந்ததாகக் கூறப்பட்ட 'பழநி' போன்ற படங்களில் கூட போட்ட பணம் கிடைத்துவிட்டது. அதிக லாபம்தான் கிடைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக எனக்கு மிக அதிக சம்பளம், விநியோக உரிமையில் நிகர லாபம் கிடைப்பதெல்லாம் சிவாஜியோடு நடிக்கும் படங்களில் மட்டும்தான்’ என்றேன்.
சிவாஜியும் நானும் சேர்ந்து நடித்த படங்களிலேயே சிவாஜிக்கு மிகவும் பிடித்த படம் 'கைகொடுத்த தெய்வம்' தான். அதன் வெற்றி விழாவில் 'கைகொடுத்த தெய்வம்' படத்தில் என்னை விட சிறப்பாக நடித்தவர் எஸ்.எஸ்.ஆர்.தான்’ என்று பாராட்டி பேசினார். இத்தகைய மனமார்ந்த பாராட்டுக்களை வேறு யாரும் சொல்லவே மாட்டார்கள்.
நன்றி ! சுதாங்கன் செல்லூலாய்டு சோழன் தொடரிலிருந்து ...
மய்யம் இணையம் உறவுகள் அனைவருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.Attachment 5775
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 67 ஆண்டுகள் நிறைவு. 13/04/1954.
அந்தநாள் 67 ஆண்டுகள் நிறைவு. 13/04/1954.
தெய்வப்பிறவி 61 ஆண்டுகள் நிறைவு. 13/04/1960.
நீதியின் நிழல் 36 ஆண்டுகள் நிறைவு. 13/04/1985.
Attachment 5776
உலகம் பலவிதம்.=14/4/55. 66 ஆண்டுகள் நிறைவு.
சம்பூர்ணராமாயணம்=14/4/58. 63 ஆண்டுகள் நிறைவு.
படித்தால் மட்டும்போதுமா=14/4/62. 59 ஆண்டுகள் நிறைவு.
பேசும்தெய்வம்=14/4/68. 53 ஆண்டுகள் நிறைவு.
பிராப்தம்=14/4/71. 50 ஆண்டுகள் நிறைவு.
சுமதி என் சுந்தரி=14/4/71. 50 ஆண்டுகள் நிறைவு.
சங்கிலி=14/4/82. 39 ஆண்டுகள் நிறைவு.
வாழ்க்கை=14/4/84. 37 ஆண்டுகள் நிறைவு.
வீரபாண்டியன்=14/4/87. 34 ஆண்டுகள் நிறைவு.
பசும்பொன்=14/4/95. 26 ஆண்டுகள் நிறைவு.
கெளரவதோற்றம்:-
4. ஸ்கூல் மாஸ்டர்( இந்தி)=14/4/59. 62 ஆண்டுகள் நிறைவு.
1)எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் 1960 -ல் ஆசிய - ஆப்ரிக்கா பட விழா நடந்தது. அதில் ‘நடிகர் திலகம்’ சிவாஜிக்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்காகச் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது அனைவரும்அறிந்த விஷயம். அந்தப் படவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எகிப்து அதிபர் நாசர் விருதுகளை வழங்க ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் சர்வதேச மாநாடு ஒன்றுக்கு அவர் செல்லவேண்டி வந்ததால் படவிழா நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. அடுத்து வந்த ஆண்டில் இந்தியா வந்த அதிபர் நாசர் சென்னைக்கு வந்து சிவாஜியை சந்திக்க விரும்பினார். இதை அறிந்த சிவாஜி அதிபரை வரவேற்று விருந்தளிக்க விரும்பினார் .மத்திய அரசு சிவாஜியின் கோரிக்கையை ஏற்று அனுமதி அளிக்க சென்னை பாலர் அரங்கில் (இன்றைய கலைவாணர் அரங்கம்) அந்த விழா நடைபெற்றது. இந்தியாவிற்கு வருகை தந்த அயல்நாட்டு அதிபர் ஒருவருக்கு எந்த அரசு பதவியிலும் இல்லாத நடிகர் ஒருவர் விருந்தளிக்க அனுமதிக்கப்பட்டார் என்றால் அவர் சிவாஜி ஒருவர்தான்.
2)‘புரோட்டோகால்’ எனப்படும் அரசு மரபுகளை மீறி, பிரதமராக இருந்த வி.பி.சிங், மேற்கு வங்க முதல்வராக இருந்த ஜோதிபாசு ஆகிய இருவரும் சென்னை வந்தபோது சிவாஜியின் ‘அன்னை இல்லம்’ வீட்டுக்கு வருகை தந்து கவுரவம் செய்தனர்.
3)நாடுகடந்த அரசு என்ற முறையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் திபெத்தின் தலைவர் தலாய்லாமா சென்னை வந்தார். அப்போது அன்றைய தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜருடன் சிவாஜியின் ‘உத்தம புத்திரன்’ படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்று அவரைச் சந்தித்து வாழ்த்தினார்.
நன்றி ! இந்து தமிழ் திசை இணையத்திலிருந்து ...
Attachment 5777
Thanks Ganesh Pandian
எனது ஊர் செய்யார் தாலுகா திருமனி ம்துரா வெங்கிடேசன் பட்டி அது திருவண்ணாமலை மாவட்டத்தில்.உள்ளது.
சிறிய வயதில் நான் வசிக்கும்.போது சினிமா பார்க்க் வேண்டுமென்றால். எங்கள் பக்கத்து ஊர் முனுக்ப்பட்டு வழியாக வாழப்ப்ந்தல் என்ற ஊரில் கீத்து கொட்டகையில்தான் படம்.பார்க்க முடியும்
பெரும் பாலும் நடிகர் திலகத்தின் படம் எம் ஜி ஆரின்.படம் அதிகமாக திரையிடுவார்கள்
7 கிலோ மீட்டர் நடந்து சென்று படம் பார்ப்பார்ப்போம்
என்னுடைய தாய் மாமன் திரும்னியை சேர்ந்தவர் அவர் அடிக்கடி படத்துக்கு செல்வார் எப்போதாவது ஒரு முறை என் அம்மா அதாவது அவர் தங்கையை பார்க்க வருவார் ஏதோ.அண்ணன் என்ற முறையில்
-அவர் எம் ஜி ஆர் ரசிகர் ஜாலியான சிவாஜி படங்களை பார்பார்
ஒரு முறை பாச மலர் படத்தை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது அவர் நண்பர்களுடன்
பல நாட்கள் அடிககடி அந்த படத்தையே பார்த்தாராம். எப்போதாவது எங்கள் வீட்டுக்கு வருபவர் அடிக்கடி வருவார் பாசமலர் படம்பார்த்தேன் குடும்பம்ன்னா என்ன.பாசம் என்ன இவ்வளவு நாள் குடுபத்த உணராமல் இருந்திட்டேன்னுன்னு தோன்றுகின்ற மாதிரி இருக்கிறது என்று வருத்தபப்டும்படி என் அம்மாவிடம் சொன்னாராம்
அதற்க்கு பின் தங்கச்சியும் தன்னுடைய மகளுக்கு சமம் என்று சிவாஜியின் படத்தை பார்த்து பாசம் குடுமப உறவுகளுக்கு முக்கியம் கொடுத்தத நான் வாழ்வது அவர்தான் காரணம் என்று -அடிக்கடி என் அம்மாவிடம் சொன்னதாக என் அம்மா என்னிடம் சொல்வார்
என்னுடைய தாய் மாமன் மாதிரி பாசமலர் போன்ற படங்களை பார்த்து எத்தனைஅன்னன்கள் தங்கைகள் மீது பாசம் கொண்டவர் இருந்திருந்தார்கள்
இன்று இருக்கின்ற இனிமேலும் இருக்க. சிவாஜியின் படங்கள் பாடமாக எப்போதும் இருக்கும்
கீதம் சங்கீதம்
இசைக்குழு
வெங்கிடேசன் பட்டி
P s முனியாண்டி
அனுபவம் இல்லாதவர்கள் கூட நடிகர் திலகத்தின் படத்தை பார்த்தால் அனுபவசாலியாகிவிடுவார்கள்
Thanks Muniyandi Saminathan
நடிகத் திலகம் எப்பொழுதும் கம்பீரம்் நேர்மை தன் நம்பிக்கை கடைபிடித்தார்
உலகை ்.எங்கும் தன் நடிப்பால். கவர்ந்தா காலக்கட்டத்தில் தன்னுடன் நடிக்கும நடிகருக்கு கொடுத்து இருக்கும் பாத்திரம் படம். வெளியே வந்தவுடன் தன்னைவிட அந்த நடிகர் அதிகமாக புகழப்படுவார் என்று தெரிந்தும் அந்த கதாபாத்திரத்தை தனக்கு கேட்காமல். வளர்ந்து வரும் நடிகர்களுக்கு கொடுங்கள் என்று சொல்வாரம்
மனிதரில் மாணிக்கம் படத்தில் ஏ வி எம் ராஜனை கதாநாயகன் அந்த படத்தில் கொளரவ வேடம் நடிக்ர் திலகம்
பச்சை விளக்கு படத்தில சிவாஜிக்கு மைத்துனனாக நடிப்பார் எஸ் எஸ் ராஜேந்திரன்
குத்து விளக்கே்றிய கூடமெங்கும்.பூ மனக்கும் என்ற டி எம் எஸ் சுசிலா பாடிய.பாடலை எஸ் எஸ் ராஜேந்திரனுக்கு கொடுக்க சம்மதித்தார் நடிகர் திலகம்
வேறு எந்த நடிகராக இருந்தால் அந்த பாட்டு தனக்கு வரும்படி காட்சி அனமயுங்கள் அந்த டியூன் எனக்கு வருமபடி செய்யுங்கள் இல்லையென்ரால் அந்த பாடலஅந்த படத்தில் ் வேண்டாம் என்று சொல்லியிருப்பார்கல்
மூன்று தெய்வங்கள் படத்தில் சிவகுமார் கதானாயகன் போன்று கதையை கொண்டு செல்வார்கள் சிவகுமார் காதலுக்கு உதவி செய்வது போல் நடிகர் திலகத்துக்கு கதைப்படி வரும் இதில் அவருக்கு ஜோடி இல்லை
கே ஆர் விஜயா சிவாஜிக்கு காதலியாக ந்டிக்க வேண்டியவர் முத்துராமனுக்கு காதலியாக ந்டிக்க சம்மதித்தார்
இன்னும்.ஏராளமாக அடிக்கிக்கொண்டே போகலாம் பல படங்களில் ஜோடி இல்லாமல் மேக்கப் இல்லாமல் நடித்தார்
பாடலே இல்லாதே படமும்.வில்லனாக ந்டித்த படமும் உண்டு
திரை உலகத்தில் ஈடு இணையற்ற ஜோடி என்று அந்த காலத்தில் சிவாஜி பதமினி வலம் வந்தார்கள் குரு ந்தட்சனை படத்தில் மான்சீக குருவாக பதமினியை ஏற்று கொண்டு பள்ளி ஆசிரியராக இருக்கும் பதமினி காலில் நம் சிவாஜி .வீழ்ந்து ஆசீர் வாதம் வாங்கு வது போல் இருக்கும். கதைப்படி அதனால் நம் தலைவருடைய இமேஜ் கெடும் பலர் அறிவுரை கூறினார்கள் ஆனால் கதைப்படி அப்படி செய்யவேண்டும் என்றால் நடித்துதான் ஆக வேண்டும் என்று தன் நடிபபு தொழில் மீது நம்பிக்கை வைத்தார்
கடைசிக்காலக்கட்டத்தில் நான் வாழ்வைப்பேன் படத்தில ரஜினிக்கு அசத்தலான கதாபாத்திரத்தை கொடுக்க செய்தார் தேவர் மகன் கமல் கதா பாத்திரத்தை பேசும் படி செய்தார்
திருவிளையாடல் படத்தில் நாகேஷ் பற்றி சொல்ல தேவையில்லை மற்றவர்களுக்கு உதவு மட்டுமல்லாமல் பிறரை புகழ் அடையவும் செய்தார் அவருக்கு தன் நம்பிக்கை அதிகம்
தன் நம்பிக்கைக்கு இவர் உதாரனம் வாழ்க எங்கள் நடிகர் திலகத்தின் புகழ்
Thanks Muniyandi Saminathan
அனைவருக்கும் வணக்கம். ஒரு சிவாஜி ரசிகனின் சினிமா டைரி தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம் - பார்ட் 48
சென்ற ஒரு வாரமாக எனது டெஸ்க்டாப் கணினி சில தொழில் நுட்ப கோளாறு காரணமாக இயங்கவில்லை. அதன் காரணமாகவே சென்ற வார பதிவை போஸ்ட் பண்ண முடியவில்லை இப்போதுதான் சரியானது.
ஒரு வார இடைவேளைக்கு Sorry இந்த தொடரில் அரசியல் பற்றி எழுத நேர்ந்தால் கூடுமானவரை நடிகர் திலகம் சார்ந்த அரசியல் சூழல்கள் பற்றி மட்டுமே எழுதி வர முயற்சித்திருக்கிறேன். தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டுமே மாற்று கட்சி அரசியலைப் பற்றிய குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் இரண்டாம் வாரம் நடைபெற்ற அரசியல் நிகழ்வு அதன் எதிரொலியாக நடந்த சம்பவங்களை இங்கே குறிப்பிட காரணம் இருக்கிறது
1972 அக்டோபர் 10 செவ்வாய்க்கிழமை என்று பார்த்தோம். .அந்த வார இறுதியில் 13-ந் தேதி வசந்த மாளிகை மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது. அதாவது 15-வது நாள். படம் வெளியான முதல் நாள் முதல் அந்த 15-வது நாளோடு அன்று வரை மதுரை நியூசினிமாவில் நடைபெற்ற 50-க்கும் மேற்பட்ட காட்சிகள் தொடர்ந்து அரங்கம் நிறைந்தது. 50 CHF Shows இதை குறிப்பிட காரணம் அன்றைய பதட்ட சூழலிலும் கூட அசம்பாவித வன்முறை சம்பவங்கள் நடைபெற்றபோதும் வசந்த மாளிகை அதனால் எந்தவித பாதிப்பும் அடையாமல் அரங்கு நிறைந்ததை பதிவு செய்யவே. . .
படத்தின் இமாலய வெற்றியை அன்றே உறுதி செய்யும் வண்ணம் மக்கள் ஆதரவு வசந்த மாளிகைக்கு இருந்தது. பதட்ட சூழலிலும் குறிப்பாக பெண்கள் பெருமளவில் திரண்டு வந்தது குறிப்பிட்டதக்கது. அந்த நேரத்தில் வசந்த மாளிகை மட்டுமா எதிர்மறை சூழலை கடந்து வெற்றிப் பெற்றது? அதனுடன் பட்டிக்டா பட்டணமாவும் தன பங்கிற்கு வெற்றி சூறாவளியாய் தொடர்ந்துக் கொண்டிருந்தது. வசந்த மாளிகை 50 காட்சிகளுக்கு மேல் தொடர்ந்து அரங்கம் நிறைந்து ஓடிக் கொண்டிருந்த அதே நாளில் அதாவது 1972 அக்டோபர் 13 அன்று மதுரை சென்ட்ரலில் பட்டிக்காடா பட்டணமா 23 வாரங்களை அதாவது 161 நாட்களை நிறைவு செய்தது. அது மட்டுமா மொத்த வசூலில் 5-1/4 [ஐந்தே கால்] லட்சத்தையும் தாண்டி புதிய வரலாறு படைத்துக் கொண்டிருந்தது. 23 வாரங்களில் மதுரை சென்ட்ரலில் 5,35,000/- [ஐந்து லட்சத்து முப்பத்தி ஐயாயிரத்தையும்] தாண்டிய வசூல் செய்தது.
இந்த நேரத்தில் மற்றொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். மூக்கையாவும் ஆனந்த்-தும் அந்த சூழலில் வெற்றி தேரோட்டத்தில் முன்னோடிகளாக திகழ்ந்தார்கள் என்றால் அவர்கள் இருவருக்கும் சற்றும் சளைக்காமல் வெற்றியோட்டதில் முன்னோடியாக நிர்மலும் விளங்கினார் என்பதைத்தான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். ஆம் நண்பர்களே நாம் குறிப்பிடும் அதே 1972 அக்டோபர் 13 வெள்ளியன்று 7 வாரங்களை நிறைவு செய்த தவப்புதல்வன் நிர்மல் அதற்கு அடுத்த் நாள் [அக்டோபர் 14 சனிக்கிழமை] 50-வது நாளை மதுரை சிந்தாமணியிலும் மற்றும் தமிழகமெங்கும் கொண்டாடினார்.
இரண்டு இமயங்களுக்கு இடையில் சிக்கினாலும் கூட இந்த பதட்ட சூழலை கடந்து வர வேண்டியிருந்தபோதும் கூட அதற்கு அடுத்து குறுக்கிட்ட தீபாவளி திரைப்படங்களின் போட்டியையும் சமாளிக்க வேண்டி வந்தும் கூட நிர்மல் 100 நாள் வெற்றிக் கோட்டை தொட்டது, கடந்தது அனைத்தும் நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் ஆளுமைக்கு சான்று.
வசந்த மாளிகையின் வெற்றி நிலை அடுத்தடுத்த வாரங்களிலும் தொடர்ந்தது. இங்கே வசந்த மாளிகை எதிர்கொண்ட மற்றொரு எதிர்மறை சூழல் பருவ மழை. திடீரென்று திடீரென்று மழை பெய்யும் ஒரு அக்டோபர் மாதமாக இருந்தது அந்த வருடம். அதையும் எதிர்கொண்டு தொடர் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருந்தது வசந்த மாளிகை.
இப்படியாக பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளிவிழாவை நோக்கிய பவனி, வசந்த மாளிகையின் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் காணப் போகும் களிப்பு, தவப்புதல்வன் 100 நாட்கள் ஓடி விடும் என்று கிடைத்த உறுதி, பல புதிய பழைய தயாரிப்பு நிறுவனத்தினர் நடிகர் திலகத்தின் கால்ஷீட் வேண்டி முற்றுகையிடுகிறார்கள் என்ற மகிழ்வு இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் தித்திக்கும் செய்தி ஒன்று வந்தது
தித்திக்கும் செய்தி என்று குறிப்பிட்டேன். அதற்கு முன்பே கூட பல தித்திப்பான தருணங்களை நடிகர் திலகம் எங்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். பட்டிக்காடா பட்டணமா வெள்ளி விழா வாரத்தில் அடியெடுத்து வைத்து, 1972 அக்டோபர் 27 அன்று 175-வது நாள்ளை நிறைவு செய்கின்றது. எனக்கு நினைவு தெரிந்து நான் மற்றும் என் வயதையொத்த மதுரை வாழ் ரசிகர்கள் பலரும் ஒரு வெள்ளி விழா வாரத்தை முதன் முறையாக பார்க்கிறோம். மற்றொரு தித்திப்பாக வசந்த மாளிகை 100 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளை காண்கிறது. அது மறுநாள் அதாவது அக்டோபர் 28 சனிக்கிழமை காலைக்காட்சி 100-வது காட்சியாக வந்தது
தொடர்ந்த வரும் இரண்டு நாட்களில் இரண்டு முக்கிய நிகழ்வுகள். இதை நேரில் காண்பதற்கு வசதியாக ஸ்கூல் வேறு லீவ் [அன்றைய பதட்ட சூழல் காரணமாக]. இந்த தொடரை படிப்பவர்கள் பலருக்கும் நான் அன்றைய நாட்களின் பதட்ட சூழலை அடிக்கடி குறிப்பிடுவது ஏன் என்று யோசிக்கலாம். காரணம் இருக்கிறது. ஆளும் கட்சியில் ஏற்பட்ட ஒரு நிகழ்வு அதன் காரணமாக ஏற்பட்ட பதட்ட நிலை என்று தள்ளி விட முடியாமல் பல்வேறு பிரச்சனைகள் அதன் காரணமாக spill over என்று சொல்வார்களே அதே போன்று தொடர்ந்து வன்முறை நிகழ்வகள் நடந்துக் கொண்டிருந்தன..
நான் குறிப்பிடும் வாரத்திலும் மதுரையில் ஒரு பதட்ட சூழல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. என்னவென்றால் அக்டோபர் 20 வெள்ளியன்று எம்ஜிஆரின் இதய வீணை மதுரை ஸ்ரீதேவியில் வெளியானது. அதே நேரத்தில் திமுகவின் செயற்குழு பொதுக்குழு விளக்கப் பொதுக்கூட்டம் [எப்போதும் நடப்பது போல்] ஏற்பாடு செய்யப்பட்டு அந்த கூட்டம் அக்டோபர் 22 ஞாயிறன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இடமோ தேவி தியேட்டருக்கு அருகில் உள்ள ஞாயிற்றுக்கிழமை சந்தை நடக்கும் மைதானம். சிறப்பு பேச்சாளரோ மதுரை முத்து. அனைவரும் அச்சப்பட்டது போலவே முத்துவின் பேச்சினால் பதட்டம் உண்டாகி வன்முறை சம்பவங்கள் நடந்தேறின. இப்படியெல்லாம் நடந்தும் கூட நடிகர் திலகத்தின் படங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் வெற்றி நடை போட்டது என்ற உண்மையை மீண்டும் பதிவு செய்யவே அந்த சூழலை பற்றி குறிப்பிட நேர்கிறது..
பட்டிக்காடா பட்டணமா வெள்ளி விழா நாளன்று [1972 அக்டோபர் 27] சென்ட்ரல் திரையரங்கில் உள்ளேயும் வெளியேயும் கோலாகல கொண்டாட்டங்கள் நடந்தன. நான் போகவில்லை. வெளியிலிருந்து பார்த்ததுடன் சரி. ஆனால் மறுநாள் சனிக்கிழமை காலைக்காட்சி வசந்த மாளிகை பார்க்க நியூசினிமாவிற்கு நானுன் என் நண்பனும் என் கஸினுடன் போனோம் .
அதற்கு ஒரு காரணம் இருந்தது. பெரும்பாலும் நடிகர் திலகத்தின் படங்கள் சனிக்கிழமை வெளியாகும். ஒரு வாரத்திற்கு 23 காட்சிகள். 4 வாரத்திற்கு 92 காட்சிகள். 5-வது வார சனிக்கிழமை ஞாயிறு 4 காட்சிகள் வீதம் நடந்து பெரும்பாலும் ஞாயிறு இரவுக் காட்சி 100-வது காட்சியாக வரும். வெள்ளியன்று ரிலீஸ் ஆகியிருந்தால் பெரும்பாலும் வெளியான அன்று ஒரு எக்ஸ்ட்ரா காட்சி நடைபெற்று சனிக்கிழமை இரவுக் காட்சியாக வரும். எனவே அந்த தொடர்ந்து ஹவுஸ் புல் ஆகின்ற 100-வது காட்சியை பார்க்க முடியாமலே இருந்தது. .
வசந்த மாளிகையைப் பொறுத்தவரை 4 வாரத்தில் 96 காட்சிகள் நடைபெற்று அவை அனைத்தும் அரங்கு நிறைந்தது. ரீலிஸான செப்டம்பர் 30 வெள்ளியன்று ஒரு எக்ஸ்ட்ரா காட்சி. 4-வது நாள் திங்கள்கிழமை அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று ஒரு எக்ஸ்ட்ரா காட்சி. நவராத்திரியின்போது ஆயுத பூஜை விஜயதசமியின் போது மேலும் 2 எக்ஸ்ட்ரா காட்சிகள் நடைபெற்றதால் 28 நாட்களிலேயே 96 காட்சிகள் ஹவுஸ் புல் ஆகி விட்டது. இன்னும் ஒரு எக்ஸ்ட்ரா காட்சி நடைபெற்றிருந்தால் பட்டிக்காடா பட்டணமா வெள்ளி விழா கொண்டாடிய அதே அக்டோபர் 27 வெள்ளியன்றே வசந்த மாளிகையும் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளை நிறைவு செய்திருக்கும். அப்படி நடக்காததனால் சனிக்கிழமை காலைக் காட்சி பார்க்க போக எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
நான் முன்பே சொல்லியிருக்கிறேன். சனிக்கிழமை காலைக்காட்சி எப்போதும் சற்று டல்லடிக்கும். காரணம் அன்றைய நாட்களில் பள்ளிக்கூடங்கள், கல்லூர்ரி மற்றும் அலுவலகங்கள் அனைத்திற்கும் மதியம் வரை வேலை நாள் என்பதால் ஏற்படும் டல்னஸ். அப்படியிருந்தும் அன்று நியூசினிமா தியேட்டர் முன்பு ஏராளமானோர் கூடி நின்றனர். கீழ் வகுப்பு டிக்கெட்டுகள் மடமடவென்று விற்று தீர்ந்தது. பால்கனி டிக்கெட்டுகள் சற்றே நிதானமாக விற்றது என்றாலும் படம் தொடங்கும் 10.45 மணி நேரத்தில் ஹவுஸ் புஃல் போர்ட் மாட்டப்பட்டது. 1000 வாலா சரம் வெடித்து சிதற கைதட்டல் விசில் பறந்தது.. தியேட்டருக்கு உள்ளே வழக்கம் போல் அலப்பரை தூள் பறந்தது.
படம் முடிந்து வெளியே வருகிறோம். அப்போது தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கம் நிறைந்ததை ஒரு தட்டியில் பேப்பர் ஒட்டி அதில் விவரங்களை எல்லாம் எழுதி தியேட்டருக்கு எதிரே இருக்கும் ஜான்சி ராணி பூங்காவின் சுற்றுப்புற இரும்புக் கம்பிகளோடு சேர்ந்து இருக்கும் விளக்கு கம்பத்தில் கட்டிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் நான் சென்ற பதிவில் குறிப்பிட்ட தித்திப்பு செய்தி சொன்னார்கள். அதாவது மறுநாள் 1972 அக்டோபர் 29 ஞாயிறன்று பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு மதுரை சென்ட்ரல் திரையரங்கிற்கு நடிகர் திலகம் நேரில் விஜயம் செய்கிறார் என்பதுதான் அந்த தித்திப்பு செய்தி. .மறு நாள் அக்டோபர் 29 நடிகர் திலகம் வரப் போகிறார் என்று தெரிந்ததும் அவரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்க ஆராம்பித்தது அதற்கு முன்பு அவரை நேரில் பார்த்த அனுபவங்கள் மனதில் நிழலாட தொடங்கின.
நினைவு தெரிந்த பிறகு 1966-ல் அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தபோது மதுரையின் நான்கு மாசி வீதிகளில் ஊரவலமாக அழைத்து வரப்பட்டார் அப்போதுதான் அவரை முதன் முறையாக பார்த்தேன்.
1970- நவம்பரில் ராமன் எத்தனை ராமனடி 100-வது நாள் விழாவிற்கு நியூசினிமா வந்தபோது அந்த காட்சிக்கு போய் அவரைப் பார்த்தது இரண்டாம் முறை
1971- பொது தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது பார்த்தது மூன்றாம் முறை.
அதன் பிறகு அவர் பலமுறை மதுரை வந்திருந்தாலும் இப்போதுதான் அவரை பார்க்கும் வாய்ப்பு அமைகிறது. அதற்கு ஒரு முக்கிய காரணம் பல முறை அவர் வந்தபோதும் அவர் தங்கியிருந்த இடமோ அல்லது அவர் கலந்து கொள்ளும் நிகழ்வோ நடைபெற்றது நகரின் வேறு இடத்தில. ஆனால் இப்போது எங்கள் வீட்டிற்கு வெகு அருகே அமைந்திருக்கக் கூடிய சென்ட்ரல் சினிமாவிற்கு வருகிறார். ஆகவே வாய்ப்பு கூடுதல் ஆனால் மனதில் ஒரு சந்தேகம். அவர் மதியக் காட்சிக்கு மட்டும் வருகிறாரா அல்லது மூன்று காட்சிகளுக்கும் வருகிறாரா என்பது குழப்பமாக இருந்தது பலரிடம் கேட்டும் யாருக்கும் சரியாக தெரியவில்லை. மாட்னி ஷோவிற்கு உறுதியாக வருகிறார் என்பது மட்டுமே சொன்னார்கள். விழா முதலில் தமுக்கம் மைதானத்தில்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்து திரையரங்கிற்கு படத்தில் வருவது போல் மாட்டு வண்டி ஊர்வலமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நான் குறிப்பிட்ட அக்டோபர் 22 பொதுக்கூட்டத்திற்கு பின் நடந்த வன்முறையால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால் ஊர்வலத்திற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது.
எப்படி போவது? எப்படி டிக்கெட் வாங்குவது போன்ற கேள்விகள் மனதில் வட்டமிட ஆரம்பித்தன. கஸினிடம் கேட்டதற்கு பார்ப்போம் என்று சொன்னார். அதைப் பற்றியே நினைத்து நினைத்து பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் வீட்டருகே குடியிருந்த சக வயது நண்பன் ஒருவனும் [வசந்த மாளிகை 100-வது காட்சி பார்க்க என்னுடன் வந்தவன்] தானும் வருவதாக சொன்னான்.
மறுநாள் விடிந்தது. காலை தினத்தந்தி விளம்பரத்தில் மதியக் காட்சிக்கு சென்ட்ரல் திரையரங்கிற்கு விஜயம் செய்கிறார் நடிகர் திலகம் என்பதை குறிப்பிட்டிருந்தார்கள். நடிகர் திலகத்தோடு மற்ற நட்சத்திரங்களும் மேடையில் தோன்றும் அந்த வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்வு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து வசந்த மாளிகையின் மதுரை விநியோகஸ்தரும் விளம்பரம் கொடுத்திருந்தார். மட்டுமல்ல, முதல் நாள் இரவு வரை நடைபெற்ற 103 காட்சிகளும் அரங்கு நிறைந்ததையும் குறிப்பிட்டு வெள்ளிவிழாவை நோக்கி வெற்றி நடை போடுகிறது என்ற வாக்கியத்தையும் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. படம் வெளியான 31-வது நாளன்றே வெள்ளி விழா என்று கொடுக்கபப்ட்டது என்று சொன்னால் வசந்த மாளிகை படத்தின் வெற்றி பற்றி எந்தளவிற்கு நம்பிக்கையாக இருந்தார்கள் என்பது புரியும். அன்றைய நாட்களில் நகரில் ஓடும் அனைத்துப் படங்களின் விளம்பரமும் தினசரி தினத்தந்தியில் வெளியாகும். மதுரை பதிப்பில் வெளியாகும் விளம்பரம் மதுரை ராமநாதபுரம் ஏரியாவில் படங்கள் ஓடும் பட்டியலை கொண்டிருக்கும். இந்த விளம்பர செலவு அந்தந்த ஏரியா விநியோகஸ்தரை சார்ந்தது.
இரண்டு மூன்று முறை தியேட்டர் பக்கம் போய் வந்தாகி விட்டது. தியேட்டர் வாசலில் பரபரப்பான சூழலும் ரசிகர்கள் கூடி நிற்பதையும் பார்க்க முடிந்தது. டிக்கெட் பற்றி கஸினிடம் கேட்டால் சொல்லியிருக்கேன். இன்னும் கிடைக்கலை என்றார். காலை முடிந்து பகல் வந்தது. ஆனாலும் ஒன்றும் தெரியவில்லை. தியேட்டர் பக்கம் போய் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி சென்ற கஸினையும் காணவில்லை.
பகல் காட்சி ஆரம்பிக்கும் நேரம் கடந்து சென்றவுடன் புரிந்து விட்டது டிக்கெட் கிடைக்கவில்லை என்று. மூன்று மூன்றரை மணி சுமார் நானும் பக்கத்து வீட்டு நண்பனும் அப்படியே சென்ட்ரல் தியேட்டர் பக்கம் போகிறோம். ஹவுஸ் புல் போர்டு மாட்டப்பட்டிருக்கிறது. தியேட்டர் வாசலில் பெருங்கூட்டம். இன்னமும் நடிகர் திலகமும் ஏனைய நட்சத்திரங்களும் வரவில்லை என்பது புரிந்தது. ரேஸ் கோர்ஸ் அருகே அமைந்திருக்க கூடிய பாண்டியன் ஹோட்டலில் தங்கியிருந்த நடிகர் திலகமும் மற்றவர்களும் தியேட்டரின் முன்புற வாசல் வழியாகத்தான் உள்ளே செல்ல வேண்டும் என்பதால் அப்போது பார்த்து விடலாம் என்று பெரும்பாலானோர் அங்கே நிற்பது தெரிந்தது.
10,15 நிமிடம் அங்கேயே உலாத்தினோம். திடீரென்று பயங்கரமான கைதட்டலும் வாழ்க கோஷங்களும் கேட்க மேல மாசி வீதியிலிருந்து தியேட்டர் அமைந்திருக்கூடிய டவுன் ஹால் ரோடில் இடது பக்கமாக திரும்பி கார்கள் வருவது தெரிந்தது. ஆனால் அந்த கார்களை பார்த்தவுடன் கூட்டம் முன்னோக்கி பாய்ந்ததில் சிறுவர்களான நாங்கள் நிலைகுலைந்து போனோம். எங்களுக்கு முன்னால் எங்களை விட உயரம் கூடிய மனிதர்கள் நிற்க எத்தனை எம்பி எம்பி குதித்தும் யாரையும் பார்க்க முடியவில்லை என்பது மிகுந்த ஏமாற்றமாய் போனது.
அங்கே கூடியிருந்தவர்களில் ஒருவர் தன் அருகில் இருந்தவரிடம் நாம் மேல மாசி வீதி போய் விடலாம். காரணம் இந்த விழா முடிந்து திரும்ப நடிகர் திலகம் பாண்டியன் ஹோட்டல் போகும்போது மேல மாசி வீதி வழியாகத்தானே போக வேண்டும். அப்போது பார்த்து விடலாம் என சொல்லிக் கொண்டிருந்ததை கேட்ட நாங்கள் இருவரும் தியேட்டர் எதிரே அமைந்திருக்க கூடிய கோபால கொத்தன் தெரு தட்டார சந்து வழியாக மேல மாசி வீதி சென்றடைந்தோம்.
மேல மாசி வீதி போய் விட்டோம். நாங்கள் சென்ற அந்த தட்டார சந்து சென்று சேரும் இடத்தில இடது புறம் ஒரு நடைமேடை கோவிலும் வலது புறத்தில் White Taylor என்ற கடையும் அமைந்திருக்கும். நாங்கள் கடையின் முன்புறத்தில் போய் நின்றோம். அப்போது கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. அங்கே நிற்கும்போது ஒரு சந்தேகம் எழுந்தது. நாம் இந்த வழியாக போவார் என்று நம்பி இப்படி வந்து நிற்கிறோம். ஒரு வேளை இந்த வழியாக வரவில்லையென்றால் என்ன செய்வது? அபப்டியே வந்தாலும் காருக்குள்ளே இருப்பவரை எப்படி பார்க்க முடியும் என்றெல்லாம் நானும் என் நண்பனும் பேசிக் கொண்டேயிருக்கிறோம். இத்தனை பேர் நிற்கிறார்களே எனவே இந்த வழியாக வருவார் என்று சமாதானப்படுத்திக் கொண்டோம்.
நேரம் ஆக ஆக கூட்டம் கூடிக் கொண்டே போனது. மக்கள் அடுத்தடுத்து வந்து நிற்க எங்களுக்கு மறைக்க ஆரம்பித்தது. White Taylor கடையின் உரிமையாளருக்கு [அவர் பெயர் ராஜாராம் என்று நினைவு] என்னை நன்றாக தெரியும் என்பதனால் என்னையும் நண்பனையும் அழைத்து ஒரு ஸ்டூலை கொடுத்து கடையின் முன் அமைந்திருந்த ஒரு விளக்கு கம்பத்திற்கு அருகில் போட்டுக் கொள்ள சொன்னார். விளக்கு கம்பத்திற்கு அடியில் இருக்கக் கூடிய சதுரமான இடமும் அவர் கொடுத்த ஸ்டூலும் சேர்ந்து எங்கள் இருவருக்கும் முதலில் அமரவும் பிறகு ஏறி நிற்கவும் பயன்பட்டது.
வெகு நேரம் ஆனது போல் தோன்றியது. ஆனால் மணி பார்த்தால் 4.30 தான் ஆகியிருந்தது. கூட்டம் அதிகமாகிறது. 10 நிமிடம் ஆகியிருக்கும் சட்டென்று ஒரு ஆரவாரம். சத்தம் அதிகமாகி அதிகமாகி வந்து காதை அடைக்கும் அளவிற்கு போகிறது. ஏறி நின்று எட்டிப் பார்க்கிறோம். முன்னால் ஒரு திறந்த ஜீப் வருவது தெரிந்தது. அருகில் வர வர நமது ஆருயிர் நாயகன் தெரிந்தார் அன்றைய காலகட்டத்திலே அவர் பொது நிகழ்ச்சிகளுக்கு அணியக் கூடிய வெள்ளை/கிரீம் நிற ஜிப்பா மற்றும் டைட் பைஜாமா அணிந்து வலது கையை வீசியபடியே வருகிறார்.
[எங்கள் எதிர்பார்ப்பு அவர் காரில் வருவார் என்பது. ஆனால் அவர் வந்ததோ திறந்த ஜீப்பில். அரங்கத்தினுள்ளில் நடைபெற்ற விழாவில் அவர் கலந்துக் கொண்டபோது அரங்கிற்கு வெளியேயும் தெருக்களிலும் ஏராளமான மக்கள் கூடி நிற்கிறார்கள் என்ற தகவல் தெரிந்தவுடன் திறந்த ஜீப் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அதில் நின்று கொண்டே நடிகர் திலகம் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பயணம் செய்யுமாறு அமைக்கப்பட்டது என்பது பின்னர் தெரிய வந்தது].
சுருள் சுருளான கேசம், அன்றைய காலகட்டத்தில் அனைவரின் மனதையும் கொள்ளையடித்த அந்த கிருதா, அந்த டிரேட் மார்க் குர்தா பைஜாமா எவரையும் வசீகரிக்கும் அந்த மலர்ந்த முக புன்னகையை ஆபரணமாக அணிந்து நடிகர் திலகம் வந்தபோது அணையை உடைத்துக் கொண்டு பாயும் வெள்ளம் போல் மக்கள் அவர் ஜீப்பை நோக்கி பாய்ந்தனர்.
எங்கிருந்துதான் வந்ததோ அந்த மக்கள் வெள்ளம் என தோன்றும் வண்ணம் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடிவிட அந்த மக்கள் வெள்ளத்தில் ஜீப் மெதுவாக நீந்தி செல்ல அந்த மெதுவான ஓட்டத்தின் காரணமாக நாங்கள் சற்று அதிக நேரம் நடிகர் திலகத்தை பார்க்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது
உணர்ச்சிவசப்பட்டு ஆர்வக் கோளாறால் நடிகர் திலகத்தை தொட்டு பார்க்க ஜீப்பில் ஏற முயற்சித்தவர்கள், முடியாமல் ஜீப் பின்னால் ஓடியவர்கள் போலீஸாரின் லாத்தி வீச்சையும் பொருட்படுத்தாமல் பாய்ந்தவர்கள் என்று செயல்பட்ட வெறித்தனமான ரசிகர் கூட்டத்தை நேரில் பார்த்தவர எவரும் அந்த காட்சியை வாழ்நாளில் மறக்க மாட்டார்கள். அது மட்டுமல்ல நடிகர் திலகத்தின் ரசிகர் படை என்பது எத்தனை வலிமையும் தீவிரமும் வாய்ந்தது என்பதற்கு அது ஒரு கண் கண்ட சாட்சி.
நாங்கள் நின்றிருந்த பக்கமும் அவர் கைவீசி விட்டு போக அவர் என்னவோ எங்களுக்கு தனிப்பட்ட முறையில் கைவீசியது போன்ற சந்தோஷம் எங்கள் மனதில். ஜீப் எங்களை தாண்டி சென்றாலும் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்றோம். அதையே நினைத்து அதையே பேசி வீட்டிற்கு வந்த பிறகும் அனைவரிடமும் அதைப் பற்றி விவரித்து ஏகத்திற்கும் சந்தோஷப்பட்டது இப்போதும் மனதில் பசுமையாக நிற்கிறது.
ஆக சனிக்கிழமை வசந்த மாளிகை 100-வது தொடர் ஹவுஸ் புல் காட்சி பார்த்த சந்தோஷம் மறுநாள் நடிகர் திலகத்தையே நேரில் பார்த்துவிட்ட இரட்டிப்பு சந்தோஷம் இவை இரண்டும் சேர்ந்து அந்த வார இறுதியில் வர இருந்த தீபாவளி சந்தோஷத்தை விட அதிகமாக இருந்தது. நடிகர் திலகத்தை நேரில் பார்த்தது அக்டோபர் 29 ஞாயிறு. நவம்பர் 4-ந் தேதி சனிக்கிழமையன்று தீபாவளி. 1965-ற்கு பிறகு நடிகர் திலகத்தின் திரைப்படம் வெளிவராத தீபாவளி 1972-ல் தான் வந்தது. [இதற்கு பிறகு அவர் active -ஆக நடித்துக் கொண்டிருந்த 1987-ம் ஆண்டு வரை எடுத்துக் கொண்டோமோனால் 1987 தீபாவளிக்குதான் நடிகர் திலகத்தின் படம் வெளிவரவில்லை]. இதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தை ஈடுகட்டும் அளவிற்கு இந்த இரட்டிப்பு சந்தோஷம் அமைந்தது என்றே சொல்ல வேண்டும்
இப்படியாக பல மகிழ்ச்சியான நினைவுகளை விதைத்து விட்டு அந்த 1972 அக்டோபர் மாதம் விடைபெற்றது.
(தொடரும்)
அன்புடன்
Attachment 5779
நன்றி முரளி சிறினிவாசன் ( நடிகர் திலகம் சிவாஜி ரசிக நந்தவனப்பூக்கள் )
அமரகாவியம் 24/04/1981. 40 ஆண்டுகள் நிறைவு.
Attachment 5780
Thanks Vcg Thiruppathi
சில வருடங்களுக்கு முன் சென்னை ஸ்ரீ நிவாசா திரையரங்கில் சிவகாமியின் செல்வன் டிஜிட்டலில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது, அனைத்து வார இறுதி நாட்களிலும் அரங்கு நிறைந்து விடும்,
அப்படி ஒரு ஞாயிறு அன்று மாலைக் காட்சிக்கு நடிகர் திலகம் சிவாஜி ரசிகர்கள் பெருமளவு குவிந்து டிக்கெட் கவுண்டரில் நீண்ட கியூவில் நின்றுக் கொண்டிருந்தோம்
அப்போது இரண்டு நபர்கள் குடித்தார்களா இல்லையா எனத் தெரியவில்லை போதையில் இருப்பது போல கலாட்டா செய்தனர் அவர்கள் கியூவில் நின்றவர்கள் மேலே விழுவதும் படம் நல்லாயில்ல டிக்கெட் வாங்காதீங்க என உளருவதுமாக இருந்தார்கள், வழக்கம் போல நடிகர் திலகம் ரசிகர்கள் அந்த மர்ம நபர்களைக் கண்டு கொள்ளாமல் நான் உட்பட டிக்கெட் கவுண்டரில் முன்னேறிக் கொண்டிருந்தோம், வெறுப்பான மர்ம நபர்கள் டிக்கெட் கவுண்டரில் உரக்க சத்தமிட்டு ரகளை செய்தனர், தியேட்டர் ஊழியர்கள் அவர்களிடம் "நீங்கள் யார் உங்களை யார் அனுப்பி சிவாஜி படம் போட்டா கலாட்டா செய்ய சொல்லி வருகிறார்கள் என்ற விபரமெல்லாம் தெரியும் அமைதியா கெளம்புங்க'" எனச் சொல்லியவாறு ஹவுஸ்புல் அறிவிப்பை தொங்கவிட்டு மர்மநபர்கள் முகத்தில் கரியைப் பூசி தியேட்டர் வளாகத்தில் இருந்து வெளியேற்றி கேட்டை இழுத்துப் பூட்டினார்கள்,
நடிகர் திலகம் திரைப்படங்கள் திரையிடும் போதெல்லாம். இது போன்ற சம்பவங்கள் பல திரையரங்குகளில் நடந்ததுண்டு,
Attachment 5781
Attachment 5782
Thanks Sekar
நடிகர் சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த எம்.ஜி.ஆரை, அப்போதைய நடிகர் சங்கத் தலைவரான சிவாஜி அழைத்து வரும் காட்சிதான் இது.
பின்னால் வரும் நாகேஷ், அப்போது செயற்குழு உறுப்பினராக இருந்தார். அடிக்கல் நாட்டும்போது நடிகராக இருந்த எம்.ஜி.ஆர், பத்து வருடங்கள் கழித்து நடந்த திறப்பு விழாவின்போது முதல்வராகி விழாவில் கலந்துகொண்டார்.
திறப்பு விழா அன்று ‘சாம்ராட் அசோகன்’ என்ற சிவாஜியின் நாடகம் நடந்தது. போர்க்களத்தில் அசோகரின் மனசாட்சி பேசுவது போன்ற காட்சியில் வேறு எந்த கேரக்டர்களும் இல்லாமல் சிவாஜி மட்டும் தனியாக 20 நிமிடங்கள் நடித்தார்.
அசரீரி குரலுக்காக மனோரமா வாய்ஸ் கொடுத்தார். மேடைக்கு கீழே அமர்ந்தபடி நாடகம் பார்த்த எம்.ஜி.ஆர், சிவாஜியின் பாவனைகளில் நெகிழ்ந்து போய், ‘அற்புதமான நடிப்பு’ எனப் பாராட்டினார்.
Attachment 5783
Thanks Gaesh Pandian
கீழ் அடியில் அகழ்வாராய்ச்சியில் தமிழனின் கலாச்சாரத்தோடு எப்படி வாழ்ந்தான் என்னன்ன வாழ்க்கை நடத்துவதற்கு என்ன பழமை வாழ்ந்த பொருள்கள் பயன் படுத்தினான் என்று தெரிகிறது
அதுபோல்
நடிகர் திலகத்தின் படங்கள் பாது காக்க வேண்டிய படங்கள் தமிழ் மொழி உச்சரிப்பது மனிதனுடைய வாழ்க்கை முறை மன்னர்காலத்து கலாச்சார முறை புராண காலத்து கலாச்சாரத்தின் முறை வாழ்க்கைக்கு தேவையான அத்துனையும் வரும் காலம் அறிய உதவும்
திருக்குறள் படித்து வாழ்க்கையின் நெரி முறைகளை தெரிந்து கொள்ளலாம்
ஆனால்
நடிகர் திலகத்தின் படம் பார்த்து வாழ்க்கை முறைகளை அறிந்த மனதில் பதிய வைக்கலாம் , வரும் தலைமுறையும்
உலகம் அறிந்த மெரினா பீச்சில இருந்த் நடிகர் திலகத்தின் சிலை மனிமண்டபத்தில் வைத்தால் நடிகர் திலகத்தின் படங்கள் தொலைக்காட்சி பெட்டிகளிலும் திரையருங்கலிலும் திரையிட மாட்டார்கள் என்ற அர்த்தமாகாது
மக்கள் மனத்திரையில் நடிகர் திலகம் எப்பொதும் அவர் திரைப்படங்கள் ஒடிகொண்டுதான் இருக்கிறது
ஏனென்றால். தமிழ் கலாச்சாரதோடு உலகம் போற்றிய ஒரே நடிகன்.நடிகர் திலகம்
சிவாஜி ரசிகன்
P s முனியாண்டி
வெங்கிடேசன் பட்டி கிராமம்
Thanks Muniyandi Saminathan
நடிகர்கள் பல பேர் சமுதாயத்திலிருந்து கற்றுகொண்டு நடிப்பார்கள்
ஆனால்
நடிகர் திலகம் மட்டும்தான் அவருடை நடிப்பால் சமுதாயம் கற்று கொண்டது.
ஒவ்வொரு பதவியில் இருப்பவ்ரும் இவர் ஏற்ற..கதாபாத்திரங்கள் போல் வாழ நினைத்தார்கள் உதாரனமாக
தங்க பதக்க்ம் சொளத்திரியை போல் எத்தனையோ பேர் வாழ்க்கையில் காவல் துறையை சேர்ந்தவர்கள் பின் பற்றினார்கள்
இது போன்ற ஒவ்வொரு துரையிலும் அடிக்கிக்கொண்ட சொல்லலாம்
இவர் நடித்த ஒவ்வொரு படமும கலைத்துறை சேர்ந்தவர்களுக்கு நூறு படத்திற்கு சமமாகும்
சமூதாய கருத்துக்களை வாழ்க்கையின் கலாச்சர்த்தையும் தமிழகத்தின் அடையாளமாக இருந்த நம்முடைய நடிகர் திலகத்தை பெயரை கெடுக்க எத்தனையோ சதிகள் சூழ்ச்சிகள்.
அத்தனையும் முறியடித்து கொண்டுதான் இருக்கிறது
அவரின் நடிப்பினாலும் பொது வாழ்க்கையிலும் சமூதாயத்திலும் நல்ல மனிதன் என்பதாலும்
நல்லவர்கள் ஒன்று நினைப்பதுதான் நடப்ப்தில்லை தமிழகத்தில் அன்றே சொன்னார் நடிகர் திலகம்
சிவாஜி ரசிகன்
வெங்கிடேசன் பட்டி
P s முனியாண்டி
Thanks Muniyandi Saminathan
சமீபத்தில் 1976-ம் ஆண்டின் 'பொம்மை' மாத இதழொன்றைக் காண வாய்ப்புக்கிடைத்தது. அப்போது அந்தப்பத்திரிகையில் 'மாதம் ஒரு நடிகர் பதில்கள்' என்ற வரிசையில் நான் பார்த்த இதழில், மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் பதிலளித்திருந்தார்...
ஒரு வாசகரின் கேள்வி:
"சமீபகாலமாக சிவாஜியின் படங்கள் சரியாக அமையவில்லையே. அவர் திறமை குறைந்துவிட்டதா?"
திரு. ஜெய்சங்கர் பதில்:
"தங்கத்தின் விலை ஏறலாம் இறங்கலாம். அது தங்கத்தின் குற்றமல்ல. தரத்தில் தங்கம் என்றைக்கும் தங்கம்தான். அதுபோலத்தான் நம் நடிகர் திலகமும். அவர் திறமை என்றைக்கும் குறையாது. புகழ் என்றைக்கும் சரியாது".
என்ன ஒரு அருமையான பதில்...
Thanks Ganeisan Maniam
1980 சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டம் சூலூரில் பிரச்சார மேடையில் அதிமுக குண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளான நடிகர் திலகம் சிவாஜியிடம் நலம் விசாரிக்கும் அகல இந்திய சிவாஜி மன்றத்தின் தலைவரும் சுதந்திர போராட்ட தியாகியுமான திரு சின்ன அண்ணாமலை அவர்கள்
Attachment 5784
Thanks Sekar Parasuram
அனைவருக்கும் வணக்கம். ஒரு சிவாஜி ரசிகனின் சினிமா டைரி தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம் - பார்ட் 49
அக்டோபர் விடைபெற்று நவம்பர் மாதம் துவங்கியது. அனால் நவம்பர் 1 அன்றே ஒரு வருத்தம் ஏற்பட்டது. வசந்த மாளிகை செப்டம்பர் 29 வெளியாகி அக்டோபர் 31 வரை 33 நாட்களில் மதுரை நியூசினிமாவில் நடைபெற்ற 113 காட்சிகளும் தொடர் அரங்கு நிறைந்திருக்க நவம்பர் 1 புதன் மாட்னி 114வது காட்சி. அன்றைய தினம் 3 காட்சிகளும் அரங்கு நிறைந்து விட்டால் 116 ஆகி விடும். மீண்டும் ஒரு சாதனை படைக்கப்படும் என நினைத்திருக்கிறோம். மாட்னி ஷோ நேரத்திற்கு தியேட்டர் பக்கம் போகிறோம் (ஸ்கூல் லீவு). கூட்டம் வரிசை எல்லாம் இருக்கிறது. ஆனால் அரங்கு நிறையும் அளவிற்கு இல்லை. மழை வேறு. அதுவும் எப்படி என்றால் ஒரேடியாக பெய்து விட்டாலும் பரவாயில்லை. இது நச நசவென்று பெய்து கொண்டிருக்கிறது. 3 மணி வரை காத்திருந்தோம். ரசிகர் மன்ற ஆட்களெல்லாம் வந்து தியேட்டருக்குள் போய் பேசுகின்றனர். ஆனால் மழை விடாமல் தொடரவே தொடர் ஹவுஸ் புல் விட்டுப் போனது. ஆனால் ஈவினிங் மற்றும் நைட் ஷோ புல். மறுநாள் மாட்னியும் புல்லானது என்று பார்த்தபோது ஆஹா புதன் மாட்னி மட்டும் ஹவுஸ் புல் ஆகியிருந்தால் ஞாயிறு வரை அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்திருக்கும். (உண்மையிலே அரங்கு நிறைந்தது) அப்படி நடந்திருந்தால் 130 காட்சிகள் தொடர் அரங்கு நிறைந்து பட்டிக்காடா பட்டணமாவின் 129 காட்சிகள் தொடர் ஹவுஸ் புல் ரிகார்டை முறியடித்திருக்கும். இதை வெகு நாட்கள் நாங்கள் பேசி ஆதங்கப்பட்டிருக்கிறோம்.
1965 தீபாவளிக்கு பிறகு அந்த 1972 தீபாவளிக்குதான் நடிகர் திலகம் படம் வராமல் போனது. ஆகவே பெரும்பாலான ரசிகர்கள் தீபாவளியை வசந்த மாளிகையில்தான் கொண்டாடினார்கள். பட்டிக்காடா பட்டணமாவும் தீபாவளியோடு 182 நாட்களை நிறைவு செய்து சென்ட்ரலிலிருந்து எடுக்கப்பட்டு மற்றொரு அரங்கிற்கு ஷிபிட் செய்யப்பட்டுவிட்டது. சிந்தாமணியில் 70 நாட்களை நிறைவு செய்திருந்த தவப்புதல்வன் மற்றொரு அரங்கிற்கு மாற்றப்பட்டது. நீதி டிசம்பர் மாதம் வந்து விடும் என பேச்சு அடிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நீதி என்றவுடன் invariably நம் நினைவுக்கு வருவது 1972-ம் வருடத்தின் ஆரம்பமும் பாலாஜி,முடிவும் பாலாஜி. 1972-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி ராஜா வெளியாகி அந்த வருடத்தின் Box Office ராஜா நடிகர் திலகம் எனபதற்கு கட்டியம் கூறியது என்றால் நீதி 72ம் ஆண்டிற்கு நிறைவாக நிறைவு செய்ய வந்தது.
ராஜா வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் போதே பாலாஜியின் அடுத்த படம் என்ன என்பதை பற்றிய யூகங்களும், சர்ச்சைகளும் ரசிகர்கள் மத்தியில் உலா வந்து கொண்டிருந்த நேரம். அந்த நேரத்தில் சித்ராலயா வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பாலாஜி தான் இந்திபடங்களை அல்லது பிறமொழி படங்களை தமிழில் ரீமேக் செய்வது பற்றி விமர்சித்த பலரும் இப்போது தன் படங்கள் அடையும் வெற்றியை பார்த்து மலைத்து போய் இருப்பதாக குறிப்பிட்டார். அடுத்தப் படமும் இந்தி படத்தின் தழுவலாகதான் இருக்கும் என்றும் அதில் மேலும் அவர் சொல்லியிருந்தார். ஆனால் என்ன படம் என்று தெரியாமலே இருந்தது.
1972-ம் ஆண்டு மே 4-ந் தேதி அன்று ராஜா திரைபடத்தின் 100 வது நாள். அன்றைய தினம் வெளியான தினத்தந்தி நாளிதழில் முதல் பக்கத்தில் கீழே இடது கை ஓரத்தில் ராஜா 100-வது நாள் விளம்பரம். வலது கை ஓரத்தில் நீதி விளம்பரம். ராஜாவின் அதே யூனிட் என்பது விளம்பரத்தை பார்த்தாலே தெரிந்தது. மறுபடியும் எந்த இந்திப்படத்தின் தமிழாக்கம் என்று அந்நேரம் தெரியவில்லை. விளம்பரம் வந்த மறுநாள் தந்தி வெள்ளிகிழமை சினிமா செய்திகளில் பாலாஜி நீதி என்ற படத்தை தயாரிக்கிறார். சிவாஜி ஜெயலலிதா ஆகியோர் நடிக்கிறார்கள். சி.வி.ஆர்.இயக்குகிறார் என்று வந்திருந்தது. இதை ஏற்கனவே இந்த தொடரில் நாம் பேசியிருக்கிறோம்.
நாட்கள் செல்ல செல்ல துஷ்மன் என்ற இந்திப்படத்தின் ரீமேக் தான் நீதி எனபதும் ஒரிஜினலில் ராஜேஷ் கன்னாவும் மும்தாஜும் ஜோடி எனபதும் தெரிய வந்தது. படம் சென்னையில் ரிலீஸ் ஆகி விட்டது என்றும் கேள்விப்பட்டோம். ஆனால் படம் எந்த வகையை சார்ந்தது என்பதைப் பற்றிய ஐடியா இல்லாமலே இருந்தது. ராஜா போன்ற மாடர்ன் ட்ரண்டுக்கு ஏற்றவாறு இருக்குமா இல்லை வேறு மாதிரியா என்பது பற்றி யோசனை. இதனிடையே அன்றைய நாட்களில் படப்பிடிப்பு நடைபெறும் படங்களைப் பற்றிய செய்திகள் நாளிதழ்களிலும் பருவ இதழ்களிலும் தொடர்ந்து வரும். அது போன்ற ஒரு செய்தியாக மாப்பிளையை பாத்துகடி மைனா குட்டி பாடலும் நாளை முதல் குடிக்க மாட்டேன் பாடலும் இசையமைக்கப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டதாக செய்திகள் வந்தன.
நடிகர் திலகம் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதாமல் அவ்வளவு பிஸியாக இருந்த காலம். படங்களின் தொடர் வெற்றியில் ஏற்கனவே உயரத்தில் இருக்கும் அவரின் மார்கெட் உச்சாணி கொம்பில் ஏறி விட்டது. அவர் 22 மணி நேரம் மூன்று ஷிப்ட்களில் நடித்துக் கொண்டிருந்தார். அக்டோபர் 1 அவரின் பிறந்த நாள் அன்று மைசூர் பக்கத்தில் உள்ள ஒரு ஊரில் அவர் நீதி படப்பிடிப்பில் கலந்துக் கொண்டிருந்தார். அங்கேயே பிறந்த நாள் கொண்டாடப்பட்டது என்பதையும் பார்த்தோம்.
இந்த நேரத்தில் மற்றொரு செய்தியும் வந்தது. ஒய்வு ஒழிச்சல் இல்லாமல் நடிகர் திலகம் சினிமா படப்பிடிப்பில் காங்கிரஸ் கட்சி கூட்டங்களில், நடிகர் சங்க வேலைகளில் மூழ்கி இருக்கும் நேரம், அது அவரது உடல்நிலையை பாதித்து ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்தவர் vomit செய்ய அதில் ரத்தம் கலந்திருந்ததைப் பார்த்துவிட்டு வீட்டில் இருந்தவர்கள் பயந்துபோய் டாக்டரை கூப்பிட, டாக்டர் BP சற்று அதிகமாக இருக்கிறது அதனால் ஒய்வு எடுக்கவேண்டும் என்று கூற நாளை காலை எனக்காக செங்கல்பட்டு பக்கத்தில் எல்லா ஆர்டிஸ்ட்ம் காத்திருப்பார்கள். பாலாஜியும் சிவிஆரும் காத்திருப்பார்கள். அவ்வளவு பேர் கால்ஷீட்டும் வேஸ்ட் ஆகிவிடும். நான் போகவேண்டும் என்று கிளம்பி போய்விட்டாராம்.
அன்றைக்குத்தான் கிளைமாக்ஸ்-ற்கு முந்தைய அனைவரும் பாடும் பாடல் காட்சியான எங்களது பூமி பாடல் படமாக்கப்பட்ட தினம். படத்தில் இந்த பாடல்காட்சியில் மட்டும்தான் அந்த கருநீல டிரைவர் யுனிபார்ம் தவிர்த்து வொயிட் அண்ட் வொயிட் ஷெர்வானி அணிந்திருப்பார் நடிகர் திலகம். ஒரு துப்பட்டாவும் அணிந்திருப்பார். அது சிவப்பு கலரில் இருக்கும். முதல் நாள் இரவு ஏற்பட்டது போல ரத்த வாந்தி வந்தால் அதை அடக்குவதற்கும் மீறி வந்தால் மற்றவர்களுக்கு தெரியாமல் இருப்பதற்கும்தான் சிவப்பு கலர் துப்பட்டாவை பயன்படுத்தினார் என்று ரசிகர்கள் சொல்லி கேள்விபட்டிருக்கிறேன். அது எந்தளவிற்கு உண்மை என்று தெரியாது. ஆனால் இப்போதும் அந்த பாடல் காட்சியை பார்த்தோம் என்றால் இரண்டு மூன்று ஷாட்களில் அந்த துப்பட்டாவை அவர் வாயின் மேல் பொத்தி பிடிப்பதை கவனிக்கலாம். தன்னால் தயாரிப்பாளருக்கோ மற்றவர்களுக்கோ எந்தவித பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்ற அந்த பெரிய மனதிற்கு தலை தாழ்ந்த வணக்கம்!
இந்த நேரத்தில் தீபாவளி வருகிறது. அந்த வருடம் நவம்பர் 4 சனிக்கிழமை அன்று தீபாவளி. சென்ட்ரலில் ராமண்ணாவின் சக்தி லீலை தீபாவளி அன்று வெளியாகுவதாக இருந்தது. ஆனால் படம் அன்று வெளிவராது என்று தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னர் செய்தி வந்தது. படத்தின் வேலைகள் முடியவில்லை என்பதால் வரவில்லை என்று ஒரு செய்தியும் அன்றைய தீபாவளி தினமே மற்றொரு பக்தி படமான தெய்வம் வெளியானதால் போட்டி வேண்டாம் என்று முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் மற்றொரு தகவல் வந்தது. இந்த முடிவிற்கு பின்னால் அன்றைய நாட்களில் ஆக்டிவாக செயல்பட்டுக் கொண்டிருந்த மூவி மேக்கர்ஸ் கவுன்சில் குழுவும் ஒரு காரணம் என சொல்லப்பட்டது. சக்தி லீலை தீபாவளியன்று வெளியாகவில்லை என்றதும் பட்டிக்காடா பட்டணமாவே தொடர்ந்து ஓடப் போகிறது என்ற செய்தியும் பரபரப்பாக ரசிகர்களுக்கிடையே பேசப்பட்டது. ஆனால் சக்தி லீலை நவம்பர் 10-ந் தேதி வெளி வரும் என்ற உறுதியான அறிவிப்பு வந்ததால் 6 நாட்களுக்கு துஷ்மன் படம் சென்ட்ரலில் வெளியிடப்பட்டது.
நடிகர் திலகம் படம் தீபாவளிக்கு வரவில்லை என்பதால் மாலைக் காட்சி துஷ்மன் படம் காண சென்றோம். படம் பார்ப்பதற்கு முன்பே படத்தின் கதையம்சதைப் பற்றி ஓரளவு தெரிந்திருந்தது. படம் பார்த்த போது முழு கதையும் புரிந்தது. ஆனால் ஒரு ஏமாற்றம். ராஜா போன்ற ஸ்டைலிஷ் படமாக இது வராது என்பது தெரிந்தது. ரசிகர்களும் பொது மக்களும் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பது பற்றிய ஒரு நெருடல் இருந்தது என்றே சொல்ல வேண்டும். ஆனால் என்னுடன் வந்திருந்த என்னுடைய கஸின் வேறொரு விஷயத்தை குறிப்பிட்டார்."உனக்கு நினைவு இருக்கிறதா? சென்ற தீபாவளி [1971 தீபாவளி] அன்றுதான் ராஜாவின் ஒரிஜினலான ஜானி மேரா நாம் பார்த்தோம். ராஜா சூப்பர் ஹிட். அது போல் இந்த தீபாவளி துஷ்மன் பார்க்கிறோம். நிச்சயம் நீதி சூப்பர் ஹிட்" என்றார். பாலாஜியும் சிவிஆரும் படத்தை பார்த்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது.
நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தபடி அரசியல் குழப்பங்கள் தொடர்ந்தன. தினந்தோறும் ஊர்வலங்கள் போராட்டங்கள் என்ற பதட்ட சூழல் அதில் அப்பாவி மாணவர்கள் சிக்கி கொள்வது, வன்முறை சம்பவங்கள் அரேங்கேறுவது என்று இருந்ததால் கல்வி நிறுவனங்கள் தொடர் விடுமுறை அறிவித்து விட்டன. தனி கட்சி ஆரம்பித்த எம்ஜிஆர் இந்திய (வலது) கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம் அவர்களோடு டெல்லி சென்று அன்றைய ஆளும் திமுக அரசுக்கு எதிராக ஊழல் புகார் பட்டியலை பிரதமரிடம் கொடுக்க சென்றார். ஆனால் இது போன்ற புகார்களெல்லாம் குடியரசு தலைவரிடம்தான் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படவே அவர்கள் அன்றைய ஜனாதிபதி வி வி கிரி அவர்களை சந்தித்து புகார் அளித்தனர். பின் பிரதமரையும் சந்தித்து அதன் ஒரு நகலை வழங்கியதாக செய்தி வந்தது. அது தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட அவர் அதை தமிழக முதல்வருக்கு அனுப்பினார். அதை படித்துவிட்டுதான் அன்றைய முதல்வர் மு.க., "பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்" என்று கமென்ட் அடித்தார். இவை நடந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் (நவம்பர் 15/16) பாளையங்கோட்டை கல்லூரி பேராசிரியர் சீனிவாசன் தாக்கப்பட்டார். இது சற்றே தணிந்திருந்த பதட்டத்தை மேலும் அதிகரித்தது.
பதட்ட சூழ்நிலை ஒரு பக்கம் என்றால் மழை மற்றொரு பக்கம். மற்ற ஊர்களில் எப்படியோ மதுரையில் அந்த சீசனில் நல்ல மழை. [இதை சொல்ல காரணம் 1973-ல் தமிழகத்திலே வறட்சியும் மின்வெட்டும் கடுமையாக இருந்தன]. இருப்பினும் வசந்த மாளிகை மட்டுமல்ல ஷிப்டிங் செய்யப்பட்ட பட்டிக்காடா பட்டணமாவும் சரி தவப்புதல்வனும் [மதுரை விஜயலட்சுமியில்] சரி பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்தது. பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளிவிழாக் கொண்டாட்டம் சேலத்தில் நவம்பர் 5 ஞாயிறன்று நடைபெற்றது. மிக பிரம்மாண்டமான கூட்டம் நடிகர் திலகத்தை காண கூடவே சேலம் நகரே திணறியது என செய்திகள் வெளிவந்தன. சென்னையில் வெள்ளிவிழா கொண்டாட்டம் அதற்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 12 அன்று சென்னை உட்லண்டஸ் ஹோட்டலில் நடைபெற்றது. பெருந்தலைவர் விழாவிற்கு தலைமை தாங்கி கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கேடயம் வழங்கினார். தலைமை தாங்கிய பெருந்தலைவருக்கு ஏர் கலப்பை ஒன்றை நடிகர் திலகம் நினைவு பரிசாக வழங்கினார். அந்த விழாவில்தான் பெருந்தலைவர் நடிகர் திலகத்திற்கு ஒரு அழைப்பு விடுக்கிறார்.
1969ம் ஆண்டு காங்கிரஸ் பேரியக்கம் பிளவுப்பட்டபின் தமிழகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டி புனரமைக்கப்படுகிறது. 1969 டிசம்பரில் பதவியேற்ற அந்த குழுவிற்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் கக்கன்ஜி பொறுப்பேற்கிறார். அந்த கமிட்டியின் ஆயுள் மூன்று வருடங்கள். கட்சியின் அமைப்பு சட்டப்படி மூன்று வருடங்களுக்கு ஒரு முறை காரிய கமிட்டி புனரமைக்கப்பட வேண்டும். ஆகவே 1972 டிசம்பரில் புனரமைக்கப்பட போகும் காரிய கமிட்டியில் நடிகர் திலகமும் இடம் பெற வேண்டும் என பெருந்தலைவர் விரும்புகிறார். அதை அவரிடம் தனிப்பட்ட முறையில் சொல்லியிருக்கிறார். ஆனால் நடிகர் திலகம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். ஆகவே இதை பொது மேடையில் சொன்னால்தான் நடிகர் திலகத்தை ஒப்புக் கொள்ள வைக்க முடியும் என நினைத்த பெருந்தலைவர் அந்த வெள்ளிவிழா கூட்டத்தில் பேசும்போது சிவாஜி ஏற்கனவே நமது கட்சிக்காக நிறைய செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு இப்போது கட்சியில் ஒரு பொறுப்பு கொடுக்கலாம் என இருக்கிறேன் என்று சொல்கிறார். கூட்டம் அதை ஆரவாரத்துடன் வரவேற்கிறது. ஆனால் நடிகர் திலகம் ஏற்புரை நிகழ்த்தும்போது அதை பணிவாக மறுக்கிறார். தான் சார்ந்த தொழிலில் இப்போது முழு மூச்சாக ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும் பல தயாரிப்பாளர்கள் தன்னை வைத்து படம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் அதுவும் தவிர நடிகர் சங்க தலைவராக பணியாற்றிக் கொண்டிருப்பதால் அங்கும் ஏராளமான வேலைகள் இருக்கின்றன என்றும் ஆகவே இந்த நேரத்தில் கட்சியில் ஒரு பொறுப்பை ஏற்க நேர்ந்தால் அதற்கு நியாயம் செய்ய முடியாது என்றும் சொல்கிறார். தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் நன்றி சொன்ன நடிகர் திலகம், எனது பிள்ளைகள் உங்கள் கட்டளையை சிரமேற்கொண்டு செயல் படுவார்கள். கட்சியின் தற்கொலை படையாக களத்தில் நிற்பார்கள் எனவும் கூறிவிட்டு போராட்டக்களத்தில் நானே வரவேண்டும் என்ற சூழலில் நிச்சயமாக கலந்து கொள்வேன் என்று சொல்லி முடித்தார். [பெருந்தலைவர் நடிகர் திலகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என விஷயம் தெரியாமல் சொல்லி வருபவர்களுக்கு இதை சமர்ப்பிக்கிறேன். இது 1975 வரை உள்ள நிலை. அதன் பிறகு அந்த கட்சி நடிகர் திலகத்திற்கு என்ன செய்தது என்பது அனைவருக்கும் தெரியும்]. அந்த 1972 டிசம்பரில் புனரமைக்கப்பட்ட கமிட்டி பதவியேற்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பா.ரா. பொறுப்பேற்றார்.
அந்த சமயத்தில் மதுரையில் ஷிப்டிங் செய்யப்பட்ட பட்டிக்காடா பட்டணமா 200-வது நாளை நிறைவு செய்தது. மாளிகை 50 நிறைவு செய்தது. நீதி டிசம்பர் 7 அன்று வெளியாவதாக தகவல் வந்தது. சென்னையை பொறுத்தவரை ராஜா வெளியானது போல் மூன்று அரங்குகளில்தான் [பாரடைஸ் பிரபாத்,சரவணா] நீதியும் வெளியாகிறது என்ற செய்தி வந்த அதே நேரத்தில் மதுரையில் தங்கம் தியேட்டரில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாயின. தங்கம் தியேட்டரா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்தது. காரணம் வேறொன்றுமில்லை. பொதுவாக சென்ட்ரல், நியூசினிமா, ஸ்ரீதேவி மற்றும் சிந்தாமணி ஆகியவைதான் முதல் சாய்ஸ். அந்த நேரத்தில் நியூசினிமாவில் வசந்த மாளிகை, ஸ்ரீதேவியில் இதய வீணை, சிந்தாமணியில் தெய்வம் [நீதியின் விநியோகஸ்தரான சேது பிலிம்ஸ்தான் தெய்வதிற்கும் விநியோகம்] ஆகியவை ஓடிக் கொண்டிருந்த காரணத்தினால் சென்ட்ரல் மட்டுமே இருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ சென்ட்ரலில் படம் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. அந்த நேரத்திலும் சரி அதற்கு பிறகும் சரி அடுத்து வெளியாகும் புதுப் படங்கள் எதுவும் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல் வரவில்லை. அப்படியிருக்க ஏன் சென்ட்ரல் சினிமா ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. 1973 பொங்கலுக்கு சென்ட்ரலில் கங்கா கௌரி வெளியானது என்று சொன்னால் கூட அதனால் நீதி அங்கே வெளியாகவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமலே இருந்தது. இத்தனை விளக்கமாக சொல்ல காரணம் அதன் பிறகு பெரிய படமாக மார்ச் 24-ந் தேதி சென்ட்ரலில் பாரத விலாஸ் வெளியானது, எனவே நீதி சென்ட்ரலில் வெளியாகியிருந்தால் 107 நாட்கள் ஓடியிருக்குமே என்ற ஆதங்கம்தான்
இதற்கு நடுவே நடிகர் திலகத்தின் பல புதிய படங்களும் வேகமாக வளர்ந்து வரும் செய்திகள் வந்துக் கொண்டேயிருந்தன. ஹீரோ 72 ஷூட்டிங் ஆரம்பமாகிவிட்டது. என்னைப் போல் ஒருவன், ரோஜாவின் ராஜா, கெளரவம், ராஜபார்ட், சித்ரா பௌர்ணமி, மன்னவன் வந்தானடி, ஜெயந்தி பிலிம்ஸ் படம், குகநாதனின் அன்னை பூமி, முக்தா பிலிம்ஸ் படம், கிழக்கும் மேற்கும், புனித பயணம் கருப்பு வெள்ளை படங்களான பொன்னுஞ்சல், தாய் முதலிய படங்கள் பற்றிய செய்திகள் பரவலாக வெளிவந்துக் கொண்டிருந்தது.. நீதி வெளியாவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது டிசம்பர் முதல் வாரத்தில் நடந்த இரண்டு அரசியல் நிகழ்வுகள் மீண்டும் தமிழகத்தில் பதட்ட நிலையை உருவாக்கின.
திருச்சியில் இருக்கும் செயின்ட் ஜோசப் கல்லூரியின் ஹாஸ்டல்களில் ஒன்றாக விளங்கியது கிளைவ் ஹாஸ்டல். திருச்சி மலைக்கோட்டை கோவில் மெயின் கார்டு கேட் இவைக்கு இடைப்பட்ட இடத்தில அமைந்த தெப்பக்குளத்திற்கு அருகில் இயங்கி வந்த விடுதி. அங்கே தங்கி படித்துக் கொண்டிருந்த மாணவர்கள்மீது தான் தாக்குதல் நடைபெற்றது. ஏன் அந்தத் நிகழ்வு அங்கே நடந்தது என்பது பற்றி எழுதுவது நமது தரத்திற்கு குறைவு என்பதனால் நான் அதை குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் அன்றைய நாளில் ஆளும் கட்சியில் இருந்த முக்கிய பிரமுகர் [அமைச்சரைவையில் ஒரு அங்கம்] சில தனிப்பட்ட காரணங்களுக்காக கோபம் கொண்டு காவல்துறையை மாணவர்கள் மீது ஏவி விட்டார். நாம் ஏற்கனவே பேசியிருக்கிறோம் அந்த வருடம் கல்லூரி மாணவர் பேரவை தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் மாணவர்கள் 146 கல்லூரிகளில் வெற்றி பெற்றார்கள் என்று. அந்த கோபமும் சேர்ந்து கொள்ள 1972 டிசம்பர் 1, 2 [வெள்ளி சனி] இரவுகளில் ஹாஸ்டலில் போலீசார் புகுந்து வெறியாட்டம் ஆடினார்கள். ஏராளமான மாணவர்கள் மிருகத்தனமாக தாக்கப்பட்டு ரத்தம் வழிய வழிய ஓட ஓட விரட்டப்பட்டனர். அன்றைய மாணவர் காங்கிரஸ் தலைவராக இருந்த நேதாஜி மிக தீரமாக ஹாஸ்டலுக்கு உள்ளே சென்று மாணவர்களை காப்பாற்றினார். நேதாஜி உள்ளே இருக்கிறார் என்று தெரிந்து போலீசார் அவரை எப்படியும் கைது செய்து விட வேண்டும் என்று முயற்சிக்க ஆளும் கட்சியினரும் இதை பயன்படுத்திக் கொண்டு நேதாஜியை தாக்க முயற்சி எடுக்க மாணவர்கள் அரண் போல் நின்று நேதாஜியை நெருங்க விடாமல் செய்தனர். அதற்குள் இந்த கொலை வெறி தாக்குதல் ஊரெங்கும் பரவி விடவே நிலைமையை சமாளிக்க அன்றைய அரசு ஒரு மாவட்ட நீதிபதியை நியமித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
டிசம்பர் 2 சனிக்கிழமை அன்று தமிழக சட்டசபை கூடுகிறது என அறிவிக்கப்பட்டது. ஆளும் கட்சியில் பிளவு ஏற்பட்டபிறகு நடைபெறும் முதல் கூட்ட தொடர் என்பதால் பரபரப்பு நிலவியது. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக அதிமுக அறிவிக்கிறது. இந்த நேரத்தில் மற்றொரு திருப்பம் நிகழ்கிறது. புதிதாக தொடங்கப்பட்ட அதிமுகவில் 13 எம்எல்ஏக்கள் சேர்ந்திருந்தனர். எம்ஜிஆருடன் சேர்ந்து வெளியேறிய முதல் எம்எல்ஏ கேஏகே என்ற கே ஏ கிருஷ்ணசாமி. அவரின் அண்ணன் கே ஏ மதியழகன் அப்போது பேரவை தலைவராக இருக்கிறார். 1970ல் ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக பதவி விலகிய மதியழகன் 71 தேர்தலுக்கு பிறகு சபாநாயகராக ஆக்கப்பட்டார். அமைச்சர் பதவி கிடைக்காததன் காரணமாகவே சற்று வருத்தத்திலும் கோபத்திலும் இருந்த மதியழகன் அதிமுகவிற்கு போகப் போகிறார் என்று செய்திகள் அடிப்பட்டுக் கொண்டிருந்தது. சட்டப்பேரவையை பொறுத்தவரை பேரவை தலைவர் எடுக்கும் தீர்மானம்தான் இறுதி என்பதால் அதிமுக கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்து கொள்ளப்படும் என மதியழகன் அறிவிக்கவே ஆளும் கட்சியில் ஒரு கிலி படர்ந்தது. 170 எம்எல்ஏக்கள் இருந்தாலும் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது என பேரவை தலைவர் அறிவித்து விட்டால் என்ன செய்வது என்று யோசித்த கருணாநிதி அன்றைய துணை சபாநாயகர் விருதுநகர் சீனிவாசனை சபாநாயகராக்க முடிவு எடுத்தார். சபை கூடியதும் பேரவை தலைவர் மேல் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட, மதியழகனோ அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும் என அறிவிக்க, ஒரே நேரத்தில் மதியழகனும் சீனிவாசனும் சபையை நடத்த, மதியழகனால் பேச அழைக்கப்பட்ட எம்ஜிஆர் பேசிக் கொண்டிருக்கும்போதே அவருக்கான நேரம் முடிந்து விட்டது என்று சீனிவாசன் கூறி அவரை உட்கார சொல்ல, அவர் தொடர்ந்து பேச அவருக்கு கொடுக்கப்பட்ட மைக் அணைக்கப்பட்டு அவர் பேசுவது யாருக்கும் கேட்காமல் போக, ஆளும் கட்சி வரிசையிலிருந்து பல்வேறு பொருட்கள் வீசப்பட்டு ஒரே களேபரமாக, சட்டசபை செத்துவிட்டது என கூறி எம்ஜிஆர் வெளியேறினார். 1967 முதல் 1971 ஜனவரி வரையும் பின் 1971 மார்ச் முதல் 1972 டிசம்பர் வரைக்கும் எனக்கு தெரிந்து எம்ஜிஆர் பதவி பிரமாணத்தை தவிர வேறு ஏதும் சபையில் பேசியதாக தெரியவில்லை. அவர் முதன் முதலாக பேச வந்த அந்த டிசம்பர் 2லும் இது போல் நடக்க அந்த சட்டசபை கலைக்கப்பட்ட 1976 ஜனவரி 31 வரை அவர் பேசவேயில்லை. ஆனால் அந்த சட்டசபை இயங்கிய காலம் முழுக்க அவர் சட்டசபை லாபிக்கு வந்து கையெழுத்து மட்டும் போட்டு உறுப்பினர் அனுகூலங்களை பெற்றுக் கொண்டிருந்தார்.
இந்த கிளைவ் ஹாஸ்டல் மற்றும் சட்டசபை நிகழ்வு தமிழகத்தில் மீண்டும் பதட்ட நிலையை உருவாக்க டிசம்பர் 4 திங்களன்று மீண்டும் துவங்குவதாக இருந்த கலவி நிலையங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டன.
இந்த சூழலில்தான் நீதி டிசம்பர் 7 அன்று வெளியாகிறது. அந்த லாரி டிரைவர் ராஜாவை பார்த்த மகிழ்ந்த கொண்டாடிய நினைவுகள் அடுத்த வாரம்
(தொடரும்)
அன்புடன்
Thanks Murali Srinivasan
கல்தூண் 1/05/1981 .இன்று 40 ஆண்டுகள் நிறைவு.
Attachment 5785
மே தின வாழ்த்துகள்
இந்த மூன்று பேரும் சகோதரர்கள்
இவர்கள் மூன்று பெரும் சிவாஜி ரசிகர்கள்
இந்த காலத்தில் அன்னன் தம்பிகள் வெவ்வேறு கட்சி வெவ்வேறு நடிகரின் ரசிகர்கள் ஆக இருப்பார்கள் ஆனால் இவர்கள் மூன்று பேரும் சிவாஜி ரசிகர்கள் ஆக இருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியம்
இதில் என்ன விசேஷம் என்றால் மூன்று போருக்கும் முன்னால் சிவாஜி என்கின்ற பெயர் சேர்த்து அழைக்கப்படுவது
சிவாஜி என்றாலே நாட்டுப்பற்றுக்கு உதாரனம் மட்டுமல்ல குடும்ப ஒற்றுமைக்கும்
என்பது
இந்த மூன்று சகோதரர்கள் அதற்கு உதாரணம்
வாழ்க சிவாஜிகள்.(சங்கர் ,சீனிவாசன் ,பாலு )
சிவாஜிக்காக வாழ்நாளை அற்பனிப்பவர்களை வாழ்த்த வேண்டியது ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் கடமையாகும்
Attachment 5786
Thanks Muniyandi Saminathan
நன்றி விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
"சினிமாத்துறையில் நன்றி என்ற ஒன்றை லென்ஸ் வைத்து தேடினாலும் பார்க்க முடியாது. நூறு பேரில் ஒருவரிடம் நன்றி, விஸ்வாசம் இருந்தாலே பெரிய விஷயம் என்பார்கள்.
சிவாஜி கணேசன் நடித்த முதல் திரைப்படம் 1952இல் வெளியான ‘பராசக்தி’ திரைப்படம். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் வேலூரைச் சேர்ந்த பி.ஏ.பெருமாள் முதலியார். அந்தப் படத்திற்கு ஃபைனாஸ் செய்தது ஏ.வி.மெய்யப்பச் செட்டியார். படத்திற்கு கலைஞர் வசனம் எழுதியதும், படம் வெளியானபோது மிகப்பெரிய வெற்றி பெற்றதும் நமக்குத் தெரிந்த விஷயம்தான். அந்த வெற்றி சிவாஜி கணேசனை மிகப்பெரிய உயரத்தில் கொண்டுபோய் வைத்ததும், அதன்மூலம் பெரிய கதாநாயகன் தமிழ்நாட்டில் உருவானதும் வரலாறு.
அதன் பிறகு பல வருடங்கள் கடந்துவிட்டன. சிவாஜி 300 படங்களுக்கு மேலாக நடித்து, புகழ் குன்றின் உட்சத்தில் இருக்கிறார். நான் கூறும் இந்த சம்பவம் ஒரு தீபாவளி நேரத்தில் நடந்தது. இது பொம்மை பத்திரிகையில் ஆசிரியராக இருந்த என் நண்பர் வீரபத்திரன் என்னிடம் பகிர்ந்துகொண்டது. அவர் சிவாஜி கணேசனுக்கும் நெருங்கிய நண்பர். ஒருநாள் வீரபத்திரனை அழைத்த சிவாஜி, “நாளை எந்த வேலையும் வச்சுக்காதீங்க... நாம் ஓர் இடத்திற்குப் போக வேண்டும்” எனக் கூறியுள்ளார். வீரபத்திரனும் மறுநாள் காலையிலேயே சிவாஜி வீட்டிற்குச் சென்றுள்ளார். சிவாஜி வீட்டில் காலை உணவை முடித்துவிட்டு இருவரும் காரில் ஏறி அமர்கின்றனர். நாம் ஓர் இடத்திற்குப் போக வேண்டும் என்றுதான் சிவாஜி கூறினாரேயொழிய எந்த இடத்திற்குப் போகிறோம் எனக் கூறவில்லை. வீரபத்திரனுக்கும் அவரிடம் கேட்கத் தயக்கம். அதனால் எதுவும் கேட்காமல் காரில் ஏறிவிடுகிறார். கார் சென்னையைத் தாண்டுகிறது... காஞ்சிபுரத்தை தாண்டுகிறது... வீரபத்திரன் அப்போதும் கேட்கவில்லை. கடைசியாகக் கார் வேலூருக்குச் சென்று, அங்கு ஒரு வீட்டின் முன்னால் போய் நிற்கிறது. அந்த வீடு சிவாஜி கணேசனை வைத்து படம் எடுத்த பி.ஏ.பெருமாள் முதலியாருடையது. அவர் முன்னரே மரணமடைந்துவிட்டார். அவர் குடும்பம் மட்டும் அங்கே வசித்துவருகிறது. தீபாவளி வருவதால் அந்தக் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாடைகள் எடுத்துக்கொண்டு சிவாஜி கணேசன் சந்திக்க வந்துள்ளார். அந்த வருடம் மட்டுமல்ல; ஒவ்வொரு வருடமும் சிவாஜி கணேசன் இதேபோல நேரடியாக சென்று சந்திப்பாராம். அப்போது, பெருமாள் முதலியார் மனைவி காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டுத்தான் சிவாஜி கணேசன் கிளம்புவாராம். தன்னுடைய 60 வயதிலும் அவருடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார்.
பின், வேலூரில் இருந்து சென்னை திரும்புகையில் இருவரும் இதுபற்றி காரில் பேசிக்கொண்டு வந்துள்ளனர். அப்போது சிவாஜி, "இவர்தான் என்னை வச்சு ‘பராசக்தி’ படம் எடுத்தார். 2000 அடி படம் எடுத்திருந்தபோதே நான் ரொம்ப ஒல்லியா இருக்கேன்; வசனம் பேசுனா மீன் வாயைத் திறந்து பேசுவது மாதிரி இருக்கு என்றெல்லாம் சொல்லி என்னை படத்திலிருந்து நீக்க முயற்சித்தார்கள். எனக்குப் பதிலாக கே.ஆர்.ராமசாமியைக் கதாநாயகனாக வைத்து எடுக்க வேண்டும் என நினைத்தார்கள். அப்போது நான்தான் படத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பெருமாள் முதலியார் உறுதியாக இருந்தார். நான் இவ்வளவு பெரிய நடிகரானதற்கு காரணம் பெருமாள் முதலியார்தான். இன்று அவர் இல்லை. ஆனால், இந்தியா முழுக்க தெரிந்த நடிகராக நான் இருப்பதும், உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் பிரபலமான நடிகராக இருப்பதும் அவர் போட்ட பிச்சை. அன்று பெருமாள் முதலியார் இல்லையென்றால் இன்று சிவாஜி கணேசன் இல்லை" என உருக்கமாகக் கூறியுள்ளார். சிவாஜி கணேசன் நினைத்தால் இதை யாரிடமாவது கொடுத்துவிடலாம். அப்படியெல்லாம் இல்லாமல், ஒவ்வொரு வருடமும் அவரே நேரில் சென்று அவர்களைச் சந்தித்து, வாங்கி வந்துள்ளதை அவர் கையால் கொடுத்து, அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுவருவதெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம்.
அன்று இரவு 10 மணிக்கு அவர்கள் வந்த கார் வடபழனி அருகே வருகிறது. இப்போதைய கமலா தியேட்டர் அருகே உள்ள விநாயகர் கோவில் தெருவில்தான் வீரபத்திரன் வீடு உள்ளது. அவர், இங்கே நிறுத்துங்கள்... என் வீடு இங்கேதான் உள்ளது... நான் இறங்கிக்கொள்கிறேன் எனக் கூற, இந்த நேரத்தில் நடந்து போவீர்களா எனக் கேட்ட சிவாஜி, அவர் வீட்டிற்கே சென்று இறக்கிவிட்டுள்ளார். நான் முன்னரே கூறியதுதான்... சினிமாவில் நன்றி, விஸ்வாசம் என்பது சுட்டுப்போட்டால்கூட பார்க்க முடியாது. இன்றைய தலைமுறையைச் சேர்ந்த கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என யாராக இருந்தாலும் உங்களை அறிமுகப்படுத்தி நீங்கள் புகழ்பெறுவதற்கு மூலகாரணமாக இருந்த உன்னதமான மனிதர்களைக் கைக்கூப்பி வணங்குங்கள் - எழுத்தாளர் சுரா.
Thanks Subbiah
பட்டிக்காடா பட்டணமா? வெளியான நாள் 6/05/1972 . இன்று 49 ஆண்டுகள் நிறைவு.
வெள்ளிவிழா கண்ட வெற்றிச்சித்திரம்.
இதுவரை வெளிவந்த கறுப்பு வெள்ளை தமிழ் திரைப்படங்களில்,
ஒரு கோடி ரூபாய்களுக்கு மேல் வசூல் சாதனை ஏற்படுத்தி இன்றுவரை முறியடிக்கப்படாத,
சாதனை படமாக திகழ்கிறது பட்டிக்காடா பட்டணமா?.
Attachment 5787
சத்யம் வெளியான நாள் 6/05/1976 . இன்று 45 ஆண்டுகள் நிறைவு.
Attachment 5788